Tuesday, July 15, 2008

பயப்படாதீங்க.. ரெண்டே ரெண்டு வரி விமர்சனம் -தசாவதாரம்

அன்பான நண்பர்களே, திரை விமர்சனம் எழுதுவது நம் வலைப்பூவின் பிரதான நோக்கமில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். (அறிவுரைகள் கூறி உங்களையும் முடிந்தால் இந்த உலகையும் திருத்துவதுதான் நம் பிரதான நோக்கம் என்பதையும் அறிவீர்கள். குருவி விமர்சனம் ஒரு மீள முடியாத தாக்கத்தினால் எழுதப்பட்டது என்பதை அறிக!). ஆனால் சில நண்பர்களும் பல(?) வாசகர்களுக்கும் குருவியை படித்துவிட்டு தசாவதாரத்துக்கும் நீங்கள் எழுதியே ஆக வேண்டும் என என் கையைப் பிடித்து தொங்குவதால் இதை எழுத வேண்டியது நேர்கிறது. கண்ணனும் அவர்களோடு சேர்ந்துகொண்டு பிடிவாதம் பிடிக்கிறான்.

பலரும் மிகச்சிரமப்பட்டு படத்தின் நிறைகளைக் கண்டுபிடித்து பாராட்டிவிட்டதாலும், மிகப்பலரும் படத்தை நாராய்க் கிழித்து தொங்கவிட்டு விட்டதாலும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் எழுப்பி இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன்.

கொஞ்சம் சிந்தியுங்கள்.! அனைத்தையும் மீறி கமலின் கடும் உழைப்பில் படம் ஒப்பேற்றப் பட்டுவிட்டது. ஆனால் இதே பத்து வேட ஐடியா மட்டும் வேறு யாருக்கோ முதலில் தோன்றி, ஆப்பிரிக்காவிலிருந்து மேக் அப் கலைஞர்களை (அமெரிக்காவிலிருந்து அடிக்கடி வரவைத்து போரடித்து விட்டதால்) வரவழைத்து அஜித்தை வைத்தோ அல்லது ரித்தீஷை வைத்தோ இந்த படத்தை எடுத்திருந்தால் உங்களையும் என்னையும் யாரால் காப்பாற்றியிருக்க முடியும்?

கீழ்ப் பாக்கம் நிரம்பி வழிந்திருக்காதா..?

(விரைவில் எதிர்பாருங்கள், கல்யாணம் ஆகாதவர்களுக்கான ஓர் எச்சரிக்கை -2)

36 comments:

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

கீழ்ப் பாக்கம் நிரம்பி வழிந்திருக்காதா..?//

ரொம்பச் சரி! ஆனால் அதில் தலைவன் ரிதீஷை மட்டும் விட்டுருங்க ஹி..ஹி..ஹி

Anonymous said...

அது யாரோ சாம் ஆண்டர்சனாமே. அவரை வச்சு தசாவதாரம் எடுக்க முடியாதா என்ன

Syam said...

//ரித்தீஷை வைத்தோ //

அஜீத் என்ன விஜய், சின்ன அம்மணி சொன்ன மாதிரி சாம் ஆண்டர்சன் வெச்சு கூட எடுங்க, எங்க தலை ரித்தீஷ் பத்தி நக்கல் அடிச்சா பொங்கி எழுவோம்... :-)))

இப்படிக்கு,
அகில உலக ரித்தீஷ் அதிரடிப்படை

தாமிரா said...

அம்மிணிக்கு நன்றி!

அப்துல்லா மற்றும் ஷ்யாம்க்கு நன்றி! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், அதிரடிப் படையில் சேர்த்துக் கொள்வீர்கள்தானே.!

வெண்பூ said...

//அஜித்தை வைத்தோ அல்லது ரித்தீஷை வைத்தோ இந்த படத்தை எடுத்திருந்தால் உங்களையும் என்னையும் யாரால் காப்பாற்றியிருக்க முடியும்?//

எந்த டாக்டர்னாலயும் காப்பாத்தியிருக்க முடியாது.. டாக்டர் விஜய்னால கூட :)))

தாமிரா said...

நன்றி வெண்பூ.! (எங்கே பரிசலை காணோம்)

வெண்பூ said...

// (எங்கே பரிசலை காணோம்)//

என்னோட பதிவுல அவரு போட்ட பின்னூட்டத்துக்கு நான் பதில் போடுலன்னு ஒரே கோவத்துல இருக்காரு..

அது மட்டும் இல்லாம அவரோட பதிவு வேற இன்னிக்கு ஹிட் ஆனதால நெறய பதில் போட்டுக்கிட்டு இருக்காரு.. அதனால 'இன்னிக்கு நான் ரொம்ப பிஸி' அப்பிடின்னு கவுண்டமணி மாதிரி சொல்லிட்டு இருந்ததா கேள்வி..

ச்சின்னப் பையன் said...

////அஜித்தை வைத்தோ அல்லது ரித்தீஷை வைத்தோ இந்த படத்தை எடுத்திருந்தால் உங்களையும் என்னையும் யாரால் காப்பாற்றியிருக்க முடியும்?//

எந்த டாக்டர்னாலயும் காப்பாத்தியிருக்க முடியாது.. டாக்டர் விஜய்னால கூட :)))//

இதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்... ' நாயகன்' படம் இன்னும் வராததால், உங்களுக்கு இன்னும் தலயின் அருமை தெரியலை. அந்தப் படம் வரட்டும்.. மத்த எல்லாரும் எப்படி ஓடி ஒளியறாங்கன்னு பாருங்க (படம் பாக்கமுடியாமெயில்லே!!!!)...

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ஓஹோ, அப்போ சர்வ சாதாரணமா எங்க தலயோட(ஜே.கே.ரித்தீஷ்) மத்த படத்தை பாத்திடுவீங்களா? அம்புட்டு தன்னம்பிக்கையா உங்களுக்கு? உங்களை டார்ச்சர் படுத்த அவரு பத்து வேஷம் போட்டு மெனக்கெடணும்னு அவசியம் இல்லை, ஒத்த வேஷம் போட்டே எல்லாரையும் துண்டைக் காணோம்,துணியை காணோம்னு ஓட வெச்சிடுவார். இருங்க இருங்க, எங்க மன்றத்து ஆட்கள விட்டு கானல்நீர், நாயகன் பட டிவிடிக்களை உங்களுக்கு அனுப்பச் சொல்றேன். என்ன இது வெளையாட்டு, நாங்க மெரண்டம்னா, அம்புட்டுதான்:):):)

rapp said...

//இதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்... ' நாயகன்' படம் இன்னும் வராததால், உங்களுக்கு இன்னும் தலயின் அருமை தெரியலை. அந்தப் படம் வரட்டும்.. மத்த எல்லாரும் எப்படி ஓடி ஒளியறாங்கன்னு பாருங்க (படம் பாக்கமுடியாமெயில்லே!!!!)...
//
மன்றத் துணைத்தலைவர் ச்சின்னப்பையன் சொல்வதை, மன்றத் தலைவியாகிய நான் கன்னாபின்னாவென வழிமொழிகிறேன். உலகநாயகனை ஆதரிச்சு எழுதறத்துக்காக, அகிலாண்ட நாயகன நக்கல் பண்றீங்களா, அவ்வ்வ்வ்வ்வ்வ்.......... இருங்க இருங்க நாயகன் படத்தை, தியேட்டர் சீட்டுல உங்கள கட்டிப் போட்டாவது பாக்க வெக்கிறோம்:):):)

வெண்பூ said...

//நாயகன் படத்தை, தியேட்டர் சீட்டுல உங்கள கட்டிப் போட்டாவது பாக்க வெக்கிறோம்:):):)
//

எங்க ஊர் பஞ்சாயத்தில நடந்ததை கீழ கொடுத்திருக்கேன்.

பஞ்.தலைவர் : முருகேசு,, அந்த பொண்ணை நீ கெடுத்திட்ட. நீதான் கல்யாணம் பண்ணிக்கணும்.

முருகேசு: கண்டிப்பா முடியாது. அப‌ராத‌மா என்னா ப‌ண்ண‌னும்னு சொல்லுங்க‌? எவ்ளோ ப‌ண‌ம் கொடுக்க‌ணும்?

பஞ்.தலைவர் : க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌லைன்னா கான‌ல் நீர், நாய‌க‌ன் ப‌ட‌ம் இந்த‌ ரெண்டையும் ஒரே நாள்ல‌, தியேட்ட‌ர்ல‌ த‌னியா உக்காந்து (ஏன்னா ஆப‌ரேட்ட‌ர் கூட‌ ப்ரொஜெக்ட‌ரை ஆன் ப‌ண்ணிட்டு ஓடியே போயிடுவான்) பாக்க‌ணும்.

முருகேசு (சிறிது யோசிக்காமல் உடனடியாக) : கல்யாணத்தை எப்ப வெச்சிக்கலாம்னு சொல்லுங்க.

இப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் காப்பாத்துன அண்ணன் ரித்தீஷ் ரசிகர் மன்றத்துல நானும் சேந்துக்க‌லாமா?

தாமிரா said...

ச்சின்னப் பையனிடமும், ராப்பிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். (வெண்பூ, பயமாக இருக்கிறது.. ப்ளீஸ் துணையாயிருங்கள். ஒரே ஒரு கால், ஓடி வந்துவிட வேண்டும்.) வேண்டுமானால், சிவாஜியையும் தசாவையும் இன்னொருமுறை பார்க்கிறேன். குறைந்தபட்ச தண்டனையாக நினைத்து விட்டு விடுங்கள்.

Syam said...

//rapp said...
ஒத்த வேஷம் போட்டே எல்லாரையும் துண்டைக் காணோம்,துணியை காணோம்னு ஓட வெச்சிடுவார்//

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, நம்ம தல வேஷம் போடுறேன்னு சொன்னா பத்தாதா :-)

Syam said...

//தாமிரா said...
அம்மிணிக்கு நன்றி!

அப்துல்லா மற்றும் ஷ்யாம்க்கு நன்றி! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், அதிரடிப் படையில் சேர்த்துக் கொள்வீர்கள்தானே.!
//

இன்று முதல் அதிரடிப்படைக்கு தலைமை தாங்கி நடத்துமாறு உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறோம் (அப்பாடா எஸ்கேப்பு ) :-)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

மன்றத் துணைத்தலைவர் ச்சின்னப்பையன் சொல்வதை, மன்றத் தலைவியாகிய //

ஹலோ! அப்ப மன்றத்துல நான் யாரு?

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ச்சின்னப் பையனிடமும், ராப்பிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.//

தாமிரா அண்ணே! இங்க மொத எதிர்ப்ப பதிவு பண்ணுனவன் நானு..ஞாபகம் இருக்கட்டும் ஜாக்கிரதை

தாமிரா said...

நன்றி ஷ்யாம்! (இத்தாம் பெரிய பொறுப்பை ஏற்கும் தகுதி இருக்கிறதாவென தெரியவில்லை. குறைந்தது இரண்டு பேராவது வழிமொழிந்தால் ஏற்கலாம் என்றிருக்கிறேன்)

நன்றி அப்துல்லா! (உங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதுக்காக மிரட்டுற வேலையெல்லாம் வேண்டாம், சொல்லிப்புட்டேன். ஆமாம், அதென்ன சந்தடி சாக்கில் 'அண்ணே' போடுறீங்க.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை?)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அதுக்காக மிரட்டுற வேலையெல்லாம் வேண்டாம், சொல்லிப்புட்டேன்.//
ஹி..ஹி..ஹி.. தலயப் பத்தின மேட்டரால கொஞ்சம் டெங்சன் ஆயிட்டேன்.

ஆமாம், அதென்ன சந்தடி சாக்கில் 'அண்ணே' போடுறீங்க.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை?)//

அய்யய்யோ! அண்ணே நீங்க என் தம்பியாண்ணே? தெரியாமப் போச்சுண்ணே.சாரிண்ணே..

பரிசல்காரன் said...

ப்ரசண்ட் சார்!

பரிசல்காரன் said...

என்னய்யா நடக்குது இங்கே?

பரிசல்காரன் said...

தாமிரா அவர்கள், அடுத்ததா பாபா படத்துக்கு விமர்சனம் எழுதுவார்..

பரிசல்காரன் said...

ஏன் இந்தக் கொடுமை?

பரிசல்காரன் said...

எதுக்கெடுத்தாலும் ஏன்யா ரித்தீஷை வம்புக்கு இழுக்கறீங்க? அவரு வேறொரு பேர்ல பதிவெழுதறாரு தெரியுமா?

பரிசல்காரன் said...

//சில நண்பர்களும் பல(?) வாசகர்களுக்கும் குருவியை படித்துவிட்டு தசாவதாரத்துக்கும் நீங்கள் எழுதியே ஆக வேண்டும் என என் கையைப் பிடித்து தொங்குவதால்//

அவங்களைப் புடிச்சு, ரெண்டு கொடுத்தா இவரு சரியய்டுவாரு!

பரிசல்காரன் said...

அப்பாடா! 25 அடிக்கத்தான் இத்தனை பாடுபட்டேன்!

கிளம்பறேன்! நாளைக்கு மொக்கை ரெடி பண்ணனும்!

வழிப்போக்கன் said...

//அவங்களைப் புடிச்சு, ரெண்டு கொடுத்தா இவரு சரியய்டுவாரு!
//

ரீப்பீட்டேய்ய்யய்ய்ய்ய்..

நானே ரித்தீஷ் புகழ் பாடி ஒரு பதிவு போட்டு தாமிராவுக்கு ஆப்பு வைக்க போறேன்...

rapp said...

//ஹலோ! அப்ப மன்றத்துல நான் யாரு?//
வேறென்ன அண்ணே, பொருளாளர் பதவிதான், ஸ்டேட்டஸ மெயின்டெயின் பண்ணறதுக்கு ஆகுற செலவை ஏத்துக்க உங்கள மாதிரி நல்ல மனசுக்காரராலத் தானே முடியும் :):):)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

வேறென்ன அண்ணே, பொருளாளர் பதவிதான், ஸ்டேட்டஸ மெயின்டெயின் பண்ணறதுக்கு ஆகுற செலவை ஏத்துக்க உங்கள மாதிரி நல்ல மனசுக்காரராலத் தானே முடியும்//

ஹா..ஹா..ஹா! நம்ம எதுக்கு செலவு பண்ணனும் சொல்லிவுட்டா தலைவரே தந்து அனுப்பப்போறாரு!!!

கயல்விழி said...

யாருங்க அந்த ரித்திஷ்? கேள்விப்பட்ட மாதிரியே இல்லை :(

வழிப்போக்கன் said...

ரித்தீஷ் பற்றி ஒரு ஆராய்ச்சி பதிவு இட்டுள்ளேன்..

எனக்கு கொள்கை.பரப்பு.செயலாளர் பதவி கிடைக்குமா ?

தாமிரா said...

அப்துல்லா, ராப், வழிப்போக்கனுக்கு நன்றிகள் ஆயிரம்.

கயல்விழி.. அமைதியாக இருங்கள் யாரிடமாவது உதை வாங்காதீர்கள். (பார்த்தீங்கள்ள .. எத்தனை மன்னிப்பு கேட்டேன்னு.!)

பரிசலுக்கு ஸ்பெஷல் நன்றி! (நான் ஒரு பேக்கு என்பது சரியாதான் இருக்கு. எத்தனை பேர் பின்னூட்டம் போட்டாலும் ஒவ்வொருவருக்கும் தனித் தனியா நன்றி சொல்லி முகப்பில் இடம்பிடிக்க வேண்டுமென்ற அறிவுரையை சொல்லியிருக்கிறார். புரிந்துகொண்டேன்.)

இருப்பினும், என் பதிவு சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் என நான் நினைக்கவும் இல்லை. அதற்கு காரணம் தசாவைப் பற்றி நான் எழுதியதுதான் என்று முதலில் நினைத்தேன். அது இல்லை , ரிதீஷைப் பற்றி எழுதியதுதான் என்று எனக்கு புரியவைத்த ரித்தீஷ் அதிரடிப்படைக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.. நன்றி.! (நமது பதவிச்சண்டையை மெயிலில் தொடரலாம் என்றும் அறிவித்துக் கொள்கிறேன்)

Vijay said...

தாமிரா,

ரேஞ்ச்ச புடிச்சிட்டீங்க போல இருக்கே. ம்ம்ம்.... என்சாய்.........

தாமிரா said...

நன்றி விஜய்!

துளசி கோபால் said...

சரியான இடத்துக்குத்தான் வந்துருக்கேன் போல.

நம் பதிவர்கள் எழுதுன எல்லா தசாவதார சம்பந்தமான விமரிசங்களை ஒட்டுமொத்தமா ஒரு இடத்தில் படிக்க வகை இருக்கா?

நான் நாலுநாளைக்கு முன்னால் படம் பார்த்துட்டேன்......

இனிமே எல்லாத்தையும் படிக்கணும்.

கிரி said...

ஹா ஹா ஹா

தாமிரா said...

நன்றி துளசி! (யாராவது டெக்னிகல் புலி துளசிக்கு உதவுவார்களாக)

நன்றி கிரி! (துளசிய பாத்துதானே சிரிச்சீங்க..)