Saturday, July 12, 2008

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -1

இந்தப் பதிவு நிச்சயமாக கல்யாணம் ஆனவர்களுக்காக அல்ல. (இது விளம்பர நோக்கத்திற்காக அல்ல என்பதை நம்புங்கள்). சிறையில் இருப்பவர்களுக்கு சிறை எப்படி இருக்கும் என்று விளக்கினால் போரடிக்கும்தானே. அதனால் அவர்கள் எனது முந்தைய பதிவுகளைப் படிக்கப் போகலாம். (வந்தவிங்கள சும்மா வுட்டுருவனா)
மேலும் திருமணத்திற்கு முன்பு பெற்றோருடன் இருப்பவர்களுக்கு இது எந்த அளவில் பொருந்தும் என்பதும் தெரியவில்லை. இது சென்னையில் தங்கி வீட்டைப்பிரிந்து வேலைபார்த்துக்கொண்டு இருக்கும்
ஆயிரக்கணக்கான ஜீவன்களுக்காக என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

கை நிறைய .. சாரி, விரல் நிறைய சம்பளத்துடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். (என்ன கொசுவத்தியா என திகைக்க வேண்டாம்.. நாலு வரிகளில் முடித்துவிடுகிறேன்). அப்போது அறைகளில் மூன்று அல்லது நான்கு நண்பர்களுடன் சேர்ந்துதான் தங்கியிருப்போம். அதனால் வாடகை மற்றும் பிற விஷயங்களுக்கு வசதி. பிராப்ளம் என்னன்னா குறைஞ்சது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புது அறைகளை தேட வேண்டிய நிலை எங்களுக்கு வந்துவிடும். ஏனென்பதை இப்போது விளக்கிக்கொண்டிருந்தால் கட்டுரை திசை மாறிவிடக் கூடுமென்பதால் அதை பிறிதொரு சமயம் கண்ணன் அனுமதித்தால் சொல்கிறேன்.

அந்த சமயங்களில் ஒரே ஒரு சூட்கேஸ் தாங்க.. சும்மா கிளம்பி போய்கினே இருப்பேன். மிஞ்சி மிஞ்சிப் போனால் சில பல புத்தகங்கள்! அதை தனியே ஒரு கம்புப் பை (ஜவுளிக்கடைகளில் கொடுப்பாங்களே.. அதே பைதான், யாராவது அதன் பேரை சொன்னால் நல்லா இருக்கும்) யில் போட்டுக்கொண்டு நடையைத் தட்டிவிடுவேன்.

இப்போது அதை கற்பனை பண்ணியும் பார்க்க முடியுமா?

சமீபத்தில் பெருங்குடியிலிருந்து மேடவாக்கத்துக்கு வீட்டை மாற்றியபோது (திரும்பவும் ஏனென்று கேட்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். அது ஒரு பெரீய்ய்ய்ய கதை) இரண்டு 407-கள்.! அப்படியும் பத்த வில்லையே..!

இரண்டு பேண்ட்கள், நாலு சட்டைகள், ஒரு .:பைல், சில புத்தகங்கள் என்றிருந்த என் அசையும் சொத்துக்கள் எப்படி இரண்டு 407-களையும் தாண்டி வளர்ந்து பூதாகரமானது? வீடு மாற்றுவதென்றாலோ, அல்லது சிவனே என்று போய் விடுவதென்றாலோ ஆகிற காரியமா? யாரால் இந்த நிலைமை?

ஒரே ஓர் பெண்!

அவர்தான் மதிப்புக்குரிய என் வீட்டுக்காரி.

ஒரு பெரிய மரத்தாலான கட்டில், ஒரு ஆறடி உயர பீரோ, இரண்டு ஆளுயர சூட்கேஸ், பழைய மாடல் (நகர்த்த முடியாத) கிரைண்டர் ஒன்று, (கல்யாணச் சீராக வந்தது. சரியான மறு விற்பனை விலை யார்தான் தருகிறார்கள் என்று பார்ப்போம், அது வரை வைத்திருப்பதாக சவால் !) புது மாடல் டேபிள் டாப் ஒன்று, இத்தாம் பெரிய டிவி ஒன்று என நான் லிஸ்ட் -ஐ நீட்டிக் கொண்டே போனால் உங்களுக்கு தூக்கம் வரும் வாய்ப்பிருப்பதால் என் தங்கமணி வைத்திருக்கும் சில முக்கியமான பொருட்களை பட்டியலிட்டு முடித்துக்கொள்கிறேன்.

இரண்டு .:பிளாஸ்க்குகள் (ஒன்று உடைந்தது, ஒருவேளை நேரம் கிடைக்கும் போது ரிப்பேர் பார்த்துவிடலாம்)

இரண்டு சுவர்க் கடிகாரம் (ஒன்று ரிப்பேர், அது அழகாக இருக்கிறது)

இரண்டு குடைகள் (ஒன்று கிழிந்தது, ஊருக்குப் போகும் போது யாருக்காவது கொடுக்கலாம்)

இரண்டு முறுக்கு பிழியும் உழக்குகள் (ஒன்று மரத்தாலானது, ஒன்று பித்தளை -இரண்டுமே எப்போதுமே பயன்படுத்தாதது)

இரண்டு விளக்குகள் (ஒன்று சிறிது, தினமும். ஒன்று பெரிது விஷேச நாட்களுக்காக)

நாற்பத்தேழு மீடியம் சைஸ் பிளாஸ்டிக் டப்பாக்கள் (உப்பு, புளி, மிளகாய் என சமையல் அறைப் பொருட்கள்.. சூடம், சாம்பிராணி, குங்குமம் என பூசையறைப் பொருட்கள்.. கோலப்பொடி, எறும்பு பொடி, சோப்புப் பொடி என பொதுவானவை.. உக்காந்து எண்ணிப் பார்த்தேங்க!)

உடைந்த பிளாஸ்டிக் வாளிகள், கிழிந்த அட்டைப் பெட்டிகள், பாலித்தீன் கவர்கள், காலியான ஷாம்பூ பாட்டில்கள்.. என அது முடிவுறாத உலகம்.!

கல்யாணம் அவசியம் பண்ணிக்கத்தான் போறீங்களா?

13 comments:

வழிப்போக்கன் said...

//இரண்டு 407//

ithule ethuvume neenga vaangunathu illa thaane..

appuram enna kaztam ??

வழிப்போக்கன் said...

me the FIRST

தமிழ்ப்பறவை said...

//அதை தனியே ஒரு கம்புப் பை (ஜவுளிக்கடைகளில் கொடுப்பாங்களே.. அதே பைதான், யாராவது அதன் பேரை சொன்னால் நல்லா இருக்கும்) யில் //

big shoppeர்(தமிழில் 'மீப்பெரு பொருள் வாங்கி'...?)

//உடைந்த பிளாஸ்டிக் வாளிகள், கிழிந்த அட்டைப் பெட்டிகள், பாலித்தீன் கவர்கள், காலியான ஷாம்பூ பாட்டில்கள்.. என அது முடிவுறாத உலகம்.!//

முடிவுறா உலகம்,முடிவுறா இன்பம்,முடிவுறா துன்பம்...இனி எல்லாமே இப்படித்தான் இருக்கும்.. வாழ்த்துக்கள்...

இப்படியெல்லாம் பதிவு போட்டு எங்களை மாதிரி இருக்கிற சின்னப்பசங்களைப் பயமுறுத்தாதீங்க...

Anonymous said...

நானும் கலியாணமாகறதுக்கு முன்னாடி ஒரு சூட்கேஸ் வைச்சுதான் இடம் மாறிட்டு இருந்தேன். அப்பறம் We are trying to make the place we live our home. அதனால சில சாமான்கள் சேர்க்க வேண்டி வந்துருது பாருங்க.

மங்களூர் சிவா said...

கலியாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ வெச்சிருக்கிற என்னைய என்ன சொல்றது
:(

கோவி.கண்ணன் said...

//ஒன்று உடைந்தது, ஒருவேளை நேரம் கிடைக்கும் போது ரிப்பேர் பார்த்துவிடலாம்//

நம் ஊரில் எவருக்குமே பயனற்றதை தூக்கியெறிய மனது வராது.
உங்க மனைவி மட்டும் தான் அப்படி என்று நினைக்காதீர்கள். ஊருக்கு போன போது எங்க வீட்டிலும் அம்மா, பழைய ப்ளாக் & வொய்ட் டீவி ஓடாதது. பிரோவினுள் வைத்திருந்தார். ஏன் இதையெல்லாம் என்று கேட்டேன். யாராவது ஆராய்ச்சிக்கு கேட்டால் கொடுக்கலாம் என்று வைத்திருக்கிறேன் என்றார்கள். இந்திய வீடுகள் எல்லாமே மியூசியம் தான்.
:)

நானும் பேச்சிலாராகத்தான் சிங்கை வந்தேன். தற்போது வீடுமாற்ற வேண்டுமென்றால் ஒரு லாரி தேவைப்படும். நினைச்சுப் பார்த்தால் 'எப்படி இருந்த நாம்...இப்படி மாற்றப்பட்டுவிட்டோம்' என்று நினைக்கத் தோன்றும்.

உங்கள் பட்டியல்கள் அருமை அருமை !

தாமிரா said...

நன்றி வழிப்போக்கன்! (அதுக்காக இப்படியெல்லாம் மானத்தை வாங்கப் புடாது.. ஆமா சொல்லிப்புட்டேன்)

தமிழ்ப் பறவையின் பாராட்டுகளுக்கு நன்றி.! (பயங்காட்டுனா மட்டும் என்னவோ திருந்திவிடப் போறா மாதிரி..!)

சின்ன அம்மினிக்கு நன்றி! (சும்மா சப்பைப் பட்டு கட்டாதீங்க..)

நன்றி சிவா! (ஐயோ பாவம்.. வரப்போறவ..--சிலக் கேஸ்கள் இப்படியும் இருக்கின்றன)

நன்றி கோவி கண்ணன்! (அது மாற்றப் பட்டுவிட்டோம் அல்ல ..ஏமாற்றப் பட்டுவிட்டோம்)

Vijay said...

தாமிரா,

நம்ப கதைய கேளுங்க. (இல்லனா மட்டும் விட்ருவோமா என்ன?) மேடம் ஊருல இல்லாத நேரத்துல நான் மட்டும் தனியா வீடு மாத்த வேண்டியதா போயிருச்சி. நான் பாட்டுக்கு பாதி சாமான அப்பிடியே அந்த பழய வீட்டுலயே விட்டுட்டு எதோ எடுக்க முடிஞ்ச வரைக்கும் எடுத்துட்டு வந்துட்டேன்.

அப்போ எதுவும் தெரியல...வூட்டுகார அம்மா வந்தாஙக... வந்தாங்ளாஆ?...பாத்ரும் போய்ட்டு வந்து மொத கேள்வி....

'ஏங்க, நம்ம பாத்ரும்ல பிடி ஒடஞ்ச "மக்" ஒண்ணு இருக்குமே....அத எங்க காணம்'...'

அட நீ வேற.... ரொம்ப குப்பை ஆய்டுச்சிபா...அதான் நம்ப பளய "ப்ரிட்ஜ்"கூட எடுத்துட்டு வரல..நீ என்னாடான்னா "மக்" கை தேட்றீயே விடு..விடு.புதுசா வாங்கிக்கலாம் விடு'ன்னு சொன்னென்.

அவ்ளோதான். சூராவளி புயல் வீட்டுலயே மையம் கொண்டுருச்சிபா..... என்ன என்னவோ ஓடி ஓடி தேட்ராங்க...அத காணாம் ...இத காணாம்ன்னு ஒரெ அமளி..துமளி.... நமக்கு வேர்த்து விட்டுருச்சி...வேப்பில அடிச்ச சீக்கு கோழி மாதிரி நிக்கிறேன்...

இதுல இவ்ளோஓ இருக்காஆன்னு.. அப்ப...தான்பா தெரியும். எதோ நானும் ஒண்ணு, ரெண்டுக்கு சமாதானம் எல்லாம் சொல்லி பாத்தேன். ஆப்புறம் தான் தெரிஞ்சிது....இது அனாவசியமா சொந்த காசுல சூனியம் வச்சிகிறதுன்னு...(எது சொன்னாலும் அதுல ரெண்டு குத்தம்.....)

"ராபின்சன் பாஸ்கின்ல நல்லா அழுத்தமா பிங்க் கலர்ல ஐஸ்கிரீம் வாங்கினபோ ஒரு ஸ்பூன் கொடுத்தானே எங்க?"


"அது....அதுவா... ம்ம்ம்..ம்ம்.. அது சும்மா பிரியாதானம்மா குடுத்தான்... இன்னோரு நாளு ஐஸ்கிரீம் வாங்கினா குடுத்துட்டு போறான் விடேன்."


"அது செரி, உங்களுக்கு என்னா தெரியும்..பொருளோட அரும...அது மாதிரி இப்போ வரதே இல்ல... இப்போல்லாம் ஈர் குச்சி மாதிரி பட்டையா, டங்க் கிளினர் மாதிரி வளையற ஸ்பூனுதான் தரான்...நம்ப பக்கத்து வீட்டு(அவங்க பழைய பக்கத்து வீடு. எவ்ளோ தூரம் ஓடினாலும் சனி விடுதா?) ஜெரி அம்மா கூட இந்த மாரி ஸ்பூன்னு இப்ப் வரதே இல்லக்கான்னு சொன்னா..அவ கண்ணுதான் பட்டுருச்சோ என்னமோன்னு...கண்ணுல தண்ணியோட நிக்கிறா....

கொஞ்ச நேர அமைதி காத்தலுக்கு பிறகு வழக்கம் போல அர்ச்சனை தாங்க முடியாம சட்டய எடுத்து போட்டுகிட்டு நடைய கட்டேய்தான். பையன் வேற நக்கலா என்னாப்பா ஐஸ்கிரீம் வாங்க போறியான்னு கேக்கறான்....ம்ம்ம்...எல்லாம்..... செரி செரி வுடு.........

மங்களூர் சிவா said...

/
Vijay said...


'ஏங்க, நம்ம பாத்ரும்ல பிடி ஒடஞ்ச "மக்" ஒண்ணு இருக்குமே....அத எங்க காணம்'...'
/


/

அவ்ளோதான். சூராவளி புயல் வீட்டுலயே மையம் கொண்டுருச்சிபா..... என்ன என்னவோ ஓடி ஓடி தேட்ராங்க...அத காணாம் ...இத காணாம்ன்னு ஒரெ அமளி..துமளி.... நமக்கு வேர்த்து விட்டுருச்சி...வேப்பில அடிச்ச சீக்கு கோழி மாதிரி நிக்கிறேன்...
/

/


"ராபின்சன் பாஸ்கின்ல நல்லா அழுத்தமா பிங்க் கலர்ல ஐஸ்கிரீம் வாங்கினபோ ஒரு ஸ்பூன் கொடுத்தானே எங்க?"

"அது....அதுவா... ம்ம்ம்..ம்ம்.. அது சும்மா பிரியாதானம்மா குடுத்தான்... இன்னோரு நாளு ஐஸ்கிரீம் வாங்கினா குடுத்துட்டு போறான் விடேன்."
/

/
"அது செரி, உங்களுக்கு என்னா தெரியும்..பொருளோட அரும...அது மாதிரி இப்போ வரதே இல்ல... இப்போல்லாம் ஈர் குச்சி மாதிரி பட்டையா, டங்க் கிளினர் மாதிரி வளையற ஸ்பூனுதான் தரான்...நம்ப பக்கத்து வீட்டு(அவங்க பழைய பக்கத்து வீடு. எவ்ளோ தூரம் ஓடினாலும் சனி விடுதா?) ஜெரி அம்மா கூட இந்த மாரி ஸ்பூன்னு இப்ப் வரதே இல்லக்கான்னு சொன்னா..அவ கண்ணுதான் பட்டுருச்சோ என்னமோன்னு...கண்ணுல தண்ணியோட நிக்கிறா....
/
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்
விஜய் உங்க பரிதாப நிலைய நினைச்சி என் கண்ணுல ரத்தம் வடியுது

:(((((((((((((((

Vijay said...

சிவா,

என்னான்னு சொல்லறது...நமக்கு உலகம் தெரியல....அவ்ளோதான்...ம்ம்..

தாமிரா said...

நன்றி விஜய்! (என்ன கொஞ்ச நாளா ஆள காணோம்? ஸ்பூன் கதை எனக்கும் நிகழ்ந்தது. என்ன ஐஸ்கிரீமுக்கு பதிலா நூடுல்ஸ். அப்புறம் இன்னும் மங்களூருக்கு 'அது' ஆவலை போல தெரியுதே..)

ந‌ன்றி ம‌ங்க‌ளூர்!

பிரேம்குமார் said...

இந்த‌ தொகுப்பை மிக‌வும் ர‌சித்தேன் தாமிரா.... அட்ட‌காச‌மா எழுதுறீங்க‌

Anonymous said...

உண்மையைச் சொல்வதானால் உங்கள் பதிவிற்கு விஜயின் பின்னூட்டம் தான் மகுடம்!!!!!!!