Monday, September 15, 2008

தண்ணியடிப்பதை விட்டுவிட்டேன்

பத்து நாட்களுக்கு முன்னர் ரமா வீட்டிலில்லாத ஓர் நாள். அவள் வீட்டிலில்லை என்றாலே இன்று நைன்டிதான் எனக் காலையிலிருந்தே கற்பனைக்குதிரைகள் பறக்கத்துவங்கிவிடும். யாரைக் கூப்பிடலாம்? தனிமையிலேயே இனிமையை கண்டுவிட‌லாமா? கண்ணனை மட்டும் கூப்பிடலாம் என்றால் கோவை போயிருக்கிறான், வர ரெண்டு நாளாகும். ச‌ங்குவைக்கூப்பிட்டு ரொம்ப நாளாகுது. கூப்பிடலாமா? ம்ஹும் வேண்டாம். நாம 90 அடிக்கிறதுக்குள்ள 900 அடிச்சுட்டு இன்னும் வேணும் கிளம்புன்னுவான், 'நடு ராத்திரி டாஸ்மாக்கைத்தேடி' அப்பிடின்னு பதிவு போட வேண்டியதாகிவிடும்.

கிருஷ்ணாவை வரச்சொல்லிவிட்டு 'மான்ஹாட்டன்' போகலாமா என்று யோசனை வந்தவுடனே அதை தவிர்த்தேன். சரிப்படாது. அங்கே பர்ஸ் பழுத்துவிடுவது மட்டுமல்ல, அலைச்சல், ஆட்டோ என பல பிரச்சினைகள். அப்ப வேற வழியில்லை. தனி ஆவர்த்தனம்தான்.

ஆ.:பீஸிலிருந்து சீக்கிரம் கிளம்பலாம்னு பார்த்தா அன்னிக்குன்னு பார்த்து ஒரு கம்ப்ளைன்ட். கிளம்ப எட்டு மணிக்கு மேல ஆயிட்டுது.

ஒரு வழியா கிளம்பி வீட்டுக்கு போற வழியில இருக்குற டாஸ்மாக்குல நின்னேன். சோதனை ஆரம்பமாச்சு. கூட்டம் கடையை நெருங்கவிடாமல் தேனீக்கள் போல அப்பிக்கொண்டிருந்தது. ஐந்து நிமிடமாயிற்று. கூட்டம் குறைவதைப்போலவோ, யாராவது வாங்கிவிட்டு வெளியேறுவதைப்போலவோ தெரியவில்லை. ஷூக்கள், டக் இன் செய்யப்பட்ட எனது வெள்ளை சட்டை என என் தோற்றத்தையும், அங்கு நின்று கொண்டிருந்த கூட்டத்தையும் பார்த்துக்கொண்டேன். யோசித்துக்கொண்டிருந்தால் ச‌ரிப்ப‌டாது என‌ க‌ள‌த்தில் இற‌ங்கினேன். ஒருவ‌ழியாக‌ @#/%$# போன்ற‌ ப‌ல‌ வார்த்தைக‌ளையும், வாச‌னைக‌ளையும் க‌ட‌ந்து க‌டைக்கார‌ரை நெருங்கினேன். ப‌ண‌த்தை கையில் வைத்துக்கொண்டு கோட்ட‌ர், கோட்ட‌ர் என‌ கூவிக்கொண்டிருந்தேன். என்னைப்போல‌வே ப‌ல‌ரும் கூவிக்கொண்டிருந்தனர். ஆனால் விற்ப‌னைப்பிர‌திநிதியோ யாருடைய‌ குர‌லையும் கேட்ட‌து போல‌வே தெரிய‌வில்லை. அவர் மிக‌வும் நிதான‌மாக‌ பின்புற‌மாக‌ திரும்பி இன்னொரு ஊழிய‌ரோடு பேசிக்கொண்டிருந்தார். கூட்ட‌மும் க‌த்துவ‌தை விடுவ‌தாக‌ தெரிய‌வில்லை, நானும்தான்.

கூட்ட‌த்திலிருந்து ஒருவ‌ர் 'ஏய் #$%/@!, எம்மா நேர‌மா கூவிக்கினுறோம், ஒரு கோட்ட‌ர் குடுறா' என்றார். இந்தக்குரலுக்கு அவர் திரும்பினார். நானும் ம‌கிழ்ந்தேன். ஆனால் அவ‌ரோ ப‌திலுக்கு, 'அடிங் # &&*%$#, பீரு ம‌ட்டும்தான் இருக்குனு எத்தினா த‌பா சொல்ற‌து, க‌ம்முனாட்டி' என்றார். என‌க்கு அதிர்ச்சியாகிவிட்ட‌து. ஐய‌ய்யோ, இவ்ளோ நேர‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டுவிட்டு ஒண்ணும் வாங்காம‌ல் திரும்புவ‌தா, பிய‌ர் ந‌ம‌க்கு ஒத்துக்காதே! என்று அங்கேயே குழ‌ம்பிய‌வாறு யோசித்துக்கொண்டிருந்தேன். அத‌ற்குள், 'வாங்காத‌வ‌ன்லாம், தூர‌ப்போடா @#$%$#^&$' என்ற‌தும் வெளியே வ‌ந்தேன். வேறு க‌டைக்கு போலாம்னா இன்னும் அஞ்சு கிலோமீட்ட‌ர் போணுமே என்று யோசித்துவிட்டு திட்ட‌த்தை அரைம‌ன‌தோடு கைவிட்டேன். நாளைக்கு பாத்துக்க‌லாம் என்று முடிவு செய்துவிட்டு வ‌ண்டியை நோக்கி போனேன், அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.. ஹெல்மெட்டை காண‌வில்லை.சுற்றுமுற்றும் பார்க்கிறேன், ஏராள‌மான‌ வ‌ண்டிக‌ள். உட‌னேயே புரிந்துவிட்ட‌து சான்ஸேயில்லை. முன்னர் எப்போதும் கையிலேதான் வைத்துக்கொண்டிருப்பேன். இப்போதுதான் முன்னைமாதிரி போலீஸ் ஹெல்மெட்டுக்கெல்லாம் பிடிப்ப‌தில்லையே, திருடுபோக‌ சான்ஸ் இல்லை என்று கொஞ்ச‌நாளாக‌வே வ‌ண்டியிலேயே வைத்துவிடுகிறேன். போச்சுது, மூட் அவுட்! எப்பிடியும் இன்னிக்கு அடிச்சே ஆக‌ணும், விடு வ‌ண்டியை கார‌ப்பாக்க‌த்துக்கு.

அங்கேயும் இத‌ற்கு ச‌ற்றும் குறைவில்லாத‌ அனுப‌வ‌த்திற்குப் பின்ன‌ர், ஏதோ முக‌ம்தெரியாத‌ ஒரு கோட்ட‌ரை வாங்கிவ‌ந்தேன். கேட்ட‌து எப்போதுமே கிடைக்காது எனினும் இன்று ரொம்ப‌ சோத‌னையாக‌ விஸ்கிகூட‌ கிடைக்காத‌து என்னை ரொம்ப‌வும் விர‌க்திய‌டைய‌ வைத்த‌து. ட‌ச்ச‌ராவ‌து ம‌ன‌துக்கு திருப்தியாக‌ வாங்கிக்கொள்வோம் என‌ 'க‌.:பே செட்டிநாட்டில்' நின்றேன். வ‌ழ‌க்க‌த்தைவிட‌ கூட்ட‌ம் அதிக‌மாக‌ இருந்த‌து. ஒரு 'பிங்க‌ர்பிஷ்' பார்ச‌ல் சொல்லிவிட்டு காத்திருந்தேன். 20 நிமிட‌ங்க‌ள். பின்ன‌ர் கூலாக‌ வ‌ந்த‌ ச‌ர்வ‌ர் 'ஸாரி ச‌ர், பிஷ் ஐட்ட‌ம் எதுவுமே இல்லை, வேறென்ன‌ வேண்டும்' என்றார். 'டாய்.. யாரைப்பார்த்து இல்லைன்னே, முதல்லேயே சொல்லவேண்டியதுதானே..' என்று குதிக்க‌ ஆர‌ம்பித்தேன். டாஸ்மாக்கில் காண்பிக்க‌ முடியாத‌ கோப‌த்தையெல்லாம் இங்கேதானே காண்பிக்க‌ முடியும். க‌டைசியில் மானேஜ‌ர் போன்ற‌ தோற்ற‌முடைய‌வ‌ர் வ‌ந்து ச‌மாதான‌ம் செய்த‌வுட‌ன் ச‌மாதான‌மானேன். பின்ன‌ர் 'சிக்க‌ன்65' சொன்னேன். ந‌ம்ப‌ மாட்டீர்க‌ள், 35 நிமிட‌ங்க‌ள். வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்ட‌து. பின்ன‌ர் பில்லிங்கிலும் சோத‌னை. 'ஸாரி ச‌ர், 150 ரூபாய்க்கெல்லாம் கார்டு அக்செப்ட் ப‌ண்ண‌மாட்டோம்'. திரும்ப‌வும் ர‌க‌ளை.

சோடா வகையறாக்களை வாங்க வீட்டினருகே வழக்கமாக நூடுல்ஸ் வாங்கும் கடையில் நின்றேன். ம‌ணி 10.15. 'சோடா இல்ல‌ சார், வேறென்ன‌ வேணும்?'. வ‌ண்டியைத்திருப்பினேன். மேலும் சில கடைகள் அடைத்திருக்க ரெண்டு கிலோமீட்டரில் இன்னொரு கடை. 'கூலிங் இல்ல, ப‌ர‌வால்லையா.?' வாங்கிக்கொண்டேன்.

வீட்டுக்கு வ‌ந்த‌ போது ம‌ணி 10.30. ப‌சித்த‌தில் வாங்கிவ‌ந்த‌ சிக்க‌னை கொஞ்ச‌ம் சாப்பிட‌லாம் என‌ பார்ச‌லைத்திற‌ந்தேன். ஆனிய‌ன், லெம‌ன் ஏதுமில்லாம‌ல் சில‌ க‌ருகிய‌ சிக்க‌ன் துண்டுக‌ள் முழித்துக்கொண்டிருந்த‌ன‌, ப‌ழிவாங்கிவிட்டான்க‌ள். ஒரு துண்டை எடுத்து தின்று பார்த்தேன். ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ துப்பிவிட்டு ஏதாவ‌து ஊறுகாயாவ‌து தேறுமா என‌ அடுக்க‌ளைக்குள் புகுந்தேன். ஊறுகாயைத்தேடிக் க‌ளைத்தேன்.

முக‌ம், கைகால் அல‌ம்பி ரெடியாகிவிட்டு .:பிரிட்ஜைத் திற‌‌ந்தேன். .:ப்ரீஸ‌ர் காலியாக‌ இருந்த‌து. பின்ன‌ர்தான் க‌வ‌னித்தேன் ஐஸ்டிரேக்க‌ள் கழுவி காய‌வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன .:பிரிட்ஜின் மீதே. அட்லீஸ்ட் த‌ண்ணீர்? ம்ஹும். ப‌ர‌வாயில்லை ப‌த்து நிமிஷ‌ம் வெயிட் ப‌ண்ண‌லாம். த‌ண்ணீரை பாட்டில்க‌ளில் பிடித்து .:பிரீஸ‌ருக்குள்ளேயே போட்டேன், சோடா பாட்டிலையும் உள்ளே போட்டு .:பிரிட்ஜின் க‌த‌வைச்சாத்தினேன்.

க‌ர‌ண்ட் க‌ட் ஆன‌து, இருள் சூழ்ந்த‌து.

64 comments:

Anonymous said...

அனுபவிச்சவனுக்குத்தான் புரியும்... அப்படியே... கவிதையாக செதுக்கி உள்ளிர்கள்.

Anonymous said...

//அனுபவிச்சவனுக்குத்தான் புரியும்... அப்படியே... கவிதையாக செதுக்கி உள்ளிர்கள்.//

கிட்டத்தட்ட!

அமர பாரதி said...

இதுக்குத்தான் ஒரு ரெண்டு முழுச வாங்கி பரண்ல வைச்சுடனும்கிறது. திட்டமிடாத வாழ்க்கை வாழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

rapp said...

me the third

வெண்பூ said...

நான் தண்ணியடிக்கிறத விட்டு 8 வருசம் ஆகுது. அப்போல்லாம் கார்ப்பொரேஷன் குழாய்ல தண்ணி வரும்போது பைப்பை வெச்சி தண்ணி அடிப்போம். 20 குடம் ரொம்புறதுக்குள்ள ஒரு வழி ஆயிடுவோம். அப்புறம் மோட்டார் வாங்குனது தண்ணி அடிக்கிறது இல்லை. மோட்டர் போட்டுகுறது.

தமிழ் பிரியன் said...

நல்ல கதையா இருக்கே? அப்ப இன்னும் விடலையா? ... :(

தமிழ் பிரியன் said...

/////வெண்பூ said...

நான் தண்ணியடிக்கிறத விட்டு 8 வருசம் ஆகுது. அப்போல்லாம் கார்ப்பொரேஷன் குழாய்ல தண்ணி வரும்போது பைப்பை வெச்சி தண்ணி அடிப்போம். 20 குடம் ரொம்புறதுக்குள்ள ஒரு வழி ஆயிடுவோம். அப்புறம் மோட்டார் வாங்குனது தண்ணி அடிக்கிறது இல்லை. மோட்டர் போட்டுகுறது.//////

:))))))))))))))))

கூடுதுறை said...

நான் கடுமையாக ஆட்சேபனை தெரிவிக்கிறேன்...

ஜெனிலியா, இஷா வேயில்லாம் யூத் லிஸ்ட் சேத்து கேவலப்படுத்தவேண்டாம்

கரிகாலன் said...

ஆஹா, மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்காமப் போகட்டுமேன்னு யாரிடமாவது சாபம் வாங்கினீர்களா என்று யோசித்துப்பார்க்கவும்.
;-)))))

kumky said...

அய்யோ பாவம்..ரொம்ப மனதை கனக்கவைத்துவிட்டீர்கள்..ஒரு தபா இங்கிட்டு வாருங்கோ..பங்களூரூ கூட்டிபோயி குளிப்பாட்டுறன்.(என்னா தருமமிகு ஊரோ.. உங்க ஊர் போங்க..)ரெண்டாவது இங்கிட்டு டாஸ்மாக்கில உள்ளதெல்லாம் 3 ம் தர பட்டைதான்..படு மோசம்.(உஸ்ஸ்ஸ் அப்பாடா.. நம்ம ஜாதிக்காரங்க படுர அவஸ்தைய மட்டும் பொறுக்கவே முடியல்லீங்கோ..)

விஜய் ஆனந்த் said...

:-((((...

தலைவலியும் நோவும் தனக்கு வந்தாத்தான் தெரியும்...

மனச பெசஞ்சுட்டீங்களே..

kumky said...

கடேசியா கரண்ட் கட் ஆச்சே.. அப்புறம் வாங்கி வச்ச சரக்கு என்ன ஆச்சு?

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...
நான் தண்ணியடிக்கிறத விட்டு 8 வருசம் ஆகுது. அப்போல்லாம் கார்ப்பொரேஷன் குழாய்ல தண்ணி வரும்போது பைப்பை வெச்சி தண்ணி அடிப்போம். 20 குடம் ரொம்புறதுக்குள்ள ஒரு வழி ஆயிடுவோம். அப்புறம் மோட்டார் வாங்குனது தண்ணி அடிக்கிறது இல்லை. மோட்டர் போட்டுகுறது. //

சோகமான சிச்சுவேஷன்ல உள்ள வந்து டபுள் மீனிங்குல காமெடி பண்ணும் வெண்பூவின் குடிகாரர்கள் மீதான நுண்ணரசியலை சனங்களின் கலைஞன் விவேக் சார்பாக கண்டிக்கிறேன்...

விஜய் ஆனந்த் said...

// kumky said...
கடேசியா கரண்ட் கட் ஆச்சே.. அப்புறம் வாங்கி வச்ச சரக்கு என்ன ஆச்சு? //

ம்ம்ம்ம்...பூனைக்குட்டி தூக்கிட்டு போயிடிச்சி....

தமிழ்ப்பறவை said...

//சோகமான சிச்சுவேஷன்ல உள்ள வந்து டபுள் மீனிங்குல காமெடி பண்ணும் வெண்பூவின் குடிகாரர்கள் மீதான நுண்ணரசியலை சனங்களின் கலைஞன் விவேக் சார்பாக கண்டிக்கிறேன்...//
அதை நான் வழிமொழிகிறேன்..
தாமிரா சார் உங்க பக்கத்தை லின்க் குடுத்து பதிவு போட்டுட்டேன்.அனுமதி குடுத்துருவீங்கன்னு தெரியும். அதான் கேட்காமயே போட்டுட்டேன்.
அனுமதி வேண்டி தமிழ் பறவை...

புதுகை.அப்துல்லா said...

உங்களுக்கு சரக்கு கொண்டான்னு பட்டம் குடுக்கலாம்னு பார்த்தேன். இப்போ அத சரக்கு நொந்தான்னு மாத்திட்டேன்

:))

முரளிகண்ணன் said...

:-)))))))))))))))))))))

Saravana Kumar MSK said...

புரியுதுங்க்னா. உங்க கஷ்டமும் வேதைனையும்..

Saravana Kumar MSK said...

// அமர பாரதி said...

இதுக்குத்தான் ஒரு ரெண்டு முழுச வாங்கி பரண்ல வைச்சுடனும்கிறது. திட்டமிடாத வாழ்க்கை வாழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.//

ரிப்பீட்டு..

நந்து f/o நிலா said...

சூப்பர் தாமிரா. எனக்கும் சேம் ப்ளட் பல சமயம்

அது சரி said...

//
கூட்ட‌த்திலிருந்து ஒருவ‌ர் 'ஏய் #$%/@!, எம்மா நேர‌மா கூவிக்கினுறோம், ஒரு கோட்ட‌ர் குடுறா' என்றார். இந்தக்குரலுக்கு அவர் திரும்பினார். நானும் ம‌கிழ்ந்தேன். ஆனால் அவ‌ரோ ப‌திலுக்கு, 'அடிங் # &&*%$#, பீரு ம‌ட்டும்தான் இருக்குனு எத்தினா த‌பா சொல்ற‌து, க‌ம்முனாட்டி' என்றார்.
//

பொறுக்கிகளும் பன்னாடைகளும் இருக்கும் அரசு தலையிட்டால் எல்லாம் நாசமாகும். மதுக்கடை கூட. தனியார் இருக்கும் வரை, விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் சரக்காவது கிடைக்கும், அப்படியே கொஞ்சம் மரியாதையும் இருக்கும் ( நீங்கள் தகராறு செய்யாதவரை!). அரசு ஊழியர்கள் என்ற குண்டர் படை எங்கு பணி செய்தாலும் இப்படித்தான். நாய்கள்!

//
க‌ர‌ண்ட் க‌ட் ஆன‌து, இருள் சூழ்ந்த‌து.
//

ஏன் இப்பிடி அர‌சுக்கு எதிரா பேசுறீங்க‌. த‌மிழ் நாட்டுல‌ க‌ர‌ண்டு க‌ட் எங்க‌யும் இல்ல‌ன்னு அமிச்ச‌ரு சொன்ன‌த‌ல்லாம் ப‌டிக்க‌லையா?? ஒரு மெழுகுவ‌த்தி வாங்கி வெளிச்ச‌த்துல‌ தெளிவா ப‌டிங்க‌!

rapp said...

காரப்பாக்கமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................எங்க காலேஜ் ஏரியா. ஆரம்பத்தில் பசங்கல்லாம் கந்தன் ஒயின்ஸ் போவாங்க. அப்புறம் எங்கக்கிட்ட காசு கேட்டு கெஞ்சறத நிறுத்திட்டு, ஜூனியர்ஸ் கிட்ட ஆட்டயப் போட ஆரம்பிச்சிட்டாங்க. அதனால அதுக்கப்புறம் எங்க போய் தாக ஷாந்தி செய்துக்கிட்டாங்கன்னு தெரியலை. ச்ச எதைப் படிச்சாலும் கொசுவர்த்தி சுத்தறதே எனக்கு வேலையாப் போச்சு.

Anonymous said...

தாமிரபரணிக்கே தண்ணிப் பஞ்சமா?

என்ன கொடுமை இது?

aganazhigai said...

மது எனும் சிறு போதையும், பெண்களும் இல்லையென்றால் மனிதன் மிருகமாகவே இருந்திருப்பான் எனபது என் கருத்து. தமிழ் நாட்டில் மது மூலம் வரும் வருமானத்தில் அக்கறை செலுத்தும் அரசு அந்த வருமானத்திற்கு காரணமானவர்களை பற்றி சிறிதும் யோசிப்பதில்லை. பக்கத்து மாநிலங்களான ஆந்திரா கர்நாடகா கேரளாவில் கூட இப்படி இல்லை.

பாபு said...

இவங்களால ,கரண்ட் இம் கொடுக்க முடியலே, சரக்கும் கொடுக்க முடியலே,இன்னாதுக்கு அரசாங்கம் நடக்குது?

kumky said...

அது சரி"ன் வார்தைகள் தவறானவை. "நாய்கள்" என்ற விமர்சனம் தேவையா ? படித்த இளைஞர்களுக்கு வேளை வாய்ப்பளிக்கும் நோக்கதில் அ தி மு க ஆட்சியில் டாஸ்மாக்கில் நூற்றுக்கனக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்பட்டது. 10 மணி நேரத்திற்கும் அதிகமான பணிச்சுமை காரணமாக சில நேரங்களில் குடிமகன்களின் பேச்சுக்கு தக்க பதில் கூறியிருக்கலாம்.இதற்காக இம்மாதிரி நாகரீகமற்ற விமர்சனம் தேவையா என்பதை அனைவரும் யோசிக்கவும்.

தாமிரா said...

நன்றி அனானிஸ்.! (கவிதையாகவா? ரொம்பதான் ரசிச்சிருக்கீங்க போல..)

நன்றி அமரபாரதி.! (என் ரமாவுக்கு தெரியாமல் ஒரு குண்டூசியைக்கூட வீட்டில் ஒளித்துவைக்கமுடியாது)

நன்றி ராப்.! (நீங்களும் முன்னாள் நம்ப ஊரா? ஆமா கொசுவத்தி சுத்துறதுல என்ன தப்பு? நானே அப்பிடிதானே கடை நடத்திக்கிட்டிருக்கேன்)

நன்றி வெண்பூ.! (கீழே விஜய் கூறுவதை கவனிக்கவும், இன்னா.. என் சோகத்த பாக்கசொல்லோ ஒனக்கு மொக்கபோடணும்னு தோணுதா தல..)

தாமிரா said...

நன்றி தமிழ்.! (விடலையான்னா? தண்ணிய கேக்குறீங்களா? இல்ல தேர்தல யூத் என்பதைப்பாத்துட்டு விடலையான்னு கேக்குறீங்களா? அப்ப நீங்க பெருசா.?)

நன்றி கூடுதுறை.! (ஏன் இந்த கொலவெறி, நயனுக்கு ஓட்ட போட்டுட்டு போக வேண்டியதுதானே..)

நன்றி கரிகாலன்.! (நானும் அப்பிடித்தான் எதாச்சும் நடந்துருக்குமோனு கவலப்பட்டுகினுருக்கேன், சாமிக்கு வேண்டிகினா சரியாயிடுமா?)

நன்றி கும்கி.! (ஆகா நம்ப கஷ்டத்தையும் முழுசா புரிஞ்சிக்கிட ஒரு ஆளுனு நினைக்கிறப்போ..)

kumky said...

objection ,objection.,objection., இப்பிடி கண்டும் கானாத போகபிடாது.ஆம்மா சொல்லிபிட்டேன்.v will meet in tha COURT.

கார்க்கி said...

அய்யோ பாவம்.. தனிமனிதனுக்கு தண்ணி இல்லையேல் தமிழகத்தையே கொளுத்துவோம்னு நவீன பாரதியே சொல்லியிருக்காரு... (யாரு அதா? எனக்கு தன்னடக்கம் அதிகம்ண்ணா)

தாமிரா said...

நன்றி விஜய்.! (என் சோகம் உங்களையும் பாதிச்சுட்டுது போலயே..?)

நன்றி தமிழ் பறவை.! (என்ன இதுக்கெல்லாம் போயி அனுமதி கேட்டுகினு, நடத்துங்க, தலைப்பு வேர குஜாலா வெச்சுக்கிறீங்க சூடாயிடும்னு நினைக்கிறேன்..)

நன்றி அப்துல்.!
நன்றி எம்எஸ்கே.!
நன்றி முரளி.!

தாமிரா said...

நன்றி நந்து.! (நீங்களுமா? நல்ல பிள்ளையின்னுல்லா நினைச்சேன்.? தொடர்ந்து வாசித்துகொண்டிருக்கிறீர்கள் போல.. மிக்க நன்றி, அடிக்கடி பின்னூட்டமும் போடவும்)

நன்றி அதுசரி.! (லேசா கும்கி சொல்வதையும் காதில் போட்டுக்கொள்ளவும்..)

நன்றி வேலன்.!
நன்றி அகநாழிகை.!
நன்றி பாபு.!

தாமிரா said...

என்னாச்சு கும்கி, ஒண்ணும் புரியலையே.!

நன்றி கார்க்கி.! (ரொம்பத்தான் பண்றீங்க..)

தாமிரா said...

இன்பர்மேட்டிவா ஒரு தேர்தல் வெச்சேன், அதுவும் மேலேயே.. ஒருநாதிய காங்கலை ஓட்டுப்போட.! இப்போ தேடி வந்து ஓட்டுப்போடுறீங்களா? நடத்துங்க நடத்துங்க..

SurveySan said...

மனச தளரவிடாதீங்க.

எவ்வளவோ பாத்துட்டோம், இதுக்கு ஒரு வழிபொறக்காதா?

பரிசல்காரன் said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பா!

Kamal said...
This comment has been removed by the author.
Kamal said...

அப்பாடா அந்த கொடுமைலேந்து தப்பி மும்பை வந்தாச்சு....இங்க ஒரு பிரச்சனையும் இல்ல....கேக்குறது கிடைக்குது :)))) ஒரு தபா வாங்க :)))

ஸ்ரீமதி said...

:))

rapp said...

me the 40

குசும்பன் said...

வெகுவாக ரசித்தேன் தாமிரா! மிகவும் அருமையாக இருக்கு.

(இன்னொருத்தவர் இப்படி நோகுறது எம்புட்டு சந்தோசமாக இருக்கு:))))

சரவணகுமரன் said...

ஐயோ... பாவங்க நீங்க...

vikram said...

//வேறு க‌டைக்கு போலாம்னா இன்னும் அஞ்சு கிலோமீட்ட‌ர் போணுமே என்று யோசித்துவிட்டு திட்ட‌த்தை அரைம‌ன‌தோடு கைவிட்டேன்.//

ennama yaaranda kadha vudre - tamil naatulla therukku theru tasmac irrukku - ennathukku nee anji kilometre tholavvu ponam :)

கிரி said...

//ப‌சித்த‌தில் வாங்கிவ‌ந்த‌ சிக்க‌னை கொஞ்ச‌ம் சாப்பிட‌லாம் என‌ பார்ச‌லைத்திற‌ந்தேன். ஆனிய‌ன், லெம‌ன் ஏதுமில்லாம‌ல் சில‌ க‌ருகிய‌ சிக்க‌ன் துண்டுக‌ள் முழித்துக்கொண்டிருந்த‌ன‌, ப‌ழிவாங்கிவிட்டான்க‌ள். ஒரு துண்டை எடுத்து தின்று பார்த்தேன். ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ துப்பிவிட்டு ஏதாவ‌து ஊறுகாயாவ‌து தேறுமா என‌ அடுக்க‌ளைக்குள் புகுந்தேன்.//

ஹா ஹா ஹா ஹா

Anonymous said...

Interesting...

Perungudi la irundhu neelangarai (ECR) tasmac just 2 kms in shortcut. ean karapakkam poneengha idha witutu

நான் ஆதவன் said...

உங்க வேதனை எனக்கு புரியுது (பாம்பின் கால் பாம்பறியும்)
அட நீங்க ஏன் முன்பதிவு(அட்வான் ஸ் புக்கிங்) ஆன்லைன் வர்த்தகம்ன்னு ட்ரை பண்ணக்கூடாது...

ஸ்ரீ said...

பாவம் அண்ணாத்த நீங்க :)

எனக்கு நிறைய முறை இப்படிபட்ட அனுபவம் நடந்திருக்கு ஆனா இவ்ளோ மோசமா போனது இல்லை. ஆண்டவன் இருப்பதை அப்போ அப்போ இப்படித்தான் காட்டுவாரு.

Anonymous said...

:)

தாமிரா said...

இந்த பதிவுக்குதான் எத்தனை ஆதரவு, மற்றும் ஆறுதல்.? நன்றி தோழர்களே.!

நன்றி சர்வேசன்.!
நன்றி பரிசல்.!
நன்றி கமல்.!
நன்றி ஸ்ரீமதி.! (பேர மாத்திட்டீங்க போல..)

தாமிரா said...

நன்றி குசும்பன்.! (ஏன் இந்த நல்லெண்ணம்.?)
நன்றி குமரன்.!
நன்றி விக்ரம்.! (காரப்பாக்கத்துக்கும் சீவரத்துக்கும் இடையில் வேறு கடைகள் இல்லை என்பதை அறியவும்.)
நன்றி கிரி.! (ஊட்ல நல்ல அனுபவமோ..)

தாமிரா said...

நன்றி ஆதவன்.! (அப்பிடிலாம் கூட வசதியிருக்குதா.? நமக்கு இந்த அறிவெல்லாம் ஏது? பாருங்க கோவத்துல தண்ணியடிக்குறதில்ல என்று முடிவெடுத்திட்டேன்)
நன்றி ஸ்ரீ.!
நன்றி தூயா.! (அய்யய்யோ, உங்களுக்கு இங்க என்ன வேலை.? ஒண்ணும் கடுப்பேத்திடலையே.. நல்ல வேளை சிரிக்கிறீங்க!)

தாமிரா said...

அய்யய்யோ பேச்சு வாக்குல நானே 50 போட்டுட்டேனே, கடைக்காரரே 50 போடலாமா? ரூல்ஸ் இடம் குடுக்குதா?

அப்புறம் இன்னிக்கு வேலை சீக்கிரம் முடிந்துவிட்டதால் கிளம்பவேண்டியதாகிறது. ஆகவே பிறருக்கு பின்னூட்டங்கள் நாளை.!

அது சரி said...

//
kumky said...
அது சரி"ன் வார்தைகள் தவறானவை. "நாய்கள்" என்ற விமர்சனம் தேவையா ? படித்த இளைஞர்களுக்கு வேளை வாய்ப்பளிக்கும் நோக்கதில் அ தி மு க ஆட்சியில் டாஸ்மாக்கில் நூற்றுக்கனக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்பட்டது. 10 மணி நேரத்திற்கும் அதிகமான பணிச்சுமை காரணமாக சில நேரங்களில் குடிமகன்களின் பேச்சுக்கு தக்க பதில் கூறியிருக்கலாம்.இதற்காக இம்மாதிரி நாகரீகமற்ற விமர்சனம் தேவையா என்பதை அனைவரும் யோசிக்கவும்.
//

கும்கி சார்,
10 மணி நேரத்திற்கும் அதிகமான பணிச்சுமை என்பதால், கேவலமாக பேசுவதை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனியார் துறையில் பணி செய்யும் பலருக்கும் 10 மணி என்ன, அதற்கும் அதிகமான வேலை தான். சில வேலைகளுக்கு கால நேரமே கிடையாது.

டாஸ்மாக்கில் பயங்கர‌ பணிச்சுமை என்பதெல்லாம் நம்ப முடியாது. காலையிலிரு ந்து இரவு வரை அதி பயங்கர பிஸியாக இருக்கும் டாஸ்மாக்கை எங்கு பார்த்தீர்கள்? அவர்களின் பிஸியான நேரம் என்பது 7 முதல் 10 வரை தான். இதிலும் கஸ்டமருக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் இவர்களுக்கு வேலை எதற்கு??

குடிமகன்கள் கெட்ட வார்த்தை உபயோகித்ததற்கான/உபயோகிப்பதற்கான காரணம் தாமிராவின் பதிவிலேயே உள்ளது.

//
ப‌ண‌த்தை கையில் வைத்துக்கொண்டு கோட்ட‌ர், கோட்ட‌ர் என‌ கூவிக்கொண்டிருந்தேன். என்னைப்போல‌வே ப‌ல‌ரும் கூவிக்கொண்டிருந்தனர். ஆனால் விற்ப‌னைப்பிர‌திநிதியோ யாருடைய‌ குர‌லையும் கேட்ட‌து போல‌வே தெரிய‌வில்லை. அவர் மிக‌வும் நிதான‌மாக‌ பின்புற‌மாக‌ திரும்பி இன்னொரு ஊழிய‌ரோடு பேசிக்கொண்டிருந்தார்
//

அது என்னவோ தெரியவில்லை. அரசு ஊழியர்களுக்கு மக்களை கண்டால் அவ்வளவு கேவலமாக‌ இருக்கிறது. வங்கிகள், போஸ்ட் ஆஃபிஸ், தாலுக்கா ஆஃபிஸ், ரயில் நிலையங்கள், போலீஸ் ஸ்டேஷன், ரேஷன் கடை, எலக்ட்ரிசிடி ஆஃபிஸ், கார்ப்பரேஷன் ஆஃபிஸ்...... எல்லா இடங்களிலும் மக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு "போ, போ, அப்புறம் வா. வந்துட்டானுங்க காலையிலேய..". அதையும் உடனே சொல்ல மாட்டார்கள். ஒரு ஒரு மணி நேரம் கழித்து தான் இந்த வரவேற்பு

மக்களின் வரிப்பணத்தில் சுமார் 80% சுரண்டுபவர்கள் மக்களுக்கு கொடுக்கும் மரியாதை இது தான்.

டாஸ்மாக் வரும் குடிமகனுக்கு என்ன மரியாதை என்று கேட்காதீர்கள். யாரும் ஓசியில் கொடுக்கவில்லை. காசு வாங்கிட்டு தான தர்றாங்க?? அப்புறம் என்ன??

எங்களுக்கு சம்பளம் போதலை. அதனால அப்படித்தான் இருப்போம் என்று சொல்லலாம். அதற்கு குடிமகன்கள் என்ன செய்ய முடியும்? அவர்களை யாரும் இந்த வேலையை செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

சுமார் 99.5% அரசு ஊழியர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை, அதற்கு காரணம் அவர்களின் லஞ்ச ஊழல் மட்டுமல்ல, அவர்கள் யாருக்கும் மரியாதை தருவதில்லை என்பதும் ஒரு காரணம்.
என்னைப் பொறுத்த‌வ‌ரை, உள்ளிருந்தே உறிஞ்சிக் கொல்லும் ஒட்டுண்ணிக‌ளுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் பெரிய‌ வித்தியாச‌ம் இல்லை.

//
இதற்காக இம்மாதிரி நாகரீகமற்ற விமர்சனம் தேவையா என்பதை அனைவரும் யோசிக்கவும்.
//
என‌க்கு நாக‌ரீக‌ம் க‌ற்று த‌ந்த‌த‌ற்கு ந‌ன்றி. அப்ப‌டியே போலீஸ் ஸ்டேஷ‌ன், வ‌ங்கி (முக்கிய‌மாய் ஸ்டேட் பேங்க் ஆஃப் இன்டியா), தாலுகா ஆஃபிஸ்க‌ளுக்கும் சென்று கொஞ்ச‌ம் நாக‌ரீக‌ம் க‌ற்று த‌ந்தால், ம‌க்க‌ள் மிகுந்த‌ ச‌ந்தோஷ‌ம் அடைவார்க‌ள்.

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்த‌ம்
க‌ரும‌மே க‌ட்ட‌ளைக்க‌ல்!

(தாமிரா, நீங்க‌ ஏதோ ஜாலியா ப‌திவு போட்டீங்க‌. அதுல‌ போயி இப்பிடி சூடா பேசுற‌துக்கு ம‌ன்னிச்சிருங்க‌. தேவைன்னா அழிச்சிருங்க‌)

kumky said...

நேரமில்லை நண்பரே.நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் மேம்போக்காக நியாயமாக தெரிந்தாலும், உள் அரசியலையும்,
"c"கிரெடு பணியாளர்களின் உண்மை நிலையையும் உணர்ந்து எழுதியதாக தெரியவில்லை.மாலை விரிவாக விவாதிப்போம்.தாமிரா மன்னிப்பாராக.

தாமிரா said...

இது வெறும் ஜாலி பதிவு என்று சொன்ன 'அதுசரி'யை என் சார்பில் யாராவது வந்து நல்லா மொத்தவும். நான் ஊருக்கு போய்கொண்டிருக்கிறேன். உருப்படியான விவாதத்திற்கு என் தளம் எப்போதும் தயார்தான். நடத்தவும். பின்னர் வந்து கலந்துகொள்கிறேன். இப்போதைக்கு ஸாரி கும்கி, நான் அத்சரி'யின் பக்கம்தான். ஆனால் அதற்காக 'ஒட்டுண்ணி', 'நாய்கள்' என்றெல்லாம் திட்டுவ‌தை மட்டும் கடுமையாக எதிர்க்கிறேன்.

Syam said...

நாடு எப்படி கெட்டு கிடக்கு..மறுபடியும் காந்தி வந்து ஒரு அற போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடைகளை ஒழித்து மறுபடியும் தனியார் கடைகளை கொண்டு வந்தால் தான் ஆச்சு...

விடமாட்டேன் said...

பாழாய்ப்போன மனிதப் பிறவிக்குத்தான் எத்தனை கஷ்டங்கள்... ம்... பெருமூச்சு விடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

கணேஷ் said...

ஒரு மனுஷனுக்கு ஒரே நாளுல இத்தனை சோதனையா....


கடைசில சரக்கு அடிச்சிங்கலா இல்லையா ???

தாமிரா said...

நன்றி ஷ்யாம்.!
நன்றி விடமாட்டேன்.!
நன்றி கணேஷ்.!

மங்களூர் சிவா said...

ஹா ஹா இவ்ளோ சோதனையா ஒருத்தருக்கு கலி முத்திடுச்சுன்னு இதத்தான் சொல்றாங்களா????

மங்களூர் சிவா said...

/
கூட்ட‌த்திலிருந்து ஒருவ‌ர் 'ஏய் #$%/@!, எம்மா நேர‌மா கூவிக்கினுறோம், ஒரு கோட்ட‌ர் குடுறா' என்றார். இந்தக்குரலுக்கு அவர் திரும்பினார். நானும் ம‌கிழ்ந்தேன். ஆனால் அவ‌ரோ ப‌திலுக்கு, 'அடிங் # &&*%$#, பீரு ம‌ட்டும்தான் இருக்குனு எத்தினா த‌பா சொல்ற‌து, க‌ம்முனாட்டி' என்றார்.
/

ஜூப்பர்

மங்களூர் சிவா said...

/
குழ‌ம்பிய‌வாறு யோசித்துக்கொண்டிருந்தேன். அத‌ற்குள், 'வாங்காத‌வ‌ன்லாம், தூர‌ப்போடா @#$%$#^&$' என்ற‌தும் வெளியே வ‌ந்தேன்
/

:))))))))))))

மங்களூர் சிவா said...

/
அமர பாரதி said...
திட்டமிடாத வாழ்க்கை வாழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
/

ரிப்பீட்ட்ட்ட்டு
:))

தாமிரா said...

நன்றி சிவா.!