Tuesday, July 22, 2008

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -2

கல்யாணம் என்பது ரொம்ப அவசியமான ஒன்றுதானா?

"ஆம் / இல்லை / வேறு ஆப்ஷன் இல்லாததால் இருந்துவிட்டு போகட்டும்."

இவ்வாறு கல்யாணமான ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு ப‌திலைச் சொல்கிறார்க‌ள். ஆனால் க‌ல்யாண‌ம் ஆகாத‌வ‌ர்க‌ளோ ஒருவித‌ ம‌ய‌க்க‌த்துட‌ன் எப்போதும் "ஆம்" என்றே சொல்கிறார்க‌ள். (எவ்வ‌ள‌வு எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள‌மாட்டேன்கிற‌துக‌ள்) . ஒரு ந‌ண்பன் (கண்ணன் அல்ல) ஒருவ‌ன் அவ‌ன் க‌ருத்தாக‌வோ அல்ல‌து விவாத‌த்திற்காக‌வோ ஒரு கேள்வியை அடிக்க‌டி கேட்ப‌துண்டு. அது 'க‌ல்யாண‌த்தினால் உருப்ப‌டியான‌ இர‌வுக‌ளைத் த‌விர ஏதாகிலும் ப‌ய‌னுண்டா?'

நான் கீழே ஒரு சாம்பிள் லிஸ்ட் த‌ருகிறேன், பாருங்க‌ள்.

புத்த‌க‌ங்க‌ள், நட்பு, ஹோட்ட‌ல், சினிமா, ஷாப்பிங், ப‌ய‌ண‌ம், காத‌ல், அழ‌குண‌ர்ச்சி, ச‌மைய‌ல், வ‌ண்ண‌ங்க‌ள், எண்ண‌ங்க‌ள், சோம்ப‌ல், தூக்க‌ம், இசை, பொறுமை, க‌ட‌வுள், சிரிப்பு, ஒழுங்கு, வேக‌ம், ச‌த்த‌ம், முத்த‌ம், ப‌ண‌ம், ப‌ய‌ம், தைரிய‌ம், வெட்க‌ம், உற‌வுக‌ள், உண‌ர்வுக‌ள், உண‌வுகள்.. என‌ இது நீண்டுகொண்டே போகிற‌து. இத்தனையையும் பற்றிய இருவரது கருத்துக்களும் மோதவேண்டிய களமே திருமணம். (என்ன‌டா சொல்ல‌ வ‌ர்ரே.. ரித‌மிக்கா லிஸ்ட் போட்டுட்டா ஆச்சா?..ங்கிறீங்க‌ளா. ஒன்றிரண்டை விளக்க அனுமதியுங்கள்).

*டிவியில் 'மதுரக்கார மச்சானுக்கு ஜாஸ்திதான்.. மஸ்து ஜாஸ்திதான்..' என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென 'எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுங்க இது..' என்பாள். நீங்கள் என்ன செய்வீர்கள்?

*ஒரு ச‌ம‌ய‌ம் 'டூவீலரில் வ‌ர‌முடியாது, முதுகு வ‌லிக்கும். ஆட்டோ வேண்டாம், வீண்செல‌வு. ப‌ஸ்ஸில் வேண்டாம், ரொம்ப‌ கூட்டமாயிருக்கும்' என்பாள். பிறிதொரு ச‌ம‌ய‌ம் 'வீடுவீடுன்னே கிட‌க்கிறேனே.. எங்காவ‌து கூட்டிப்போயிருக்கீங்க‌ளா..?' என்பாள் நான்குபேர் இருக்கும் போது.

*'ஹோட்ட‌ல் சாப்பாடே வேண்டாம். ஹைஜீனிக் இல்லை' என்பாள். நீங்க‌ள் உள்ளூர‌ ம‌கிழ்வீர்க‌ள். ஆனால் உடல் ந‌ல‌மில்லாம‌ல் போகும்போதும், ப‌ய‌ண‌ங்க‌ளின் போதும் தெரியும் சேதி. ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள். (சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூடி சரியாக நிற்காம‌ல், முக‌மெங்கும் பாதி அரைபட்ட தேங்காய்,மிள‌காய் அப்பியிருக்க‌ அல‌றுவீர்க‌ள்)

* இரண்டு வகை கறிகள், குழம்பு, ரசம், தயிர் என மதிய உணவுக்கு அடுக்கிவைப்பாள். நீங்கள் விரும்பும் வத்தலோ, அப்பளமோ அவளுக்கு நினைவே வராது.

*'இன்னிக்கு ஆடிட் இருக்குது, அவசியமில்லாமல் போன் பண்ணாதே' என்று படித்து படித்து சொல்லிவிட்டு சென்றிருப்பீர்கள். ஏதோ நீங்கள் சொல்வதைத்தான் தினமும் வைப்பதைப்போல 'சாய்ங்காலம் என்ன குழம்பு வைக்கலாம்?' என்று மூன்று முறை போன் செய்து கேட்டுக்கொள்வாள்.

*உங்களுக்கு கடிதங்கள், பிரிஸ்கிரிப்ஷன்கள், ரெசிப்டுகள், முக்கிய பொருட்களின் பில்கள், பேங்க்,எல்ஐஸி,டாக்ஸ் பேப்பர்கள் முக்கியமானவைகளாக தோன்றும். அவளுக்கு அப்படித் தோன்றாது. சில சமயங்களில் கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் குப்பையில் காணக்கிடைக்கும்.

*முட்டையோ, நான்‍வெஜ்ஜோ எல்லாம் ஒன்றுதான் என்பீர்கள் நீங்கள். அவள் அவற்றை தனியாக ட்ரீட் செய்ய தனித் தனி பிளாஸ்டிக் தட்டுகளை வைத்திருப்பாள்.

* நீங்களும் துவைத்த மற்றும் துவைக்காத துணிகளை தனித்தனியாகத்தான் ட்ரீட் செய்வீர்கள். அவள் உங்களை விடவும் இரண்டும் தொட்டுவிடவே கூடாது என்பதில் சர்வ நிச்சயமாக இருப்பாள்.

* சில சமயங்களில் கோபத்தில் இரைந்து கத்துவாள். சமயங்களில் காதிலேயே விழாதவாறு முனங்கிக் கொண்டிருப்பாள்.

*பார்த்துப் பார்த்து எஸ்ரா புத்த‌க‌ம் ஒன்றை வாங்கி வந்திருப்பீர்க‌ள். போனில் பேசிக்கொண்டே அத‌ன் அட்டையில் கிறுக்கிவைப்பாள்.

ச‌ரி போதும்..
மேற்கூறிய‌ லிஸ்ட்டில் அதிகபட்ச விஷயங்கள் உங்க‌ளுக்கிடையே ஒத்துப்போனால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. இப்போது இர‌ண்டு கேள்விக‌ள்.

இவற்றுள் ஒன்று ஒத்துப் போக‌வில்லை என்றாலும் நீங்க‌ள் ம‌ன‌முடைந்து போவீர்க‌ளா?

ஒன்று கூட‌ ஒத்துப்போக‌வில்லை எனினும் ம‌ன‌ம் த‌ள‌ர‌மாட்டீர்க‌ளா?

இர‌ண்டாவ‌து கேள்விக்கு நீங்க‌ள் ஆம் என்று பதில் தந்தால்,
நீங்க‌ள் க‌ல்யாண‌த்துக்குத் த‌யார்.!

நான் த‌லையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.

40 comments:

வெண்பூ said...

ஹி..ஹி... எப்படிங்க இதெல்லாம்? தங்கமணி ஊருக்கு போயிட்டாங்க போல.. எப்ப திரும்ப வருவாங்க?

(ஆனாலும் உண்மையை எழுதியிருக்கீங்க...பாராட்டாமல் இருக்க முடியவில்லை)

ராஜ நடராஜன் said...

//ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள். (சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மூடி சரியாக நிற்காம‌ல், முக‌மெங்கும் பாதி அரைபட்ட தேங்காய்,மிள‌காய் அப்பியிருக்க‌ அல‌றுவீர்க‌ள்)//

முதலாவாதா நான் லிஸ்ட்டில் இல்லை.இப்படியெல்லாம் ஆகுமுன்னுதான் 3 வருசம் கேடரிங் படிச்சு வச்சிருக்குறோமாக்கும்.எப்பவாவது வாரக்கடைசியில வித்தியாசமா ஏதாவத செஞ்சுப் புட்டு! 6 நாளும் குறை சொல்றதுதான் நம்ம பொழப்பு.நல்லா இருக்குன்னு சொன்னா தங்ஸ்க்கு ஒரே குசி.குறை சொன்னா இருக்கவே இருக்கு பொன்வார்த்தை " நீ வந்து ஆக்கு " :)வர்றேன் தங்ஸ் கூப்பிடுது.

அவனும் அவளும் said...

எவ்வளவு வருஷம் ஆச்சு கல்யாணம் ஆகி ?

தாமிரா said...

நன்றி வெண்பூ! (கரிக்டா கண்டுபுடிக்கிறீங்கபா..)

ந‌ன்றி ராஜ‌ ந‌ட‌ராஜ‌ன்! (லிஸ்ட்டில் நான் இல்லைங்க‌றீங்க‌.. த‌ங்ஸ் கூப்பிடுதுங்க‌றீங்க‌, புரிய‌லியே?)

தாமிரா said...

நன்றி அவனும் அவளும்! (கண்டதையெல்லாம் நாவகப் படுத்தாதீங்க.. சொல்லிப்புட்டேன்.)

Syam said...

//ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள்//

மத்த நாள் எல்லாம் யாரு அறைக்கராங்கலாம்...இர‌ண்டாவ‌து கேள்விக்கு கல்யாணம் ஆகாதவங்க பதில் ஆம் ஆக தான் இருக்கும், ஆனா அப்புறம் தான் தெரியும் ஏண்டா ஆம் சொன்னோம்னு, யாம் பெற்ற இன்பம் பெருக கல்யாண ஆகாதவங்க சீக்கிரம்... :-)

அனுஜன்யா said...

கலக்கல். டிவி பாட்டும் எஸ்ரா புத்தகமும் ரசித்தேன்.

அனுஜன்யா

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

தாமிரா அண்ணே!
ஒரு லெட்டரப் போட்டு அன்ணிய சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லுங்க

தாமிரா said...

நன்றி ஷ்யாம்! (ஐயோ பாவம். என்னை விடவும் பரிதாப ஜென்மங்கள் இருப்பதை நினைத்து நான் மனதை தேற்றிக்கொள்கிறேன்)

நன்றி அனுஜன்!

தாமிரா said...

நன்றி அப்துல்லா! (யோவ்.. நான் நிம்மதியா இருக்குறது புடிக்கலியா உமக்கு?)

Syam said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
தாமிரா அண்ணே!
ஒரு லெட்டரப் போட்டு அன்ணிய சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லுங்க
//

ஏன் இந்த ரத்த வெறி? :-)

தாமிரா said...

சப்போர்ட்டுக்கு நன்றி ஷ்யாம்! (ஆரம்பத்திலிருந்தே கவனிக்கிறேன். அப்துல்லாவுக்கு என் மேல என்ன காண்டுன்னு தெரியலை)

Anonymous said...

பாவம் கல்யாணமாக பசங்க எல்லாரும், ஏன் இப்படி பயமுறுத்தரீங்க

ராஜ நடராஜன் said...

//எவ்வளவு வருஷம் ஆச்சு கல்யாணம் ஆகி ?//

"நீ வந்து ஆக்கு" பொன்வார்த்தையப் பார்த்தா தெரியல எத்தனை வருசமுன்னு:)

ராஜ நடராஜன் said...

//ந‌ன்றி ராஜ‌ ந‌ட‌ராஜ‌ன்! (லிஸ்ட்டில் நான் இல்லைங்க‌றீங்க‌.. த‌ங்ஸ் கூப்பிடுதுங்க‌றீங்க‌, புரிய‌லியே?)//

நட்பே! உங்க பதிவுக்கு ஆபிசிலிருந்து அம்பு விட்டுகிட்டிருந்தேன்.தங்ஸ் வீட்லருந்து சாப்பாட்டுக்கு நேரமாச்சுன்னு போன்ல கூப்பிடுது.எல்லாத்தையும் வெளக்கிச் சொன்னாத்தான் புரியும் போலிருக்கு:)

பரிசல்காரன் said...

அருமை தாமிரா!

நீங்க சொல்லியிருக்கறதெல்லாம் படிக்கறப்ப மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு..

நம்மள மாதிரியேதான் எல்லாரும்ன்னு நெனைக்கறப்ப நம்ம கஷ்டம் காணாமப் போய்டும்ல?

பரிசல்காரன் said...

கண்ணதாசன் என்ன சொல்லியிருக்காருன்னா..

`உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" ன்னிருக்கார்!

இன்னைக்கு நினைச்சுப் பாக்கறேன்!

தாமிரா said...

நன்றி அம்மிணி! ( நெஜம் சொன்னா.. தப்பா? சும்மா முன்னாடியே எச்சரிச்சு வைக்கத்தான் இந்த முயற்சி)

ராஜ‌ ந‌ட‌ராஜ‌னுக்கு ந‌ம்மைப் ப‌ற்றி தெரிய‌வில்லை.. புரிந்து கொண்ட‌துக்கு ந‌ன்றி. (இன்ன‌மும் //லிஸ்ட்டில் நான் இல்லை// என்ப‌த‌ற்கு அர்த்த‌ம் தெரிய‌வில்லை)

தாமிரா said...

நன்றி பரிசல்!
(ஸேம் பிளட்..)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

(ஆரம்பத்திலிருந்தே கவனிக்கிறேன். அப்துல்லாவுக்கு என் மேல என்ன காண்டுன்னு தெரியலை)
//

ஹா..ஹா..ஹா
நல்லதுக்கே காலமில்லண்ணே. மிக்சில உள்ள சட்னியெல்லாம் ஒங்க மொகத்துக்கு பவுடராயிரக் கூடாதேங்குற கவலையில அண்ணிய கூப்டுக்கச் சொன்னேண்ணே...

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ராஜ‌ ந‌ட‌ராஜ‌னுக்கு ந‌ம்மைப் ப‌ற்றி தெரிய‌வில்லை.. புரிந்து கொண்ட‌துக்கு ந‌ன்றி. (இன்ன‌மும் //லிஸ்ட்டில் நான் இல்லை// என்ப‌த‌ற்கு அர்த்த‌ம் தெரிய‌வில்லை)
//

அவரு கல்யாணம் ஆன பச்சப் புள்ளண்ணே.ரொம்......ப நல்லவரு

தாமிரா said...

அப்துல்லா:
ரொம்ப நன்றிண்ணே.. (என்னா பாசம்.. நம்ப மேல..)

மங்களூர் சிவா said...

தெய்வமே...............

மங்களூர் சிவா said...

/
வெண்பூ said...

ஹி..ஹி... எப்படிங்க இதெல்லாம்? தங்கமணி ஊருக்கு போயிட்டாங்க போல.. எப்ப திரும்ப வருவாங்க?

(ஆனாலும் உண்மையை எழுதியிருக்கீங்க...பாராட்டாமல் இருக்க முடியவில்லை)
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

நன்றி அவனும் அவளும்! (கண்டதையெல்லாம் நாவகப் படுத்தாதீங்க.. சொல்லிப்புட்டேன்.)
/

கொஞ்சம் அதிகமாத்தான் பாதிக்கப்பட்டிருக்கீங்க போல
:))

மங்களூர் சிவா said...

/
Syam said...

//ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள்//

மத்த நாள் எல்லாம் யாரு அறைக்கராங்கலாம்...இர‌ண்டாவ‌து கேள்விக்கு கல்யாணம் ஆகாதவங்க பதில் ஆம் ஆக தான் இருக்கும், ஆனா அப்புறம் தான் தெரியும் ஏண்டா ஆம் சொன்னோம்னு, யாம் பெற்ற இன்பம் பெருக கல்யாண ஆகாதவங்க சீக்கிரம்... :-)
/

ஷ்யாம் என்ன ஒரு நல்ல எண்ணம்!?!?

:)))))))))))

மங்களூர் சிவா said...

/
சின்ன அம்மிணி said...

பாவம் கல்யாணமாக பசங்க எல்லாரும், ஏன் இப்படி பயமுறுத்தரீங்க
/

ஆஹா சின்ன அம்மிணி சொல்றத பாத்தா தாமிரா சொல்றது அம்புட்டும் நெசம்தான் போல இருக்கே

அவ்வ்வ்வ்வ்
:(((

மங்களூர் சிவா said...

மொத்தத்துல ரொம்ப "அனுபவிச்சி" எழுதியிருக்கீங்க!

நல்லா இருக்கு பதிவு.

எங்களை மாதிரி கல்யாணம் ஆகாத பயபுள்ளைகளுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவு.

நன்றி!

சென்ஷி said...

//மங்களூர் சிவா said...
மொத்தத்துல ரொம்ப "அனுபவிச்சி" எழுதியிருக்கீங்க!

நல்லா இருக்கு பதிவு.

எங்களை மாதிரி கல்யாணம் ஆகாத பயபுள்ளைகளுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவு.

நன்றி!
//

ஒரு ஸ்பெசல் ரிப்பீட்டே :)

இம்சை அரசி said...

//ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள்//

oru naal seyyarathukku ivlo salichukkaringale... ungalukkaka daily paathu paathu seyyara unga thangamani salichukkitta unga nilamai enna aagum???

இம்சை அரசி said...

jammunu teekka dress pannittu kilambi office poringa. office poittu vandhathum kaal mela kaal pottuttu enakku innaikku idhu venum adhu venumnu keppinga.

veettu velai ellam mudichu ungalukkum ellam senju pillaingalaiyum paathukkittu velaikkum pora ponnungalai neenga idhum solvinga innamum solvinga

மோகன் ப்ரபு said...

/
இம்சை அரசி said...
//ஒரு நாள் அவளுக்கு உட‌ல் ந‌ல‌மில்லாம‌ல் இருக்கையில் நீங்க‌ள் மிக்ஸியில் தேங்காய் அரைத்துக் கொண்டிருப்பீர்க‌ள்//

oru naal seyyarathukku ivlo salichukkaringale... ungalukkaka daily paathu paathu seyyara unga thangamani salichukkitta unga nilamai enna aagum???

/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மோகன் ப்ரபு said...

/
இம்சை அரசி said...
jammunu teekka dress pannittu kilambi office poringa. office poittu vandhathum kaal mela kaal pottuttu enakku innaikku idhu venum adhu venumnu keppinga.

veettu velai ellam mudichu ungalukkum ellam senju pillaingalaiyum paathukkittu velaikkum pora ponnungalai neenga idhum solvinga innamum solvinga
/

ஜெயந்தி எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்

அவ்வ்வ்வ்வ்வ்

தாமிரா said...

ரசித்து பின்னூட்டம் போட்டுள்ளீர்கள். மேலான அன்புக்கு நன்றி மங்களூர் சிவா!
//எங்களை மாதிரி கல்யாணம் ஆகாத பயபுள்ளைகளுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவு// (புரிஞ்சிகினா சரிதான்!)

தாமிரா said...

சென்ஷிக்கு ஒரு ஸ்பெசல் நன்றியேய்.!

தாமிரா said...

இம்சை அரசிக்கும் மோகன் பிரபுவுக்கும் மனமார்ந்த நன்றி! (இம்சை அரசி திட்டியது என்னை. மோக‌ன் சம்மன் இல்லாமல் ஆஜராகி அழுதுகொண்டிருக்கிறார். அழுவாதீங்க மோகன் நான் சமாளிச்சுக்கிறேன்)

(காதைக்கொடுங்க இம்சை, ஒரு ரகசியம் சொல்லணும் : இதெல்லாம் சும்மா ஒரு லுலுலாயிக்குதான். கொஞ்ச நாள் கழிச்சு ஏன் கல்யாணம் கட்டாயம் பண்ணிக்கவேண்டும்னு ஒரு தொடர் எழுதப்போறேன். அப்போ பாருங்க.. பிளேட்டையே திருப்பி போட்டுடறேன்)

(பிறருக்கு ஒரு டிஸ்கி : இம்சைகளை இப்படிதான் சமாளிக்கணும். அந்த மாதிரி ஒரு ஐடியாவெல்லாம் கிடையாது. பயப்படவேண்டாம்.)

மங்களூர் சிவா said...
This comment has been removed by the author.
மோகன் ப்ரபு said...

இந்த சுட்டிய பாருங்கப்பு

avvvv

தாமிரா said...

//removed by the author//
அப்படீனா எழுதுரவங்களே அழிச்சுகிடறதா? நானென்னவோ புடிக்கலைனா நம்ப அழிச்சுகிறது போலனு நெனச்சேன். யாருபா.. ஏன்பா.. அழிச்சீங்க.. (நம்ப இங்கிலீஷ் அறிவும் அம்புடுதான் போல!)

தாமிரா said...

இம்சை அரசிக்கும்,
லகுடபாண்டிக்கும் (ஸாரி மோகன் பிரபுவுக்கும்),

அடப்பாவிகளா.! இவ்வளவு உள்குத்து இருக்கா இதிலே.. இம்சையை சமாளிக்க உங்களுக்கே நான் ஐடியா குடுக்குறதா? என்ன ஒரு பெரும்பிழை செய்துவிட்டேன்.. இந்த சமூகம் என்னை மன்னிக்குமா? பரம்பொருளே.. இந்த அடியேனை மன்னியுங்கள்.