Thursday, August 14, 2008

PIT -க்கு நான் கொடுத்தது

முதலில் நமக்கு எதுக்கு இந்த விபரீத விளையாட்டு என்றுதான் தேமே என்று என் வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் எல்லோரும் ஆர்வமாய் கலந்து கொள்வதைப்பார்த்து ஆசை எழ இதோ என் புகைப்படங்களையும் ஏற்றிவிட்டேன். பார்த்து கருத்துக்களை சொல்லிவிட்டுப்போகவும்.

1. காமிரா வாங்கிய புதிதில் விபரீதமான கோணங்கள், விபரீதமான லைட்டிங் என பரிசோதனை செய்துகொண்டிருந்த‌ போது ஒரு நண்பனை இரவில் குறைந்த வெளிச்சத்தில் கிளிக்கியது.

2. சென்ற தீபாவளியின் போது தம்பி மத்தாப்பை கொளுத்தி ஆரவாரம் செய்த போது கிளிக்கியது.
3. ஒரு உணவகத்தில் மேஜை மீது ஏறி மருமகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது கிளிக்கியது.
4. வீட்டு வாசலில் இருந்த பூச்செடியில் ஒரு மதிய நேரத்தில் தேனீக்கள் வட்டமிட்டுக்கொண்டிருந்த போது கிளிக்கியது, தேனீயைத்தவிர எல்லாம் தெரிகிறது. இதைத்தான் போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன். (என்னே உன் ரசனை என்கிறீர்களா?)

11 comments:

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

கடைசி படத்தப் பார்த்து மார்டன் ஆர்ட்டுன்னு நினைச்சேன்ண்ணே.
அருமை!

கயல்விழி said...

முதல் படம் ரொம்ப வித்யாசம், கடைசி படம் ஓவியம் மாதிரி அழகாக இருக்கிறது.

சூர்யா said...

முதல் படம் உங்களிடம் நிறைய திறமைகள் ‘ஒளிந்து' கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. கடைசிப் படத்துல அந்த திறமையெல்லாம் காட்டி மிரட்டிடிங்க...

அப்புறம் நடுவால இருக்கற படத்தப்பத்தி சொல்லைன்னா எப்படி.. அதுவும் கலக்கல்ஸ்..

தாமிரா said...

சின்ன காலா இருந்தாலும் நல்லாருக்குதுடா..! (கொஞ்சம் வாழ்த்துக்கள் என்றாலும் உச்சிக்குளுந்து போச்சுங்க.)

தாமிரா said...

நன்றி அப்துல்.!
நன்றி கயல்விழி.!
நன்றி சூர்யா.!
(உங்க கருத்துக்களைப் பார்க்கும் போது நான் அனுப்பிச்சது இருக்கிறதில் சரியான படம்தான் என்று நினைக்கிறேன். ஹைய்ய்ய்ய்..யா.!)

ஜி said...

Unga ella postum superaa irukuthu.. innum neraya ezuthi kalakkunga.. :))

BTW... PIT pottikkum vaazththukkal.. :))

தாமிரா said...

நன்றி ஜி.! அடிக்கடி வாங்க.

மங்களூர் சிவா said...

உங்க எச்சரிக்கை பதிவுகள், திருட்டு vcd ஒழிப்பது, முதல் நாளே ப்ளாப் ஆன படம், தங்கமணிகளைத் திருத்துவது கொஞ்சமேனும் சாத்தியமா? பதிவுகள் எல்லாம் சூப்பர்.

இந்த பதிவ பத்தியா? என்ன சொல்றதுன்னே தெரியலைங்க
:))))

தாமிரா said...

வாங்க சிவா.! (ந‌ல்லால்லைங்கிறீங்களா.. இடையிடையே கூட வேண்டாங்கிறீங்களா.. சொல்லுங்க சிவா. உங்கள் பதில் முக்கியம் எனக்கு.)

மங்களூர் சிவா said...

அடடா ஒன்னும் சொல்லலைன்னா நல்லா இல்லைன்னு அர்த்தமா???

எதும் சொல்ற அளவுக்கு எனக்கு நாலெஜ் பத்தலைப்பா :(

தாமிரா said...

ஓகே..ந‌ன்றி சிவா! (உள்ளூர சந்தேகமாகவே உள்ளது, ஏன்னா எனக்கு மட்டும் என்ன நாலெட்ஜ் இருக்குதுன்னு நினைச்சுப்பார்த்தேன்..)