Friday, September 26, 2008

1996 : ஒரு காதல் கவிதை

ஒரு குட்டியூண்டு பதிவு போடணும்னு ஆசை. ஆனா வெயிட்டிங்ல இருக்கிற விஷயங்கள்லாம் ஜவ்வு மாதிரி ரொம்ப டைம் எடுக்கும். நம்ப 'முதல் முத்தம்' பதிவில் வேறு கட்டிட‌ வேலை நடந்துகொண்டிருப்பதால் ஒரு குட்டிக்கவிதை போடுறேன். கோச்சுக்காம படிச்சுட்டு பின்னூட்டம் போட்டுட்டு போயிடுங்க.. அப்பிடியே மறக்காம லெப்ட்ல ஓட்டும் போட்டுட்டு போங்க.. நாளைக்கு ஒரு பெரிய பதிவில் சந்திப்போம்.


எப்போதாவது இரவிலே விழித்துக்கொள்கிறேன்

இந்த வெள்ளை விடிவிளக்கு

உன் மேனியெங்கும் விழித்துக்கொண்டிருக்கிறது

இறக்கை போல முந்தானை உன் தோளிலிருந்து துவ‌ங்கி வழிகிறது

மீண்டும்

நான் உறங்குவதற்குள்

விடிந்துபோய்விடலாம்!

20 comments:

Test said...
This comment has been removed by the author.
Anonymous said...

//வெள்ளை விடிவிளக்கு
உன் மேனியெங்கும் விழித்துக்கொண்டிருக்கிறது//

ரசிச்சேன் தாமிரா.

வால்பையன் said...

//அப்பிடியே மறக்காம லெப்ட்ல ஓட்டும் போட்டுட்டு போங்க..//

ஓட்டு போட நான் அக்காவும் அல்ல, பிகரும் அல்ல அதனால் நோ ஓட்டு.

வால்பையன் said...

//மீண்டும்
நான் உறங்குவதற்குள்
விடிந்துபோய்விடலாம்!//

ரொம்ப நேரம் தூங்காம பாத்துகிட்டே இருப்பேன்னு சொல்ல வர்ரிங்க தானே!
ஆனாலும் உங்களுக்கு கல்லு மனசுங்க விடிய விடியவா பாத்துகிட்டே இருபிங்க

T.V.Radhakrishnan said...

:-)))))))))

rapp said...

போட்டிக்கவுஜ/ எதிர்கவுஜன்னு எதையாவது தட்டி விட்டிரவா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................

rapp said...

எங்க தல ஜே.கே.ரித்தீஷ லிஸ்ட்ல சேக்காததால, கன்னாபின்னாவென கண்டிச்சி, ஓட்டெடுப்பில் கலந்துக்காம வெளிநடப்பு செய்கிறேன்.

இராப்,
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

விஜய் ஆனந்த் said...

கமெண்ட்டு போட்ட அல்லாருக்கும் மறுக்கா கூவிக்கிறேன்....

விஜய் ஆனந்த் said...

எல்லாம் சரிதான்...இங்க ஒரு ப்ப்பெரிய மனுஷன் 10,000 ஹிட்டடிக்குறவங்களுக்கு பரிசு தர்றதா மார் தட்டினாரே...எங்கப்பா அவரு???

முரளிகண்ணன் said...

:-))))))))))))))))))

புதுகை.அப்துல்லா said...

rapp said...
எங்க தல ஜே.கே.ரித்தீஷ லிஸ்ட்ல சேக்காததால, கன்னாபின்னாவென கண்டிச்சி, ஓட்டெடுப்பில் கலந்துக்காம வெளிநடப்பு செய்கிறேன்.

இராப்,
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

//

தலைவி வழியில் நானும் செல்கிறேன்.

பொருளாளர்
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

கார்க்கி said...

//எங்க தல ஜே.கே.ரித்தீஷ லிஸ்ட்ல சேக்காததால, கன்னாபின்னாவென கண்டிச்சி, ஓட்டெடுப்பில் கலந்துக்காம வெளிநடப்பு செய்கிறேன்.

இராப்,
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்//

இதை கண்ணாபிண்ணாவென்று ஆட்டோவில் வழி மொழிகிறேன்..

கார்க்கி said...

//எல்லாம் சரிதான்...இங்க ஒரு ப்ப்பெரிய மனுஷன் 10,000 ஹிட்டடிக்குறவங்களுக்கு பரிசு தர்றதா மார் தட்டினாரே...எங்கப்பா அவரு???/

இதே மேட்டர இன்னும் எங்கெல்லாம் போடப் போறிங்க விஜய்

கார்க்கி said...

/குட்டிக்கவிதை போடுறேன்.//

எங்க எங்க எங்க?????????????

உலகத்திலே குட்டி கவிதைய நான் சொல்றேங்க...


கார்க்கி...

narsim said...

//உறங்குவதற்குள் விடிந்துபோய்விடலாம்!//

!!!

தாமிரா said...

யாருபா அது மொத கமென்டும் போட்டுட்டு அழிச்சுட்டும் போனது? சரி நல்லாருங்கோ..

ர‌ச‌னைக்கு ந‌ன்றி வேலன்.!
வாங்க வால்.!
வாங்க டிவிஆர்.!
வாங்க ராப்.! (நானும் மொதல்ல அப்பிடிதான் ரோசனை பண்ணினேன். அப்புறம் மத்த ஆருக்குமே ஒரு ஓட்டு கூட வுழாம தேர்தல் சப்புனு போயிரும்கறதால அர மனசோட தவிர்த்தேன். இன்னா நா சொல்றது சரிதானே?)

தாமிரா said...

வாங்க விஜய்.! (10000 மாவது ஹிட் செய்த நபர் இன்னும் ஸ்கிரீன் ஷாட்டோடு தொடர்புகொள்ளவில்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். 9000+ நடந்துகொண்டிருக்கும்போதே நம்ம குசும்பன் அண்ணாச்சி ஸ்கிரீன் ஷாட்டில் சில குல்மால் வேலைகள் செய்து பரிசைப்பெற முயற்சித்து கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்)

தாமிரா said...

வாங்க முரளி.!
வாங்க புதுகை.!
வாங்க கார்க்கி.!
வாங்க நர்ஸிம்.!

சந்தனமுல்லை said...

//இறக்கை போல முந்தானை உன் தோளிலிருந்து துவ‌ங்கி//

மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை!!
நல்லாருக்கு தாமிரா!

தாமிரா said...

வாங்க முல்லை, நன்றி! பெண்களும் என் கவிதையை ரசிப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது.. ஹிஹி.. ஒரே சந்தோஷம்.!