Tuesday, August 19, 2008

நொந்து போன நூடுல்ஸும் நானும்

11.08.08 காலை 8 மணி.
'காலையில டி.:பன் பண்ண முடியாத நேரத்தில யூஸ் ஆகும், சாய்ந்திரம் வரும்போது நூடுல்ஸ் வாங்கிட்டு வாங்க..'
'சரிம்மா'

11.08.08 மாலை 7 மணி.
'டெய்லி சொல்லணுமாங்க உங்களுக்கு. எப்படி மறக்குது உங்களுக்கு?'
'நாளைக்கு வாங்கிடலாம்மா'

12.08.08 மாலை 7 மணி.
'என்னங்க வாங்கிட்டு வந்திருக்கீங்க.. இது பாஸ்தா, நான் கேட்டது நூடுல்ஸ்.'
'பாக்க அழகா இருந்துச்சு, ஒரு சேஞ்சா இருக்க‌ட்டுமேனு..'
'இத‌ xxx கூட‌ திங்காது'
'ச‌ரிம்மா, நா சாப்டுக்க‌றேன். உன‌க்கு நூடுல்ஸ் நாளைக்கு வாங்கிட்டு வ‌ந்துட‌றேன்'

13.08.08 மாலை 7 ம‌ணி.
'என்ன‌ங்க‌ இதைப்போய் வாங்கிட்டு வ‌ந்திருக்கீங்க‌.. 20 ரூபா த‌ண்ட‌ம். இதுல காய்கறிலாம் சேந்திருக்குதுனு நினைக்கிறேன். நான் கேட்ட‌து 5 ரூபா பாக்கெட் பிளெய்ன் நூடுல்ஸ்.'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிட‌லாம்'

14.08.08 மாலை 7 ம‌ணி.
'என்ன‌ங்க‌ இது? வேற‌ பிராண்ட் போய் வாங்கியிருக்கீங்க‌, நல்லாவேயிருக்காதே.! மேகிதான் ந‌ல்லாயிருக்கும்'
'ஸாரிமா, நாளைக்கு வாங்கிட‌லாம்'

15.08.08 காலை 10 ம‌ணி.
'ஏங்க‌ த‌ண்ட‌த்துக்கு நாலு பாக்கெட் வாங்கியிருக்கீங்க‌. ஒண்ணு போறாதா?'
'என்ன‌ விளையாடுறயாடி.. நானும் பாத்துட்டேயிருக்கேன். என்ன‌ ப‌ண்ணிணாலும் குறை க‌ண்டுபிடிச்சுகிட்டு.. இனிமே எதாவ‌து வாங்க‌ச்சொன்னே ம‌ரியாதை கெட்டுப்போயிரும் உன‌க்கு. எதுனாலும் நீயே போயி வாங்கிக்கோ, @#@#&%#@ #$@ #% @#'
'*&^%$#$#% @#@#&%#@ #$@ '
'$#$#% @#@#&%'
'ம்ம்ம்..ஊம்..ம்.. ஹும்'
'இப்ப‌ என்னாச்சுன்னு இப்பிடி ஒப்பாரி வெக்கிறே..'

15.08.08 காலை 11 ம‌ணி.
'சாருக்கு மேகி நூடுல்ஸ் எடுத்துக்குடுப்பா, எத்த‌னை பாக்கெட் சார்.?'
'நூடுல்ஸ் வேணாம்பா.. க‌ருப்ப‌ட்டி இருக்குதா?'
'இல்லையே சார்'
'இங்கே வேறெங்க‌ கிடைக்கும்னு தெரியுமா?'

25 comments:

வெண்பூ said...

சுத்தமா புரியல...

M.Saravana Kumar said...

அவங்க கேட்டத வாங்கி கொடுத்திர வேண்டியதுதானே..

//வெண்பூ said...
சுத்தமா புரியல...//
ripeat..

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

வெண்பூ said...
சுத்தமா புரியல...

August 19, 2008 9:45 AM
//

வெண்பூ அண்ணே இப்பதான் புதுசா கல்யாணம் ஆயிருக்கோ உங்களுக்கு?

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...
சுத்தமா புரியல... //

ஹிஹிஹி!!! புரியலயா!!!வாழ்க்க ஒரு வட்டம்....மேல இருக்குறவன் கீழ போவான்....கீழ இருக்குறவன் மேல வருவான்!!!!

சில விஷயங்கள அனுபவிச்சாதான் புரியும்!!!

God bless you!!!

தமிழ் பிரியன் said...

எனக்கு நல்லாவே புரிஞ்சது.......
நாங்க த.அ.வா.ர. சங்கத்து ஆட்கள்!

சென்ஷி said...

:(

ஒண்ணும் சொல்லிக்க முடியல..

இதனால அறியப்படுற நீதி என்ன..

கல்யாணம் செஞ்சுக்கக்கூடாதுன்னு சொல்றீங்களா.. இல்லை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நூடுல்ஸ் வாங்கிட்டு வரக்கூடாதுன்னு சொல்றீங்களா..

அது சரி said...

ஏனுங்ணா,
நூடுல்ஸ் வாங்கிட்டு வான்னா, சேமியா, நூடுல்ஸ், பாஸ்தா, ரவை, அவல், ஏற்கனவே சமைச்ச நூடுல்ஸ், சமைக்காத நூடுல்ஸ் இப்பிடி எல்லாத்திலயும் கொஞ்சம் வாங்கிட்டு போவனும்னு உங்களுக்கு தெரியாதா? ச்ச, உங்க வூட்ல உங்களுக்கு சமையலே தெரியாம ரொம்ப செல்லமா வளத்துட்டாங்க போல!

இப்ப கருப்பட்டி வாங்க ஆரம்பிச்சிடிங்களா? பாத்துங்ணா. அதுல பல வகை இருக்கு. வெள்ளையா கருப்பா? நாளானதா இல்ல புதுசா?? திருனெல்வேலியா இல்ல ஈரோடா?? இல்ல இது எதுவும் இல்லாம அவங்க பனங்கல்கண்டோ இல்ல வெல்லமோ கேட்டாங்களா? வெல்லம்னா என்ன வெல்லம்? அச்சு வெல்லமா இல்ல மண்ட வெல்லமா??

babu said...

அது எப்படிங்க எல்லார் வீட்டுலேயும் ஒரே மாதிரி நடக்குது
@வெண்பூ
கல்யாணம் ஆகலையா?

வெண்பூ said...

அடப்பாவிகளா... இதுதான் சாக்குன்னு என்ன போட்டு இந்த கும்மி கும்மிட்டீங்களே... ஒவ்வொரு விசயத்துக்கும் ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு ஐட்டம் யூஸ் பண்ணுவாங்க. உங்க ஊர்ல யூஸ் பண்ற ஐட்டம் என்னான்னு தெரியலயன்னா அதுக்காக அவனுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனச்சிடுவீங்களா? :)

அது மட்டுமில்லாம கருப்பட்டி எல்லாம் பழைய காலத்து ஐட்டம். சின்ன வயசில கடலை கொட்டைக்கு கடிச்சிகிட்டதோட சரி, அதையெல்லாம் இப்போ பாக்குறது கூட இல்லை. :( அதோட மருத்துவ பயன்கள் (?) என்னை மாதிரி யூத்துக்கு (சரி... சரி..) எப்படி தெரியும்?

அந்த இடத்துல கருப்பட்டிக்கு பதிலா எள்ளுருண்டைன்னு போட்டிருந்தா நான் ஏன் கேள்வி கேக்குறேன்... ஹி...ஹி.. நான் அதுதான் வாங்குவேன்.. வெரி எஃபக்டிவ்.

தாமிரா said...

எல்லோரும் வாங்க, வணக்கம்.

வாங்க வெண்பூ.! (முதல்ல புரியலன்ன உடனே பயந்தே போயிட்டேன்ங்க..)

வாங்க சரவணக்குமார்.! (அட, இவருக்கும் புரியலையாமே.. மொத்தமா புரியலையா.. இல்ல கருப்பட்டி மட்டும்தானா?)

வாங்க அப்துல்.! (அப்பிடிக்கேளுங்க...)

தாமிரா said...

வாங்க விஜய்.! (வெண்பூவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு நினைக்கிறேன், சும்மா நூல் வுடுறாரு. இருப்பினும் பதில் பிரமாதம்.)

வாங்க தமிழ் பிரியன்.! (அதென்ன த.அ.வா.ர ? சொல்லுங்கப்பா..)

வாங்க சென்ஷி.! (என்ன பாத்து ரொம்ப நாளாச்சு? ஒழுங்கா மற்ற பதிவுகளையும் படித்து பதில் போடவும்)

தாமிரா said...

வாங்க அதுசரி.! (உங்க எக்ஸ்பீரியன்ஸுக்கு தலைவணங்குகிறேன் தல..)

வாங்க பாபு.! (சேம் பிளட்.!)

வெண்பூ : //நான் அதுதான் வாங்குவேன்.. வெரி எஃபக்டிவ்// ஜூப்பருங்க..

தாமிரா மாமனார் said...

கேட்டதா கரிக்குட்டா வாங்கிகுடுக்க தெரியலை உனக்கு போய் பொண்ணு குடுத்தேனே

:(((((((

தாமிரா மாமனார் said...

உங்க அத்தைகிட்ட கேட்டுப்பாரும் ஓய் நான்லாம் எப்பிடி எள்ளுனா எண்ணையா நிப்பேன்ன்னு!

தாமிரா மாமனார் said...

மாப்ள, என் பொண்ணுக்கு செல்லம் குடுத்து வளத்துட்டேன் கை கொஞ்சம் நீளம் அதுக்காக இப்பிடி பதிவுல எல்லாம் வந்து அழப்பிடாது ரூம்ல அழுவறதோட நிப்பாட்டிக்கனும்

:))

மங்களூர் சிவா said...

எங்கடா மங்களூர் சிவா பின்னூட்டம் காணும்னு தேடப்பிடாது இதோட சேத்து நாலு பின்னூட்டம் போட்டிருக்கேன் கண்டுபிடிச்சிக்கங்க முடிஞ்சா!!

:)))

தாமிரா said...

வாங்க மாமா, வாங்க.! (எப்ப ரிடர்ன் டிக்கெட் எடுக்கணும்?)

கயல்விழி said...

சரி கடைசியில் கருப்பட்டி எதுக்கு?

நானும் சீக்கிரமே செட்டில் ஆகலாம் என்று நினைக்கிறேன், கடைக்கு போக வர ஒரு ஆள் கிடைக்குமில்ல?

தாமிரா said...

வாங்க கயல்விழி, நன்றி.! (ந‌ல்லா பிளான் பண்ணி கிளம்புங்க(டி) தாயி.. ஊருல இன்னொருத்தன் மாட்டிக்கப்போறானே.. ஐயோ பாவம்.)

கயல்விழி said...

//வாங்க கயல்விழி, நன்றி.! (ந‌ல்லா பிளான் பண்ணி கிளம்புங்க(டி) தாயி.. ஊருல இன்னொருத்தன் மாட்டிக்கப்போறானே.. ஐயோ பாவம்.)//

அவங்க அவங்க கண்ணை திறந்துக்கொண்டே கிணத்தில குதிக்க ரெடியா இருக்காங்க. :) :) :)

ராமலக்ஷ்மி said...

நல்ல நூடுல்ஸ்தான் போங்க. நடக்கறத அப்படியே சொல்லியிருக்கிறீங்க. என்றைக்கும் உங்க வர்க்கம் வாங்கி வந்த பொருட்கள் சரியா இருக்குன்னு எங்க வர்க்கம் சொன்னதா சரித்திரமே இல்லதான்:)))!

அலிபாபா ஏன் 40 அறிவுரைகளோடு நிறுத்தாமல் 108 வரை போனார் என புரியுது. சரி 108 பதிவு தாண்டியதும் 1008 என வலைப்பூ பெயரை மாற்றி விட்டு அடித்து ஆடுங்கள். வாழ்த்துக்கள் தாமிரா!

மங்களூர் சிவா said...

/
ராமலக்ஷ்மி said...

நல்ல நூடுல்ஸ்தான் போங்க. நடக்கறத அப்படியே சொல்லியிருக்கிறீங்க. என்றைக்கும் உங்க வர்க்கம் வாங்கி வந்த பொருட்கள் சரியா இருக்குன்னு எங்க வர்க்கம் சொன்னதா சரித்திரமே இல்லதான்:)))!
/

"அது சரியாகவே இருந்த போதும்" அப்படிங்கறத விட்டுட்டீங்களே ராமலஷ்மி அம்மா!!

:)))))

தாமிரா said...

நன்றி கயல்! (ஆல் தி பெஸ்ட்!**வரப்போறவனுக்கு**)

வாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி.! (எப்பிடி மங்களூரின் கவுண்டர் அட்டாக்?)

ஜூப்பர்.. மங்களூர்.!

ஜி said...

ippadi ellaam bayamuruthuneenganna vaazkaila kalyaname aagaathu polaiye :((

Abhi said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ...
கடைசியில் கருப்பட்டி தான் சூப்பர் ...