Wednesday, August 13, 2008

பெண் பதிவர்களிடம் ஒரு மன்னிப்பு!

கல்யாணமாகாதவர்களுக்கு எச்சரிக்கைகள், தங்க மணிகளை திருத்தமுடியுமா போன்ற பதிவுகளை எழுதியதால் பெண் பதிவர்களும், வாசகிகளும் கடும் கோபத்தில் இருப்பதாகவும் எங்கேனும் பார்த்தால் உதைக்க‌ திட்டமிட்டிருப்பதாகவும் அதனால் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் முக்கியமான ஒரு பதிவர் சொல்லக்கேட்டு அதிர்ச்சியானேன். இந்த ஆண் பதிவர்கள் உதவாக்கரைகள் என்றும் இவர்களை நம்பி அஜாக்கிரதையாக இருந்துவிடாதே என்றும் அவர் மேலும் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டு சென்றார்.

உட்கார்ந்து யோசித்ததில் பேசாமல் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவே போட்டுவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்று இப்பதிவை எழுதுகிறேன். ஆகவே மன்னியுங்கள் தோழிகளே.!

இப்போது இந்த ஸ்பெஷல் பதிவுக்காக, ஏன் ஒரு ஆண் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறேன் கேளுங்கள். கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கத்தான், உட்கார்ந்து ரூம் போட்டு யோசித்து பல யோசனைகளை சொல்லவேண்டும். (அப்படியும் கேட்கமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.) கல்யாணம் செய்து கொள்வதற்கு ஒன்று சொன்னாலே போதும் ஒரு சோறு ப‌த‌ம் போல‌.

தலையணையை முதுகுக்கு கொடுத்து பெட்டில் சாய்ந்து இந்த பேப்பரை மடித்துப்பிடித்து படித்துக்கொண்டிருக்கிறோம். (தினமும்தான் படிக்கிறோம் பேப்பரை, என்னத்தைத்தான் தெரிந்துகொள்கிறோம்னுதான் தெரியலை)காலை மணி எட்டாகப்போகுது. தங்கமணி நம்மைத்தாண்டி இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் போய்க்கொண்டு வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். காலை டி.:பன் நமக்குப் பிடித்த பொங்கலும், சாம்பாரும் ரெடியாகிக்கொண்டிருப்பதைப் போலத்தெரிகிறது.

பேப்பரில் கவனத்தைத் திருப்பும் போது, ஹாலில் இருந்து கிச்சன் செல்லும் தங்கம் நம்மருகே நிற்கிறது. வலது கையால் நெற்றியையும், இடது கையால் தாடையையும் பிடிக்கிறாள். அவள் விரல்கள் நமது கன்னங்களை அழுத்தி உதடுகளை மேல்நோக்கிப் பிடிக்கிறது. அவளும் குனிகிறாள். நிதானமாக, அழுத்தமாக, ஆழமாக எச்சில் படிய முத்தம் தந்து 'கா.:பி வேணுமா, பூஸ்ட்டாங்க?' என்று கேட்கிறாள்.

நாம் பொய்யான‌ கோப‌த்தோடு 'பேப்ப‌ர் பாக்கும் போது இடைஞ்ச‌ல் ப‌ண்ணாத‌ன்னு எத்த‌னை த‌ட‌வை சொல்ற‌து?' என்று க‌டிகிறோம். அதைப்புரிந்த‌ த‌ங்க‌மும் ப‌திலுக்கு பொய்யான‌ கோப‌த்தோடு 'காலைலேயே வ‌ந்த‌ம்பாரு.. என்னிய‌..xx..அடிச்சுக்க‌ணும்' என்று ந‌க‌ர்கிறாள்.

பேப்ப‌ரை வீசி விட்டு கிச்ச‌னுக்குள் விரைகிறோம், அந்த‌ப் பொய் கோப‌த்தையும் ச‌மாதான‌ம் செய்ய..! மேலும் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று ஜொள் விடாம‌ல் க‌ல்யாண‌ம் செய்துகொள்கிற‌ வ‌ழிய‌ப்பாருங்க‌ப்பா..!

(டிஸ்கி : இந்த‌ அனுப‌வ‌ம் என்னோட‌துன்னு நினைக்கும் அப்பாவிக‌ளைப் பார்த்து நான் சிரிக்கிறேன்)

36 comments:

கிரி said...

:-))

வெட்டிப்பயல் said...

மன்னிப்பு கேட்கறதுக்கு பதிலா வருத்தம் தெரிவிச்சிருக்காலாம் :-)

கயல்விழி said...

அல்லது எழுதும் போதே ஜெண்டர் நியூட்ரலாக எழுதி இருக்கலாம்.

ஆண்கள் ஏன் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்பது போல பெண்கள் ஏன் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்பதைப்பற்றியும் எழுதலாம்(சும்மா ஒரு சஜஷன்) :)

மங்களூர் சிவா said...

any problem???

மங்களூர் சிவா said...

எந்த ஆஸ்பத்திரில இருந்து இந்த பதிவை எழுதினிங்க!?!?

மங்களூர் சிவா said...

அடி கொஞ்சம் ஓவராயிடிச்சோ நேத்து!?!?

மங்களூர் சிவா said...

அண்ணிக்கு தெரியாம பதிவெழுதுங்கன்னு சொன்னா கேட்டாதானே!

:)
:(

M.Saravana Kumar said...

// வெட்டிப்பயல் said...
மன்னிப்பு கேட்கறதுக்கு பதிலா வருத்தம் தெரிவிச்சிருக்காலாம் :-)
//

ரிப்பீட்டேய்..

வழிப்போக்கன் said...

// M.Saravana Kumar said...
// வெட்டிப்பயல் said...
மன்னிப்பு கேட்கறதுக்கு பதிலா வருத்தம் தெரிவிச்சிருக்காலாம் :-)
//

ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்..

வெண்பூ said...

ஆனாலும் தாமிரா உங்களுக்கு செம கற்பனை... ஆமா இந்த நிகழ்ச்சி எந்த கிரகத்துல நடந்த மாதிரி கற்பனை பண்ணியிருக்கீங்க :)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

நிதானமாக, அழுத்தமாக, ஆழமாக எச்சில் படிய முத்தம் தந்து 'கா.:பி வேணுமா, பூஸ்ட்டாங்க?' என்று கேட்கிறாள்.


(டிஸ்கி : இந்த‌ அனுப‌வ‌ம் என்னோட‌துன்னு நினைக்கும் அப்பாவிக‌ளைப் பார்த்து நான் சிரிக்கிறேன்)
//

நான் கூட முதல்ல பொறாமைப் பட்டுட்டேன். டிஸ்கியப் பார்த்த்தும் தான் சந்தோஷமாச்சு :)

ராஜ நடராஜன் said...

//நான் கூட முதல்ல பொறாமைப் பட்டுட்டேன். டிஸ்கியப் பார்த்த்தும் தான் சந்தோஷமாச்சு :)//

யாரிதுன்னு போய்ப்பார்த்தா அண்ணே!!!!:))))))

அவனும் அவளும் said...

*****இந்த‌ அனுப‌வ‌ம் என்னோட‌துன்னு நினைக்கும் அப்பாவிக‌ளைப் பார்த்து நான் சிரிக்கிறேன்*****

இது அனுபவபூர்வமான உண்மையா இருக்கும்ன்னு நினைக்கற அப்பாவிகளை பார்த்து நீங்க சிரிச்சு இருக்கணும்.

*****பெண் பதிவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி இருக்கலாம் நீங்க*******

கயல்விழி :- இந்த பதிவு எல்லாம் gender neutralaa எழுதினா சுவையே இருக்காது. இந்த மாதிரி பசங்கள கல்யாணம் பண்ணிக்கற பொண்ணுங்களோட நிலைமைய சொல்லி தான் புரிய வைக்கணுமா ? யோசிச்சு பாருங்க.

babu said...

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
"நான் கூட முதல்ல பொறாமைப் பட்டுட்டேன். டிஸ்கியப் பார்த்த்தும் தான் சந்தோஷமாச்சு :)"

ரிப்பீட்டேய்..

தமிழ்நெஞ்சம் said...

:-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:- :-) (:-

தாமிரா said...

பின்னூட்டமிட்ட அத்தனை பேருமே குறிப்பிடத்தகுந்த சீனியர் பதிவர்களாகவே (எப்படி நம்ப ஐஸ்?) உள்ளீர்கள். என் மகிழ்ச்சிக்கு அளவில்லை, நன்றிகள் பல.!

நன்றி கிரி.!
நன்றி வெட்டிப்பயல்.! (உங்கள் கருத்தையே பலரும் ரிப்பீட்டியிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது.? ஒரு தன்மானச்சிங்கம், பெண்களிடம் மன்னிப்பு கேட்டதை மற்ற சிங்கங்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை என்பது புரிகிறது.) (பெண்களே கவனியுங்கள், நானாவது பரவாயில்லை.. வெட்டிப்பயல் மற்றும் பிறரது பக்கங்களுக்குப் போய் சரியான முறையில் கவனிக்கவும்)

தாமிரா said...

வாங்க மங்களூர்.! நன்றிகள் ஆயிரம்.! (இன்னா சோக்கா எளுதுனாலும் நீங்க ஒரு ஆளுதாங்க கரிக்டா மேட்டர் இன்னாங்குறத சரியா புடிச்சுடறீங்க..)

தாமிரா said...

நன்றி கயல்விழி.! (உங்கள் சஜஷன் அருமை, அதை ஒரு ஆண் எழுதுவதை விட நீங்கள் எழுதினால் இன்னும் பிரமாதமாக வரும் என்பது என் எண்ணம்.)
நன்றி சரவணகுமார்.!
நன்றி வழிப்போக்கன்.!

தாமிரா said...

வாருங்கள் தோழர்களே..(சில பதிவுகளுக்கு வராமல் கடுப்பேற்றினாலும்..) என் அன்பான அன்பு உங்களுக்கு.!(வெண்பூ,அப்துல்,ந‌டராஜன்)

வாங்க அவனும் அவளும்.! (என்ன ஒண்ணும் புரியலயே.. பதிவு மாதிரியே பின்னூட்டமும் எழுதுறீங்களே..)**காலை வாரியதற்கு மன்னிக்கவும்.

நன்றி பாபு.!
நன்றி தமிழ்நெஞ்சம்.! (உங்களடோதும் புரியலைங்க.. ஒருவேளை இந்த பேக்குக்குதான் புரியலயோ.?)

வெண்பூ said...

//வாருங்கள் தோழர்களே..(சில பதிவுகளுக்கு வராமல் கடுப்பேற்றினாலும்..) என் அன்பான அன்பு உங்களுக்கு.!(வெண்பூ,அப்துல்,ந‌டராஜன்)//

அடப்பாவி... உங்களோட எல்லா பதிவையும் தவறாம படிக்கிற எனக்கு இப்படி ஒரு தப்பான பேரா? வேற வேலை இருந்ததால படிச்சிட்டு பின்னூட்டம் போடாதது இவ்ளோ பெரிய தேச துரோகமா? சொல்லுங்க மக்கள்ஸ்...

தாமிரா said...

ஸாரிங்க வெண்பூ.. (சும்மனாச்சுக்கும் சொன்னேன், கோச்சுக்காதபா.!)

அவனும் அவளும் said...

******என்ன ஒண்ணும் புரியலயே.. பதிவு மாதிரியே பின்னூட்டமும் எழுதுறீங்களே..காலை வாரியதற்கு மன்னிக்கவும் ****

மன்னிச்சுட்டேன்.

வெண்பூ said...

//பெண் பதிவர்களிடம் ஒரு மன்னிப்பு!.//
//ஸாரிங்க வெண்பூ..//
//காலை வாரியதற்கு மன்னிக்கவும் //

ஆன்னா..ஊன்னா.. கால்ல விழுந்துடறீங்க தாமிரா..
ம்ம்ம்ம்.... உங்க தங்கமணிக்கு பிரச்சினையே இல்லைன்னு நெனக்கிறேன்.

தாமிரா said...

வெண்பூ ://உங்க தங்கமணிக்கு பிரச்சினையே இல்லைன்னு நெனக்கிறேன்.//

இத்தானே வாணாங்கறேன்.. (அப்பிடியும் சமாளிக்க முடிலபா..)

வெண்பூ said...

//அப்பிடியும் சமாளிக்க முடிலபா..) //

இன்னா பண்றது?? அல்லாருக்கும் அதே பிரச்சினைதான். லூஸ்ல வுடுவியா கவலப்பட்டுகினு...

தமிழ்நெஞ்சம் said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

SanJai said...

:))
நல்லா கீதுபா.. :))

வெட்டிப்பயல் said...

//நன்றி வெட்டிப்பயல்.! (உங்கள் கருத்தையே பலரும் ரிப்பீட்டியிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது.? ஒரு தன்மானச்சிங்கம், பெண்களிடம் மன்னிப்பு கேட்டதை மற்ற சிங்கங்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை என்பது புரிகிறது.) (பெண்களே கவனியுங்கள், நானாவது பரவாயில்லை.. வெட்டிப்பயல் மற்றும் பிறரது பக்கங்களுக்குப் போய் சரியான முறையில் கவனிக்கவும்)//

ஹி ஹி ஹி...

நான் சிங்கம் அசிங்கம்னு எல்லாம் எதுவும் சொல்லலை. இப்ப லேட்டசட் ஃபேஷன் வருத்தம் தெரிவிக்கறது தான்... அது தெரியாம இருக்கறீங்களேனு எல்லாரும் ஃபீல் பண்றாங்க :-)

தாமிரா said...

நன்றி தமிழ்நெஞ்சம்.!
நன்றி சஞ்சய்.!
நன்றி வெட்டிப்பயல்.! (பாத்தீங்களா? இப்பிடித்தான் நம்ப பேக்குத்தனம் எல்லோருக்கும் தெரிஞ்சுபோகுது..சே.!)

ஜி said...

:)))

தாமிரா said...

நன்றி ஜி.! (என்ன இளிப்பு.. ஏதாவது சொல்லிட்டு போறது.!)

கயல்விழி said...

நம்ம தமிழ் நாட்டு ஷாருக்கான் எனக்கு கூட ஸ்மைலி மட்டும் எழுதிட்டு போறார். கிண்டலா, சிரிப்பா?

ஜி said...

//தாமிரா said...
நன்றி ஜி.! (என்ன இளிப்பு.. ஏதாவது சொல்லிட்டு போறது.!)//

இல்ல... கல்யாணம் பண்ணிக்கிறதா?? வேண்டாமானு ஒரு எழவும் புரியல... ஒரு பதிவுல வேணான்னு சொல்றீங்க.. இங்க பண்ணுங்கடானு கில்பான்ஸிங்கா மேட்டர போட்டு உசுப்பேத்துறீங்க... அப்புறம் நான் எதுனா சொல்லப்போய் சென்சார் போர்ட் வந்து அனாவசியமா உங்க பதிவுல தலையிட வேண்டியதா போயிடுமேன்னுதான் வெறும் இளிப்பான மட்டும் போட்டேன் :)))

//கயல்விழி said...
நம்ம தமிழ் நாட்டு ஷாருக்கான் எனக்கு கூட ஸ்மைலி மட்டும் எழுதிட்டு போறார். கிண்டலா, சிரிப்பா?//

எட்ச் உச் மீ... நாங்க இப்ப தமிழ் நாட்டு டாம் க்ரூஸா மாரிட்டோமாக்கும்...

கயல்விழி said...

//தமிழ் நாட்டு டாம் க்ரூஸா//

பேராசை பெருநஷ்டம் ;) ;)

தாமிரா said...

நன்றி கயல்விழி.!
நன்றி ஜி.!(உங்களுக்கு நேரடி ஸ்பெஷல் கிளாஸ் தேவைப்படுதுன்னு நினைக்கிறேன். அப்துல்லா அல்லது வெண்பூவை உடனே காண்டாக்ட் செய்து அப்பாயிண்ட்மென்ட் .:பிக்ஸ் செய்துகொள்ளவும்)

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)