Thursday, September 18, 2008

கல்யாணச்சாப்பாடு

கல்யாணச்சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாவுது நண்பர்களே. எங்கள் ஊர் பக்கம் கல்யாண‌ச்சாப்பாடு என்றாலே ஒரு தனி மவுசுதான். முதல் பந்தியில் ஓடிப்போய் இடம்பிடித்து கொஞ்சம் அரிசி கொட்டை கொட்டையாக இருந்தாலும் சும்மா ஆவி பறக்க சாதமும், கட்டியாக சாம்பாரும் பிசைந்து நானே இரண்டு முறை வாங்கிக்கட்டிக்கொள்வேன். ரசத்திற்கும் மோருக்கும் போகும் முன்னரே வயிறு புல்லாகி முழித்துவிட்டு, குறைந்த பட்சம் மோரை டம்ளரில் வாங்கிக்குடிப்பேன்.

வீட்டை விடவும், ஹோட்டல்களை விடவும் கல்யாணச்சாப்பாட்டில் அப்படி என்ன ஸ்பெஷல் என சொல்லத்தெரியவில்லை. ஆனால் அதன் சுவை நெஞ்சத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. வெட்டிப்போட்ட மிளகாயும், கறிவேப்பிலையுமாய் தாளித்த மோர் மணக்கும் பந்தியெங்கும். சென்னைக்கு குடியேறியபிறகு இதை அனுபவிப்பது கிட்டத்தட்ட இல்லை என்று ஆகிவிட்டது. கல்யாணத்திற்கு பிற‌கு வீட்டில் ரமா சமைக்கின்ற‌ உணவினை சாப்பிட சாப்பிட அந்த எனது எண்ணம் நெய்யிட்ட தீயாய் வளர ஆரம்பித்தது. ஆனாலும் என்னால் என்ன செய்துவிட முடியும்? சமைக்கப்பட்ட உணவு மணக்கும், அதனால் பசியோடிருப்பவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பதே எனக்கு மறந்துபோய் விட்டது.

சென்னை கல்யாணங்களின் விருந்து கிட்டத்தட்ட ஹோட்டல்களில் சாப்பிடுவது போலத்தான் இருக்கிறது. உட்கார்ந்தவுடன் ஒரு பேப்பரை விரித்து சடாரென அனைத்தையும் அளவுச்சாப்பாடு போல வைத்துவிட்டு போய்விடுகிறார்கள், ரசம் மோர் உட்பட. எதையுமே கேட்டு வாங்குவதற்கு விடுவதில்லை. 'டேய்.. எனக்கு அப்பளம் வைக்கவில்லை' என கத்த வாய்ப்பை தருவதில்லை. 'பாயாசத்த டம்ளர்ல கொடுங்கடா' என சத்தம்போடவிடாமல் ஏதோ ஒரு 'பாதாம் கீரை' கப்பில் வைத்துவிட்டு போய்விடுகிறார்கள். ரசனையே இல்லாமல் போய்விடுகிறது. ந‌ம‌க்கு ஒரு ஐட‌த்தை வைக்க‌ ஆளில்லாம‌ல் 'ஏய்.. அவிய‌ல், ஏய்.. த‌ண்ணி' என்று க‌த்திக்கொண்டே சாப்பிடும் சுக‌ம் இங்கே கிடைப்ப‌தில்லை.

க‌ட‌ந்த‌ ஐந்து வ‌ருட‌ங்க‌ளாக‌ ஒவ்வொருமுறை ஊருக்கு போகும்போதும் அந்த‌ ச‌ம‌ய‌த்தில் ஏதும் க‌ல்யாண‌ம் ந‌டைபெறுகிற‌தா என்று விசாரிப்ப‌தே என் வ‌ழ‌க்க‌மாயிருந்தும் இன்னும் அந்த‌ வாய்ப்பு கிடைக்க‌வில்லை என்ப‌தே உண்மை. ம‌ங்க‌ளூரின் க‌ல்யாண‌‌த்துக்கு போன‌போதும் இந்த‌ எண்ண‌ம் வ‌ந்து போன‌து உண்மை.

ஆனால் கல்யாணச்சாப்பாட்டிற்கு பதிலாக‌ 'க‌ல்யாண‌ தோசை' சாப்பிட்டுவ‌ந்தேன். அதில் ம‌ங்க‌ளூரின் த‌வ‌று ஏதுமில்லை என்ப‌தை நான் அறிந்திருக்கிறேன்.

டிஸ்கி 1 : நேரமின்மையால் சுருக்கமாக இந்தப்பதிவு முடிக்கப்படுகிறது. விரிவாக இது பின்னர் மீள்பதிவு செய்யப்படும். விருப்பமிருந்தால் ஒரு பின்னூட்டமிட்டுவிட்டு நீங்களும் இதை விரிவாக்கலாம். அனுமதி இலவசம். மொய் எழுதவேண்டிய அவசியமில்லை. நான் போட்டோ போட்டிருக்கும் இந்த சமயத்தில் 'ஆணி'யை காரணம் காட்டி பதிவிடாமலிருப்பது கயமைத்தனம் என்று நண்பரும் கண்ணனும் சுட்டிக்காட்டியதால் இந்த சுருக்கப்பதிவு வலையேற்றப்படுகிறது.

டிஸ்கி 2 : வலைப்பூ எந்நேரமும் 10000 ஹிட்ஸை தொடலாம் என்பதால், 10000மாவது ஹிட்டை செய்பவர் ஸ்கிரீன் ஷாட்டுடன் தொடர்புகொண்டால், விரைவில் வெளியாகவிருக்கும் தாமிராவின் "காதலிக்கவிருப்பவர்களுக்கான எச்சரிக்கை : பாகம் 1" முதல் பிரதி வெளியீட்டு விழா மேடையில் கிடைக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

48 comments:

வெண்பூ said...

மீ த பஷ்டூ....படிச்சிட்டு கருத்து பின்னூட்டம் போடுறேன்..

வெண்பூ said...

ம்ம்ம்ம்... நிஜம்தான்.. இப்போதெல்லாம் ஊரில்கூட இந்த பேப்பர் விரித்து எல்லாம் வைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமிக்க ஆரம்பித்து விட்டது. :(

தாமிரா said...

ஆகா.. வெண்பூ.! இன்னும் முடிக்கவில்லை, மீண்டும் படிக்கவும். புல்லரிக்குதுங்க..

பரிசல்காரன் said...

தாமிரா said...

ஆகா.. வெண்பூ.! இன்னும் முடிக்கவில்லை, மீண்டும் படிக்கவும். புல்லரிக்குதுங்க..//

:-))))))))

kumky said...

கல்யாண சாப்பாடு என்றாலே அலர்ஜி என்று ஆகிவிட்டது இப்போதெல்லாம். நீங்கள் எந்த ஊர் கல்யாணத்தை பற்றி சொல்கிறீர்கள்? (உங்க கல்யாணத்துக்கு ஏன் பாஸ் என்னை கூப்பிடல? இல்ல அடுத்த கல்யாணத்துக்காச்சும்....?)

சந்தனமுல்லை said...

ம்ம்..பேஷன்ற பேரில நாம இந்த சந்தோஷங்களை இழந்துகிட்டு வரோம்.
//ஆனால் கல்யாணச்சாப்பாட்டிற்கு பதிலாக‌ 'க‌ல்யாண‌ தோசை' சாப்பிட்டுவ‌ந்தேன்//
தாமிரா டச்!! :-))

வெண்பூ said...

//தாமிரா said...
ஆகா.. வெண்பூ.! இன்னும் முடிக்கவில்லை, மீண்டும் படிக்கவும். புல்லரிக்குதுங்க..
//

ஹி..ஹி... கொஞ்சம் அவசரபட்டுட்டனா????

கார்க்கி said...

நான் கல்யாணத்துக்கெல்லாம் போக ஆரம்பிச்சப்பவே இப்படி மாறிட்டாங்க.. நான் ரொம்ப சின்னப் பையன் அப்பு..

அகநாழிகை said...

இப்போதெல்லாம் கல்யாண வீட்டு சாப்பாடு என்பது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் மட்டுமே எனபது போல் ஆகிவிட்டது. கல்யாணத்துக்கு வரும் முன்பாக முதலில் கேட்பது டிரீட் தான். பாதிபேர் அரியும் குறையுமாக சாப்பிட்டு வீண் செய்வதை விட விரும்பியதை தேர்ந்தெடுத்து உண்ணும் 'buffet' முறை சிறந்ததாக படுகிறது. நான் முக்கியமான திருமணங்கள் தவிர மாற்ற திருமணங்களுக்கு காலையில் போவது கிடையாது. அதே போல இரவுகளில் திருமணத்திற்கு சென்றால் சாபிடுவது கிடையாது. (இரவு சிற்றுண்டி மட்டுமே என்பதால்) அப்படி சாப்பிட நேரும் சூழ்நிலை வந்தால் இனிப்பு, காய்கறியை மட்டும் சாப்பிட்டு விடுவேன்.என்னதான் இருந்தாலும் ஒவ்வொன்ன்றாக கேட்டு வாங்கி, திருமண வீட்டார் நன்றாக கவனித்தார்கள் என்று திருப்தியாக சாபிடுவது ஒரு சந்தோஷம்தான் ! அதே சமயம் பக்கத்து இலைக்கு பாயாசம் போடு என்று கூறி நம்முடைய பிரதாபத்தை காட்டிக்கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு.

வால்பையன் said...

விடுங்க,என்னோட அடுத்த!? கல்யானத்துக்கு கண்டிப்பா நீங்க ஆச பட்ட மாதிரி சாப்பாடு போடுறேன்

narsim said...

கலக்கல் தல...

கல்யாணவீட்டுக்குள் போய்ட்டுவந்த மாதிரி இருக்கு பதிவு.. நச்..

நர்சிம்

புதுகை.அப்துல்லா said...

நீங்க தின்னது கல்யாண தோசை அல்ல கல்யாண தோசைகள்...
:)

SanJai said...

ஹ்ம்ம்ம்ம். இப்போல்லாம் எங்கே கல்யாண வீட்டு சாப்பாடு? எல்லாம் கல்யாண மண்டபத்து சாப்பாடு தான்.. முன்ன பின்ன தெரியாத யாரோ பரிமாறுவாங்க.. நாமளும் கடனேன்னு சாப்ட்டு வருவோம்.. :(

SanJai said...

சர்வேயில் என் தலைவி நமீதாவை சேர்க்கும் வரை ஓட்டெடுப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை.. :((

தாமிரா said...

நன்றி பரிசல்.!
நன்றி கும்கி.! (அடுத்த கல்யாணமா? இன்னா விளாடுறயா? சூடான பால் குடுத்து சூடு வெச்சுடுவேன் ஜாக்கிரதை)
நன்றி முல்லை.! (ஆகா, டச்செல்லாம் வெக்கிறேனா? குட்..குட்..)
நன்றி வெண்பூ.! (அதெல்லாம் ஒண்ணும் அவசரப்படவில்லை, இதெல்லாம் ஒரு பெருமைதானே.!)

தாமிரா said...

நன்றி கார்க்கி.! (அப்ப போன்ல பேசும் போது சைட்ல கேட்ட குரல் யாருது? ஊட்டுக்காரி இல்லையா?)

**இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பதென்னவென்றால் ஹைதராபாத் வந்தால் கவனிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, வந்தவுடன் நேரமில்லை என்று டிமிக்கி குடுத்துவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார் கார்க்கி. ஒரு கோட்டர் அடிக்க நேரமில்லை என்று கூறிவிட்டு பதிவுகளும், பின்னூட்டங்களும் போட்டுக்கொண்டிருக்கும் கார்க்கியை என்ன செய்யலாம் என்று யாராவது சொன்னால் தேவலை.! ஆகவே இனி யாரும் கார்க்கியை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்**

நன்றி நாழிகை.! (இனிப்பு, காய்கறியை மட்டும் சாப்பிட்டு விடுவேன்..// இதென்ன காம்பினேஷன், புரியலையே.!)
நன்றி வால்.! (என்னோட‌ அடுத்த‌' என்ப‌த‌ற்கு ப‌திலாக‌ அடுத்து என்னோட' என்று இருக்க‌வேண்டும், கரெ‌க்டா?)

தாமிரா said...

நன்றி நர்ஸிம்.!
நன்றி புதுகை.! (கலாய்க்கிறதுலேயே குறியா இருங்கையா.!)
நன்றி சஞ்சய்.! (நானும் அதத்தான் சொல்லவந்தேன் தல..)

kumky said...

சென்னையிலதான் நிம்மதியா கோட்டர்...முடியலன்னு ஆந்திரா போனாக்க ...இந்த கார்க்கி தொல்ல தாங்க முடியல..அண்புத்தம்பி(அதுவும் சின்னதம்பி)கார்திக்கிற்கு..தயவு செய்து நண்பர் தாமிராவை (எப்பாடு பட்டேனும்) திருப்தி படுத்தி படுத்திவைக்கவும்..

Anonymous said...

ஆமாங்க தாமிரா,

இப்பெல்லாம் கேடரிங் காண்ட்ராக்ட் விடுவதால பெர்சனல் டச் இல்லாமப் போயிடுது.

ஆனாலும் கிராமங்களில் இன்னும் பழைய முறை தொடர்கிறது. நான் எந்தக் கல்யாணத்திற்குச் சென்றாலும் முதலில் தவசிப் பிள்ளையய் ஃபிரண்ட் பிடித்து விடுவேன். சாப்பிட்டுவிட்டு கட்டாயம் பாராட்டி விட்டும் வருவேன்.

விஜய் ஆனந்த் said...

:-(((..

அங்கிள்...இப்படி ஏமாத்திட்டீங்களே...

தலைப்ப பாத்துட்டு உங்க மகன்(ள்) கல்யாணத்து்க்கு அழைச்சு கல்யாண சாப்பாடு சாப்புட கூப்புடறீங்கன்னு ஆசை ஆசையா வந்தேன்...

விஜய் ஆனந்த் said...

நீங்க இன்னும் முழுசா ஓடோமாஸுக்கு மாறலியா???

கொசுவத்தியா சுத்தி தாக்குறீங்க???

தாமிரா said...

நன்றி வேலன்.!
நன்றி விஜய்.! (அடேய்.! என் இமேஜை குறைக்கிற‌துன்னே கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறாயா? உன்னொரு வாட்டி அங்கிள்னு சொன்னே தேடி வந்து ஒதைப்பேன். ப்ரொபைலில் என்ன ஜோக்கா இருக்கிறேன்னு பாத்தல்லே.. பத்தாதுனா, மங்களூர் கல்யாணத்துல எடுத்த போட்டோவ சஞ்சய் பதிவுல போய் பாத்துக்கவும். 26 வயசுதான் ஆவுது, நம்புங்கப்பா.! அவ்வ்வ்வ்வ்...)

அமர பாரதி said...

கல்யான சாப்பாட்டின் ருசி அது செய்யப்படும் அண்டாவில் இருக்கிறது. பொதுவாக அண்டா குழம்பு என்றும் சொல்வார்கள். ஹ்ம்ம்ம் அடுத்த தடவை கல்யானம் இருக்கிற நாள்ல ஊருக்கு வரனும்.

//கல்யாணத்திற்கு பிற‌கு வீட்டில் ரமா சமைக்கின்ற‌ உணவினை சாப்பிட சாப்பிட அந்த எனது எண்ணம் நெய்யிட்ட தீயாய் வளர ஆரம்பித்தது. ஆனாலும் என்னால் என்ன செய்துவிட முடியும்? சமைக்கப்பட்ட உணவு மணக்கும், அதனால் பசியோடிருப்பவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பதே எனக்கு மறந்துபோய் விட்டது.
// இது கொஞ்சம் ஓவர். அப்புறம் உள்ளதும் போடப்போகுது.

புதுகை.அப்துல்லா said...

பத்தாதுனா, மங்களூர் கல்யாணத்துல எடுத்த போட்டோவ சஞ்சய் பதிவுல போய் பாத்துக்கவும். 26 வயசுதான் ஆவுது, நம்புங்கப்பா.! அவ்வ்வ்வ்வ்...)
//

அந்த போட்டாவப் பார்த்தும் மக்கள் 26 வயசுன்னு நம்புவாங்கன்னு நினைக்கிறீங்களே!!!! என்னா தன்னம்பிக்கை??!!!???!!! :)))))

Saravana Kumar MSK said...

//Blogger புதுகை.அப்துல்லா said...

பத்தாதுனா, மங்களூர் கல்யாணத்துல எடுத்த போட்டோவ சஞ்சய் பதிவுல போய் பாத்துக்கவும். 26 வயசுதான் ஆவுது, நம்புங்கப்பா.! அவ்வ்வ்வ்வ்...)
//

அந்த போட்டாவப் பார்த்தும் மக்கள் 26 வயசுன்னு நம்புவாங்கன்னு நினைக்கிறீங்களே!!!! என்னா தன்னம்பிக்கை??!!!???!!! :)))))//

நானும் அந்த போட்டோவை பார்த்தேன்..
ஹி ஹி ஹி

விஜய் ஆனந்த் said...

// புதுகை.அப்துல்லா said...
பத்தாதுனா, மங்களூர் கல்யாணத்துல எடுத்த போட்டோவ சஞ்சய் பதிவுல போய் பாத்துக்கவும். 26 வயசுதான் ஆவுது, நம்புங்கப்பா.! அவ்வ்வ்வ்வ்...)
//

அந்த போட்டாவப் பார்த்தும் மக்கள் 26 வயசுன்னு நம்புவாங்கன்னு நினைக்கிறீங்களே!!!! என்னா தன்னம்பிக்கை??!!!???!!! :))))) //

சரியாச்சொன்னீங்க அண்ணாச்சி!!!
நானும் அந்த போட்டோவ பாத்ததுக்கப்புறம்தான் கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு, ****-ன்னு கூப்பிட ஆரம்பிச்சேன்...

ஹாஹாஹா!!!!

// உன்னொரு வாட்டி அங்கிள்னு சொன்னே தேடி வந்து ஒதைப்பேன்.//

நல்லா பாத்துக்கங்க... ****-ன்னுதான் போட்ருக்கேன்!!!!

// ப்ரொபைலில் என்ன ஜோக்கா இருக்கிறேன்னு //

நீங்களாவே வலிய வந்து சிக்கிக்றீங்களே!!!

நீங்க சொல்ல வந்தது ஷோக்கான்னு..உண்மை வயசு வெளிய வந்துடுச்சுங்கற டென்ஷன்ல ஜோக்கா-ன்னு தட்டிடீங்களே...சொசேசூ!!!

அது சரி said...

என்னவே ரொம்ப நல்லவரா இருக்கீரு!

எதுனா கல்யாண மண்டபத்துல பூந்து மதியம் லஞ்ச முடிக்கிற வேல எல்லாம் ஒமக்கு தெரியாது? பத்திரிக்கை வச்சாதான் போகணும்னு இல்ல, வைக்காட்டியும் போயி வாழ்த்திட்டு வரலாம். நாங்கெல்லாம் அப்பிடி தான்!

ஒமக்கு 26 வயசு தான், யாரு இல்லன்னா. ஆனா, எத்தினியாவது வருசமா 26 ஓடிக்கிட்டு இருக்குன்னு சொல்லிரும் :0)

(நாங்கூட சரி ஒம்ம மவனுக்கு தான் கல்யாணம் காட்சின்னு ரொம்ப ஆர்வமா வந்தேன், ஏமாத்திப்புட்டீரு. நல்லா இரும்வே.)

அது சரி said...

//
ஏதோ ஒரு 'பாதாம் கீரை' கப்பில் வைத்துவிட்டு போய்விடுகிறார்கள்
//

அரைக்கீரை, முளைக்கீரை ஏன் புளிச்ச கீரை கூட சாப்ட்ருக்கேன். அது என்ன பாதாம் கீரை? மெட்ராசுல இது தான் இப்ப புது ஐட்டமா?

Anonymous said...

//கல்யாணத்திற்கு பிற‌கு வீட்டில் ரமா சமைக்கின்ற‌ உணவினை சாப்பிட சாப்பிட அந்த எனது எண்ணம் நெய்யிட்ட தீயாய் வளர ஆரம்பித்தது. ஆனாலும் என்னால் என்ன செய்துவிட முடியும்? சமைக்கப்பட்ட உணவு மணக்கும், அதனால் பசியோடிருப்பவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பதே எனக்கு மறந்துபோய் விட்டது.//

அண்ணி.. கவனியுங்க..
போன தடவ நான் வீட்டுக்கு வந்தப்போ, என்ன மாதிரியான உபசரிப்போட சாப்பாடு போட்டீங்களே.. இன்னும் அடிநாக்கில அந்த சுவை இருக்கிறது.. அப்போகூட அண்ணன் நாலு தடவ வாங்கி சாப்பிட்டரே.. அத நான் இன்னும் மறக்கல..

Saravana Kumar MSK said...

//கல்யாணத்திற்கு பிற‌கு வீட்டில் ரமா சமைக்கின்ற‌ உணவினை சாப்பிட சாப்பிட அந்த எனது எண்ணம் நெய்யிட்ட தீயாய் வளர ஆரம்பித்தது. ஆனாலும் என்னால் என்ன செய்துவிட முடியும்? சமைக்கப்பட்ட உணவு மணக்கும், அதனால் பசியோடிருப்பவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பதே எனக்கு மறந்துபோய் விட்டது.//

அண்ணி.. கவனியுங்க..
போன தடவ நான் வீட்டுக்கு வந்தப்போ, என்ன மாதிரியான உபசரிப்போட சாப்பாடு போட்டீங்களே.. இன்னும் அடிநாக்கில அந்த சுவை இருக்கிறது.. அப்போகூட அண்ணன் நாலு தடவ வாங்கி சாப்பிட்டரே.. அத நான் இன்னும் மறக்கல..

Anonymous said...

அரைக்கீரை, முளைக்கீரை ஏன் புளிச்ச கீரை கூட சாப்ட்ருக்கேன். அது என்ன பாதாம் கீரை? மெட்ராசுல இது தான் இப்ப புது ஐட்டமா?
//

கலக்கல்


வெடிகுண்டு
முருகேசன்

Anonymous said...

அண்ணி.. கவனியுங்க..
போன தடவ நான் வீட்டுக்கு வந்தப்போ, என்ன மாதிரியான உபசரிப்போட சாப்பாடு போட்டீங்களே.. இன்னும் அடிநாக்கில அந்த சுவை இருக்கிறது.. அப்போகூட அண்ணன் நாலு தடவ வாங்கி சாப்பிட்டரே.. அத நான் இன்னும் மறக்கல..
//

புதுகை அப்துல்லாதான் ரமா அண்ணியோட ஸ்பை'யாம் அவருகிட்ட சொல்லுங்க..:)


அப்பாடா பத்தவைசாசி


வெடுகுண்டு
முருகேசன்

Dr. சாரதி said...

அருமையான பதிவு,
கல்யாணசப்பாடு என்றல் நாகர்கோயில் தான் நியாபகம் வருகிறது. வாழ்கையில் எல்லாம் தொலைத்துவிட்டு எதோ கண் காணாத தேசத்தில்....

விஜய் said...

உணமையைச் சொன்னீங்க. என்ன தான் ஹோட்டல்ல சாப்பிட்டாலும் கல்யாணச் சாப்பாடு மாதிரி வருமா. எங்க ஊர்ல கல்யாணச் சாப்பாட்டுல எவ்வளவு தடுத்தாலும் பாயாசத்தை விட்டுக்கிட்டே இருப்பாங்க. அதெல்லாம் நகரத்துல நடக்கறதில்லை. இரண்டாம் தடவை பொறியல் கூட்டு பச்சடி இதெல்லாம் கேட்கறதே இல்லை. சாப்பாடு எவ்வளவு நல்லா பண்ணியிருந்தாலும் அதைப் பரிமாருவது ஒரு தனி கலை. ஆனால் இப்போதெல்லாம் ஏதோ கடனே என்று பரிமாருகிறார்கள். உங்க பதிவை படிச்சப்பறம் அடுத்து ஊர் பக்கம் எந்தக் கல்யாணம் வந்தாலும் போய் அட்டெண்ட் பண்ணணும் என்ற ஆசை வந்து விட்டது.

பாபு said...

நான் அப்படியே உங்களுக்கு நேரெதிர் ,கல்யாணத்திற்கு போனால் சாப்பிடாமலே வந்து விடுவேன்,மிகவும் கேட்டு கொண்டால் மட்டும் அவர்கள் திருப்திக்காக சாப்பிடுவேன்(எனக்கு சென்னை கல்யாண சாப்பாடு பற்றி மட்டும் தான் தெரியும்)

தாமிரா said...

நன்றி அமரபாரதி.! (கல்யான சாப்பாட்டின் ருசி அது செய்யப்படும் அண்டாவில் இருக்கிறது// இது புதுசாயில்ல‌ இருக்குது? எல்லாரும் கவனிக்கப்பா..)

அப்துல், msk, விஜய்ஆனந்த் .. எச்சரிக்கிறேன்.. என் வயசு ஆராய்ச்சியை விட்டுவிடுங்கள். தமிழில் எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை 'வயசு'. (30 வயசுவரைக்கும் பார்க்கிறவங்கல்லாம் என்ன ஒரு 23 இருக்குமா? மிஞ்சிப்போனா 24 இருக்கும் விளையாடாதீங்க என்பார்கள், 30 வயதை தாண்டியபின்னர் எல்லோரும் 36 இருக்குமா? குறைஞ்சபட்சம் 37 இருக்கும் விளையாடாதீங்க என்கிறார்கள். அப்படி என்னாச்சு 30தாவது வயதில்? கல்யாணம்.!)

தாமிரா said...

நன்றி அதுசரி.! (அடுத்தவனைக்கலாய்க்கிற‌துனா மக்களுக்கு என்னா சந்தோஷம்.?)

msk தான் அந்த அனானிங்கிறது பக்கத்திலேயே இருக்குதே. இப்பிடிதான் ஒருதடவை ஆரம்பத்துல அனானி கமெண்ட் போடுறன்னு சொல்லி பேரோட போட்டுட்டு அவர் மெயிலுக்கு ஓடிப்போயி ஸாரி சொல்லின்னு ஒரே ஷேமாப்போச்சி.! அதுலேருந்து அந்த முயற்சிலேயெல்லாம் இறங்கறதில்லை.

நன்றி சாரதி.!
ந‌ன்றி விஜ‌ய்.!
ந‌ன்றி பாபு.!

வால்பையன் said...

//வால்.! (என்னோட‌ அடுத்த‌' என்ப‌த‌ற்கு ப‌திலாக‌ அடுத்து என்னோட' என்று இருக்க‌வேண்டும், கரெ‌க்டா?)//

நான் சரியாத் தான் சொல்லியிருக்கிறேன்
நீங்க சொல்லியுள்ள மாதிரி போட்டா என் தங்கமணி என் கல்யாணத்துக்கு வர மாட்டாங்களாம்

தமிழ் பிரியன் said...

நல்லா எழுதி இருக்கீங்க... :)

தமிழ் பிரியன் said...

என்னோட திருமணத்துல அழகா கூட்டு, பொரியல், சாம்பார், ரசம்,மோர், பாயாசம்ன்னு சைவ சாப்பாடு தான் போட்டோம்... பிரியாணிக்கு ஆசைப்படு வந்த மக்கள் தான் ஏமாந்து போனாங்க... (முஸ்லிம் கல்யாணமாச்சே)

ஆனா எல்லோரும் திருப்தியா சாப்பிட்டாங்க

Amudha said...

எங்க ஊர்ல எல்லாம், சாப்பிட வாங்கனு நாலு தடவை கூப்பிட்டால் தான் சாப்பிட போவோம். சென்னைல இது வேலைக்கு ஆகறது இல்ல. போனோமா, வாழ்த்தினோமா நாமே பந்தி எங்கேனு விசாரிச்சு சாப்பிட்டோமானு மாறிடிச்சி

Saravana Kumar MSK said...

//என்னாச்சு 30தாவது வயதில்? கல்யாணம்.!)//

அதான் ஆயிடிச்சிள்ள.. அவ்வளவு தான்..


//msk தான் அந்த அனானிங்கிறது பக்கத்திலேயே இருக்குதே. இப்பிடிதான் ஒருதடவை ஆரம்பத்துல அனானி கமெண்ட் போடுறன்னு சொல்லி பேரோட போட்டுட்டு அவர் மெயிலுக்கு ஓடிப்போயி ஸாரி சொல்லின்னு ஒரே ஷேமாப்போச்சி.! அதுலேருந்து அந்த முயற்சிலேயெல்லாம் இறங்கறதில்லை.//

சைன்-இன் பண்ண சோம்பேறித்தன பட்டு ஒரு அனானி கமெண்ட்டு போட்டேன்.. அப்பறம்.. நம்ம அண்ணன பத்தி நம்ம பேருல கமெண்டு போடலாம்னு சைன்-இன் பண்ணி கமெண்டு போட்டேன்..
:)

தாமிரா said...

நன்றி வால்.!
நன்றி தமிழ்.!
நன்றி அமுதா.!
நன்றி MSK.!

வல்லிசிம்ஹன் said...

சென்னையில நடக்கிற கல்யாண சாப்பாடெல்லாம் கணக்கில கொள்ள உடியுமா. பந்தி விசாரணையே இல்லையே இப்போது. உபசரிக்காவிட்டால் சாப்பிடுவதில் என்ன பெருமை இருக்க முடியும்/
அது சரி, நீங்க எந்த ஊருக்குப் போனால் இந்தச் சாப்பாடு கிடைக்கும்னு சொல்றீங்க:)

மங்களூர் சிவா said...

/
ஆனால் கல்யாணச்சாப்பாட்டிற்கு பதிலாக‌ 'க‌ல்யாண‌ தோசை' சாப்பிட்டுவ‌ந்தேன். அதில் ம‌ங்க‌ளூரின் த‌வ‌று ஏதுமில்லை என்ப‌தை நான் அறிந்திருக்கிறேன்.
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:))

மங்களூர் சிவா said...

/
வீட்டை விடவும், ஹோட்டல்களை விடவும் கல்யாணச்சாப்பாட்டில் அப்படி என்ன ஸ்பெஷல் என சொல்லத்தெரியவில்லை. ஆனால் அதன் சுவை நெஞ்சத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. வெட்டிப்போட்ட மிளகாயும், கறிவேப்பிலையுமாய் தாளித்த மோர் மணக்கும் பந்தியெங்கும். சென்னைக்கு குடியேறியபிறகு இதை அனுபவிப்பது கிட்டத்தட்ட இல்லை என்று ஆகிவிட்டது. கல்யாணத்திற்கு பிற‌கு வீட்டில் ரமா சமைக்கின்ற‌ உணவினை சாப்பிட சாப்பிட அந்த எனது எண்ணம் நெய்யிட்ட தீயாய் வளர ஆரம்பித்தது. ஆனாலும் என்னால் என்ன செய்துவிட முடியும்? சமைக்கப்பட்ட உணவு மணக்கும், அதனால் பசியோடிருப்பவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பதே எனக்கு மறந்துபோய் விட்டது.
/

ரமா ப்ளாக் படிக்கிறதில்லங்கிறதுக்காக இப்பிடியா வாரறது!?!?

மங்களூர் சிவா said...

டிஸ்கி2 சூப்பர்!

தாமிரா said...

நன்றி வல்லிசிம்ஹன்.! (சீர்மிகு நெல்லை மண்)
நன்றி சிவா.! (சும்மனாச்சுக்கும்.. அழக்கூடாது.!)