Friday, July 25, 2008

சிரிப்பாய் சிரிக்கும் கவிதைகள்

இந்த 'புலம்பல்கள்' பிளாக்கில் கவிதைகள் எழுதக்கூடாது என்பதை ஒரு முடிவாகவே வைத்திருந்தேன் (வரும் சிலரும் ஓடிப்போய்விட்டால்என்ன பண்ணுவது?). ஆனால் 'முதல் முத்தத்தை' எவ்வளவு ட்ரை பண்ணியும் 'தமிழ்மணத்தில்' ஏற்ற முடியவில்லை .. ரொம்ப படுத்துது.!

கவிதைகளை எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!

இதை கவிதை என்று ஒப்புக்கொள்கிறவர்கள் தயவு செய்து http://www.muthalmuththam.blogspot.com/- க்கு போகவும். அப்படியே பின்னூட்டமும் போட்டுவிட்டு போகவும். பிறர் மன்னிப்பார்களாக, இனி இந்த மாதிரி இந்த பக்கத்தில் தொல்லை செய்யமாட்டேன். ('கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை' க்கு ரசிகர் கூட்டம் அலைமோதுவதால் பிற விஷயங்களுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.)

17 comments:

சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்டு :)

சென்ஷி said...

//கவிதைகளை எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!//

ஆஹா... கவுஜ.... கவுஜ....

சென்ஷி said...

//('கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை' க்கு ரசிகர் கூட்டம் அலைமோதுவதால் பிற விஷயங்களுக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.)
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

அதெல்லாம் முடியாது. பதிவுன்னா நாலு நல்லது கெட்டது இருக்கணும்.. அப்பப்ப இந்த மாதிரி கவுஜயும் எழுதணும் :))

தாமிரா said...

சென்ஷியின் உடனடி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. (உடனடியா பின்னூட்டமிடுபவர்களுக்கு ஏதாவது பரிசு குடுக்கலாமானு யோசிச்சிகினுருக்கேன்)
அப்புறம் இதுக்கே கிர்ர்ர்ர்ர்ர்ர்.... அடிச்சா எப்புடி? இன்னும் எவ்வளவு இருக்கு.!

மங்களூர் சிவா said...

மன்னிச்சிட்டேன்பா நண்பா
பொழைச்சி போங்க
:))

ஓவியா said...

//வரும் சிலரும் ஓடிப்போய்விட்டால்என்ன பண்ணுவது?//

:-)

அனுஜன்யா said...

தாமிரா,

சூப்பரா இருக்கு. வெறும் கவித பதிவு பண்றதும் பிளாட்பார கடை வெக்குறதும் ஒண்ணுதான். அனுபவத்துல சொல்றேன். சென்ஷி சொல்ற மாதிரி எல்லாத்தையும் கலந்து அடிக்கணும்னு புரியுது. ஆனா முடியலேயேயே..

அனுஜன்யா

தாமிரா said...

நன்றி மங்களூர்! (இன்னா பெரிய மனசு.. உங்களுக்கு)

வ‌ருகைக்கும் ந‌கைப்புக்கும் ந‌ன்றி ஓவியா!

தாமிரா said...

நன்றி அனுஜன்! (கவுஜக்குனு தனி பிளாட்பார கடை போட்னுக்குறேன், அத்த மூடிரலாமானு ரோசனையாகீது..)

பரிசல்காரன் said...

//வெறும் கவித பதிவு பண்றதும் பிளாட்பார கடை வெக்குறதும் ஒண்ணுதான். //


தனியாப் போட்டு கவுத்துரக் கூடாது. இதுலையே அங்கங்க பெரிய ஆளுகளோட கவிதைய போட்டு, அப்பப்ப நம்முளுதும் போடணும். எது மாதிரி கவிதைகளை ரசிக்கறாங்கன்னு பாத்துட்டே இருந்து, திடீர்னு போட்டுத் தாக்கணும்!

உதாரணமா இங்க திருப்பூர்ல சென்னை சில்கஸ்ல, முதல்ல தள்ளுபடிக்கு பதிலா குழைந்தைகள் செக்ஷன்ல டாய்ஸ் குடுத்தாங்க. அப்புறமா ஒரு செல்பில வெச்சு வித்தாங்க. அப்புறமா அதிகரிச்சு அதிகரிச்சு, இப்போ பக்கத்துல பெரிய பில்டிங்கல டாய்ஸ்-க்கு தனி கடையே ஆரம்பிக்கப் போறங்களாம்!

தாமிரா said...

நல்ல ரோசனைக்கு நன்றி பரிசல்! ட்ரை பண்ணி பாக்குறேன். (இன்னும் மெயின் கடையே பிக்‍-அப் ஆவலை, அதுக்குள்ள..)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//வரும் சிலரும் ஓடிப்போய்விட்டால்என்ன பண்ணுவது?//

ஹீம் காலம் கடந்த ஞானோதயம்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//வரும் சிலரும் ஓடிப்போய்விட்டால்என்ன பண்ணுவது?//

ஹீம் காலம் கடந்த ஞானோதயம்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஆனால் 'முதல் முத்தத்தை' எவ்வளவு ட்ரை பண்ணியும் 'தமிழ்மணத்தில்' ஏற்ற முடியவில்லை //

ஏன் எக்ஸ்பீரியன்ஸ் பத்தலய்யா??
:))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!
//

உங்களப் பார்த்து கவிதைதான் சிரிப்பா சிரிக்கிது. என் கவிதை எல்லாம் பார்த்து ஊரேல்லா சிரிப்பா சிரிக்கிது.அப்படியும் அசருவோமா நாங்க??

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//( ரசிகர் கூட்டம் அலைமோதுவதால் )
//

என்ன தன்னம்பிக்க! என்ன தன்னம்பிக்க! அண்ணே இனிமே நீங்க தான்ணே எனக்கு குரு

தாமிரா said...

//உங்களப் பார்த்து கவிதைதான் சிரிப்பா சிரிக்கிது. என் கவிதை எல்லாம் பார்த்து ஊரேல்லா சிரிப்பா சிரிக்கிது.அப்படியும் அசருவோமா நாங்க??//

ஆணி புடுங்குற இடமுன்னும் பாக்காம விழுந்து விழுந்து சிரித்தேன். (சில சமயங்களில் சுமாரான ஜோக்குகளுக்கு கூட இப்படித்தான் ஆகிவிடுகிறது)

//அண்ணே இனிமே நீங்க தான்ணே எனக்கு குரு//
இதுக்காகவெல்லாம் உணர்ச்சிவசப்பட்டா எப்பிடி.. பொறுமை, பொறுமை!

நன்றி அப்துல்லா!