Friday, August 22, 2008

என் ரமாவுக்கு...

எந்தக் கோயிலுக்கு போனாலும் நான் உனக்கு எல்லா சந்நிதிகளையும் காண்பிக்க வேண்டுமே என கவனமாக‌ இருக்கிறேன். நீ வாசலில் கிடக்கும் செருப்பின் மீதான கவனமாகவே இருக்கிறாய்.

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும் மாலைப்பொழுதில் வட்டமான கேக்கோடு வருகிறேன் நான். என் பிறந்தநாளின் போது பிற நாட்களைப்போலவே பல்தேய்த்த பின்தான் காபி தருவேன் என்கிறாய்.

மூன்று வருடங்களாக உனக்கு உடல்நலமில்லாத ஒவ்வொரு தடவையும் சீக்கிரமாகவே ஆ.:பீஸிலிருந்து வந்து மருத்துவமனைக்கு அழைத்துப்போயிருக்கிறேன். நேற்று நான் வயிற்றுவலி என்ற போது இஞ்சி குடியுங்கள், சரியாகிவிடும் என்கிறாய்.

உனக்கு மஞ்சள், சிவப்பு நிறங்கள் பிடிக்குமென்பது எனக்குத்தெரியும். ஆனால் எந்த நிறத்தில் நான் புடவை வாங்கிவந்தாலும் உனக்கு பிடிக்கவில்லை என்கிறாய்.
உன்னைப்பற்றித்தெரிந்தே நான் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவருவதில்லை. நீ என்னைப்பற்றித்தெரியாமலே யாரையும் வீட்டுக்கு அழைத்துவருவதில்லை.

.:ப்ரீயாக டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போதும் பக்கத்திலே ஜூஸ் வைத்துக்கொள்கிறாய் நீ. ஆ.:பீஸிலிருந்து டயர்டாக வந்தாலும் நானேதான் .:பிரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நீ வேலைக்கு செல்வதில்லை ஆயினும் அடுக்களையில் நான் அடிக்கடி வேலை செய்கிறேன். எனக்காக துவைத்துப்போட்ட உள்ளாடையைக்கூட எடுத்துவைப்பதில்லை நீ.

ஏதேனும் கஷ்டங்கள் வரும்போது நான் அணிந்திருக்கும் ஒரே ஒரு மோதிரத்தையே உற்றுப்பார்க்கிறாய். உன் பர்ஸிலிருக்கும் சில ஆயிரங்கள் உனக்கு ஞாபகம் வருவதேயில்லை.

நீயும் நானும் இருக்கும் போது டிவியில் சீரியல் ஓடிக்கொண்டேயிருக்கிறது. போகோ பார்க்கலாம் என்றால் நீயில்லாத தனிமை கிடைக்கவேமாட்டேன் என்கிறது.

என்னுடையது மட்டுமல்ல உன்னுடையதும் சேர்த்து மளிகை பில் துவங்கி பிரிஷ்கிரிப்ஷன் வரை பத்திரமாக எடுத்துவைப்பேன் நான். ஆனால் என‌து செக்புக்கை கூட எடுத்துப்பார்த்துவிட்டு அலட்சியமாக காபியில் ஈ விழுந்துவிடாமலிருக்க டம்ளரை மூடிவைப்பாய் நீ.

கத்திரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி என உனக்கு பிடித்த எல்லாமும் உணவில் இருக்கும். எனக்கு வெண்டைக்காய் ரொம்பப்பிடிக்கும் என்று சொன்ன பிறகும் அதை xxx கூட‌ தின்காது என்பாய்.

நாம் எங்கேயாவது வெளியே கிளம்பும் போது உனக்காக அத்தனை தடவைகளும் நான் முன்னமே காத்துக்கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு நாள் பயணத்தை ரத்து செய்யலாமா என்று கேட்டதற்கு எவ்வளவு மூர்க்கமானாய் நீ.

பீரோவில் உன் பட்டுப்புடவைகள் அடுக்கிவைக்கப்பட்டு இடமில்லாமல் என் துணிகள் பக்கத்தில் 'பிக் ஷாப்பரில்' உட்கார்ந்திருக்கின்றன பல்லிகளோடு.

உன்னோடு அமர்ந்து எத்தனை முறை தேங்காய் துருவித்தந்திருப்பேன். ஒருமுறை கூட உங்கள் விருப்பத்தைச்சொல்லுங்கள் என்று நீ கேட்டதேயில்லை.

நித்தம் நித்தம் இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுவதில்லை. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.

ர‌மா....

ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...
அப்போதுதான் என் வலிகள் உனக்கும் தெரியும்!


இருந்த காதல் முழுவதையும் உன் மீதே கொட்டிவிட்டு காத்துக்கிடக்கும் அப‌லைக்கணவன்.. தாமிரா.

******
நான் இந்த எதிர்/தொடர் பதிவுகள் எழுத‌வேண்டும் என்று அவ்வளவாக நினைப்பதில்லை. ஆனால் பரிசலின் பதிவைப்பார்த்ததிலிருந்து கை சும்மாவே இருக்காமல் இதை எழுதித்தொலைத்துவிட்டது. நம்மைப்பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே! (பரிசல் மட்டும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்)

70 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:)

ஜெகதீசன் said...

:)))

தமிழ் பிரியன் said...

ஆகா!~ அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சாச்சா? அவ்வ்வ்வ்வ்

கயல்விழி said...

ரமாவிடம் இந்த பதிவை காண்பித்து எதிர் வினை பதிக்கப்போவதில்லையா? :)

வெண்பூ said...

ஒருத்தர் ஒரு கடிதம் எழுதக்கூடாதே? ஆனாலும் நல்லாயிருக்கு. சிரிக்க வெச்சது. நன்றி தாமிரா...

விஜய் ஆனந்த் said...

அண்ணே!!! பிரிச்சு மேஞ்சுட்டீங்க!!! சிரிப்ப நிறுத்த முடியல!!! பரிசல் சென்டிமென்ட்ல கலக்குனாரு...நீங்க காமெடில!!!

ஆனா ஒண்ணு...நீங்க ரொம்ம்ப்ப்ப தைரியசாலி!!!ஆண்டவா, எனக்கும் நம்ம தாமிரா அண்ணன் மாதிரி தைரியத்தையும், மனோபலத்தையும், எதற்கும் அஞ்சா நெஞ்சத்தையும் கொடுப்பா!!!! ஜெய் ஹனுமான்!!!

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

தாமிரா அண்ணே!
இருய்யா...சிரிச்சு முடிச்சுட்டு அப்புறமா பின்னூட்டம் போடுறேன்

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

(பரிசல் மட்டும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்)
//

எங்க அண்ணே யாரு சிங்கம்ல! அவரே இந்தப் பதிவைப் படிக்கச் சொல்லி பலருக்கும் ரெகமண்ட் செய்வார்.

ச்சின்னப் பையன் said...

:-)))).

யோசிக்கறேன்... யோசிக்கறேன்....

அது சரி said...
This comment has been removed by the author.
அது சரி said...

அஞ்சா நெஞ்சன், அறம் உரைக்கும் அலிபாபா,

நூடுல்ஸ் வாங்கி நொந்த நல்லவன்,

கருப்பட்டி தேடும் கருத்தாளன்,

தங்கமணிகளுக்கு தலைவணங்கா தமிழன்,

ர‌மாக்க‌ளுக்கும், உமாக்க‌ளுக்கும்

சூடு வைக்கும் புதிய‌ சுப்பிர‌ம‌ணிய‌ பார‌தி

எங்க‌ள் த‌லைவ‌ன்

தாமிர‌ப‌ர‌ணியின் மைன்த‌ன்

தாமிரா வாழ்க‌, வாழ்க‌, வாழ்க‌வே!


(மொத‌ல் போஸ்ட்ல‌ ஃபார்மேட்டிங் ச‌ரியா வ‌ர்ல‌. அத‌னால‌ அத‌ நானே அழிச்சிட்டேன். த‌ப்பா எடுத்துக்காத‌ த‌ல‌!)

அது சரி said...

விக்கிரமாதித்தன் கதைகள்னு நானும் புதுசா ரெண்டு பதிவு போட்ருக்கேன் தல.

டைம் கெடிச்சா படிச்சிட்டு எதுனா சொல்லுங்களேன்.

Ramya Ramani said...

:))

\\கயல்விழி said...
ரமாவிடம் இந்த பதிவை காண்பித்து எதிர் வினை பதிக்கப்போவதில்லையா? :)
\\

repeatu

பரிசல்காரன் said...

யோவ்....

உன்ன...

பரிசல்காரன் said...

நான் போட்ட கடிதத்துல இருக்கறது எல்லாம் எனக்கானதல்ல.

சில உங்களுக்கும் பொருந்தும்.

நீங்க போட்ட கடிதத்துல இருக்கறது எல்லாம் உங்களுக்கானதல்ல.

சில எனக்கும் பொருந்தும்.

பரிசல்காரன் said...

நெஜமா தங்கச்சி பேரு ரமாவா? சொல்லீருங்கப்பு...

பரிசல்காரன் said...

இனி வால்பையன் டாஸ்மாக் சூபர்வைசருக்கு எழுதுவாருன்னு நெனைக்கறேன்.

பரிசல்காரன் said...

நான் எழுதின கடிதத்தைப் படிச்சுட்டு சில நல்லவிங்க `ஐயோ பாவம் உமா. திருந்துங்க பரிசல்' ன்னு அட்வைசீட்டுப் போயிருந்தாங்க.

அதுக்கு பதிலா இருந்தது இந்தப் பதிவு!

ஐயா... நாங்களும் பாவம்யா..

அத எங்க போய் சொல்ல!

தாமிரா வூட்ல ப்ளாக் படிக்கறதில்ல, நம்ம வூட்ல அவங்க அப்ரூவலுக்கு அப்புறம்தான் பப்ளிஷே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பரிசல்காரன் said...

அவ்ளோ உருக்கமா எழுதினாரே, இப்படிக் கலாய்ச்சா தப்பா நினைப்பாரோன்னு தயங்காம போட்டுத் தாக்குனீங்கள்ல.. அங்கதான் நீங்க நம்மளைப் புரிஞ்சுட்டீங்க தாமிரா!

அவ்ளோ சீக்கிரம் நாம சீரியஸ் பக்கம் போய்டுவமா என்ன?

பரிசல்காரன் said...

விக்னேஸ்வரன் கண்ணுல இந்தப் பதிவு படக்கூடாதுன்னு வேண்டிக்கறேன். அப்புறம் என் பதிவுல இருக்கற 85 கமெண்டும் இங்க வந்து கும்மிக்கும்!

பாபு said...

தாமிரா ,சூப்பர்
ஆனா உங்க அளவுக்கு நமக்கு தைரியம் பத்தாது.
அதுவும் அந்த போட்டோ சூப்பர்,பரிசலில் அருகருகே இருக்கும்,இதில் எதிரெதிரே இருந்தது.தானாக அமைந்ததா இல்லை பிளான் பண்ணி எடுத்ததா

பாபு said...

அதவும் உங்கள் காலை மிதித்தபடி அவரின் கால் இருக்கிறது
நிஜமாவே உங்களுக்கு நல்ல creative thinking இருக்கிறது

ஜி said...

//ஆனா ஒண்ணு...நீங்க ரொம்ம்ப்ப்ப தைரியசாலி!!!ஆண்டவா, எனக்கும் நம்ம தாமிரா அண்ணன் மாதிரி தைரியத்தையும், மனோபலத்தையும், எதற்கும் அஞ்சா நெஞ்சத்தையும் கொடுப்பா!!!!//

எனக்கும் எனக்கும்.... இப்ப இல்ல... அப்புறமா :))

Syam said...

நேத்து நைட் தான் பரிசல் பதிவ தங்க்ஸ் கிட்ட காட்டிட்டு இருந்தேன் தங்க்ஸ்ம் ரொம்ப நெகிழ்ந்து போய் ஒரு ரெண்டு பெக் சேர்த்து அடிச்சுக்க சொல்லிட்டா... இப்போ இதை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டு இருந்தேன் அந்த நேரம் பார்த்தா தங்க்ஸ் வரணும்..உயிரோட இருந்தா அப்புறமா வரேன் :-)

ஸ்ரீ said...

ஹி ஹி தல வீட்டுல கொஞ்ச நாள் ஹெல்மெட் உபயோகித்தால் நல்லது :)

தாமிரா said...

அதிக பின்னூட்டங்கள் (ஆனால் ஹிட்ஸ் என்னவோ கூடவே மாட்டேங்குது. மீட்டர்ல சூடு வெக்கிற வழி ஏதாவது தெரிந்தால் சொல்லவும்) அனைவருக்கும் நன்றி.

நன்றி முத்துலட்சுமி.!
நன்றி ஜெக‌தீச‌ன்.!
நன்றி த‌மிழ் பிரிய‌ன்.!
நன்றி க‌ய‌ல்விழி.!
நன்றி வெண்பூ.!

தாமிரா said...

நன்றி விஜய் ஆனந்த்.! (மனோபலம் கிடைக்கக்கடவதாக, ஜெய் ஹனுமான்!)
நன்றி அப்துல்.! (நீங்க‌ சொன்ன‌து ச‌ரிதான் கீழ‌ பார்த்திருப்பீங்க‌ளே, ரொம்ப‌ ர‌சிச்சிருக்கார்)
நன்றி ச்சின்னப்பையன்.! (ரொம்ப‌ யோசிக்காதீங்க‌, ட‌க்குனு பாராட்டீருங்க‌..)
நன்றி அதுசரி.! (ஆகா என்னா குஜாலா இருக்குது தெரியு‌மா? புக‌ழுக்காக‌ ஏன் xx மாதிரி அலையுறா‌ங்க‌னு இப்ப‌தான் புரியுது.! இதுக்கெல்லாம் நான் மயங்கமாட்டேன். இருந்தாலும் 'தங்கமணிகளுக்கு தலைவணங்கா தமிழன்' கொஞ்சம் புடிச்சிருந்துது. ஹி..ஹி!)

Anonymous said...

//ஆனா ஒண்ணு...நீங்க ரொம்ம்ப்ப்ப தைரியசாலி!!//
:)))))))))

தாமிரா said...

நன்றி ரம்யா.! (எம்மேல ஏதாவது கோபம்னா ரெண்டு அடி அடிச்சுருங்க, கயல்விழிக்கும் சேத்துதான்!)
நன்றி பரிச‌ல்.!
(//நெஜமா தங்கச்சி பேரு ரமாவா?// இல்லை. இதைவிடவும் அழகான பேரு, ஹி..ஹி!
//தாமிரா வூட்ல ப்ளாக் படிக்கறதில்ல// எப்புடிங்க கண்டுபுடிச்சீங்க?
//நம்ம வூட்ல அவங்க அப்ரூவலுக்கு அப்புறம்தான் பப்ளிஷே!// ஐயோ பாவம்.
//விக்னேஸ்வரன் கண்ணுல இந்தப் பதிவு படக்கூடாதுன்னு வேண்டிக்கறேன்// அப்பிடிலாம் சொல்லப்புடாது..)
நன்றி பாபு.! (போட்டோவைப் பாராட்டினதுக்கு ஸ்பெஷல் நன்றி வேற ஆரும் ஒண்ணும் சொல்லலியே..)

தாமிரா said...

நன்றி ஜி.!
நன்றி ஷ்யாம்.! (பாத்து பாத்து.. ஜாக்கிர‌தை!)
நன்றி ஸ்ரீ.!

என்ன தமிழ் மணத்துல நடுவாலயும் வரலை, சைடு வாக்கிலேயேயும் மறுமொழி 9 ன்னே காமிக்குது? ஏதும் கோளாறா?

Syam said...

//(//நெஜமா தங்கச்சி பேரு ரமாவா?// இல்லை. இதைவிடவும் அழகான பேரு, ஹி..ஹி!
//

ஒ அப்ப டபுளா...திறமைதான் :-)

(அப்பாடா வந்த வேலை முடிஞ்சுது)

சந்தனமுல்லை said...

:-)

சந்தனமுல்லை said...

போட்டோ நல்லாருக்கு..:-)))

Anonymous said...

எப்படி இப்படியெல்லாம்?

தாமிரா said...

நன்றி சுபாஷ்.!
நன்றி ஷ்யாம்.!
நன்றி சந்தனமுல்லை.!
நன்றி ஆனந்த்.!

குசும்பன் said...

பீரோவில் உன் பட்டுப்புடவைகள் அடுக்கிவைக்கப்பட்டு இடமில்லாமல் என் துணிகள் பக்கத்தில் 'பிக் ஷாப்பரில்' உட்கார்ந்திருக்கின்றன பல்லிகளோடு.//

:)))))))))

குசும்பன் said...

பரிசல்காரன் said...
நான் போட்ட கடிதத்துல இருக்கறது எல்லாம் எனக்கானதல்ல.

சில உங்களுக்கும் பொருந்தும்.

நீங்க போட்ட கடிதத்துல இருக்கறது எல்லாம் உங்களுக்கானதல்ல.

சில எனக்கும் பொருந்தும்.//

அய்யா பரிசல் அடுத்த முறை விசு உங்க ஊருக்கு வரும் பொழுது போய் பார்க்கவும், நல்ல எதிர்காலம் காத்துக்கிட்டு இருக்கு!

மங்களூர் சிவா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

இப்ப எந்த ஆஸ்பத்திரில இருக்கீங்க???

மங்களூர் சிவா said...

சேதாரம் அதிகமோ!?!? இந்த பதிவ எழுதினதுக்கு????

மங்களூர் சிவா said...

/
விஜய் ஆனந்த் said...

ஆனா ஒண்ணு...நீங்க ரொம்ம்ப்ப்ப தைரியசாலி!!!ஆண்டவா, எனக்கும் நம்ம தாமிரா அண்ணன் மாதிரி தைரியத்தையும், மனோபலத்தையும், எதற்கும் அஞ்சா நெஞ்சத்தையும் கொடுப்பா!!!! ஜெய் ஹனுமான்!!!
/

ரிப்பீட் ரிப்பீட் ரிப்பீட்

மங்களூர் சிவா said...

/
அது சரி said...

அஞ்சா நெஞ்சன், அறம் உரைக்கும் அலிபாபா,

நூடுல்ஸ் வாங்கி நொந்த நல்லவன்,

கருப்பட்டி தேடும் கருத்தாளன்,

தங்கமணிகளுக்கு தலைவணங்கா தமிழன்,

ர‌மாக்க‌ளுக்கும், உமாக்க‌ளுக்கும்

சூடு வைக்கும் புதிய‌ சுப்பிர‌ம‌ணிய‌ பார‌தி

எங்க‌ள் த‌லைவ‌ன்

தாமிர‌ப‌ர‌ணியின் மைன்த‌ன்

தாமிரா வாழ்க‌, வாழ்க‌, வாழ்க‌வே!
/

இதுக்கும் ஒரு ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

/
ஸ்ரீ said...

ஹி ஹி தல வீட்டுல கொஞ்ச நாள் ஹெல்மெட் உபயோகித்தால் நல்லது :)
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

ஏகப்பட்ட ரிப்பீட்டு போட வேண்டியதா போச்சு இன்னைக்கு!!

மங்களூர் சிவா said...

சாப்பிட்டு தெம்பா வந்து பதிவை பிரிச்சு மேயறேன்!!
:)))

தாமிரா said...

வாங்க குசும்பன் நன்றி.! (பரிசலுக்கு நல்ல அறிவுரை)
வாங்க மங்களூர், உங்களை எங்க சுத்திட்டிருக்கீங்க என்று கண்டுபிடிச்சு கூட்டி வரதாயிருக்குது. ஓகே! அதுக்காக ரிப்பீட்டுகள் போட்டது பத்தாதுனு இன்னொரு ரவுண்டு வேற வரப்போறீங்களா? அவ்வ்வ்..

மங்களூர் சிவா said...

போட்டோல அந்த பொண்ணு ஏன் காலை அந்த மிதி மிதிக்குது??

அது உங்க வொய்ப் இல்லை கண்டிப்பா
:))))

ரமா said...

/
உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும் மாலைப்பொழுதில் வட்டமான கேக்கோடு வருகிறேன் நான்
/

ஏன் இந்த சதுரம் செவ்வகம் எல்லாம் கண்ணுக்கு தெரியாதா?????

ரமா said...

/
நேற்று நான் வயிற்றுவலி என்ற போது இஞ்சி குடியுங்கள், சரியாகிவிடும் என்கிறாய்.
/

இஞ்சி தின்ன ----- ஐ நான் எப்பதான் பாக்கிறதாம்
:)

ரமா said...

/
உனக்கு மஞ்சள், சிவப்பு நிறங்கள் பிடிக்குமென்பது எனக்குத்தெரியும். ஆனால் எந்த நிறத்தில் நான் புடவை வாங்கிவந்தாலும் உனக்கு பிடிக்கவில்லை என்கிறாய்.
/

அதுக்குதான் வாங்கறப்ப என்னைய கூட்டிகிட்டு போய்யா அப்படிங்கறது!!

(அப்பதானே வேட்டு பெருசா வைக்க முடியும்)

50

ரமா said...

/
உன்னைப்பற்றித்தெரிந்தே நான் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவருவதில்லை.
/

என் காப்பிய சாப்பிட்டா அவங்களுக்கும் -- ஆகீடும்னுதானே!!
:))

ரமா said...

/
நீ என்னைப்பற்றித்தெரியாமலே யாரையும் வீட்டுக்கு அழைத்துவருவதில்லை.
/

உங்களை பத்தி ரொம்ப நல்லா தெரியும் அதனாலயும்தான்

:))

ரமா said...

/
ஆ.:பீஸிலிருந்து டயர்டாக வந்தாலும் நானேதான் .:பிரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளவேண்டும்.
/

அப்பிடி என்ன வெட்டி முறிக்கிறீங்க அங்கனு தெரியும்ல எங்களுக்கு அதனாலதான்

ரமா said...

/
நீ வேலைக்கு செல்வதில்லை ஆயினும் அடுக்களையில் நான் அடிக்கடி வேலை செய்கிறேன்.
/

சாப்பாடு வேணும்னா செஞ்சுதான் ஆவணும்!

ரமா said...

/
என‌து செக்புக்கை கூட எடுத்துப்பார்த்துவிட்டு அலட்சியமாக காபியில் ஈ விழுந்துவிடாமலிருக்க டம்ளரை மூடிவைப்பாய் நீ.
/

அக்கவுண்ட்ல பணம் இல்லாத செக் புக் வெச்சு காபி மூடி வெச்சா என்ன? டீ மூடி வெச்சா என்ன???

ரமா said...

/
எனக்கு வெண்டைக்காய் ரொம்பப்பிடிக்கும் என்று சொன்ன பிறகும் அதை xxx கூட‌ தின்காது என்பாய்.
/
அதை xxx தான் திங்கும் அதனாலதான் அப்பிடி சொல்றேன்

ரமா said...

/
உன்னோடு அமர்ந்து எத்தனை முறை தேங்காய் துருவித்தந்திருப்பேன். ஒருமுறை கூட உங்கள் விருப்பத்தைச்சொல்லுங்கள் என்று நீ கேட்டதேயில்லை.
/

தேங்கா துருவறதுனா உங்களுக்கு எவ்ளோ விருப்பம் அதுகூடவா எனக்கு தெரியாது??? உங்களை மாதிரி மக்கா என்ன நான் :)))

ரமா said...

/
உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.
/

அதுக்குதான் நிமிசத்துக்கு நூறு பேச்சு பேசக்கூடாதுன்னு சொல்றது
:))

ரமா said...

/
ர‌மா....

ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறும் வரம் வேண்டுமெனக்கு...
அப்போதுதான் என் வலிகள் உனக்கும் தெரியும்!
/

ஏன் ஆபீஸ்ல போய் என்னால ப்ளாக் எழுதி கமெண்ட் போட்டு சாட் பண்ண முடியாதா?? என்ன பேசறீங்க நீங்க!?!?

ரமா நண்பி said...

/
இருந்த காதல் முழுவதையும் உன் மீதே கொட்டிவிட்டு காத்துக்கிடக்கும் அப‌லைக்கணவன்.. தாமிரா.
/

பொய் பொய்

மங்களூர் சிவா said...

சரிப்பா டயர்டா இருக்கு வர்ட்டா
:))))))

தாமிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்......

தருமி said...

ரமா said...
/
என‌து செக்புக்கை கூட எடுத்துப்பார்த்துவிட்டு அலட்சியமாக காபியில் ஈ விழுந்துவிடாமலிருக்க டம்ளரை மூடிவைப்பாய் நீ.
/

அக்கவுண்ட்ல பணம் இல்லாத செக் புக் வெச்சு காபி மூடி வெச்சா என்ன? டீ மூடி வெச்சா என்ன???

;))))

தாமிரா said...

வாங்க சீனியர்.. நன்றி.!

goma said...

ஐய்யோ! உலகத்திலே இப்படி ஒரு தைரியசாலியா?!!!!
படத்தோடு போட்டிருந்தால் நாங்களும் கொஞ்சம் அந்த‌ ஜான்சிராணியைத் தரிசித்திருப்போமே.ஏனைய 99%
பெண்கள் எல்லோருமே இதுபோல் எழுதத் தொடங்கினால் கணினி தாங்காது.அவர்கள், இது போன்ற அவஸ்தைகளைத் துச்சமாக எடுத்துக் கொள்ள இயலும் மனப்பக்குவம் பெற்றவர்கள்.

தாமிரா said...

வாங்க‌ கோமா, நன்றி.! (அதாவது தைரியசாலி என்று என் தங்கமணியையும், பிற 99% சதவீத பெண்கள் என்னைப்போல கஷ்டப்படுகிறார்கள் என்றும் சொல்லவருகிறீர்களா?
நல்லா இருக்கே கதை.! ஏதாவது சினிமாவில் வருகிறதா இந்த மாதிரி? யப்பா புண்ணியவானுங்களே.. யாராவது ஏதாவது சொல்லவிரும்புகிறீர்களா இதைப்பற்றி.? நீங்க எதற்கும் எனது பிற பதிவுகளையும் அதற்கான பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வாருங்கள், பதில் சொல்கிறேன்)

kumky said...

பரிசல் எல்லோருக்கும் பொருந்தராமாரி  எழுதராரேன்னு யோசிச்சா .., பதில் கும்மி இப்படியா?  அய்யோ பாவம் தாமிரா.   syam சொல்வதயும் கவனிக்கவும்..   

rapp said...

:):):)

Anonymous said...

தாமிரா, பரிசலுக்கு எதிர் வினை அருமை. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சு. ரமா நெசமாலுமே உங்க ப்ளாக் படிக்க மாட்டாங்களா!!!!

தாமிரா said...

நன்றி கும்கி.!
நன்றி ராப்.!
நன்றி அம்மிணி.!
(ஆனாலும் நீங்க மூணு பேரும் ரொம்ப .:பாஸ்ட்.!)