Tuesday, September 30, 2008

க‌டைசியாக‌ வாசித்த‌ 3 புத்த‌க‌ங்க‌ள்

இந்த சப்ஜெக்டில் சீரியஸா ஒரு பதிவு போடலாம்னு எனக்கு கொஞ்ச‌ நாளா ஒரு நெனப்பு. அப்பால ந‌ல்ல‌ ரோச‌னை ப‌ண்ணி பாத்துட்டு நமக்கு அதுலாம் வராதுனு முடிவு பண்ணி வழக்கமான ஸ்டைலிலேயே போட்டுரலாம்னு முடிவு ப‌ண்ணி அதையும் இன்னிக்கே போட்டுற‌லாம்னு முடிவு ப‌ண்ணி.. (சே.. எத்தனை.. முடிவு ப‌ண்ணி..)

நான் படிச்ச கடேசி 3 புத்தகங்கள் இதுதாம்ப்பா.. (அப்பிடினா இனிமே ப‌டிக்க‌மாட்டேன்னு அர்த்த‌ம் வ‌ருதில்லை? அப்ப‌ எப்பிடிதான் எழுதுற‌து.?)

1.விஞ்ஞானச் சிறுகதைகள்.
சுஜாதா
வெளியீடு : உயிர்மை ப‌க்க‌ங்க‌ள் : 464 விலை : Rs.225

விம‌ர்ச‌ன‌ம் : உஸ்ஸ்ஸ்.. யாருகிட்ட‌.?

2.நெடுங்குருதி
எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
வெளியீடு : உயிர்மை ப‌க்க‌ங்க‌ள் : 472 விலை : Rs.275

விம‌ர்ச‌ன‌ம் : வெயிலும், மழையும், காற்றும், பனியும் மாறி மாறி உச்சவேகத்தில் பொழிகிறது. வேம்பலை என்ற தென் தமிழகத்துக் கிராமமும் அதன் மனிதர்களும் தனி உலகமாய் நம் கண்முன்னே விரிகிறார்கள். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை மனிதர்களையும் நாம் காண்கிறோம். அவர்களின் துக்கமும் சந்தோஷமும் நம்முடையதைப்போல உடனிருந்து உணர்கிறோம். வேம்ப‌லையை இழந்து தவிப்ப‌வ‌ர்க‌ள் அதைக்க‌ண்டு ஆன‌ந்திக்க‌லாம், அத‌ன் புழுதித்தெருக்க‌ளில் ஓடி விளையாட‌லாம். வேம்ப‌லையைத் தெரியாத‌வ‌ர்க‌ள் சில‌ ப‌த்தாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் அவ‌ர்க‌ள் பெற்றோரோ அல்ல‌து அவ‌ர்க‌ளை பெற்ற‌வ‌ர்க‌ளோ வாழ்ந்த‌ இட‌த்தையும், வாழ்க்கையையும் தெரிந்துகொள்ள‌லாம், வாழ்ந்து பார்க்க‌லாம்.

3.காக்டெயில்
சுதேச‌மித்திர‌ன்
வெளியீடு : யுனைடெட் ரைட்ட‌ர்ஸ் ப‌க்க‌ங்க‌ள் : 222 விலை : Rs.90

விம‌ர்ச‌ன‌ம் : கையைப்புடிச்சி சும்மா விறுவிறுன்னு கதை நடக்குற இடத்துக்கே நம்மை இழுத்துக்கொண்டு போகும் நடை, ஜாலியான ஒரு தோழனைப்போல ரைட்டரும் உடன் வருகிறார். என் சிற்றறிவுக்கு எட்டியவரை பழம்பெரும் எழுத்தாளர் தேவன் வெற்றிகரமாக கையாண்ட எழுத்துநடை. பின்னர் பலரும் முயன்று முழு வெற்றி காணாது போன அந்த ஸ்டைல் சுதேசமித்திரனிடம் தளும்பி நிற்கிறது. கிளைமாக்ஸில் கொஞ்சம் பின்நவீனத்துவ ஸ்டைலில் மண்டை காயவைத்தாலும் நான் மிக ரசித்த நாவல் காக்டெயில். மேலும் நாவலின் அனைத்து பக்கங்களிலும் மது ஊற்றெடுத்து பெருகுகிறது. எத்தனை எத்தனை வகைகள்? எத்தனை எத்தனை இடங்கள்? மாற்றுக்கோணத்தில் எதை எதை.. எப்படி எப்படி அடிப்பது என்பதற்கான விரிவான கைடாகவும் இந்த நாவலை நாம் கொள்ளலாம்.

இவைய‌னைத்துமே சென்ற‌ ஜ‌ன‌வ‌ரி சென்னை புத்த‌க‌த்திருவிழாவில் வாங்கிய‌வை. இப்ப‌தான் ப‌டிச்சு முடிக்க‌ முடிஞ்சுது. இன்னும் ரெண்டு புக் இருக்குது, அதை முடிக்க‌வும் அடுத்த‌ ஜ‌ன‌வ‌ரி வ‌ருவ‌த‌ற்கும் ச‌ரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

34 comments:

தமிழ் பிரியன் said...

பெரிய பெரிய புத்தகங்களெல்லாம் படிக்கிறீங்க போல இருக்கு.. வாழ்த்துக்கள்! நமக்கு இந்த புத்தக வாசனை ஒத்துக்காது.

விஜய் ஆனந்த் said...

:-)))..

விஜய் ஆனந்த் said...

// அப்பால ந‌ல்ல‌ ரோச‌னை ப‌ண்ணி பாத்துட்டு நமக்கு அதுலாம் வராதுனு முடிவு பண்ணி வழக்கமான ஸ்டைலிலேயே போட்டுரலாம்னு //

இப்படி சொல்லியிருக்கறதால, நானும் வழக்கமான ஸ்டைலிலேயே கேக்குறேன்...

1) புக் விலையெல்லாம் கரெக்டா போட்ருக்கீங்களே....யாருகிட்ட கேட்டீங்க????

2) தேவன் அய்யாவின் எழுத்துக்கள் மாதிரின்னு சொல்லிட்டு, கூடவே உஷாரா 'பழம்பெரும்' போட்டதுல இ்ருக்க உள்குத்து என்ன???

3) அப்போ நீங்க மெய்யாலுமே புத்தகங்கள்லாம் படிப்பீங்களா???

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எஸ் ராமகிருஷ்ணனின் முக்கியமான புத்தகம் நெடுங்குருதி. நீங்கள் அவருடைய சிறுகதைத் தொகுதிகளையும் (+ யாமம் போன்றவற்றையும்) வாசிக்கலாம்.

இணையத்திலும் அவர் இப்போது தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்!

அப்புறம்... அந்த சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளில் பலவும் குப்பையே :(

லதா said...

தேர்தலில் அகிலாண்ட நாயகன் ஜேகேஆர் அவர்கள் பெயரைச் சேர்க்காத வலைப்பதிவர் தாமிரா அவர்களின் சூழ்ச்சியை வன்மையாகக் கண்(ண)டிக்கிறோம்.
;-)

பரிசல்காரன் said...

எல்லாமே உங்களுக்கு மூணுதானா? அது ஏன்?

Anonymous said...

சுதேசமித்திரன் அருமையா எழுதுவார். அவர் எழுத்துக்கள் பிடிக்க இன்னோரு காரணம் எனக்கு சின்ன வயசில இருந்து அவரைத்தெரியும். அண்டை வீட்டுக்காரர். வித்தியாசமான சிந்தனைகள் கொண்டவர். அவர் எழுதின அப்பா கவிதைத்தொகுப்பு கிடைச்சா படிங்க.

பாபு said...

"நான் படிச்ச கடேசி 3 புத்தகங்கள் இதுதாம்ப்பா.. (அப்பிடினா இனிமே ப‌டிக்க‌மாட்டேன்னு அர்த்த‌ம் வ‌ருதில்லை? அப்ப‌ எப்பிடிதான் எழுதுற‌து.?)"

"நான் சமீபத்தில் படித்த புத்தகங்கள்" என்ற வாக்கியம் o.k வா?

கார்க்கி said...

//விஜய் ஆனந்த் said...

இப்படி சொல்லியிருக்கறதால, நானும் வழக்கமான ஸ்டைலிலேயே கேக்குறேன்...

1) புக் விலையெல்லாம் கரெக்டா போட்ருக்கீங்களே....யாருகிட்ட கேட்டீங்க????//

நீங்க யாருகிட்ட சகா கேட்டு தெரிஞ்சிகிட்டீங்க??????

//3) அப்போ நீங்க மெய்யாலுமே புத்தகங்கள்லாம் படிப்பீங்களா??//

அப்ப இவையெல்லாம் மெய்யாலுமே புத்தகங்களா? அப்படியே பொய்யான புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என சொல்லவும்

@தாமிரா,

பேசினபடி பேமென்ட்டை கேஷாக கொடுக்கவும்

கார்க்கி said...

//லதா said...
தேர்தலில் அகிலாண்ட நாயகன் ஜேகேஆர் அவர்கள் பெயரைச் சேர்க்காத வலைப்பதிவர் தாமிரா அவர்களின் சூழ்ச்சியை வன்மையாகக் கண்(ண)டிக்கிறோம்.
;-)//

தலைவி ராப் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..

கார்க்கி said...

//பரிசல்காரன் said...
எல்லாமே உங்களுக்கு மூணுதானா? அது ஏன்?
/

ஆமாம்.. நானும் மூனாவது ஆளாக கேட்கிறேன்.. ஏன் சகா?

கார்க்கி said...

//சுதேசமித்திரன் அருமையா எழுதுவார். அவர் எழுத்துக்கள் பிடிக்க இன்னோரு காரணம் எனக்கு சின்ன வயசில இருந்து அவரைத்தெரியும். அண்டை வீட்டுக்காரர். வித்தியாசமான சிந்தனைகள் கொண்டவர். அவர் எழுதின அப்பா கவிதைத்தொகுப்பு கிடைச்சா படிங்க./

நல்ல வேளை நீங்க இப்போ மயிலாப்பூர்ல இல்ல.. அங்கதான் ஃபாரின் சரக்கு இருக்கு..

வால்பையன் said...

//இந்த சப்ஜெக்டில் சீரியஸா ஒரு பதிவு போடலாம்னு எனக்கு கொஞ்ச‌ நாளா ஒரு நெனப்பு.//

சீரியஸான புக்கு படிச்சா போற்றலாமே

வால்பையன் said...

//விஞ்ஞானச் சிறுகதைகள்.//

அருமையான புத்தகம், ஒவ்வொரு கதையும் ஒரு சினிமாவுக்கு சமம்,
அதிலும் இன்று நினைத்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கதைகள் அப்புத்தகத்தின் மணிமகுடம்

வால்பையன் said...

//நெடுங்குருதி
எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்//

யாமம் படித்த நறுமணமே!? இன்னும் என்னைவிட்டு போகவில்லையாதலால் அவரது மற்ற புத்தகங்கள் எதுவும் இன்னும் படிக்கவில்லை

வால்பையன் said...

//காக்டெயில்
சுதேச‌மித்திர‌ன்//

இந்த புத்தகமும் இன்னும் படிக்கவில்லை, பெயருக்காகவும்!? உங்கள் விமர்சனத்துக்காகவும் படிக்கலாம் என்று தோன்றுகிறது

வால்பையன் said...

//சென்ற‌ ஜ‌ன‌வ‌ரி சென்னை புத்த‌க‌த்திருவிழாவில் வாங்கிய‌வை. //

இந்த மூன்று புத்தகங்கள் படிப்பதற்கே உங்களுக்கு ஒன்பது மாதங்களா

வால்பையன் said...

//அதை முடிக்க‌வும் அடுத்த‌ ஜ‌ன‌வ‌ரி வ‌ருவ‌த‌ற்கும் ச‌ரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.//

நீங்க முடிக்காட்டியும் ஜனவரி வரும்

வால்பையன் said...

//நமக்கு இந்த புத்தக வாசனை ஒத்துக்காது.//

மூக்க பொத்திட்டு சரக்கடிக்கிற மாதிரி, மூக்க பொத்திட்டி படிக்க வேண்டியது தான்

வால்பையன் said...

//அந்த சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளில் பலவும் குப்பையே//

நானெல்லாம் நல்ல குப்பை பொறுக்கியாக்கும்

அறிவன்#11802717200764379909 said...

\\அப்புறம்... அந்த சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளில் பலவும் குப்பையே :(\\

சுந்தர்,உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?

திமலா மற்றும் காலயந்திரம்(?)-தொல்காப்பியரைச் சந்திக்கும் கதைகள் மிகச் சிறந்தவை என்பது என் எண்ணம்..

ஆமாம்..யாமத்தின் முடிவுதான் என்ன சாமி..யாராவது சொல்லுங்கப்பு...

அவ்வளவு நன்றாகக் கதை சொல்லிவிட்டு எல்லாவற்றையும் தொங்கவிட்டாற் போன்றிருக்கிறது !!!!

அப்புறம்..தாமிரா,இரண்டு புத்தகங்கள் அடுத்த ஜனவரி வரைக்குமா?

இந்த ஸ்பீடில் படித்தால் புத்தகக் கண்காட்சிப் புத்தகங்கள் விற்பது எப்படி???????

மங்களூர் சிவா said...

பெரிய பெரிய புத்தகங்களெல்லாம் படிக்கிறீங்க போல இருக்கு.. வாழ்த்துக்கள்! நமக்கு இந்த புத்தக வாசனை ஒத்துக்காது.

தாமிரா said...

என்னடா இப்பிடி ஓர் தலைப்பில் பதிவு போடுறோமே, எப்படி ரியாக்ஷன் இருக்குமோனு நினைச்சேன். ஒருவகையில சரிதான் 100 ஹிட்ஸ் கூட வந்தாமாதிரி தெரியல. குறைந்த பட்சம் நல்ல படியாக பின்னூட்டங்கள் வந்து வயிற்றில் பாலை வார்த்தன. மூன்று நாட்களாக வேலையில் பளு என்பதால் யாருக்கும் பின்னூட்டமிடமுடியவில்லை, சிலரைத்தான் படிக்கவும் முடிந்தது. நானும் மூன்று நாட்களுக்கு பின்னர் நேற்று அவசரமாக இந்த பதிவை அரங்கேற்றிவிட்டு சென்றேன். நன்றி நண்பர்களே.

யார் பதிவுக்காவது போய் கும்மியடித்தால் தேவலாம் போல இருக்கிறது. வசதியிருப்பவர்கள் 4 மணிக்கு மேல் அழைக்கவும்.

தாமிரா said...

வாங்க தமிழ்.! (வெடி தேங்காய் இப்போதான் படித்தேன். ரொம்ப சுவை.! பழைய நினைவுகளை கிளறியது)

வாங்க விஜய்.! (நீங்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சீங்க, இப்ப தனி மெயிலுக்கு வர்றவங்க கூட சித்தப்பா, பெரிப்பானு கூப்பிடுறாங்க.)

வாங்க ஜ்யோவ்ராம்.! (முதல் வருகைனு நினைக்கிறேன்.. நன்றி.! யாமம் இன்னும் இல்லை. ஆனால் உயிர்மை வெளியீடான ஒரு பெரிய சிறுகதைத்தொகுதி படித்திருக்கிறேன். எதையாவது பற்றி நினைவு கூறலாம்னா ஞாபகம் இருந்து தொலைக்கமாட்டேன் என்கிறது.)

தாமிரா said...

வாங்க லதா.! (ப‌தில் முந்தைய‌ ப‌திவுக‌ளின் பின்னூட்ட‌ங்க‌ளில் உள்ள‌து)

வாங்க பரிசல்.! (அய்யா.. நீங்க‌ சொன்ன‌ப்புற‌ம்தான் க‌வ‌னிக்கிறேன், அப்ப‌ நானும் பெரியாளாயிடுவேன்தானே)

வாங்க அம்மிணி.! (கோய‌முத்தூருனு நினைக்கிறேன் கரெக்டுங்க‌‌ளா? அவ‌ரோட‌ பேசியிருக்கீங்க‌ளா.?)

வாங்க பாபு.! (ச‌ரிதாங்க‌..)

வாங்க கார்க்கி.! (விஜயை மடக்கியதற்கு நன்றி, ஆனால் பப்ளிக்காக பேசிய பணத்தை கேட்பது தவறு..)

தாமிரா said...

வாங்க வால்பையன்.! (மூக்க பொத்திட்டு சரக்கடிக்கிற மாதிரி, மூக்க பொத்திட்டி படிக்க வேண்டியது தான்// தமிழ், கேட்டுக்கொள்ளவும்..)

வாங்க அறிவன்.! (அப்புறம்..தாமிரா,இரண்டு புத்தகங்கள் அடுத்த ஜனவரி வரைக்குமா?// என்ன‌ ப‌ண்ண‌ சொல்றீங்க‌, ந‌ம்ப‌ ஸ்பீடு அப்பிடி..)

வாங்க மங்களூர்.! (கொஞ்ச நாளக்கு இப்பிடிதான், வேறெந்த வாசனையுமே புடிக்காதுதான்.?)

தாமிரா said...

பரிசலுக்கு சொன்ன பதிலில் 'அய்யா..' என்று போட்டிருக்கிறேன். அது 'அய்யா' இல்லை, 'ஹைய்யா..'

தமிழ் பிரியன் said...

///வால்பையன் said...
//நமக்கு இந்த புத்தக வாசனை ஒத்துக்காது.//
மூக்க பொத்திட்டு சரக்கடிக்கிற மாதிரி, மூக்க பொத்திட்டி படிக்க வேண்டியது தான்///

அண்ணே! ஒரு ப்ளோவுக்காக சொன்னது அது....
நம்ம பதிவுல இருக்கும் லேபிளில் பொன்னியின் செல்வனைக் கிளிக் பண்ணிப் பாருங்க... அப்புறம் சொல்லுங்க

கும்க்கி said...

போங்க பெய்ய்பா உங்க கச்சி கா....

கும்க்கி said...

இதுக்கு நீங்க ராசேசுகுமாரையும்., ராசேந்திரகுமாரையுமே படிச்சிகிட்டிருந்திருக்கலாம்....ஹக்கும்.

Anonymous said...

தாமிரா,

முதலிரண்டு புத்தகங்களப் பற்றிப் பலரும் பேசிவிட்டதால் நான் சொல்ல ஒன்றும் இல்லை. ம்முன்றாவது புத்தக வெளியீட்டு விழாவை நான் பார்த்தேன்.

சுதேசமித்திரனின் வலைத்தளம் அர்த்தமண்டபம்.

மேலும் இந்த நாவல் பற்றிய சுவராசியமான் விமர்சனம் இங்கே

அது சரி said...

//
இவைய‌னைத்துமே சென்ற‌ ஜ‌ன‌வ‌ரி சென்னை புத்த‌க‌த்திருவிழாவில் வாங்கிய‌வை. இப்ப‌தான் ப‌டிச்சு முடிக்க‌ முடிஞ்சுது.

//

நீரு எளுத்து கூட்டி படிக்கணுமுல்லா... ஆனா, ரொம்ப வெரசா படிக்கிறீருவே!

//
இன்னும் ரெண்டு புக் இருக்குது, அதை முடிக்க‌வும் அடுத்த‌ ஜ‌ன‌வ‌ரி வ‌ருவ‌த‌ற்கும் ச‌ரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.
//

அடுத்த சனவரியா? நம்ப முடியலையே. நீரு படிக்கிற வேகத்த பாத்தா, எப்பிடியும் ஒரு நாலு சனவரி கழிச்சி தான் முடிப்பீரு....

தாமிரா said...

வாங்க கும்கி.! (புரிலயே..)
வாங்க வேலன்.! (பார்த்தேன், படித்தேன்)
வாங்க அதுசரி.! (என்னிய கலாய்க்கிறதுன்னா உமக்கு லட்டு சாப்புடுற மாதிரியாமே?)

தமிழ்நெஞ்சம் said...

அண்ணே வணக்கம் அண்ணே. திரு. கும்கி அவர்கள் உங்களுடைய ப்ளாக்கை அறிமுகப்படுத்தினார்.

படிச்சுக்கிட்டு இருக்கேன். அவருக்கும் ‍ உங்களுக்கும் நன்றிகள் பல.

நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள். நிறைய எழுதுகிறீர்கள். வாழ்க வளமுடன்.

தொடர்ந்து உங்களது எழுத்துக்களைப் படிக்கும் வாசகனாக ஆவதில் பெருமகிழ்ச்சி தாமிரா அவர்களே.