Tuesday, September 9, 2008

பொண்ணு பாக்க போறீங்களா.?

இன்னும் தங்கம் வீடு திரும்பவில்லை என்பதால் கண்ணனுடன் சேர்ந்து கொண்டு பக்கத்தில் ஒரு டாஸ்மாக்கில் ஒரு நைன்டி அடிக்கலாம் என்று திட்டமிட்டு அதன்படி நேற்று சென்றோம். பதிவிலிட‌ எக்கச்சக்கமான விஷயங்கள் (Topics) இருந்தாலும் எதை முதலில் எழுதுவது என்பதில்தான் நமக்கு சிக்கல் வரும், பிறரைப்போல விஷயமே கிடைக்காமல் எல்லாம் அல்லாடுவதில்லை (பரிசல், அப்துல் கவனிக்க..).

ஆகவே அதுகுறித்து கண்ணனிடம் டிஸ்கஸ் செய்வது வழக்கம். முழுசாக அவன் பேச்சைக்கேட்டாலும் போச்சு, டவுசர் கிழிஞ்சுடும்..

'பதிவு ஹிட் ஆகி ரொம்ப நாளாவுது, ஏதாச்சும் சினிமா பத்தி டாப்10, டாப்5 இந்த மாதிரி ஏதாவது போடு. நீ வெச்ச தேர்தல்ல சினிமா பத்தின பதிவுகளுக்கு ஒரு ஓட்டுகூட‌ விழலன்னு பாக்கிறியா.. அது டுபாக்கூரு.'

'ஏண்டா அதெல்லாம் வேண்டாம்னுதானே இருக்கோம், அப்புறம் என்ன திரும்பவும்..'

'அஜித் மாதிரி ஆச்சுது உன் நெலம. நமக்கு இப்ப தேவை நல்ல படம் கிடையாது. ஒரு ஹிட். நான் சொன்னா மாதிரி நீ போடேன் முதல்ல, ஹிட்டாவும் பாரு..'

சரியென்று தலையாட்டிவிட்டு டாபிக்கை மாத்தினேன்.
'ஆமா, அசோக் நகர்லேர்ந்து இருந்து ஒரு பொண்ணு வந்துதே, ஜாதகம் பொருந்துச்சாமா.?'

'அது ஊத்திக்கிச்சு, அக்கா நேத்துதான் போன் பண்ணினா ஆனா தாம்பரத்தில ஒரு பொண்ணு இருக்குதாம், ஜாதகம் நல்லாருக்குது ஆனா அவ வேலைக்கு போகலையாம். அப்பாவும் பரவால்லன்னுட்டாங்க. வர்ற வெள்ளிக்கிழமை வரச்சொல்லிருக்கானுங்க‌, சாந்திரம் நாலு மணிக்கு மேலதான் போறோம்.. அக்கா நாளைக்கு வந்துடுவா, நீ வர்றியா எப்பிடி?'

'சரி முடியுதானு பாக்கிறேன்'

அப்புறமா பேச்சு வளந்து அவனுக்கு சில அறிவுரைகள் சொல்லவேண்டியதா போச்சுது.. அது உங்களுக்கும் தேவைப்படும்ங்கிறதால இங்கே..

1.ஏற்கனவே ஜாதகம், ஸ்டேடஸ் எல்லாம் சரியா இருக்கப்போயிதானே பொண்ணு பார்க்க போறோம். அதனால பொண்ணு எப்படி இருந்தாலும் ஓகே சொல்லிடணும், புடிக்கலைன்னு சொன்னா அந்த பொண்ணோட மனசு என்ன பாடுபடும்? என்று உதாரண புருஷத்த‌னமாக எல்லாம் யோசிக்கவேண்டாம். அந்தப்பெண் பார்க்கவரும் உங்களையே அதற்குள்ளாக கண‌வனாக மனதில் வரிந்துகொண்டெல்லாம் இருக்கமாட்டாள். புடிக்கவில்லை எனில் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். 5 நிமிஷத்தில் அந்த பிரச்சினை முடிந்துவிடும், ரெண்டு பேரும் தப்பிவிடுவீர்கள்.

2.மிக நெருங்கிய உறவினர்களைத்தவிர (அப்பா, அம்மா, உடன்பிறப்புகள்) யாரையும் அழைத்துப்போகவேண்டாம். குறிப்பாக நெருங்கிப்பழகியிறாத, குணமறிந்திறாத நபர்கள் வேண்டாம். உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் ச‌ம்பந்தம் நிகழ்ந்துவிடும், அல்லது பிடித்திருந்தால்கூட முறிந்துபோகக்கூடும்.

3.மெனக்கெட்டு முடிவெட்டி, .:பேஷியல் பண்ணி, ட்ரெஸ் பண்ணி என.. பேக்குத்தனமாக ஆகிவிடாதீர்கள். அந்தப்பெண் பயந்துவிடப்போகிறாள். தினமும் ஆபீஸ் போவதுபோல கிளம்பிச்செல்லுங்கள்.

4.ரொம்ப நாகரீகத்தனமாக பேசிப்பார்க்க பெருசுங்க அனுமதி தந்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். அதனால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. பத்து வருடங்களானாலும் புரிந்து கொள்ளமுடியாத ஒரு விஷயத்தை பத்து நிமிடத்திலா புரிந்துகொள்ளப்போகிறீர்கள்?

5.அவர்கள் தரும் உணவுப்பண்டங்களை அளவோடு வாங்கி முழுதும் சாப்பிட்டுவிடுங்கள். மிச்சம் வைத்து வெறுப்பேற்றாதீர்கள் அல்லது மொக்கு மொக்கென்று மொக்கி மலைப்படைய வைக்காதீர்கள்.

6.குறிப்பாக தொப்பையை மறைக்க ஸ்பெஷல் பெல்ட் போட்டுத்தொலைக்காதீர்கள்.

7. பொண்ணு அழகாயிருந்து பிடித்திருந்தால் டப்பென்று ஓகே சொல்லிவிடுங்கள். ஏனென்றால் கிடைப்பது அரிது. மேலும் எல்லா அழகான பெண்களாலும் நமக்கு தீது நேர்வதில்லை மற்றும் எல்லா சுமாரான பெண்களாலும் நமக்கு நன்று நேர்வதுமில்லை. விதி வலியது.

போதுமா..? சரி விட்டுவிடுகிறேன். அடுத்து நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடைப்பட்டநேரத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என பதிவு போடலாம்னு இருக்கேன்.. வேணுமா? வேண்டாமா?

காதலிக்கும் போதைப்பற்றி (போது=பொழுது) எழுதுங்கள் என்று ரசிகர் கூட்டம் கேட்டாலும், இப் போதைக்கு அதை எழுதமுடியாது என்றும் அது பின்னாளில் பெரிய ஆளானபிறகு 800 பக்கத்திற்கு நாவலாக எழுத ரிஸர்வ் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.


22 comments:

வெண்பூ said...

மீ த பஷ்டூ...

வெண்பூ said...

படிச்சிட்டேன். கருத்து சொல்ல அப்பாலிக்கா வரேன்.

விஜய் ஆனந்த் said...

// பத்து வருடங்களானாலும் புரிந்து கொள்ளமுடியாத ஒரு விஷயத்தை பத்து நிமிடத்திலா புரிந்துகொள்ளப்போகிறீர்கள்? //

:-(((..

ஆமாண்ணே....

(சரி சில பர்சனல் கேள்விகள்...அது ஏன் எப்பவும் நைன்டி மட்டும் அடிக்குறீங்க?? அதுவும் மெனக்கெட்டு அம்மாந்தூரம் போயி???அப்புறம், நைன்டி அடிக்கறத்துக்குள்ளயா இவ்ளோ மேட்டரு பேசுனீங்க???சாதரணமா 3 to 5 minutes-தானே ஆவும்??? எல்லாத்தையும் டாஸ்மாக்குலதான் வச்சி பேசுனீங்க அப்படின்னா, கடைக்காரன் குவாட்டர் வாங்கிட்டு இவ்ளோ (@#$***&$#)நேரமான்னு கெளம்பச்சொல்ல்லியா?? கடைசி கேள்வி...நேத்தாச்சும் அந்த கட்டிங்க வாந்தியெடுக்காம முழுசா குடிச்சீங்களா???)

வெண்பூ said...

நல்ல அறிவுரைகள் தாமிரா.

1. ரொம்ப சரி. புடிக்கலைன்னா புடிக்கலைன்னு சொல்றதுக்கு கூச்சப்பட வேண்டாம்.
2. ரொம்ப சரி. முக்கியமா ரொம்ப கம்மி ஆளுங்களை கூட்டுட்டு போங்க. 10 பேர், 15 பேர்னு கும்பலா போகாதீங்க. நீங்க வேணாம்னு சொன்னா அந்த பொண்ணோட மனசு கஷ்டப்படுறது (மற்றும் பொண்ணு உங்கள வேணாம்னு சொன்னா உங்களுக்கு அவமானமும்) கொஞ்சம் கம்மியா இருக்கும்.
3. கரெக்ட். ஆனா அவங்க ரொம்ப மேக்கப்புல இருக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. அதை பாத்து ஏமாந்துடாதீங்க‌
4. இதை ஒத்துக்கொள்ள முடியாது தாமிரா. கண்டிப்பாக பேசுங்கள். குறைந்தது அந்த பெண் நம்மை போலவே எக்சைட்டா இருக்கா? இல்லை ஏனோதானோன்னு இருக்கா? அவங்க அப்பா அம்மா ஃபோர்ஸ் பண்றதால ஒத்துகிச்சா? இதெல்லாம் கண்டிப்பா தெரியவரும்.
5. ஹி..ஹி.. கரெக்டு
6. ஹி..ஹி.. டபுள் கரெக்டு
7. சூப்பர்

முக்கியமான இன்னொரு விசயம். பொண்ணு பாக்க போறேன்னு சொல்லி அவங்கள டார்ச்சர் பண்ணாதீங்க. பொண்ணை சேலையில பாத்ததுக்கப்புறம், சுடிதார்ல பாக்கணும் கட்டிட்டு வர சொல்லுங்கன்னு டார்ச்சர் பண்ணினதெல்லாம் கேள்விபட்டிருக்கேன். :(

பாபு said...

பொண்ணு பார்க்கறது அப்படின்ற விஷயத்தை நம்ம சினிமா ஆட்களும்,கதாசிரியர்களும் தப்பு தப்பா சொல்லியிருக்காங்க.என்னோட அனுபவம் பத்தி நிறைய எழுதலாம்

தாமிரா said...

வாங்க வெண்பூ ://இதை ஒத்துக்கொள்ள முடியாது தாமிரா. கண்டிப்பாக பேசுங்கள். குறைந்தது அந்த பெண் நம்மை போலவே எக்சைட்டா இருக்கா? இல்லை ஏனோதானோன்னு இருக்கா?//

அய்யே.. இதப்பாருங்க நம்ப பதிவப்போயி சீரியஸா ஆராய்ச்சி பண்ணுனதோட இல்லாம, எதிர் கருத்து வேற குடுத்துருக்கார். எல்லோரும் இவரப்பாத்து சிரிங்க..

தாமிரா said...

வாங்க விஜய் : பாத்தீங்களா வெண்பூ சொல்றதை.. (நாங்கல்லாம் நைன்டியவே நைன்டி நிமிஷம் அடிக்கிற ஆளுங்க, குப்புனு அடிச்சா குபுக்குனு வெளியே வந்திருது.. என்ன பண்ணுறது?)

வாங்க பாபு : நீங்களும் எழுதலாமே.!

சந்தனமுல்லை said...

பாயிண்ட் 4 ரொம்ப பிராக்டிகலா இருக்கு..!! :-)!

தமிழ் பிரியன் said...

அறிவுரைகள் நல்ல அறிவுரைகள்.... நான் பெண் பார்க்கப் போன போது பெண்ணிடம் பேசச் சொன்னார்கள்., பல வருடங்களாகியும் புரிந்து கொள்ள இயலாத பெண்ணின் மனதை பத்து ந்மிடத்திலா புரிந்து கொள்ள இயலும் என விட்டு விட்டேன்.. :)

வால்பையன் said...

//பிறரைப்போல விஷயமே கிடைக்காமல் எல்லாம் அல்லாடுவதில்லை (பரிசல், அப்துல் கவனிக்க..).//

பரிசல எதுக்கு இழுக்குறிங்க!
அவரா மேட்டர் இல்லாம தடுமாறுராறு,
பைப்புல தண்ணி வரலைன்னா அத கூட ஒரு பதிவா எழுதிருவாறு

வால்பையன் said...

நீங்க சொன்ன எல்லா கருத்துக்களும் அருமை,
ஆனா எதுவுமே எனக்கு பயன்படாது.
ஏன்னா நான் ஏற்கனவே சிக்கி ஆறு வருடம் ஆச்சு!
இனிமே வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்ல

Anonymous said...

//பத்து வருடங்களானாலும் புரிந்து கொள்ளமுடியாத ஒரு விஷயத்தை பத்து நிமிடத்திலா புரிந்துகொள்ளப்போகிறீர்கள்?//

ரெம்ப செரின்னே. 2 வருசம் 3 வருசம் லவ்வுராய்ங்க, அவனுகனால கண்டுபிடிக்க முடியாததவா 10 நிமிசம் பேசிக் கண்டுபிடிக்க முடியும்?

தாமிரா said...

வாங்க முல்லை.!
வாங்க தமிழ்.! (நா இப்ப .:பீல் பண்றத சம்பவத்தன்னிக்கே நீங்க .:பீல் பண்ணிருக்கீங்கன்னா.. அதான் சீனியர்.!)

தாமிரா said...

வாங்க வால்.! (நானே பயந்துகினு இருக்கேன், நீங்க கூட கொஞ்சம் ஆப்பு வெக்கிறீங்க)
வாங்க வேலன்.! (சந்தடி சாக்குல அண்ணேவா? உங்க தலைமுடியையும், என்னோடதையும் ப்ரொபைல் போட்டோக்களில் ஒப்பிட்டு பார்க்கவும்.. அழுவக்கூடாது சும்மா ஜாலிக்கு.! இத போட்டோ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எடுத்தது.)

தாமிரா said...

எல்லோரும் கவனிக்க.. ஒவ்வொருவராய் ப்ரொபைல் போட்டோக்களில் முகம் காட்டத்துவங்கியிருக்கிறார்கள். ஆகவே வெண்பூ திரும்பலாம், மற்றும் பலரும் நிஜப்படங்களை போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதுகை.அப்துல்லா said...

மற்றும் பலரும் நிஜப்படங்களை போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
//

நாங்கள்லாம் அடுத்தவங்க வலைப்பூலதான் படத்தப் போடுவோம்.

கார்க்கி said...

//பரிசல எதுக்கு இழுக்குறிங்க!
அவரா மேட்டர் இல்லாம தடுமாறுராறு,
பைப்புல தண்ணி வரலைன்னா அத கூட ஒரு பதிவா எழுதிருவாறு//

ஒரு டவுட் வந்துச்சு.. ஏனோ சொல்ல மனசு வரல.. எங்கண்ணன் அய்யோ பாவம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நு விட்டுறேன்

விஜய் said...

ஹல்லோ தாமிரா (இது தான் உங்க நிஜ பெயரா??)
வித்தவுட்டில் பயணம் செய்வது மாதிரி , உங்க வலைத்தளம் பக்கம் வந்துட்டு கமெண்ட் போடாமல் போயிருக்கேன்.


\\அதனால பொண்ணு எப்படி இருந்தாலும் ஓகே சொல்லிடணும், புடிக்கலைன்னு சொன்னா அந்த பொண்ணோட மனசு என்ன பாடுபடும்?\\
இதுல எனக்கு அவ்வளவா உடன்பாடு இல்லை. ஒரு பெண்ணை குடௌம்பத்தோட போய் பார்த்துட்டு அவங்களைப் புடிக்கலைன்னு சொல்லறது ரொம்ப தப்பு. இதற்கு பதிலா, அந்த பெண்ணை தனியாகவோ அல்லது அவளது சகோதரனோ சகோதரியோ நண்பியோ வைத்துக்கொண்டு பேசிப்பார்த்துவிட்டு, சரிப்பட்டு வரலைன்னா, வேண்டாம்னு சொல்லிடலாம். இது எவ்வளவோ பெட்டர்.

\\அந்தப்பெண் பார்க்கவரும் உங்களையே அதற்குள்ளாக கண‌வனாக மனதில் வரிந்துகொண்டெல்லாம் இருக்கமாட்டாள். \\
ரொம்ப உண்மை

\\மெனக்கெட்டு முடிவெட்டி, .:பேஷியல் பண்ணி, ட்ரெஸ் பண்ணி என.. பேக்குத்தனமாக ஆகிவிடாதீர்கள். அந்தப்பெண் பயந்துவிடப்போகிறாள். \\
ஹா ஹா

\\அவர்கள் தரும் உணவுப்பண்டங்களை அளவோடு வாங்கி முழுதும் சாப்பிட்டுவிடுங்கள். மிச்சம் வைத்து வெறுப்பேற்றாதீர்கள் அல்லது மொக்கு மொக்கென்று மொக்கி மலைப்படைய வைக்காதீர்கள்.\\
ஏன் ஐயா நிறைய வாங்கி துன்னுட்டு கல்யாணம் ஆன பெறவு அண்ணி சொல்லிக்காட்டினாங்களோ?

\\அடுத்து நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடைப்பட்டநேரத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என பதிவு போடலாம்னு இருக்கேன்.. \\
சீக்கிரம் போடுங்க. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

கார்க்கி said...

//பரிசல எதுக்கு இழுக்குறிங்க!
அவரா மேட்டர் இல்லாம தடுமாறுராறு,
பைப்புல தண்ணி வரலைன்னா அத கூட ஒரு பதிவா எழுதிருவாறு//

ஒரு டவுட் வந்துச்சு.. ஏனோ சொல்ல மனசு வரல.. எங்கண்ணன் அய்யோ பாவம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நு //

என்னப்பா இதுக்கு பதில காணோம்

தாமிரா said...

நன்றி விஜய்.! (நீங்க கேட்டதுக்காகவே போட்டுறமாட்டேன்..)
நன்றி கார்க்கி.! (நீங்க கூப்பிட்டது வால்பையனையா? பரிசலையா?)

Anonymous said...

ரொம்ப நன்றிங்க சார்!

- கல்யாணமாகதவன்.

ARUVAI BASKAR said...

நிறைய்ய அனுபவம் போல இருக்குது !
சரி தானே !
/பொண்ணு அழகாயிருந்து பிடித்திருந்தால் டப்பென்று ஓகே சொல்லிவிடுங்கள். ஏனென்றால் கிடைப்பது அரிது. மேலும் எல்லா அழகான பெண்களாலும் நமக்கு தீது நேர்வதில்லை மற்றும் எல்லா சுமாரான பெண்களாலும் நமக்கு நன்று நேர்வதுமில்லை. விதி வலியது//.

இது சூப்பர்