Monday, August 25, 2008

வடை பெறுகிறேன்.. நன்றி.!

ஆ.:பீஸ் கேண்டீனில் முன்னை மாதிரி இல்லை இப்போது. எல்லாத்துக்கும் டோக்கன் சிஸ்டம்தான். சில சமயங்களில் நாம் ஒரு *** நிறுவனத்தில்தான் வேலை செய்கிறோமா? இல்லை மன்னார் அன்ட் கம்பெனியானு சந்தேகம் வருது. இதில் என்ன அநியாயம் என்றால் சாப்பாடு, டீ டோக்கன் தவிர ஊழியர்கள் ஏதும் விஷேசம் என்றால் கேண்டீனில் வைத்து தரும் பொது பார்ட்டிக்கும் டோக்கன் சிஸ்டம்தான்.இன்று காலை அதுபோல ஒரு எக்ஸ்ட்ரா ஒரு டோக்கன் கைக்கு வந்தது.

பலரும் இது போன்ற சமயங்களில் பிரசன்ட் ஆகாதோரின் டோக்கனை பயன் படுத்தி டபுள் ட்ரீட் பெறுவதுண்டு. இன்று ராஜன் வந்து மதியமே வெளியில போறேன் கேகே, இந்த டோக்கனை நீங்க வெச்சுக்கங்க என்றார். வாங்கிக்கொண்டேன். இன்று ட்ரீட்டில் வடையும், சமோசாவும் இருந்தது. வாங்கும் போது ராஜனை நினைத்துக்கொண்டேன்.

'ராஜன், உங்களால் இன்று நானும் எக்ஸ்ட்ராவாக ஒரு வடை பெறுகிறேன்.. நன்றி.!'

டிஸ்கி : இந்த மொக்கைப்பதிவு நிஜமா நல்லவனின் பதிவுக்கு எதிர் பதிவு அல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன். அதைப்போன்று ஒரு ஐடியா முதலில் இருந்தது என்றும் ஜோஸப்பின் பதிவில் இனி யாரையும் மீண்டும் வருமாறு கொஞ்சப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தலைப்பை சிறிது மாற்றி ஜல்லியடித்திருக்கிறேன் என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். மேலும் எங்கள் ஆ.:பீஸில் எல்லாவற்றுக்கும் டோக்கன் என்பதும் உண்மையே.

12 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு உங்க வடை பெறுதல்!!
:-))))

அவனும் அவளும் said...

வடை பெறாதீங்க வடை பெறாதீங்க

ஜோசப் அவர்களின் கூற்றுக்கு ஏற்ப........வடை

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

ஓரு மார்க்கமாத்தான் போரீரு..
நடத்தும்!நடத்தும்!

கேண்டீன்காரர் said...

அடப்பாவி தட்டில வச்சிருந்த வடைகளை அப்படியே அபேஸ் பண்ணிட்டு போனவன் தானே நீ?

தாமிரா said...

நன்றி விஜய்.!
நன்றி சந்தனமுல்லை.!
நன்றி அவனு/ளும்.!
நன்றி புதுகை அப்துல்.!
நன்றி மங்களூர் சிவா.! (நீங்க எப்ப கேண்டீன் திறந்தீங்க?)

வீரசுந்தர் said...

நான் அத முதல்ல அத ‘விடை பெறுகிறேன்'-னுதான் படிச்சேன். ஆஹா, இன்னொரு கடித வாரத்தை ஆரம்பிச்சாட்டாங்களோன்னு, கொஞ்சம் பயந்துட்டேன். நல்ல வேலை, வடையோட நிப்பாட்டிட்டீங்க! :-)

Saravana Kumar MSK said...

வடை பெற்றீர்களா??
;)))

Saravana Kumar MSK said...

விடை பெறுதலை ஒரு ட்ரெண்டு ஆக்கிடிவீங்கலோனு பயந்துட்டேன்..

ஜெகதீசன் said...

:)))

அது சரி said...

உங்க பேரு தாமிராவா இல்லா தமிரம்பாவா??

விளம்பரம் போடுறது பத்தி சந்தோஷப்படுங்க. அது இல்லாட்டி, இந்த நிகழ்ச்சியெல்லாம் சகிக்க முடியுமா??

தாமிரா said...

வாங்க வீரசுந்தர், நன்றி.!
வாங்க சரவணகுமார், நன்றி.!
வாங்க ஜெகதீசன், நன்றி.!
வாங்க அதுசரி, நன்றி.! (பின்னூட்டம் இடம்மாறி விட்டது)