Sunday, August 17, 2008

எழுதுவது ஒரு வாதை :மனுஷ்யபுத்திரன்

ஓரிரு முறைகள் மனுஷ்யபுத்திரன் தனது பேட்டிகளின் போது எழுதுவது ஒரு வாதை நிறைந்த அனுபவம் என்று கூறியிருக்கிறார். அவர் எந்த அரிய அர்த்தம் பொதிந்து அதை சொன்னாரோ எனக்கு தெரியாது, என் சிற்றறிவு அதை எவ்வாறு விளங்கிக் கொள்கிறது என்பதைப்பார்க்கலாம்.

ஆ.:பீஸில் மீட்டிங் மையக்கருத்தை தாண்டிப்போய்க்கொண்டிருக்கும் போது நாம் வேறெதையாவது சிந்திக்கத்துவங்குகிறோம். இது குறித்து கண்ணனிடம் டிஸ்கஸ் செய்யலாம் என நினைக்கிறோம், அது குறித்து உருப்படியாக எழுதலாமே என நினைக்கிறோம். அரைமணி நேரம் கழித்து சீட்டுக்கு வந்தபின்னர் அதைப்பற்றி மறந்துவிடுகிறோம். எப்படி யோசித்தாலும் நினைவு வரமறுக்கிறது. அந்த அளவில் அது மொக்கை மேட்டரா? அல்லது உண்மையிலேயே உருப்படியான விஷயத்தைத்தான் மறந்துவிட்டோமா?குளிக்கும் போது, சாப்பிடும் போது, எதையாவது குறித்து படிக்கும் போது,பயணங்களின் போது அல்லது விளக்கை அணைத்துவிட்டு படுத்தபின் என்பது போன்ற சமயங்களில் ஏதாவது உருப்படியான விஷயங்கள் தோன்றுகின்றன. ஆனால் எழுத அமர்ந்தால் எதுவும் நினைவுக்கு வருவதில்லை. சரி அதுபோன்ற சமயங்களில் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணி தயாராகவே இருக்கிறோம், சில சமயங்களில் எடுத்தும் வைக்கிறோம். பின்னர் எழுத அமரும் போது அந்தக் குறிப்புகளைப்பார்த்தால் மொக்கையாக இருக்கிறது. இதையா எழுதவேண்டும் என்று நினைத்தோம் என்று தோன்றுகிறது.

சில சமயங்களில் நல்ல ஐடியாவும் கிடைத்து எழுதவும் ஆரம்பித்துவிடுகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். எழுதிக்கொண்டிருக்கும் போதே இதன் இந்தப்பகுதியில் (இடையில் அல்லது இறுதியில் அல்லது ஹைலைட்டாக) இன்ன விஷயமோ அல்லது இன்ன வரிகளோ இருந்தால் பிரமாதமாக அமையும் என்று எண்ணுகிறோம். ஆனால் அந்தப் பகுதி வருவதற்குள் அந்த விஷயம், மறந்து போய்விடுகிறது அல்லது நீர்த்துப்போய்விடுகிறது. சக்கையாக எழுதிவைக்கிறோம். அதற்கும் சில சமயங்களில் பாராட்டு கிடைக்கிறது. அப்படியானால் நாம் சிந்தனை செய்ததை அப்படியே எழுதியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என எண்ணுகிறோம்.

இதையெல்லாம் தவிரவும் நாம் எழுத அமரும் போதுதான் கரண்ட் போய்விடுகிறது. மானேஜர் கூப்பிடுகிறார். மனைவி புளி வாங்கிவர கடைக்கு அனுப்புகிறாள். நண்பன் தண்ணியடிக்கக் கூப்பிடுகிறான். விருந்தாளிகள் வருகிறார்கள்.

இப்பேர்க்கொத்த மொக்கை பிளாகராக இருக்கும் எனக்கே இப்படியெல்லாம் எழுதுவது ஒரு வாதையாக இருக்கும் போது, மனுஷ்யபுத்திரனுக்கோ அல்லது பெரிய எழுத்தாளர்களுக்கோ எழுதுவது என்பது எப்பேர்ப்பட்ட வாதையாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

அடுத்ததாக என் மனைவி ஐஸ்கிரீம் செய்த கதையை எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

14 comments:

வெண்பூ said...

அருமை தாமிரா. நான் இந்த பிரச்சினையெல்லாம் எனக்கு மட்டும்தான் என்று நினைத்திருந்தேன் :)

தாமிரா said...

வாங்க வெண்பூ.! நன்றி.

தாமிரா said...

என்னாச்சு.. ஒருத்தரையும் காணோம்.? இந்த லட்சணத்தில் இந்தப் பதிவு சூடான இடுகையில் வந்து செம ஹிட் ஆவதுபோல கனவு கண்டேன் நேற்று. இப்படித்தான் நாம் ஒன்று நினைத்தால் நடப்பது வேறாக இருக்கிறது.(ஷோகேஸ் மனைவிகள் என்ற பதிவு ஒரு நாள் முச்சூடும் சூடா இருந்தது) அடுத்த ஐஸ்க்ரீம் பதிவு எப்படி ஹிட் ஆகிறது பார்க்கலாம்.

தாமிரா said...

வேறு வழியில்லை.. "ந‌டிப்பது ஒரு வாதை :ஜேகே ரித்தீஷ்" பதிவை எழுதிவிட வேண்டியதுதான். அப்போதான் கூட்டம் வரும்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அடுத்ததாக என் மனைவி ஐஸ்கிரீம் செய்த கதையை எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
//

அண்ணே எழுதுறதுக்கு முன்னாடி அண்ணிகிட்ட என்.ஓ.சி வாங்கிக்கங்க. சொல்றத சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம் :))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

வேறு வழியில்லை.. "ந‌டிப்பது ஒரு வாதை :ஜேகே ரித்தீஷ்" பதிவை எழுதிவிட வேண்டியதுதான். அப்போதான் கூட்டம் வரும்.

//

இது மனுசனுக்கு அழகு.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஜே.கே.ரித்தீஷ்ன்னு நீங்க எழுதுன கொஞ்ச நேரத்தில வந்துட்டேன் பார்த்தீங்களா?

அவனும் அவளும் said...

குத்துசண்டை பாத்துகிட்டு இருக்கேன். பாத்துட்டு வரேன். மனுஷ்யபுத்திரன் itha பாத்தாருன்னா இது மாதிரி சொல்லியே இருக்க வேணாமோன்னு நினைச்சி இருப்பாரு.

அவனும் அவளும் said...

தோத்துட்டான்....ஐஸ்கிரீம் கதை எழுதுங்க. அத சூடான பதிவு ஆக்கிடலாம்.

தாமிரா said...

வாங்க அப்துல்.! (//அண்ணிகிட்ட என்.ஓ.சி வாங்கிக்கங்க// அதெல்லாம் பாத்துக்கலாம்..)

நன்றி அவனும் அவளும்.! (மனுஷ்யபுத்திரனைப்பற்றி ஒன்றும் தப்பாக எழுதிவிடவில்லை என்றே நினைக்கிறேன். சரிதானே.! ஆமா என்ன இந்த அகில் இப்பிடி ஏமாத்திட்டானே..)

மங்களூர் சிவா said...

:)))

மங்களூர் சிவா said...

கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும் அப்புறம் ............ பழகிடும்

:))

மங்களூர் சிவா said...

/
அடுத்ததாக என் மனைவி ஐஸ்கிரீம் செய்த கதையை எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
/

அதற்கு முன்னால் எதற்கும் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது உத்தமம்.

:))

தாமிரா said...

வாங்க சிவா.! (இன்ஷூரன்ஸ் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. நாமினி: தங்கமணி)