Saturday, September 6, 2008

தங்கமணியை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு போகலாமா?

தங்கமணியுடன் பேசி இன்றோடு நான்கு நாட்க‌ளாகின்றன‌. நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டில் ஒரு சண்டை நிகழ்ந்தேறியது. வழக்கத்தைவிடவும் அதிக வார்த்தைப்பிரயோகம் நிகழ்ந்ததில் கோபம் தலைக்கேறி ரிமோட்டையெல்லாம் தூக்கிப்போட்டு உடைத்து (டிவியை உடைத்தால் பர்ஸ் கிழிந்துவிடும் என்பது அந்த கோபத்திலும் தெளிவாக உறைக்கிறது) அதகளம் பண்ணியாயிற்று. நேற்றே கோபம் நன்கு தணிந்துவிட்டாலும் அவளே பேசட்டுமே என்று காத்திருந்தேன். ஆனால் அது நடப்பதாய் தெரியவில்லை.

ஆரம்ப காலங்களில் சண்டை வரும்போது சில நிமிடங்களிலும் பின்னர் சில மணிநேரங்களிலும் கோபம் மறந்து சமாதானமாகிவிடுவோம். பின்னர் கொஞ்ச காலம் இரவு நேரங்களில் சமாதானமாகிவிடும். ஆனால் நாட்கள் மாதங்களாக‌, மாத‌ங்க‌ள் வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ ச‌மாதான‌ இடைவெளி நீண்டுகொண்டே போய் இப்போது நான்கு நாட்க‌ளில் வ‌ந்து நிற்கிற‌து. என்ன‌ ப‌ண்ண‌லாம் என்று தீவிர‌மாக‌ யோசித்துக்கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு முறை சண்டை நிகழும் போதும் நாம் ப‌ல‌ வ‌ழிக‌ளிலும் ச‌மாதான‌ முய‌ற்சிக‌ளை மேற்கொள்கிறோம். சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மான‌த்தைத்துற‌ந்து, சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ப‌ர்ஸைத்திற‌ந்து. ச‌ண்டையிட்டு மூட் அவுட்டாகி இருக்கும் ச‌ம‌ய‌ங்க‌ளில் ப‌ல‌ரும் இந்த‌ அறிவுரையை கேட்டிருப்போம். 'எப்போதும் வீட்டிலேயே அடைஞ்சி கிட‌க்குறாங்க‌ளே, எங்கியாவ‌து வெளியே கூட்டிட்டுப்போங்க‌.. ரிலீ.:பா இருக்கும். அதோட‌ ச‌ண்டையும் சமாதா‌னம் ஆன மாதிரி ஆச்சுது.' நானும் ப‌ல‌ த‌ட‌வைக‌ள் இதைக்கேட்டிருக்கிறேன். இப்போது அதை சிந்திக்க‌த்துவ‌ங்கினேன். நாமும் இந்த‌ ஆ.:பீஸில் பார்த்த‌ முக‌ங்க‌ளையே எத்த‌னை நாட்க‌ள்தான் பார்த்துக்கொண்டிருப்ப‌து, லீவு போட்டு நிறைய‌ நாட்க‌ளாகிவிட்ட‌ன‌, நான்கு நாட்க‌ள் கிள‌ம்பிவிட‌ வேண்டிய‌துதான். திட்ட‌மிட்டேன். எங்கே போக‌லாம்? 'ம‌லைப்பிர‌தேச‌மா போனா ந‌ல்லாயிருக்கும், குளிர்ப்பிர‌தேச‌ம் இன்னும் ந‌ல்ல‌து' ப‌ட்ஜெட்டையும் பார்க்க‌ வேண்டிய‌துள்ள‌தே.! க‌டைசியில் ஊட்டி என்று முடிவுசெய்து, கோவைக்கு டிக்கெட்டையும் இன்டெர்னெட்டிலேயே முன்ப‌திவு செய்தேன்.

புக் செய்துவிட்டு எப்படி லீவு போட‌லாம், என்ன‌ கார‌ண‌ம் சொல்ல‌லாம்.. உண்மையை சொல்ல‌லாமா என்று யோசித்த‌வாறே வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ராஜ‌ன் கேபினுக்குள் வ‌ந்தார்.

'என்ன‌ ராஜ‌ன்.. ஒருவார‌ம் லீவு போட்டுருந்தீங்க‌ அதுக்குள்ள‌ வ‌ந்துட்டீங்க‌..'

'நீ வேற‌ கேகே, ஆஸ்ட‌ர் ரிப்போர்ட்ட‌ அனுப்பிச்சியா, இல்லியா?'

'அனுப்பிச்சு மூணு நாளாவுது அத‌ விடுங்க‌ ராஜ‌ன், என்ன‌ சீக்கிர‌ம் வ‌ந்துட்டீங்க‌ அத‌ச்சொல்லுங்க‌ முத‌ல்ல‌..'

'உட‌மாட்டியே, அது.. வீட்டுக்காரியையும் கூட்டிக்கிட்டு கொடைக்கான‌ல் போனேன்ப்பா, அதான் உங்கிட்ட‌ சொல்லிட்டுதானே போனேன்'

'அதான் தெரியுமே, விஷ‌ய‌த்துக்கு வாங்க‌'

'போன‌ இட‌த்துல‌ பிர‌ச்சினையாயிருச்சு, போன‌ மொத‌ நாளே ச‌ண்டை வ‌ந்துருச்சி, உட‌னே கிள‌ம்ப‌ணும்னுட்டா.. வ‌ர்ற வ‌ழியில‌ ம‌துரையிலேயே அவுங்க‌ வீட்டுல‌ இருந்துகிட்டு வ‌ர‌மாட்டேங்கிறா.. கிட‌ன்னு உட்டுட்டு வ‌ந்துட்டேன், கொஞ்ச‌ நாளைக்கு போட்டாதான் ச‌ரியா வ‌ருவா..'

'அங்க் போன‌ எட‌த்துல‌ ஏன் பிர‌ச்சினை ப‌ண்ணுனீங்க‌..'

'சும்மா வெறுப்பேத்தாத‌, நானா பிர‌ச்சினை ப‌ண்ணுனேன்? மூணு நாளா அங்க‌ த‌ங்க‌லாம்னு பிளான். முத‌ நாளே அங்குள்ள‌ ஒரு ந‌ர்ஸ‌ரியில‌ ரோஜா செடிக‌ளைப்பாத்துட்டு வாங்க‌ணும்னா, ச‌ரி போகும்போது வாங்கிக்க‌லாம், இப்பவே வாங்குனா எங்க ஹோட்டல்லேயா வச்சுக்கமுடியும்னேன். கேட்டாதானே.. அப்பிடியே பேச்சு வ‌ள‌ந்துடுச்சு.'

இந்த பிரச்சினை எப்படி பெரிய சண்டையா மாறியது என நான் கேட்கவில்லை. இப்போ நான் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

"க‌ன்ப‌ர்ம் டிக்கெட்ட‌ கேன்ச‌ல் ப‌ண்ணினா எவ்வ‌ள‌வு க‌ழிப்பாங்க‌? கிரெடிட் கார்டுல‌ புக் ப‌ண்ணிருக்கேனே.. கேன்ச‌ல் ப‌ண்ணினா ஒழுங்கா ப‌ண‌ம் திரும்பி வ‌ந்துடுமா ராஜ‌ன்?"

(டிஸ்கி :சமீபத்தில் ஒரு பதிவர் தங்கமணி மற்றும் குழந்தையுடன் ஊட்டிக்கு சுற்றுலா போய் வந்தார். அதற்கும் இந்தப்பதிவுக்கும் சம்பந்தமில்லை.)

34 comments:

வெண்பூ said...

//?"(டிஸ்கி :சமீபத்தில் ஒரு பதிவர் தங்கமணி மற்றும் குழந்தையுடன் ஊட்டிக்கு சுற்றுலா போய் வந்தார். அதற்கும் இந்தப்பதிவுக்கும் சம்பந்தமில்லை.)
//

முதல் தகவல்: அந்த பதிவர் சென்றது ஊட்டி இல்லை, கொடைக்கானல்...ஹி...ஹி...

வெண்பூ said...

பதிவு சிரிக்க வைத்தாலும் ஒரு சீரியஸ் பின்னூட்டம். கண்டிப்பாக ஊட்டிக்கு சென்று வாருங்கள் தாமிரா. அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அது ஒரு நல்ல ப்ரேக் ஆக இருக்கும், நம் ஒவ்வொரு நாளைய இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து.

இன்னொன்று அங்கே செல்வது குடும்பத்துடன் நேரம் செலவிட என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். அங்கு சென்றதும் அலுவலக போன்கால்கள், இணையம் இவையெல்லாம் இல்லாமல் இருந்தால் நல்லது.

வாழ்த்துக்கள்... சென்று வந்தபின் உங்கள் அனுபவத்தை பதிவிடுங்கள்.

Anonymous said...

தாமிரா,

ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

வாழ்த்துக்கள்.

அங்கேயும் போய் செல்போனும் லேப்டாப்புமா இருக்காதீங்க. வேண்டுமானால், ஒரு ப்ரீப்பெய்டு கார்டு வங்கிக்குங்க.

எப்ப வர்ரீங்க?

குசும்பன் said...

//அவளே பேசட்டுமே என்று காத்திருந்தேன். ஆனால் அது நடப்பதாய் தெரியவில்லை. //

சேவல் கோழி முட்டை போடாது!!!

குசும்பன் said...

//ச‌மாதான‌ முய‌ற்சிக‌ளை மேற்கொள்கிறோம். சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மான‌த்தைத்துற‌ந்து, //

இம்புட்டு நாள் ஆகியும் மிச்ச மீதி இருக்கா? ரொம்ப ஆச்சர்யமாக இருக்கே!!!

குசும்பன் said...

//நாமும் இந்த‌ ஆ.:பீஸில் பார்த்த‌ முக‌ங்க‌ளையே எத்த‌னை நாட்க‌ள்தான் பார்த்துக்கொண்டிருப்ப‌து,//

இதுக்காக தினம் ஒரு ரிசப்ஸினிஸ்டையா மாற்ற முடியும்!!!

குசும்பன் said...

//ஆரம்ப காலங்களில் சண்டை வரும்போது //

வாட் ஈஸ் த மீனிங் ஆப் சண்டை!!!

ஐ know ஒன்லி சுந்தர்.சி மூவி சண்டை!

(நாங்க புதுசா கட்டிக்கிட்ட சோடிதானுங்க!!!)

குசும்பன் said...

வெண்பூ said...

//வாழ்த்துக்கள்... சென்று வந்தபின் உங்கள் அனுபவத்தை பதிவிடுங்கள்.//

பேட் பாய்:))

குசும்பன் said...

வடகரை வேலன் said...
ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.//

வள்ளுவ பெருந்தகையே “முயங்க” என்பது என்ன அது மெட்ராஸ் பாசையா?

தாமிரா said...

வாங்க வெண்பூ.! (சும்மா கற்பனையாத்தான் இதை எழுதினேன் வெண்பூ.. ஆனால் நிஜமாகவே சென்று வருவது மாதிரி ஒரு ஐடியா இருக்குது. இப்போதைக்கு முடியுமா தெரியவில்லை..)

வாங்க வடகரை.! அழைப்புக்கு நன்றி, விரைவில் வர முயல்கிறேன்.

வாங்க குசும்பன்.! வழக்கம் போல கலக்குறீங்க.. எதிர்வசனம் எழுதலாம்னு யோசித்துப்பார்த்தேன். முடியல.. (நாட்டாமை தீர்ப்புக்கு எதிர்தீர்ப்பா?) யாராவது மங்களூர் மாதிரி ஆளுங்கதான் வரணும். பார்ட்டி ட்ரீம்ல முழுகி தூக்கத்திலயும் ஜொள்ளு வழியுதாமே.. அப்பிடியா?

தாமிரா said...

நிறைய பேரு தங்கமணி பதிவு கேட்டாங்களேனு மெனக்கெட்டு போட்டேன். கூட்டமேயில்லாமல் கடை காத்து வாங்குதே.. ஞாயிற்றுக்கிழமை பதிவு போடக்கூடாதோ.. யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..

புதுகை.அப்துல்லா said...

பிரச்சனை வராம தடுக்கிறது முடிவு எடுக்கும் விஷயத்தில் இருக்கு. பெரிய பிரச்சனைக்கெல்லாம் நான் முடிவு எடுப்பேன். உதாரணமா ஈராக் மேட்டர்ல புஷ் பண்ணுனது சரியா? கர்நாடகாவை எதிர்த்து காவிரி மேட்டர்ல மீண்டும் அப்பீல் போகணுமா...இந்த மாதிரி. சின்ன மேட்டர்ல எல்லாம் தங்கமணி முடிவுக்கு விட்டுருவேன். உதாரணமா என் காசையெல்லாம் என்ன பண்றது...இதுமாதிரி. பொழைக்க கத்துக்கப்பா ராசா :))

Saravana Kumar MSK said...

// குசும்பன் said...

//நாமும் இந்த‌ ஆ.:பீஸில் பார்த்த‌ முக‌ங்க‌ளையே எத்த‌னை நாட்க‌ள்தான் பார்த்துக்கொண்டிருப்ப‌து,//

இதுக்காக தினம் ஒரு ரிசப்ஸினிஸ்டையா மாற்ற முடியும்!!!//

ரிப்பீடேய்..

Saravana Kumar MSK said...

// வெண்பூ said...

பதிவு சிரிக்க வைத்தாலும் ஒரு சீரியஸ் பின்னூட்டம். கண்டிப்பாக ஊட்டிக்கு சென்று வாருங்கள் தாமிரா. அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அது ஒரு நல்ல ப்ரேக் ஆக இருக்கும், நம் ஒவ்வொரு நாளைய இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து.

இன்னொன்று அங்கே செல்வது குடும்பத்துடன் நேரம் செலவிட என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். அங்கு சென்றதும் அலுவலக போன்கால்கள், இணையம் இவையெல்லாம் இல்லாமல் இருந்தால் நல்லது.

வாழ்த்துக்கள்... சென்று வந்தபின் உங்கள் அனுபவத்தை பதிவிடுங்கள்.//

ரிப்பீட்டேய்..

Anonymous said...

//குசும்பன் said...

வடகரை வேலன் said...
ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.//

வள்ளுவ பெருந்தகையே “முயங்க” என்பது என்ன அது மெட்ராஸ் பாசையா?//

யோவ் குசும்பா, அது தெரியாமத்தான் கல்யாணம் கட்டீருக்கியாக்கும்?

தமிழ் பிரியன் said...

அப்ப வருடங்கள் ஆக ஆக சண்டையும், சமாதான காலமும் அதிகமாகும் போல இருக்கே... :)

தமிழ் பிரியன் said...

///குசும்பன் said...

//அவளே பேசட்டுமே என்று காத்திருந்தேன். ஆனால் அது நடப்பதாய் தெரியவில்லை. //

சேவல் கோழி முட்டை போடாது!!!///
இப்ப தான் அனுபவம் கரீட்டா பேசுது போல... ;)

தமிழ் பிரியன் said...

///தாமிரா said...

நிறைய பேரு தங்கமணி பதிவு கேட்டாங்களேனு மெனக்கெட்டு போட்டேன். கூட்டமேயில்லாமல் கடை காத்து வாங்குதே.. ஞாயிற்றுக்கிழமை பதிவு போடக்கூடாதோ.. யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..///
சனி, ஞாயிறு பதிவு போட்டா காத்து வாங்காம என்ன செய்யும்? ???? ;)))

தமிழ் பிரியன் said...

///புதுகை.அப்துல்லா said...

பிரச்சனை வராம தடுக்கிறது முடிவு எடுக்கும் விஷயத்தில் இருக்கு. பெரிய பிரச்சனைக்கெல்லாம் நான் முடிவு எடுப்பேன். உதாரணமா ஈராக் மேட்டர்ல புஷ் பண்ணுனது சரியா? கர்நாடகாவை எதிர்த்து காவிரி மேட்டர்ல மீண்டும் அப்பீல் போகணுமா...இந்த மாதிரி. சின்ன மேட்டர்ல எல்லாம் தங்கமணி முடிவுக்கு விட்டுருவேன். உதாரணமா என் காசையெல்லாம் என்ன பண்றது...இதுமாதிரி. பொழைக்க கத்துக்கப்பா ராசா :))///
ஹிஹிஹி நாமலும் அண்ணன் வழி தான்... பாகிஸ்தான் பிரச்சினை, அணு ஆயுத ஒப்பந்தம் இது மாதிரி மேட்டர்லதான் நாம முடிவு எடுக்கிறது... மத்த உள்நாட்டில் நடப்பதெல்லாம் தங்கமணி தான்.. :)

குடுகுடுப்பை said...

தங்கமணி பற்றிய பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கே பயமா இருக்கே.

கார்க்கி said...

//ஞாயிற்றுக்கிழமை பதிவு போடக்கூடாதோ.. யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா//

ஆமாம் தாமிரா... நானும் ஃப்ரீயா இருக்கேனு மூனு பதிவு போட்டேன்... சரியான வியாபாரம் இல்ல... அப்பவும் நம்ம தல ஜே.கே.ஆர் பதிவு மட்டும் சூடாயிடிச்சு.. ஆஆஆஆஆங்ங்ங்ங்ங்ங் அப்புறம் தங்கமணி பதிவுக்கு நன்றி..வழக்கம் போல் கலக்கல்...

Anonymous said...

ஊட்டிக்கு போறதுன்னு நீங்களே முடிவெடுத்தா அப்படித்தான் போன இடத்திலயும் சண்டை வரும். முதல்ல தங்கமணி கிட்ட எங்க போலாம்னு ஐடியா கேக்காம முடிவு பண்ண ஆணாதிக்கவாதி தாமிரா ஒளிக!! ஹிஹி சும்மா உணர்ச்சி வசப்பட்டுட்டேன்

rapp said...

என்னங்க நீங்க இப்படி பொத்தாம் பொதுவா தலைப்பு வெக்கறீங்க? யாரோட தங்கமணியை கூட்டிட்டுப் போற ப்ளான்னு தெளிவா சொன்னாத்தானே தெரியும்:):):)(ஆஹா, ஜாலியா பின்னூட்டம் போட்டிருக்கேன், தயவுசெஞ்சு தப்பா எடுத்துக்காதீங்க)

சந்தனமுல்லை said...

:-)))

தாமிரா said...

வாங்க புதுகை ://சின்ன மேட்டர்ல எல்லாம் தங்கமணி முடிவுக்கு விட்டுருவேன். உதாரணமா என் காசையெல்லாம் என்ன பண்றது...இதுமாதிரி// நானும் கிட்டத்தட்ட அப்பிடித்தான், ஆனா மிகச்சில விஷயங்களில் போராடிப்பார்ப்பேன்.. ஆனா அதுவும், ஊத்திக்கும்.!

சரவணக்குமாரின் ரிப்பீட்டுகளுக்கு ஒரு நன்றி.!

நான் எப்பிடி மடக்கலாம்னு யோசிச்சிட்டு விட்டுட்டேன். நீங்க கரெக்டா புடிச்சிட்டீங்க வேலன்.. சீனியர்னா, சீனியர்தான்.!

தாமிரா said...

வாங்க தமிழ், மெக்காவுக்கு போயிட்டு அதுக்குள்ள வந்திட்டீங்களா? நீங்க அங்க பக்கத்திலதான் இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நான் ரொம்ப நாள் ஆகும்னு நெனச்சேன்.

//சனி, ஞாயிறு பதிவு போட்டா காத்து வாங்காம என்ன செய்யும்?// இதுக்குதான் பெரியவங்க வேணும்கிறது..

//ஹிஹிஹி நாமலும் அண்ணன் வழி தான்...// நீங்களுமா? ஒரு வீரன் கூட இந்த நாட்டில் கிடையாதா.?

புதுகை.அப்துல்லா said...

ஒரு வீரன் கூட இந்த நாட்டில் கிடையாதா.?
//

எதுக்கு வீரனா இருந்து ஓதைப் படனும்? முட்டாளா இருந்து சந்தோஷமா இருப்போங்கிறேன் :))

தாமிரா said...

வாங்க குடுகுடுப்பை.!

வாங்க கார்க்கி.! (உலகமெங்கிலும் கரண்டு போனாலும் த‌லயைப்பத்தின பதிவு சூடாகித்தான் தீரணும்.!)

வாங்க அம்மிணி, ரொம்ப நாளாச்சு.. (ரமாகிட்ட எங்க போலாம்னு கேட்டா மனுஷனுக்கு பல சமயங்களில் பைத்தியம் புடிச்சுடுது, பதில் பெரும்பாலும் கீழ்க்கண்ட மாதிரி இருக்கும்.

டி.நகர் போலாம், பைக் வேண்டாம்.,
ஊருக்கு போலாம், ட்ரெய்ன் வேண்டாம்.,
ஊட்டிக்கு போலாம், நைட் தங்கல் வேண்டாம்...

தாமிரா said...

வாங்க ராப்.! (நீங்க‌ ஒரு ஆள்தாங்க‌ துணிஞ்சு சேம் சைடு கோல் போடுறீங்க‌.. வாழ்த்துக‌ள்)

வாங்க முல்லை.!

தாமிரா said...

புதுகை.. லைன்லதான் இருக்கீங்களா? பகல்ல கும்ம நம்மால ஆகாது சாமி.!

அது சரி said...

இந்த மக்க ஏம் இப்பிடி அப்பாவியா இருக்காக? ஒம்ம முந்தின பதிவையும், இந்த பதிவையும் சேத்து படிச்சாதான்வே நீரு ஊட்டிக்கு ஓடுற ரகசியம் புரியுது. எல்லா மக்காவையும் ஏசிட்டு நீரு ஊட்டி ஓட பாக்குறீரோ?? ஊட்டிலயும் நம்ம பயலுவ இருக்கானுவல்லா?? ஊரு பாவம் சும்மா விடாதுவே ;)

பாபு said...

கல்யாணத்துக்கு அப்புறம் வெட்கம் மானம் எல்லாம் பாக்க கூடாது
நான் எல்லாம் அதை விட்டு 4 வருஷம் ஆகுது

தாமிரா said...

வாங்க அதுசரி.!
வாங்க பாபு.!

Vijay said...

//கல்யாணத்துக்கு அப்புறம் வெட்கம் மானம் எல்லாம் பாக்க கூடாது
நான் எல்லாம் அதை விட்டு 4 வருஷம் ஆகுது//

பாபு, வெட்கம் செரி, அது என்னா மானம்? அப்டி ஒண்ணு இருந்துச்சினே நாங்க எல்லாம் மறந்துட்டோமாக்கும்.