Thursday, September 25, 2008

ரமாவின் காதோர புலம்பல்கள்.

நேற்றிரவு படுக்கையில் விழுந்த போது மணி 10.45. ரமா அடுத்த ஐந்து நிமிடங்களில் கைகளில் ஒரு ரமணிசந்திரனை வைத்துக்கொண்டிருந்தவள் அதை மேஜையில் போட்டுவிட்டு வந்தாள். தலையணை உறைகள் மாலையில்தான் துவைத்துக்காய வைக்கப்பட்டிருப்பதனால் இரண்டு தலையணைகளை பாழாக்கவேண்டாம் (ஒரே நாளில்கூட பாழாகிவிடுமாம்) என்று என் தலையணையிலேயே வந்து ஒட்டிக்கொண்டாள். பின்னர் என் காதோரத்தில் நிகழ்த்திய உரையை இங்கே தந்திருக்கிறேன். எளிதாக பிரித்தரிய எனது வசனங்களை பிங்க் வண்ணத்தில் தந்திருக்கிறேன்.

"........என்னங்க, இன்னிக்கு சாய்ந்திரம் பால்காரன் பால் போடவேயில்லைங்க, என்னாச்சுன்னு தெரியலையே.. மறந்திருப்பானோ.? கரெக்டா கணக்கு வெச்சிருப்பாங்களா? நாம ஒருவேளை மற‌ந்துட்டோம்னா போட்டா மாதிரி சார்ஜ் பண்ணிடுவாங்களா?.. என்னங்க கேக்கிறன்ல.. இல்லம்மா அப்பிடிலாம் பண்ண மாட்டாங்க, கரெக்டா கணக்கு வெச்சிருப்பாங்க.. அதெப்பிடிங்க எத்தின வீட்டுக்கு பால் போடுவாங்க, எப்பிடி கணக்கு பண்ணுவாங்க?.. தெர்லம்மா.. ஆனா கரெக்டா பன்ணிடுவாங்க.. எதுக்கும் நானும் எழுதி வெச்சுக்கிறேன் ..ம்.. என்னங்க.. அடுத்த மாசம் என் பிற‌ந்த நாளைக்கு பட்டுசேலை வாங்கி தரேன்னு சொன்னீங்க, நாவகமிருக்கில்லை..?..ம்.. சரவணா வேண்டாம், ஆரெம்கேவியே போலாம்ங்க.. .. இல்ல போத்திஸ் போலாமா..?.. கேக்கிற‌ம்ல.. ஏதாவது ஒண்ணு போலாம்மா.. அப்பிடியே உங்களுக்கு ரெண்டு பனியன் எடுக்குணும்ங்க எல்லாம் கிழிஞ்சிபோச்சு.. ம்.. என்னங்க..என்னங்க.. சொல்லும்மா கேட்டுகிட்டுதானே இருக்கேன்.. நேத்தே சொல்லணும்னு நெனச்சேன்ங்க, மற‌ந்துடுச்சு.. சொல்லும்மா.. நம்ப புது .:பிளாஸ்க்கு வேல செய்யலிங்க, நேத்து வெந்நீர் ஊத்திவெச்சேன், ஒரு மணி நேரத்தில ஆறிடுச்சு.. ம்.. என்ன ம்? சொல்றேன்ல என்ன பண்றது? மாத்த முடியமா?.. ம்.. கேக்கிறேன்ல.. வாங்கி ரெண்டு மாசமாச்சி, இப்ப போனா உதைப்பாம்மா.. என்னங்க இப்பிடி சொல்றீங்க..நமக்கு ஏங்க எல்லாமே இப்பிடி தண்டமா போகுது?..ம்.. கண்ணன் அம்மா காலைலே போன் பண்ணினாங்க, போய் ரொம்ப நாளாச்சா.. கூப்பிட்டாங்க.. ம்.. சண்டே போலாமா?..ம்.. என்னங்க.. தூங்கிட்டீங்களா? சண்டே போலாமானு கேட்டேன்?.. ம்.. என்னங்க நம்ப ரெண்டு பேரும் இருக்கிற ஒரு படத்தை பெரிசு பண்ணனும்னு சொன்னேன்ல, மூணு காப்பி போடணுங்க..ம்.. அம்பை சித்தி ஒண்ணு கேட்டாங்க..குடுக்குணும்ங்க..ம்.. தீபாவளிக்கு போம்போது அவங்க வீட்டுக்கு ஒரு தடவ போணும்ங்க..ம்.. இன்னோரு விஷயம்ங்க..ம்..நேத்து நம்ப கிச்சனுக்குள்ள ஒரு குட்டி எலி வந்துடுச்சுங்க.. பயமாயிருக்குது, வெளிய போயிடுச்சா என்னன்னே தெரியல ம்.. ஞாயித்துக்கிழம செக் பண்ணிக்குடுங்க..ம்.. என்னுது உம்.? கேக்கிறேன்ல.. என்னுதுமா?.. என்னது நொன்னுதும்மா? ஏங்க‌ இப்பிடி பண்றீங்க.? காலையிலே ஒம்போது மணிக்கு எழுந்திருக்கிறீங்க.. முக்கா மணி நேரமா அப்பிடி என்னதான் பேப்பர்ல‌ படிப்பீங்க தெரியல, அப்பறமா அவசர அவசரமா குளிச்சுட்டு ஓடிடுறீங்க.. சாந்திரம் ஏழரைக்கு வரவேண்டியது, சாப்பிட்டு எட்டரைக்கு டிவி முன்னால உக்காந்தா ஜோக்கு பாக்கிறேன் ஜோக்கு பாக்கிறேன்னு பதினோரு மணி வரைக்கும் பாக்குறீங்க.. இப்பவாச்சும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னா என்ன தூக்கம்..? ஏங்க‌ இப்பிடி பண்றீங்க.?.. என்ன என்னடி பண்ணச்சொல்றே.? டிக்கெட்டு எடுத்துக்குடுங்க நான் ஊருக்கு போறேன்.. நாளைக்கே எடுத்துடறேன்மா.. அதுன்னா உடனே சரிம்பிங்களே.? நிஜமா போயிடவா? போனா ஆறு மாசத்துக்கு வரமாட்டேன்.. இப்ப என்ன ஆச்சுனு ராத்திரி போல கத்திக்கிட்டிருக்கே? நானா கத்துறேன்.. நீங்கதான் கத்துறீங்க..!5%%#$!%^$ .. #(2%#$ $!%^$ .... #(2%#$..<>):<........"

மீண்டும் சமாதானமாகி நான் தூங்க எத்தனித்த போது மணி 12.50.

64 comments:

சந்தனமுல்லை said...

:-))...//என்னங்க, இன்னிக்கு சாய்ந்திரம் பால்காரன் பால் போடவேயில்லைங்க, என்னாச்சுன்னு தெரியலையே.. மறந்திருப்பானோ.? கரெக்டா கணக்கு வெச்சிருப்பாங்களா? நாம ஒருவேளை மற‌ந்துட்டோம்னா போட்டா மாதிரி சார்ஜ் பண்ணிடுவாங்களா?.. //

இதிலிருந்தே தெரியுது..நீங்க கதை விடறீங்கன்னு..எனக்குத் தெர்ஞ்சு காலண்டர்லே தேதிக்கு நேரே குறித்து வைத்துக் கொள்வார்கள்!!

//நமக்கு ஏங்க எல்லாமே இப்பிடி தண்டமா போகுது// ;-) அது நமக்குன்னு இல்ல "எனக்குன்னு"தானே சொல்லியிருப்பாங்க..:-))

சந்தனமுல்லை said...

//.. என்னங்க நம்ப ரெண்டு பேரும் இருக்கிற ஒரு படத்தை பெரிசு பண்ணனும்னு சொன்னேன்ல, மூணு காப்பி போடணுங்க..ம்.. அம்பை சித்தி ஒண்ணு கேட்டாங்க..குடுக்குணும்ங்க//

:-))..ம்ம்..இப்படி கொடுத்து கொடுத்து, பப்பு போட்டோ மட்டும் தனியா இருந்தா குடுன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க..:-(

ச்சின்னப் பையன் said...

//5%%#$!%^$ .. #(2%#$ $!%^$ .... #(2%#$..<>):<........"
//

இதை மட்டும் கொஞ்சம் பொழிபெயர்த்து சொன்னீங்கன்னா, அது சேம் ப்ளட்டா, டிஃபரண்ட் ப்ளட்டான்னு நாங்க ( நான், வெண்பூ, பரிசல் மற்றும் பலர்) சொல்லிடுவோம்.....

தமிழ் பிரியன் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி... சேம் பிளட் தான்,... :)

//5%%#$!%^$ .. #(2%#$ $!%^$ .... #(2%#$..<>):<........"
//

இதெல்லாம் தெரிஞ்சது தான்.. :))

புதுகை.அப்துல்லா said...

ச்சின்னப் பையன் said...
//5%%#$!%^$ .. #(2%#$ $!%^$ .... #(2%#$..<>):<........"
//

இதை மட்டும் கொஞ்சம் பொழிபெயர்த்து சொன்னீங்கன்னா, அது சேம் ப்ளட்டா, டிஃபரண்ட் ப்ளட்டான்னு நாங்க ( நான், வெண்பூ, பரிசல் மற்றும் பலர்) சொல்லிடுவோம்.....

//

இனிமே புதுசா கண்டுபிடிக்கப்போற லாங்குவேஜ்ல மொழிபெயர்த்தாக் கூட சேம் பிளட்தான் :)

Anonymous said...

Cut your blogging and spend some quality time with the family :-)

வெண்பூ said...

//
சாந்திரம் ஏழரைக்கு வரவேண்டியது, சாப்பிட்டு எட்டரைக்கு டிவி முன்னால உக்காந்தா ஜோக்கு பாக்கிறேன் ஜோக்கு பாக்கிறேன்னு பதினோரு மணி வரைக்கும் பாக்குறீங்க.. இப்பவாச்சும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னா என்ன தூக்கம்..? ஏங்க‌ இப்பிடி
பண்றீங்க.?..
//


எப்படி? எப்படி? எப்படிங்க இதெல்லாம்... ஒரு எழுத்து கூட மாறாம தினமும் நான் கேக்குற அதே வசனம் :(((

Anonymous said...

:)வெடிகுண்டு
முருகேசன்
coming soon blogger :)

Syam said...

அங்கயுமா நான் மட்டும் தானோன்னு ரொம்ப குழம்பிபோய் இருந்தேன்...இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு :-)

Anonymous said...

வெண்பூ said...

//
சாந்திரம் ஏழரைக்கு வரவேண்டியது, சாப்பிட்டு எட்டரைக்கு டிவி முன்னால உக்காந்தா ஜோக்கு பாக்கிறேன் ஜோக்கு பாக்கிறேன்னு பதினோரு மணி வரைக்கும் பாக்குறீங்க.. இப்பவாச்சும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்னா என்ன தூக்கம்..? ஏங்க‌ இப்பிடி
பண்றீங்க.?..
//


எப்படி? எப்படி? எப்படிங்க இதெல்லாம்... ஒரு எழுத்து கூட மாறாம தினமும் நான் கேக்குற அதே வசனம் :(((
//


இதற்கு பதில் பரிசல் எழுதிய ஒரு நாள் நான் நீயாகவும் நீ நானாகவும் இருக்கவேண்டும்? மனைவிக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் ஒருமுறை படிக்கவும்..!!!!

அவங்க ஆசைகளையும் கொஞ்சம் கேளுங்கப்பா..


வெடிகுண்டு
முருகேசன்
விரைவில் பிளாக்கருடன் :)

rapp said...

இது உங்க முன்னோர்கள் டயரில இருந்து சுட்டதுங்களா? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பழைய மேட்டரா இருக்கே.....................எனக்கென்னமோ அறுபது, எழுபதுகளில் வந்த பாலச்சந்தர் படம் மாதிரி தோனுது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................

தாமிரா said...

வாங்க முல்லை.! (நிஜம்ங்க.. எங்க வீட்ல குறிச்சு வெக்கிறதில்லை..)
நன்றி ச்சின்னப்பையன்.!
நன்றி தமிழ் பிரியன்.!
நன்றி அப்துல்.!

நன்றி அனானி.. யாருங்க அது வேண்டிய ஆளு மாதிரி இருக்குது. என்ன அறிவுரையா? நாங்கெல்லாம் ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ண மாட்டோம். .:ஆபீஸ் டைம் தாண்டியாச்சுன்னா ஒரு நிமிஷம் கூட பிளாகிங் பண்ண முடியாது. (என்ன நைட் எழுதுறியேங்கிறீங்களா? எப்பவுமே ரெண்டாவது ஷிப்ட்). என்ன ஓடிருவேன்னு நினைப்பா.. நம்மகிட்ட நடக்காதுடியேய்..

தாமிரா said...

வாங்க வெடிகுண்டு.!
நன்றி வெண்பூ.!
நன்றி ஷ்யாம்.!

நன்றி ராப்.. ஐயய்யே.. சரியா கலாய்ச்சுட்டீங்களே.. வட போச்சே.! ஒருவகையில .:பேஷன் மாதிரி இது சுத்தி சுத்திதான் வரும்னாலும்.. ச்சைய். இனி ஏதாவது புதுசா ட்ரை பண்ணி பாக்குறேன்.

தாமிரா said...

மீண்டும் அந்த அனானிக்கு பதில். முன்னாடிலாம் வேலையை முடிச்சுட்டு வெட்டியா தம்மடிக்க போலாமா? கேண்டீன்ல அரட்டை அடிக்கலாமா?னு சுத்தி சுத்தி வருவேன். சமயங்கள்ல போக்கிடமில்லாம பேஸ்த் அடிச்சா மாதிரி ஆயிடும். இப்போ பிளாகிங்னால சுவாரஸியத்துக்கு சுவாரஸியம், வேலையும் டைமுக்குள்ள டைட்டா இருக்கும். பிஸி, பிஸி.! .:பிரெஷ்.! எப்பிடி.? ஊட்ல டிவி பாக்குறத உடுங்கன்னு சொல்லுங்க, அதுல ஒரு நாயமிருக்குது. திங்க் பண்றேன்.

தாமிரா said...

ராப்புக்கு மீண்டும் பதில். அவ்வ்வ்வ்வ்.. சொதப்பிடுச்சே.!

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே, அண்ணி ரொம்ப நல்லவங்கண்ணே, பாருங்க அவங்களுக்கு ஒரு சாதாரண பட்டுப்புடவை வாங்கிட்டு உங்களுக்கு ரெண்டு பனிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யன் வாங்கலாம்னு சொல்லிருக்காங்க. யாருக்குண்ணே இப்டியெல்லாம் மனசுவரும். நீங்க அண்ணியோட நல்ல மனச புரிஞ்சுக்காம ராத்திரி சண்டை போட்டுருக்கீங்க. இதெல்லாம் நல்லா இல்லைண்ணே. ஏற்கனவே எங்க அண்ணண் புதுகோட்டை அப்துல்லா அண்ணிக்கு உளவுப்பிரிவா செயல்பட்டுகிட்டு இருக்காரு. இப்டியெல்லாம் சண்டை போட்டீன்ங்கன்னு தெரிஞ்சா நாஙக அண்ணிக்காக அதிரடிப்படையா மாறிடுவோ, ஆமா சொல்லிட்டேன்.

புதுகை.அப்துல்லா said...

ஏற்கனவே எங்க அண்ணண் புதுகோட்டை அப்துல்லா அண்ணிக்கு உளவுப்பிரிவா செயல்பட்டுகிட்டு இருக்காரு.

//

ஜோசப்பு வெளிய தெரியாம இருக்கதுக்கு பேருதான் ஸ்பையி. எங்க ரமா அண்ணிக்கு நான் தான் ஸ்பையின்னு இப்படியா பப்ளிக்கா போட்டு குடுக்குறது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

விஜய் ஆனந்த் said...

:-)))...

இந்த தங்கமணிங்களே இப்படித்தான்...

ரூமுக்குள்ள வுட்டு, கதறக்கதற அடிக்கிறாங்க...

சேம் பிளட்...ஆல் ஓவர் த வேர்ல்ட்!!!

விஜய் ஆனந்த் said...

// புதுகை.அப்துல்லா said...

ஜோசப்பு வெளிய தெரியாம இருக்கதுக்கு பேருதான் ஸ்பையி. எங்க ரமா அண்ணிக்கு நான் தான் ஸ்பையின்னு இப்படியா பப்ளிக்கா போட்டு குடுக்குறது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்...

அண்ணாச்சி, அப்போ எனக்கு தந்த ஆதரவு எந்த கேட்டகிரில வருது???

பரிசல்காரன் said...

சூப்பர் தாமிரா!

குடுகுடுப்பை said...

நானும் எழுதலாம். முப்பது நாப்பது பக்கம் வரும். யாரு படிக்கறது

நந்து f/o நிலா said...

இன்னும் எத்தனை பதிவுக்குத்தான் "சேம் ப்ளட்"ன்னு கமெண்ட் போடறதுன்னு தெரியல...

Saravana Kumar MSK said...

பேச்சிலர்கள் வாழ்க..

வீணாபோனவன் said...

வேலைல PM தொல்லை, வீட்டுக்கு வந்ததா இந்த பொண்ணுகளோட தொல்லை... ரோதன தாங்க முடியலப்பா... வாய தொறந்தாலும் பிரச்சன வாய மூடினாலும் பிரச்சன.. வீட்டுக்கு வீடு வாசல்படினு சும்மாவா சொன்னாங்க... கல்யாணம் கட்டாத பிரம்மச்சாரிகளுக்கு இது ஒரு அபாயமணியாக இருக்கட்டும்...

இப்படிக்கு,
கல்யாணம் கட்டி,
வீணாபோனவன்.

Balaji said...

இதை என் மனைவிடம் கொடுத்து படிக்க சொல்லலாமா என்று யோசிதுகொண்டிருகன் என்ன நடக்கும் எனக்கு என்று!

வால்பையன் said...

ஒய் ப்ளட்!
சேம் ப்ளட்!

கார்க்கி said...

சும்மா சும்மா தங்கமணிகள குத்தம் சொல்லாதீங்கப்பூ.. கரண்ட் தொட்டா ஷாக் அடிக்குது இல்ல.. அப்புறம் ஏன் மின்வெட்டுக்கு வீராசாமிய திட்டறீங்க... ஏன்னா அது இல்லாம இருக்க முடியாது..அது மாதிரிதான் தங்க‌மணிகளும்..

கார்க்கி said...

தல, இந்த கலர் பிரிச்சு போடுற மேட்டர நான் பல இடத்துல உபயோகிச்சிருக்கேன்.. கவணிச்சிருக்கிங்களா?

மங்களூர் சிவா said...

ம்


ம்


ம்


ம்


ம்


ம்


ம்


ம்


ம்


ம்


ம்
(சொல்லி பழகிக்கிறேன்பா இப்பவே!!)
:))))))))))

மங்களூர் சிவா said...

//
ச்சின்னப் பையன் said...

//5%%#$!%^$ .. #(2%#$ $!%^$ .... #(2%#$..<>):<........"
//

இதை மட்டும் கொஞ்சம் பொழிபெயர்த்து சொன்னீங்கன்னா, அது சேம் ப்ளட்டா, டிஃபரண்ட் ப்ளட்டான்னு நாங்க ( நான், வெண்பூ, பரிசல் மற்றும் பலர்) சொல்லிடுவோம்.....
//

என்னையும் ஆட்டத்துல உங்ககூட சேத்துக்கங்க மிஸ்டர் ச்சின்னப் பையன்

மங்களூர் சிவா said...

அண்ணே, அண்ணி ரொம்ப நல்லவங்கண்ணே, பாருங்க அவங்களுக்கு ஒரு சாதாரண பட்டுப்புடவை வாங்கிட்டு உங்களுக்கு ரெண்டு பனிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யன் வாங்கலாம்னு சொல்லிருக்காங்க.

மங்களூர் சிவா said...

யாருக்குண்ணே இப்டியெல்லாம் மனசுவரும்

மங்களூர் சிவா said...

நீங்க அண்ணியோட நல்ல மனச புரிஞ்சுக்காம ராத்திரி சண்டை போட்டுருக்கீங்க.

மங்களூர் சிவா said...

நல்லா இல்லைண்ணே நல்லா இல்லை !!
:)))))

மங்களூர் சிவா said...

//
நந்து f/o நிலா said...

இன்னும் எத்தனை பதிவுக்குத்தான் "சேம் ப்ளட்"ன்னு கமெண்ட் போடறதுன்னு தெரியல...
//

அங்கயுமா???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

SurveySan said...

இதையெல்லாம் ஏன்யா வெளீல சொல்ற?

கொடுமைய அனுபவிச்சோமா, சைலண்டா போணோமான்னு இருக்கவேணாம்?

நல்லதை மட்டுமே, உலகத்தாருடன் பகிரவும்.
அல்லதை, சுயம் அனுபவித்து, நரகித்து, பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டுவம்

;)

தாமிரா said...

நன்றி ஜோஸப்.!
நன்றி விஜய்.!
நன்றி பரிசல்.!
நன்றி குடுகுடுப்பை.!
நன்றி நந்து.!
நன்றி எம்எஸ்கே.!
நன்றி வீணாபோனவன்.! (உங்க லவர் பேரு வீணாவா?)

தாமிரா said...

நன்றி பாலாஜி.!
நன்றி வால்.!
நன்றி கார்க்கி.!
நன்றி மங்களூர்.!
நன்றி சர்வேசன்.! (நீங்க சொல்றதும் நாயமாத்தான் படுது. அப்பிடினா எழுத ஒண்ணியுமே இருக்காதே.! எதுக்கும் நீங்க சொல்றத திங்க் பண்ணுறேன்.)

கும்க்கி said...

கல்யாண சாப்பாடுங்கறீங்க... கண்ணண் என்னத்தையோ சொன்னான்ங்கறீங்க.......என்னதான் நடக்குது..அங்க?

கும்க்கி said...

இந்த லட்சனத்துல ஸ்பை வேற..?

rapp said...

41

rapp said...

42

rapp said...

43

rapp said...

44

rapp said...

45

rapp said...

46

rapp said...

47

rapp said...

48

rapp said...

49

rapp said...

50

rapp said...

வர வர சிவா ஓகே, இங்க என் வேல முடிஞ்சிடுச்சி, கெளம்பறேன், பை பை:):):)

வால்பையன் said...

//வர வர சிவா ஓகே, இங்க என் வேல முடிஞ்சிடுச்சி, கெளம்பறேன், //

ஸ்கூல் புள்ள மாதிரி ஒன்னு ரெண்டு எண்ணிட்டு
வேலை முடிஞ்சுடுச்சா
யாராவது ஹோம் வொர்க் கொடுத்து விடுங்கப்பா

பாபு said...

எல்லா தங்கமணி களும் ஒரே மாதிரிதான் பேசுவாங்களா?

வீணாபோனவன் said...

தாமிரா,
சொல் குற்றம்... 'லவர்' என்பதைவிட 'லவர்ஸ்' என்ற்றே கூறலாம்...ஒன்றா ரெண்டா... :)) இருங்க, 'வீணா' என் 'லவரா'ன்னு ரூம் போட்டு யோசிச்சி சொல்லுறேன்... :)) ஆனா சண்டை போடாம வாழுங்கப்ப்பூபூபூ...

திறுந்த நினைக்கும் இவன்,
வீணாபோனவன்.

தமிழன்... said...

இப்படியொரு பதிவை போட்டுட்டு சொல்லாம விட்டா எப்படி அண்ணே...!!!

தமிழன்... said...

ஆடி அசத்தியிருப்பம்ல ...

தமிழன்... said...

அதுல நம்ம மாப்பிளை சிவா வேற வந்திருக்காரு...:)

தமிழன்... said...

ஆனா உங்களுக்கும் உம் கொட்டாம தூக்கமே வாறதில்லையாமே....

தமிழன்... said...

ச்சின்னப் பையன் said...

//5%%#$!%^$ .. #(2%#$ $!%^$ .... #(2%#$..<>):<........"
//

இதை மட்டும் கொஞ்சம் பொழிபெயர்த்து சொன்னீங்கன்னா, அது சேம் ப்ளட்டா, டிஃபரண்ட் ப்ளட்டான்னு நாங்க ( நான், வெண்பூ, பரிசல் மற்றும் பலர்) சொல்லிடுவோம்.....
//

என்னையும் ஆட்டத்துல உங்ககூட சேத்துக்கங்க மிஸ்டர் ச்சின்னப் பையன்
\\

சரி சிவா அங்கிள்...

தமிழன்... said...

அவங்க இவ்வளவும் பேசினதுல உங்களுக்கு ஒரு பதிவு வந்திருக்கு...

தமிழன்... said...

இப்படி அடிக்கடி காதோரம் பேசச்சொல்லுங்க...:)

கலக்குங்க...

தாமிரா said...

நன்றி கும்கி.!
நன்றி ராப்.!
நன்றி வால்.!
நன்றி பாபு.!
நன்றி தமிழன்.!

கடைசி பக்கம் said...

ரொம்பத்தான் தில்லு!

நானெல்லாம் பொருமையா கேட்கிறமாதிரி நடிப்பேன்

அத்திரி said...

//சும்மா சும்மா தங்கமணிகள குத்தம் சொல்லாதீங்கப்பூ.. கரண்ட் தொட்டா ஷாக் அடிக்குது இல்ல.. அப்புறம் ஏன் மின்வெட்டுக்கு வீராசாமிய திட்டறீங்க... ஏன்னா அது இல்லாம இருக்க முடியாது..அது மாதிரிதான் தங்க‌மணிகளும்..//


கார்க்கி தான் உண்மையை சொல்லியிருக்கார்.!!! உங்க தங்க மணியை ஊருக்கு அனுப்பி விட்டு எத்தனை நாள் தாக்குப்பிடிப்பீர்கள்?