Wednesday, August 20, 2008

நானும் தமிழ் மணமும்

தொடர்ந்து நாலு நாளாய் பதிவு போடுறேமே, ஒரு நாளு ரெஸ்ட் குடுக்கலாமேனு (உங்களுக்குதான்) பாத்தா ஒரு முக்கியமான விஷயம், சொல்லலைன்னா தூக்கம் வராது (சரி பதிலுக்கு நாளைக்கு வேணா லீவு உட்டுடுறேன்)சுருக்கா சொல்லிடுறேன் பயப்படாதீங்க‌.

இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும் போதே 'முதல் முத்தம்'னு இன்னொண்ணும் ஆரம்பிச்சேன். அது ஸ்பெஷலா கவுஜ‌‍-க்கு மட்டுமே.(இதிலேயே கவுஜயவும் போட்டு ஏதோ அறிவுரை கேக்க வர்ற மத்தவுங்களையும் டார்ச்சர் பண்ணவேண்டாமேனும், வேணுங்கறவுங்க தனியா போய் படிச்சுகிடட்டுமேனும் ஒரு நல்ல எண்ணம்தான்). இந்த பதிவை தமிழ் மணத்துல ஏத்தினப்போ(ஆரம்பிச்சு ரெண்டு மாசம் கழிச்சு) எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. ஆனா பாருங்க தலையால தண்ணி குடிச்சுபாத்தும் 'முதல் முத்தம்' பதிவை தமிழ் மணத்துல ஏத்த முடியலை. நானும் டெம்பிளேட் மாத்திப்பாக்குறேன், டூல் பாரை பத்து தபா ஒட்டிப்பாக்குறேன், ம்ஹூம்.. ஒண்ணியும் முடியலை. யாரோ ந‌ம‌க்கு எதுரா ச‌தி ப‌ண்ணுறாங்க‌ளா, அல்ல‌து ம‌க்க‌ளை காப்பாத்த‌ த‌மிழ் ம‌ண‌ந்தான் ஏதோ பிளான் ப‌ண்ணுதானு என‌க்கு ஒரே ட‌வுட்டு. க‌டைசியில‌ 'சீச்சீ.. இந்தக்கவுஜ‌ புளிச்சுப்போச்சு'னு உட்டுட்டு அத்த‌ ம‌ற‌ந்துட்டேன் (போன‌ மாச‌மே).

ஆனா திடீர்னு இப்போ த‌மிழ் ம‌ண‌த்துல‌ ந‌டுவால‌ புது ப‌திவாட்ட‌ம் ந‌ம்ப‌ க‌வுஜ‌ ஒண்ணு ந‌வுந்துக்கிட்டிருக்குது, என்ன‌டானு பாத்தா 'முத‌ல் முத்த‌ம்'. இப்போ ஒரே கொழ‌ப்ப‌மா இருக்குது, அத்த‌ அப்டேட் ப‌ண்ண‌லாமா, வேண்டாமானு. ஒரு வேளை அதையும் நான் அப்டேட் ப‌ண்ண‌ ந‌ம்ப‌ ரெகுல‌ர் க‌ஷ்ட‌ம‌ர்க‌ள் அத‌ப்பாத்துட்டு, ந‌ம்ப‌ மெயின் க‌டைக்கு வ‌ராம‌ல் க‌வுஜ‌யோனு நினைச்சு தெரிச்சு ஓடிப்பூடுவாங்க‌ளோனு ப‌ய‌மாயிருக்குது. யாராவ‌து க‌ருத்து சொல்லுங்க‌, கேட்டுக்கிடுதேன்.

வேணுமானா இப்பிடி ப‌ண்ண‌லாமா? மாச‌ம் ஒருக்கா க‌வுஜ‌ய‌ அப்டேட் ப‌ண்ணுறேன். (அதெப்பிடி உட்டுருவேன்னு நினைச்சீங்க‌ளா, ஹி..ஹி..) என்ன‌ சொல்றீங்க‌?

15 comments:

மங்களூர் சிவா said...

/
ஒரு வேளை அதையும் நான் அப்டேட் ப‌ண்ண‌ ந‌ம்ப‌ ரெகுல‌ர் க‌ஷ்ட‌ம‌ர்க‌ள் அத‌ப்பாத்துட்டு, ந‌ம்ப‌ மெயின் க‌டைக்கு வ‌ராம‌ல் க‌வுஜ‌யோனு நினைச்சு தெரிச்சு ஓடிப்பூடுவாங்க‌ளோனு ப‌ய‌மாயிருக்குது.
/

நல்லா மைண்ட் ரீட் பண்றீங்க சார்வாள்!
:))))))))

M.Saravana Kumar said...

நீங்க நிறைய கவிதை எழுதுங்க..

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//இதிலேயே கவுஜயவும் போட்டு ஏதோ அறிவுரை கேக்க வர்ற மத்தவுங்களையும் டார்ச்சர் பண்ணவேண்டாமேனும், வேணுங்கறவுங்க தனியா போய் படிச்சுகிடட்டுமேனும் ஒரு நல்ல எண்ணம்தான்). //

நமக்கு அந்த மாதிரி நல்லெண்னமெல்லாம் கிடையாது. கவுஜையில இருந்து எல்லாக் கருமமும் ஓரே கடையிலதான்

விஜய் ஆனந்த் said...

அண்ணே.....கவுஜயும் அப்பப்ப வாரம் ஒருக்கா அப்டேட் பண்ணுங்கண்ணே.....

எவ்வளவோ படிக்கறோம்....இதப்படிக்க மாட்டோமா???

ஒரு உண்மைய சொல்லிடறேன்...காண்டாயிடாதீங்க..உங்க கவிதய படிச்ச உடனே, சில பயப்பந்துகள் உருண்டு வந்து,வயித்துக்கும் தொண்டைக்கும் நடுவுல சிக்கிக்கிச்சு...அதனாலதான் பின்னூட்டம் கூட போடாம ஓடியாந்துட்டேன்...

தமிழன்... said...

எழுதுங்க கவிதைகள்தான் அதிகம் வாசிக்கப்படுகிறது...

(நாமளே எழுதறம்ல..)

கிரி said...

//ந‌ம்ப‌ ரெகுல‌ர் க‌ஷ்ட‌ம‌ர்க‌ள் அத‌ப்பாத்துட்டு, ந‌ம்ப‌ மெயின் க‌டைக்கு வ‌ராம‌ல் க‌வுஜ‌யோனு நினைச்சு தெரிச்சு ஓடிப்பூடுவாங்க‌ளோனு ப‌ய‌மாயிருக்குது.//

தலைப்பை வைத்து தானே வராங்க..அதுனால கவலைப்படாதீங்க ..போட்டு தாக்குங்க :-)

தாமிரா said...

வாங்க மங்களூர், நன்றி.! (நீங்கதான் சொல்றீங்க, ஆனா ஒரு பதிவுக்கு சுமார் நூறு ஹிட்ஸும், பத்து பின்னூட்டமும்‍ ‍‍--பாருங்க இதுவரை 6 தான் வந்திருக்குது-- வாங்கறதுக்குள்ள நா படுற பாடு எனக்குதான் தெரியும்)

வாங்க சரவணக்குமார், ந‌ன்றி! (இப்பிடியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமாயிடுச்சு)

வாங்க அப்துல், நன்றி.! (அப்ப உங்களோடது சூப்பர் மார்க்கெட்னு சொல்லுங்க, நம்பளோடது தள்ளுவண்டி)

தாமிரா said...

வாங்க விஜய், நன்றி.! (என்னங்க‌ சொல்றீங்க, என் கவித படிச்சு நாலு பேருக்கு தல சுத்தியிருக்குது, ரெண்டு பேரு வாந்தி எடுத்திருக்காங்க, பேதியாயிருக்குது. ஆனா இது புதுசா இருக்குதே!, பயந்து ஓடினீங்களா.. புரியலையே.. கொஞ்சம் விளங்கச்சொல்றீங்களா? )

வாங்க தமிழன், ந‌ன்றி!

வாங்க கிரி, நன்றி.! (கொஞ்சம் ஆறுதலாயிருக்குதுங்க‌)

அவனும் அவளும் said...

கவிதை நிறைய எழுதுங்க தாமிரா. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

விஜய் ஆனந்த் said...

// தாமிரா said...

வாங்க விஜய், நன்றி.! (என்னங்க‌ சொல்றீங்க, என் கவித படிச்சு நாலு பேருக்கு தல சுத்தியிருக்குது, ரெண்டு பேரு வாந்தி எடுத்திருக்காங்க, பேதியாயிருக்குது. ஆனா இது புதுசா இருக்குதே!, பயந்து ஓடினீங்களா.. புரியலையே.. கொஞ்சம் விளங்கச்சொல்றீங்களா? ) //

நீங்க இன்னும் சில பல கவுஜங்கள தட்டி வுடுங்க..அதுக்கப்புறம் வெளக்கறேன்!!!!

தாமிரா said...

நன்றி அவனும் அவளும்! (உங்க பெயரை எப்பிடி சுருக்கரதுனு தெர்யாம முளிக்கிறேன்)

நன்றி விஜய்.!

அவனும் அவளும் said...

*****நன்றி அவனும் அவளும்! (உங்க பெயரை எப்பிடி சுருக்கரதுனு தெர்யாம முளிக்கிறேன்******


எங்க சுருக்கி எழுதினா தான் கவுஜயா ?

என்னோட பேர அப்படியே எழுதினாலும் கவுஜ தான் அது.

ஜி said...

//எவ்வளவோ படிக்கறோம்....இதப்படிக்க மாட்டோமா???//

Oru repeatye... :)))

ஜி said...

@அவனும் அவளும்

Enunga unga bloga thookitteenga?? Engala maathiri vaasaga perumakkalukkaaga thirumba open panni continue pannunga sir.. :)))

தாமிரா said...

நன்றி ஜி.!
அவனும் அவளும்க்காக ஜி க்கு ஒரு ரிப்பீட்டு!