Monday, September 1, 2008

கால் ஆ.:ப் டியூட்டி -4

இது நிஜமாகவே தங்கமணியைப்பற்றிய பதிவு அல்ல. ஏதாவது சொல்வானா என்று எதிர்பார்ப்பவர்கள் ஏமாறக்கூடும். எனக்கு நிரம்பவும் பிடித்தமான ஒரு விஷயத்தைப்பற்றி சொல்லப்போகிறேன். அது கம்ப்யூட்டர் கேம்ஸ் எனும் மாய உலகத்தைப்பற்றியது. எனக்கும் என் தம்பிக்கும் ரொம்ப காலமாகவே கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றால் மிகவும் ஆர்வம். வெறி என்று கூட சொல்லலாம். எங்கேயாவது சென்டர்களிலோ, நண்பர்கள் வீட்டிலோ கிடைக்கும் கொஞ்ச நேர ‌வாய்ப்பில் திருப்தியுறாமலே விளையாடிவிட்டு வருவோம். கேம்ஸ்களே லோட் செய்யாமல் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களை 'இவனெல்லாம் கம்ப்யூட்டர் வெச்சுக்கலைனு யார் அழுதா?' ன்னு மனசுக்குள்ளேயே திட்டிவிட்டு வருவோம்.

பொறுப்புகள் இருந்தமையால் அவ்வளவு சீக்கிரம் எங்களால் வாங்கிவிட முடியவில்லை. இதற்காகவே பிளான் செய்து தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தோம். முதலில் பிளேஸ்டேஷன் 2 வாங்க முடிந்தது, அருமையான அனுபவம். ஆனாலும் வெரைட்டி கிடைக்காததால் மீண்டும் கம்ப்யூட்டருக்கான நாளை எண்ணிக்கொண்டிருந்தோம். சென்ற வருடம் அந்த நாளும் வந்து மிக நல்ல தரத்தில் செலவைப்பார்க்காமல் வாங்கி வந்தோம். வந்ததிலிருந்து விதம்விதமான கேம்ஸ்களை லோட் செய்து விளையாடி மகிழ்ந்தோம். இணையதள‌ இணைப்பு கூட மெதுவாக பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் இருக்கிறேன். ஆனால் கேம்கள் மீது அப்படியொரு ஈடுபாடு.

Tombraider, Farcry, Resident evil, Crysis, Bioshock, Pearlhorbor, NBA, Criket, Football, RFB, WIC, Surf-up, Shrek, Burnout, Railroad, Flight simulator.. என விதவிதமான கேம்கள். ஷூட்டர், ரேஸ், விளையாட்டு, அட்வென்சரஸ் என விதவிதமான கதைக்களங்கள்.

இவற்றில் மறக்க இயலாத, நான் மிக ரசித்த கேம் எது என உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இதை எழுதுகிறேன். எல்லோருக்குமே இந்த சப்ஜெக்ட் பிடிக்குமா தெரியவில்லை. வன்முறை என்று வாதாடுகிறவர்களும் இருக்கிறார்கள். எனக்கும் ஓரளவு அதில் ஒப்புதலிருந்தாலும் வேறுபல முக்கிய‌ விஷயங்களும் இருக்கின்றன என்றே கருதுகிறேன்.
கால் ஆ.:ப் டியூட்டி -4


ஷூட்டர் வகையைச்சார்ந்த இது மற்ற கேம்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? என்னைக்கவர்ந்த சிறப்பம்சங்கள் என்ன?

1. அதிஅற்புதமான கிரா.:பிக்ஸ் காட்சியமைப்புகள்.
2. மிக அழகான திரைக்கதை.
3. புத்திசாலித்தனமான சக வீரர்கள் மற்றும் எதிரிப்படை.
4. தேவையான இடங்களில் SAVE POINTS.
5. விதவிதமான சாகசங்கள்.
6. மொத்தமாக 10 லிருந்து 15 மணி நேரத்தில் முடித்துவிடக்கூடிய அளவில் சிறிய கேம்.

இவற்றைத்தவிர இன்னும் பல சிறப்பம்சம்கள். மேற்கூறிய விஷயங்கள் இதுவரை நான் எந்த கேம்களிலும் பார்த்திராதவை. இத்தகைய கேம்களில் ஏதோவொன்றை நோக்கிய அல்லது இலக்கில்லாத பயணமாகவே பெரும்பாலான கதைகள் அமைக்கப்படுகின்றன, அதைப்போலில்லாமல் இதில் மிகத்தெளிவான ஒரு கதைக்களம்.

சில சமயங்களில் சினிமா பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகத்தைக்கொடுக்கிறது. கொட்டும் மழையில் ஹெலிகாப்டரிலிருந்து கப்பலில் குதிக்கும் காட்சியில் துவங்கி, .:பிளாஷ்பேக்கில் தரையோடு தரையாக முட்டளவு புல் வளர்ந்திருக்கும் வனாந்திரத்தில் நாம் பதுங்கியிருக்க நம் அருகிலேயே நம்மைக்கவனிக்காமல் செல்லும் ஒரு பெரிய படை, ஜீப்பில் சேஸிங், கிளைமாக்ஸில் குண்டு வெடித்து தூக்கியெறியப்பட்ட நிலையிலும் சக வீரனால் (கேப்டன்) தள்ளிவிடப்படும் ஒரு சிறு துப்பாக்கியால் தீவிரவாத கும்பலின் தலைவனை சுட்டு வீழ்த்துவது என கதையோடு இணைந்து பின்னணி கிராபிக்ஸ் காட்சிகள் உச்சத்தைத்தொட்டிருக்கின்றன. பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.

பிற கேம்களைப்போல எந்த நேரமும் சுட்டுக்கொண்டிருக்காமல் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் சுவாரசியம் குன்றாமல் நம்மைக் கட்டிப்போடுகின்றன. சக பாத்திரங்களின் உடலசைவுகள் ஏறக்குறைய‌ மனிதர்களைப்போலவே இருக்குமளவில் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் புகுந்து விளையாடியிருக்கிறது.

கேரக்டர்களின் இன்டெலிஜன்ஸ் இதுவரை பார்த்திராத ஒன்று. உதாரணமாக கிரிக்கெட்டில் ரன் எடுக்க ஓடும் பேட்ஸ்மேன், ஓடிவிட்டு ஒரு பொம்மையைப்போல அதே திசையை நோக்கி பார்த்துக்கொண்டிருப்பான். பந்தை எடுக்க ஓடும் கீப்பரோ செஷன் முடிந்துவிட்டால் அவன் இடத்துக்கு வராமல் அங்கேயே நின்று கொண்டிருப்பான். ஷூட்டர் கேம்களில் உதாரணமாக உள்பக்கம் கதவில்லாத‌ அறையிலிருந்து எதிரிகள் வந்துகொண்டேயிருப்பார்கள், லாஜிக் இடிக்கும். கேரக்டர்கள் சுவரிலோ, பொருட்களிலோ உரசிக்கொண்டு நேர்கோட்டில் பயணிப்பார்கள். இதில் சக வீரர்களும், எதிர் வீரர்களும் ஒளிந்து கொள்ளும் பாங்கு, அட்டாக் செய்யும் லாவகம் பிரமிக்கச்செய்கிறது.

கடைசியாக.. விளையாடும் நேரம், சில கேம்களில் நாட்கணக்கில் விளையாடினாலும் விடைதெரியாமலே முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கும். சிலவற்றில் சில இடங்களை தாண்ட முடியாதவாறு சிக்கலில் மாட்டி மேலும் தொடர்ந்து விளையாடமுடியாமல் போகும். இதில் அப்படியெல்லாம் இல்லை. தேவையான இடங்களில் வழிகாட்டுதல்கள், save பாயிண்ட்ஸ் என தெளிவான விளையாட்டு.

கால் ஆ.:ப் டியூட்டி -4, ஒரு ட்ரெய்னிங் ஆபரேஷன், அழகாய் பிரிக்கப்பட்ட மூன்று மெயின் ஆபரேஷன்கள் (ஒவ்வொன்றிலும் மூன்றல்லது நான்கு சப்‍செஷன்கள்) என நிறைவான பிரம்மிக்கத்தக்க நெஞ்சைவிட்டகலாத‌ ஆக்ஷ‌‌ன் அனுபவம்.

33 comments:

வெண்பூ said...

நல்ல பதிவு.. சினிமா விமர்சனம் மட்டுமே படித்து பழகிய எனக்கு இது ஒரு மாறுபட்ட விமர்சனம்.

வெண்பூ said...

//கேம்ஸ்களே லோட் செய்யாமல் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களை 'இவனெல்லாம் கம்ப்யூட்டர் வெச்சுக்கலைனு யார் அழுதா?' ன்னு மனசுக்குள்ளேயே திட்டிவிட்டு வருவோம்.
//

என்னை எதுக்கு இப்ப திட்டுறீங்க தாமிரா?

வெண்பூ said...

//மொத்தமாக 10 லிருந்து 15 மணி நேரத்தில் முடித்துவிடக்கூடிய அளவில் சிறிய கேம்//

அடங்கொக்கமக்கா.... 10 டூ 15 மணிநேரம் சிறிய கேமா?? நல்ல வேளை இதுக்கு நான் அடிக்ட் ஆகல..

பரிசல்காரன் said...

உங்களைத்தான் தேடீட்டிருகேன்..

மேமாசம் யு.எஸ் போய்ட்டு வந்த என் எம்.டி., பி.எஸ் 3 வாங்கீட்டு வந்தாங்க. அவங்க கூட வந்த அவங்க அக்கா பையன் அடிக்கடி ஒரு கேம் விளையாடுவான். போன வாரம் அவன் ரிட்டர்ன் போறான்னு எம்.டி என்னைக் கூப்ட்டு அந்த கேமைப் பத்தி நீயும் கத்துக்கோ. சண்டேஸ்ல இஷானுக்கு (எம்.டி.யோட தம்பி பையன்) சொல்லிக்குடு ன்னாங்க.

பாத்தா.. கொடுமையால்ல இருக்கு?

நான் ஒரு கேங்க்ஸ்டர். என்னோட பாஸோட கட்டளைக்கு பணிந்து எவனோடோ காரைத் திருடி, கண்ணுல படறவனைச் சுட்டு..

என்ன தலைவா இது?

என்னால மனசார ஒன்றி உட்கார முடியல.

“sorry, i couldn't concentrate" ன்னு வந்துட்டேன்!

ஆனா நியூயார்க்கை நானே சுத்திப் பாத்த மாதிரி இருந்தது. டெக்னாலஜி ஈஸ் வெரி வெரி இம்ப்ரூவ்ட்!

அது சரி said...

கால் ஆஃப் ட்யூட்டி எல்லாம் இருக்கட்டும்.

இப்படி, நீங்க வேட்டியோட வீட்ல நிக்கிற படத்த போட்ருக்கிங்களே, அது என்ன, கால் ஆஃப் பியூட்டியா??

என்னவே, இப்பிடி சின்ன புள்ளியள பயமுறுத்தறீரு!

rapp said...

:):):)

Saravana Kumar MSK said...

// அது சரி said...

கால் ஆஃப் ட்யூட்டி எல்லாம் இருக்கட்டும்.

இப்படி, நீங்க வேட்டியோட வீட்ல நிக்கிற படத்த போட்ருக்கிங்களே, அது என்ன, கால் ஆஃப் பியூட்டியா??

என்னவே, இப்பிடி சின்ன புள்ளியள பயமுறுத்தறீரு!//

ரிப்பீடேய்...
:)))))))))

அது சரி said...

//
யாய்.. நிறைய பேரு வர்றீங்கனு தெரியுது, பின்னூட்டம்தான் போடமாட்றீங்க.. ஓட்டாவது போடுங்கடா.. டாய்.!
//

சும்மா ஓட்டு போடுங்கலே, ஓட்டு போடுங்கலேன்னா எப்படிவே போடுறது?
நீரு என்ன ஒரு ரூவாய்க்கு அரிசி குடுத்தீரா இல்ல ட்டீவி பொட்டி குடுத்தீரா?

சுத்த ஆக்கங்கெட்ட மனுசனால்ல இருக்கீரு!

இன்னா, இப்ப சொல்லும். ஓட்டு போடுறவய்ங்களுக்கு ஒரு ஓனிடான்னு சொல்லிப்பாரும்வே.
குத்தி தள்ளிர மாட்டமுல்லா?

காசி வாங்காம ஓட்டு போட்டவன் நாசமா போவான்னு எங்கய்யா சொல்லிருக்காருல்லா?

Anand said...

//யாய்.. நிறைய பேரு வர்றீங்கனு தெரியுது, பின்னூட்டம்தான் போடமாட்றீங்க.. ஓட்டாவது போடுங்கடா.. டாய்.!//

Pottachu!! pottachu!!!
Poduma

தாமிரா said...

வாங்க வெண்பூ, டூரெல்லாம் சிறப்பா இருந்திருக்கும் என நம்புகிறேன்.

//10 டூ 15 மணிநேரம் சிறிய கேமா?? நல்ல வேளை இதுக்கு நான் அடிக்ட் ஆகல..// ஒரே சிட்டிங்கில் எல்லாம் விளையாடமுடியாது, நாலுநாளைக்கு ஒரு தடவை ஒரு சில மணிநேரங்கள் எனபதுதான் வசதி. அடிக்ஷனுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை, ஏன்னா ஒரு கட்டத்துக்கு மேல ..முடியாது..

சரி சரி, மற்றதையும் படிச்சிட்டு பதில் போட்னு போங்க..

தாமிரா said...

வாங்க பரிசல்.!
//என்னோட பாஸோட கட்டளைக்கு பணிந்து எவனோடோ காரைத் திருடி, கண்ணுல படறவனைச் சுட்டு..// நீங்கள் சொல்வது போன்ற (GTA என நினைக்கிறேன்) சில கேம்களும் இருக்கின்றன. அதை வைத்து மொத்தமாக தவறான முடிவுக்கு வரவேண்டாம். போர், வன்முறை இல்லாத கேம்களும் இருக்கின்றன.

நம் எல்லோருக்குமே சாகசம் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருக்கும் (ட்ரெக்கிங், பஞ்சிஜம்பிங், தீம் பார்க் கேம்கள்..). சினிமாவில் வேறு ஒருத்தர் செய்யும் சாகசங்களைத்தான் பார்க்கமுடிகிறது. நிஜ வாழ்வில் 20 அடி தூரத்தில் நிற்கும் பஸ்ஸில் ஓடி ஏறுவதற்குள்ளேயே பெரிய சாகசம் செய்தது போல ஆகிவிடுகிறது, ஆகவே நோ சான்ஸ்.

இடைப்பட்ட "கால் ஆ.:ப் ட்யூட்டி" (கடமை அழைக்கிறது) போன்ற‌ இந்த கேம்கள் ஏதோ நாமே சாகசம் செய்வதைப்போன்ற ஒரு ஆறுதலை அளிக்கின்றன. அனைத்து கேம்களுமே இந்த நிறைவைத்தந்துவிட முடிவதில்லை. முந்தைய/பிற‌ கேம்களை ஒப்பிடும் போது ஏகப்பட்ட டெக்னிகல் குறைபாடுகள் இதில் களையப்பட்டுள்ளன என்பதையே நான் முன்னிறுத்த முனைந்தேன்.

தாமிரா said...

வாங்க அதுசரி.! (//கால் ஆஃப் பியூட்டியா??// ரொம்ப ரசித்தேன். என்னடா இதுவரைக்கும் ஒருத்தரும் ஒண்ணும் சொல்லலியேன்னு பார்த்தேன்,)

வாங்க ராப்.! (சும்மா சிரிச்சா என்ன அர்த்தம்?)

வாங்க சரவணகுமார்.!

வாங்க ஆனந்த்.!

தாமிரா said...

அதுசரி ://நீரு என்ன ஒரு ரூவாய்க்கு அரிசி குடுத்தீரா இல்ல ட்டீவி பொட்டி குடுத்தீரா?//
அடப்பாவிகளா இப்பிடி ஒண்ணு இருக்கா இந்த விஷயத்தில்..
தேர்தல் அறிவிச்ச பிறகு சுமாரா ஒரு 500 பேர் வந்துட்டு போயிருக்காங்க, ரிப்பீட் ஆடியன்ஸ கழிச்சா ஒரு 300 தேறுமா? ஆனா குறைந்த பட்சமாக 64 பேர்தான் ஓட்டு போட்ருக்காங்க. என்னத்த‌ சொல்றது?

கார்க்கி said...

//ஆனா குறைந்த பட்சமாக 64 பேர்தான் ஓட்டு போட்ருக்காங்க. என்னத்த‌ சொல்றது?//

சும்மா ஓட்டு போட நாங்க என்ன இளிச்சவாயனுங்களா? ஒரு மூக்குத்தி, ஆயிரம் ரூவா நோட்டு, மூட்டை அரிசி, அட குவார்ட்டரும் பிரியானியும் இல்லாம எப்படி ஓட்டு போடுறது?

இவன் said...

தாமிரா இந்த கேமை முடிக்க உங்களுக்கு மொத்தமாக 10 லிருந்து 15 மணி நேரம்தான் எடுத்ததா?? எனக்கு 3 நாட்களுக்கு கிட்ட எடுத்தது... ஒவ்வொருநாளும் எவ்வளவு நேரம் விளையாடுவேன் என்று தெரியாது சுமாராக ஒரு 3 மணி நேரம் இருக்கலாம்... ஒருவாறு முடித்து விட்டேன்.. இதேமாதிரியான கிரபிக்ஸோடு வேறு கேம் இருந்தால் சொல்லுங்கள் வாங்கி அதையும் ஒரு 2 அல்லது 3 நாளில் முடிக்க வேண்டும்

தாமிரா said...

வாங்க கார்க்கி.!
வாங்க இவன்.! (COD-4 அடிச்சுக்கறா மாதிரி இன்னொண்ணு நான் இதுவரை பார்க்கவில்லை..

நீங்கள் Tomb Raider - Anniversary, Crysis ட்ரை பண்ணலாம். முதலாவது அருமையாக இருந்தாலும் மிக நீ.....ளமானது. இடையிடையே தாண்ட முடியாத அளவில் சிக்கல்கள் வரும். நெட்டில் கிடைக்கும் 'வாக்த்ரு'க்களை அணுகலாம். இரண்டாவது கிளைமாக்ஸில் லாக் ஆகிப்போய் கிடக்கிறேன், நானே இன்னும் முடிக்கவில்லை. ஆல் தி பெஸ்ட்.!)

Anonymous said...

ஆஹா. நம்மாளுதானா நீங்க.
4ம் பாகம் சூப்பரு.
ஆனா எனக்கு 2ம் பாகம் இப்பவும் விளையாட ஆசை.

இவன் said...

//நீங்கள் Tomb Raider - Anniversary, Crysis ட்ரை பண்ணலாம். முதலாவது அருமையாக இருந்தாலும் மிக நீ.....ளமானது. இடையிடையே தாண்ட முடியாத அளவில் சிக்கல்கள் வரும். நெட்டில் கிடைக்கும் 'வாக்த்ரு'க்களை அணுகலாம். இரண்டாவது கிளைமாக்ஸில் லாக் ஆகிப்போய் கிடக்கிறேன், நானே இன்னும் முடிக்கவில்லை. ஆல் தி பெஸ்ட்.!)//

இது எப்பவோ விளையாடி முடித்த game தாமிரா... அந்த குளத்தில் இருக்கும் மரக்குற்றிகளில் இருந்து நெருப்பு வருமே அந்த கட்டத்தில் ஒரு முதலையைக்கொல்ல வேண்டும் அந்த stageல்தான் கொஞ்சம் தடுமாறிட்டேன்... பிறகு ஒரு மாதிரி முடிச்சாச்சு.... வாக்த்ரு பாவிப்பதால் உங்கள் மூளைக்கு என்ன பயன் முடிந்தளவு அதனைப்பயன்படுத்தாமல் சாதாரணமாக விளையாடமுயற்சி செய்யுங்கள்... முடியாத கட்டத்தில் "வாக்த்ரு" உபயோகியுங்கள்.. நான்தான் உங்களுக்கு all the best சொல்ல வேண்டும்

இவன் said...

all the best

தாமிரா said...

அய்யயோ.. யாரு சீனியர் என்பதில் சண்டையா? கேக்கிறிங்களேனு ஒரு ஆர்வத்துல சொல்லவந்தேன். சரி சரி.. நீங்கதான் சீனியர், ஒத்துக்கறேன். 'கிரைஸிஸில்' ஒரு சந்தேகம் கேக்கணும், அப்பறமா கேக்குறேன்.

அப்படியே நீங்கள் மிக ரசித்த லிஸ்ட்டைத்தந்தால் வசதியாக இருக்கும்.

தாமிரா said...

//வாக்த்ரு பாவிப்பதால் உங்கள் மூளைக்கு என்ன பயன் முடிந்தளவு அதனைப்பயன்படுத்தாமல் சாதாரணமாக விளையாடமுயற்சி செய்யுங்கள்...// அறிவுரையா.. சரி கேட்டுக்குறேன்.

Syam said...

ithu video game pathi vimarsanamaa...naan kooda etho inglees padam vimarsanamnu nenaichuten.... :-)

இவன் said...

//அய்யயோ.. யாரு சீனியர் என்பதில் சண்டையா? கேக்கிறிங்களேனு ஒரு ஆர்வத்துல சொல்லவந்தேன். சரி சரி.. நீங்கதான் சீனியர், ஒத்துக்கறேன். 'கிரைஸிஸில்' ஒரு சந்தேகம் கேக்கணும், அப்பறமா கேக்குறேன்.

அப்படியே நீங்கள் மிக ரசித்த லிஸ்ட்டைத்தந்தால் வசதியாக இருக்கும்.//


அய்யையோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... எனக்கு நேரம் கிடைக்கும் போது விளையாடுவேன் அவ்வளவுதான் நீங்க சொல்லுற அளவுக்கு எனக்கு games பற்றி தெரியாது... Crysis நான் விளையாடியதில்லை முடிந்தால் வாங்கி விளையாடி முடித்திட்டு சொல்லுறேன்
சரியா

இவன் said...

//அறிவுரையா.. சரி கேட்டுக்குறேன்.//

அறிவுரை எல்லாம் இல்ல எனக்கு தெரிஞ்சத சொன்னேன் தப்பா இருந்தா sorry

Thiyagarajan said...

Hi, If possible Try Medal of Honor: Allied Assault ,Pacific Assault.

Hari Raj said...

Dude

Try Price of persia sands of time

one of the best game!!!

மங்களூர் சிவா said...

இது கம்ப்யூட்டர் கேமா?

தாமிரா said...

நன்றி ஷ்யாம்.!
ஸாரி சொல்ல வெச்சதுக்கு ஸாரி இவன்.!
நன்றி தியாகராஜன்.! (அலைடு பழசானதால் ட்ரை பண்ணவில்லை, ஏர்பார்ன் தேடிட்டிருக்கேன், சிக்க மாட்டேங்குது)
நன்றி ஹரிராஜ்.! (அப்பிடியா சொல்றீங்க, அப்ப ட்ரை பண்ணிற வேண்டியதுதான்)

தாமிரா said...

ந‌ன்றி மங்களூர், ஆமா என்ன லேட்டு? (என்ன‌ தல கிண்ட‌‌லா.?)

சந்தனமுல்லை said...

இதுக்கு நான் போட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கமெண்டு என்ன ஆச்சு?!!

தாமிரா said...

அய்யய்யோ முல்லை.. நான் ஒண்ணியும் பண்ணலை, ரொம்பவும் முக்கியம்னு வேற சஸ்பென்ஸ் வெக்கிறீங்க, தயவு செஞ்சு இன்னொரு தபா போட்ருங்க பிளீஸ்..

சந்தனமுல்லை said...

அது என்னன்னா, இதை பத்தி அவ்வளவா எனக்குத் தெரியாது!! ஏதோ மார்ட்டல் கோம்பேட்ன்னு ஒன்னு தெரியும் அவ்வளவுதான்! :-)) ஆனா, புதுசா தெரிஞ்சுகிட்டேன்..உங்க பதிவுலேர்ந்து!!

DHANS said...

college la project IGI vediya vediya vilaiyanden..

appuram age of empires2, need for speed 2 college padikumpothu champion. stillplkaying need for speed most wanted. wanted list la11th rank.
call of duty vilaiyadanum but laptopla processor speed pathala... will try once..