Monday, July 28, 2008

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -3

கி.பி 2005 க்கு முன்னால்..


21.10.2001 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி.

ஒரு கனவைப் போல சென்னை அம்பத்தூரில் மிதந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான(?) பேச்சுலர் அறைகளில் ஒன்று. கார்த்திக் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவன் தலைமாட்டில் கிடக்கும் கறுப்பு நிற சிறிய செங்கல்லை போலிருக்கும் நோக்கியா செல்போனில் இசையாக ஒரு அழைப்பு அவனை எழுப்புகிறது.

'டேய் கார்த்தி.. இன்னுமா தூங்கிட்டுருக்கே.. தேவர் ஒயின்ஸுல நிக்கிறோம்டா. இங்க வந்துடுறியா, இல்ல வாங்கிட்டு வந்துரவா?' நிமிடத்தில் தூக்கம் கலைகிறது.

இங்கேயே வந்துடுங்க.யாரெல்லாம் கூட இருக்காங்க.கணேஷை எப்பிடியாச்சும் தேடிப்பிடிச்சு தூக்கிட்டு வந்துடுங்க.சிகரெட் பத்தலை, டச்சர் பத்தலைனு இம்சை பண்ணக்கூடாது,தேவையான அளவு வாங்கிட்டு வந்துடுங்க.சாப்பாடு இப்பவே வாங்க வேண்டாம். பத்துமணிக்கு மேல யாராவதுபோய் வாங்கிக்கலாம்.--என விசாரணைகளையும், விபரங்களையும் தெரிவிக்கிறான்.

உடன் எழுந்து கும்பல் வந்துசேரும் முன் ரெடியாகிவிடலாம் என எண்ணி அத்தியாவசிய பொருட்களை எடுத்து வைத்து அறையை தயார் செய்துவிட்டு குளித்து ரெடியாகிறான். கைலி, பனியனுடன் பால்கனிக்கு வருகிறான். மழை வரும் போலிருந்தது. வீசிய குளிர்ந்த காற்றில் கற்றையான கேசம் அலைபாய்கிறது.

பின் வந்த அந்த கொண்டாட்டம் நிறைந்த அந்த அருமையான இரவைப் பற்றி மேலும் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை என எண்ணுகிறேன்.

22.10.2001 திங்கட்கிழமை மாலை 3 மணி.

.:பேக்டரியில் வெர்னியர் காலிப்பருடன் அன்று தயாராகிகொண்டிருந்த அந்த முக்கியமான ஒரு கார் உதிரி பாகத்தை அளவிட்டுக்கொண்டிருக்கிறான் கார்த்திக். செல்போன் அழைக்கிறது. யாரென பார்க்கிறான். ப்ரொடக்ஷனில் இருக்கும் மானேஜர் உதய், சீனியர். அவனது டிபார்ட்மென்ட் இல்லையானாலும் அவனோடு அன்பாக பழகுபவர்.
'கார்த்திக் முக்கியமான வேலை ஏதும் இருக்கா, நான் .:ப்ரீயா இருக்கேன். வெளிய போலாமா.. ரொம்ப நாளாச்சு' என்கிறார். 'போலாம் சார், பிராப்ளம் இல்ல..'

சற்று நேரத்தில் அவனை பிக்‍-அப் செய்துகொண்டு உதயின் கார் கோயம்பேடு சிக்னலில் இருக்கும் 'இக்னைட்' பாருக்கு செல்கிறது.

23.10.2001 செவ்வாய்கிழமை மாலை 7 மணி.

கண்களில் விழும் அழகான முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டவாறே .:பேக்டரியின் வாசலில் சக சூப்பர்வைசர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறான். சிறிது நேரத்தில் அனைவருக்கும் ஒரு bye சொல்லிவிட்டு பைக் ஸ்டாண்டை நோக்கி செல்கிறான். செல்போன் அழைக்கிறது.
டேய் சொல்லு செல்லா.. எப்போ வந்தே ஊர்லேர்ந்து?இப்போவா? எங்க உன் ரூமுக்கா? நாளைக்கு வெச்சுக்கலாமா.. கொஞ்ச வேலையிருக்கு..நாளைக்கு திரும்பவும் ஊருக்கு போறியா, சரிடா.. வர்றேன்.. அஞ்சு நிமிஷத்துல அங்கேயிருப்பேன்

25.10.2001

புது வ‌ண்டி புக் ப‌ண்ணியிருக்கேன் கார்த்திக், கண்டிப்பா நீ வந்துறணும்.

26.10.2001

ஹாப்பி பர்த்டே முருகன்! கலெக்டர் நகர் 'அம்பாள்' தானே.. சரி சரி வர்றேன்.

27.10.2001

வேணாண்டா.. நான் அங்கேலாம் வரமுடியாது. ஒரு நாளைக்காக என்னை பாண்டிச்சேரிக்கு அலைக்காதே. நீதான் திங்கக்கிழமை வந்துடுவீல்ல, பாத்துக்கலாம். எதாவது வாங்கிட்டு வந்துடு.

28.10.2001 ஞாயிற்றுக்கிழ‌மை காலை 6 மணி

தூங்கிக்கொண்டிருந்த‌ கார்த்திக்கின் த‌லையைச்சுற்றி கொண்டுவ‌ந்த‌ பாட்டில்க‌ளை அடுக்கிவவைத்துவிட்டு, சிரித்து எழுப்பிவிட‌ முய‌ன்ற‌ ரூம் மேட் ராஜாவை உஷ்' சொல்லி அட‌க்கிவிட்டு ஒரு பாட்டிலை ம‌ட்டும் ஓப‌ன் செய்தான் செல்லா. ம‌ய‌ங்கியிருப்ப‌வ‌னின் முக‌த்தில் தண்ணீரை தெளிப்ப‌து போல‌ கொஞ்ச‌ம் கையில் ஊற்றி கார்த்திக்கின் முக‌த்தில் அடித்தான்.
எரிச்சலில் விருட்டென‌ எழுந்த‌ கார்த்திக்கின் கோபம், செல்லாவை க‌ண்ட‌தும் சிரிப்பாக‌ மாறி 'டேய்.. எரும‌, அதுக்குள்ள‌ வ‌ந்திட்டியா'
குளிக்காம‌ல் கொள்ளாம‌ல் அன்றைய‌ ஞாயிறு எப்ப‌டி போயிருக்கும் என்ப‌தையும் உங்க‌ளால் உண‌ர‌முடியும்.


கி.பி 2005 க்கு பின்னால்..


17.08.2006

பக்கத்து கேபின் ராஜன் கேட்டார் 'என்ன‌ வ‌ய‌சாச்சு கேகே உங்க‌ளுக்கு?' பதிலுக்கு கார்த்திக், 'அதுல‌ என்ன‌ ஆராய்ச்சி உங்க‌ளுக்கு இப்போ?''இல்ல‌.. ம‌ண்டையில‌ ஒத்த‌ முடிய‌ காங்க‌லியே, அதான் கேட்டேன்''சும்மா வெறுப்பேத்தாதீங்க‌ ராஜ‌ன்..'பாக்கெட்டிலிருந்த‌ சோனி எரிக்ஸ‌ன் அழைத்த‌து.'என்ன‌டா எத்தனை தடவை கூப்பிட்டாலும் வ‌ர‌வே மாட்டேங்கிறே?'

சரவணன் சலித்துக்கொண்டான் போனில்.'ஏண்டா நீங்க வேற படுத்துறீங்க.. வர்ற ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பா வெச்சுக்கலாம். காலையிலேயே போன் பண்ணிடு. ஆமா ஈவினிங் சரிப்படாது, காலையிலேயேதான்'

20.08.2006

போன் அடித்தது. சரவணன்தான்.'சாரிடா.. இன்னிக்கு முடியாது போல‌ தெரியுது. கிரைண்ட‌ர் ரிப்பேராகி ப‌த்து நாளாச்சி, வெளில‌ தூக்கிட்டு போக‌ணும். இவ‌ளை டி‍-ந‌க‌ர் கூட்டிட்டு போறேன்னு ரெண்டு மாச‌மா ஏமாத்திட்டிருக்கேன். தொலைச்சுடுவா'

12.09.2006

'க‌ணேஷை பாக்க‌ போறேம்மா.. சாந்திர‌ம் வ‌ர‌ கொஞ்ச‌ லேட்டாகும்''என்ன‌ விளாடுறீங்க‌ளா? போன‌ மாச‌ம்தானே அவர் வீட்டுக்கு போயிட்டு த‌ண்ணிய‌டிச்சுட்டு வ‌ந்தீங்க‌.. ஒழுங்கா ஆறு ம‌ணிக்கெல்லாம் வீட்டுக்கு வ‌ந்துடுங்க‌. ஏதாவ‌து பேச‌ணும்னா அவ‌ரை ந‌ம்ப‌ வீட்டுக்கு வ‌ர‌ச்சொல்லுங்க‌'

30.09.2006

ஆ.:பீஸ் கேண்டீனில் ராஜ‌ன் கிசுகிசுப்பாக‌ கேட்டுக்கொண்டிருந்தார். 'என்ன‌ கேகே இன்னிக்கு போலாமா?' 'வேண்டாம் ராஜ‌ன், நீங்க‌ போயிட்டுவாங்க‌.. அடுத்த‌வார‌ம் வீட்ல‌ ஊருக்கு போறா, அண்ண‌னுக்கு பொண்ணுபார்க்கிறாங்க‌ளாம். எப்பிடியும் ப‌த்து நாள் க‌ழிச்சுதான் வ‌ருவா.. அப்ப‌ பாத்துக்க‌லாம்'

15.10.2006

க‌ணேஷ், ராஜ‌ன், ச‌ர‌வ‌ண‌ன் இன்னும் இருவ‌ர் என‌ ந‌ண்ப‌ர்க‌ள் சூழ்ந்திருக்க‌ கிழ‌க்கு ஓர‌ டேபிளில் உட்கார்ந்திருந்தான் கார்த்திக். கடற்கரையை பார்த்தவாறே 'மான்ஹாட்டனின்' மொட்டைமாடி. அம்ப‌த்தூரிலிருந்து க‌ஷ்ட‌ப்ப‌ட்டு செல்லாவையும் வ‌ர‌வைத்திருந்த‌தில் ஒரே ச‌ந்தோஷ‌ம். அருமையான‌ மாலை.

மூன்று ர‌வுண்ட் போயிருந்த‌ போது மேஜையிலிருந்த‌ கார்த்திக்கின் செல்போன் அழைத்த‌து. ..அன்பே அன்பே கொல்லாதே..
போனை பார்த்துவிட்டு அனைவ‌ருக்கும் ஒரு உஷ்' சொல்லிவிட்டு,

'சொல்லும்மா..''இல்லம்மா, வீட்ல‌தான் இருக்கேன்'

"என்னோட‌ சூட்கேஸ்ல‌ என் பைல் இருக்கும். அதிலிருந்து என் எம்ப்ளாய்மென்ட் கார்டை பார்த்து ந‌ம்ப‌ர் என்ன‌ன்னு சொல்லுங்க‌ளேன்"

எச்சரிக்கை -1

எச்சரிக்கை ‍-2

29 comments:

முரளிகண்ணன் said...

நல்ல எச்சரிக்கை

மங்களூர் சிவா said...

/
போனை பார்த்துவிட்டு அனைவ‌ருக்கும் ஒரு உஷ்' சொல்லிவிட்டு,

'சொல்லும்மா..''இல்லம்மா, வீட்ல‌தான் இருக்கேன்'

"என்னோட‌ சூட்கேஸ்ல‌ என் பைல் இருக்கும். அதிலிருந்து என் எம்ப்ளாய்மென்ட் கார்டை பார்த்து ந‌ம்ப‌ர் என்ன‌ன்னு சொல்லுங்க‌ளேன்"
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((((((((((

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே சாந்தோமில் என் வீட்டு மாடிலேந்தும் கடல் தெரியும். இனிமே அண்ணி ஊருக்குப் போனா மான்ஹட்டன் வேணா..நம்ப வீட்டுக்கே வந்துருங்க கையில சரக்...ஹி..ஹி...ஹி..

தாமிரா said...

நன்றி முரளிகண்ணன்!
நன்றி மங்களூர் சிவா!

தாமிரா said...

நன்றி அப்துல்லா!
(நிஜமாதான் சொல்றீங்களா? என் வீட்டு மாடியிலிருந்து பாத்தா பின்னாடி கிடக்குற குப்பைதான் கடல் மாதிரி தெரியும்.) (அழைப்புக்கு நன்றி. சும்மனாச்சுக்கும்தானே கூப்பிட்டீங்க‌..)

Anonymous said...

நல்ல எச்சரிக்கை

Nila

தாமிரா said...

நன்றி நிலா!

தாமிரா said...

யாராவது சீக்கிரம் வாங்கப்பா.. ஊட்டுக்கு போகணும்.! (தலைப்பை மாத்திடலமான்னு யோசிக்கிறேன். பழசுன்னு நினைச்சு யாரும் வரமாட்டேங்கிறாங்களோ? சீனியர்கள் யாராவது கருத்து கூறவும்!)

தாமிரா said...

யாராவது வாங்கப்பு..

தாமிரா said...

வெறியேத்தாதீங்க.. மருவாதையா வந்திருங்க..

தாமிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்......

அது சரி said...

என்ன பாஸ், உங்க டைரிய அப்படியே பப்ளிஷ் பண்ணிட்டிங்க போலிருக்கு? ஆனா, உங்களுக்கு தல நெறய முடி இருக்கே. ம்ம், யாரு டைரி இது? :0)

Vijay Anandh said...

ஹூம்ம்ம்ம்....எப்ப்ப்படி இருந்த கார்த்திக் இப்டி ஆயிட்டாரு...
பழச ஞாபகபடுத்தி வெறியேத்திவுட்டுட்டீங்களே...க்க்கககர்ர்ர்ர்ர்....why blood?? ohh....same blood...

தாமிரா said...

வாங்க அதுசரி! நன்றி. டைரி வேற ஆளோடது. (.:போட்டோ 2005 க்கு முன்னால் எடுத்ததுங்க..)

தாமிரா said...

வாங்க விஜய் ஆனந்த்! நன்றி! (அமைதி.. அமைதி..)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

unmai anna. neengka eppa veenumnaalum varalaam. o.k?

தாமிரா said...

ச‌ரி நம்ப‌றேன் அப்துல்லா! என்ன‌ ந‌ம்ப‌ ஆளுங்க‌ளை யாருமே காண‌லை?

Syam said...

//ஹூம்ம்ம்ம்....எப்ப்ப்படி இருந்த கார்த்திக் இப்டி ஆயிட்டாரு...
பழச ஞாபகபடுத்தி வெறியேத்திவுட்டுட்டீங்களே...க்க்கககர்ர்ர்ர்ர்....why blood?? ohh....same blood...//

double...illa illa...triple...ripeetaaaaiii...

Syam said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
unmai anna. neengka eppa veenumnaalum varalaam. o.k?
//

appo naanu?

தாமிரா said...

வாங்க ஷ்யாம்! நன்றி!
(உங்க கேள்விக்கு அப்துல்தான் பதில் சொல்லணும். நீங்க, நானு, அப்துல்.. மூணு பேரு.. மாலை நேரம்.. மொட்டை மாடி.. கடல் காற்று.. கையில 'அது'... எப்புடியிருக்கும்?)
(டாய்.. அப்ப.. நாங்கள்லாம்?..னு எத்தனைபேரு வர்ராங்கனு பாக்கலாம்)

Syam said...

//நீங்க, நானு, அப்துல்.. மூணு பேரு.. மாலை நேரம்.. மொட்டை மாடி.. கடல் காற்று.. கையில 'அது'... எப்புடியிருக்கும்?)//

super ah irukkum...thangamani oorukku poga maataennu adam pudikkaraalae... :-)

பரிசல்காரன் said...

// தாமிரா said...

யாராவது வாங்கப்பு..//

வந்துட்டோம்ல!

பரிசல்காரன் said...

என்ன கொடுமை இது!

எல்லாருமே என் தங்கமணி மாதிரியேதான் இருப்பாங்க போல!

பரிசல்காரன் said...

..''இல்லம்மா, வீட்ல‌தான் இருக்கேன்'

"என்னோட‌ சூட்கேஸ்ல‌ என் பைல் இருக்கும். அதிலிருந்து என் எம்ப்ளாய்மென்ட் கார்டை பார்த்து ந‌ம்ப‌ர் என்ன‌ன்னு சொல்லுங்க‌ளேன்".

ஒரு உண்மையை உரக்கச் சொல்கிறேன்..
.
.
.
.
.
.
இது எனக்கு நடந்திருக்கு!

தாமிரா said...

ஷ்யாம் ://thangamani oorukku poga maataennu adam pudikkaraalae// தல.. நீங்க பொய் சொல்றீங்களோ என்னவோ.. நிஜமாவே நானும் அதான் முயற்சி பண்ணிண்டிருக்கேன். "முடியல"

தாமிரா said...

வாங்க பரிசல்! என்னா லேட்டு, எம்மா நேரமா எதிர்பாக்குறது? நேத்து சாய்ங்காலம் கடை காத்து வாங்கி, எப்புடி அழுதிட்டு வீட்டுக்கு போனேன் தெரியுமா?

//என்ன கொடுமை இது!// நொம்ப .:பீலிங்கா இருக்குதுபா..

தாமிரா said...

//இது எனக்கு நடந்திருக்கு!//

ஊர் பூரா இதாம்பா ந‌ட‌க்குது.. நீ அழுவாத‌.!

babu said...

என் கதையும் அதேதான், bottle சமாசாரம் இல்லை ,ஆனால் நன்றாக ஊர் சுற்றுவேன்.இப்போ வீடு தான் உலகம்.

தாமிரா said...

நன்றி பாபு! (வாங்க பாபு, வந்து சங்கத்துல ஜாயின் பண்ணிக்குங்க.
அப்துல், வெண்பூ, பரிசல் கோரஸாக : பாட்டில் இல்லேன்னா சேத்துக்க முடியாது.
நான் : ஐயோ பாவம்பா, சேத்துக்கலாம்பா.! என்ன சொல்லிக்குடுத்தா கத்துக்கப் போறாரு.)