Wednesday, September 24, 2008

கண்ணீர் வரவழைத்த செய்தி.!

இன்று காலை தினகரன் நாளிதழின் கடைசி பக்கத்தை ஆக்ரமித்திருந்த செய்தி அது. ஒரு சிறிய விபத்தில் 'பிரைன் டெத்' ஆகி இறந்து போன தங்களின் இளம்மகனின் அத்தனை உடலுறுப்புகளையும் தானம் செய்ய முன்வந்த ஒரு டாக்டர் தம்பதியைப் பற்றிய செய்தி. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அதை வாசித்துமுடித்தேன். குறிப்பாக அவனின் இதயமும் தானம் செய்ய முடிவுசெய்யப்பட தேனாம்பேட்டை அப்பல்லோவிலிருந்து ஜேஜே நகர் மருத்துவமனையிலுள்ள மற்றொரு சிறுவனுக்கு அதைப்பொருத்த வேண்டிய சூழல். பாதிக்கப்பட்டவனை அங்கு கொண்டு செல்வதில் பிரச்சினை இருந்திருக்கவேண்டும். ஆனால் இதயம் எடுக்கப்பட்டதிலிருந்து சுமார் 20 நிமிடத்திற்குள் பொருத்தப்பட வேண்டுமாம்.

சென்னை போக்குவரத்து. சுமார் 20 கிமீ தூரம். தேனாம்பேட்டையிலிருந்து ஜேஜே நகர். 20 நிமிடங்கள். நடக்கக்கூடிய விஷயமா இது.? சென்னை போலீஸ் நடத்திக்காண்பித்திருக்கிறார்கள். போக்குவரத்து துறையின் ஒத்துழைப்போடு ப‌த்தே நிமிட‌ங்க‌ளில் ஜேஜே ந‌க‌ரை அடைந்து சாத‌னை புரிந்தன‌ர். அறுவைச்சிகிச்சையும் வெற்றிய‌டைந்து இவ‌ர்க‌ள் சாத‌னையை பெருமைக்குரிய‌தாக‌வும் ஆகியுள்ள‌து.


இத‌ய‌ம் உட்ப‌ட‌ வாய்ப்புள்ள‌ அத்த‌னை உட‌லுறுப்புக‌ளையும் தான‌ம் செய்ய‌ முன்வ‌ந்த‌ அந்த‌ டாக்ட‌ர் த‌ம்ப‌தியின‌ரின் சேவை உள்ள‌ம் பிர‌மிக்க‌ வைத்த‌து எனில் அதை நடத்திக்காண்பித்த சென்னை போலீஸின் வேக‌ம் புல்ல‌ரிக்க‌ வைத்த‌து.

இதுகுறித்த‌ மேலும் ஒரு பதிவு : ப‌ர‌ப‌ர‌ப்பான‌ ப‌த்து நிமிட‌ங்க‌ள்

16 comments:

பாபு said...

அதை செயலாக்கிய எல்லோர்ருக்கும் நன்றி,நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்'

பி.கு:நானும் எழுதியிருந்தேன்,படித்தீர்களா?

பரிசல்காரன் said...

பெற்றோருக்கும், சம்பந்தப்பட்ட மற்றோர்க்கும் மரியாதை கலந்த வணக்கங்கள்!

லக்கி இதை அசுர நடையில் எழுதியிருந்தார்.. படித்தீர்களா?

Anonymous said...

எத்தனை பெரியகாரியம்...சாதனை

கும்க்கி said...

மனித நேயம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளதற்க்கு சாட்சி...இந்த நிகழ்வு.....

கும்க்கி said...

கண்கள் கலங்காமல் படிக்க முடியவில்லை.....

வல்லிசிம்ஹன் said...

நன்றி தகவலுக்கு.
சாதித்தவர்களுக்கும் பெற்றோருக்கும் வணக்கங்கள்.

தமிழ் பிரியன் said...

உண்மையிலேயே பெருமை கொள்ளத் தக்க விஷயம்.. இன்னும் மனிதம் உயிருடன் இருக்குறது.

வால்பையன் said...

இன்று மாலை மலரில் தான் படித்தேன் நண்பரே!
அருமையான பணி,
மேலும் இம்மாதிரி உடல் தானம் செய்ய அனைவரும் விரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்

தாமிரா said...

ந‌ன்றி பரிசல்.! (ல‌க்கியோட‌துக்கு சுட்டி குடுத்திருக்கிறேனே, க‌வ‌னிக்க‌லையா? ப‌டிச்சுட்டேன். அது மின்ன‌ல் வேக‌ம். 'அசுர ந‌டை':ந‌ல்ல‌ வார்த்தை பிர‌யோக‌ம். அப்ப‌டி நினைத்துதான் 'ம‌ழைநாள்' டிரை ப‌ண்ணினேன். ல‌க்கிகிட்ட‌ வ‌ர‌முடியுமா?)

நன்றி பாபு.!
ந‌ன்றி தூயா.!
ந‌ன்றி கும்கி.!
ந‌ன்றி வல்லிசிம்ஹன்.!
ந‌ன்றி தமிழ்.!
ந‌ன்றி வால்பைய‌ன்.!

தாமிரா said...

கும்கி :மனித நேயம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளதற்க்கு சாட்சி...// அனைவ‌ரின் சார்பில் ரிப்பீட்டு சொல்லிக்கிறேன். ப‌திவில் விட்டுப்போன‌ வ‌ரிக‌ள்.

புதுகை.அப்துல்லா said...

இதை போன்ற சமயங்களில் தான் மனிதத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது

சந்தனமுல்லை said...

சாதனைதான்!!

பெற்றோருக்கு மரியாதை கலந்த வணக்கங்கள்!! எவ்வளவு பக்குவப்பட்டவங்களா இருந்தா, அவ்வளவு சோகத்திலும் இதைச் செய்ய முன்வருவார்கள்!?!

அமேசிங்!!

rapp said...

:(:(:(

தமிழன்... said...

நல்ல விடயம்...

எல்லோருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்...

தமிழன்... said...

பெருமையான விசயம்...!

தாமிரா said...

நன்றி அப்துல்.!
நன்றி முல்லை.!
நன்றி ராப்.!
நன்றி தமிழன்.!