Monday, September 22, 2008

பரபரப்பான ஒரு மழைநாள்.!

சென்ற மாதத்தின் ஒரு துவக்கநாள். ஹைதராபாத்திலிருந்து விஜயவாடா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 70 கிமீ தூரத்தில் ஒரு நிறுவனம். இரண்டு நாட்களில் முடிந்துவிடவேண்டிய வேலை, நான் ஐந்தாவது நாளாக நின்றுகொண்டிருக்கிறேன். மதியம் 3 மணி. உச்சகட்ட வெறுப்பில் இருந்துகொண்டிருந்தேன். முதல் ரிடர்ன் டிக்கெட்டை கேன்சல் செய்து இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட முந்தைய நாள் சார்மினார் டிக்கெட்டும் கேன்சல் செய்யப்பட்டிருந்தது. சென்னை அலுவலகத்திலிருந்து அன்றைய இரவுக்கு புக் செய்யப்பட்டிருந்த விமான டிக்கெட்டும் மெயிலில் வந்துசேர்ந்த பாடில்லை. எனது ஒப்புதலுக்காக தயாராக இருந்திருக்க வேண்டிய பாகங்கள் கடைசிகட்ட தாயாரிப்பிலிருந்தன.

இதைப்போன்ற சூழல் ஒன்றும் எனக்கு புதிதில்லை எனினும் பலராலும் ஏற்பட்ட அனாவசியமான தாமதத்தில் கடுப்பாகிப்போயிருந்தேன். குறைந்தபட்சம் 4 மணிக்குள்ளாகவாவது இவர்கள் பாகங்களைத் தயார் செய்வார்களா? அதற்குள் சென்னையிலிருந்து எனது டிக்கெட் மெயில் செய்யப்படுமா? இவை நடந்தாலும் இங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு சென்று அறையை காலிசெய்து சரியான நேரத்தில் விமானநிலையத்தை அடைவேனா? அல்லது மறுபடியும் ஒருநாள் நீட்டிப்பு, டிக்கெட் கேன்சல் என முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டுமா? எரிச்சலிலும், கோபத்திலுமிருந்தேன்.

ஒருவழியாக முதலில் டிக்கெட் வந்துசேர்ந்தது. இரவு 08.15, IT2479, கிங்ஃபிஷெர். அப்போது மணி 04.35. எப்படிப்பார்த்தாலும் இரண்டரை மணி நேரமாவது வேண்டும். மழை துவங்கியிருந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சம்பந்தப்பட்டவர்களிடம் மிகக்கடுமையாக நடந்துகொண்டேன். பணி முடிந்தவுடன் தயார் செய்யவேண்டிய ரிப்போர்ட்டுகளை ரெடியாக தயார்செய்து, கையெழுத்து மட்டும் போடாமல் வைத்திருந்தேன். பொறுப்பிலிருந்தவர் 'இதோ இதோ' என என்னை சமாளித்துக்கொண்டிருந்தார். ஒரு வழியாக குறிப்பிட்ட பாகங்கள் வேலை முடிந்து என்னிடம் தரப்பட்டபோது மணி 5.10. போட்டோக்களை எடுத்துக்கொண்டு, ரிப்போர்ட்டுகளில் கையெழுத்திட்டு வீசிவிட்டு, அடுத்த 5 நிமிடங்களில் காருக்குள் பாய்ந்தேன்.

ஹிந்தியோ, தெலுங்கோ சுட்டுப்போட்டாலும் வரமாட்டேன்கிறது.. ஒரே வார்த்தை டிரைவரிடம், "ஜல்தீ... ஆட் பஜே .:பிளைட்டு.."

அந்த ட்ரைவர் சூழலை நன்கு புரிந்துகொண்டிருந்தார். வழக்கமாக வேகம் 50ஐ தொட்டாலே, "நோ அர்ஜன்ட், ஸ்லோ.. ஸ்லோ.." என்பவன் இன்று என்னடா பறக்கிறான் என புரிந்துகொண்டார். அடுத்த சில நிமிடங்களில் மழை கொஞ்சம் கொஞ்சமாக வலுக்கத்தொடங்கியது. மேலும் மாலை மெதுவாக சரிந்து இருள் வேறு கவியத்தொடங்கியது. இருள், கடும்மழை, வேகம், அவ்வப்போது அபாயகரமாக கடந்துசெல்லும் பெரிய லாரிகள். அபாயகரமான வேகம். "டேக் கேர், டேக் கேர்" என்று புலம்பிய‌வாறே முன் பக்கத்திலிருந்து பின் சீட்டிற்கு வந்து உட்கார்ந்துகொண்டேன்.

செகந்திராபாத்திலிருந்த ஹோட்டலை அடைந்தபோது மணி சரியாக 7.00. ரிச‌ப்ஷனில் பில்லை ரெடி பண்னச்சொல்லி இரண்டாவது .:ப்ளோரில் இருந்த அறைக்கு லி.:ப்டை தவிர்த்து ஓடினேன். அடுத்த சில நிமிடங்களில் என்னை காத்திருக்க வைக்காமல் ஹோட்டல் (ரெகுலர் கஸ்டமர்) ஊழியர்கள் என்னை அனுப்பிவைத்தனர்.

மீண்டும் கார் பயணம். மழை விட்டபாடில்லை. கூடுதலாக இப்போது டிராபிக். ஒவ்வொரு சிக்னலில் நிற்கும் போது வாட்சைப் பார்த்துக்கொண்டேன். அரைமணிநேர பயணத்திற்கு பின்னர் 'ஷார்ட் ரூட்' என்று ஏதோ ஒரு வழியில் போய் கார் டிரைவர் அவர் பங்குக்கு 10 நிமிடங்களை காலிசெய்துவிட்டு (மழை காரணமாக பிளாக் ஆகிவிட்டதாம்)மீண்டும் மெயின் ரோட்டுக்கு வந்து பயணத்தை தொடர்ந்தோம்.

கண்களை மறைக்கும் மழையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒரு வழியாக விமான நிலையத்தில் நான் இறங்கியபோது மணி 7.55. இறங்கி ஓடினேன். கிங்பிஷர் கவுண்டரை அடைந்த போது ஒரு இஞ்சுக்கு மேக்கப்பும், கடும் லிப்ஸ்டிக்கும் அணிந்த மினுமினுப்பான அந்த ஊழியை, சர்வ சாதாரணமான குரலில், "ஸாரி, போர்டிங் க்ளோஸ்ட்" என்றாள். அவ்வளவு நேர சாகசப்பயணம் தோல்வியாகிவிட்டதே என கலங்கினேன். எனக்கு சாதாரணமாகவே யாரிடமும் கெஞ்சுதல் பிடிக்காது/ தெரியாது. அதுவும் பெண்களிடம்.? அதுவும் இங்கிலீஷில்.? ஒருசில வினாடிகள்தான். மீண்டும் மழை, டிராபிக், ஹோட்டல், டிக்கெட் .:பாலோஅப்.. விளங்கிடும். கெஞ்சத்துவங்கினேன். மேலும் சில ஊழியைகளும் அங்கு வர அவர்களிடமும் கொஞ்சத்துவங்கினேன். கடைசியில் மனமிறங்கி எங்கோ போன் செய்து கேட்டுவிட்டு ஐடியை சரிபார்த்துவிட்டு உள்ளே அனுப்பினாள். ஏற்கனவே ஒருமுறை வந்த அனுபவம் இருந்ததால் ஓடினேன், விட்டால் பிளைட்டுக்கே ஓடியிருப்பேன்.

ஒருவழியாக தனி ஒரு வெற்றி வீர‌னாக விமானத்திற்குள் நான் நுழைய கதவுகள் அடைக்கப்பட்டன. குட்டியூண்டு விமானம். டவுண் பஸ் போல நெருக்க‌மான சீட்கள், நிரம்பியிருந்தது.

எனது ஜன்னலோர சீட்டை கண்டு பிடித்து உட்கார்ந்து 'யப்பாடா..' என பெருமூச்சு விட்டபிறகுதான் கவனித்தேன். பக்கத்து சீட்டில் ஒரு சினிமா பிரபலம் உட்கார்ந்திருந்தது. இவ்வளவு நேரம் பட்டது பத்தாதுன்னு இந்தக்கொடுமை வேறயா.. என நினைத்துக்கொண்டே ஒரு புத்தகத்தை கையிலெடுத்துக்கொண்டு படிப்பது போல பாவனை செய்யத்துவங்கினேன்.

டிஸ்கி 1: சென்னை வந்தவுடன் நேரே மீனம்பாக்கம் போகாமல் ஏன் வங்கக்கடலுக்குள் போய் ஒரு யூ டர்ன் அடித்து வருகிறார்கள்? (டாப் ஆங்கிளில் சென்னையும், கடற்கரையும் பிரமாதம்ங்க. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கொள்ளை அழகு.)

டிஸ்கி 2: அந்த பிரபலம் யாரு? க்ளூ ‍‍-அவர் ஒரு இயக்குனர் கம் ந‌டிகர். ஒரு மொக்கைத்திலகம்.

35 comments:

தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ

தமிழ் பிரியன் said...

புதிருக்கு விடை தெரியலையே... :)

ச்சின்னப் பையன் said...

//டிஸ்கி 2: அந்த பிரபலம் யாரு? க்ளூ ‍‍-அவர் ஒரு இயக்குனர் கம் ந‌டிகர். ஒரு மொக்கைத்திலகம்.//

அவருமா?????

ச்சின்னப் பையன் said...

// குறைந்தபட்சம் 4 மணிக்குள்ளாகவாவது இவர்கள் பாகங்களைத் தயார் செய்வார்களா? அதற்குள் சென்னையிலிருந்து எனது டிக்கெட் மெயில் செய்யப்படுமா? இவை நடந்தாலும் இங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு சென்று அறையை காலிசெய்து சரியான நேரத்தில் விமானநிலையத்தை அடைவேனா? அல்லது மறுபடியும் ஒருநாள் நீட்டிப்பு, டிக்கெட் கேன்சல் என முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டுமா? //

நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க ஒருத்தரே நாலு விதமா யோசிச்சிருக்கீங்களே?????? நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு......

ச்சின்னப் பையன் said...

//எனது ஜன்னலோர சீட்டை கண்டு பிடித்து உட்கார்ந்து 'யப்பாடா..' என பெருமூச்சு விட்டபிறகுதான் கவனித்தேன்.//

இது செல்லாது... செல்லாது..

இப்போல்லாம் சினிமாக்குப் போனால்கூட சீட் நம்பர் சொன்னாத்தான் நம்புறாய்ங்க.... நீங்க அதை மட்டும் சொல்லவேயில்லையே?????

rapp said...

me the 6th

Syam said...

இப்போ எல்லாம் வீட்டுல கரண்டு இல்ல,தண்ணி வரல,டயர் பஞ்சர்,நாய் குறுக்க வந்துருச்சு,கடைக்காரன் சில்லறை இல்லன்னு சொல்லிட்டான்,ஆட்டோகாரன் அம்பது ரூபாய் கேட்டான் அப்படின்னு சொல்லி போஸ்ட் போடுறது பேசனா போச்சு...
___________________________________
தப்பா நினைச்சுக்காதீங்க இந்த மாதிரி இன்சிடென்ட் நமக்கும் நடந்து இருக்கே இத போஸ்ட் பண்ண தோனலயேன்னு கடுப்பு தான் :-)
__________________________________

Anonymous said...

p.diddy?

வால்பையன் said...

பதிவை படிக்கும் பொது எனக்குள்ளும் ஒரு வேகம் தொத்தி கொண்டது

அட நிஜமா தாங்க ஐஸ் எல்லாம் இல்ல

Anonymous said...

தாமிரா,

இது கொடுமை. நம்ம அடிச்சுப் பிடிச்சு வந்தால் லேட்டுன்னு விட மாட்டான்கள். ஆனா அவங்க எத்தன மணி நேரம் தாமதம்னாலும் சிரிச்சுட்டே சொல்லுவானுக.

எல்லாம் நேரம்.

புதுகை.அப்துல்லா said...

சென்னை வந்தவுடன் நேரே மீனம்பாக்கம் போகாமல் ஏன் வங்கக்கடலுக்குள் போய் ஒரு யூ டர்ன் அடித்து வருகிறார்கள்?
//
பூமியில் சாலைகள் இருப்பது போல வானிலும் டிகிரி கணக்கில் சாலைகள் உண்டு. அந்த டிகிரிப்படித்தான் விமானங்கள் செல்ல வேண்டும். ஓன்றுடன் ஓன்று மோதாமல் இருக்க இந்த ஏற்பாடு.

சென்னையைப் பொறுத்த வரை விமானங்கள் சென்னையின் வான் எல்லைக்குள் நுழைந்தவுடன் மூன்று வழிகளில் தரை இறங்க அனுமதிக்கப்படும்.

1) தெற்கில் இருந்து வரும் விமானங்கள் தாம்பரம் அடைந்து நேராக தெற்கு-வடக்கில் தரை இறங்க அனுமதிக்கப்படும். அல்லது பாண்டிச்சேரி வான்எல்லை அடைந்து கடல்மார்க்கமாக சென்னை வான் எல்லை அடைந்து சென்னை ஹார்பரின் மேல் யூ டேர்ன் அடித்து கிண்டி வழியாக வடக்கு-தெற்கில் தரை இறங்க அனுமதிக்கப்படும்.

2) வடக்கில் இர்ந்து வரும் விமானங்கள் சென்னை வான் எல்லை அடைந்ததும் கடல்மேல் சென்று ஹார்பரில் இருந்து சாய்வாக கிண்டி வழியாக வடக்கு-தெற்கில் தரை இறங்க அனுமதிக்கப்படும் அல்லது காஞ்சிபுரம் வான் எல்லையில் இருந்து தாம்பரம் வழியாக அனுமதிக்கப்படும்

3) மேற்கில் இருந்து வரும் விமானங்கள் தாம்பரம் வழியாகவோ அல்லது டி.நகரின் மேல் பறக்கும் போது வலதுபுறம் திரும்பி கிண்டி வழியாகவும் வெகுசில நேரங்களில் ஹார்பர் மேல் பறந்து கிண்டி வழியாகவும் தரை இறங்க அனுமதிக்கப்படும்.


அப்போதைய ஏர்டிராபிக் சூழ்நிலையைப் பொறுத்து இறங்கும் பாதைகள் விமானிக்கு ஏர்கண்ட்ரோலரால் அறிவிக்கப்படும்.

Anonymous said...

மணீவன்னன்
சுந்தர் C


பதிவை இன்னும் படிக்கலை :)


வெடிகுண்டு
முருகேசன்

Anonymous said...

அந்த பிரபலம் யாரு? க்ளூ ‍‍-அவர் ஒரு இயக்குனர் கம் ந‌டிகர். ஒரு மொக்கைத்திலகம்
//

கொய்யால :)

இதுக்கு பேரு க்ளுவா ?

இப்ப இயக்குனர் கம் நடிகர் எல்லாரும் செய்யுரானுவோ

இதுல இன்னுரு க்ளு மொக்கை ஐய்யோ ஐய்யோ


வெடிகுண்டு
முருகேசன்

Mani - மணிமொழியன் said...

Perarasu ?

SJ Surya said...

naanthaan athu

பாபு said...

அந்த சூழ்நிலையை நன்றாக விவரிதிருந்தீர்கள்,இந்த மாதிரி சமயங்களில் நேரம் றெக்கை கட்டி பறப்பது போல இருக்கும்
இறங்குற plane எல்லாம் எங்க வீட்டு மேலேதான் பறக்கும்

வெண்பூ said...

அருமையாக எழுதுகிறீர்கள் தாமிரா.. உங்களின் பரபரப்பு படிக்கும்போது எங்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.

கார்க்கி said...

//ஒரு இஞ்சுக்கு மேக்கப்பும், கடும் லிப்ஸ்டிக்கும் அணிந்த மினுமினுப்பான அந்த ஊழியை,//

அந்த அவசரத்திலும் இதை கவணிக்க தவ‌றவில்லை.. நல்லாயிருங்கப்பூ

கார்க்கி said...

//இந்தக்கொடுமை வேறயா.. என நினைத்துக்கொண்டே ஒரு புத்தகத்தை கையிலெடுத்துக்கொண்டு படிப்பது போல பாவனை செய்யத்துவங்கினேன்./


அப்பா.. தப்பிச்சான்யா அந்த அந்த ஆளு..

கார்க்கி said...

//(மழை காரணமாக பிளாக் ஆகிவிட்டதாம்//


அப்படியே தங்கமணியை பத்தி ஒரு பதிவ அந்த "பிளாக்ல" போட வேண்டியதுதானே..

கார்க்கி said...

// இருந்துகொண்டிருந்தேன். //

இது என்ன மொழிப்பா??????????

கார்க்கி said...

//சென்னை வந்தவுடன் நேரே மீனம்பாக்கம் போகாமல் ஏன் வங்கக்கடலுக்குள் போய் ஒரு யூ டர்ன் அடித்து வருகிறார்கள்/

ஏன்னா அரபிக்கடல்ல யூ டர்ன் அடிக்கனும்னா மும்பை போகனும்.. அதான் வங்ககட்ல்லேயே அடிக்கிறாங்க..

சந்தனமுல்லை said...

narrate செய்த விதம் நல்லாருக்கு!! ஏதோ மெசேஜ் பதிவுதான் போலிருக்குன்னு
ஆரம்பத்தில் படிக்கும் போது தோன்றியது. :-)
பட், உங்க எழுத்து நடை நல்லாருந்தது!!

narsim said...

நல்லா இருக்கு தலைவா.. கன்டினி..

நர்சிம்

கார்க்கி said...

//நல்லா இருக்கு தலைவா.. கன்டினி..

நர்சிம்//

நர்சிம் அவர்களே,

என் பெயரை சொல்லியோ, இல்லை பின்னூட்டத்தை மேற்கோள் காட்டியோ பாராட்டவும்.. இல்லையென்றால் தாமிரா நீங்கள் அவரை பாராட்டுவதாக தவறாக நினைத்துக் கொள்ள்க்கூடும்..

மங்களூர் சிவா said...

//
அந்த பிரபலம் யாரு? க்ளூ ‍‍-அவர் ஒரு இயக்குனர் கம் ந‌டிகர். ஒரு மொக்கைத்திலகம்
//

கொய்யால :)

இதுக்கு பேரு க்ளுவா ?

இப்ப இயக்குனர் கம் நடிகர் எல்லாரும் செய்யுரானுவோ

இதுல இன்னுரு க்ளு மொக்கை ஐய்யோ ஐய்யோ


வெடிகுண்டு
முருகேசன்
//


ரிப்ப்பீட்டு

மங்களூர் சிவா said...

//
கார்க்கி said...

//சென்னை வந்தவுடன் நேரே மீனம்பாக்கம் போகாமல் ஏன் வங்கக்கடலுக்குள் போய் ஒரு யூ டர்ன் அடித்து வருகிறார்கள்/

ஏன்னா அரபிக்கடல்ல யூ டர்ன் அடிக்கனும்னா மும்பை போகனும்.. அதான் வங்ககட்ல்லேயே அடிக்கிறாங்க..
//

ROTFL
:)))))))))))))))))))))

தாமிரா said...

வாங்க தமிழ்.! புதிருக்கான விடை ஆச்சரியமான விதத்தில் கீழே ஒரு பின்னூட்டமாக உள்ளது.

வாங்க ச்சின்னப்பையன்.! நாங்க‌ல்லாம் இன்னும் சீடன் ரேஞ்சில்தானே இருக்கிறோம் குருவே.! (அப்புற‌மா சீட் ந‌ம்ப‌ர் ஞாவ‌க‌மில்லை)

வாங்க ராப்.! (என்ன‌ ஒண்ணும் ரசனையாயில்லையா.?)

வாங்க‌ ஷ்யாம்.! (டிஸ்கி போட‌லைனா நானும் க‌டுப்பாயிருப்பேன். டிஸ்கியை ந‌ம்புகிறேனா என்ப‌து வேறு விஷ‌ய‌ம்..)

தாமிரா said...

வாங்க வால்.! ந‌ம்ப‌றேங்க‌..

வாங்க வேலன்.! நெம்ப அனுபவம் போலிருக்குது..

வாங்க அப்துல்.! டெக்னிகல் தகவல்களுக்கு நன்றி.!

வாங்க வெடிகுண்டு.! திருப்ப‌தியில் மொட்டை போட்ட‌வ‌ன் என்ப‌து போன்ற‌துதான் என் க்ளூ, ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும் நீங்க‌ளும் டிரை ப‌ண்ணியிருக்கிறீர்க‌ளே.. ஆனா பிளாப்பு.!

தாமிரா said...

வாங்க மணி.! விடை உங்க பின்னூட்டத்திற்கு கீழே‌..

வாங்க எஸ்ஜே சூர்யா.!

*** ஒருத்தனும் நம்பப்போறதில்லை.! இது நிஜமான எஸ்ஜே சூர்யாவா என எனக்கு தெரியாது. ஆனால் நான் போடவில்லை. நம்ப ஆளுங்க யாராவது கெஸ் பண்ணியிருந்தா பாராட்டுகள். (ஆமா ரொம்ப முக்கியம்ங்கிறீங்களா?) என்னருகிலிருந்த (சுவாரசியத்துக்காக அப்படி எழுதப்பட்டது, நிஜத்தில் இரண்டு சீட்கள் பின்னாலிருந்தார்) அந்த மொக்கைத்திலகம் எஸ்ஜே சூர்யாதான் ***

வாங்க பாபு.! வீடு எங்கே கிண்டியிலா.?

தாமிரா said...

வாங்க வெண்பூ.! பரபரப்பு உண்மையிலேயே தொத்திச்சா.? பரவால்லையே, நானும் அந்த மாதிரி நினைச்சுதான் ட்ரை பண்ணினேன்.

வாங்க கார்க்கி.! நல்ல மூட்ல இருக்குற மாதிரி தெரியுது. உட்டுக்கலாய்க்கிறீங்க.. பாத்து பாத்து.!

வாங்க முல்லை.! பட், உங்க எழுத்து நடை நல்லாருந்தது!// நம்பிட்டேன். இதுல மெசேஜ் இல்லன்னு சொன்னதுனால எந்து பிற பதிவுகளில் மெசேஜ் இருக்குதுனு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளீர்கள். எல்லோரும் கவனிங்கப்பா..!

வாங்க நர்ஸிம்.! கன்டினி.. யூ பண்றேன், சொல்லிட்டீங்கல்ல..

வாங்க மங்களூர்.! ஊட்ல சவுக்கியமா.? அடுத்த பதிவு எப்போ.? நம்ப ஜோதில கலந்துக்குறீங்களா.?

பரிசல்காரன் said...

:-))

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்னிக்கு உங்களுக்கு சனி உச்சத்தில இருந்ததுன்னா அவர் பேரரசாக இருந்திருக்கக் கூடும் :P

விடமாட்டேன் said...

I guessed it sjsurya

தாமிரா said...

நன்றி பரிசல்.!
ந‌ன்றி ரிஷான்.!
ந‌ன்றி விடமாட்டேன்.!

(அதான் மேல‌யே ரிஸ‌ல்ட் சொல்லிட்டனே, அப்புறமும் என்ன வேண்டிகிடக்குது கெஸ்ஸு..)