Monday, August 25, 2008

வெகுளித்தனமான ரம்பா.!

டிவியில் எந்த சானலைத் திருப்பினாலும் போட்டி போட்டு பாடறாங்க அல்லது பேசுறாங்க அல்லது காமெடிங்கிற பேர்ல அறுக்கறாங்க அல்லது ஆடுறாங்க.. இதைதவிர வேறு நிகழ்ச்சிகள் எந்த டிவியிலாவது ஏதாவது வருகிறதா (சினிமாவையும் சீரியல்களையும் தவிர்த்து) என மனதைரியம் உள்ளவர்கள் பார்த்துவிட்டு சொல்லலாம். இவுங்க போட்டி போடுறது அவுங்களுக்குள்ள ஜெயிக்கிறதுக்காக என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மக்களை டிவி பார்க்கும் கெட்ட பழக்கத்திலிருந்து மீட்க அரசும், தனியார் டிவிக்களும் திட்டமிட்டு ரகசியமாக கூட்டு சேர்ந்து போடும் போட்டியே அது. அதில் ஓரளவு அவர்கள் வெற்றிபெற்றுவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

மேற்குறிப்பிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலேயும் தவறாமல் மூன்று மூன்று நடுவர்கள் (அவர்களை 'ஹானரபிள் ஜட்ஜ்' என்றுதான் அனைவரும் அழைக்கிறார்கள். ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் ஜ‌ட்ஜூக‌ளுக்கெல்லாம் கிடைக்கும் ம‌ரியாதை என்ன‌ ம‌ரியாதை? அதையெல்லாம் தூசு என்று சொல்லும‌ள‌வில் இவ‌ர்க‌ளின் தேஜ‌ஸும், அதிகார‌மும் நிக‌ழ்ச்சிக‌ளில் தூள் ப‌றக்கிறது. ஒரு டிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஜ‌ட்ஜ் ஒருவர் நிக‌ழ்ச்சியைப் பார்த்துவிட்டு, நாமெல்லாம் என்ன‌த்தை ப‌டித்துக்கிழித்தோம் என்று புல‌ம்பிய‌ப‌டி வேலையை ரிஸைன் செய்துவிட‌லாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.) இருப்பார்க‌ள். நாம் குறிப்பாக‌ இந்த‌ ஆடுற‌ நிக‌ழ்ச்சியைப் ப‌ற்றி பார்க்க‌லாம். ப‌ங்கு பெறும் ஜோடிக‌ள் (க‌ன்டெஸ்டென்ட்) ஆடி முடித்த‌வுட‌ன் ஜ‌ட்ஜ்க‌ளின் முடிவை எதிர்நோக்கி பாவ‌மாக‌ நிற்பார்க‌ள். அவ‌ர்க‌ள் ஆடிய‌து இவ‌ர்க‌ளுக்கு பிடித்திருந்த‌தோ அவ‌ர்க‌ள் பிழைத்தார்க‌ள்..! நீங்க‌ள் இதுவ‌ரை கேள்விப்ப‌ட்டிராத‌ வார்த்தைக‌ளிலெல்லாம் பாராட்டு ம‌ழையாக‌ பொழிவார்க‌ள்.

கிழிகிழினுகிழிச்சுட்டீங்க, பின்னிட்டீங்க‌, சூப்ப‌ரிட்டீங்க‌, வ‌றுத்திட்டீங்க‌, மார்வ‌ல‌ஸ், அவுட்ஸ்டான்டிங், மைன்ட்புளோயிங், ஸ்டேஜ்புளோயிங், ரூ.:ப்புளோயிங், .:பைய‌ரிங், ராக்கிங்..

என்ட்ரில‌ உள்ள‌ வ‌ரும்போது உங்க‌ சுண்டுவிர‌ல்ல‌ கொசு க‌டிச்சுது, அத‌ப்பாத்துட்டேன் நான். ஆனாலும் அதைப்பொறுத்துக்கிட்டு ஆடினீங்க‌.. எக்ஸெல‌ண்ட்.! குர‌ங்கு மாதிரி த‌வ்வும் போது உன்னோட‌ எக்ஸ்பிரெஷ‌ன் க‌ல‌க்க‌ல்டா, அந்த‌க்கும்மாங்குத்து ஸ்டெப்ஸ் போடும் போது அவ‌ கால‌ மிதிச்ச‌ப்பாத்தியா.. சூப்ப‌ர்டா.. என்ன‌ம்மா உன‌க்கு வ‌லிச்சிருக்குமே.. அதையும் பொறுத்துக்கிட்டு நீ அவ‌னுக்கு ஈடு குடுத்து த‌வ‌க்கா மாதிரி துள்ளி துள்ளி ஆடுனே பாத்தியா.. கிழிச்சிட்டீங்க‌..ரெண்டு பேரும். என்னா மாதிரி கொரியோகிரா.:பி பின்னீட்டிங்க‌டா.!

ஆட்ட‌ம் பிடிக்க‌வில்லையோ, அவ்ளோதான்..

என்ன‌ ஆச்சு? ஸோ பேட்.! உங்க‌கிட்ட‌ நிறைய‌ திற‌‌மை இருக்குது, அதை நீங்க‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வே இல்லை. அன்னிக்கு ப்ளூ க‌ல‌ர் ட்ர‌ஸ்ல‌ குடுத்தீங்க‌ளே ஒரு பெர்.:பாமென்ஸ், அதெல்லாம் ஒரு ஆர்டின‌ரி டான்ஸ‌ர்ஸ் குடுக்கிற‌ பெர்.:பாமென்ஸே இல்லை, அப்பிடி ஆடுன‌ நீங்க‌ளா இன்னிக்கு..?

ரெண்டாவது சாங்ல மூணாவது வரியில வாய‌ அசைக்க‌வேயில்ல‌..ட்ரெஸ் யாரு செல‌க்ஷ‌ன்? ம்? ஊதா டாப்ஸுல‌ ப‌ச்சைக்கோடு, ஒரே க‌ல‌ர் டிஸ்ட‌ர்ப‌ன்ஸ்..செட் பிராப்ப‌ர்டிய‌ யூஸ் ப‌ண்ண‌வேயில்லை. க‌டைசி பாட்டுக்கு அங்க‌ ஒரு பாறாங்க‌ல் இருந்துது பாத்தியா? அதை அவ‌ த‌ல‌மேல‌ நீ போட்டுருக்க‌ணும். கிளாஸா இருந்துருக்கும். (இப்ப‌டி ஒருவ‌ர் சொல்லிக்கொன்டிருக்கும் போதே இன்னொரு ஜ‌ட்ஜ் 'ஏழாவ‌து வ‌ரியை பாடும் போது கொட்டாவி வ‌ந்த‌து, ஆனா அட‌க்கிக்கிட்டாரு' என்று எடுத்துக்கொடுப்பார்.)

இது பிராப்ப‌ர்டி ர‌வுண்டுடா.. குடைய‌ வெச்சு அப்பிடி ஆட‌க்கூடாது, ந‌ட்டுக்கா நிப்பாட்டி நீ அது மேல‌ ஏறி நின்னுருக்க‌ணும்.கான்செப்ட் புரிய‌வேயில்ல‌. நீ குளிக்க‌ போம்போது அவ‌ன் எட்டிப்பாக்கிறான், ச‌ரியா.? இது என‌க்கு புரிஞ்சுடுச்சு.. ஆனா ஆடிய‌ன்ஸுக்கு புரியாதே..

என்னோட‌ மார்க் ஒம்போதே முக்கால்.

இவ்வாறாக‌ க‌ன்டெஸ்ட‌ன்டுக‌ளும், ஜ‌ட்ஜுக‌ளும் ப‌டுத்துறது ப‌த்தாதுனு ஒரு ஜோடி இதை தொகுத்து வ‌ழ‌ங்குவ‌தற்காக‌ இருப்பார்க‌ள். அடுத்து அவ‌ச‌ர‌மாக‌ பாத்ரூம் போக‌ப்போவ‌தைப்போல‌ சொம்பை இங்கிலீஷில் (ம‌ற‌ந்தும் த‌மிழ் பேச‌மாட்டார்) கொள‌ கொள‌வென‌ தொகுத்து வ‌ழ‌ங்குவார்.

மேலும் ஒரு கொடுமையாக‌ 5 நிமிட‌த்துக்கு ஒருமுறை 10 நிமிட‌த்துக்கு விள‌ம்ப‌ர‌ இடைவேளை (பிரேக்) வ‌ரும். (பொழுது போகாத‌ பொம்முவைப்போல‌ க‌டிகார‌த்தை வைத்துக்கொண்டு க‌ண‌க்கு ப‌ண்ணினேன். 120 நிமிட‌ நிக‌ழ்ச்சியில் 85 நிமிட‌ம் விள‌ம்ப‌ர‌ம் வ‌ருகிற‌து.)

நான் கொஞ்ச‌ம் கூட‌ மிகைப்ப‌டுத்தாம‌ல் சொல்லியிருக்கிறேன், பார்க்காதவர்கள் மேலும் தெரிந்துகொள்ள‌ டிவியை நாட‌வும். இப்போது விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

இப்பிடியா ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக‌ளில் ப‌ங்கேற்ப‌வ‌ர்க‌ள், ஜ‌ட்ஜுக‌ள் உட்பட அனைவரும் பெரும்பாலும் ஸ்டீரியோ டைப்பில் இய‌ங்குவார்க‌ள். இடையிடையே அழுகாச்சி நாட‌க‌ங்க‌ள் ந‌ட‌க்கும், சென்டிமென்ட் வ‌ச‌ன‌ங்க‌ள் இட‌ம்பெறும். செய‌ற்கைத்த‌ன‌மாக‌ இருக்கும்.

ஆனால்.. இவ்வ‌ள‌வு கொடுமையிலும் ஒரு ஆறுத‌லாக‌, நான் பார்த்த‌வ‌ரையில் ஓர‌ள‌வு இய‌ல்பாக‌வும், வெகுளித்த‌ன‌மாக‌வும், வெட்க‌த்தோடும், சிரித்த‌முக‌மாயும் க‌மென்டுக‌ளையும், தீர்ப்பையும் வ‌ழ‌ங்கும் ஜ‌ட்ஜாக‌ ர‌ம்பாதான் தெரிகிறார். அதோடு ஒருமுறை அவ‌ர் அனைவ‌ர் மாதிரியும் மிமிக் செய்து காண்பித்த‌போது அவ‌ர‌து ந‌கைச்சுவை உண‌ர்வும் மிளிர்ந்த‌து.

37 comments:

ச்சின்னப் பையன் said...

ஹாஹா....:-)))

ச்சின்னப் பையன் said...

பொழுது போகாத பொம்மு வாழ்க!!!

அவனும் அவளும் said...

ரம்பாவா ? சரி சரி.
தொடைல தாளம் போட்டுகிட்டே பாடு கேட்டீங்களா ?

வந்தியத்தேவன் said...

ஜோடி நம்பர் ஒன்னை விட மானாட மயிலாட பரவாயில்லை ஜோடி நம்ம்பர் ஒன்னில் அதிகம் சீன் போடுகிறார்கள் டிடியும் தீபக்கும் அடிக்கும் லொள்ளு சரியான ஓவர்.

ரம்பாவின் திற்மைபல இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. அவரைத் தமிழ்த் திரையுலகம் மீண்டும் பயன்படுத்தினால் இன்னொரு அழகிய லைலா பாடல் கிடைக்கும்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அண்ணி கவனத்திற்கு ; பார்த்துக்கங்க..
வேற ஓன்னும் சொல்ல நான் விரும்பல

வால்பையன் said...

சார்! ரம்பா சார்!
இன்னாமா இருங்காங்க பாருங்க சார்
ரம்பா சார்

தாமிரா said...

வாங்க ச்சின்னப்பையன் நன்றி.!
வாங்க அவனு/ளும் நன்றி.!
வாங்க வந்தியத்தேவன் நன்றி.!

நன்றி அப்துல்.! (எந்நேரமும் மாட்டிப்பாரா மாட்டாரானே சிந்திச்சுக்கிட்டிருப்பீங்களோ.. நல்ல ஆளுயா நீரு..)

வெட்டிப்பயல் said...

என்னல்லாம் ஆராய்ச்சி பண்ணறாங்க பாருப்பா...

தாமிரா said...

வாங்க வால்பையன் நன்றி.! (எல்லோரும் பாத்துக்கங்க,
இவுரு வால்பையன் சார்..
மேல பாத்தீங்கல்ல ச்சின்னப்பையன் சார்..
பெரியாளுங்க நிறைய பேரு நம்ப கஷ்டமர்னு சொன்னா நம்புங்க.!)

தாமிரா said...

வாங்க வெட்டிப்பயல் நன்றி.! (பாருங்க‌ அடுத்து வெட்டிப்ப‌யல் சார்.!)

TBCD said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அருமை...!!!!!

விஜய் ஆனந்த் said...

// ச்சின்னப் பையன் said...
பொழுது போகாத பொம்மு வாழ்க!!! //

இன்னொரு தபா கூவிக்கறேன்...

விஜய் ஆனந்த் said...

அண்ணே...பூந்து வெளயாடறீங்க!!!ஏதாவது கிச்சுகிச்சு லேகியம் சாப்டீங்களா???

அது சரீரீரீரீ....ரம்பாவ இப்படி ரசிக்கறீங்களே...ஒரு வேள நீங்க அந்த காலத்து ஆளோ????

சந்தனமுல்லை said...

ம்ம்...உண்மைதான். சில சமயங்களில் அது வெகுளித்தனமா அல்லது ஓவர் கொஞ்சலா/அலட்டலா என
கன்ஃப்யூஷன்!! :-) ஆனா, கொஞ்சம் இயல்பா இருக்கற மாதிரி ஒரு பீலிங் வருவது உண்மைதான்!!

பரிசல்காரன் said...

வாழ்கா ரம்பா!

வளர்க அவரது

பரிசல்காரன் said...

ஐயையோ.. முழுசா அடிக்கறதுக்குள்ள பப்ளிஷ் ஆயிடுச்சு!

வளர்க அவரது கலைச்சேவைன்னு சொல்லவந்தேன்..

பரிசல்காரன் said...

அவங்க இமிடேட் பண்ணினதை நானும் பார்த்தேன். அபாரமா இருந்தது!!!
(அவங்க இமிடேட் பண்ணினது!)

ரம்பாவுக்காகவே நான் மா.ம. பார்ப்பேன். மடை திறந்த வெள்ளமாய் அவங்க பேசறதும், மனம் திறந்து அவங்க பாராட்டறதும்..

அடா..அடா... என்னா அழகு!

மங்களூர் சிவா said...

அண்ணாத்த இந்த பதிவ பத்தி சொல்லணும்னா

கிழிகிழினுகிழிச்சுட்டீங்க, பின்னிட்டீங்க‌, சூப்ப‌ரிட்டீங்க‌, வ‌றுத்திட்டீங்க‌, மார்வ‌ல‌ஸ், அவுட்ஸ்டான்டிங், மைன்ட்புளோயிங், ஸ்டேஜ்புளோயிங், ப்ளாக் ப்ளோயிங், ப்ளாகர் ப்ளோயிங், கூகுள் ப்ளோயிங், ஜிமெயில் ப்ளோயிங், ரூ.:ப்புளோயிங், .:பைய‌ரிங், ராக்கிங்..

மங்களூர் சிவா said...

மானாட மயிலாடவில் வரும் சூப்பர் பிகர் சுஜி பாலாவை விட்டு நடுவர் ரம்பாவை பற்றி சொல்லுவதில் இருந்தே தெரிகிறது தாமிரா மாம்ஸ் உங்களுக்கு ரொம்பாஆஆஆ வயசுஆயிடிச்சி

:)))))))))))))

மங்களூர் சிவா said...

/
க‌டைசி பாட்டுக்கு அங்க‌ ஒரு பாறாங்க‌ல் இருந்துது பாத்தியா? அதை அவ‌ த‌ல‌மேல‌ நீ போட்டுருக்க‌ணும். கிளாஸா இருந்துருக்கும்.
/

அந்த மூணு ஜட்ஜ் தலைமேல போட்டாலாச்சும் ஒரு விடிவுகாலம் பிறக்கும் அந்த நிகழ்ச்சில இருந்து!

Saravana Kumar MSK said...

என்னது ரம்பாவா?? யாருங்க்னா அது??
பழையா நாயகியா??

Saravana Kumar MSK said...

என்னங்கணா "சுப்ரமணியபுரம்" சுவாதியை பார்க்கவேண்டிய காலத்தில்..

சுவாதி.
சுவாதி..
சுவாதி..
சுவாதி..
சுவாதி..

தாமிரா said...

வந்தவுங்க எல்லோருக்கும் வணக்கம், சீரியஸாகவே இந்த மக்களை புரிஞ்சுக்க முடியவில்லை, "ரமாவுக்கு.." பதிவு சூடான பதிவில் வரவேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் இது சூடாகிவிட்டது. எனினும் நன்றி. ஒண்ணுமே புரிய‌லே ஒலகத்திலே..

தாமிரா said...

வாங்க டிபிசிடி, நன்றி.! (உங்களை பதிவுக்கு வரவைப்பதற்கான ஐடியா கிடைத்துவிட்டது. குஷ்பூ, ரோஜா, மீனா ‍இப்பிடி எழுதுனா மாட்டிப்பீங்க.. அப்படித்தானே..)

வாங்க விஜய், நன்றி.! (//ஏதாவது கிச்சுகிச்சு லேகியம் சாப்டீங்களா???// மனம்மகிழ வைத்த பாராட்டு.!)

வாங்க முல்லை, நன்றி.! (புரொபைலில் இருப்பது பப்பு பிறந்தப்போ எடுத்த படமா?)

வாங்க பரிசல், நன்றி.! (//மனம் திறந்து அவங்க பாராட்டறதும்..// உங்க‌ நேர்மை ந‌ம்புறா மாதிரி இல்லையே..)

தாமிரா said...

வாங்க மங்களூர், நன்றி.! (//தாமிரா மாம்ஸ் உங்களுக்கு ரொம்பாஆஆஆ வயசுஆயிடிச்சி..// நான் ஜொள் விடவில்லை, யதார்த்தமாக சொல்லவந்தேன் என்பதை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன், எனக்கு பிடித்த நடிகைகள் வரிசையில் ரம்பா இருந்ததில்லை. என் வயதை தெரிந்துகொள்ள உதவும் வகையில் ஒரு பதிவை விரைவில் வெளியிடுகிறேன். அதைவிட சிம்பிளான வழி என் ப்ரொபைலுக்கு செல்லலாம். ‍இது பின்னூட்டத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்...)

வாங்க சரவணா, நன்றி.! (சுவாதி, சுவாதி என முனகுவதைப் பார்க்கும் போது முக்கியமான ஒரு பிரிஸ்கிரிப்ஷன் சொல்லவேண்டியுள்ளது. எனது தங்கமணி சம்பந்தப்பட்ட பதிவுகளை தினமும் காலையில் சாப்பாட்டுக்கு முன்னர் ஒரு பதிவும், இரவு சாப்பாட்டுக்கு பின்னர் இரண்டு பதிவுகளும் படிக்கவும்..!)

Anonymous said...

http://thatstamil.oneindia.in/movies/heroines/2008/08/26-ramba-hospitalised-tried-to-commit-suicide.html

Syam said...

:-)

குசும்பன் said...

சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!
சார் ரம்பா சார்!!!

பாபு said...

தாமிரா ,மக்கள் டிவி பாருங்க,சில நிகழ்ச்சிகள் நன்றாகவே இருக்கும்.
பயணம் என்று ஒரு programme ,M.R.ராதா MGR ஐ சுட்டது பற்றிய ஒரு நிகழ்ச்சி என்று பார்க்க கூடியதாக சில உண்டு

முகவை மைந்தன் said...

ம்ம்ம்ம்.. ரம்பா!!!!

இன்னிக்கே போயி எல்லா பகுதிகளையும் தரவிறக்கம் பண்ணிடறேன்.

@விஜய் ஆனந்த்
//ஒரு வேள நீங்க அந்த காலத்து ஆளோ????//

ரம்பாவை ரசிக்க தெம்பா இருந்தாப் போதும் ;-)

Thamizhmaangani said...

நானும் ரம்பா செய்த அந்த நகைச்சுவை episodட்டை பார்த்தேன்..சான்ஸே இல்லங்க...ரொம்ப நல்லா இருந்துச்சு. ramba is one real talented girl!

தமிழன்... said...

\
ஓர‌ள‌வு இய‌ல்பாக‌வும், வெகுளித்த‌ன‌மாக‌வும், வெட்க‌த்தோடும், சிரித்த‌முக‌மாயும் க‌மென்டுக‌ளையும், தீர்ப்பையும் வ‌ழ‌ங்கும் ஜ‌ட்ஜாக‌ ர‌ம்பாதான் தெரிகிறார்.
\
எனக்கும் அப்படித்தான் இருக்கு...

தமிழன்... said...

மங்களூர் சிவா said...
\
அண்ணாத்த இந்த பதிவ பத்தி சொல்லணும்னா

கிழிகிழினுகிழிச்சுட்டீங்க, பின்னிட்டீங்க‌, சூப்ப‌ரிட்டீங்க‌, வ‌றுத்திட்டீங்க‌, மார்வ‌ல‌ஸ், அவுட்ஸ்டான்டிங், மைன்ட்புளோயிங், ஸ்டேஜ்புளோயிங், ப்ளாக் ப்ளோயிங், ப்ளாகர் ப்ளோயிங், கூகுள் ப்ளோயிங், ஜிமெயில் ப்ளோயிங், ரூ.:ப்புளோயிங், .:பைய‌ரிங், ராக்கிங்..
\

ரிப்பீட்டு...:)

தமிழன்... said...

மங்களூர் சிவா said...
\
மானாட மயிலாடவில் வரும் சூப்பர் பிகர் சுஜி பாலாவை விட்டு நடுவர் ரம்பாவை பற்றி சொல்லுவதில் இருந்தே தெரிகிறது தாமிரா மாம்ஸ் உங்களுக்கு ரொம்பாஆஆஆ வயசுஆயிடிச்சி

:)))))))))))))
\

ரிப்பீட்டு...:))

எல்லோருக்கும் இந்த சுஜிபாலாவுல ஒரு கண்ணாத்தான்யா இருக்கு...

தாமிரா said...

வாங்க ஷ்யாம், நன்றி.!
வாங்க குசும்பன், நன்றி.! (பாத்து.. விக்கிக்க போவுது..)
வாங்க பாபு, நன்றி.! (ஒங்க சின்ஸியாரிடிய பாத்து புல்லரிக்கிறேன்)
வாங்க முகவை, நன்றி.! (சரியா சொன்னீங்க..)

தாமிரா said...

வாங்க மாங்கனி, நன்றி.! (நிறைய பேரு அதை பாத்திருக்காங்க, ரசிச்சிருக்காங்கனு தெரியுது..)
வாங்க தமிழன், ந‌ன்றி.! (ஏதாவது சுஜி ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறதா இருந்தா சொல்லுங்க..)

பாரிஸ் திவா said...

சூப்பரு