Friday, September 5, 2008

பதிவுகள் குறித்த தேர்தல் முடிவுகள்.

ஒரு பத்து நாளா தளத்தில் கவனம் செலுத்தமுடியாதபடிக்கு வேலை இருந்தது. ஆனால் முடிந்தவரைக்கும் பிற வலைப்பூக்களில் மேய்ந்தேன். ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. கொட்டிக்கிடக்குது ஆயிரமாயிரமாய்.! வலைப்பூக்கள்தான் எத்தனை வகைகளடா அதில்தான் மொக்கைகள் எத்தனை வகைகளடா.. மேலும் எத்தனை விதமான சென்டிமென்ட்கள், எத்தனை விதமான அனுபவங்கள், எத்தனை விதமான ரசனைகள், எத்தனை விதமான கருத்துச்செறிந்த கட்டுரைகள்.

சிலர் நிஜமாகவே படிக்கப்படிக்க சுவையான பலவிதமான பதிவுகளைத் தருகின்றனர் (பெய‌ரைச்சொன்னால் சிலர் விட்டுப்போக‌ நேரிடலாம், அதனால் வருத்தம் வந்து சேரும். மேலும் நான் பார்த்தது கையளவே, இன்னும் கடலளவு பாக்கியிருக்கிறது). பலரோ தாங்கமுடியாத அளவில் பிளேடு போடுகிறார்கள், நாலு வரிகளுக்கு மேல் படிக்கவே முடியவில்லை. (அவற்றையெல்லாம் மொக்கையென்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. அந்த வார்த்தைக்கு இப்போ நல்லபடியான அர்த்தம் கிடைத்திருக்கிறது அல்லவா? சரி.. காக்கைக்கும் தன்பதிவு, பொன்பதிவு இல்லையா? அவர்கள் திருப்திக்கு அவர்கள் எழுதுகிறார்கள், இப்ப நீ இல்லையா? என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். பெயரைச் சொன்னால் வருத்தத்தோடு சேர்ந்து ஆட்டோவும் வரக்கூடும் என்பதால் தவிர்க்கிறேன்).

மேலும் சில‌ர் என்ன‌ எழுதினாலும், கூட்ட‌மும் பின்னூட்ட‌மும் அலைமோதுகிற‌து. சில‌ர் என்ன எழுதினாலும் சீண்ட‌ நாதியில்லை. அவ‌ர்க‌ளுக்கு நாலு பின்னூட்ட‌ம் வ‌ந்தால் ந‌ன்றி சொல்லி எட்டு பின்னூட்ட‌ம் போடுகிறார்க‌ள். சில பதிவுகளில் பதிவை விட பின்னூட்டம் சுவையாக இருக்கிறது. சிலர் எதிர்பார்க்காத நேரங்களில் பின்னூட்டமிட்டு உற்சாகத்தை ஏற்படுத்தி பின்னர் காணாமல் போய் காயவைக்கின்றனர். சில‌ர் முப்பது நாளில் மூணு ப‌திவு போடுகிறார்க‌ள் (இதிலும் தரமற்றவை உண்டு). சில‌ர் மூணு நாளில் ‌முப்ப‌து ப‌திவு போடுகிறார்க‌ள் (இதிலும் த‌ர‌மான‌வை உண்டு). சில‌ர் ரொம்ப‌ அட‌க்க‌ம். சில‌ரோ ஆர்ப்பாட்ட‌ம். பதிவுகளை சூடாக்குகிறேன் பார் என்று மொக்கைப் பேர்வழிகளெல்லாம் தனது சப்பைப்பதிவுகளுக்கு பதிவுக்கு சம்பந்தமேயில்லாமல் 'ஏடாகூடமாய்' தலைப்பு வைத்து சாவடிக்கிறார்கள். அப்புறம் தொடர்பதிவு... சரி, ச‌ரி.. இந்த ஹிஸ்டரியெல்லாம் எதுக்கு இப்ப.. ஏற்கனவே தெரிஞ்சதுதானே, இப்ப‌ என்ன‌ங்கிறீங்க‌ளா?..

ச‌ரி விஷ‌ய‌த்துக்கு வ‌ந்துட‌றேன். நிறைய‌ பேர் த‌ன‌து த‌ள‌ங்க‌ளில் ஒரு ஓர‌மாய் த‌ன‌க்கு பிடித்த‌ விஷ‌ய‌ங்க‌ளில் தேர்த‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள் அமைதியான‌ முறையில். என‌க்கும் அதைப்பார்த்த‌தும் நாமும் ஒரு மெகா தேர்தல் ந‌ட‌த்தினால் என்ன‌ தோன்றி, "வாச‌க‌ர்க‌ளின் ம‌ன‌தைப்புரிந்து கொள்கிறேன் பார்" என்று ஒரு மூன்று கேள்விக‌ளைக் க‌ள‌த்தில் வைத்தேன். ஆனால் பாருங்கள். நான் அறிவித்த‌திலிருந்து (3 நாட்க‌ள் தேர்த‌லை நீட்டித்தும் கூட) பத்து நாட்களில் சுமார் 600 ஹிட்டுக‌ளும் குறைந்த‌ப‌ட்ச‌ம் 80 ஓட்டுக‌ளும்தான் வ‌ந்திருக்கின்ற‌ன. எவ்வளவோ கெஞ்சியும், மிரட்டியும் பார்த்துவிட்டேன். வந்தவர்கள் பெரும்பாலும் ஓட்டு போடவில்லையா? அல்லது வந்ததே இவ்வளவு பேர்தானோ என்று ஒரே சந்தேகமாக ஆகிவிட்டது. அப்புற‌ம்தான் யோசித்தேன் இது நிறைய‌ ஹிட்டுக‌ள் வாங்க‌க்கூடிய‌ யாராவ‌து பண்ணியிருக்க‌ வேண்டிய‌ வேலை என்று. ச‌ரி செய்துவிட்டு பிற‌கு சிந்திப்ப‌து ந‌ம‌க்கு என்ன‌ புதிதா? என்று ச‌மாதான‌ம் செய்துகொண்டேன்.

பானை சோற்றுக்கு ஒரு சோறு ப‌த‌ம் என்று நினைத்துக்கொண்டு தேர்த‌ல் முடிவுக‌ளை பார்த்துக்கொள்ளுங்க‌ள். முத‌ல் கேள்வி சொந்த‌க்க‌தையாக‌ இருந்தாலும், பின்னிரு கேள்விக‌ள் உங்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌ட‌லாம்.!

காமெடி,மொக்கை,க‌லாய்த்த‌ல் ப‌திவுக‌ளே 51% வாக்குக‌ள் பெற்று முத‌லிட‌ம் பிடித்திருக்கிற‌து என்ப‌து நாம் அறிய‌ வ‌ரும் ம‌கிழ்ச்சியான‌ சேதி. கூடுத‌லாக‌ 36% பேர் எப்போதுமே பின்னூட்ட‌மிடுவ‌தில்லை என்றும் 16% பேர் அத்திபூத்தாற்போல‌ பின்னூட்ட‌மிடுவேன் (ப‌ன்னிர‌ண்டு நாட்க‌ளுக்கு ஒருமுறை?) என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்க‌ள்.


25 comments:

narsim said...

ஆஜர்,

நர்சிம்

மங்களூர் சிவா said...

/

சிலர் நிஜமாகவே படிக்கப்படிக்க சுவையான பலவிதமான பதிவுகளைத் தருகின்றனர்
/

ரொம்ப புகழாதீங்க கூச்சமா இருக்கு!!
:))))))))))))

மங்களூர் சிவா said...

/
மேலும் சில‌ர் என்ன‌ எழுதினாலும், கூட்ட‌மும் பின்னூட்ட‌மும் அலைமோதுகிற‌து.
/

எதாவது செய்யணும் பாஸ் செஞ்சாதான் திருப்பி செய்வாங்க பாஸ்!!
:))))

விஜய் ஆனந்த் said...

:-((((....

இத உங்ககிட்ட எதிர்பாக்கவேயில்ல...

Saravana Kumar MSK said...

நீங்க கண்டுக்காம கண்டினியூ பண்ணுங்க..

நம்ம நாட்டுல எல்லாம் தேர்தல் படியா நடக்குது.. நீங்க பீல் ஆகாதீங்க..

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அட நம்பள மாதிரியேத்தான் ரொம்ப பேரு ஓட்டு போட்டுக்காங்க. வாழ்க மொக்கை!வளர்க கும்மி! என் கடன் கும்மி அடித்து மொக்கை போடுவதே!

வெண்பூ said...

//பலரோ தாங்கமுடியாத அளவில் பிளேடு போடுகிறார்கள், நாலு வரிகளுக்கு மேல் படிக்கவே முடியவில்லை (பெயரைச் சொன்னால் வருத்தத்தோடு சேர்ந்து ஆட்டோவும் வரக்கூடும் என்பதால் தவிர்க்கிறேன்).//

ஆனாலும் என்னை இப்படி திட்டி இருக்க வேணாம்...நான் ஆட்டோ அனுப்ப மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். :)

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அட நம்பள மாதிரியேத்தான் ரொம்ப பேரு ஓட்டு போட்டுக்காங்க. வாழ்க மொக்கை!வளர்க கும்மி! என் கடன் கும்மி அடித்து மொக்கை போடுவதே!
//

வழிமொழிகிறேன். படிக்கிறப்பவே சந்தோசமா இருக்குல்ல...

கார்க்கி said...

நான் ரெண்டு தடவ ஓட்டு போட்டேன்... உங்க வலைய தங்கமணி படிக்க ஆரம்பிச்சிட்டாங்களா என்ன? இப்போ எல்லாம் அலிபாபா அறிவுரை சொல்வதே இல்லை..

சந்தனமுல்லை said...

//அவ‌ர்க‌ளுக்கு நாலு பின்னூட்ட‌ம் வ‌ந்தால் ந‌ன்றி சொல்லி எட்டு பின்னூட்ட‌ம் போடுகிறார்க‌ள்// இது கண்டிப்பா நான் இல்லப்பா!! ;-))

குசும்பன் said...

தாங்கள் கேட்டபடி நான் எம் குல கும்மி மக்கள் சேர்ந்து 60 ஓட்டு போட்டு விட்டோம் , இன்னும் பொட்டி வரவில்லை.

சீக்கிரம் அனுப்பவும்.

குசும்பன் said...

// சில‌ர் என்ன எழுதினாலும் சீண்ட‌ நாதியில்லை. அவ‌ர்க‌ளுக்கு நாலு பின்னூட்ட‌ம் வ‌ந்தால் ந‌ன்றி சொல்லி எட்டு பின்னூட்ட‌ம் //

ஹி ஹி இப்படி எல்லாம் பப்ளிக்கா உண்மைய போட்டு உடைக்கலாமா?:(((

குசும்பன் said...

//சிலர் நிஜமாகவே படிக்கப்படிக்க சுவையான பலவிதமான பதிவுகளைத் தருகின்றனர்//

சமையல் குறிப்பு பதிவுகளை எல்லாம் படிச்சு பார்த்து ஏமாந்து போய்டாதீங்க, முன்பு எல்லாம் சமைச்சதை காக்காவுக்கு வெச்சு டெஸ்ட் செய்வாங்க, இப்ப எல்லாம் செய்யபோறத பதிவு போட்டு நம்மை வெச்சு டெஸ்ட் செய்யுறாங்க..
உசார்!

குசும்பன் said...

//விஷ‌ய‌ங்க‌ளில் தேர்த‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள் அமைதியான‌ முறையில். //

ஆங் பரிசல் அவரோட ஓட்டு பெட்டியில் ஓட்டு போடனும் என்று கழுத்தில் கத்திவைத்து அன்போடு கேட்டார்!

குசும்பன் said...

மங்களூர் சிவா said...
எதாவது செய்யணும் பாஸ் செஞ்சாதான் திருப்பி செய்வாங்க பாஸ்!!
:))))//

மாலை நேரத்தில் சுண்டல், பஜ்ஜி செய்யுங்க பாஸ் கூட்டம் வரும்.

தாமிரா said...

வாங்க நர்ஸிம்.!

வாங்க மங்களூர்.! (//எதாவது செய்யணும் பாஸ் செஞ்சாதான் திருப்பி செய்வாங்க பாஸ்!!// நீங்க‌ பொதுவா சொன்னீங்க‌ளா? நான் என்னிய‌த்தான் சொல்றீங்க‌ளோனு நினைச்சுக்கிட்டு, உங்க லேட்டஸ்ட் ப‌திவுக‌ளுக்கு எதுக்கும் பதில் போடாம உட்டுட்டேனோன்னு ஓடிப்போய் பாத்துட்டு வந்தேன். குத்தமுள்ள நெஞ்சாச்சா.. அதான்.!)

வாங்க விஜய்.! (//இத உங்ககிட்ட எதிர்பாக்கவேயில்ல...// நீங்க என்ன அர்த்தத்தில் சொல்றீங்க புரியலையே..! நல்லால்லியா?)

வாங்க சரவணகுமார்.!

தாமிரா said...

வாங்க புதுகை.! (என் சொந்த‌ ஓட்டும் மொக்கைக்கே..)

வாங்க வெண்பூ.! (//ஆனாலும் என்னை இப்படி திட்டி இருக்க வேணாம்...// என்ன‌ங்க‌ இப்பிடி சொல்லீட்டீங்க, நீங்க என் பேவரிட்ங்க‌.!)

வாங்க கார்க்கி.! ('அது' என்னதான் நம்ப .:பேவரிட் சப்ஜெக்ட்னாலும் போரடிச்சுரகூடாது பாருங்க, அதுனால நாலு பதிவுக்கு ஒண்ணுங்கற மாதிரிதான் ஐடியா.)

வாங்க முல்லை.! (நீங்க‌தான் பின்னூட்டங்களைப்பற்றி கவலைப்படுவது மாதிரியே தெரியவில்லையே, நான் என்னை மாதிரி ஆளுங்களைச்சொல்கிறேன்ங்க)

தாமிரா said...

வாங்க குசும்பன்.! (விட்டுக்கலாய்க்கிறீங்க தல.. அருமை.! இங்கே மட்டும் சொல்லவில்லை சென்ற இடமெல்லாம்.. வாழ்த்ததுகள்.! இங்கே பரிசல் ஜோக் அருமை ROTFL..)

மங்களூர் சிவா said...

//
தாமிரா said...

வாங்க நர்ஸிம்.!

வாங்க மங்களூர்.! (//எதாவது செய்யணும் பாஸ் செஞ்சாதான் திருப்பி செய்வாங்க பாஸ்!!// நீங்க‌ பொதுவா சொன்னீங்க‌ளா? நான் என்னிய‌த்தான் சொல்றீங்க‌ளோனு நினைச்சுக்கிட்டு, உங்க லேட்டஸ்ட் ப‌திவுக‌ளுக்கு எதுக்கும் பதில் போடாம உட்டுட்டேனோன்னு ஓடிப்போய் பாத்துட்டு வந்தேன். குத்தமுள்ள நெஞ்சாச்சா.. அதான்.!)
/

ஹா ஹா

:)))))))))))))))

Anonymous said...

ஹி ஹி கலாய்க்கிறீங்க தல.. .

தாமிரா said...

வாங்க சிவா (ரிப்பீட்டு)
வாங்க ஆனந்த் (மன‌சத்தேத்திக்கினு மீண்டு(ம்) வந்துட்டீங்க போல.. ஆங். அப்பிடிதான் இருக்குணும்.)

பரிசல்காரன் said...

ரிசல்ட்டை பப்ளிக்காக பொதுமக்கள் பார்வைக்கு வைத்ததற்கு நன்றி!

அதிலிருந்து
நம்மளும் கொஞ்சம் கத்துக்கலாம்ல?

தாமிரா said...

வாங்க பரிசல்.! நீங்க சொன்னீங்களேனுதான் போட்டேன். ஹேப்பியா?

அது சரி said...

//
பலரோ தாங்கமுடியாத அளவில் பிளேடு போடுகிறார்கள், நாலு வரிகளுக்கு மேல் படிக்கவே முடியவில்லை. //

//
அப்புறம் தொடர்பதிவு...
//

எனக்கு தெரியும்வே, நீரு நம்ம கடைய பத்தி இப்பிடி தான் சொல்ல போறீருன்னு!

அத விடும். கொஞ்ச நாளக்கி முன்ன கருப்பட்டி கேட்டீருல்லா, தின்னவேலி கருப்பட்டி புதுசா வந்திருக்கு. ஆட்டோவுல அனுப்பி வைக்கேன். அட்ரசு சொல்லும்!

அது சரி said...

//
பலரோ தாங்கமுடியாத அளவில் பிளேடு போடுகிறார்கள், நாலு வரிகளுக்கு மேல் படிக்கவே முடியவில்லை. //

//
அப்புறம் தொடர்பதிவு...
//

எனக்கு தெரியும்வே, நீரு நம்ம கடைய பத்தி இப்பிடி தான் சொல்ல போறீருன்னு!

அத விடும். கொஞ்ச நாளக்கி முன்ன கருப்பட்டி கேட்டீருல்லா, தின்னவேலி கருப்பட்டி புதுசா வந்திருக்கு. ஆட்டோவுல அனுப்பி வைக்கேன். அட்ரசு சொல்லும்!

தாமிரா said...

வாங்க அதுசரி.! (ந‌ம்பர் 10, விவேகானந்தர் தெரு,... என்னுது ஆட்டோவிலயா? ..எஸ்கேப்.!)