Sunday, October 5, 2008

ஞாநிக்கு என் பதில்

நேற்று நான் எழுதிய சென்னை பதிவர் சந்திப்பு குறித்த பதிவில் ஞாநி (நிஜ ஞாநிதானே.. பதிவுலகில் யாரையும் எதையும் நம்பமுடியவில்லை, எதற்கும் பதில் சொல்லிவிடுகிறேன்) வருத்தத்துடன் ஒரு பின்னூட்டம் அளித்திருந்தார். அதற்கு பதிலூட்டமாய் அங்கேயே நான் ஒரு பதில் தந்துள்ளேன். அதை ஞாநி பார்க்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக நான் கருதுவதால் அது இங்கே..

அவரின் பின்னூட்டம் இதுதான் :

gnani said... யாரும் என்னை அழைக்கவில்லை. ஒரு வலைப்பூவில் தகவல் பார்த்துவிட்டு நானாகவேதான் வந்தேன். என்னுடனான விவாதத்திலிருந்து நான் கழற்றிக் கொள்ளவில்லை. அது இன்னொரு சமயம் தனியே அதற்கென்றே வைத்துக் கொள்ளலாம் என்றுதான் சொன்னேன். தவிர அப்படிப்பட்ட விவாதத்தை கடற்கரை திறந்த வெளியில் கேட்பவர் கவனம் குலையாமல் நடத்த இயலாது. நான் திடீரென்று செல்ல வேண்டி வந்ததற்குக் காரணம் தற்காலிகமாக என் வீட்டில் தங்க இருக்கும் ஒரு பெண், பூட்டிய வீட்டு வாசலில் பெட்டியுடன் எனக்காகக் காத்திருப்பதாக தகவல் வந்ததினால்தான். இருந்த கொஞ்ச நேரத்தில், லக்கி லுக், ரோசா வசந்த் இன்னும் சிலருடன் கை குலுக்கினேன். ஜ்யொவோராம்சுந்தர் வலை உலகம் பற்றிய என் கருத்தைக் கேட்டதற்கு பதில் சொன்னேன். தாமிராவிடம் பெயர்க் காரணம், அவர் வேலை பற்றியெல்லாம் விசாரித்தேன். குப்பனுடன் பேசினேன். மும்பையில் எங்கிருந்தேன் என்ற டோண்டுவின் கேள்விக்கு பதில் சொன்னேன். என் தளத்தில் பிடிஎஃப் பைல்கள் போடுவதைப் பாராட்டிய பாலபாரதியுடன் அதன் காரணம் சொன்னேன். பழைய நண்பர் சுகுணா திவாகருடன் அவர் விகடனில் இப்போது வேல செய்வது பற்றி விசாரித்தேன். டாக்டர் புருனோவின் மருத்துவக் குறிப்புகளுக்கு அவரைப் பாராட்ட எண்னியபோது தொலைபேசி அழைப்பு வந்து உடனே செல்லவேண்டியதாகிவிட்டது. எனவே நழுவினேன், கழன்றேன், யார் அழைத்தார்கள் போன்ற பதப்பிரயோகங்கள் பொருத்தமற்றவை. நன்றி.

அதற்கு என் பதில் :

அன்புள்ள ஞாநி,

நீங்கள் என் மரியதைக்குரிய எழுத்தாளர். நீங்கள் விவாதத்திலிருந்து கழன்றதாக நான் கூறவில்லை. அதைத்தவிர்த்ததற்கு தகுந்த பதில் கூறியதாகவே குறிப்பிட்டுள்ளேன். உங்களை அழைத்தது யார் என்று அடைப்புக்குள் கேட்டது அவரை பாராட்டத்தானே தவிர கிண்டல் செய்யும் நோக்கம் சிறிதுமில்லை. அழைக்காமலே நீங்கள் வருவதென்பது எங்களை பெருமை செய்யும் விஷயமே. அதை அறியாத மூடனல்ல நான். பதிவு முழுதுமே எனது பார்வையிலும் கொஞ்சம் (அதிகமாகவே) சுயபுராணம் பாடுவதாகவும் அமைந்துள்ளதை கவனித்திருப்பீர்கள். காரணம் வேறென்ன புகழ் ஆசையும் எழுத்தைக்கையாளும் அனுபவமின்மையும்தான். மெல்லிய நகைச்சுவை என் எழுத்தில் இழையோடுவதாக நானே நினைத்துக்கொண்டதன் விளைவுதான் இந்தப்பதிவும் எழுதப்பட்டுள்ள இப்படியான‌ நடையும். இது போன்ற பதிவுகளையும் நீங்கள் படிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமான விஷயமே. மூத்தோர்களைக்குறித்து எழுதும்போது இன்னும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நான் கற்ற பாடம். நன்றி.!

இருப்பினும் பதிவின் எந்த வரிகளாவது உங்களை வருந்தச்செய்திருக்குமானால் அதற்காக நானும் உண்மையிலேயே வருந்துகிறேன்.

அன்புடன்

தாமிரா.

டிஸ்கி : ஹைய்ய்யா.. நானும் பெரியாளுங்களுக்கு பதில் சொல்ற அளவுக்கு பெரியாளாயிட்டேன்.. உய்..உய்.. (பாருங்கள்.. இங்கேயும் இந்த‌ ந‌கைப்புக்கான‌ வ‌ரிக‌ளை எழுதாம‌ல் இருக்க‌முடிய‌வில்லை.)

33 comments:

rapp said...

me the first

KaveriGanesh said...

ur reply is good Tamira, welcoming ghani to our blogs group.

kaveriganesh

பரிசல்காரன் said...

ஐயா.. தாமிரா அவர்களே..

வணக்கம்.

என் பெயர் கே.பி.கிருஷ்ணகுமார். ‘பரிசல்காரன்’ என்கிற பெயரில் வலைப்பூவில் எழுதுகிறேன்.

நன்றி.

மிகுந்த மரியாதைகளோடு
-கே.பி.கிருஷ்ணகுமார்

பரிசல்காரன் said...

வேறொண்ணுமில்ல.
பெரியாளாய்ட்டீங்கள்ல.. அந்த பயம் தான்!

:-)))

rapp said...

நல்ல விஷயம். பத்திரிக்கையுலகின் அடுத்த பரிமாணமான வலைப்பூக்களை அவர் ஏற்றுக்கொள்வது மிக நல்ல விஷயம். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்க பதில் அழகா இருக்கு:):):)

Ŝ₤Ω..™ said...

எனக்கும் தாமிரா அப்படி எழுதியது தவறாக படவில்லை..
இருப்பினும், வருத்தமளித்தது வருத்தமே..

Ramesh said...

I am not sure about people getting attention, whether you are a big writer or small.... but the spirit is welcome!

Good Reply.

வெண்பூ said...

தாமிரா,

அவர் நம் போன்ற மொக்கைப் பதிவர்களின் பதிவுகளை அதிகம் படித்ததில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் தவறாக நினைத்துவிட்டார். உங்கள் பதில் அருமை. கண்டிப்பாக அவர் புரிந்து கொண்டிருப்பார்.

நான் ஆதவன் said...

அவர் உங்களை புரிந்துக் கொள்வார் தாமிரா. வருத்தப் பட வேண்டாம்.(ஆனா டிஸ்கிய பார்த்தா வருத்தப்பட்ட மாதிரி தெரியல!!).
அழைத்தாலும் வராத பிரபலங்கிடையே அழையா விருந்தாளியாக வந்து சிறப்பித்த ஞானிக்கு ஒரு சல்யூட்

குப்பன்_யாஹூ said...

பதிவர்களோடு பதிவராக அமர்ந்து நம் மொக்கைகளையும் அலட்சியப்படுத்தாமல் கேட்டு ரசித்து நம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த ஞானி போற்றுதலுக்கு உரியவர்.

KUPPAN_YAHOO

சந்தனமுல்லை said...

நல்லா பதில் சொல்லியிருக்கீங்க! :-)

//அவர் நம் போன்ற மொக்கைப் பதிவர்களின் பதிவுகளை அதிகம் படித்ததில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் தவறாக நினைத்துவிட்டார்//

ரிப்பீட்டு!!

பொடியன்-|-SanJai said...

//டிஸ்கி : ஹைய்ய்யா.. நானும் பெரியாளுங்களுக்கு பதில் சொல்ற அளவுக்கு பெரியாளாயிட்டேன்.. உய்..உய்.. (பாருங்கள்.. இங்கேயும் இந்த‌ ந‌கைப்புக்கான‌ வ‌ரிக‌ளை எழுதாம‌ல் இருக்க‌முடிய‌வில்லை.)//

தொட்டில் பழக்கம்.. டிங்டாங் பெல்... :))

பொடியன்-|-SanJai said...

ஐயா.. தாமிரா அவர்களே..

வணக்கம்.

என் பெயர் த.மே.சஞ்சய்காந்தி. ‘பொடியன்-|-Sanjai’ என்கிற பெயரில் வலைப்பூவில் எழுதுகிறேன்.

நன்றி.

மிகுந்த மரியாதைகளோடு
-த.மே. சஞ்சய்காந்தி

பொடியன்-|-SanJai said...

வேறொண்ணுமில்ல.
பெரியாளாய்ட்டீங்கள்ல.. அந்த பயம் தான்!

:-)))

மங்களூர் சிவா said...

ஐயா.. தாமிரா அவர்களே..

வணக்கம்.

என் பெயர்
சிவ. சிவராமன் ‘மங்களூர் சிவா’ என்கிற பெயரில் வலைப்பூவில் எழுதுகிறேன்.

நன்றி.

மிகுந்த மரியாதைகளோடு
சிவ. சிவராமன்

மங்களூர் சிவா said...

வேறொண்ணுமில்ல.
பெரியாளாய்ட்டீங்கள்ல.. அந்த பயம் தான்!

:-)))

சரவணகுமரன் said...

கலக்குங்க...

தாமிரா said...

நன்றி ராப்.!
நன்றி கணேஷ்.!
நன்றி பரிசல்.! (கீழே பாத்தீங்களா.. கூத்து நடக்குது..)
நன்றி சென்.!
நன்றி ரமேஷ்.!
நன்றி வெண்பூ.!
நன்றி ஆதவன்.!

தாமிரா said...

பரிசல்.!
நீங்க ஒரு மூடி வெச்ச‌ புல்லு.!
உங்க முன்னாடி
நா ஒரு உடஞ்சுபோன‌ கோட்டரு.!

(கவிதை மாதிரி படிக்கவும், நீங்க 50000ம்னா நான் பன்னிரண்டரைனு சொல்லவர்றேங்க..)

தாமிரா said...

நன்றி குப்பன்.!
நன்றி முல்லை.!
நன்றி பொடியன்.! (ந‌ல்லா போடுறீங்கையா எதிர் பின்னூட்டம்..)
நன்றி மங்களூர்.!
நன்றி சரவணன்.!

Dr.Rudhran said...

there was nothing wrong in your blog..gnani too didnt need an answer he was just airing his thoughts aloud..anyway keep going

புதுகை.அப்துல்லா said...

யப்பா ஊருலேந்து வந்துட்டேன். அட்டெண்டன்ச போட்டுக்க. அப்புறம் வீட்டுக்கு வர்ற மேட்டர பொது இடத்துல டிஸ்கஸ் பண்ன முடியாது.போனுல பேசுவோம் :)))

புதுகை.அப்துல்லா said...

எனவே நழுவினேன், கழன்றேன், யார் அழைத்தார்கள் போன்ற பதப்பிரயோகங்கள் பொருத்தமற்றவை.
//

வணக்கம் ஞானி அண்ணே!

வலைப்பூ என்பது பத்திரிக்கையின் பரிணாம வளர்ச்சியாக இருந்தாலும் நாங்கல்லாம் உங்கள மாதிரி பெரிய எழுத்தாளரோ சிந்தனையாளரோ இல்லண்ணே. இங்கு இயங்கும் நாங்கள் ஓரு கல்லூரி போன்ற உணர்வில் கிட்டத்தட்ட கல்லூரி நன்பர்களைப் போலவே பழகுகின்றோம். நீங்களும் பதிவரான பின்னே எங்களுக்கு நீங்க ஓரு மிகப்பெரிய எழுத்தாளர்ங்கிற பிம்பம் எல்லாம் மறைஞ்சு போயி நம்பாளுங்கிற எண்ணம் தலை தூக்குவது தவிர்க்க முடியாது. நழுவினாரு,கழண்டாருங்கிறதெல்லாம் உங்களின் தரத்தைக் குறைக்கும் உள் நோக்கோடு தாமிரா செய்து இருக்க மாட்டார். நா பாதில போனா என்னைய என்ன சொல்லி எழுதியிருப்பாரோ அதத்தான் உங்களுக்கும் உபயோகப்படுத்தி இருக்காரு. கோவுச்சுக்காம எங்களோடு சேர்ந்து என்ஜாய் பண்ணுங்கண்ணே :)))

(தாமிரா கவனத்திற்கு : பார்த்துக்க!பார்த்துக்க! பதிலச்சொல்லி நானும் பெரிய எழுத்தாளர் ஆயிட்டேன் )

பாபு said...

"பரிசல்.!
நீங்க ஒரு மூடி வெச்ச‌ புல்லு.!
உங்க முன்னாடி
நா ஒரு உடஞ்சுபோன‌ கோட்டரு.! "

நல்ல்ல்ல உதாரணம்

அப்ப எங்களை எல்லாம் என்ன சொல்வீங்க ?
இப்ப தான் ஆயிரதுக்கே வந்திருக்கோம்

கயல்விழி said...

ஞானிக்கெல்லாம் பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்களா? :) :) JK, நல்ல பதிவு தாமிரா.

கும்க்கி said...

என்னத்துக்குன்னே ஞானிக்கெல்லாம் பதில போட்டு பெரியாளாக்குறீங்க.. நம்ம அந்த மாதிரி பரம்பறயிலயா வந்தம்?
(உஸ் அப்பாடா.....ஒயுங்கா பத்துமா..?)

கும்க்கி said...

நளைக்கி தேதி எட்டு...விஷேஷமுங்களா..?

SK said...

:-)

ஐயா.. தாமிரா அவர்களே..

வணக்கம்.

என் பெயர் குமார். ‘எஸ். கே. ’ என்கிற பெயரில் வலைப்பூவில் எழுத உள்ளேன்.

நன்றி.

SK said...

வேறொண்ணுமில்ல.
பெரியாளாய்ட்டீங்கள்ல.. அந்த பயம் தான்!

:-)))

தாமிரா said...

நன்றி டாக்டர். ருத்ரன்.!
(ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, டாக்டர் ருத்ரன் போன்றோரும் வலையுலகை கவனித்துக்கொண்டிருப்பது. இன்னும் பொறுப்புடன் செயல்படவேண்டும் என எண்ண வைத்தது டாக்டரின் பின்னூட்டம்.)

தாமிரா said...

ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாச்சா? என்ன கேரளாவுல நல்ல கவனிப்போ..? அட்டெனென்ட்ஸ் போட்ட மட்டும் பத்தாது, எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் வேணும். செக் பண்ணுவேன், சொல்லிப்புட்டேன்.

தாமிரா said...

வாங்க பாபு.! (நமக்கும் ஆரம்பத்துல அப்பிடிதான் இருந்துச்சு சார்..)

வாங்க கயல்விழி.! (என்ன இந்தப்பக்கம் ஆளே பாக்கமுடியறதில்லை?)

வாங்க‌ கும்கி.! (தேதிய‌ என்ன‌விட‌ ந‌ல்லா ஞாப‌க‌ம் வெச்சிருக்கீங்க‌.. மெயிலுக்கு வாங்க‌ பிளீஸ்.!)

ந‌ன்றி SK.!

1நிமிடம் said...

லக்கி லுக் மற்றும் தாமிராவுக்கு!

நான் நினைக்கிறேன் நீங்கெல்லாம் (அதாவது பதிவெழுதும் நண்பர்கள்) இந்த ஞாநி, ஜெயமோகன், சாரு நிவேதிதா மாதிரியானவங்கள ரொம்ப பெரிய ஆளா நினைக்கிறீங்க.... நீங்கல்லாம் உங்கள எழுத்தாளன்னு சொல்லிக்கிறதில்லஅதனால உங்களுக்கு ஈகோவும் இல்ல ஆனா இந்த எழுத்தாளன்னு சொல்லிகிட்டு திரியிராங்களே.....

கோச்சுக்காம மீதிய இங்க படிங்க
http://1nimidam.blogspot.com/