Wednesday, July 30, 2008

தங்கமணிகளைத் திருத்துவது கொஞ்சமேனும் சாத்தியமா?

விஷ‌ய‌த்துக்குள் போகும் முன் சில கருத்துக்க‌ளை ப‌கிர்ந்துகொள்ள‌ வேண்டுமென‌ நினைக்கிறேன்.

1. நானும் எல்லோர் வ‌லைப்பூக்க‌ளுக்கும் சென்று ப‌டித்து, பதில்போட்டு ம‌கிழ்விக்க‌ வேண்டுமென‌ நினைக்கிறேன். ஆனால் செய்வ‌தில்லை.

2. க‌வ‌ரும் டைட்டில்க‌ளை ம‌ட்டும் ஓப‌ன் செய்து பார்க்கிறேன். அதிலும் பாதிக்குதான் ப‌திலிடுகிறேன்.

3. வ‌லைப்பூ வைத்துக்கொள்ளாம‌லும், ப‌தில் போடுவ‌தில் ஆர்வ‌மில்லாம‌லும் ப‌டித்துவிட்டு ம‌ட்டும் செல்ப‌வ‌ர்க‌ளே அதிக‌ ச‌த‌வீத‌ம் இருப்பார்க‌ள் எனவும் ந‌ம்புகிறேன்.

4. அத‌னால் மீன்க‌ளை தூண்டிலில் விழ‌வைக்க‌ டைட்டில்க‌ளை யோசிப்ப‌திலேயே பாதி நேர‌ம் போய்விடுகிற‌து என்ப‌தையும் ஒப்புக்கொள்கிறேன்.


ச‌ரி.. இப்போ விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

அனைத்து விஷய‌ங்க‌ளிலும் வேண்டாம், குறைந்த‌ ப‌ட்ச‌மாக‌ ஒன்றிர‌ண்டு விஷய‌ங்க‌ளிலாவ‌து ந‌ம‌து த‌ங்க‌ம‌ணிக‌ளை திருத்த‌ (அல்ல‌து நாம் நினைக்கும் ப‌டி மாற்ற‌) முடிய‌மா? என்ப‌து கேள்வி.

இந்த‌க்கேள்வியை இன்னும் எளிமையாக‌ மாற்றிக்கொள்வோம்.
த‌ங்க‌ம‌ணி வேண்டாம். குறைந்த‌ ப‌ட்ச‌ம் வெள்ளிம‌ணியையாவது (அதாங்க‌ க‌ல்யாண‌த்துக்கு முன்னால், க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌வேண்டும் என்ற உள் நோக்க‌த்தோடு ப‌ழ‌கும் பெண்ணைத்தான் சொல்கிறேன். அந்த‌ வார்த்தையை யூஸ் ப‌ண்ண‌ வேண்டாமேனு பார்க்கிறேன். க‌ண்ண‌ன் முத‌லில் வைர‌ம‌ணி என்று வைக்க‌லாம் என்றான், இதை எழுதி முடிக்குமுன் அவ‌ளுக்கு வெள்ளியே அதிக‌ம் என்கிறான்) ஒரு விஷ‌ய‌த்திலாவ‌து திருத்த‌முடிய‌மா?

ஒரே ஒரு உதாரணம் தருகிறேன் பாருங்கள்.

எங்க‌ள் ஆ.:பீஸில் க‌ல்யாண‌ம் ஆகாத‌ இளைஞ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் அதிக‌ம். அதில் ஒரு க‌ல‌க‌ல‌ப்பான‌ பேர்வ‌ழிதான் ஸ்ரீ. அன்றைக்கு பார்த்து மூஞ்சியே க‌ளையிழ‌ந்து அழுது வ‌டிந்து, சோக‌ம் அப்பியிருந்த‌து.

'என்னாச்சு ஸ்ரீ?'

'நீங்க‌ சொல்ற‌து நிஜ‌ம்தான் கேகே. வ‌ர‌வ‌ர‌ ஒரே இம்சையா இருக்குது, ச‌மாளிக்க‌வே முடிய‌ல‌'

'ஏ.. நான் என்ன‌ப்பா சொன்னேன்? என்ன‌ப்பா பிர‌ச்சினை..'

'சும்மா விளையாடாதீங்க‌ கேகே.. நா அவ‌ளைப்ப‌த்தி சொல்றேன்.'

'...'

"என்ன‌ சொன்னாலும் கேக்க‌ மாட்டேங்கிறா.. வீக் டேஸ்ல‌ எப்பிடி பாண்டிச்சேரி போக‌ முடியும் சொல்லுங்க‌?.. வாரம் ஒரு நாள் வர்றேங்கிறேன், ரெண்டு வாட்டியாவ‌து வ‌ர‌ணும்கிறா. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம் இங்க‌ வ‌ந்த‌ப்புற‌ம் வேலைக்கு போலாம்கிறேன், இல்ல‌ இப்ப‌வே வேலைக்கு போவேங்கிறா. வீட்ல‌ க‌ல்யாண‌ப் பேச்ச‌ எடுக்க‌ட்டும் கொஞ்ச‌ம் பொறுங்கிறேன், இல்ல‌ இப்ப‌வே பேசுங்கிறா. பாருங்க‌ நேத்து ப‌ஸ்ல‌ செல்போனோட‌ ஹேண்ட்பேகை தொலைச்சுட்டு, இன்னிக்கு நைட்டே நீ வ‌ர்றே, புது போனோட‌ங்கிறா.. இன்னிக்கு டெஸ்பாட்ச் இருக்குது. நைட் லேட்டாகும். என்ன‌ ப‌ண்ற‌துன்னு முழிச்சிகிட்டிருக்கேன்.."

என் கேள்விக்கு இப்போது நானே ப‌தில் சொல்கிறேன். ச்ச்சத்திய‌மா முடியாது.!

(மாற்றுக் க‌ருத்து இருப்போர் ச‌ண்டைக்கு வ‌ர‌லாம்.)

டிஸ்கி : இது ஒரு கல்யாணமாகாதவரின் அனுபவம் என்பதால் 'கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை' சீரியஸில் சேர்க்கமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

67 comments:

தாமிரா said...

குறைந்த பட்சம் ஒரு 20 பின்னூட்டங்களாவது (எனது நன்றி நவில்தல்களை தவிர்த்து) வந்தால்தான் அடுத்த பதிவை போடலாம் என்ற இருக்கிறேன். (அதற்காக நீங்கள் பின்னூட்டமே போடாமலிருந்தால் கோபத்தில், தினமும் நான்கு பதிவுகளை ஏற்றி சித்திரவதை செய்வேன் என்று எச்சரிக்கை செய்ய கடமைப் பட்டுள்ளேன்.)

Vijay Anandh said...

// "தங்கமணிகளைத் திருத்துவது கொஞ்சமேனும் சாத்தியமா?"

ச்ச்சத்திய‌மா முடியாது.! //

வழி மொழிகிறேன்..

வெட்டிப்பயல் said...

//(மாற்றுக் க‌ருத்து இருப்போர் ச‌ண்டைக்கு வ‌ர‌லாம்.)//

இது போங்காட்டாம். யாருமே எதிர்க்க முடியாத விஷயத்தை எழுதிட்டு இப்படி சண்டைக்கு வரலாம்னு சொன்னா எப்படி? :-)))

வேணும்னா மாத்த முடியும்னு எழுதி பாருங்க. அப்ப நீங்க வீரன்னு ஒத்துக்கறோம் :-)

அவனும் அவளும் said...

// "தங்கமணிகளைத் திருத்துவது கொஞ்சமேனும் சாத்தியமா?"

கல்யாணம் முடிஞ்ச உடன முடிவு எடுக்க வேண்டிய சமாசாரம் இது. கல்யாண வாழ்க்கைல ரெண்டு roles உண்டு. ஒண்ணு பிரச்சனைய ஆரம்பிக்கறது, இன்னும் ஒண்ணு சுமூகமா முடிச்சு வைக்கிறது. நீங்க வாழ்க்கைல சந்தோஷமா இருக்கணும்னா பிரச்சனைய ஏற்படுத்தணும். சுமூகமா தீத்து வைக்க உங்க தங்கமணி முயற்சி பண்ணனும்.

Vijay Anandh said...

அய்யய்யோ...என்னாது இது??? ஏற்கனவே வசந்த காலங்களை ஞாபகப்படுத்தி வெறுப்பேத்தினது பத்தாதுன்னு இப்படி வேற மெரட்றீங்க?? தாங்காது முருகா...

நையாண்டி நைனா said...

தங்க மணிகளை திருத்த வா...?
செய்யலாம்...!!
செய்ய்ய்ய்ய்யலாம்...!?
செய்ய்ய்ய்ய்ய்ய்யயயயயலாலாலாம்??

வெங்கட்ராமன் said...

அதற்காக நீங்கள் பின்னூட்டமே போடாமலிருந்தால் கோபத்தில், தினமும் நான்கு பதிவுகளை ஏற்றி சித்திரவதை செய்வேன் என்று எச்சரிக்கை செய்ய கடமைப் பட்டுள்ளேன்

ஏன் இந்த கொலைவெரி.
இதோ என் பங்கு பின்னூட்டம்.

VIKNESHWARAN said...

:)

கிரி said...

//அத‌னால் மீன்க‌ளை தூண்டிலில் விழ‌வைக்க‌ டைட்டில்க‌ளை யோசிப்ப‌திலேயே பாதி நேர‌ம் போய்விடுகிற‌து என்ப‌தையும் ஒப்புக்கொள்கிறேன்//

அதிலையும் ஆபாசமாக இல்லாமல் இருக்க வேண்டும்.

//குறைந்த பட்சம் ஒரு 20 பின்னூட்டங்களாவது (எனது நன்றி நவில்தல்களை தவிர்த்து) வந்தால்தான் அடுத்த பதிவை போடலாம் என்ற இருக்கிறேன். (அதற்காக நீங்கள் பின்னூட்டமே போடாமலிருந்தால் கோபத்தில், தினமும் நான்கு பதிவுகளை ஏற்றி சித்திரவதை செய்வேன் என்று எச்சரிக்கை செய்ய கடமைப் பட்டுள்ளேன்.)//

ஹா ஹா ஹா

கமிட்மென்ட் அதிகம் ஆகி விடும், அது தான் பிரச்சனை, ஆனால் அது தவிர்க்க முடியாத ஒன்று.

ச்சின்னப் பையன் said...

////(மாற்றுக் க‌ருத்து இருப்போர் ச‌ண்டைக்கு வ‌ர‌லாம்.)//

இது போங்காட்டாம். யாருமே எதிர்க்க முடியாத விஷயத்தை எழுதிட்டு இப்படி சண்டைக்கு வரலாம்னு சொன்னா எப்படி? :-)))
//

ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

பினாத்தல் சுரேஷ் said...

தங்கமணிகளைத் திருத்துவது கொஞ்சமேனும் சாத்தியமா?

நல்ல கேள்வி.. இதேபோல..

கடல்நீர் முழுமையும் பாலாக மாற்றுவது சாத்தியமா?

இமயமலையில் சஹாரா பாலைவனம் உருவாவது சாத்தியமா?

மனிதனுக்கு மூன்று கை முளைப்பது சாத்தியமா?

இப்படியும் சில கேள்விகள் கேட்டிருக்கலாம்.

Anonymous said...

//
வெட்டிப்பயல் said...
//(மாற்றுக் க‌ருத்து இருப்போர் ச‌ண்டைக்கு வ‌ர‌லாம்.)//

இது போங்காட்டாம். யாருமே எதிர்க்க முடியாத விஷயத்தை எழுதிட்டு இப்படி சண்டைக்கு வரலாம்னு சொன்னா எப்படி? :-)))

வேணும்னா மாத்த முடியும்னு எழுதி பாருங்க. அப்ப நீங்க வீரன்னு ஒத்துக்கறோம் :-)

//
Repeatttttteeeeeeeeeyyyyyyyy...........

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

குறைந்த பட்சம் ஒரு 20 பின்னூட்டங்களாவது (எனது நன்றி நவில்தல்களை தவிர்த்து) வந்தால்தான் அடுத்த பதிவை போடலாம் என்ற இருக்கிறேன்.
/

மொதல்ல இதுக்கு ஒரு வழி செய்வோம்

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

குறைந்த பட்சம் ஒரு 20 பின்னூட்டங்களாவது (எனது நன்றி நவில்தல்களை தவிர்த்து) வந்தால்தான் அடுத்த பதிவை போடலாம் என்ற இருக்கிறேன்.
/

மொதல்ல இதுக்கு ஒரு வழி செய்வோம்

தமிழன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

குறைந்த பட்சம் ஒரு 20 பின்னூட்டங்களாவது (எனது நன்றி நவில்தல்களை தவிர்த்து) வந்தால்தான் அடுத்த பதிவை போடலாம் என்ற இருக்கிறேன்.
/

மொதல்ல இதுக்கு ஒரு வழி செய்வோம்

நிஜமா நல்லவன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

குறைந்த பட்சம் ஒரு 20 பின்னூட்டங்களாவது (எனது நன்றி நவில்தல்களை தவிர்த்து) வந்தால்தான் அடுத்த பதிவை போடலாம் என்ற இருக்கிறேன்.
/

மொதல்ல இதுக்கு ஒரு வழி செய்வோம்

சகா சஞ்சய் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

குறைந்த பட்சம் ஒரு 20 பின்னூட்டங்களாவது (எனது நன்றி நவில்தல்களை தவிர்த்து) வந்தால்தான் அடுத்த பதிவை போடலாம் என்ற இருக்கிறேன்.
/

மொதல்ல இதுக்கு ஒரு வழி செய்வோம்

குசும்பன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

மங்களூர் சிவா said...

/
// "தங்கமணிகளைத் திருத்துவது கொஞ்சமேனும் சாத்தியமா?"
/

உண்மையாகவே இருந்தாலும் இப்பிடி கிலி ஏற்படுத்தும் தலைப்புகளை மட்டும் எழுதுவதற்கு கண்டனங்கள்

:))))

மங்களூர் சிவா said...

/
வெட்டிப்பயல் said...

//(மாற்றுக் க‌ருத்து இருப்போர் ச‌ண்டைக்கு வ‌ர‌லாம்.)//

வேணும்னா மாத்த முடியும்னு எழுதி பாருங்க. அப்ப நீங்க வீரன்னு ஒத்துக்கறோம் :-)
/

பாலாஜி அண்ணே சேம் பிளட்டா அங்கயும் :((((

மங்களூர் சிவா said...

20

வெண்பூ said...

//அதற்காக நீங்கள் பின்னூட்டமே போடாமலிருந்தால் கோபத்தில், தினமும் நான்கு பதிவுகளை ஏற்றி சித்திரவதை செய்வேன் //

இதோ போட்டுட்டேன்...

மங்களூர் சிவா வாழ்க...

வெண்பூ said...

ஏன் திருத்தணும்னு கேக்குறேன்.. அவங்க என்ன அப்படி தப்பு செஞ்சிட்டாங்கன்னு கேக்குறேன். நீங்க எல்லாம் இப்படி பெண்ணினத்தை மோசமாக பேசுவதை அனுமதிக்க முடியாது.

(தங்கமணியிடம் போனில்) தங்கம்.. நீ சொன்ன மாதிரியே பின்னூட்டம் போட்டுட்டன்டா... இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆகும்டா...

(மறுமுனையில்) ##$%$%$#%$#

ஜோசப் பால்ராஜ் said...

தங்கமணியை திருத்துரதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்ல. என்ன கொஞ்ச நாளாகும். தினத்தந்தியில வர்ற சிந்துபாத் முடியுறதுகுள்ள திருத்தியிடலாம். இத போய் ஒரு பெரிய விசயமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க?? சின்ன புள்ளயாவே இருக்கீங்க போங்க.

கயல்விழி said...

இதுக்கு சீரியசாக பதில் எழுதலாமா, இல்லை வெறும் காமெடியா என்று யோசிக்கிறேன்.

NewBee said...

ரொம்ப நப்பாசைங்க உங்களுக்கு.

இருந்தாலும் உங்க வெள்ளை மனசுக்காக...ஒரு பின்னூட்டம்.

பி.கி.:ஸ்ஸ்ஸ்ஸ்....20 ஆயுடுச்சுல...:)))

அது சரி said...

வீக் டேஸ்ல பாண்டிச்சேரியா? ரொம்ப நல்ல பொண்ணா இருக்கே பாஸு! இந்த காலத்து பொண்ணுங்க, டாவை எங்க தண்ணி அடிக்க உடுறாளுங்க? இந்த பொண்ண பாருங்க, வீக் டேஸ்லயே கூப்டு தண்ணி அடிக்குது!

(ஓ, செல் ஃபோனா? அது வர்ற வழில மறந்துட்டன்னு சொல்ல வேண்டியது தான். அவ மட்டும் மறக்கலாம், நாம மறக்க கூடாதா? மீறி கேட்டா ஒரு குவாட்டர் Green Label வாங்கி குடுக்க சொல்லுங்க. நல்ல பிராண்ட் விஸ்கி. அவளும் மறந்துடுவா!)

மங்களூர் சிவா said...

/
வெண்பூ said...

ஏன் திருத்தணும்னு கேக்குறேன்.. அவங்க என்ன அப்படி தப்பு செஞ்சிட்டாங்கன்னு கேக்குறேன். நீங்க எல்லாம் இப்படி பெண்ணினத்தை மோசமாக பேசுவதை அனுமதிக்க முடியாது.

(தங்கமணியிடம் போனில்) தங்கம்.. நீ சொன்ன மாதிரியே பின்னூட்டம் போட்டுட்டன்டா... இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆகும்டா...

(மறுமுனையில்) ##$%$%$#%$#
/

வெண்பூ கடைசில இருக்கிறத கொஞ்சம் டீகோட் பண்ணி சொல்லிடுங்களேன் ச்சின்ன பசங்க நாங்க உசாரா இருந்துப்போம்

வல்லிசிம்ஹன் said...

ஓ இருப்பத்தைந்து ஆகி விட்டதா. சரி.

ரங்கமணிகளை எப்படித் திருத்த முடியாதோ அதே மாதிரி தங்கமணிகளையும்ம்ம்ம்ம்...முடீது:)
கேள்வியே தப்பு.:)

மங்களூர் சிவா said...

/
கயல்விழி said...

இதுக்கு சீரியசாக பதில் எழுதலாமா, இல்லை வெறும் காமெடியா என்று யோசிக்கிறேன்.
/

ஓவரா யோசிக்காதீங்க சட்டுபுட்டுனு என்ன தோணுதோ அப்படியே எழுதிடுங்க!!

எப்பா வருணு ஜாக்கிரதைய்யா
:))

மங்களூர் சிவா said...

/
NewBee said...

ரொம்ப நப்பாசைங்க உங்களுக்கு.
/

@புதுவண்டு

"ரொம்ப பேராசை உங்களுக்கு"ன்னு டைப்படிக்க வந்து தவறுதலா இப்பிடி டைப்படிச்சிட்டீங்க போல இருக்கே

:)))))))))

மங்களூர் சிவா said...

/
வல்லிசிம்ஹன் said...

ஓ இருப்பத்தைந்து ஆகி விட்டதா. சரி.

ரங்கமணிகளை எப்படித் திருத்த முடியாதோ அதே மாதிரி தங்கமணிகளையும்ம்ம்ம்ம்...முடீது:)
/

வல்லிம்மா அப்படிங்கறீங்க!?

/
கேள்வியே தப்பு.:)
/

அதாவது தங்கமணிகளை திருத்த முடியுமாங்கிற நினைப்பே தப்புங்கற மாதிரி இருக்கே!?!?

அவ்வ்வ்வ்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா ஆமாம்.:)

ராஜ நடராஜன் said...

// மீன்க‌ளை தூண்டிலில் விழ‌வைக்க‌ டைட்டில்க‌ளை யோசிப்ப‌திலேயே பாதி நேர‌ம் போய்விடுகிற‌து //

தங்ஸ் சார்பா எதிர்ப்பு தெரிவிக்கலாமுன்னுதான் வந்தேன்.மீன்களைப் பிடிக்கன்னு சொன்னதுனாலே தப்பிச்சீங்க.ச்சின்னப் பையனுக்கு தலைப்பு வச்சதோட சந்தோசத்தப் பாருங்க:)

கோவை விஜய் said...

நீங்க 20 கேட்டீங்க
அவங்க 34 கொடுத்தாங்க

திருப்தியா

ரங்கமணி முயற்சி செய்தால் தங்கமணியை திருத்தலாம்

வாரியார் சுவாமிகளின் அறிவுரை
(கல்யானம் ஆனவர்களுக்கும் ஆகப் போகிறவர்களுக்கும்)

ரங்க மணி தங்கமணியை திருத்த பார்க்கணும்
முடியலியா( 100 % முடியாது)

தங்கமணி சொல்ற மாதிரி கேடக வேண்டியது

பின் ( கடைசி காலத்தில்-- 60 வயதுக்கு பிறகு)

எல்லாம் சரியாய் விடும்( பழகி விடுமல்லவா!)

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

தாமிரா said...

கடை தொரந்ததிலிருந்தே இன்னிக்குதாம்ப்பா நல்ல யாவாரம்.!

அன்பான நண்பர்களே.. உண்மையிலேயே மனம் குளிர்ந்தது. என்னுடைய தலையீடு இல்லாமலேயே 20 பின்னூட்டங்கள் (தலைக்கணக்கு மட்டுமே) வந்துவிட்டன. (ஆகவே இதிலிருந்து என் அடுத்த பதிவை விரைந்து எதிர் பார்க்கிறீர்கள் என்ற (தப்பான) முடிவுக்கு நான் வரலாம் என நினைக்கிறேன்.) நன்றி, நன்றி.!

தாமிரா said...

நன்றி விஜய் ஆனந்த்!

ந‌ன்றி வெட்டிப்ப‌ய‌ல்! (உங்க‌ள் பின்னூட்ட‌த்தை மிக‌ ர‌சித்துச் சிரித்தேன். பாருங்க‌ள்.. எத்த‌னை ரிப்பீட்டுக‌ள்.!)

ந‌ன்றி அவ‌னும் அவ‌ளும்! (உங்க‌ள் யோச‌னை த‌வ‌று. முத‌லில் இப்படித்தான் நான் பிர‌ச்சினை ப‌ண்ண‌ ஆர‌ம்பித்தேன், அவள் ச‌ரி ப‌ண்ண‌ முய‌ற்சிப்பாள் என‌ நினைத்து. ப‌திலாக‌ பிர‌ச்சினை பெரிசாச்சே த‌விர‌ ச‌ரியாவ‌லை..)

தாமிரா said...

நன்றி நையாண்டி! (எப்ப‌டி அந்த‌ டாப்பிக்கை எடுத்த‌வுட‌னேயே கிர்ர்ர்ர்ர‌டிக்குதா?)

ந‌ன்றி வெங்கட்ராமன்! (இப்படியெல்லான் பயங்காட்டுனா மட்டும்தான் பின்னூட்டம் போடுறீங்க.. பாருங்க..எத்தனைபேர் பயந்துபோய் ஓடிவந்திருக்கிறதை.!)

ந‌ன்றி விக்னேஷ்வரன்!

தாமிரா said...

நன்றி கிரி! (சீரியஸான பதிலாச்சா..எதிர்பார்க்கலை)

ந‌ன்றி ச்சின்னப்பையன்! (எப்படி..?!)

ந‌ன்றி பினாத்தல்! (என்ன ஊட்ல இன்னிக்கு கொஞ்சம் ஜாஸ்தியோ.. அதான் பிரமாதமான கேள்வியெல்லாம் தோணுது?)

வெட்டிப்பயல் said...

//பாலாஜி அண்ணே சேம் பிளட்டா அங்கயும் :((((//

சிவா,
உலகம் முழுக்க சூரியன் உதிக்கும் திசை கிழக்கு தான் :-)

எனக்கும் அது தான்...
உனக்கும்...... :-))))

வெட்டிப்பயல் said...

//ந‌ன்றி வெட்டிப்ப‌ய‌ல்! (உங்க‌ள் பின்னூட்ட‌த்தை மிக‌ ர‌சித்துச் சிரித்தேன். பாருங்க‌ள்.. எத்த‌னை ரிப்பீட்டுக‌ள்.!)//

நன்றிக்கு நன்றி ஹே :-)

Syam said...

//"தங்கமணிகளைத் திருத்துவது கொஞ்சமேனும் சாத்தியமா?"//

அங்க போய் பின்னுட்டம் போட்ட மவனே.... இது தங்கமணி சொன்னது...அதுனால நான் போயிட்டு அப்புறமா வரேன் ஆபிசர்... :-)

பிரேம்குமார் said...

மொத்தமா முடியுமான்னு கேட்டா முடியாது! ஆனா நீங்க கொஞ்சமேனும் அப்படின்னுத்தானே கேக்குறீங்க????! அது முடியலாம் (இப்ப கூட பாருங்க, முடியலாம்னு தான் சொல்ல முடியுது)

முதலில் இருந்தே இவ்வளவு தான் நம்மளால முடியுங்குறத தங்கமணிக்கு புரியவைக்கனும்.... காதலியா இருக்கும் அல்லது நிச்சயக்கப்பட்ட பின் ஏகப்பட்ட சலுகைகள குடுத்துட்டு அப்புறம் அதையெல்லாம் ஒரேடியா நிறுத்திட்டா அப்புறம் ரொம்ப காண்டாயிடுவாங்க...

உங்க நண்பர் அவர் விசயத்தில் இப்போதே இழுத்துப்பிடித்தால், அல்லது காதலிக்க ஆரம்பிக்கும்போதே இழுத்துப்பிடித்திருந்தால் ரொம்ப பிரச்சனை இருக்காது. இல்ல காதலி தானேன்னு அனுதாபப்பட்டு இப்போ ரொம்ப வழிஞ்சா, தங்கமணி ஆனதுக்கு அப்புறம் தாவு தீர்த்திடுவாங்க ;)

Syam said...

//வெட்டிப்பயல் said...
சிவா,
உலகம் முழுக்க சூரியன் உதிக்கும் திசை கிழக்கு தான் :-)

எனக்கும் அது தான்...
உனக்கும்...... :-))))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...வெட்டி எங்கயோ போய்டீங்க... :-)

தாமிரா said...

இன்னிக்கு மழை ஏதும் வரப்போகுதா? பத்து நிமிஷம் போய்ட்டு வாரதுக்குள்ள அடுத்து நாலு பேரு. (ஒரே ஜிலு ஜிலுனு இருக்குது)

தாமிரா said...

மங்களூர்.. ஏதோ கூலிப்படை தலைவன் ரேஞ்சுக்கு ஆட்களை கூப்பிடுறது நிஜம்மாவே பயம்ம்மா இருக்குது. உங்களையே ந‌ம்பால தாங்க முடியலியே..
நீங்க கூப்புடுற ஆட்கள்லாம் பெரிய கைகளா இருக்கும் போல தெரியுதே.! (ந‌ம்ப உடம்பு தாங்காது.. உக்கார வெச்சி கும்மிட்டாங்கன்னா..)

தாமிரா said...

வெண்பூ ://(தங்கமணியிடம் போனில்) தங்கம்.. நீ சொன்ன மாதிரியே பின்னூட்டம் போட்டுட்டன்டா... இன்னிக்கு கொஞ்சம் லேட் ஆகும்டா...
(மறுமுனையில்) ##$%$%$#%$#//

பிரமாதம்.. நன்றி வெண்பூ!


நன்றி ஜோஸப் பால்ராஜ்! (//சின்ன புள்ளயாவே இருக்கீங்க போங்க// உங்கள மாதிரி பெருசெல்லாம் கமுக்கமா இருக்கப்போயிதான், எங்களுக்கு ஒண்ணும் தெரியாம போய்டுச்சு)

நன்றி கயல்விழி! (நா.. பாவம், கொஞ்சம் பாத்து யோசிங்க)

நன்றி புதுவண்டு! (என்னா பெரிய மனசு உங்களுக்கு..)

தாமிரா said...

நன்றி அதுசரி! (வாங்க.. கொஞ்சம் ஓவரா இல்ல இது.)

நன்றி வல்லிசிம்ஹன்! (சேம் சைடு கோல் போட்ட ஒரே ஆளு இவுருதான். அதை தடுத்தாட்கொண்ட மங்களூர் சிவாவுக்கு இன்னொரு நன்றி)

நன்றி ராஜ நடராஜன்! (எத்தனை பேரு பாத்தீங்கல்ல.. சும்மா, எதுத்துதான் கருத்துசொல்லிப்பாருங்களேன்)

தாமிரா said...

நன்றி விஜய்! (ந‌ம்ப விஜய்தானே..? வங்க வாங்க)

நன்றி தாமிரா! (சே.. ஒரு ரவுண்டு வந்திடேனா அதுக்குள்ள? சந்தோஷத்துல ஒண்ணும் புரிலப்பா)

தாமிரா said...

ரெண்டாவது ரவுண்டு வந்த வெட்டிப்பயல், ஷ்யாமுக்கு நன்றி!

நன்றி பிரேம்குமார்! (அட்வைஸ் ஒருபக்கம் இருக்கட்டும். முதல்ல உங்களுக்கு 'அது' ஆயிடுச்சானு சொல்லுங்க. ஆவாதவங்கல்லாம் இப்படித்தான் நிறைய ஐடியாங்களை சிந்திச்சு வெச்சுக்கிட்டு ரெடியா இருப்பாங்க, அப்புறந்தான் தெரியும் சேதி.)

யாருப்பா அது 50 போடப்போறது? (நான் வாங்கப்போகும் முதல் .:பி.:ப்டிப்பா.!)

புதுகைத் தென்றல் said...

அதற்காக நீங்கள் பின்னூட்டமே போடாமலிருந்தால் கோபத்தில், தினமும் நான்கு பதிவுகளை ஏற்றி சித்திரவதை செய்வேன் என்று எச்சரிக்கை செய்ய கடமைப் பட்டுள்ளேன்.

avvvvvvvv

ithellam ovaru :)

Syam said...

50 :-)

தாமிரா said...

ஜஸ்ட் மிஸ்ஸு ஷ்யாம், புதுகைத்தென்றல் போட்டுட்டாரு. நன்றி புதுகை! (அவருக்கு தெரியாமலேன்னு நினைக்கிறேன். பின்னாளில் வரப்போகும் என் முதல் புத்தகத்தின் முதல் பிரதி இவருக்கே.. ரெகுலர் கஸ்டமர்கள் சண்டைக்கு வராதீங்கப்பா.. புல்லரிக்குதுபா)

வெண்பூ said...

//
மங்களூர் சிவா said...
/
(மறுமுனையில்) ##$%$%$#%$#
/

வெண்பூ கடைசில இருக்கிறத கொஞ்சம் டீகோட் பண்ணி சொல்லிடுங்களேன் ச்சின்ன பசங்க நாங்க உசாரா இருந்துப்போம்
//

கல்யாணம் பண்ணிகோங்க தலை. நீங்களே புரிஞ்சிக்கிவீங்க. :)))

வெண்பூ said...

ஐம்பது அடித்ததை முன்னிட்டு அண்ணன் தாமிரா ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி அடுத்த 50 நாட்களுக்கு எந்த பதிவும் போடமாட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின்ன.. 20 வரலன்னா மட்டும் டெய்லி 4 மொக்கை போடுவாராம். நாங்க எல்லாம் யாரு..

புதுகைத் தென்றல் said...

பின்னாளில் வரப்போகும் என் முதல் புத்தகத்தின் முதல் பிரதி இவருக்கே.
)


கந்தா காப்பாத்து. :)

வெண்பூ said...

//பின்னாளில் வரப்போகும் என் முதல் புத்தகத்தின் //

ஓ..இவரு புக் வேற எழுதுவாறு போல இருக்கப்போவ்... (மன்னன் கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

தாமிரா said...

வெண்பூ : //தாமிரா ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி அடுத்த 50 நாட்களுக்கு எந்த பதிவும் போடமாட்டார்..ஓ..இவரு புக் வேற எழுதுவாறு போல இருக்கப்போவ்// என்ன இப்புடி கால வாருறீங்க.. (இருந்தாலும் புக் கொஞ்சம் ஓவருதான் இல்லையா?) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

யோவ்.. புதுகை, பரிசு குடுத்தா வாங்கிக்க‌ணும், என்ன‌ ப‌ழ‌க்க‌ம் இது?

புதுகைத் தென்றல் said...

யோவ்.. புதுகை,

hi hi hi

Naan ammanigo. :)

தாமிரா said...

ஸாரிங்க புதுகை ! (வெக்கமாயிருக்கு ஹி ஹி)
(நிஜமா உங்க ப்ரொ.:பைலுக்கு போனேனா.. அங்க நிறைய பிளாக்ஸ் இருந்துது. எதப் பாக்குறதுனு புரியாம சிலத ஓபன் பண்ணினப்போ ஒரே மீஜிக், சாமி அது இதுன்னு இருந்துதா, அப்பமே மைல்டா டவுட் வந்திச்சு. மிஸ் பண்ணிட்டேன்)

பரிசல்காரன் said...

எப்ப இந்தப் பதிவப் போட்டீங்க? ஏன்னா, நீங்கதான் என் பின்னூட்டத்துல எப்பவுமே வந்து விளம்பரம் பண்ணுவீங்கள்ல? இத இன்னைக்குதான் பார்த்தேன்.

பரிசல்காரன் said...

உங்களுக்கு தெரியாம உங்க க.ஆ.ஒ.எ. சீரியல் நாலாவது பார்ட் நான் எழுதலாம் சில பாய்ண்ட் நோட் பண்ணி வெச்சிருக்கேன்.. பாருங்க, ஒரு நாளைக்கு திடீர்னு போட்டுத் தாக்கறேன்

பரிசல்காரன் said...

கொஞ்சம் அசரறதுக்குள்ள 59 ஆப்பா???

இப்போ எனக்கு டைமில்ல. அப்புறமா வந்து நூறடிக்கறேன்!

Syam said...

//ஜஸ்ட் மிஸ்ஸு ஷ்யாம், //

என்ன பண்றது நமக்கு எல்லாமே தப்பு தப்பா தான் நடக்குது...கல்யாணம் கூட ஜஸ்ட் மிஸ் தான்...இல்லானா நானும் ஒரு காமராஜர்,வாஜ்பாயி,அப்துல் கலாம் மாதிரி வரவேண்டியவன்...இப்போ ஒரு வாய் தண்ணி அடிக்க என்ன என்ன டுபாகூர் வேலை பண்ணவேண்டி இருக்கு :-)

அவனும் அவளும் said...

*********ந‌ன்றி அவ‌னும் அவ‌ளும்! (உங்க‌ள் யோச‌னை த‌வ‌று. முத‌லில் இப்படித்தான் நான் பிர‌ச்சினை ப‌ண்ண‌ ஆர‌ம்பித்தேன், அவள் ச‌ரி ப‌ண்ண‌ முய‌ற்சிப்பாள் என‌ நினைத்து. ப‌திலாக‌ பிர‌ச்சினை பெரிசாச்சே த‌விர‌ ச‌ரியாவ‌லை..)************

ஹா ஹா ஹா. நான் ஏதோ நல்ல எண்ணத்துல பின்னோட்டம் போட்டதா நினைச்சீங்களா ? இத படிச்சுட்டு யாராவது பிரச்சனை பண்ண மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை தான்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

யோவ்.. புதுகை,
//

தாமிரா அண்ணே! புதுகைத்தென்றல் அக்கா என்கிட்ட அங்க ஒரு ஆளு நீன்னு நினைச்சி என் கிட்ட யோவ் போட்டு பேசிக்கிட்டு இருக்கருன்னாங்க.அது நீங்க தானா?

:))

//"தங்கமணிகளைத் திருத்துவது கொஞ்சமேனும் சாத்தியமா?"//

அண்ணே!ஏதாவது ஆகுற காரியமா யோசிங்கண்ணே

தாமிரா said...

வாங்க பரிசல்! (ஆனாலும் நமக்குன்னாதாம்ப்பா அல்லாரும் பிஸி ஆயிடுவாங்கோ).இன்னிக்கு எப்பிடி ஜோரா யாவாரம் ஆகுது பாத்தீங்களா?

//க.ஆ.ஒ.எ. சீரியல்// தலைப்பு பேடன்ட் செய்யப்பட்டது. அப்புறம் போலீஸ் வரும் ஜாக்கிரதை!

//இப்போ ஒரு வாய் தண்ணி அடிக்க என்ன என்ன டுபாகூர் வேலை பண்ணவேண்டி இருக்கு// ரொம்ப‌ கொடும‌ ஷ்யாம், ம‌ன‌தில் இருப்ப‌தை ப‌டித்த‌தும், க‌ண்க‌ள் க‌சிகின்ற‌ன‌. ரெடியா இருங்கோ.. அழைப்பு வ‌ரும். ப‌திவ‌ர் மீட் அல்ல‌! 'குடியர் மீட்'!

அவனும் அவளும் சதித்திட்டத்தில் இடி விழ!

என்ன அப்துல், அவுங்க சொன்னாங்கன்னா உங்களுக்கு எங்கே போச்சு? தப்பா நினைச்சது உண்மைதான், ஆனா நீங்கன்னு எப்படி நினைப்பேன். நீங்கதான் 'குடியர் மீட்' ஏற்பாடு பண்ணப்போற புரவலர் ஆச்சே!

தாமிரா said...

அப்பாடா.! இன்னிக்கு ரொம்ப திருப்தியா யாவாரம் நடந்தது. எனக்கு தெரிஞ்சு 'சென்ஷி'யை தவிர எல்லோரும் வந்தாச்சு. நிம்மதியா தூங்குவேன்.