Saturday, May 24, 2008

அறிவுரை நம்பர்.1

அவரவர்களுக்கு தகுந்த மாதிரி நம் எல்லோருக்கும் ஒரு குணம் இருக்குதுங்க. அதாவது கொஞ்சம் திமிர், கொஞ்சம் ஆணவம், கொஞ்சம் அன்பு இப்படியாக ஒரு இருபத்தெட்டு ஐட்டங்களை கலந்து கட்டிய விஷயம்ங்க அது.! அதில ஒன்னு ரெண்டு கூட இருக்கலாம், குறைய இருக்கலாம் அது இல்லை இப்ப பிரச்சினை..

அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா.,(டென்ஷன் ஆவாதீங்க.. விஷயத்துக்கு வந்துடறேன்), உதாரணமா என்னையே எடுத்துக்குங்களேன். எனக்குன்னு ஒரு குணம். அதாவது முன்கோபம். சட்டுன்னா கோபம் வந்துடுதுங்க. (இப்ப பாருங்க, உங்களுக்கு இதுக்குள்ள வந்திருந்தா நீங்களும் நம்ப கேஸ்தான்). இதனால என்னென்ன பிரச்சினைகளை சந்திச்சிருக்கோம்? அப்படியும் மாறினோமா? இல்லையே.. இதிலிருந்து என்ன தெரிகிறது? யாரையும் திருத்த முடியாது!

அதனால யாருக்கும் அறிவுரை சொல்லாதீங்க.. (குறிப்பா வீட்டுக்காரிக்கு)
இதுதான் என் முதல் அறிவுரை! என்ன புரிஞ்சுதா?

3 comments:

Vijay said...

யார..ர....பாத்தூஊ? ம்ம்...என்னாஆது இதூஊ? ம்ம்....ஆரும் கெடைக்கலீன்னா...நாந்தான் ஆப்டேனா? வாணாம்....ஆமா...(செரீஇ...அத்த வுடு....இந்த WIFE மேட்டெர்ல நிஜமாலுமே ஒண்ணுமே பண்ணவேஏ...முடியாதாபா? அவ்வ்வ்வ்வ்வ்)

Thamira said...

வரவேற்கிறேன் விஜய்.! வீட்டுக்காரி விஷயத்தில் நம்மைப்போலத்தான் என எடுத்தவுடனே ஒத்துக்கொண்டு வீரத்தை தெரியப்படுத்திய நேர்மைக்கு வணக்கம். இன்னும் நிறைய பதிவுகளில் அது குறித்து ஆழமாக (?) நாம் விவாதிக்க இருப்பதால் ..(வருவீங்கல்ல..) நன்றி விஜய். (சான்சே இல்லீங்க, அந்த விஷயத்தில ஒண்ணுமே பண்ண முடியாதுங்க..)

cheena (சீனா) said...

ஆகா - 108 அறிவுரை சொல்லணும்- மொத அறிவுரை அருமை - நம்மளைத்தான் திருத்த முடியாதே