Wednesday, August 27, 2008

த‌ங்க‌ம‌ணியும் மாமியாரும் :போர் -1

அன்பான மாமியார்களையும் மருமகள்களையும் எங்கேயாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆமாம், உங்களைப்போலவே நானும் டிவி பேட்டிகளிலும் (அவர்கள் அழகாகவும் இருப்பார்கள்), கதைகளிலும், சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். அந்த மருமகள், மாமியாரை 'அம்மா' என்றழைப்பார். மாமியாரோ மருமகளை பாசமொழுக வாத்சல்யமாக பார்ப்பார். சேரில் ஒருவர் அமர, அவர் தோளைத்தொட்டவாறு மற்றொருவர் நிற்க போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்.

ஆனால் நான் கேட்பது நிஜ வாழ்வில் நேரில் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? என்ன முழிக்கிறீர்கள்..

(இடையில் ஒரு டிஸ்கி : நமது சப்ஜக்டை விட்டுவிட்டு ரம்பா, சினிமா அதுஇது என பாதைமாறி போனதில், கண்ணன் நேற்றிரவு ஒரு நைன்டியை போட்டுவிட்டு வந்து மொத்துமொத்தென மொத்திவிட்டான். ஆகவேதான் உடனடியாக சப்ஜக்டுக்கு திரும்புகிறோம்.)

இந்த முறை என் கதையை விடுத்து, நண்பன் ஒருவனின் (சுந்தர் -செல்வி) கதையைப்பார்ப்போம். ஒவ்வொன்றாக அலசலாம், முதலில்..பொதுவாக மாமியார், மருமகள் இருவருக்கும் எப்போது சண்டை துவங்குகிறது? நாளாக‌ நாளாக‌ ஒருவ‌ர் குண‌ங்க‌ள் ம‌ற்றொருவ‌ருக்கு தெரிய‌வ‌ர‌ மெதுவாக‌ துவ‌ங்குகிற‌தோ.. என்று மெதுவாக‌ சிந்திக்கிறீர்க‌ளா, இல்லை. திரும‌ண‌ம் முடிந்த‌வுட‌னேயே மின்ன‌ல் வேக‌த்தில் துவ‌ங்கிவிடுகிற‌து. நண்பன் கதையில் மறுநாளே 'மறுவீட்டுக்கு' போய்வந்தவுடனே ஆரம்பித்துவிட்டது.

அவர்க‌ள் எத‌ற்காக‌ ச‌ண்டை போடுகிறார்க‌ள்? ப‌ண‌ம், காசு, ந‌கை, ந‌ட்டு.? இல்ல‌வேயில்லை, அப்ப‌டியிருந்தால்தான் லாப‌ம் என்று நினைத்துக்கொள்ள‌லாமே.! 'ம‌றுவீட்டுக்கு' போய்வ‌ந்த‌ ஜோடியுட‌ன், ப‌ழ‌ங்க‌ளும், சில‌ எவ‌ர்சில்வ‌ர் பானைக‌ளில் தின்ப‌ண்ட‌ங்க‌ளும் வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம். சுந்தர் மறுவீட்டுக்கு போய்வந்தபோது உடன் 15 தார் வாழைப்ப‌ழ‌ங்க‌ளும், 450 கைச்சுற்று முறுக்குக‌ளும், 200 அதிர‌ச‌ங்க‌ளும் மேலும்சில‌ ப‌ண்ட‌ங்க‌ளும் வ‌ந்திருந்த‌ன‌. இவ‌ற்றை ம‌றுநாள் உற‌வின‌ர்க‌ள், தெருவின‌ர்க‌ளுக்கு (வசதியான பார்ட்டியாகவோ, சின்ன ஊராகவோ இருப்பின் ஊருக்கே) த‌ந்து எங்க‌ள் ம‌ரும‌க‌ள் கொண்டுவ‌ந்த‌து இது, ல‌ட்ச‌ண‌த்தைப் பார்த்துக்கொள்ளுங்க‌ள் என்று அறிவித்து ம‌கிழ்வார்க‌ள்.

ஆனால் சிக்க‌ல் பாருங்க‌ள், வ‌ந்த‌ 15 வாழைத்தார்க‌ளில் 10க்கும் மேற்ப‌ட்ட‌வை காயாக‌வே இருந்த‌ன‌, மேலும் அந்த‌க்காய்க‌ளும் விர‌ல் த‌டிம‌னுக்கே இருந்த‌ன‌. பேச‌ப்ப‌ட்ட‌ 500 முறுக்குக‌ளில் 450 ம‌ட்டுமே இருந்த‌ன‌, அவ‌ற்றிலும் 200க்கும் மேற்ப‌ட்ட‌வை இர‌ண்டாக‌வும், சில‌ எண்ணிக்கையில் எடுக்க‌முடியாத‌ அள‌வில் நொறுங்கிப்போயும் இருந்த‌ன‌. அதிர‌ச‌மோ க‌றுப்பாக‌வும், மெலிந்தும் இருந்த‌து. வெற்றிலை வ‌ர‌வேயில்லை (ப‌திலாக‌ 50 ரூபாய் ப‌ண‌ம் வ‌ந்திருந்த‌து). இத்த‌னை பெரிய‌ குறையை எப்ப‌டி ஒரு மாமியாரால் பொறுத்துக்கொள்ள‌முடியும்? இது த‌வ‌றுத‌லாக‌ ந‌ட‌ந்துவிட்ட‌தா? அல்ல‌து நாம் சீட்டிங் செய்ய‌ப்ப‌ட்டோமா என்று அவ‌ருக்கு ப‌ல‌த்த‌ ஐய‌ம், உள்ள‌க்குமுற‌ல், ஐயோ நாளை யாருக்கும் ஏதும் கொடுக்காவிட்டால் ப‌க்க‌த்துவீட்டு ப‌த்மா 'உன் ம‌ரும‌க‌ள் ஏதும் கொண்டுவ‌ர‌வில்லையா' என்று கேலி செய்வாளே, இந்த‌ப்பொருட்க‌ளை கொடுத்தால் அதைவிடவும் மோசமாக இந்த ஊரே சிரிக்குமே.! என்ன‌ செய்வது என்று அவர் தத்தளிக்கிறார். மாம‌னார் என்ன‌ சொல்கிறார்.. 'ஏம்மா டென்ஷ‌னாவுறே? முருக‌ன் க‌டையில‌ 10 தாருக்கு ந‌ல்ல‌ நாட்டுப்ப‌ழ‌மா சொல்லிட‌லாம், முறுக்குக்கு பாண்டிய‌ அனுப்பிச்சு இன்னிக்கே வாங்கிட்டு வ‌ர‌ச்சொல்லிட்டா போச்சு. ஏற்க‌ன‌வே 80 ரூபா அவுட்டு, இந்த‌ 1 ரூபாயில‌ என்ன‌ ஆயிர‌ப்போவுது' என்று வாய்தவறி இய‌ல்பாக‌ செல‌வையும் சேர்த்து சொல்லிவிடுகிறார். உடனே 'அந்த சிறுக்கி (சம்பந்தி), இப்பிடி ஏமாத்திட்டாளே' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் மாமியார்.

அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ இந்த‌ க‌ளேப‌ர‌ம் ம‌ரும‌கள் செல்வி காதுக்கு போகிற‌து. வ‌ந்து நின்ற‌வ‌ள், வ‌ந்த‌ ரெண்டாவ‌து நாளேவா? என்ன‌ ப‌ண்ண‌லாம், எங்கு ஆர‌ம்பிக்க‌லாம் என‌ யோசிக்க‌த்துவ‌ங்குகிறாள்.

ந‌ம‌து ஹீரோ சுந்தரோ ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் த‌ம் அடித்துவிட்டு, இர‌ண்டாம் இர‌வுக்கான‌ க‌ன‌வுக‌ளுட‌ன் (ஏன்னா நேற்றுதான் சொத‌ப்பியிருப்பானே) வீட்டுக்குள் நுழைகிறான்.

'காந்த‌ல் போட்டு மூணு நாளாகியும் அந்த‌ப்ப‌ழ‌ம் ப‌ழுக்க‌ல‌ன்னா எங்க‌ம்மா என்ன‌ ப‌ண்ணுவாங்க‌? முறுக்க‌ வ‌ண்டில‌ ஏத்தும்போதே நான் க‌வ‌னிச்சேன், சின்ன‌ மாமாதான் த‌ட‌முடானு ஏத்துனாங்க‌.. பின்ன‌ உடையாம‌ என்ன‌ செய்யும்?' என்று முடிந்த‌ வ‌ரை அமைதியாக‌ வாத‌ம் செய்து கொண்டிருந்தாள். சுந்த‌ர் உள்ளே நுழைந்த‌தும் மேலும் கொஞ்ச‌ம் அமைதிய‌டைகிற‌து. (புது மாப்பிள்ளை என்ப‌தால் ஒரு ம‌ரியாதைதான், இது மாயை மாதிரி.. எந்த‌ நேர‌மும் க‌லைந்துபோக‌லாம்.) அதற்குள் விஷயம் சம்பந்தி வீட்டுக்கு எட்டி, நஷ்ட ஈடாக ரூபாய் 200 வந்துசேர்ந்தது.

ஆனால் இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் எதிர்த்தே பேசியிராத‌ ந‌ம் பெற்றோரை நேற்று (உண்மையிலேயே நேற்று)வ‌ந்த‌வ‌ள் எதிர்த்து பேசுவ‌தா? என்று க‌லாசார‌ அதிர்ச்சியில் அதிர்ந்துபோனான் சுந்த‌ர். செல்வியும் அன்றிர‌வு 'இதுபோல‌ இனி பேசுவ‌தில்லை' என‌ உறுதிய‌ளித்த‌தும், அடுத்த‌ நிமிட‌மே கோப‌ம் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் ப‌ற‌ந்த‌து. ஆகா‌ ந‌ம் பேச்சுக்கு என்ன‌ ம‌ரியாதை என‌ நினைத்து உள்ள‌ம் குளிர்கிறான்.

அடுத்துவ‌ந்த‌ சில‌ நாட்க‌ளில் வாழ்க்கையின் ப‌ல‌ ர‌க‌சிய‌ங்க‌ளையும் அவ‌னுக்கு அவ‌ன் அம்மாவும், செல்வியும் இணைந்து புரிய‌வைத்த‌போது ஒரே வார‌த்தில், ப‌த்து வ‌ய‌து ஏறிய‌தைப்போல‌ உண‌ர்ந்தான் சுந்த‌ர். திரும‌ண‌மாகி ப‌த்தாவ‌து நாள் ந‌ண்ப‌ர்க‌ளின் ம‌த்தியில் உகார்ந்திருந்தவன் போதையில் அழத்துவ‌ங்கினான். க‌ண்க‌ளில் க‌ண்ணீர் தாரை தாரையாய் வ‌ழிந்த‌து. அப்போது நான் சொன்னேன் 'தைரியமா இருடா மாப்ள‌, இப்ப‌ நா இல்ல‌..?சொன்னாதாண்டா பார‌ம் குறையும், என்ன‌டா ந‌ட‌ந்துச்சி.?'

அவ‌ன் : அவ்வ்வ்வ்வ்வ்......

42 comments:

சந்தனமுல்லை said...

:-)

தமிழ் பிரியன் said...

தாமிரா எழுத்து பிழை இருக்கு பாருங்க... தாமிரா என்று இருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் சுந்தர் என்று இருக்கு... சரி செய்ங்க... ;)

தாமிரா said...

வாங்க முல்லை, நன்றி.!
வாங்க தமிழ், நன்றி.! (இன்னா நூல் வுட்டுப்பாக்கிறியா தல.?)

பாபு said...

எந்த சப்ஜெக்ட் எடுத்தா எழுத நிறைய மேட்டர் கிடைக்குமோ அதை கையில் எடுத்து விட்டீர்கள்.இது ஒரு தீரா நதி ,வாழ்க்கை முழுதும் நீங்கள் எழுதிக்கொண்டே இருக்கலாம்

தாமிரா said...

வாங்க பாபு, நன்றி.!

தாமிரா said...

ரொம்ப எதிர்பார்க்குறப்போ ஒருத்தனும் பதில் போடமாட்டீங்களே.. நல்லாருங்கடா டேய்.. (சொம்மா புலம்பிக்கினுருக்கேம்பா, வந்தாச்சுல்ல பதில் போட்னு போய்க்கினேயிரு..)

ஜெகதீசன் said...

:)
வந்தேன்...
படித்தேன்...
ஓட்டும் போட்டேன்...
பின்னூட்டமும் போட்டேன்...

அவனும் அவளும் said...

ரொம்ப interesting example இல்லையே. வந்த ரெண்டாவது நாள் மருமகள் எதுவுமே பேசாமா இருக்கறா மாதிரி இருக்கு.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அன்பான மாமியார்களையும் மருமகள்களையும் எங்கேயாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
//

ஆண்டவனே பார்த்ததில்லையாம்! அப்துல்லாக்கிட்ட போய் கேட்டா?

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

என்ன முழிக்கிறீர்கள்..
//


இப்ப‌டி கேட்டா வேற‌ என்ன‌ ப‌ண்ணுற‌தாம்?

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

கண்ணன் நேற்றிரவு ஒரு நைன்டியை போட்டுவிட்டு வந்து மொத்துமொத்தென மொத்திவிட்டான்.
//


ப‌திலுக்கு குவாட்ட‌ர‌ போட்டு திரும்ப மொத்திருங்க‌

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

முதலில்..பொதுவாக மாமியார், மருமகள் இருவருக்கும் எப்போது சண்டை துவங்குகிறது?
//


மாமியார்,ம‌ரும‌க‌ள் ஆன‌துக்கு அப்புற‌ம்தான்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அவர்க‌ள் எத‌ற்காக‌ ச‌ண்டை போடுகிறார்க‌ள்? ப‌ண‌ம், காசு, ந‌கை, ந‌ட்டு.? இல்ல‌வேயில்லை, அப்ப‌டியிருந்தால்தான் லாப‌ம் என்று நினைத்துக்கொள்ள‌லாமே.!
//


இங்க பாருடா கொள்ளைய போய் லாபம்ங்கிறத‌

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

'ம‌றுவீட்டுக்கு' போய்வ‌ந்த‌ ஜோடியுட‌ன், ப‌ழ‌ங்க‌ளும், சில‌ எவ‌ர்சில்வ‌ர் பானைக‌ளில் தின்ப‌ண்ட‌ங்க‌ளும் வ‌ருவ‌து வ‌ழ‌க்க‌ம்.
//


ஓயிட் காலர் ராபரி :)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

வ‌ந்து நின்ற‌வ‌ள், வ‌ந்த‌ ரெண்டாவ‌து நாளேவா? என்ன‌ ப‌ண்ண‌லாம், எங்கு ஆர‌ம்பிக்க‌லாம் என‌ யோசிக்க‌த்துவ‌ங்குகிறாள்.
//


அதெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே ரூம் போட்டு யோசிச்சுட்டு தான் வருவாங்க‌

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஏன்னா நேற்றுதான் சொத‌ப்பியிருப்பானே) //

அடப்பாவிகளா? எல்லாப் பயகலும் அப்படித்தானா? :)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அதற்குள் விஷயம் சம்பந்தி வீட்டுக்கு எட்டி, நஷ்ட ஈடாக ரூபாய் 200 வந்துசேர்ந்தது.
//


ஆஹா! எவ்வளவு பெரிய நஷ்டஈடு?????

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஆகா‌ ந‌ம் பேச்சுக்கு என்ன‌ ம‌ரியாதை என‌ நினைத்து உள்ள‌ம் குளிர்கிறான்.
//


அன்னைக்கு ஏமாற ஆரமிக்கிறவந்தான் அப்புறம் ஆயுசுக்கும் தொடரும்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஆணி புடுங்கிட்டு அப்புறமா வந்து மிச்ச பின்னூட்டத்த போடுறேன்

அனுஜன்யா said...

தாமிரா,

//உங்க கடைக்கு ரொம்ப நாளா வரணும்னு நினைச்சு இப்போதான் வந்திருக்கேன். ஸாரிங்க.//

உங்களின் பிரச்சனையே தான் எனக்கும். இதையும் ஒரு option ல வைக்கலாம். interesting ஆ எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

தாமிரா said...

வாங்க ஜெகதீசன், நன்றி.!
வாங்க அவனும் அவளும், நன்றி.! (உங்க வீட்ல ரெண்டாம் நாள் என்ன நடந்துதுன்னு சொல்றீங்களா?)
வாங்க அப்துல், மெனக்கெட்டு கூப்பிட்டதுக்கு இப்பிடியா போட்டு தாக்குவீங்க..//அடப்பாவிகளா? எல்லாப் பயகலும் அப்படித்தானா? :)// அங்கேயுமா..?

தாமிரா said...

வாங்க அனுஜன், நன்றி.!

தாமிரா said...

வ‌ர்ற‌விங்க‌ எல்லாரும் த‌வ‌றாம‌ ஓட்டுப்போடுங்க‌.. உங்க‌ளை எச்ச‌ரிப்ப‌த‌ற்காக‌/ ஓட்டுக‌ளை க‌வ‌ர்வ‌த‌ற்காக‌ நேற்று வைக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ம், ந‌ம‌க்கு இது தேவையா? என்று க‌ண்ண‌ன் க‌டிந்துகொண்ட‌தால் எடுக்க‌ப்ப‌ட்டு அங்கு இப்போ விஜ‌ய‌ டிஆர் நிற்கிறார்.

மங்களூர் சிவா said...

back to form
good
:))))

மங்களூர் சிவா said...

/
தாமிரா எழுத்து பிழை இருக்கு பாருங்க... தாமிரா என்று இருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் சுந்தர் என்று இருக்கு... சரி செய்ங்க... ;)
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

எத்தனை ஓட்டுப்பா போடறது ஒன்னு ஓட்டு போட்டவொடனே இன்னோன்னு வருது!!

மங்களூர் சிவா said...

/
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

வ‌ந்து நின்ற‌வ‌ள், வ‌ந்த‌ ரெண்டாவ‌து நாளேவா? என்ன‌ ப‌ண்ண‌லாம், எங்கு ஆர‌ம்பிக்க‌லாம் என‌ யோசிக்க‌த்துவ‌ங்குகிறாள்.
//


அதெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே ரூம் போட்டு யோசிச்சுட்டு தான் வருவாங்க‌
//

அப்துல்லா கலக்கறீங்க!!

மங்களூர் சிவா said...

/
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஆகா‌ ந‌ம் பேச்சுக்கு என்ன‌ ம‌ரியாதை என‌ நினைத்து உள்ள‌ம் குளிர்கிறான்.
//


அன்னைக்கு ஏமாற ஆரமிக்கிறவந்தான் அப்புறம் ஆயுசுக்கும் தொடரும்
//

அவ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
டிஸ்கி : நமது சப்ஜக்டை விட்டுவிட்டு ரம்பா, சினிமா அதுஇது என பாதைமாறி போனதில், கண்ணன் நேற்றிரவு ஒரு நைன்டியை போட்டுவிட்டு வந்து மொத்துமொத்தென மொத்திவிட்டான். ஆகவேதான் உடனடியாக சப்ஜக்டுக்கு திரும்புகிறோம்
/

நல்லா இருப்பா கண்ணா!!

மங்களூர் சிவா said...

/

இந்த முறை என் கதையை விடுத்து, நண்பன் ஒருவனின் (சுந்தர் -செல்வி) கதையைப்பார்ப்போம்.
/

நம்பீட்டோம்@!!!

மங்களூர் சிவா said...

/
இத்த‌னை பெரிய‌ குறையை எப்ப‌டி ஒரு மாமியாரால் பொறுத்துக்கொள்ள‌முடியும்? இது த‌வ‌றுத‌லாக‌ ந‌ட‌ந்துவிட்ட‌தா? அல்ல‌து நாம் சீட்டிங் செய்ய‌ப்ப‌ட்டோமா என்று அவ‌ருக்கு ப‌ல‌த்த‌ ஐய‌ம்
/

இருக்காதா பின்ன!?!?

மங்களூர் சிவா said...

/
அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ இந்த‌ க‌ளேப‌ர‌ம் ம‌ரும‌கள் செல்வி காதுக்கு போகிற‌து. வ‌ந்து நின்ற‌வ‌ள், வ‌ந்த‌ ரெண்டாவ‌து நாளேவா? என்ன‌ ப‌ண்ண‌லாம், எங்கு ஆர‌ம்பிக்க‌லாம் என‌ யோசிக்க‌த்துவ‌ங்குகிறாள்.
/

இன்னுமா ஆரம்பிக்கலை ரெண்டு நாளா????

:)))))))))))

மங்களூர் சிவா said...

/
ஏன்னா நேற்றுதான் சொத‌ப்பியிருப்பானே
/

:))))))))))))))
ROTFL

மங்களூர் சிவா said...

/
(புது மாப்பிள்ளை என்ப‌தால் ஒரு ம‌ரியாதைதான், இது மாயை மாதிரி.. எந்த‌ நேர‌மும் க‌லைந்துபோக‌லாம்
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((((((((((

மங்களூர் சிவா said...

/

அடுத்துவ‌ந்த‌ சில‌ நாட்க‌ளில் வாழ்க்கையின் ப‌ல‌ ர‌க‌சிய‌ங்க‌ளையும் அவ‌னுக்கு அவ‌ன் அம்மாவும், செல்வியும் இணைந்து புரிய‌வைத்த‌போது ஒரே வார‌த்தில், ப‌த்து வ‌ய‌து ஏறிய‌தைப்போல‌ உண‌ர்ந்தான் சுந்த‌ர்
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

@ மங்களூர் சிவா

thankq brother

தாமிரா said...

நீங்க வந்தாதான் ஒரு திருப்தியே வருது மங்களூர்.. அதுக்காக இத்தனை தடவை அழுவணுமா? அனுபவிச்ச சோகமா? வரப்போற பயமானுதான் புரியல.!

தாமிரா said...

என்ன அப்துல், நாந்தானே நன்றி சொல்லணும்.? (ஓகோ, நீங்க சொல்லவந்ததையெல்லாம் அவ்ரு சொன்னதுக்கா?) அப்புறம் மற்ற கடைகளில் மேய்வதற்காக நம்ப கடைக்கு ரெண்டு நாள் லீவு உட்டுருக்கேன் தெரியுமா? பார்க்கிறவங்க‌கிட்ட சொல்லிடுங்கோ, யாராவது வந்து பாத்துட்டு சும்மா போப்போறாங்க.. (ரெண்டு நாள்தான்.. வந்துடுவேன்ல, அழுவாதீங்க..)

அவனும் அவளும் said...

****உங்க வீட்ல ரெண்டாம் நாள் என்ன நடந்துதுன்னு சொல்றீங்களா?*****

என் அன்பான மனைவி உங்களோட பதிவுகள படிக்கறாங்களே !

குடுகுடுப்பை said...

மொத்ததிலே எல்லா கணவனுக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்தான்.

தாமிரா said...

நன்றி, அவனும் அவளும்.. (அப்ப இன்னும் ஜாக்கிரதையா இருக்குணுமே..)
நன்றி, குடுகுடுப்பை.!

அது சரி said...

இது நல்லா இருக்கு :0)

அப்புறம் என்ன ஆச்சி?