Friday, September 12, 2008

கொசுக்களுடன் ஒரு யுத்தம்

அனைத்து ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. கொசுவிரட்டி (வேப்பரைஸர்) ஆன் செய்யப்பட்டிருந்தது. மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. (என்ன.. திகில் கதையும் நல்லா வரும்போல இருக்கே ராசா..). இருப்பினும் நேற்று என்னவென்று தெரியவில்லை, நள்ளிரவில் கொசுத்தாக்குதல் மிக அதிகமாக இருந்தது. என்ன காரணம் என்று புரியவில்லை, வேறு வழியில்லாமல் கடைசி ஆயுதத்தை எடுத்தாள் ரமா.

அதுதான் கொசுமருந்து என நான் அழைக்கும் ஓடமாஸ். எடுத்து ஒரு இடம் பாக்கியில்லாமல் மேனியெங்கும் பூசிக்கொண்டோம். இதனால் ஒரு பிரச்சினை என்னவெனில் தூங்க மட்டும்தான் முடியும். மீண்டும் தூங்க முயற்சிக்கையில் ஓடமாஸ் குறித்த ஒரு .;பிளாஷ்பேக் (கொசுவத்தி?) நினைவுக்கு வ‌ந்தது. கேட்க நீங்கள் தயாராக இருக்கும் போது நான் சொல்லாவிட்டால் எப்படி?

ஆறேழு வருடங்களுக்கு முன்னர், அம்பத்தூரில் ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக இருந்தபோது இரண்டாவது ஷிப்டில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பணிபுரிவேன். சுமார் முப்பது ஆபரேட்டர்கள், மூன்று சூப்பர்வைஸர்கள். மாலை ஆறு மணியிலிருந்து இரவு இரண்டு மணிவரை பணி. முடிந்ததும் அனைவரும் கம்பெனிக்குள்ளேயே ஆங்காங்கே படுத்துறங்கிவிடுவோம். அப்போதே வீடு செல்லலாம் எனில் பக்கத்திலிருந்து வருபவர்களுக்கு நாய்கள் தொல்லை, தூரத்திலிருந்து வருபவர்களுக்கு கூடுதலாக‌ போலீஸ் தொல்லை (இப்போது ஐடி கார்டு வந்துவிட்டதாம்). எனது அறை பக்கத்தில் ஒரு கிலோமீட்டர்தான். ஆகவே ஆரம்பத்தில் ஒரு நாள் 'நாய்க்கெல்லாம் பயப்படுவதா? அதுவும் நானா.. ஹிஹி..' என்று வீரவசனம் பேசிவிட்டு இரவே கிளம்பினேன். என் வீரத்தைப்பார்த்து இன்னொரு நண்பரும் கிளம்பினார்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அலறிப்புடைத்துக்கொண்டு ஆறேழு நாய்கள் கொலைவெறியுடன் துரத்த இன்னொரு கம்பெனிக்குள் அடைக்கலம் புகுந்தோம். அங்கு நல்ல அறிவுரைகள் கிடத்தன, நண்பனின் கொலைவெறியை சமாளித்தது தனி கதை. ஆகவே அதன்பின் அந்த முயற்சியை கைவிட்டு நானும் கம்பெனியிலேயே இரவு தங்கத்துவங்கினேன், கவனிக்கவும் 'தூங்க' அல்ல 'தங்க'. அங்கு ஒரு புதிய சோதனை. கொசுக்கள்.

சாதாரண காலங்களிலேயே சமாளிக்கமுடியாமல் திணறுவோம். அது ஒரு கொசுக்காலம். ஷிப்ட் முடிந்த பின்னர் படையெடுத்துவரும் கொசுக்களை விரட்ட எத்தனையெத்தனையோ முயற்சிகள்.

ஓரிடத்தில் ஒவ்வொரு சேர்களுக்கு அடியிலும் ஒரு டப்பாவில் ஏதேதோ புகையும் சமாச்சாரங்களை போட்டுக்கொண்டு சேர்களில் நான்கு பேர் உட்கார்ந்திருப்பார்கள். சிலர் அந்த டப்பாவின் மீதே உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் உயிர் நீத்தவர்களின் தலைமாட்டில் ஒரு தீபம் வைத்திருப்பதைப்போல பல கொசுவத்திகளை உடம்பைச்சுற்றிலும் வைத்துவிட்டு ஆடாமல் அசையாமல் படுத்திருப்பார்கள், இதில் ஒரு ஆபத்து லேசாக புரண்டாலும் போச்சு. சிலர் தூக்கமாவது ஒண்ணாவது என்று கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஓரிடத்தில் நிற்காமல் உலாத்திக்கொண்டிருப்பார்கள், கால்வலித்து நிற்கும் போது புகைபிடித்து ஒருவர் மீது ஒருவர் ஊதிக்கொள்வார்கள் (புகைபிடிப்பதில் இப்படியும் ஒரு நன்மை). இன்னும் சிலர் உற்பத்திப்பொருட்களை பேக் செய்ய வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர திக்கான பாலிதீன் பைகளுக்குள் நுழைந்துகொண்டு கழுத்துவரை மூடிக்கொண்டு வட்டமாக உட்கார்ந்துகொண்டு கதைபேசிக்கொண்டிருப்பார்கள். முகத்தில் கடிக்கும் கொசுவை விரட்டிவிட்டு டப்பென்று கையை உள்ளுக்கு இழுத்துக்கொள்வார்கள்.

பலநாட்கள் இந்த சித்திரவதைகளை நானும் அனுபவித்துக்கொண்டிருந்தேன். இமைகளுக்கு தூக்கமென்பதே இம்மியளவும் கிடையாது. நாளுக்கு நாள் கொசுக்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டிருந்தது. ஒருநாள் கூட்டப்பட்ட மானேஜ்மென்ட் கூட்டத்தில் தொழிலாளர்கள் சார்பில் இந்த பிரச்சினையை பேசி பலத்த கைத்தட்டல் வாங்கினேன். (பாராளுமன்றத்தில் எம்பிக்கள் பேசுவது போல) ஆனால் பலன் ஒன்றுமில்லை.

கடைசியில் ஒருநாள் ஓடமாஸ் விளம்பரத்தைக் கண்ணுற்று ஆகா இப்படி ஓர் விஷயம் இருப்பது தெரியாமல் போய்விட்டதேயென்று அன்று பல ட்யூபுகள் வாங்கிக்கொண்டு போனேன். என் திட்டம் ஜெயித்தது. ஓடமாஸை உடலெங்கும் (ஒரு குண்டுமணி இடம் பாக்கியிருக்கக்கூடாது, உள்ளங்கால் உட்பட நல்ல திக்காக .:பேர்&லவ்லி போல‌) பூசிக்கொண்டேன். எங்களுக்கு உற‌ங்க மிக வசதியான ஒரு இடம் இருந்தது. அதுதான் கொசுக்கள் முழுதும் ஆக்கிரமித்துக்கொண்ட அட்டைக்குடோன். அதை நினைத்து நினைத்து புலம்புவோம். இப்போது ஆயுதம் தரித்திருப்பதால் தைரியமாக கொசுக்குடோனுக்குள்ளேயே ஸாரி, அட்டைக்குடோனுக்குள்ளேயே நுழைந்தேன்.
பரபரப்பான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி. உடலெங்கும் ஓடமாஸ் பூசிக்கொண்டிருந்ததால் என் உடம்பிலிருந்து ஒரு அரையடி தூரத்தில் கொசுக்கள் பேரிரைச்சலுடன் அலைபாய்ந்து கொண்டிருந்ததும், நேரம் செல்லச்செல்ல அந்த இடைவெளி குறைந்துகொண்டே வந்ததும் பயங்கர திரில் அனுபவமாய் இருந்தது. அங்கிருந்த‌
அட்டைகளை விரித்து (மிக வசதியானது, மெத்தைபோல) நிம்மதியாக உறங்கிக்காட்டினேன். இதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் 2.30 மணி நேரத்திற்கு பின்னர் எழுந்து இன்னொரு கோட்டிங் பூசிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் தெரியும் சேதி.

அன்றிலிருந்து சிங்கத்தின் குகைக்குள்ளேயே போய் அதைவென்று காட்டிய வீரன் என அனைவராலும் புகழப்பட்டேன்.

40 comments:

உருப்புடாதது_அணிமா said...

மொத போனி ஆஜர்

உருப்புடாதது_அணிமா said...

வீரர் தாமிரா வாழ்க.. ( கூவத்தில் இருந்து அழைப்பு )

உருப்புடாதது_அணிமா said...

///ஒரு குண்டுமணி இடம் பாக்கியிருக்கக்கூடாது, ////

விளக்கம் தேவை

உருப்புடாதது_அணிமா said...

//வேறு வழியில்லாமல் கடைசி ஆயுதத்தை எடுத்தாள் ரமா =அதை வென்று காட்டிய வீரன் //

வீரனா?? வீராங்கனையா??

ஒண்ணுமே புரில போங்க

பாலராஜன்கீதா said...

17-09-2008 தேதியிட்டு இன்று வந்துள்ள விகடனில் அமிர்தவர்ஷிணி என்ற தலைப்பில் (எழுத்தாளர் தாமிரா) வந்துள்ளது. அது நீங்கள் எழுதிய கதையா ?

வாழ்த்துகள்.

விஜய் ஆனந்த் said...

அடடே!!!

ஓடமாஸ் வச்சி கொசுவத்தி சுத்தறாங்களே!!!

சந்தனமுல்லை said...

:-)...முழு சென்னைவாசியாகிட்டீங்கன்னு சொல்லுங்க!!

ஜோசப் பால்ராஜ் said...

தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனையால் மின்விசிறி கூட இயங்க முடியாமல் எல்லோரும் கொசுப் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ஓடமாஸ் கொசு விரட்டியைப் பற்றி பதிவெழுதி அந்த நிறுவனத்திற்கு விளம்பரம் செய்ய தாமிரா அண்ணண் வாங்கிய தொகையில் எனக்கும் பங்கு தர இருப்பதால், அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவரும் ஓடமாஸை வாங்கி உபயோகித்து அதன் வருமானத்தை பெருக்க உதவுமாறு இப் பின்னூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் பிரியன் said...

சிங்கத்தின் குகைக்குள்ளேயே போய் அதைவென்று காட்டிய வீரன் தாமிரா வாழ்க! வாழ்க!

தமிழ் பிரியன் said...

ஆமா உங்க பேரில் தான் தாமிரம் இருக்கே... தாமிரத்தையுமா கொசு கடிக்கும்,.... ;))

தமிழ் பிரியன் said...

நானும் அம்பத்தூர் எஸ்டேட்டில் வேலைசெய்த போது இரவு பணிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட இருக்க மூடியாதுண்னு ஓடி வந்துடுவேன்.. :)

தமிழ் பிரியன் said...

நாங்களும் அம்பத்தூர் TCS ல் வேலைசெய்தோமே

பரிசல்காரன் said...

வீராதி வீரன், சூராதி சூரன் கொசு கொண்டான் வாழ்க! வாழ்க!!

சென்ஷி said...

ஹா..ஹா...

//பரிசல்காரன் said...
வீராதி வீரன், சூராதி சூரன் கொசு கொண்டான் வாழ்க! வாழ்க!!
//

ரிப்பீட்டே :))

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆஹா, எப்போலிருந்து ஓடமாஸ்க்கு விளம்பர அம்பாஸடர் ஆனீங்க பாஸ்?

Vishnu... said...

நல்ல பதிவு... பாராட்டுக்களுடன் ...

சிரித்துக்கொண்டே ...

Anonymous said...

வீரர் தாமிரா வாழ்க!!!

ஃஃஅதன் வருமானத்தை பெருக்க உதவுமாறு இப் பின்னூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.ஃஃ

ஆஹா.

கார்க்கி said...

இன்று கொசுக்களின் எமன்.. விரைவில் ?????????

தாமிரா said...

நன்றி அணிமா.
நன்றி பாலராஜன்கீதா.

‍**இந்த இடத்தில் ஒரு அறிவிப்பு செய்யவேண்டியுள்ளது. பாலராஜன்கீதா கேட்டதைப்போலவே மேலும் சில நண்பர்கள் போனிலும், மெயிலிலும் விசாரித்தனர். மேலும் விகடனின் ரீச் மிகப்பெரிது. உங்கள் வாழ்த்துகளுக்கு உரிய தாமிரா நான் இல்லை. இருப்பினும் பெயருக்கு போட்டி வந்ததில் எனக்கு குழப்பம்+வருத்தம்**

நன்றி விஜய்.
நன்றி முல்லை.

தாமிரா said...

நன்றி ஜோஸப்.
‍**இப்பிடி ஒரு விஷயத்தை நான் யோசிக்கவேயில்லையே.. நாமளும் பிரபலமாயிட்டேதான் வறோம் போலருக்குது. ஓடமாஸைப்புடிச்சி பணம் கறக்க ஏதும் வழியிருந்தா சொல்லுங்க பாஸ்.!**

நன்றி தமிழ்.
**நீங்க நாலு பின்னூட்டம் போட்டிருப்பதைப்பார்த்தால் இது மொக்கைப்பதிவு என்பது கன்பர்ம் ஆகிறது, ஆமா நீங்களும் முன்னாள் அம்பத்தூரா?**

நன்றி பரிசல்.
**கொசு கொண்டானா? நல்லாருக்கே.. சில‌ வரிகள் மிஸ்ஸாயிடுச்சு பரிசல். இறுதிக்காட்சி. கொசுக்குடோனுக்குள் புகுந்த பரபரப்பான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி. உடலெங்கும் ஓடமாஸ் பூசிக்கொண்டு படுத்தவுடன் என் உடம்பிலிருந்து ஒரு அரையடி தூரத்தில் கொசுக்கள் பேரிரைச்சலுடன் அலைபாய்ந்து கொண்டிருந்ததும், நேரம் செல்லச்செல்ல அந்த இடைவெளி குறைந்துகொண்டே வந்ததும் பயங்கர திரில் அனுபவம்**

தாமிரா said...

நன்றி சென்ஷி.
**பெரிய ஆளுங்கல்லாம் நம்ப பதிவுக்கு வர்றாங்கோ**
‍நன்றி ரிஷான்.
**பெரிய ஆளுங்கல்லாம் நம்ப பதிவுக்கு வர்றாங்கோ** ரிப்பீட்டு.
நன்றி விஷ்ணு.
நன்றி சுபாஷ்.
நன்றி கார்க்கி.

தாமிரா said...

ஸாரி, முதல் முறையாக சுவாரஸ்யம் கருதி பதிவில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது இறுதிப்பகுதியில். வரிகள் கூடுதலாக்கப்பட்டுள்ளன‌, பொறுத்தருளவும்.

Saravana Kumar MSK said...

//விஜய் ஆனந்த் said...
அடடே!!!

ஓடமாஸ் வச்சி கொசுவத்தி சுத்தறாங்களே!!!//

ரிப்பீட்டேய்..

Saravana Kumar MSK said...

//ஜோசப் பால்ராஜ் said...
தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனையால் மின்விசிறி கூட இயங்க முடியாமல் எல்லோரும் கொசுப் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ஓடமாஸ் கொசு விரட்டியைப் பற்றி பதிவெழுதி அந்த நிறுவனத்திற்கு விளம்பரம் செய்ய தாமிரா அண்ணண் வாங்கிய தொகையில் எனக்கும் பங்கு தர இருப்பதால், அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவரும் ஓடமாஸை வாங்கி உபயோகித்து அதன் வருமானத்தை பெருக்க உதவுமாறு இப் பின்னூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.//

ரிப்பீட்டேய்..

Saravana Kumar MSK said...

//கொசு கொண்டான் தாமிரா//

அட.. இது நல்லா இருக்கே..

Anonymous said...

கொசுக்கொண்டான் பட்டம் சூப்பர்.

ஒரே கவலை என்னன்னா, டைப் அடிக்கும் போது கோ வுக்குப் பதிலா கி வந்த்துட்டா? அப்புறம் கமல் சண்டைக்கு வருவார்.

Ram said...

Are you the Thamira who wrote Amritavashini story in Ananda Vikatan?

குடிமகன் said...

இவ்வளவு நாளா எப்படிடா ஒரு மொக்கை பதிவு போடலாம்னு தேடிட்டே இருந்தேன் .....

இப்போ கிடைச்சிட்டு ..

தேங்க்ஸ் தாமிரா

விஜய் said...

இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா. ஏதாவது மருந்தடிச்சுக் கொல்லுங்கப்பா!

தாமிரா said...

நன்றி எம்எஸ்கே.
நன்றி வேலன்.
நன்றி ராம். (அது நானில்லை. கொஞ்ச‌ம் பின்னூட்ட‌ங்க‌ளையும் ப‌டிக்க‌வும். ஹி..ஹி)
ந‌ன்றி குடிம‌க‌ன்.
ந‌ன்றி விஜ‌ய்.

முரளிகண்ணன் said...

\\சிலர் அந்த டப்பாவின் மீதே உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் உயிர் நீத்தவர்களின் தலைமாட்டில் ஒரு தீபம் வைத்திருப்பதைப்போல பல கொசுவத்திகளை உடம்பைச்சுற்றிலும் வைத்துவிட்டு ஆடாமல் அசையாமல் படுத்திருப்பார்கள், இதில் ஒரு ஆபத்து லேசாக புரண்டாலும் போச்சு. சிலர் தூக்கமாவது ஒண்ணாவது என்று கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஓரிடத்தில் நிற்காமல் உலாத்திக்கொண்டிருப்பார்கள், கால்வலித்து நிற்கும் போது புகைபிடித்து ஒருவர் மீது ஒருவர் ஊதிக்கொள்வார்கள் (புகைபிடிப்பதில் இப்படியும் ஒரு நன்மை). இன்னும் சிலர் உற்பத்திப்பொருட்களை பேக் செய்ய வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர திக்கான பாலிதீன் பைகளுக்குள் நுழைந்துகொண்டு கழுத்துவரை மூடிக்கொண்டு வட்டமாக உட்கார்ந்துகொண்டு கதைபேசிக்கொண்டிருப்பார்கள். முகத்தில் கடிக்கும் கொசுவை விரட்டிவிட்டு டப்பென்று கையை உள்ளுக்கு இழுத்துக்கொள்வார்கள்.\\

மிகவும் ரசிக்கும்படி எழுதுகிறீர்கள் தாமிரா

குசும்பன் said...

//மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது//

ஆற்காடார் வேலை செய்ய ஆரம்பிச்சாச்சா?


//முடிந்ததும் அனைவரும் கம்பெனிக்குள்ளேயே ஆங்காங்கே படுத்துறங்கிவிடுவோம்.//

சாப்பாடு முடிந்ததும் என்று சொல்ல மறந்துட்டீங்க போல!!!

Ram said...

May be it is you, isnt it?

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................................அவரு கோலங்கள் பத்தி கொசுவத்தி சுத்தினார்னு, கொசுவத்திக்கே ஒடோமாஸ் தடவிட்டீங்களா:):):)

புதுகை.அப்துல்லா said...

யோவ் அண்ணே! சைலண்டா பல கொலைகளைப் பண்ணிட்டு அத தில்லா பதிவு வேற போடுறீகளாக்கும். வீரந்தாய்யா நீரு :)

தாமிரா said...

நன்றி முரளிகண்ணன். (விளக்கமாக பாராட்டியதற்கு கூடுதல் நன்றி)
நன்றி குசும்பன்.
நன்றி ராம். (எத்தினி வாட்டிங்க சொல்றது, அவர் நானில்லை என்று)
நன்றி ராப்.
நன்றி புதுகை.

Anonymous said...

:)

மங்களூர் சிவா said...

ஹா ஹா சூப்பர். இப்பதான் கொசு அடிக்கிறதுக்கு பேட் ஒன்னு விக்கிறாங்களே கரண்ட்ல சார்ஜ் செய்யற மாதிரி.

மங்களூர் சிவா said...

பதிவு சூப்பர்!

எம்.ரிஷான் ஷெரீப் said...

// மங்களூர் சிவா said...

ஹா ஹா சூப்பர். இப்பதான் கொசு அடிக்கிறதுக்கு பேட் ஒன்னு விக்கிறாங்களே //

ஆமா அண்ணாச்சி..
உலகத்துல ஒண்ணே ஒண்ணுதான் இருந்துச்சு.. அதையும் பூங்கொடி அக்கா வாங்கிட்டாங்க... அதுக்கும் பேரு சிவாவாம் ல.. இப்ப வீட்டிலிருந்து 'ரிப்பீட்டே'ன்னு சத்தம் போட்டுக்கிட்டு கொசு அடிச்சிட்டு இருக்காம் :P