Monday, August 11, 2008

ஷோகேஸ் மனைவிகள்.!

கல்யாணம் ஆகாதவங்கல்லாம் இங்கே கிட்டே வாங்கோ,(ஆனவங்க தூரப்போயிடுங்க, அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்க மாட்டேன். அப்பாலிக்கா அழக்கூடாது) ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டியிருக்கிறது. நாம எல்லோரும் எங்கேயாச்சும் வெளியே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறோம். ஷாப்பிங் காம்ப்ளெஸ்களில், பஸ் நிலையங்களில், ரயில்வே ஸ்டேஷன்களில், சிலர் ஏர்ப்போர்ட்களில் என பல இடங்களில் நாம் ஒரு அழகான காட்சியை சில சமயங்களில் காண நேர்கிறது.

அது, ஒரு அழகான இளைஞன் நின்று கொண்டிருப்பான் (பெரும்பாலும் அவனுக்கு மீசை இருக்காது). அவனருகே ஒரு அழகான இளம்பெண் நின்றுகொண்டிருப்பாள். (உங்களுக்கு சேலை பிடிக்குமென்றால் இளநீலத்தில் முந்தானை அலைபாயும் சேலையணிந்திருப்பாள். உங்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் ஓகே என்றால் அநியாயத்துக்கு ஜீன்ஸும் டீ ஷர்ட்டும் அணிந்திருப்பாள். ச‌ம‌ய‌ங்க‌ளில் டீ ஷ‌ர்ட்டுக்கு ப‌திலாக‌ டாப்ஸும் அந்த‌ டாப்ஸுக்கும் ஜீன்ஸுக்கும் ந‌டுவே கேப்ஸும் இருக்கும்.)

இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இடையே ஒரு பெண் குழ‌ந்தை நின்று கொண்டிருக்கும் (அது அழகான மிடியில் கடத்திக்கொண்டுபோய் கொஞ்சிக்கொண்டிருக்கலாம் போன்று அநியாய‌த்துக்கு அழ‌காக‌ இருக்கும்). அவ‌ர்க‌ளைப்பார்த்த‌துமே அவ‌ர்க‌ள் ஜோடி என்ப‌தும் அந்த‌க்குழ‌ந்தை அவ‌ர்க‌ளோட‌துதான் என்பதும் புரிந்து போகும். இப்போதான் க‌ல்யாண‌ம் ஆன‌மாதிரியிருக்காங்க‌.. ஆனா குழ‌ந்தையைப்பாரேன்.. என்று வாயில் ஈ நுழைவ‌து தெரியாம‌ல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பீர்க‌ள். உள்ம‌ன‌தில் உங்க‌ளுக்கு நாமும் க‌ல்யாண‌‌ம் செய்துகொண்டு, இதுபோல‌.. என்று காட்சிக‌ளும் க‌ற்ப‌னைக‌ளும் எழும்.

ஸாரி..

அவ‌ற்றை ம‌ற‌ந்துவிடுங்க‌ள், நீங்க‌ள் ஏமாந்து போக‌க்கூடும். பெரும்பாலும் அவ‌ர்க‌ள் விதிவில‌க்கில் வ‌ரும் ஷோகேஸ் ஜோடிக‌ள். நிஜ‌ம் எப்ப‌டி இருக்கிற‌தென்று உங்க‌ளுக்கு தெரிய‌வேண்டுமென்றால் நிறை கேஸ் ஸ்ட‌டி ப‌ண்ற‌ பொறுமையும், நேர‌மும் உங்க‌ளுக்கு வேண்டும். உட‌ன‌டியாக‌ தெரிந்துகொள்ள‌ வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் 'ப‌ரிச‌ல்கார‌ன்' வீட்டுக்கு போக‌லாம்.

அல்ல‌து பெட்ட‌ர் ஆப்ஷ‌ன்.. என் வீட்டுக்கு வ‌ர‌லாம்!

(டிஸ்கி : க‌ல்யாண‌‌ம் ஆகாத‌வர்க‌ளுக்கு ஓர் எச்ச‌ரிக்கை என்ற‌ த‌லைப்புக்கு கூட்ட‌ம் வ‌ர‌மாட்டேங்குதுன்னு நினைக்குறேன். அத‌னால் சீரிய‌ஸ் எழுத‌ற‌தை வுட்டுட்டு..‍*அத்த‌ சீனிய‌ருங்க‌ளே பாத்துக்க‌ட்டும்*.. த‌னித்த‌னி த‌லைப்புல‌யே எழுத‌லாம்னு இருக்கேன். ஆனா மேட்ட‌ரை அவ்ளோ சீக்கிர‌‌ம் வுட்டுற‌ மாட்டேன், க‌வ‌லைப்ப‌ட‌வேண்டாம்.)

18 comments:

தாமிரா said...

எச்ச‌ரிக்கைக்கு விஷ‌ய‌ம் தீந்துபோச்சான்னு யாரோ ந‌க்க‌ல் ப‌ண்ணினாங்க‌ளே யாருப்பா அது.? இப்ப இன்னா சொல்றீங்கோ.. எங்கிட்ட‌ வேணா விஷ‌ய‌ம் தீந்துபோவும், ஆனா டாபிக் க‌ட‌ல் மாதிரி ராசா.. யார் வேணா எவ்ளோ வேணா எழுத‌லாம்.!

நிஜமா நல்லவன் said...

:)

அவனும் அவளும் said...

*****நீங்க‌ள் ஏமாந்து போக‌க்கூடும். பெரும்பாலும் அவ‌ர்க‌ள் விதிவில‌க்கில் வ‌ரும் ஷோகேஸ் ஜோடிக‌ள்*****

:)))----

*******உங்க‌ளுக்கு தெரிய‌வேண்டுமென்றால் நிறை கேஸ் ஸ்ட‌டி ப‌ண்ற‌ பொறுமையும், நேர‌மும் உங்க‌ளுக்கு வேண்டும். உட‌ன‌டியாக‌ தெரிந்துகொள்ள‌ வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் ******

கல்யாணம் பண்ணிக்கோங்க

அவனும் அவளும் said...

*****அல்ல‌து பெட்ட‌ர் ஆப்ஷ‌ன்.. என் வீட்டுக்கு வ‌ர‌லாம்!*****

ஏன் வம்பா எங்களுக்கு ?

அவனும் அவளும் said...

இத வந்து தங்கமணி படிசுடாங்கலாம். அதுனால தாமிராவ தேடி போறவங்க, அவங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு போங்க.

தாமிரா said...

வாங்க நல்லவன்.!
வாங்க அவனும் அவளும்.! (//உட‌ன‌டியாக‌ தெரிந்துகொள்ள‌ வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் ******கல்யாணம் பண்ணிக்கோங்க// உங்க முடிவும் சூப்பராயிருக்கு.!)

அது சரி said...

சீச்சீ, கல்யாணம் பண்றதெல்லாம் ரொம்ப கெட்ட பழக்கம். உங்க வீட்ல பொம்பள புள்ளிங்க கூட பேசக்கூடாதுன்னு சொல்லி வழக்கலையா?

ரொம்ப கெட்ட மக்களா இருப்பிய‌ போலிருக்கே. அப்பாவி ச்சின்ன பயலுவள‌ கெடுக்காதீய.

கயல்விழி said...

என்ன இது தாமிரா, எச்சரிக்கை பதிவுகளாகவே போடுவதென்று முடிவே பண்ணிட்டீங்க போல

தாமிரா said...

வாங்க அதுசரி! (ஆமா.. கெடுத்துட்டாலும்..)
ஸாரிங்க கயல்! (ஏதோ பொது சேவைனு நினைச்சு செஞ்சுகினுருக்கேன்.. தப்பா?)

தாமிரா said...

இந்தப்பதிவு சூடான இடுகைகளில் ரொம்ப நேரம் இருந்தது. முதலில் நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் ஹிட்ஸ் கூடுகிற மாதிரியே தெரியவில்லை, பின்னூட்டங்களும் சொற்பமே! என்ன நடக்குதுனு யாராவது சொன்னா தேவலை.!

ஜி said...

//பெரும்பாலும் அவனுக்கு மீசை இருக்காது//

Amaanga amaam...

மங்களூர் சிவா said...

/
கேஸ் ஸ்ட‌டி ப‌ண்ற‌ பொறுமையும், நேர‌மும் உங்க‌ளுக்கு வேண்டும். உட‌ன‌டியாக‌ தெரிந்துகொள்ள‌ வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் 'ப‌ரிச‌ல்கார‌ன்' வீட்டுக்கு போக‌லாம்.

அல்ல‌து பெட்ட‌ர் ஆப்ஷ‌ன்.. என் வீட்டுக்கு வ‌ர‌லாம்!
/

ரெண்டு ஆப்ஷனையும் செயல்படுத்தி பாத்திட வேண்டியதுதான்!!
:)))))))

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

எச்ச‌ரிக்கைக்கு விஷ‌ய‌ம் தீந்துபோச்சான்னு யாரோ ந‌க்க‌ல் ப‌ண்ணினாங்க‌ளே யாருப்பா அது.?
/

யார்ணா சொன்னா அப்பிடி நீங்க ஒரு அச்சய பாத்திரம், அமுத சுரபி எச்சட்ரா எச்சட்ரா........
:)

மங்களூர் சிவா said...

/
தாமிரா said...

இந்தப்பதிவு சூடான இடுகைகளில் ரொம்ப நேரம் இருந்தது. முதலில் நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் ஹிட்ஸ் கூடுகிற மாதிரியே தெரியவில்லை, பின்னூட்டங்களும் சொற்பமே! என்ன நடக்குதுனு யாராவது சொன்னா தேவலை.!
/

அண்ணே எல்லாரும் ரகசியமா படிக்கிறாய்ங்கண்ணே!!

கலுயாணம் ஆவாத பயபுள்ளைக கூட பின்னூட்டம் போட பயப்படுதானுங்க என்னைய மாதிரி ஒரு சிலர் மட்டும் என்ன ஆனாலும் சரின்னு துணிஞ்சி .....
அவ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
ஜி said...

//பெரும்பாலும் அவனுக்கு மீசை இருக்காது//

Amaanga amaam...
/

ஆமாங்க எசமான் ஆமாங்க

ரிப்பீட்டு

தாமிரா said...

நன்றி ஜி.!
நன்றி தோழரே.!(மங்களூர்)

தாமிரா said...

மங்களூர் ://ரெண்டு ஆப்ஷனையும் செயல்படுத்தி பாத்திட வேண்டியதுதான்!!// பார்த்து ஜாக்கிரதை.!

//அண்ணே எல்லாரும் ரகசியமா படிக்கிறாய்ங்கண்ணே!!..
ஆமாங்க எசமான் ஆமாங்க // விழுந்து விழுந்து சிரித்தேன். ந‌ன்றி.!

Han!F R!fay said...

அண்ணே ...நிஜம்தான் சொல்றீங்களா.....ஆரம்பத்துல இருந்து படிக்கலாமேன்னு ஆரம்பிச்சேன்....இங்க வர்றதுக்குள்ள தாங்க முடில... அதான் கமெண்ட் போட்டேன்... அண்ணாத்தே ஊட்ல பொண்ணு பார்க்க ஆரம்பிசுடன்கப்பா....ஹயோடா....நானும் மாட்ட போறனா..... அவ்வ்வ்வவ்வ்வ்வவ் ..........