Monday, October 6, 2008

ஆறு அல்ல நூறு வித்தியாசங்கள்.!

இங்கே கீழே தரப்பட்டிருக்கும் படத்தைக்கவனியுங்கள். படத்திலிருக்கும் இரண்டு பொருட்களுக்கும் உங்களால் நூறல்ல.. குறைந்தது ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா? நீங்கள் ஒரு மெக்கானிகல் எஞ்சினியராகவோ அல்லது அந்த துறை குறித்த தொடர்போ இல்லாதவராகவோ இருப்பின் கண்டுபிடிப்பது மிகச்சிரமம். ஆனால் நிஜத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசங்கள் இந்த இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ளது. வாருங்கள் இந்த சுவாரசியமான விஷயத்தை மிகச்சுருக்கமாக சொல்லமுயல்கிறேன்.


கீழே உள்ள படத்தினைக்கவனியுங்கள். அந்தப்பொருளின் ஒரு பகுதியை குறிப்பிட்டுக்காட்டியுள்ளேன். அந்தப்பகுதியில் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? ...

பொருளின் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இடத்தில் உதாரணமாக சுற்ற‌ளவு (Diameter) 50 mm என்று கொள்க. இந்தப்பொருள் ஒரு கடைசல் எந்திரத்திலோ (Lathe) அல்லது வேறு ப‌ல‌ எந்திர‌ங்க‌ளின் துணைகொண்டோ உருவாக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். இந்த‌ப்பொருள் ஒரு காரில் பொருத்த‌ப்ப‌ட‌க்கூடிய‌ ஒரு உதிரிபாக‌ம் என‌க்கொள்வோம். இப்போது விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள். குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ அந்த‌ இட‌த்தின் சுற்ற‌ள‌வு 50 mm இருக்க‌வேண்டும் என்ப‌து காரை வ‌டிவ‌மைத்த‌வ‌ரின் முடிவு. ஆனால் பொருளை உருவாக்குப‌வ‌ர்க‌ள் ச‌ரியாக‌ 50 mmல் அனைத்து பாக‌ங்க‌ளையும் உருவாக்க‌முடிய‌மா? முடியாது. ச‌ரியாக‌ சொல்ல‌ப்போனால் அவர்களால் ஒரே ஒரு பாக‌த்தைக்கூட‌ மிக‌ச்ச‌ரியாக‌ 50 mmல் உருவாக்க‌முடியாது. ஏனென்ப‌தை க‌டைசியில் விள‌க்குகிறேன்.

அத‌னால் வ‌டிவ‌மைப்ப‌வ‌ர் என்ன சொல்கிறார் எனில், "உன்னால 50mmல பண்ணமுடியாதுனு எனக்கு தெரியும், அதுனால நீ என்ன‌ ப‌ண்ற. கொஞ்சம் முன்ன‌பின்ன‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை ப‌ண்ணிக்கொடு" என்கிறார். ஆனால் எவ்வ‌ள‌வு முன்ன‌ இருக்க‌லாம் எவ்வ‌ள‌வு பின்ன‌ இருக்க‌லாம் என்ப‌தையும் சொல்லிவிடுகிறார். அவர் சொல்வ‌த‌ற்கும் மேலேயோ, அல்ல‌து கீழேயோ போனால் அந்த‌ பொருள் ப‌ய‌ன‌ற்றுவிடுகிற‌து. உதார‌ண‌மாக‌ மேற்சொன்ன‌ பொருளில் +0.1 அல்ல‌து ‍-0.1 என்று அவர் 'விரிக்கப்பட்ட அளவை'த்தருகிறார் (Tolerence) ஆகவே அந்த சுற்றளவு 49.9 லிருந்து 50.1க்குள் எந்த இடத்திலிருந்தாலும் சரி என்று ஒப்புக்கொள்ளப்பட்டு தர அனுமதி செய்யப்படுகிறது.
ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனால் ஒரு பொருள் 49.981 ஆகவும் இன்னொரு பொருள் 50.007 ஆகவும் இருக்கிறது. இதைப்போலவே பொருளின் பிற அளவுகளான உயரம், தடிமன், அதிலிடப்பட்டுள்ள‌ துளைக‌ளின் அள‌வு, செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இரும்பின் த‌ர‌ம், உடையும் த‌ன்மை, அத‌ன் வ‌ழுவ‌ழுத்த‌ன்மை (Finish) என‌ நூற்றுக்கும் மேற்ப‌ட்ட‌ த‌ன்மைக‌ளில் (Parameters) இர‌ண்டு பொருட்க‌ளுமே வேறுப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஒரு பொருளிலேயே இத்த‌னை வேறுபாடுக‌ள் இருப்பின் நூற்றுக்க‌ண‌க்கான‌ பொருட்க‌ளைக்கொண்டு செய்ய‌ப்ப‌டும் இர‌ண்டு கார்க‌ளுக்கிடையேயான‌ வேறுபாடுக‌ளை நீங்க‌ள் க‌ற்ப‌னை செய்துபார்த்துக்கொள்ள‌லாம். ஆனால் பார்ப்ப‌த‌ற்கு இர‌ண்டு கார்க‌ளும் ஒன்று போல‌வே தோற்ற‌ம‌ளிக்கின்றன.

இப்போது இரண்டு கேள்விகள் :
ஏன் ஒரு பொருளை மிக‌ச்ச‌ரியாக‌ 50 ல் உருவாக்க‌முடியாது?
50.007 என‌ ஒரு அள‌வைப்ப‌ற்றி குறிப்பிட்டுள்ளீரே.. விள‌க்க‌முடிய‌மா?

இந்த‌ இர‌ண்டு கேள்விக‌ளுமே ஒன்றிற்கொன்று தொட‌ர்புடைய‌து. முத‌லில் இர‌ண்டாவ‌தைப்பார்ப்போம். 1 mm என்ப‌து 1 மீட்டரின் 1000ல் ஒரு பங்கு, அதாவது நாம் ப‌ள்ளியில் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ அடிஸ்கேலின் சிறிய இர‌ண்டு கோடுக‌ளுக்கு இடைப்ப‌ட்ட‌ ப‌குதி. இந்த‌ 1 mmஐ 1000 ப‌ங்கு வைப்போமானால் கிடைப்ப‌தே ஒரு மைக்ரான் அதாவ‌து 0.001 mm. இந்த‌ அள‌வுக‌ளிலும் இத‌ற்கும் மேலும் ஆழ‌மாக‌ நாங்க‌ள் பொருளை சோத‌னை செய்து பிரிக்கிறோம். இப்போது உங்க‌ளுக்கு முத‌ல் கேள்விக்கும் விடை கிடைத்திருக்கும். மேலும், உதார‌ண‌மாக‌ இர‌ண்டு பொருட்க‌ளுமே 50.007 இருந்தால் என‌ நீங்க‌ள் இழுத்தால்.. இன்னும் ஆழ‌மாக‌ சோத‌னை செய்து ஒரு பொருள் 50.00712 ஆக‌வும் இன்னொரு பொருள் 50.00731 என‌வும் க‌ண்டுபிடிக்க‌லாம்.

அட‌ப்பாவிக‌ளா.. இவ்வ‌ள‌வு நுட்ப‌மாக‌ அள‌விட‌ முடிய‌மா? இல்ல‌ க‌தை வுடுறியா? என்று சந்தேகப்படுகிறீர்களா? நிஜ‌ம்தான். சாதார‌ண‌மாக‌ புள்ளியைத்தாண்டி மூன்று இல‌க்க‌ங்க‌ள் வ‌ரை அள‌விடுவ‌து வாக‌ன‌ உதிரிபாக‌ உற்ப‌த்தித் தொழிற்சாலைக‌ளில் மிக‌ மிக‌ சாதார‌ண‌ம். ஐந்து இல‌க்க‌ங்க‌ள் வ‌ரை அள‌விட்ட‌ அனுப‌வ‌ம் என‌க்கு உண்டு. இத‌ற்கும் மேலே உள்ள‌தா என‌ என‌க்கு தெரிய‌வில்லை. இதைப்ப‌டிக்கும் பிஸ்த்துக‌ள் யாராவ‌து சொல்ல‌லாம்.

ப‌ள்ளி க‌ல்லூரிக‌ளில் இர‌ண்டு த‌ச‌ம‌ இட‌ங்க‌ள் வ‌ரை அள‌விட‌க்கூடிய‌ திருக‌ள‌வி, வெர்னிய‌ர் ஆகிய‌வ‌ற்றை பார்த்திருப்பீர்க‌ள். நாங்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மூன்று இட‌ங்க‌ள் வ‌ரை அள‌விட‌ ப‌ய‌ன்ப‌ட‌க்கூடிய‌ மானி இதோ கீழே..
டிஸ்கி 1: அய்யய்யோ.. எங்காவது வழிதவறி வந்துவிட்டோமா? இது தாமிரா பதிவுதானா என அதிர்ச்சியடைகிறீர்களா? அதிர்ச்சியடைய வேன்டாம், இது நம் பதிவுதான்.

டிஸ்கி 2: அனைத்து ப‌திவ‌ர்க‌ளும் அவ‌ர‌வ‌ர் துறையைப்ப‌ற்றி அடிக்க‌டி ப‌திவெழுத‌ வேண்டும், அப்போதுதான் அறிவுப்பகிர்தலுக்கு (Knowledge sharing) வழிவகுக்கும் என‌ ப‌திவ‌ர் ந‌ர்சிம், சென்ற‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் கேட்டுக்கொண்ட‌தாலும் என்னைத்த‌னியே கூப்பிட்டு மிர‌ட்டிய‌தாலும் இதை எழுதினேன். ஆக‌வே பாராட்டுக‌ளும், க‌ண்ட‌ன‌ங்க‌ளும் அவ‌ருக்கே செல்ல‌வேண்டும்.
டிஸ்கி 3: தொட‌ர்வ‌தா வேண்டாமா என‌ நீங்க‌ளே சொல்ல‌லாம் (அடிக்க‌வ‌ராதீர்க‌ள்.. சும்மா ஒரு பேச்சுக்குதான்)

டிஸ்கி 4: மன்னியுங்கள்.. அடுத்து வ‌ரும் ப‌திவும் துறை சார்ந்த‌ ப‌திவுதான். துறை : குடும்ப‌ம். ச‌ப்ஜெக்ட் : த‌ங்க‌ம‌ணி.
ஸ்ஸ்,. அலோ.. எந்திரிங்க, எந்திரிங்க‌.. அப்துல், பதிவு படிச்சிட்டிருக்கும் போது இப்பிடிலாம் தூங்கக்கூடாது, பரிசல் எழுப்பி விடுங்க..!

38 comments:

வெண்பூ said...

அருமை தாமிரா.. எப்போதாவது கண்டிப்பாக இதுபோல் எழுதுங்கள்..

சந்தனமுல்லை said...

மிகவும் சுவாரசியம்!! பயனுள்ள தகவல்கள், தாமிரா!!

தமிழ் பிரியன் said...

உண்மையிலேயே நல்ல அறிமுகம்... இன்னும் மெட்டல் வகைகள், கடைசல் இயந்திரங்கள், கடைசல் முறை இதையெல்லாம் அப்பப்ப எழுதுங்க.. உபயோகமா இருக்கும்.

தமிழ் பிரியன் said...

///டிஸ்கி 4: மன்னியுங்கள்.. அடுத்து வ‌ரும் ப‌திவும் துறை சார்ந்த‌ ப‌திவுதான். துறை : குடும்ப‌ம். ச‌ப்ஜெக்ட் : த‌ங்க‌ம‌ணி.////
அவ்வ்வ்வ்வ்வ்வ் :))))

கயல்விழி said...

நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது தான், பயனுள்ள தகவல்கள். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்

தமிழ்ப்பறவை said...

தாமிரா... கலக்கிட்டேள் போங்க....
இந்த மாதிரி, இல்லல்ல இதை விட இன்னும் அதிகமா உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்.
அப்பாடா..நம்ம துறை சம்பந்தப்பட்ட பதிவுகளைப்பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..(அலுவலகத்திலும் இதே ஆணிதான் இங்கயும் அதேதான்னாலும் தமிழ்ல பார்க்க நல்லா இருக்கு).
tolerance க்குத் தமிழ் அர்த்தம் 'விரிக்கப்பட்ட அளவு'...சரிதான் போல...
மிகை விரிக்கப்பட்ட அளவு,குறை விரிக்கப்பட்ட அளவு...(+ மற்றும் ‍‍‍) அட நல்லா இருக்கே....
//நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது தான்,//
கயல் அவரோட உடற்பயிற்சி பதிவு படிக்கலையா...?

முரளிகண்ணன் said...

தாமிரா நாமெல்லாம் ஒரே ஜாதி.
(இயந்திரவியல்).

அசத்திட்டீங்க

மங்களூர் சிவா said...

/
அய்யய்யோ.. எங்காவது வழிதவறி வந்துவிட்டோமா? இது தாமிரா பதிவுதானா என அதிர்ச்சியடைகிறீர்களா?
/

ஆமாம்பா ஆமாம்!!

தமிழ்ப்பறவை said...

முரளி சார் என்னையும் ஆட்டையில சேர்த்துக்கோங்க.... எனது இளநிலைப் பட்டமும் இயந்திரவியல்தான்...

மங்களூர் சிவா said...

அருமை தாமிரா.. எப்போதாவது கண்டிப்பாக இதுபோல் எழுதுங்கள்..

மங்களூர் சிவா said...

மிகவும் சுவாரசியம்!! பயனுள்ள தகவல்கள், தாமிரா!!

மங்களூர் சிவா said...

உண்மையிலேயே நல்ல அறிமுகம்...

மங்களூர் சிவா said...

///டிஸ்கி 4: மன்னியுங்கள்.. அடுத்து வ‌ரும் ப‌திவும் துறை சார்ந்த‌ ப‌திவுதான். துறை : குடும்ப‌ம். ச‌ப்ஜெக்ட் : த‌ங்க‌ம‌ணி.////

வெல்கம்! வெல்கம்!!

பரிசல்காரன் said...

தாமிரா..

என் கண்ணைத் திறந்துவிட்டீர்கள். நன்றி!

பரிசல்காரன் said...

//அலோ.. எந்திரிங்க, எந்திரிங்க‌.. அப்துல், பதிவு படிச்சிட்டிருக்கும் போது இப்பிடிலாம் தூங்கக்கூடாது, பரிசல் எழுப்பி விடுங்க..!//

மொதல்ல என்னை யாராவது எழுப்புங்கப்பா...

அதாவது, ரொம்பப் புடிச்சுப்போய் பதிவை உக்கார்ந்து திரும்பத் திரும்பப் படிக்கறேன்.... அதச் சொன்னேன்.

Jokes apart...

நெஜமாவே நல்ல பதிவு நண்பா!

Anonymous said...

//தாமிரா..

என் கண்ணைத் திறந்துவிட்டீர்கள். நன்றி!//

இப்பவாவது இவர் கண்ணை திறந்தீர்களே... நாளையிலிருந்து பனியன் தொழில் பற்றி பதிவுகள் பார்க்கலாம். :) . பரிசல் நீங்கள் நிர்வாக துறையில் கை தேர்ந்தவர் போல் உள்ளது. அதை பற்றி எழுதுங்கள் ப்ளீஸ்

Ŝ₤Ω..™ said...

கலக்கல் தாமிரா..
இது போல் துறைசார்ந்த பதிவுகள் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும்.. நர்சிம் சொன்னது சரிதான்..

இதில் எனக்கு ஒரு சந்தேகம்..
இவ்வளவு துல்லியமா அளவிட முடியும் என்றால், (நீங்கள் குவாலிடி துறையில் இருப்பவர் என்று நினைக்கிறேன்)ஏன் துல்லியமாக தயாரிக்க முடியாது??

ஏன் அப்படி துல்லியமாக தயாரிக்க கருவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை???

Indian said...

//தொட‌ர்வ‌தா வேண்டாமா //

-vum.

nice post.

தமிழ்ப்பறவை said...

ஏன் அப்படி துல்லியமாக தயாரிக்க கருவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை??? //
ஏன் இல்லை... இருக்கின்றன...துல்லியம் அதிகமாக, ஆக வெள்ளையப்பனும்(வேறென்ன பணம்தான்) அதிகமாவார்...
துல்லியம்,தரம் தீர்மானிப்பதில் காசின்(cost) பங்கும் உண்டல்லவா...?

cable sankar said...

நான் புரடக்‌ஷன் டெக்னாலஜி படிக்கும்போது இந்த மாதிரி சொல்லி கொடுக்க ஆளில்லாம போனதுனால..சரி அத் விடுங்க.. மிக நல்ல பதிவு.. என்ன ஓண்ணு நம்ம துறை சார்தவங்களுக்கு ஆர்வமா இருந்தாதான் இருக்கும். ஆனா புதுசா தெரிஞ்சிக்கிறவங்களுக்கு அல்வா மாதிரி சொல்லிட்டிங்க. நன்றி

அது சரி said...

தல இன்னா ஆச்சி?

ஒயின் பாட்டில்ல வாய்பக்கம் மட்டும் தான் இருக்கு.. பாட்டில் எங்க? அடிச்சிட்டு எடைக்கு போட்டு அதுக்கு தம்மு வாங்கிட்டீரா??

இன்னாது, நூறு வித்தியாசமா? ம்ம்க்கும், நைன்டி அடிச்சாலே அவனவனுக்கு ஊரும் தெர்ல, பேரும் தெர்ல.. இதுல நூறு வித்தியாசத்தை எப்பிடி சொல்றது... வோணும்னா,

நூறுல பத்து போனா நைன்டி,

நைன்டி வாங்க பத்து ரூவா கொறஞ்சா

அன்னிக்கு நைட்டு எம்ப்டி

அப்பப்ப அடிச்சா அது ஸ்வீட்டி

நெதம் அடிச்சா நீ போண்டி

அப்பிடின்னு ஒரு கவுஜ வேணா சொல்றேன்.

அப்புறம் நர்சிம்முக்கும் உங்களுக்கும் என்ன சண்டை? பதிவர் சந்திப்புல எதுனா தகராறா :0)

இப்பிடி இரும்பு, கத்தி கப்டால்லாம் காமிச்சி பயமுறுத்தாத தல!

அது சரி said...

இன்னாது கடைசல் எந்திரங்கள், கடைசல் முறைகளா??

அய்யோ, அய்யோ, அய்யய்யோ...ஒண்ணுமே பிரியலையே...இன்னிக்கு சரக்குல எதுனா உட்டுட்டாய்ங்களா??

பொடியன்-|-SanJai said...

இப்போ தான் தூங்கி எழுந்தேன்.. இருங்க குளிச்சிட்டு வந்து படிக்கிறேன்.. திரும்பவும் தூங்க இப்போதைக்கு விருப்பம் இல்லை.. :)))

கும்க்கி said...

எழுத தூண்டிய நர்சிம்முக்கு நன்றி..அப்படியே உங்களுக்கும்...
அவ்வப்போது தொடரலாம்..அனைவருக்கும் புரியும்படி உள்ளது..அருமை.

கார்க்கி said...

தெள(thou) என்பது 1000 இன்ச்சில் ஒரு பங்கு.. அதாவது 25.4 மைக்ரான்ஸ்.. அல்லது 0.0254mm அல்லது 0.000254m .. இன்னும் பல கருவிகள் 0.01 தெள அளக்கக் கூடியவை.. நான் சிங்கையில் பணியாற்றிய போது உபயோகித்திருக்கிறேன்.. நல்ல முயற்சி சகா..

சரவணகுமரன் said...

நல்ல பதிவு

வால்பையன் said...

எனக்கு அம்ம்புட்டு அறிவு இல்லேன்னாலும் ஏதோ புரியிற மாதிரி இருக்கு.

அந்த பாகம் காருக்குள்ளே எங்கே வருது

Anonymous said...

நல்ல பதிவு தாமிரா.

துறை சார்ந்த வலைப் பக்கம் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பரிசலும், வெயிலானும் கூடவே நானும் பேசினோம். அவரவர் வேலை அவரவருக்கு என்பதால் அப்படியே நிற்கிறது.

சுவராசியமாக் எழுதியிருக்கிறீர்கள். டைம் ஸ்டடி, வொர்க் ஸ்டடி, SQC போன்றவற்றை உங்களால் நன்றாக விளக்க முடியும்.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

தாமிரா said...

வயித்துல பீரை வாத்தீங்களாடாப்பா.. சாமி. சும்மா பயந்துக்கினே இந்த பதிவைப்போட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ். நிஜம்தானே, நம்பலாம்ல.?

வாங்க வெண்பூ.! (எப்போதாவது என்பதை தடித்த எழுத்துகளில் போட மறந்துவிட்டீர்கள்)

நன்றி முல்லை.!

நன்றி தமிழ்.!

நன்றி கயல்.!

ந‌ன்றி தமிழ்ப‌ற‌வை.! (நீங்க‌ளும் ந‌ம்ப‌ கேஸ்தானா?)

தாமிரா said...

வாங்க முரளி.! (பிஎச்டி எங்கே? எட்டாங்கிளாஸ் எங்கே? விளையாடாதீங்க தல‌)

நன்றி மங்களூர்.!

நன்றி பரிசல்.!

நன்றி சென்.! (உங்க‌ளுக்கான‌ ப‌திலை ப‌ற‌வை தெளிவாக‌ த‌ந்துள்ளார்)

ந‌ன்றி இந்தியன்.!

நன்றி கேபிள்.!

தாமிரா said...

நன்றி அதுசரி.!
நன்றி சஞ்சய்.!
நன்றி கும்கி.!
ந‌ன்றி கார்க்கி.!
நன்றி குமரன்.!
நன்றி வால்.!
நன்றி வேலன்.! (அவ்வளவு தூரம் எழுதினா தெறிச்சி ஓடிறப்போறாங்க..)

புதுகை.அப்துல்லா said...

நான் ஊர்ல இல்லாதப்போ ஓரு பதிவப்போட்டு டிஸ்கில என்னையும் வாரிய உங்க வீரத்த நினைக்கும் போது புல்லரிக்குதுப்பா :)))

டிஸ்கி : (ஊர்ல இருந்திருந்தா மட்டும் கிழிச்சுருப்போமாக்கும்!)

புருனோ Bruno said...

//+0.1 அல்ல‌து ‍-0.1 என்று அவர் 'விரிக்கப்பட்ட அளவை'த்தருகிறார் (Tolerence) //

tolerance என்று நினைக்கிறேன்

ஜி said...

:)))

Mahesh said...

தரம், தரக்கட்டுப்பாடு மாதிரியான விஷயங்களுக்கு அருமையான அறிமுகம்... அப்பிடியே புடிச்சுகிட்டு போய் ட்டி.க்யூ.எம், ஸிக்ஸ் ஸிக்மா இதுகளயும் எளிமயா விளக்குங்க.

தாமிரா said...

நன்றி அப்துல்.!
நன்றி டாக்டர்.! (திருத்தத்துக்கு நன்றி, பதிவுல திருத்துறதுக்குள்ள நாக்கு வெளிய வந்துருது.. உட்டுடுறேன்)
நன்றி ஜி.!
நன்றி மகேஷ்.! (இப்பதான் மூணேமுக்கால் சிக்மா வரை வந்திருக்கேன், அதனால அப்புறம் பாத்துக்கலாம்)

AMIRDHAVARSHINI AMMA said...

INFORMATION IS WEALTH

narsim said...

தாமிரா..

தூள் பதிவு.. நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்..

தொடர்ந்து இதுகுறித்து எழுதுங்கள்..

நர்சிம்