Friday, August 8, 2008

கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -4

பொதுத்துறையோ, தனியார் துறையோ, சிறிய நிறுவனமோ, பெரிய கார்ப்பரேட்களோ, ஸா.:ப்ட்வேரோ, ஆட்டோமொபைலோ பணியிடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் கல்யாணம் ஆகாதவர்களும், ஆனவர்களும் கலந்தே பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். (என்ன அரிய கண்டுபிடிப்பு என ந‌க்கல் பண்ணாமல் மேலே போகவும், விஷயம் இருக்கிறது)

பொதுவாக நாம் ஒரு பிரச்சினையை அனுபவிக்கும்போது என்ன செய்கிறோம்? ஒரு படத்தைப் பார்க்கிறோம். பின்விளைவுகளை அனுபவிக்கிறோம். நண்பர்கள், வேண்டியவர்களிடம், 'போகாதே.. போனால் ரண்டு நாளைக்கு வயித்தாலே போகும்' அப்படினு எச்சரிக்கிறோம்.

ஆனால் இந்த கல்யாணம் ஆனவர்கள் என்ன செய்கிறார்கள்.. கல்யாணமாகாதவர்களை ஒருவிதமான பொறாமையோடேயே பார்த்துவிட்டு, இவனுக்கும் கல்யாணம் நடக்கும் இவனும் சீர் கெட்டு போவான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டுஎதைப்பற்றியுமே எச்சரிக்கை செய்யாமல் எதுவுமே நடக்காததுபோல பாவனை செய்துகொண்டு ஒரு வித 'ஸாடிஸ்ட்' போல இருந்துவிடுகிறார்கள். யாருக்காவது கல்யாணம் என்றால் சந்தோஷமாக சிரித்து வாழ்த்துகிறார்கள், பிஸியாக இருந்தாலும் கல்யாணத்துக்கும் ஒரு எட்டு போய்வந்துவிடுகிறார்கள். நன்றாக உற்றுக்கவனிப்போமேயானால் அந்தச்சிரிப்பின் பின்னால் ஒரு சைக்கோ ஒளிந்துகொண்டிருப்பதையும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்து உள்ளூர மகிழத்தான் கல்யாணத்துக்கும் போகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடியும்.

இதுவரை எனது மூன்று எச்சரிக்கை பாகங்களையும் படித்தவர்களுக்கு லேசாக ஒரு சந்தேகம் வந்திருக்கக்கூடும். இவ்வளவு சொல்றானே இந்த ஆளு, ஏதாவது விஷயம் இருக்குமோ என்று. (சந்தேகம் வராதவர்களும், இந்த எச்சரிக்கைப்பதிவுகளை வெறும் காமெடிப்பதிவுகளாகவும் நினைப்பவர்கள் பிற பதிவுகளைப் படிக்க போகலாம் என்றும் இனி இந்த எச்சரிக்கைப் பதிவுகளை படிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்)
அவ்வாறு வந்தவர்களுக்கு இன்னுமொரு காரணம் சொல்கிறேன், படித்துவிட்டு நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

அதே அலுவலக‌ச்சூழல். கல்யாணமாகாதவர்களை கவனியுங்கள். லேட்டாக வந்தாலும் சரியான நேரத்துக்கு வெளியேறிவிடுவார்கள். அவர்களுக்கென்று நிறைய வேலைகள் இருக்கும், யாராவது அவர்களுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கக்கூடும், அல்லது இவர்கள் யாருக்காவது வெயிட் பண்ணப்போகவேண்டியிருக்கும். ஷாப்பிங், சினிமா, பார்ட்டி என நிறைய கமிட்மென்ட்ஸ்.

இப்போது மெதுவாக கல்யாணம் ஆனவர்களைக் கவனியுங்கள். நிச்சயமாக ஆ.:பீஸ் நேரத்துக்கு முன்னமே வந்துவிடுவார்கள். உங்களுக்கு முன்னால் அவர்கள் கிளம்பியதை உங்களால் ஒரு நாள்கூட பார்த்திருக்கமுடியாது. (நிஜம்தானே.. என்று உங்களில் சிலர் பயத்துடன் ஒப்புக்கொள்வது கேட்கிறது)

ஏன்.?

யாராவது யோசித்ததுண்டா? இன்னும் விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள். புதிதாக கல்யாணம் ஆனவர் யாரையாவது அவருக்குத் தெரியாமல் கண்காணியுங்கள். கல்யாணம் ஆனப்புதிதில் லேட்டாக வந்து சீக்கிரம் ஓடிப்போவார்கள். (அவர்களுடைய மானேஜர்களும் கண்டுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குத்தெரியும், என்ன நடக்கப்போகிறதென்று.) நாளாக நாளாக இந்த அலுவலக நேரம் கூடிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் செக்யூரிட்டி, சீட்டுக்கே வந்து சார் ஆ.:பீஸ பூட்டணும் என்று (கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுவதைத்தான் டீஸன்டாக எழுதியிருக்கிறேன்) சொல்லும்வரை கிளம்ப மாட்டார்கள்.

ஏனென்று யோசித்து வையுங்கள். தேவைப்படுவோர்கள் இதையும் (எச்சரிக்கை ஒன்று, இரண்டு, மூன்று) படியுங்கள். அடுத்த எச்சரிக்கையில் சந்திக்கிறேன். (அடுத்த காரணம் கிடைக்காமல் இதை ஒப்பேறியிருக்கிறார் தாமிரா என்று நினைப்பவர்களைப்பார்த்து நான் சிரிக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது. இருப்பினும் காரணங்களை நான் மட்டுமே கூறிக்கொண்டிருப்பதைவிட வாசகர்களையும் சிந்திக்கத்தூண்டுவது ஒரு எழுத்தாளருடைய சரி.. சரி.. பதிவருடைய கடமையல்லவா?)

26 comments:

கயல்விழி said...

ஏன் என்று கேட்டு கடைசியில் பதில் சொல்லாமல் நிறுத்திவிட்டீர்களே?

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//(அடுத்த காரணம் கிடைக்காமல் இதை ஒப்பேறியிருக்கிறார் தாமிரா என்று நினைப்பவர்களைப்பார்த்து நான் சிரிக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது.//

ஹை!எங்கப்பன் குருதுக்குள்ள இல்லையே!

தாமிரா said...

நன்றி கயல்விழி.!
நன்றி அப்துல்லா.! (என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா? உங்களையும்தானே சிந்திக்கச்சொன்னேன். சரி, அடுத்த எச்சரிக்கை ஹிட் ஆகும்போது புரிந்துகொள்வீர்கள்)

தாமிரா said...

யே.. எங்கப்பா போனீங்க எல்லோரும்.? ஒவ்வொரு வாட்டியும் போய் கூட்டிக்கொண்டா வரமுடியும்.. கஷ்டப்பட்டு கிடைக்குற நேரத்தில பதிவு போட்டா பாராட்ட வரமாட்டீங்குறீங்களே.. சே.!

விஜய் ஆனந்த் said...

// இந்த கல்யாணம் ஆனவர்கள் என்ன செய்கிறார்கள்.. கல்யாணமாகாதவர்களை ஒருவிதமான பொறாமையோடேயே பார்த்துவிட்டு, இவனுக்கும் கல்யாணம் நடக்கும் இவனும் சீர் கெட்டு போவான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டுஎதைப்பற்றியுமே எச்சரிக்கை செய்யாமல் எதுவுமே நடக்காததுபோல பாவனை செய்துகொண்டு ஒரு வித 'ஸாடிஸ்ட்' போல இருந்துவிடுகிறார்கள். யாருக்காவது கல்யாணம் என்றால் சந்தோஷமாக சிரித்து வாழ்த்துகிறார்கள், பிஸியாக இருந்தாலும் கல்யாணத்துக்கும் ஒரு எட்டு போய்வந்துவிடுகிறார்கள். நன்றாக உற்றுக்கவனிப்போமேயானால் அந்தச்சிரிப்பின் பின்னால் ஒரு சைக்கோ ஒளிந்துகொண்டிருப்பதையும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்து உள்ளூர மகிழத்தான் கல்யாணத்துக்கும் போகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடியும். //

ithu sellaathu...sellaathu...sellaathu..
naattaama...theerpa maaathi sollunga...naanga(kalyaanam aanavanga) aduthavan kalyaanathukku poorathe, ivan vaazhkayilayaavathu ethaavathu miracle nadanthu kalyaanathukku appuram nalla santhoshamaa irukkattumnu manasaara vaazhthatthane thavira, entha psycho noakkamum illai enbathai therivikka kadamaippattullen!!!

(sorry...dont have tamil fonts..)

அது சரி said...

ஏனுங்கண்ணா, இப்பிடி உம்மய போட்டு ஒடைக்கிறதுக்கு ஊட்ல பெர்மிசன் வாங்கிட்டியளா இல்ல ரகசியமா எழுதிறியளா? பாத்து சூதானாமா இருங்கண்ணா, டின்னு கட்டிற போறாங்க!

அது சரி said...

அண்ணேங், குசேலன் பத்தி நானும் ஒரு பதிவு போட்டுட்டேன். வந்து எதுனா சொல்லிட்டு போங்க.
(படிக்காட்டாலும் பரவால்ல. ஹி ஹி)

மங்களூர் சிவா said...

:))))))))

மங்களூர் சிவா said...

/
அடுத்த காரணம் கிடைக்காமல் இதை ஒப்பேறியிருக்கிறார் தாமிரா என்று நினைப்பவர்களைப்பார்த்து நான் சிரிக்கிறேன்.
/

:(((((((

மங்களூர் சிவா said...

/
இன்னும் நிறைய இருக்கிறது. இருப்பினும் காரணங்களை நான் மட்டுமே கூறிக்கொண்டிருப்பதைவிட வாசகர்களையும் சிந்திக்கத்தூண்டுவது ஒரு எழுத்தாளருடைய சரி.. சரி.. பதிவருடைய கடமையல்லவா?)
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

யே.. எங்கப்பா போனீங்க எல்லோரும்.? ஒவ்வொரு வாட்டியும் போய் கூட்டிக்கொண்டா வரமுடியும்.. கஷ்டப்பட்டு கிடைக்குற நேரத்தில பதிவு போட்டா பாராட்ட வரமாட்டீங்குறீங்களே.. சே.!
/

எல்லாம் கல்யாணம் ஆகாத பயபுள்ளைக எவளுக்காகவாவது வெய்ட் பண்ண போயிருப்பாங்க!!!

:))))))))

தாமிரா said...

நன்றி விஜய் ஆனந்த்.! (சரி சரி.. நம்புறேன்)

நன்றி அதுசரி.! (//ஊட்ல பெர்மிசன் வாங்கிட்டியளா இல்ல ரகசியமா எழுதிறியளா?// ஊட்டுக்கு தெரியாதுங்க. என்னிக்காச்சும் தெரிஞ்சா.. அம்பேல்! உங்க‌ க‌டைக்கு போயிட்டு த‌லைசுத்தி திரும்பி வ‌ந்துட்டேன்.

தாமிரா said...

வாங்க சிவா.! (ஓரொரு விஷயத்துக்கும் விதவிதமா .:பீலிங் காமிச்சுக்கிறீங்கோ.. தேன்ஸுங்கோ!)


//வாசகர்களையும் சிந்திக்கத்தூண்டுவது ஒரு எழுத்தாளருடைய சரி.. சரி.. பதிவருடைய கடமையல்லவா?)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்// ச்சு..சூ இதுக்கெல்லாம் அழுவக்கூடாது..!

அது சரி said...

//
உங்க‌ க‌டைக்கு போயிட்டு த‌லைசுத்தி திரும்பி வ‌ந்துட்டேன்.
//

அதுங்கண்ணா, குசேலன் பாத்துட்டு அந்த காண்டுல எழுதினனா, என்ன அறியாமலேயே குசேலன் திரைக்கதை மாதிரியே எழுதிட்டன்!

மத்தபடி, படத்தோட விமர்சனம் மொத்தம் நாலு, அஞ்சி வார்த்தையில முடிச்சிரலாம்.

Adinga Gommala, Masura-illa Usura, Oru Mayirum Illeengo.

அவ்ளொதான் குசேலன் விமர்சனம்.

M.Saravana Kumar said...

//அடுத்த காரணம் கிடைக்காமல் இதை ஒப்பேறியிருக்கிறார் தாமிரா என்று நினைப்பவர்களைப்பார்த்து நான் சிரிக்கிறேன்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

தாமிரா said...

வாங்க அதுசரி.! (இந்த மாதிரி வார்த்தைகளை தமிழில் எழுதுவதைவிட ஆங்கிலத்தில் எழுதினால் கொஞ்சம் பரவாயில்லை போலத்தெரிகிறது)
வாங்க சரவண‌க்குமார்.! (அழுவதுகூட அர்த்தமில்லாமல்தான் அழுவேன் என்பவர்களை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்)

Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

அ. பெண் பார்க்கும்போது பெண்ணை பிடித்ததுபோல தோன்றினால், தயவுகூர்ந்து பெண்ணோடு தனியே கொஞ்சம் பேசிப்பாருங்கள். உங்கள் விருப்பு, வெறுப்புகள், எதிர்பார்ப்புகள், இத்யாதி இத்யாதிக்கள் ... (other than saree, cooking etc.)

.....

அன்புடன்
அனானி

Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

ஆ. நீங்கள் கிராமத்துப்பின்னணி கொண்ட ஆடவராயிருப்பின் பெருநகர நாகரிகத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணை தேர்வு செய்யாதீர்.

.....

அன்புடன்
அனானி

Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

இ. பெண் விருப்பத்தோடுதான் ஒத்துக்கொள்கிறாரா அல்லது நிர்ப்பந்தமா என்பதை தெளிந்துகொள்ளுங்கள்.

.....

அன்புடன்
அனானி

Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

ஈ. பொருளாதாரரீதியில் உங்களோடு சமநிலையில் இருப்பவரோடு மண உறவு கொள்வதே சிறப்பு. (கொஞ்சம் மேலே கீழே இருப்பதில் தவறில்லை. ஏற்றத்தாழ்வு சீசா போலிருப்பின் கவனம்)

.....

அன்புடன்
அனானி

Anonymous said...

கேட்(பட்)டறிவுரை :

உ. பழைய காதல்கள் இருப்பின் (இருவருக்கும்) அதுபற்றி பேசி தெளிவு படுத்திக்கொள்ளல் சாலவும் நன்று. (நண்பரொருவரின் மனைவி, திருமணத்துக்குப்பிறகும் தன் முன்னாள் காதலரோடு தொடர்பில் இருந்திருக்கிறார். அதுவும் எப்படி ? அந்த மு.கா ‘உன் ஹஸ்பன்டோட first night நடந்திடிச்சா ?’ என்று கேட்டு, இந்த பெண்ணும் ‘ஏன் ?’ என்று கேட்டு, ‘இல்லையென்றால் சொல், நான் வந்து நடத்தி வைக்கிறேன்’ என்று சொல்லும் அளவுக்கு. அந்த மு.கா, இன்னமும் நண்பரின் மனைவியை "டியர்", "பேபி" என்றுதான் அழைப்பது வழக்கமாம். நண்பர் எச்சரித்தும் கேளாமல் தொடரவே, நண்பர் மாமனார் குடும்பத்தை அழைத்து விபரம் சொல்லி மனைவியை அனுப்பி வைத்துவிட்டு இப்போது வேறு பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறார்)

.....

அன்புடன்
அனானி

Anonymous said...

ஊ. இதற்கு முன்னால் வேறு பெண்/மாப்பிள்ளை பார்த்து அது கைகூடாது போயிருப்பின் அதை மறந்து (அல்லது மனதின் அடியாழத்தில்) புதைத்துவிடல் நலம். [நெருங்கிய உறவினனின் - நண்பன் மாதிரி, அதனாலே ர் இல்லாமல் ன் விகுதி - மனைவி, முதலிரவன்றே தான் வெளிநாட்டில் வேலைபார்த்தபோது பார்த்த மாப்பிள்ளை பற்றி ப்ரஸ்தாபித்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்த இருவரும் போனில் அடிக்கடி பேசியிருக்கிறார்கள். வயது வித்யாசம் 9 என்பதால் இந்த பெண்ணின் அம்மா, 'வயது வித்யாசம் அதிகமிருப்பின் ஆணுக்கு பெண் மீது சந்தேகம் வரும்' என்று சொல்லி தவிர்த்திருக்கிறார். ஒத்துவராமற்போகவே 'பரவாயில்லை 'நாம் நண்பர்களாயிருப்போம்' என்று இந்தப்பெண் சொன்னாராம். ஆனால் அந்த நபரோ 'if you don't want to be my wife, I don't want you to be my friend' என்றிருக்கிறாராம். அப்படி சொன்னவருடைய புகைப்படம் இன்னும் தன் mail box-ல் வைத்திருப்பதாகவும் இந்த பெண் கூறவே, சற்றே முகம் சுளித்த இவன் முதலிரவென்பதால் மௌனம் காத்திருக்கிறான், பின்னொருநாளில் மனைவி அந்த நபரின் புகைப்படத்தை காட்டியபோது, அந்த நபர், 'no problem, we can be friends' என்று அந்த mail-ல் சொல்லியிருக்கவே, உறவினன் சற்றே அழுத்தமாக, 'I don't want you to be my friend என்று சொன்னவனின் புகைப்படத்தை இன்னும் உன் mail box-ல் வைத்திருப்பது எதற்காக ? 'I don't want you to be my friend' என்று போனில் சொன்னவன் எப்படி 'we can be friends, no problem' என்று சொன்னான், எது உண்மை எது போய் ?' என்று கேட்கவும் வார்த்தை தடித்துப்போய் (அந்த பையனின் பெற்றோர் ஒரு சந்திப்பில் இந்த பெண்ணின் பெற்றோரிடம் இன்னும் உங்கள் பெண்ணின் புகைப்படம் எங்களிடம் உள்ளது என்று கூறவும், அதனாலென்ன பரவாயில்லை என்று பெண்ணின் அப்பா சொல்லியிருக்கிறாராம் (?!)) they ended up in divorce.]

.....

அன்புடன்
அனானி

Anonymous said...

Last but not the least .....

நீங்கள் படுக்கையில் கில்லாடியாய் இல்லாத படசத்தில் மனதை திடப்படுத்திக்கொள்ளவும்.

என் முன்னாள் roommate ஒருவனின் கதை இது :

மணமான சில மாதங்களில் ஒருமுறை படுக்கையில் சற்று இயலாமற் போகவே (performance anxiety என்று பிற்பாடு சொன்னான்) மிக சுவாதீனமாக "இன்னேரம் பிரபுவ (பிரபு - முன்னாள் காதலன் என அறிக) விட்டா அடிச்சி நகத்தி இருப்பானோஓஓஓஓ என்னமோ தெரியலயா" என்று சொல்ல (இந்த பெண் மணமாவதற்கு முன் வேலை நிமித்தம் பல நாடுகள் சுற்றியவர்; மாநகர நாகரிக மங்கை) அதிர்ந்து போன நண்பர் பெண்ணை பெற்றவர்கள் வீட்டுக்கி அனுப்பிவிட்டு (உங்கள் பெண்ணுக்கு புருஷன் தேவையில்லை; பொலிகாளைதான் தேவை; தேடி, சோதித்து, திருமணம் செய்து வையுங்கள்' என்ற அட்வைஸுடன்) ஒருநாள் தண்ணியடித்துவிட்டு எங்கள் கூட்டத்தில் நடுவே இதை சொல்லிவிட்டு 'நாற...' என்று ஆரம்பித்து திட்டினான் பாருங்கள் அந்த பெண்ணை. அப்பப்ப்பா .... (நானா அவளை தேடி ஓடினேன், அவள் அப்பாதான் போட்டோ கூட அனுப்பாமல் 'பொண்ணு பாக்க வா வா'-னு கூப்பிட்டு, நல்ல குடும்பமா தெரிஞ்சுதே, கொஞ்சம் friendly admosphere-ஆ இருந்துச்சே-னு கல்யாணம் பண்ணினா இப்படி அசிங்கப்படுத்திட்டாளே-டா ! பொண்ணு பாக்க போனப்பவே தனியா என்கிட்ட கேட்டிருந்தா நா நேர்மையா 'நா ஆவரேஜ்தான், அடிச்சி நகத்தற அளவுக்கெல்லாம் இல்லை'-னு சொல்லிட்டே வந்திருப்பேனே-டா)

எல்லோர் போதையையும் சரேலென்று இறங்கியோட சொல்லவியலா அதிர்ச்சியிலும் திகைப்பிலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம் ...

ஏற்கனவே ஒருமுறை படுக்கையில் இரண்டாம் சுற்றுக்கு இயலாமற்போகவே, ‘போய்யா தாத்தா !’ என்றிருக்கிறாராம் அந்த பெண்.

அவ்வளவே !!! நன்றி, வணக்கம்.

அன்புடன்
அனானி

தாமிரா said...

நன்றி அனானி.! நான் ஏதோ எல்லோர் வீடுகளிலும் உள்ள விஷயங்களை நகைப்புக்காக(வேற வழி?) எழுதப்போக நீங்கள் சீரியஸாகவே சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். பெயரைச்சொல்லியிருக்கலாமே. உங்கள் அறிவுரைகளையே தனி பதிவாக போடலாமா என்று எண்ணியுள்ளேன். அவை நிஜமாகவே கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் நல்ல எச்சரிக்கையாக அமையும்.

Anonymous said...

மிக்க நன்றிகள் தாமிரா.

தேவை ஏற்படின் என் பெயர் சொல்லிக்கொள்வதில் தயக்கமில்லை. அதுவரை வேண்டாமே ... (கண்டிப்பாக தேவையெனில் மின்னஞ்சல் முகவரி தாருங்கள், தொடர்பு கொள்கிறேன்)

மற்றபடி பதிவுக்கு சம்பந்தமில்லாதது என்று நீக்கிவிடாமலிருந்தமைக்கு என் நன்றிகள்.

இவை எதுவும் துளியும் கற்பனை கலப்பில்லாத உண்மை என்பதை மற்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
அனானி

தாமிரா said...

ந‌ன்றி அனானி, மெயில் ஐடி ப்ரொபைலில் உள்ளது, விரும்பினால் வரலாம்.