Thursday, September 4, 2008

கடலுக்குள் கடுகைப்போட்ட சாதனை!

காலையில் லேட்டாக எழுந்து அவசர அவசரமாக பேப்பரைப்பார்த்துவிட்டு ரமா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு ஆ.:பீஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்தபோது கண்ணனிடமிருந்து போன் வந்தது.

'என்னடா?' என்றேன்.
'பேப்பர் பாத்தியா?'
'பார்த்தேனே, ஏதாவது முக்கியமான விஷயமா? மிஸ் பண்ணிட்டேனா..'

இப்பிடித்தான் பேப்பர் பார்த்துக்கொண்டிருக்கும் அல்லது டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது டிஸ்கஸ்/இன்பார்ம் பண்ண‌ லைவ்வாக கூப்பிடுவான்.

'ஒண்ணும் இல்ல, தசாவதாரம் விளம்பரத்த பாரு..'
மீண்டும் பேப்பரைத்திறந்தேன், விளம்பரத்தைத்தேடி.. பார்த்தேன்.

"இந்தப்படத்தின் சாதனை
கடலுக்குள் கடுகு போட்டு
தேடி கண்டு பிடிப்பதற்கு சமம்"


என்று எழுதியிருந்தார்கள்.
'அதுக்கென்ன இப்போ' என்றேன்.
'இல்ல, என்ன‌ அர்த்த‌ம்னு தெரிஞ்சுக்க‌லாம்னு..'
'க‌ட‌லுக்குள் போட‌ப்ப‌ட்ட‌ க‌டுகை எடுப்ப‌து எவ்வ‌ளவு பெரிய‌ சாத‌னையோ அதற்கு இணையான‌ சாத‌னை என்று அர்த்த‌ம்.'
'கடலுக்குள் போடப்பட்ட கடுகை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இப்படத்தில் என்ன சாதனை இருக்கிறது என்று கண்டுபிடிப்பதும் என்றுதான் எனக்கு விளங்குது'
'காலைலேயே என்ன‌ வெறுப்பேத்துறியா, ஆ.:பீஸுக்கு கிள‌ம்ப‌லியா இன்னும்?'
'நான் ஏதாவது அறிவுப்பூர்வமா கேட்டால் மட்டும் உனக்கு உடனே கோவம் வந்துருமே, சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' என்று சொல்லிவிட்டு போனை க‌ட் பண்ணினேன்.

நான் சொல்வ‌து ச‌ரியா, இல்லை அவ‌ன் சொல்வ‌து ச‌ரியா என்று நீங்க‌ளே சொல்ல‌லாம். ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் கீழ்க்க‌ண்ட‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில் சொல்ல‌லாம்.

ப‌ட‌ம் வெளியான‌ இர‌ண்டாவ‌து நாளே 'வ‌சூல் ம‌ழை பொழிகிற‌து' என்று விள‌ம்ப‌ர‌ம் செய்கிறார்க‌ள். இத‌ற்கு 'எங்க‌ளுக்கு நிறைய‌ ப‌ண‌ம் கிடைத்திருக்கிற‌து, நீங்க‌ளும் வ‌ந்து ப‌ண‌ம் கொடுங்க‌ள்' என்றுதானே அர்த்த‌ம். ப‌திலாக‌ அத‌ன் உள்ள‌ர்த்த‌மான‌ 'நிறைய‌ கூட்ட‌ம் வ‌ருகிற‌து, ஆக‌வே இது ந‌ல்ல‌ ப‌ட‌ம் போல‌த்தான் தெரிகிற‌து, என‌வே நீங்க‌ளும் வ‌ந்து பாருங்க‌ள்' என்று ஏன் விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌வ‌தில்லை?

இவ்வ‌ளவு செல‌வு செய்து க‌லைய‌ம்ச‌ம் மிக்க‌ ப‌ட‌ங்க‌ள் எடுப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ விள‌ம்ப‌ர‌ வாச‌க‌ங்க‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்தாம‌ல் மொக்கை ப‌ஞ்ச் வ‌ச‌ன‌ங்க‌ளையும், அதையும் மூன்று வ‌ரிக‌ளுக்கு ஏழு த‌வ‌று என்ற‌ அடிப்ப‌டையிலும் வெளியிடுவ‌து ஏன்? (குறைந்த‌ப‌ட்ச‌ம் அதை ப‌த்திரிகைக‌ள் கூட‌ க‌வ‌னிக்காம‌ல் யாருக்கோ வ‌ந்த‌ விருந்து போல‌ இருப்ப‌து ஏன்?)

உதார‌ணங்கள் :
1.(இரண்டாம் நாள் விளம்பரம்) இதுவறை கன்டிராத மாபெறும் வெற்றி! அதிற‌டி வெற்றி! அடித‌டி வெற்றி!
2. கற்ப்புக்கு புதிய விளக்கம், தாய்ம்மார்க‌ள் கொன்டாடும் மூன்றாது நாள்!3.இந்த ஆன்டின் இனையற்ற ஹிட்டு! இளஞர்கள் பேற்றும் 'நாக்க‌ ந‌க்க' பாட்டு!

12 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))...
ஒண்ணியும் சொல்றதுக்கில்ல!!!

rapp said...

:):):)

சந்தனமுல்லை said...

ROTFL...!!!

மங்களூர் சிவா said...

/
"கடலுக்குள் கடுகைப்போட்ட சாதனை!"
/

நான் வேணா ஒரு கால்கிலோ வாங்கிட்டு போய் போட்டுடறேன்பா.

:)))))))

வால்பையன் said...

எந்த படத்துக்கு விளம்பரம் அதிகமாக வருகிறதோ அந்த படம் ஊத்திகிச்சுன்னு அர்த்தம்

பாபு said...

உங்கள் நண்பர் சொல்வதுதான் சரி என்று எனக்கும் தோன்றுகிறது

Anonymous said...

இது கூட பரவாயில்லை 'வெற்றிகரமான படப்பிடிப்பில்' என்று ஒரு விளம்பரம் பார்த்தேன். சுந்தர் படம் என்று நினைக்கிறேன்...

கார்க்கி said...

அட நம்ம சிபிராஜ் நடித்த லீ படம் சத்யமில் வெளிவந்தது..முதல் நாளே "blockbuster "அப்படினு பேனர்.. விடுப்பா... தங்கமணி செய்த பொங்கல பத்தி எழுதுவிங்களா..அத விட்டுட்டு வெட்டி வேலை நமக்கெதுக்கு...

கார்க்கி said...

சிம்பு நடித்த காளை படத்தின் விளம்பரத்தில் " சூப்பர் ஷிட்" னு போட்டாங்க...அதுவும் ஒரு விதத்துல சரிதானு ஹாய் மதன்ல கலாய்ச்சிட்டாரு

தாமிரா said...

வாங்க விஜய்.!
வாங்க ராப்.!
வாங்க முல்லை.!
வாங்க மங்களூர்.! (நீங்க போகும்போது சொல்லுங்க, நானும்..)

தாமிரா said...

வாங்க வால்.!
வாங்க பாபு.!
வாங்க அனானி.!
வாங்க கார்க்கி.!

கார்க்கியும் அனானியும் சொல்வது நான் கொடுத்த உதாரணங்களை விடவும் அருமை.! என்ன.. பதிவு எழுதும் போது ஞாபகம் வந்து தொலைக்கமாட்டேங்குது.

அது சரி said...

ஆஹா, நம்ம மக்க நெசமாவே ரொம்ப நல்லவகளா இருக்காகளே.

அவுகள விடும், நெதம் ஆணிப்புடுங்கற ஒமக்கு தெரியாது? இந்த இங்கிலீபீசுல எதோ சொல்லுவானுவளே, ஆங், There is no such thing as bad publicity... அது தான்வே இது. இப்பிடில்லாம் பண்ணாட்டி, அந்த வெளம்பரத்த எவன் படிக்குதான்?


அப்புறம் அந்த காள படம் வெளம்பரம் Super Shit இல்லவே. அது Super Simbu Hit . சிம்புவும், ஹிட்டும் ஒண்ணாச்சின்னா என்னாகும்னு சொல்றதுக்கு தான் அது! கூட்டி கழிச்சி பாரும், கணக்கு சரியா வரும்!