Thursday, September 11, 2008

மங்களூர் சிவா திருமணம்! (ஒரு லைவ் ரிபோர்ட்)

அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து குளித்து ஒரு இடத்துக்கு நான் கிளம்புவது அரிதிலும் அரிது என்பதால் இன்று காலையில் ரமாவை வியப்பில் ஆழ்த்திவிட்டு சிவாவின் திருமணத்திற்கு காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். பெருங்குடியிலிருந்து வடபழனி. பதிவர்களை முதன்முதலாக பார்க்கப்போகிறோம் என்ற ஆவலோ, ட்ரா.:பிக் குறைவாக இருந்ததோ 7.10க்கெல்லாம் வடபழனி முருகன் கோவில் வாசலில் நின்றிருந்தேன்.

அங்கிருந்த கூட்டத்தைப்பார்த்தபோது என்ன சென்னையே கிளம்பி சிவாவின் திருமண‌த்திற்கு வந்துவிட்டதாவென மலைத்தேன். அவ்வளவு கூட்டம், கோவில் நிர‌ம்பி வழிந்தது. பின்னர் அறிவிப்பு ப‌லகையை பார்த்தபோது தெரிந்தது, இன்று மட்டும் சுமார் 150 திருமணங்கள் அங்கு நடந்துகொண்டிருப்பதாக.

எனக்கு தெரிந்த ஒரே பதிவர் (அதுவும் போனில்தான் சில தடவைகள் பேசியிருக்கிறோம்) புதுகை அப்துல்லாவை அழைத்தபோது மனிதர் சிரித்த சிரிப்பிலேயே இப்போதான் கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. இருப்பினும் 20 நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறியதால் காத்திருந்தேன். பின்பு 7.30க்கு அழைத்த போது ட்ரா.:பிக்கில் மாட்டிக்கொண்டதாய் சொன்னார். இது சரிப்படாது என்று தைரியமாய் சிவாவையே அழைத்தேன். அவர் குறிப்பிட்ட ஒரு ச‌ந்நிதிக்கு வாருங்கள் என்று சொல்லி போனை வைத்தார்.

அதுதான் கடைசியாக அவர் அட்டென்ட் செய்த போனாக இருக்கவேண்டும். நல்ல வேளையாக போன் செய்தேன், இல்லையென்றால் அருகிலிருந்து கொண்டே திருமணத்தை மிஸ் செய்திருப்பேன். அதன் பின் அவர் குறைந்த பட்சம் அரைமணிக்கு எந்த போனையும் அட்டென்ட் செய்யவில்லை. குறிப்பிட்ட சந்நிதியில் எனக்கு மேலும் ஒரு சோதனை காத்திருந்தது. அந்த இடத்தில் மட்டும் சுமார் ஒரு 7 புதுமண ஜோடிகள் நின்றுகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஜோடியை சுற்றிலும் ஒரு பத்து பன்னிரெண்டு உறவினர்கள். மீண்டும் அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை.

ஏன் இந்த பதிவர்கள் ப்ரொபைலில் போட்டோக்களை இடுவதில்லை என்று கோபம் கோபமாக வந்தது. (அதற்கான காரணமும் அப்புறம் விளங்கியது) என்னடா இது சோதனை? நமக்கே சவாலா என்றபடி முகத்தைப்பார்த்து குத்துமதிப்பாக கண்டுபிடித்து ஒரு ஜோடியின் அருகே போய் நின்றுகொண்டேன். என் ஊகம் சரியே.!(மணமகளின் சிரித்த முகத்தையும், மணமகனின் திரில் முகத்தையும் வைத்துக்கண்டுபிடித்தேன்) எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஒரு இடத்தில் இரண்டு திருமணம் நடந்தாலே சரியாக தப்பான ஜோடிக்கு மொய் வைத்துவிட்டு வருபவன் நான். அருகிலிருந்தவரிடம் மணமகனின் பேரைக்கேட்டபோது சிவா என்றார். வேலை பார்க்கும் ஊரையும் கன்பர்ம் செய்துகொண்டேன்.

வேறு யாரும் பதிவர்கள் அருகில் இருப்பார்களோ என்ற சந்தேகத்தோடே நின்றுகொண்டிருந்தேன். யாரும் இருந்திருக்கவில்லை என்று பின்னர் தெரிந்துகொண்டேன். தாலிகட்டும் போது அருகிருந்த ஒரே பதிவர் நான்தான். (உய்.. உய்.. விசிலடிங்கப்பா) அட்சதையிட்டு மகிழ்ந்தேன். பூங்கொடி சிரித்த முகமாயிருந்தார். நேரம் செல்லச்செல்ல சிவாவிம் முகமும் மலரத்துவங்கியது (பதற்றம் நீங்கியிருக்கவேண்டும்). வைபவம் நிகழ்ந்த பின்னர் உறவினர்களோடு நானும் முதலாவதாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டேன். பின்னர் அவர்கள் அருகிலேயே கொஞ்சம் தள்ளி கண்பார்வையிலேயே நின்று கொண்டேன்.(அதெப்படி சாப்பிடாமல் செல்வது?) கூட்டம் மணமக்களையும் சேர்த்து நெருக்கித்தள்ளியது.

சிறிது நேரத்தில் எங்களருகிலேயே அதிஷாவின் ஒரு பதிவில் போட்டோவில் பார்த்த முகம் ஒன்று இங்குமங்கும் அலைந்துகொண்டிருப்பது கண்டேன், அவர் டோன்டு ராகவன். அவரைப்பிடித்து சிவாவிடம் ஒப்படைத்தேன். பின்னர் சஞ்சய் வந்தார். (பெயர்களை பின்னர் அறிந்துகொண்டேன்). அதன் பின்னர் புதுகை அப்துல்லா வந்தார். (பரிசலின் பதிவில் அவர் படம் இருந்ததால் ஓரளவு கண்டுகொண்டேன். அதில் .:பாரின் ரிடர்ன் போல இருப்பவர் நேரில் பரமக்குடி ரிடர்ன் போல இருக்கிறார்.)

பின்னர் வெண்பூ வந்தார். (மனைவி, குழந்தையுடன் வந்திருந்து சிறப்பு செய்த‌ ஒரே பதிவர் இவர்தான்). முன்னமே வந்ததாகவும், கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் சொன்னார். பின்னர் G3, மற்றும் இம்சை அரசி ஜோடி வந்தது. அவர்களுடன் கவிஞர் ஸ்ரீ வந்திருந்தார். அசத்தலான தாடியும், ஹேர்ஸ்டைலும் என செம யூத் அவர் ஒருவர்தான். பின்னர் ஆரம்பத்தில் எது நிகழ வாய்ப்பில்லை எனவும் ந‌டக்ககூடாது எனவும் நினைத்தேனோ அது நிகழ்ந்து கொண்டிருந்தது. அதுதான் 'பதிவர் சந்திப்பு'.

தொடர்ந்து அந்த மினி பதிவர் சந்திப்பு (மொத்தம் எத்தனை பேர் என்பதை கூட்டிப்பார்த்துவிட்டு மினியா, மெகாவா என அதிஷாதான் சொல்லவேண்டும்) சரவணபவனில் தொடர்ந்தது. ஒருவருக்கொருவர் அறிமுகப்'படுத்தி'க்கொண்டனர். பின்னர் உண்மைத்தமிழன் வந்தார். டோன்டு சார் எல்லோரையும் மடக்கிப்பிடித்து பிளாக் முகவரியை வாங்கிக்கொண்டிருந்தார். நான் என்னுடையது ரொம்ப நீளமானது, நானே உங்க பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுகிறேன் வாருங்கள் என்று கூறி தப்பித்தேன்.

புதுகையும் சஞ்சய்யும் கிண்டலும் கேலியுமாக கலகலப்பாக இருந்தனர். வெண்பூ கலகலப்பில் கலந்துகொள்ளமுடியாமல் செய்ய வேண்டிய கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தார். (குறைந்த பட்ச இடைவெளியில் நின்றுகொண்டிருத்தல் மற்றும் காதுகொடுத்துக்கொண்டிருத்தல்). என்னை அனைவரும் நீங்களா நீங்களா என்பது போல கேட்டுக்கொண்டார்கள். எழுத்தைப்பார்த்து வேறுமாதிரி எதிர்பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன். குள்ளமாக (எப்போதும் அரையடிக்கு ஷூ போட்டுக்கொண்டிருப்பேன், கோவில் என்பதால் கழட்டவேண்டியதாக போயிற்று) தொப்பையுடன் பார்த்தவுடன் சப்பென்று ஆகிவிட்டதோ என்னவோ. (இந்த இடத்தில் என்னைவிடவும் இரண்டு மடங்கு பெரிதான வெண்பூவின் தொப்பையை குறிப்பிட்டாகவேண்டும்).

பின்னர் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். அதுவரை பேசாமலிருந்த இம்சை அரசி 'உங்கள் மனைவியை ஒருநாள் சந்திக்கவேண்டும்' என்று மிரட்டினார். சரியென்று தலையாட்டிவிட்டு வந்தேன். பின்னர் சரவணபவன் தோசையை உண்டுவிட்டு (சஞ்சய் மணவீட்டார் போல அனைவரையும் நன்கு கவனித்துக்கொண்டார்) அனைவரிடமும் விடைபெற்றுவிட்டு சிவாவிடமும் விடைபெற்று மறக்காமல் கி.:ப்ட்டையும் தந்துவிட்டு கிளம்பி, சென்னையின் டிரா.:பிக்கில் நீந்தத்துவங்கினேன்.

(டிஸ்கி : எனது படப்பொட்டியை கொண்டுபோகாததால் படங்கள் தரமுடியவில்லை, மன்னிக்கவும். வேண்டுமெனில் சிவா தவிர கேமிரா கொண்டுவந்த ஒரே ஒருவரான சஞ்சய்யை அணுகவும்)

152 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-)) me the firstuu?

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்னடா சிவா திருமாணத்துக்கு போனவங்க யாரும் இன்னும் அப்டேட் பண்ணலையேன்னு பார்த்தேன். உங்களோடது வந்துவிட்டது. இனி ஒன்னொன்னா வரும்ன்னு நம்பிக்கையில்,

.:: மை ஃபிரண்ட் ::.

.:: மை ஃபிரண்ட் ::. said...

அப்போ, சிவா தாலி கட்டுனத்ஹுக்கு சாட்சி நீங்க ஒருத்தர்தானா? :-)))))

முரளிகண்ணன் said...

\\இந்த இடத்தில் என்னைவிடவும் இரண்டு மடங்கு பெரிதான வெண்பூவின் தொப்பையை குறிப்பிட்டாகவேண்டும்).\\

வெண்பூ பாவங்க விட்டுருங்க. (ஏன்னா எனக்கு அவரை விட அதிகம், தொப்பை)

அனுஜன்யா said...

தாமிரா,

சுவாரஸ்யமான பதிவு. வெண்பூ செம்ம ஸ்மார்ட் ஆச்சே. உங்களுக்கும் தொப்பை என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. எல்லாருமே எதோ ஒரு காலத்து போட்டோ போடறாங்க போல. இந்த பதிவு எழுதின ஸ்டைல் பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்.

சிவா மற்றும் பூங்கொடிக்கும் வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

விஜய் ஆனந்த் said...

// தாலிகட்டும் போது அருகிருந்த ஒரே பதிவர் நான்தான். (உய்.. உய்.. விசிலடிங்கப்பா) //

வாழ்த்துக்கள்!!!!

சந்தடி சாக்குல, எங்க சங்கத்து சிங்கங்கள சீண்டி வுட்டுட்டீங்க...பின் விளைவுகள் படுபயங்கரமா இருக்கப்போவுது...பாத்து இருந்துக்குங்க!!!

எம்.ரிஷான் ஷெரீப் said...

சுடச் சுடப் பதிவு போட்டிருக்கீங்க..சூப்பர்..!

//(இந்த இடத்தில் என்னைவிடவும் இரண்டு மடங்கு பெரிதான வெண்பூவின் தொப்பையை குறிப்பிட்டாகவேண்டும்)//

ஏங்க? ஏங்க இந்தக் கொலைவெறி?
அவரே செவனேன்னு குடும்பத்தோட வந்து ரொம்ப அமைதியா இருந்திருக்காரு..இப்படிப் போட்டுக் கொடுக்குறீங்களே ?

ஆமா..லைவ் ரிப்போர்ட்னு சொல்லிட்டு கல்யாணச் சாப்பாடு டேஸ்ட் பத்தி ஒண்ணுமே சொல்லலியே ? :P

வெண்பூ said...

//எழுத்தைப்பார்த்து வேறுமாதிரி எதிர்பார்த்திருப்பார்கள் //

எழுத்து மட்டுமில்ல, புரொஃபைல்ல போட்டிருக்குற சன் கிளாஸையும் வெச்சிதான் :)

//சென்னையே கிளம்பி சிவாவின் திருமண‌த்திற்கு வந்துவிட்டதாவென மலைத்தேன். அவ்வளவு கூட்டம், கோவில் நிர‌ம்பி வழிந்தது//

நிஜம். நான் 8 மணிக்கு கோவில் முன்னால் வந்தவன் டூ வீலரை பார்க்கிங் செய்ய 10 நிமிடம் ஆனது. உள்ளே சென்றால் கோவிலுக்குள் குறைந்தது 2000 பேராவது இருந்திருப்பார்கள் (முக்கியமாக திரும்பிய பக்கமெல்லாம் மணமக்கள்). அப்துல்லாவை அழைத்து அவர் வந்து சிவா, சஞ்சய், தாமிராவை பார்க்கும்போது மணி 8.40. வித்தியாசமான அனுபவம்.

//வெண்பூ கலகலப்பில் கலந்துகொள்ளமுடியாமல் செய்ய வேண்டிய கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தார்.//

அதானே பார்த்தேன்.. எங்கடா எழுதலயேன்னு :)

//(இந்த இடத்தில் என்னைவிடவும் இரண்டு மடங்கு பெரிதான வெண்பூவின் தொப்பையை குறிப்பிட்டாகவேண்டும்).//

அடப்பாவி.. எனக்கிருக்கிற யூத்து இமேஜ காலி பண்ணிட்டியேய்யா!!!!

//சஞ்சய் மணவீட்டார் போல அனைவரையும் நன்கு கவனித்துக்கொண்டார்//

பாராட்டுக்கள் சஞ்சய். ஒவ்வொருவரையும் அவ்வளவு கூட்டத்தில் அமர வைப்பதில் இருந்து ஆர்டர் பண்ணியாச்சா என்று காபி வரை கொடுத்து உபசரித்தார். நாங்கள் கிளம்பும் வரை அவர் சாப்பிட அமரவில்லை.

****

G3, சஞ்சய், இம்சை அரசி, உண்மைத்தமிழன், தாமிரா இவர்களையெல்லாம் இன்றுதான் முதன்முதலாக சந்தித்தேன். அதற்காக சிவாவிற்கு ஸ்பெஷல் நன்றி..

****

பதிவர் நர்சிம் வடபழனி வரை வந்தும் அவர் காரில் வந்திருந்ததால் டிராஃபிக் மற்றும் பார்க்கிங் பிரச்சினைகளால் நாங்கள் கிளம்பும்வரை அவரால் எங்களை சந்திக்க முடியவில்லை :(

வெண்பூ said...

எனக்கு தெரிந்து தொலைபேசியில் வாழ்த்திய பதிவர்கள் நாமக்கல் சிபி & முரளிகண்ணன்.

கார்க்கி said...

//அசத்தலான தாடியும், ஹேர்ஸ்டைலும் என செம யூத் அவர் ஒருவர்தான்.//

என் ப்ரொஃபைல் இன்னும் பார்க்கலையா?

புதுகை.அப்துல்லா said...

நிஜம். நான் 8 மணிக்கு கோவில் முன்னால் வந்தவன் டூ வீலரை பார்க்கிங் செய்ய 10 நிமிடம் ஆனது.
//

எப்பா சாமி என்னா கூட்டம்!!!!!!
7.40 மணிக்கு சரியாக கோவிலின் உள்ளே நுழைந்த நான் மணமக்கள் அருகில் செல்லும் போது 8.10.

நானும் விரிவாப் பதிவா போட்டுடுறேன்.

வெண்பூ said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆமா..லைவ் ரிப்போர்ட்னு சொல்லிட்டு கல்யாணச் சாப்பாடு டேஸ்ட் பத்தி ஒண்ணுமே சொல்லலியே ? :P
//

சரவணபவன்.. சொல்லவா வேணும். அதுவும் எங்களையே ஆர்டர் பண்ணி சாப்டுக்கோன்னு (என்னை பத்தியெல்லாம் தெரியாம) சிவாவும் சஞ்சயும் சொல்லீட்டாங்க. :)

தாமிரா... சரி.. சரி .. சொல்லிடறேன். தாமிரா அவசர அவசரமா சாப்பிட்டதால, நான் அவருக்கு முன்னால ஆரம்பிச்சு சாப்பிட்டு முடிச்சது அவருக்கு அப்புறமாதான்.. கண்ணு வெக்காதீங்கப்பா.. :)

சந்தனமுல்லை said...

லைவ் அப்டேட்டுக்காக காத்துக்கிட்டிருந்தேன். எதிர்பாராத விதமா ஒரு கான்ஃப் கால்!! இல்லன்னா, அந்த லிஸ்ட்-ல நானும் இருந்திருப்பேன்..:(..

வாழ்த்துக்கள் டூ பூங்கொடி & மிஸ்டர் பூங்கொடி!!

குசும்பன் said...

மகிழ்ச்சி நண்பரே, நான் போன் செய்த பொழுது அருகில் பதிவர்கள் யாரும் இல்லை என்றார் சிவா, இருந்திருந்தால் உங்களிடமும் பேசி இருக்கலாம்.

குசும்பன் said...

//(இந்த இடத்தில் என்னைவிடவும் இரண்டு மடங்கு பெரிதான வெண்பூவின் தொப்பையை குறிப்பிட்டாகவேண்டும்).//

”என்னது கரண்டு போச்சா? ”
”அப்ப பக்கத்து வீட்டுல பாரு! ”
“அங்கேயும் இல்லை”
அப்பாடா!!!

என்ற கொள்கையோடு வாழும் உம்மை கண்டு பெருமை படுகிறேன்!!!

குசும்பன் said...

போட்டோ எடுத்து இருந்தால் மெயிலில் அனுப்பி வைக்கவும்
kusumbuonly@gmail.com

வெண்பூ said...

//போட்டோ எடுத்து இருந்தால் மெயிலில் அனுப்பி வைக்கவும்
kusumbuonly@gmail.com //

எதுக்கு, அடுத்த போட்டோ குசும்பு போட்டி வெக்கிறதுக்கா??? :)))

dondu(#11168674346665545885) said...
This comment has been removed by the author.
dondu(#11168674346665545885) said...

அலிபாபாவும் 108 அறிவுரைகளும் என்பது அவ்வளவு பெரிய தலைப்பா என்ன?

எனது பதிவு: http://dondu.blogspot.com/2008/09/blog-post_11.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

குசும்பன் said...

.!(மணமகளின் சிரித்த முகத்தையும், மணமகனின் திரில் முகத்தையும் வைத்துக்கண்டுபிடித்தேன்) //

எந்த கல்யாண போட்டோ பார்த்தாலும் இந்த பொண்ணுங்க சிரிச்ச முகமாகவும் , பசங்க உர்ர்ர்ர் என்று ஜிஞ்சர் ஈட்டன் மங்கி போலவும் இருக்கும் ரகசியம் என்ன?

நம்மகிட்டேயும் ஒருத்தன் மாட்டிக்கிட்டானே என்ற சந்தோசம் அவர்களுக்கு இருக்குமோ!!!

குசும்பன் said...

எதுக்கு, அடுத்த போட்டோ குசும்பு போட்டி வெக்கிறதுக்கா??? :)))//

சிவா போட்டோ மட்டும் என்றால் பரவாயில்லை அவுங்க துனைவியாரும் இருக்கும் போட்டோ அல்லவா,அதில் விளையாட மாட்டேன்.

சிவா போட்டோ என்றாலும் அனுமதி இன்றி ஏதும் செய்யமாட்டேன்.

வெண்பூ said...

//

எதுக்கு, அடுத்த போட்டோ குசும்பு போட்டி வெக்கிறதுக்கா??? :)))//

சிவா போட்டோ மட்டும் என்றால் பரவாயில்லை அவுங்க துனைவியாரும் இருக்கும் போட்டோ அல்லவா,அதில் விளையாட மாட்டேன்.

சிவா போட்டோ என்றாலும் அனுமதி இன்றி ஏதும் செய்யமாட்டேன்.//

ஆஹா.. குசும்பா.. என்னா சீரியஸான பதில்.. I didn't mean anything. was just kidding.. Sorry if I hurt you

புதுகை.அப்துல்லா said...

அதன் பின்னர் புதுகை அப்துல்லா வந்தார். (பரிசலின் பதிவில் அவர் படம் இருந்ததால் ஓரளவு கண்டுகொண்டேன். அதில் .:பாரின் ரிடர்ன் போல இருப்பவர் நேரில் பரமக்குடி ரிடர்ன் போல இருக்கிறார்.)
//

யோவ் நானே பத்துநாளா ரம்ஜான் நோன்பு பட்டினில காஞ்சுபோன கத்திரிக்கா மாதிரி கிடக்குறேன். உனக்கு நக்கலா இருக்காடி....

ராமலக்ஷ்மி said...

நல்ல ரிபோர்ட் தாமிரா:)! மணமக்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்!

Manju said...
This comment has been removed by the author.
Manju said...
This comment has been removed by the author.
குசும்பன் said...

வெண்பூ said...
ஆஹா.. குசும்பா.. என்னா சீரியஸான பதில்.. I didn't mean anything. was just kidding.. Sorry if I hurt you//

தொர என்னமா இங்கிலீஸ் பேசுது!!!அப்படி எல்லாம் ஒன்னும் ஹர்ட் ஆகவில்லை!:)))

குசும்பன் said...

புதுகை.அப்துல்லா said...
யோவ் நானே பத்துநாளா ரம்ஜான் நோன்பு பட்டினில காஞ்சுபோன கத்திரிக்கா மாதிரி கிடக்குறேன். உனக்கு நக்கலா இருக்காடி....//

கத்திரிக்காய் என்ன ஹப்பிரிட்டட் கத்திரிக்காயா காஞ்சு போனாலும் கொழுக்கு மொழுக்குன்னு தர்பூஸ் சைஸ்ல இருக்குது:))))

குசும்பன் said...

புதுகை.அப்துல்லா said...
பரமக்குடி ரிடர்ன் போல இருக்கிறார்.)//

அப்பயே நினைச்சேன் என்னடா ஒரு ஹீரோவின் சாயல் இருக்கேன்னு இப்ப கன்பார்ம் ஆயிட்டு, மண்ணின் மகிமை போல!!!

விஜய் ஆனந்த் said...

// குசும்பன் said...

எந்த கல்யாண போட்டோ பார்த்தாலும் இந்த பொண்ணுங்க சிரிச்ச முகமாகவும் , பசங்க உர்ர்ர்ர் என்று ஜிஞ்சர் ஈட்டன் மங்கி போலவும் இருக்கும் ரகசியம் என்ன?

நம்மகிட்டேயும் ஒருத்தன் மாட்டிக்கிட்டானே என்ற சந்தோசம் அவர்களுக்கு இருக்குமோ!!! //

எதுக்கும் உங்க கல்யாண போட்டோவ அனுப்பி வைங்க..பாத்துட்டு சரிதானான்னு சொல்றேன்....

விஜய் ஆனந்த் said...

// குசும்பன் said...

தொர என்னமா இங்கிலீஸ் பேசுது!!!அப்படி எல்லாம் ஒன்னும் ஹர்ட் ஆகவில்லை!:))) //

இங்க போட்ட சிரிப்பான அங்கயும் போட்ருந்தா தொர இங்கிலீஸ்ல பேசியிருக்க மாட்டாருல்ல...

குசும்பன் said...

விஜய் ஆனந்த் said...
எதுக்கும் உங்க கல்யாண போட்டோவ அனுப்பி வைங்க..பாத்துட்டு சரிதானான்னு சொல்றேன்....//

ஹி ஹி கல்யாணத்துக்கு வந்தவங்களை கேட்டு பாருங்க, எப்படி சிரிச்சுக்கிட்டே இருந்தேன் என்று!!! சஞ்சய் வந்து மாம்ஸ் உங்களுக்குதான் கல்யாணம் கொஞ்சமாவது சீரியசா இருங்க என்றார்:)))

விஜய் ஆனந்த் said...

// குசும்பன் said...

அப்பயே நினைச்சேன் என்னடா ஒரு ஹீரோவின் சாயல் இருக்கேன்னு இப்ப கன்பார்ம் ஆயிட்டு, மண்ணின் மகிமை போல!!! //

அப்ப அந்த மண்ணுல கத்திரிக்கா செடி வச்சா, தர்பூசணி காய்க்குமா???

குசும்பன் said...

தாமிரா பதிவு மட்டும் போட்டால் பத்தாது அப்ப அப்ப பதிவு பக்கம் வந்து என்ன நடக்குதுன்னு எட்டிப்பார்க்கனும் இல்லை இங்கே கும்மிடுவாங்க சிலர் அவுங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்!!!

டீச்சர் இல்லாத கிளாஸ் ரூம் மாதிரி ஆயிடக்கூடாது!

விஜய் ஆனந்த் said...

// குசும்பன் said...

ஹி ஹி கல்யாணத்துக்கு வந்தவங்களை கேட்டு பாருங்க, எப்படி சிரிச்சுக்கிட்டே இருந்தேன் என்று!!! சஞ்சய் வந்து மாம்ஸ் உங்களுக்குதான் கல்யாணம் கொஞ்சமாவது சீரியசா இருங்க என்றார்:))) //

கல்யாணத்தன்னிக்கு சரி...
இப்போ எப்படி???

புதுகை.அப்துல்லா said...

அப்பயே நினைச்சேன் என்னடா ஒரு ஹீரோவின் சாயல் இருக்கேன்னு இப்ப கன்பார்ம் ஆயிட்டு, மண்ணின் மகிமை போல!!!
//

ஆஹா! குசும்பன் அண்ணே...இந்த வார டார்கெட்டு நானா? :((((

விஜய் ஆனந்த் said...

// குசும்பன் said...
தாமிரா பதிவு மட்டும் போட்டால் பத்தாது அப்ப அப்ப பதிவு பக்கம் வந்து என்ன நடக்குதுன்னு எட்டிப்பார்க்கனும் இல்லை இங்கே கும்மிடுவாங்க சிலர் //

அந்த சிலரில், குசும்பரும் நானும் கெடையாதுங்கோ...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மிக்க மகிழ்ச்சி சிவா கல்யாண வைபோகத்துக்கு!

@வெண்பூ
சரவண பவன் கல்யாணச் சாப்பாடாச்சும் என்னென்ன ஆர்டர் பண்ணீங்க? சொல்லுங்கப்பு!

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அப்போ, சிவா தாலி கட்டுனத்ஹுக்கு சாட்சி நீங்க ஒருத்தர்தானா? :-)))))//

பதிவர் சாட்சி-ன்னு கரீட்டா சொல்லுங்கக்கோவ்! :)

@குசும்பன் அண்ணாச்சி, நோட் திஸ் பாயிண்ட்டு.
அப்ப இனி எந்த ஒரு சாட்சிக்கும் தாமிராவைப் கூப்புடுலாம் போல! :))

புதுகை.அப்துல்லா said...

அந்த சிலரில், குசும்பரும் நானும் கெடையாதுங்கோ...
//

குசும்பரும் நீங்களும் கிடையாது....நீங்களும் குசும்பரும் தான் :))

இறக்குவானை நிர்ஷன் said...

ரிப்போர்ட் நல்லாயிருந்தது. கல்யாணத்தில உங்களோட என்னையும்சேர்த்துக்கிட்டேன்.

ஆமா... சாப்பாடு என்னென்ன இருந்திச்சுனு சொன்னா அதையும் சாப்பட்ட மாதிரி இருக்கும்.

தாமிரா said...

என்ன ஒரு டைமிங்.! குசும்பன் எச்சரிக்கவும் நான் உள்ளே வரவும் சரியா இருக்குது (நிஜமாப்பா.!)

நான் ஆனந்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறேன்.. பதிவு போட்ட 2 மணி நேரத்துக்குள்ள நமக்கு 150 ஹிட்ஸ், 30க்கும் மேல பின்னூட்டங்களா?. சரி இது உனக்கல்ல.. பின்னூட்டத்திலகம் அண்ணன் 'சிவா' அவர்கள் அன்பினால் அவருக்காக‌ கூடியது என்று என்னை தேற்றிக்கொள்கிறேன். இப்போதான் உள்ளே வந்திருக்கிறேன்.(பதிவு வெளியே பிரவுசிங் சென்டரில் போட்டது) மானேஜன் பின்னிடுவான். நாலு மணிக்கு மேல அப்பப்போவும், 7 மணிக்கு மேல் .:புல்லாகவும் வந்து பதிலளிக்கிறேன். கண்டிப்பாக எல்லோருக்கும் தனித்தனியா பதில்ந‌ன்றி போடுவேன் வாணான்னு சொல்லக்கூடாது. (இந்த சான்ஸ உட்டா என் பதிவுக்கும் எப்பதான் 100 பின்னூட்டம் தேறுவது?)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குசும்பன் said...
எந்த கல்யாண போட்டோ பார்த்தாலும் இந்த பொண்ணுங்க சிரிச்ச முகமாகவும் , பசங்க உர்ர்ர்ர் என்று ஜிஞ்சர் ஈட்டன் மங்கி போலவும் இருக்கும் ரகசியம் என்ன?//

அனுபவசாலி நீங்க தான் சொல்லணும் அண்ணாச்சி! :)

//நம்மகிட்டேயும் ஒருத்தன் மாட்டிக்கிட்டானே என்ற சந்தோசம் அவர்களுக்கு இருக்குமோ!!!//

பக்கத்துல அண்ணிய கேட்டு சொல்லுங்க அண்ணாச்சி! :)
Kusumban is a GEM (ஜிஞ்சர் ஈட்டன்...) ன்னு சொல்லுவாய்ங்க தானே? :)

புதுகை.அப்துல்லா said...

ஏழு மணிக்கு நானும் உள்ள வர்றேன். வெண்பூவும் வருவாரு..200 போட்டுருவோம்

புதுகை.அப்துல்லா said...

மானேஜன் //

மேல இருக்கவருக்கு கொஞ்சமாச்சும் மரியாதை குடுய்யா.. :))

கார்க்கி said...

//ஆஹா.. குசும்பா.. என்னா சீரியஸான பதில்..//

எங்க தலயவே சீரியஸா பின்னூட்டமிட வைத்த வெண்பூவின் நுண்ணரசியலை கண்டித்து நாளை என் லேப்டாப்பின் மின் மறியல் செய்யவிருக்கிறேன்.. ஆதரவு தருபவர்கள் தத்தம் கண்ணியின் முன் இருந்தே மறியல் செய்யலாம்..ஆதரவு தர வேண்டாமென்று நினைப்பவர்கள் கண்ணி முன் வர வேண்டாம்.

கவலப்படாத தல.. நாளைக்கு பாருங்க..

தாமிரா said...

நான் ரசித்த ஜோக் ஒன்று பதிவில் மிஸ்ஸாகிவிட்டது. வெண்பூ எங்க‌ளை தேடிக்கொண்டிருந்த‌ போது புதுகையுட‌ன் போனில்..

வெண்பூ : இங்கே ஒரு பில்லர்(கொடிமரம்) இருக்குது, அதனருகில் இருக்கிறேன்.

புதுகை : ஒரு பில்ல‌ரையும் காணோமே.. ப‌திவுல‌கின் பில்ல‌ர் டோன்டு சார்தான் இருக்காரு.

வெண்பூ said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
மிக்க மகிழ்ச்சி சிவா கல்யாண வைபோகத்துக்கு!

@வெண்பூ
சரவண பவன் கல்யாணச் சாப்பாடாச்சும் என்னென்ன ஆர்டர் பண்ணீங்க? சொல்லுங்கப்பு!
//

வாங்க கே.ஆர்.எஸ்... விட மாட்டீங்களே.

கேட்டுகோங்க..

நான்: இட்லிவடை (பதிவு இல்லீங்க, நிஜமானது), பூரி ஒரு செட், காபி
என் தங்கமணி & சின்னமணி : இட்லி, பூரி ஒரு செட், காபி
உண்மைத்த‌மிழ‌ன்: இட்லி, தோசை, காபி

ம‌த்த‌வ‌ங்க‌ளும் சொல்லுங்க‌ப்பா..

(ம‌ன‌துக்குள்) ஆஹா.. த‌னித்த‌னியா சொல்லிட்ட‌னே!! சிவா பில்லை வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாருன்னா!!............ செய்ய‌மாட்டாரு அவ‌ரு ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ரு.

வெண்பூ said...

மங்களூர் சிவா சம்பந்தப்பட்ட பதிவில் இதுவரை ஒரு "ரிப்பீட்ட்டேய்" கூட போடாத தமிழ் பதிவர்களை கண்டித்து... ஏதாச்சும் செய்யணும் பாஸ்...

குசும்பன் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அனுபவசாலி நீங்க தான் சொல்லணும் அண்ணாச்சி! :)//

அண்ணே எனக்கு ஏதோ பத்து பதினைஞ்சு அனுபவம் இருப்பது போல் சொல்றீங்க ஒன்னே ஒன்னுதான் அண்ணாச்சி:((

//பக்கத்துல அண்ணிய கேட்டு சொல்லுங்க அண்ணாச்சி! :)//

பக்கத்துல இருப்பவர்களையும் உங்க அண்ணியா நினைக்கிற மனபக்குவும் உங்களுக்கு இருக்கு, ஆனா மனைவியா நினைக்க முடியவில்லையே அண்ணாச்சி:((

அழகாக இருக்குதான் , கேரளம் வேற இருந்தானும் ...ம்ம்ம்ம்ம் போங்க KRS:(((

///Kusumban is a GEM (ஜிஞ்சர் ஈட்டன்...) ன்னு சொல்லுவாய்ங்க தானே? :)//

இப்படி சொல்வது இல்லை ஏதோ உட்டான் உட்டான் என்று சொல்றாங்க
உர்றாங் உட்டான் என்று சொல்றாங்க, நான் ஒன்னும் உடவில்லை என்றால் நீ உட்டான் என்றுதான் சொல்றாங்க, கேஸ் சம்மந்தப்பட்ட உணவும் சாப்பிடுவது இல்லை.

narsim said...

தாமிரா..

சுமார் 1 மணி நேரம் டிராஃபிக்கில் சிக்கி சின்னாபின்னமாகிப் போய் திரும்பி விட்டேன்.. வெண்பூவிடம் தொலைபேசி திரும்பி விட்டேன்..

120 கல்யாணமாம் இல்ல அங்க..

வாழ்த்துக்கள்!சிவா!

நர்சிம்

குசும்பன் said...

வெண்பூ said...
மங்களூர் சிவா சம்பந்தப்பட்ட பதிவில் இதுவரை ஒரு "ரிப்பீட்ட்டேய்" கூட போடாத தமிழ் பதிவர்களை கண்டித்து... ஏதாச்சும் செய்யணும் பாஸ்...//

ஆமாம் பாஸ் செய்யனும் பாஸ் ஆள் ஆளுக்கு ஒரு பவுனு மோதிரம் செஞ்சுடுவோமா பாஸ்!!!

வெண்பூ said...

//வெண்பூ said...
மங்களூர் சிவா சம்பந்தப்பட்ட பதிவில் இதுவரை ஒரு "ரிப்பீட்ட்டேய்" கூட போடாத தமிழ் பதிவர்களை கண்டித்து... ஏதாச்சும் செய்யணும் பாஸ்...
//

ரிப்பீட்ட்டேய்.....

குசும்பன் said...

narsim said...
தாமிரா..

120 கல்யாணமாம் இல்ல அங்க..///

120 கல்யாணம் ஆமாவா இல்லையா?:(((

குசும்பன் said...

தாமிரா...

(இந்த சான்ஸ உட்டா என் பதிவுக்கும் எப்பதான் 100 பின்னூட்டம் தேறுவது?)//

ம்கும் நானு ஏது ஏதோ செஞ்சு பார்க்கிறேன் எனக்குதான் அந்த பாக்கியம் இல்லை உங்களுக்காக அதை நானே இன்று செய்கிறேன்.

குசும்பன் said...

கார்க்கி said...
//ஆஹா.. குசும்பா.. என்னா சீரியஸான பதில்..//

எங்க தலயவே சீரியஸா பின்னூட்டமிட வைத்த வெண்பூவின் நுண்ணரசியலை கண்டித்து நாளை என் லேப்டாப்பின் மின் மறியல் செய்யவிருக்கிறேன்.. ஆதரவு தருபவர்கள் தத்தம் கண்ணியின் முன் இருந்தே மறியல் செய்யலாம்..ஆதரவு தர வேண்டாமென்று நினைப்பவர்கள் கண்ணி முன் வர வேண்டாம்.

கவலப்படாத தல.. நாளைக்கு பாருங்க..//

நாளைக்கு எமக்கு லீவ் வீட்டில் இருந்து எல்லாம் வேலை செய்யமுடியாது:)))
ஆபிஸ் வந்தால் தான் வேலை:)

குசும்பன் said...

விஜய் ஆனந்த் said...
// குசும்பன் said...

கல்யாணத்தன்னிக்கு சரி...
இப்போ எப்படி???//

இப்பவும் அப்படியே இளிச்சவாயனாகதான் இருக்கேன் விஜய்.

குசும்பன் said...

அனுஜன்யா said...
தாமிரா,

சுவாரஸ்யமான பதிவு. வெண்பூ செம்ம ஸ்மார்ட் ஆச்சே. உங்களுக்கும் தொப்பை என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. ///

அவ்வ்வ்வ் இதை படிச்ச பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை, துக்கம் நெஞ்சை அடைக்குது:(((((

குசும்பன் said...

//7.10க்கெல்லாம் வடபழனி முருகன் கோவில் வாசலில் நின்றிருந்தேன்.//

எந்த Q வில் சுண்டல் வரிசையிலா? அல்லது பொங்கல் வரிசையிலா?

குசும்பன் said...

//போது ட்ரா.:பிக்கில் மாட்டிக்கொண்டதாய் சொன்னார். இது சரிப்படாது என்று தைரியமாய் சிவாவையே அழைத்தேன். //

இது ரொம்ப ஓவருங்க அவரு கல்யாணத்துக்கு அவரையே அழைச்சிங்களா?

வெண்பூ said...

//குசும்பன் said...
தாமிரா...

(இந்த சான்ஸ உட்டா என் பதிவுக்கும் எப்பதான் 100 பின்னூட்டம் தேறுவது?)//

ம்கும் நானு ஏது ஏதோ செஞ்சு பார்க்கிறேன் எனக்குதான் அந்த பாக்கியம் இல்லை உங்களுக்காக அதை நானே இன்று செய்கிறேன்.
//

அதுக்கு நீங்க கமெண்ட் பொட்டிய தொறந்து வெக்கணும். நீங்க பூட்டு போட்டி சாவியை பாக்கெட்ல போட்டுகிட்டு போயிட்டா அது எப்படி நெறம்பும்னு கேக்குறேன்.

குசும்பன் said...

//குறிப்பிட்ட சந்நிதியில் எனக்கு மேலும் ஒரு சோதனை காத்திருந்தது.//

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான்.

உங்களை சரவணபவன் வரை அழைத்து சென்று இருக்கான் அதனால் கைவிடவில்லை.

லக்கிலுக் said...

அடடா.. இதுவரை பார்க்காத முகங்களையெல்லாம் பார்க்கும் வாய்ப்பு மிஸ் ஆயிடிச்சே :-(

சிவாவுக்கு இங்கேயும் ஒரு வாழ்த்துகள்!

குசும்பன் said...

வெண்பூ வந்தார். (மனைவி, குழந்தையுடன் வந்திருந்து சிறப்பு செய்த‌ ஒரே பதிவர் இவர்தான்). //

வெண்பூவின் புகழை குறைக்க செய்யும் சதி இது, அவர் கை தூக்கிக்கிட்டு கொடுக்கும் பின் பக்க போஸை பார்த்து அவரை வட்டமிடும் வாசகிகளை மனம் நோகும் படி அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது என்று சொல்லும் உங்கள் நுண் அரசியல் புரியாமல் இல்லை.:((((

குசும்பன் said...

வெண்பூ said...
அதுக்கு நீங்க கமெண்ட் பொட்டிய தொறந்து வெக்கணும். நீங்க பூட்டு போட்டி சாவியை பாக்கெட்ல போட்டுகிட்டு போயிட்டா அது எப்படி நெறம்பும்னு கேக்குறேன்.//

ம்கும் தொறந்து வெச்சு 4 நாள் ஆகுது ஒரு நாதியையும் காணும், ஊரான் பதிவுல கும்மி அடித்தா தான் பதிவுல கும்மி அடிக்கமாட்டங்க என்பது சரிதான் போல:)))

குசும்பன் said...

//ஒரு இடத்தில் இரண்டு திருமணம் நடந்தாலே சரியாக தப்பான ஜோடிக்கு மொய் வைத்துவிட்டு வருபவன் நான்.//

பேட் பாய் மொய் எல்லாம் வைக்கிறீங்க! இனிமே இவரு கூட சகவாசம் வெச்சுக்கவே கூடாது போல!!!

குசும்பன் said...

//வேலை பார்க்கும் ஊரையும் கன்பர்ம் செய்துகொண்டேன்.//

தப்பான கேள்வி கேட்டு இருக்கிறீர்கள், வசிக்கும் ஊர் என்றுதான் கேட்டு இருக்கனும்? வேலை பார்க்கும் என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாம போய் கேள்வி கேட்டு இருக்கீங்க. சிவாவிடம்.

குசும்பன் said...

லக்கிலுக் said...
அடடா.. இதுவரை பார்க்காத முகங்களையெல்லாம் பார்க்கும் வாய்ப்பு மிஸ் ஆயிடிச்சே :-(
//

தல சிரிப்பானுக்கு பதில் ஸ்கோக ஸ்மைலி போட்டு இருக்கீங்க:)))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எனது பிஎம்டபிள்யூ டூவீலரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு வருவதற்குள் மணமகன் தாலியைக் கட்டி முடித்துவிட்டார். மாப்பிள்ளை கோவில் வாசலில் என் கண் முன்பாக என்னைக் கடந்துதான் சென்றார். மணமகளிடம் பேசிக் கொண்டே சென்றார். சத்தியமா நம்மாளா இருக்காதுன்னு தப்பா நினைச்சுட்டேன்.. அவர்தான் நமது "வலையுலகப் பின்னூட்டத் திலகம்" என்று எனக்குத் தெரியவில்லை. டோண்டு ஸாருக்கு 40 பைசா செலவழித்து போன் செய்து கேட்டுவிட்டேன்.. என்ன கொடுமை..?

இனிமேலாச்சும் பொண்ணோ, பையனோ கல்யாணத்தப்பவாச்சும் முகத்தைக் காட்டுங்கப்பா..

நான் சாப்பிட்டது கொஞ்சம்தான் என்றாலும் எதிரில் அமர்ந்து சாப்பிட்ட இரண்டு வலையுலக ராணிமார்கள் வெட்டோ வெட்டு என்று வெட்டினார்கள்.. பாவம் சிவா.. ஆழ்ந்த அனுதாபங்கள்.. "நிறைய சாப்பிடுறீங்கம்மா" என்று பேச்சுவாக்கில் சொல்ல.. "நாங்க இப்பத்தான் சாப்பிடவே ஆரம்பிச்சிருக்கோம்.. நீங்க வேற" என்ற ராணிகளின் பதட்டத்தில் பக்கத்து சீட்காரரே கள்ளச் சிரிப்பு சிரித்தார். குசும்பு பார்ட்டிகள்ன்னா சும்மாவா?

நண்பர்கள் வெண்பூ, தாமிரா, அப்துல்லா, சஞ்சய், ஜி3, இம்சை அரசி என்று பலரையும் இன்றைக்குத்தான் சிவா புண்ணியத்தில் முதன் முதலாகப் பார்த்தேன்.. இது மாதிரி அறிமுகத்துக்காச்சும் பதிவுலகில் நிறைய கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கிறேன்..

டிஸ்கி : முதல்ல சிவா தம்பி சோறு போடுவானா, மாட்டானான்னு பார்த்துட்டு அப்புறமா கிப்ட்டை கொடுக்கலாம்னு கைலயே வைச்சிருந்தேன். சாப்பிட்டுட்டுத் தேடினா பய அதுக்குள்ள வூட்டுக்குப் பறந்துட்டான்.. "சரி போனா போறான்.. நீ பார்த்து கொடுத்திரு சாமி"ன்னு சஞ்சய்கிட்ட கொடுத்தேன். "பிரிச்சு படிச்சுப் பாக்குறேன். எனக்குப் பிடிச்சிருந்தா நானே வைச்சுக்குவேன்.. எனக்குப் பிடிக்கலைன்னா அவன்கிட்ட போகும்"னாரு.. "உனக்கு வேணும்னா இன்னொன்னு வாங்கியனுப்புறேன்.. கொடுத்திருப்பா" என்று கெஞ்சி கொடுத்திருக்கிறேன்.. பரிசு, நான் எப்போதும் எந்தத் திருமணத்திலும் கொடுப்பதுதான் கவியரசர் கண்ணதாசனின், "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகம்தான்..

பொறுப்பான தோழனாக விருந்தோம்பலில் உதவி செய்த சஞ்சய்க்கு ஒரு ஜே போட்டுக்குறேன்..

வாழ்க மணமக்கள்..

குசும்பன் said...

டோன்டு சார் எல்லோரையும் மடக்கிப்பிடித்து பிளாக் முகவரியை வாங்கிக்கொண்டிருந்தார். நான் என்னுடையது ரொம்ப நீளமானது நானே உங்க பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுகிறேன் வாருங்கள் //

ஹி ஹி ரைட்டு, வடபழனியில் இன்று காலை நல்ல நேரத்தில் தாமிராவுக்கு கிரகம் ஸ்டார் ஆயிட்டு:))

குசும்பன் said...

//நண்பர்கள் வெண்பூ, தாமிரா, அப்துல்லா, சஞ்சய், ஜி3, இம்சை அரசி என்று பலரையும் இன்றைக்குத்தான் சிவா புண்ணியத்தில் முதன் முதலாகப் பார்த்தேன்.. இது மாதிரி அறிமுகத்துக்காச்சும் பதிவுலகில் நிறைய கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கிறேன்.. //

நான் ரெடி சார்!!!

குசும்பன் said...

// பரிசு, நான் எப்போதும் எந்தத் திருமணத்திலும் கொடுப்பதுதான் கவியரசர் கண்ணதாசனின், "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகம்தான்..//

எனக்கும் அதே புத்தகத்தை அண்ணன் உண்மை தமிழன் கிப்டாக கொடுத்தார், நல்லவேளை பாபா புக்கை கொடுக்கவில்லை:)))

குசும்பன் said...

//டிஸ்கி : முதல்ல சிவா தம்பி சோறு போடுவானா, மாட்டானான்னு பார்த்துட்டு அப்புறமா கிப்ட்டை கொடுக்கலாம்னு கைலயே வைச்சிருந்தேன். சாப்பிட்டுட்டுத் தேடினா பய அதுக்குள்ள வூட்டுக்குப் பறந்துட்டான்.. "சரி போனா போறான்.. நீ பார்த்து கொடுத்திரு சாமி"ன்னு சஞ்சய்கிட்ட கொடுத்தேன். "பிரிச்சு படிச்சுப் பாக்குறேன். எனக்குப் பிடிச்சிருந்தா நானே வைச்சுக்குவேன்.. எனக்குப் பிடிக்கலைன்னா அவன்கிட்ட போகும்"னாரு.. "உனக்கு வேணும்னா இன்னொன்னு வாங்கியனுப்புறேன்.. கொடுத்திருப்பா" என்று கெஞ்சி கொடுத்திருக்கிறேன்.. பரிசு, நான் எப்போதும் எந்தத் திருமணத்திலும் கொடுப்பதுதான் கவியரசர் கண்ணதாசனின், "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகம்தான்..

பொறுப்பான தோழனாக விருந்தோம்பலில் உதவி செய்த சஞ்சய்க்கு ஒரு ஜே போட்டுக்குறேன்.. //

டிஸ்கி என்பதையே பதிவு நீளம் எழுதும் எங்கள் அண்ணனுக்கும் ஜே போட்டுக்கிறேன்.

குசும்பன் said...

அண்ணே உண்மை தமிழன் அண்ணே உங்கள மாதிரி யாரும் ஏமாந்துவிடக்கூடாதுன்னுதானே சிவா கல்யாணத்தை பற்றி நாலு நாளைக்கு முன் ஒரு பதிவு போட்டேன் அதை பார்த்தும் புரியாம போய் சஞ்சய்கிட்ட கொடுத்துவிட்டு வந்து இருக்கீங்களே!!!

குசும்பன் said...

//ராணிகளின் பதட்டத்தில் பக்கத்து சீட்காரரே கள்ளச் சிரிப்பு சிரித்தார். குசும்பு பாட்டிகள்ன்னா சும்மாவா?
//

அவுங்களை போய் பாட்டிகள் என்று எப்படி நீங்க சொல்லலாம்:)))

தாமிரா said...

குசும்பன் தனியாளா ரவுண்டு கட்டிக்கொண்டிருக்கிறீர்கள் போலத்தெரியுதே.. ஸாரி, குசும்பன்.. விரைவில் வந்து கலக்கிறேன். இடையிடையே யாராவது வந்து உங்களுக்கு கம்பெனி கொடுக்கட்டும். நீங்களே தனியாளா 100 போட்ருவீங்க போல..:)

குசும்பன் said...

இடையிடையே யாராவது வந்து உங்களுக்கு கம்பெனி கொடுக்கட்டும். நீங்களே தனியாளா 100 போட்ருவீங்க போல..:)//

வேண்டாம் பர்மனெண்டாவே கம்பெணி கொடுக்க ஆள் இருக்காங்க:)))

குசும்பன் said...

நீங்க 100 எல்லாம் பின்னூட்டமா என்று பீல் செஞ்சுட்டீங்க அதான் உங்களுக்காக இந்த சேவை!!!

நோ நம்பரிங்

நோ ரிப்பீட்

இப்படி எல்லாம் இல்லாம உங்களுக்காக 100 கமெண்ட்ஸ்

அப்புறம் நீங்க தனி தனியா பதில் சொன்னால் 200 கமெண்ட்ஸ்.

குசும்பன் said...

புதுகை.அப்துல்லா said...
ஆஹா! குசும்பன் அண்ணே...இந்த வார டார்கெட்டு நானா? :((((//

அண்ணே உங்களை எல்லாம் டார்கெட்டா வெச்சா என்னை கிழித்துவிடமாட்டார்கள் உங்கள் ரசிகைகள்.

உண்மைய சொன்னேன் உங்க மண்ணின் அழகு உங்களிடம் கொட்டிகிடக்கிறது என்று:))

குசும்பன் said...

டிஸ்கி : எனது படப்பொட்டியை கொண்டுபோகாததால் படங்கள் தரமுடியவில்லை, மன்னிக்கவும். வேண்டுமெனில் சிவா தவிர கேமிரா கொண்டுவந்த ஒரே ஒருவரான சஞ்சய்யை அணுகவும்)//

கேமிரா ஆர்வலர்கள் யாரும் வரவில்லையா?

குசும்பன் said...

.(பதிவு வெளியே பிரவுசிங் சென்டரில் போட்டது)//

உங்கள் கடமையை மெச்சினோம், ஆனால் வெளியில் சென்று இதுபோல் வேலை பார்த்தால் ஆபிசில் ஓவர் டைம் கிடைக்குமா? அதையும் பார்த்துக்கொள்ளவும்.

குசும்பன் said...

//குள்ளமாக (எப்போதும் அரையடிக்கு ஷூ போட்டுக்கொண்டிருப்பேன், கோவில் என்பதால் கழட்டவேண்டியதாக போயிற்று)//

அப்ப தலையில் மாட்டி இருப்பதை எப்பொழுதும் கழட்டமாட்டீங்களா?
விக் தண்ணியில் நனைஞ்சாலும் பிரச்சினை இல்லையா?

குசும்பன் said...

// (சஞ்சய் மணவீட்டார் போல அனைவரையும் நன்கு கவனித்துக்கொண்டார்)//


சஞ்சயிடம் ஒரு பொருப்பை கொடுத்தால் எப்படி சரியாக செய்வர் என்பதை நானும் பார்த்து இருக்கிறேன்.
பழக்கவழக்கத்துக்கு மதிப்பு கொடுக்கும் நபர்.

குசும்பன் said...

விஜய் ஆனந்த் said...
அப்ப அந்த மண்ணுல கத்திரிக்கா செடி வச்சா, தர்பூசணி காய்க்குமா???//

மண்ணுமேல நிக்கிற வெண்பூ வயிற்றிலேயே ஒரு தர்பூஸ் காய்ச்சு இருக்கும்பொழுது அந்த மண்ணுல செடி வெச்சாவா காய்க்காது!!!

குசும்பன் said...

// புதுகை.அப்துல்லா said...
ஏழு மணிக்கு நானும் உள்ள வர்றேன். வெண்பூவும் வருவாரு..200 போட்டுருவோம்//

250மில்லி போடுங்க:)))

வெண்பூ said...

//குசும்பன் said...
விஜய் ஆனந்த் said...
அப்ப அந்த மண்ணுல கத்திரிக்கா செடி வச்சா, தர்பூசணி காய்க்குமா???//

மண்ணுமேல நிக்கிற வெண்பூ வயிற்றிலேயே ஒரு தர்பூஸ் காய்ச்சு இருக்கும்பொழுது அந்த மண்ணுல செடி வெச்சாவா காய்க்காது!!!
//

வாய்யா குசும்பா... அடுத்தது நானா??? நடத்து.. நடத்து :))))

குசும்பன் said...

//சிவா தவிர கேமிரா கொண்டுவந்த ஒரே ஒருவரான சஞ்சய்யை அணுகவும்//

வெளங்கிடும்:(((( மாம்ஸ் எப்படி போட்டு புடிச்சுஇருப்பாருன்னு தெரியாதா?

மனமகள் தோழி யாரும் வந்து இருந்தாங்களா? அப்ப அவுங்க போட்டோதான் கிடைக்கும்.

குசும்பன் said...

//(சஞ்சய் மணவீட்டார் போல அனைவரையும் நன்கு கவனித்துக்கொண்டார்) //

அப்படி இப்படி ஓடி ஆடி வேலை செஞ்சாதான் நாலு பேர் கண்ணில் பட்டு பொண்ணு கொடுப்பாங்க என்ற ஆசைதான்:)))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///குசும்பன் said...
//டோன்டு சார் எல்லோரையும் மடக்கிப்பிடித்து பிளாக் முகவரியை வாங்கிக்கொண்டிருந்தார். நான் என்னுடையது ரொம்ப நீளமானது நானே உங்க பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுகிறேன் வாருங்கள்.//
ஹி ஹி ரைட்டு, வடபழனியில் இன்று காலை நல்ல நேரத்தில் தாமிராவுக்கு கிரகம் ஸ்டார்ட் ஆயிட்டு:))///

இதுதாம்பா கமெண்ட்டு.. 'நச்'சுன்னு இருக்கு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///குசும்பன் said...
//நண்பர்கள் வெண்பூ, தாமிரா, அப்துல்லா, சஞ்சய், ஜி3, இம்சை அரசி என்று பலரையும் இன்றைக்குத்தான் சிவா புண்ணியத்தில் முதன் முதலாகப் பார்த்தேன்.. இது மாதிரி அறிமுகத்துக்காச்சும் பதிவுலகில் நிறைய கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கிறேன்.. //
நான் ரெடி சார்!!!///

எப்படிய்யா கேக்குறதுக்குக் கூட தைரியம் வருது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///குசும்பன் said...
//பரிசு, நான் எப்போதும் எந்தத் திருமணத்திலும் கொடுப்பதுதான் கவியரசர் கண்ணதாசனின், "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகம்தான்..//
எனக்கும் அதே புத்தகத்தை அண்ணன் உண்மை தமிழன் கிப்டாக கொடுத்தார், நல்லவேளை பாபா புக்கை கொடுக்கவில்லை:)))///

எவ்லாஞ் சரி.. புத்தக விமர்சனம் எங்க? 60-ம் கல்யாணத்தப்போ போடுவியா..?

பரிசல்காரன் said...

என்னங்க நடக்குது இங்க?

பரிசல்காரன் said...

அடக்கடவுளே.. உண்மையார் பின்னூட்டக் களத்துல இருக்காரா?

பயமாயிருக்கே...

பரிசல்காரன் said...

ஏம்பா தாமிரா.. செஞ்சுரி அடிக்கலாம்ன்னு இருக்கேன். பார்ட்னர்ஷிப்புக்கு வர்றியா?

பரிசல்காரன் said...

வெண்பூ இருக்காரா-ன்னு தெரியல.
இருந்தாலும், 100ன்னு அடிச்சு வெச்சுட்டு உட்கார்ந்திருபாரு...

பரிசல்காரன் said...

பயமாயிருக்குப்பா... இவ்ளோ கஷ்டப்பட்டு 100 வேற யாராவது அடிச்சுடுவாங்களோ...ன்னு..

பரிசல்காரன் said...

நான் சிவாவுக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொன்னேன்.

பரிசல்காரன் said...

ஆமா, நந்து (நிலா அப்பா) வர்லியா? சிவாவோட பெஸ்ட் ஃப்ரெண்டாச்சே?

பரிசல்காரன் said...

அதே மாதிரி இவருமா வர்ல-ன்னு நான் வருத்தப்பட்ட இன்னொருத்தர் லக்கிலுக்!

வெண்பூ said...

100 நாந்தான் அடிக்கிறனே!!!!

வெண்பூ said...

100 நாந்தான் அடிக்கிறனே!!!!

பரிசல்காரன் said...

லக்கிய லுக்கற லக் கிடைக்கல யாருக்கும்:-(

வெண்பூ said...

அடிச்சாச்சிபா 100 :))))

பரிசல்காரன் said...

இது கல்யாண வாழ்த்துப் பதிவு. அதுனால வெண்பூவைத் திட்டின கெட்ட வார்த்தையை போட கஷ்டமா இருக்கு.

நடத்துங்கய்யா...

நான் இவ்ளோ அமைதியா இருக்கறப்பவே நெனைச்சேன்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//குசும்பன் said...
டிஸ்கி என்பதையே பதிவு நீளம் எழுதும் எங்கள் அண்ணனுக்கும் ஜே போட்டுக்கிறேன்.//

அட ஆமாம்.. நானும் இப்பத்தான் பார்த்தேன்.. சரி.. பரவாயில்ல விடு.. உன்னோட 60- கல்யாணத்துல 4 வரில பதிவு போட்டுர்றேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//குசும்பன் said...
அண்ணே உண்மை தமிழன் அண்ணே உங்கள மாதிரி யாரும் ஏமாந்துவிடக்கூடாதுன்னுதானே சிவா கல்யாணத்தை பற்றி நாலு நாளைக்கு முன் ஒரு பதிவு போட்டேன் அதை பார்த்தும் புரியாம போய் சஞ்சய்கிட்ட கொடுத்துவிட்டு வந்து இருக்கீங்களே!!!//

அட.. அதான் சொன்னனே.. வெத்தலை, பாக்குத் தட்டோட வாசல்ல நிப்பான்னு நினைச்சேன். அவன் என்னடான்னா டாட்டா சுமோல பத்திட்டான்.. வேறென்ன செய்றது..? ஆமா சஞ்சய் தம்பி உன்னைப் பத்தி நல்லவிதமாத்தானே பேசினாரு.. உனக்கு ஏன் இந்தக் கொலை வெறி..?

வெண்பூ said...

//இது கல்யாண வாழ்த்துப் பதிவு. அதுனால வெண்பூவைத் திட்டின கெட்ட வார்த்தையை போட கஷ்டமா இருக்கு.

நடத்துங்கய்யா...

நான் இவ்ளோ அமைதியா இருக்கறப்பவே நெனைச்சேன்! //


அட விடுங்க பாஸ் நமக்கெல்லாம் இது புதுசா என்னா???????

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///குசும்பன் said...
//ராணிகளின் பதட்டத்தில் பக்கத்து சீட்காரரே கள்ளச் சிரிப்பு சிரித்தார். குசும்பு பாட்டிகள்ன்னா சும்மாவா?// அவுங்களை போய் பாட்டிகள் என்று எப்படி நீங்க சொல்லலாம்:)))///

அடப்பாவி.. ஒரு நிமிஷம் ஆடிப் போய் உடனே மேல ஓடிப் போய் பார்த்தேன்.. வயித்தைக் கலக்கிட்டியே ஒரு நிமிஷத்துல..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//குசும்பன் said...
இடையிடையே யாராவது வந்து உங்களுக்கு கம்பெனி கொடுக்கட்டும். நீங்களே தனியாளா 100 போட்ருவீங்க போல..:)//
வேண்டாம் பர்மனெண்டாவே கம்பெணி கொடுக்க ஆள் இருக்காங்க:)))///

குசும்பனுக்குத் தோள் கொடுக்க ஆள் வேறு வேண்டுமா? அதான் ரெண்டு கை இருக்கே போதாது.?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//குசும்பன் said...
நீங்க 100 எல்லாம் பின்னூட்டமா என்று பீல் செஞ்சுட்டீங்க அதான் உங்களுக்காக இந்த சேவை!!!
நோ நம்பரிங் நோ ரிப்பீட் இப்படி எல்லாம் இல்லாம உங்களுக்காக 100 கமெண்ட்ஸ். அப்புறம் நீங்க தனி தனியா பதில் சொன்னால் 200 கமெண்ட்ஸ்.//

எப்படியோ இவரை ஒரு வழி பண்றதுன்னு முடிவு பண்ணிட்ட.. நண்பர் செஞ்ச ஒரே தப்பு பதிவு போட்டதுதான்னு நினைக்கிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///குசும்பன் said...
//(சஞ்சய் மணவீட்டார் போல அனைவரையும் நன்கு கவனித்துக்கொண்டார்) //
அப்படி இப்படி ஓடி ஆடி வேலை செஞ்சாதான் நாலு பேர் கண்ணில் பட்டு பொண்ணு கொடுப்பாங்க என்ற ஆசைதான்:)))///

உனக்கேன் சாமி இவ்ளோ பொறாமை..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//பரிசல்காரன் said...
அடக்கடவுளே.. உண்மையார் பின்னூட்டக் களத்துல இருக்காரா? பயமாயிருக்கே...//

உண்மையா, நான்தான் உங்களைப் பார்த்து பயப்படணும்.. நல்லா இருக்கீகளா..?

குடிமகன் said...

அடப்பாவிகளா....ஒருத்தனுக்கு ஆயுள் தண்டனைனா....இவ்வளவு கூத்தும் கும்மாளமுமா ....!!!

குடிமகன் said...

"மங்களூர் சிவா திருமணம்! (ஒரு லைவ் ரிபோர்ட்)"...


"வலைப்பதிவில் ஒரு வரவேற்பு"

.............வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

நல்லா கவர் பண்ணிருக்கீங்க... மற்ற பதிவுகளுக்காக வெயிட்டிங் :)

வெட்டிப்பயல் said...
This comment has been removed by the author.
rapp said...

சிவாவுக்கும் பூங்கொடி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்:):):)

rapp said...

அடடா இதைவிட சிவாவுக்கு வேறெப்படி வாழ்த்துச் சொல்ல முடியும்? சூப்பர்:):):) இதை கும்மிப் பதிவா மாற்றிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்:):):)
சிவாவுக்கும் பூங்கொடி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்:):):)

தாமிரா said...

ஓகே, நான் .:ப்ரீயாயிட்டேன். ஆரம்பிக்கட்டுமா என் நன்றி சொல்லும் படலத்தை? ஒருவகையில் எப்படி ரிஷானை வாழ்த்தும் பதிவில் பின்னூட்ட பதிலூட்டம் ஞாயம் இல்லையோ அதுபோல இது சிவாவை வாழ்த்தும் பதிவு. ஆகவே இதுக்கும் பதிலூட்டமிடுவது ஞாயம் இல்லை. இருப்பினும் கும்மிகளைத்தவிர்த்து தலைகளை எண்ணிப்பார்க்கவேண்டும் என ஒரு நப்பாசை.. ஆகவே தொடர்கிறேன். மேலும் மிகச்சிலரே எனக்கு ஒரு நன்றி மற்றும் சிவா ஜோடிக்கு வாழ்த்து என நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். (உ‍ம் : அனுஜன்யா). மேலும் வரலாறு காணாத ஹிட்ஸ் (அரைநாளில் 500), பின்னூட்டங்கள் (அரைநாளில் 110) என எல்லா புகழும் எனக்கல்ல சிவாவுக்கே எனும்போது அவ்வ்வ்....

தாமிரா said...

வரலாறு காணாத என்பது என் பதிவில் என்று அர்த்தம் கொள்க..

நன்றி மை பிரண்ட் (பேமிலி த‌விர நான் மட்டும்தான் சாட்சி)
நன்றி முரளிகண்ணன் (தொப்பைக்கழகம் ஒண்ணு ஆரம்பிக்கலாமா?)
நன்றி அனுஜன் (எழுதின ஸ்டைல் பிடிச்சிருக்கு// பெஸல் நன்றி)
நன்றி விஜய் ஆனந்த்
நன்றி ரிஷான் (சாப்பாடு பற்றி தனிப்பதிவு போடறதா வெண்பூ சொல்லியிருந்தார்)
நன்றி வெண்பூ (இடைவெளி பற்றிய கமென்டை யாரும் புரிந்துகொள்ளவில்லையோ)
நன்றி கார்க்கி
நன்றி அப்துல் (7.40 மணிக்கு சரியாக..// இது பொய்யி..)
நன்றி முல்லை
நன்றி குசும்பன் (என்னே பாசம் என்மீது..)
நன்றி டோன்டு
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி கேஆர்எஸ்
நன்றி நிர்ஷன்
நன்றி நர்ஸிம்
நன்றி லக்கிலுக் (உங்களை நிறைய மிஸ் பண்ணினோம், சூப்பர்ஸ்டாராச்சே..)
நன்றி உண்மைத்தமிழன்
நன்றி பரிசல்காரன் (என்ன ஏதோ சொல்ல வந்துட்டு தெரிச்சி ஓடின மாதிரி இருக்குது கிகிகி..)
நன்றி குடிமகன் (ஆயுள்தண்டனைக்கு இவ்வளவு கூத்தா..// ரசித்தேன்)
நன்றி வெட்டிப்பயல்
நன்றி ராப்...!

தாமிரா said...

இதுவரை மொத்தம் 21 பேர்தான் கமென்டியிருக்காங்க..

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா குடும்பஸ்தனானதில் மகிழ்ச்சி.

ஒருவருக்கொருவர் ரிப்பீட்டேய் போட்டுக்கொண்டு கும்மி அடித்துக்கொண்டு வாழ்க!

அதிஷா said...

தாமிரா நல்ல ரிப்போர்ட்.. திருமணத்தில கலந்துகிட்ட பீலிங்..

உங்களைலாம் பாக்கமுடியாம அந்த மருதமலை முருகன் பண்ணிட்டான் , கோவைல அவசர வேலை..

சிவாவிற்கு என் வாழ்த்துக்கள்

பல பு்து பதிவர்கள சந்திக்க முடியாம போச்சேங்கற வருத்தத்தோட...

ஸ்ரீ said...

மொத ஆளா சாப்ட கையோட வந்து பதிவு போட்டு சூடான சீட்டையும் பிடிச்சிட்டீங்களா அண்ணாத்த?

//அசத்தலான தாடியும், ஹேர்ஸ்டைலும் என செம யூத் அவர் ஒருவர்தான். //

ஹி ஹி போங்கண்ணேன் ஒரே வெக்க வெக்கமா இருக்கு :P

ஸ்ரீ said...

//பின்னர் சரவணபவன் தோசையை உண்டுவிட்டு //

பச்சை பொய் மக்களே. ஏன்ணேன் அந்த கடைசியா குடிச்ச காபிய கணக்குல சேக்காம விட்டுடீங்களே?

நியாயம்னு ஒன்னு இருக்குல்ல?

SanJai said...

// குசும்பன் said...

ஹி ஹி கல்யாணத்துக்கு வந்தவங்களை கேட்டு பாருங்க, எப்படி சிரிச்சுக்கிட்டே இருந்தேன் என்று!!! சஞ்சய் வந்து மாம்ஸ் உங்களுக்குதான் கல்யாணம் கொஞ்சமாவது சீரியசா இருங்க என்றார்:))) //

இதெல்லாம் ஒரு பொழப்பா? :(
( உங்க கண்ணீரை துடைக்க 2 பேர், கைதாங்கலா கூட்டி வந்து மணமேடைல நிறுத்த 4 பேர்.. இதுகெல்லாம் ஆதாரம் இருக்குடி ராசா..)

SanJai said...

பதிவு சூப்பருங்கோ.. :)

SanJai said...

எல்லோரும் எழுதி முடிங்க.. எனக்கு இங்க வந்ததும் ஏழரை இஸ்டார்ட்டு.. பொறுமையா "தெளிவா" ஒரு பதிவு போடறேன். :)

SanJai said...

//குசும்பன் said...

மகிழ்ச்சி நண்பரே, நான் போன் செய்த பொழுது அருகில் பதிவர்கள் யாரும் இல்லை என்றார் சிவா, இருந்திருந்தால் உங்களிடமும் பேசி இருக்கலாம்.//
அடப்பாவி மாமா.. பேசினதே என் போன்ல தான.. அப்போ நான் இன்னும் பதிவர் ஆகலையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

SanJai said...

//சிவா கல்யாணத்தை பற்றி நாலு நாளைக்கு முன் ஒரு பதிவு போட்டேன் அதை பார்த்தும் புரியாம போய் சஞ்சய்கிட்ட கொடுத்துவிட்டு வந்து இருக்கீங்களே!!!//

க்ராதகா.. என் பொழப்புல லாரி லாரியா மண்ணள்ளிப் போடறேதே பொழப்பா போச்சி.. :(

SanJai said...

//எப்படிய்யா கேக்குறதுக்குக் கூட தைரியம் வருது..?//

சகோதரி வலைப்பூக்கள் படிக்கிறதில்லைங்கற தைரியம் தான்.. வேற என்ன? :)

SanJai said...

// பரிசல்காரன் said...

பார்ட்னர்ஷிப்புக்கு வர்றியா?//
டூ லேட்... அவர் எற்கனவே குசும்பனுடன் ஒப்பந்தம் போட்டுட்டார்..:P

SanJai said...

// பரிசல்காரன் said...

வெண்பூ இருக்காரா-ன்னு தெரியல.
இருந்தாலும், 100ன்னு அடிச்சு வெச்சுட்டு உட்கார்ந்திருபாரு...//

90 வாங்கினா 10 எக்ஸ்ட்ராவா தராங்களா இபோ? :))

SanJai said...

//பரிசல்காரன் said...

நான் சிவாவுக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொன்னேன்//

எனக்கு கூட கார்பன் காப்பி வந்துச்சே.. :))

SanJai said...

//ஆமா சஞ்சய் தம்பி உன்னைப் பத்தி நல்லவிதமாத்தானே பேசினாரு.. //

உ.தமிழன் அண்ணன் எவ்ளோ நல்லவர் பாருங்க.. நம்பற மாதிரி ஒரு சின்ன பொய் கூட பேசத் தெரியலை.. குசும்பனை பத்தி நல்லவிதமா பேச என்ன இருக்கு சொல்லுங்க? :)))

தாமிரா said...

நன்றி பினாத்தல் சுரேஷ்.
நன்றி அதிஷா. (நல்ல ரிப்போர்ட்.. திருமணத்தில கலந்துகிட்ட பீலிங்..// ஹிஹி தேங்ஸுங்க‌..)
ந‌ன்றி ஸ்ரீ.
ந‌ன்றி ச‌ஞ்சய். (கலக்குறீங்க.. மேலும் நீங்க 25 வது நபராக பின்னூட்டம் எழுதியுள்ளீர்கள்)

பாலராஜன்கீதா said...

மங்களூர் சிவா பூங்கொடி இருவருக்கும் வாழ்த்துகள்.

தமிழ் பிரியன் said...

முதலில் அண்ணன் சிவாவுக்கும், அண்ணிக்கும் கடல் கடந்த எங்களது வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...

அப்போ, சிவா தாலி கட்டுனத்ஹுக்கு சாட்சி நீங்க ஒருத்தர்தானா? :-)))))///
ஏம்மா! அதான் சென்னையே அங்க தானே இருந்தததாமே... ஊரே சாட்சியா இருக்கும்

தமிழ் பிரியன் said...

///முரளிகண்ணன் said...
\\இந்த இடத்தில் என்னைவிடவும் இரண்டு மடங்கு பெரிதான வெண்பூவின் தொப்பையை குறிப்பிட்டாகவேண்டும்).\\
வெண்பூ பாவங்க விட்டுருங்க. (ஏன்னா எனக்கு அவரை விட அதிகம், தொப்பை)///
அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுண்ணே! வெண்பூ அண்ணாச்சு எம்புட்டு கலாய்ச்சாலும் தாங்குவாராம்ல... ;)

தமிழ் பிரியன் said...

///அனுஜன்யா said...

தாமிரா,

சுவாரஸ்யமான பதிவு. வெண்பூ செம்ம ஸ்மார்ட் ஆச்சே. உங்களுக்கும் தொப்பை என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. எல்லாருமே எதோ ஒரு காலத்து போட்டோ போடறாங்க போல. இந்த பதிவு எழுதின ஸ்டைல் பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்.

சிவா மற்றும் பூங்கொடிக்கும் வாழ்த்துக்கள்.///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

தமிழ் பிரியன் said...

///கார்க்கி said...

//அசத்தலான தாடியும், ஹேர்ஸ்டைலும் என செம யூத் அவர் ஒருவர்தான்.//

என் ப்ரொஃபைல் இன்னும் பார்க்கலையா?////
ஹிஹிஹிஹி என் புரோபைலையும் பார்க்கலை போல இருக்கு.. ;))

தமிழ் பிரியன் said...

//குசும்பன் said...
.!(மணமகளின் சிரித்த முகத்தையும், மணமகனின் திரில் முகத்தையும் வைத்துக்கண்டுபிடித்தேன்) //
எந்த கல்யாண போட்டோ பார்த்தாலும் இந்த பொண்ணுங்க சிரிச்ச முகமாகவும் , பசங்க உர்ர்ர்ர் என்று ஜிஞ்சர் ஈட்டன் மங்கி போலவும் இருக்கும் ரகசியம் என்ன?
நம்மகிட்டேயும் ஒருத்தன் மாட்டிக்கிட்டானே என்ற சந்தோசம் அவர்களுக்கு இருக்குமோ!!!///
அண்ணே! உங்க க்ல்யாண போட்டோ இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது... ;)))

தமிழ் பிரியன் said...

///ராமலக்ஷ்மி said...

நல்ல ரிபோர்ட் தாமிரா:)! மணமக்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்!///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய் அக்காவின் கமெண்ட்டுக்கு.. :)

விடமாட்டேன் said...

Thamira,
My article is in www.selventhiran.blogspot.com
your comment please.
-ramesh vaidya

நாமக்கல் சிபி said...

//அலிபாபாவும் 108 அறிவுரைகளும்//

இதை "அலிபாபாபாவும் 1008 அறிவுரைகளும்" னு மாத்தினா இன்னும் நல்லா இருக்கும்!

நாமக்கல் சிபி said...

//அலிபாபாவும் 108 அறிவுரைகளும்//

இதை "அலிபாபாபாவும் 1008 அறிவுரைகளும்" னு மாத்தினா இன்னும் நல்லா இருக்கும்!

மங்களூர் சிவா said...

அண்ணே திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி

என்னாலதான் சரியா எல்லாரையும் கவனிக்க முடியலை.

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள், இந்த பதிவுக்கு பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் மிக மிக நன்றி.

தாமிரா said...

நன்றி பாலராஜன்கீதா.!
நன்றி தமிழ்.!
நன்றி ரமேஷ் வைத்யா.!
நன்றி தல.!

தாமிரா said...

தல.. மீண்டு வந்தாச்சா..? உய்..உய்.. எல்லோரும் வந்து குமிஞ்சுருங்கப்பா.. என்னாச்சுன்னு கேளுங்க உட்டுராதிங்க.. உய்..உய்..!‌

தாமிரா said...

சிங்கம் கிளம்பிருச்சேய்..! (வழக்கம் போல லூசுத்தனமா நானே 150 போட்டுட்டேன்.)

மங்களூர் சிவா said...

திரும்பி பார்க்கிறேன்
:)))

பதிவு இப்போ இன்னும் அழகா இருக்கு.