Thursday, October 9, 2008

பதிவுலக அரசியல்

ஏடிஎம் ஸ்லிப் போன்ற சிறிய துண்டுத்தாள்களில் அடுத்து எழுத வேண்டிய பதிவு பற்றிய சிறு நினைவுக்குறிப்புகளை நுணுக்கி நுணுக்கி எழுதி வைத்திருப்பேன். நிறைய விஷயங்கள் இருந்தாலும் அவ்வப்போது புதிய சில விஷயங்கள் முன்னுரிமை பெற்று எழுத வேண்டியதாகிவிடுகிறது. இன்று அலுவலகம் விடுமுறை என்பதால் நெட் கிடையாது. தங்கத்தை ஒருவழியாக நேற்று ஊருக்குப் பேக் செய்தாயிற்று. டிவி அல்லது கேம் அல்லது கண்ணனுடன் அவுட்டிங்.. இதுதான் முதலில் இருந்த இன்றைய பிளான். கண்ணன் பகலில் முடியாது சாய்ந்திரம்தான் என்று கூறி சொதப்பிவிட்டான். டிவியைப் போட்டேன். நானும் எவ்வளவோ பொறுமையாகத்தான் பார்க்கத்துவங்கினேன்.. முடியல.. போட்டி போட்டுக்கொண்டு மொக்கைப்படங்களை போட்டு நம் சேனல்கள் கொலவெறியோடு தாக்குதல்களை காலையிலேயே துவக்கியிருந்தன. இரவு வரை இப்படிதான் இருக்கும் எனவும் இடையிடையே விளம்பரங்கள் போட்டு எச்சரிக்கை வேறு செய்தார்கள்.

வேறு வழியில்லை சாப்பிட்டுவந்து கேமில் உட்கார்ந்துவிட வேண்டியதுதான் என நினைத்து வெளியே வந்தால் சர்ப்ரைஸாக பக்கத்து தெருவிலிருக்கும் iway திறந்திருந்தது. வேலைகளையும், சாப்பாட்டையும் முடித்துவிட்டு போய் உட்கார்ந்தேன். இன்று பதிவு எதுவும் போடக்கூடாது (லீவு நாள் என்பதால் காத்தாடிவிடக்கூடாது என்ற பயம்தான்). பிற கடைகளை முடிந்த அளவு மேய்வது மற்றும் பின்னூட்டமிடுவது என முடிவு செய்து ஆரம்பித்தேன். தமிழ் மணத்தை திறந்து கண்ணில் பட்ட இணைப்புகள் அனைத்தையும் கிளிக்கி படிக்கத்துவங்கினேன். ரெண்டு மணிநேரம். ..முடியல.. 5% தவிர டிவியே எவ்வளவோ தேவலாம் போல மொக்கைப்போட்டு தாளித்துவிட்டார்கள். பின்னர் வழக்கம் போல ரெகுலர் கடைகளுக்கே போய் படித்தும் பின்னூட்டமிட்டும் திரும்பினேன்.

இன்னும் கண்ணன் வருவதற்கு நேரமிருக்கிறது. அதற்குள் ஒரு பதிவு போட்டாலென்ன? என்ன எழுதலாம். வழக்கமான மைல்டான பதிவுகள் தவிர சீரியஸான ஒன்றிரண்டு விஷயங்களும் எப்போதாவது எழுத வேண்டுமென்றும் பிளான் வைத்திருக்கிறேன். எழுதினால் எங்கே நீங்களும் சீரியஸாகி விடுவீர்களோ என்றுதான் பயந்துகொண்டு தள்ளிப்போட்டு வருகிறேன். அதில் ஒரு விஷயம்தான் பதிவுலக அரசியல். (மேலே பார்த்துக்கொள்கிறேன்.. அடப்பாவி அதுக்குள்ளாகவே ஒரு பதிவு அளவு எழுதிவிட்டாயேடா? நீளமா எழுதினா தெறிச்சு ஓடிடுவாங்க.. தெரியும்தானே.. இந்த லட்சணத்துல சீரியஸ் டாபிக் வேறயா விளங்கிடும்).

சீச்சீ.. சீரியஸ் டாபிக்கே வாணாம்.. அந்தப்பழம் புளிக்கும். ஆகவே மைல்டாகவே அந்த விஷயத்தைப்பற்றி நான் நினைப்பதைச் சொல்லிவிடுகிறேன். (சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும், மெயில்களையும் பார்த்தபிறகு தோன்றிய சப்ஜெக்ட் இது)

* சினிமா தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அதி தீவிர மீடியா. மேலும் ஏராளமான பணம் புரளக்கூடிய துறை. ஆனால் நம்மூரில் எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய படைப்புகளுக்கும் உள்ள வரவேற்புதான் நல்லா தெரியுமே நமக்கு. ஆகவே சிலர் தவிர்த்து பிறர் சினிமாவுக்குத்தாவுகிற வாய்ப்பைத்தான் எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள். அல்லது யாருக்கும் தெரியாவண்ணம் ஏங்கிக்கொள்கிறார்கள். அல்லது ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்கிறார்கள். ஒருவழியாக அதை அடைந்தவர்கள் பெருமை பேசிக்கொள்கிறார்கள். காரணம் இலக்கியச்சேவையா? எந்தத்துறையிலும் வாய்க்காத அளவில் நிரம்ப நிரம்ப புகழ், நிரம்ப நிரம்ப பணம். அதில் என்ன தவறு இருக்கிறது?

* பதிவுலகம் எப்படியிருக்கிறது? பத்திரிகைகளுக்கு தாவ நேரம் பார்த்துக்கொண்டு உறுமீனுக்காக‌ போல காத்துக்கொண்டிருக்கிறது. (எனக்கு ஒரு குட்டி மீன் கிடைச்சாக்கூட போதும்). எழுத்தாளர்களுக்கு எப்படி சினிமாவோ அதைப்போலவே பதிவர்களுக்கு பிரின்ட் மீடியா. அல்லது முதலில் வில்லன், அப்புறம் ஹீரோ, அப்புறம் சிஎம் என்பது போலாகவும் இருக்கலாம். காரணம் இலக்கியச்சேவையா? முதலில் குமுதத்தில் ஐந்து பக்க சிறுகதை, பின்னர் உயிர்மையில் 200 பக்க நாவல், பின்னர் விகடனில் எட்டு பக்க பேட்டி. எப்பேர்ப்பட்ட கனவு அது. அதில் என்ன தவறு இருக்கிறது? சிலர் பிரின்ட் மீடியாவை விடவும் வலையுலகம் பிரம்மாண்டமானது. இதன் எதிர்கால சாத்தியங்கள் அளப்பறியதாக இருக்கும் என்கிறார்கள். ஊகங்களால் பயனில்லை.

* வேறெந்த கலைகளை விடவும் அதிகபட்சமாய் மக்களை அடைவதில் சினிமாவும் எழுத்தும் முன்னிற்கிறது. ஆகவேதான் அதைப்பற்றி மேலே பார்த்தோம்.ஆனால் பிற கலைகளை விடவும் எழுத்துத்துறை பற்றி மட்டும்தான் நாம் விவாதிக்க முடியும் (நாம் செய்வதைப்பற்றிதானே பேச முடியும்). மேலே "அதில் என்ன தவறு இருக்கிறது?" என்று சொன்னோமே, அது சுயநலமாக அல்லவா இருக்கிறது. அப்படியானால் இலக்கியச்சேவையை யார்தான் செய்வது. அது சுயமாக இயங்கும். சமூகத்தின் (பெரும்பாலான மக்களின்) நேர்மையான ரசனையை ஒட்டியதாகவே இலக்கியம் இருக்கமுடியும். ஒன்றை விடுத்து இன்னொன்று ஆளாகிவிடமுடியாது. சமூகத்தின் அத்தனைத் தளங்களிலிருந்தும் படைப்பாளிகள் புறப்பட்டு வந்திருக்கிறார்கள், வருகிறார்கள், வருவார்கள். அவர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த ரசனையையும், இலக்கியத்தையும் தீர்மானிப்பார்கள்.

அய்யய்யோ கிரைம் நாவல் பிச்சிக்கிட்டு போகுதே?

அய்யய்யோ போக்கிரி படம் வசூல் அள்ளுதே?

அய்யய்யோ மொக்கைப்பதிவு இப்பிடி ஹிட்டாவுதே?

((புலம்பினா ஒண்ணியும் நடக்காது. நீ மட்டும் 'என்னா ரசனை இது? நா எழுதுன பின்நவீனத்துவ கவுஜய ஒர்த்தனும் படிக்கமாட்றானுவோ'னு புலம்பிகினுருந்தா.. உன் ரசனை சராசரிக்கு உசந்தது, ஸாரிபா.. மாறுபட்டதுனு வெச்சிகோனு நா சொல்லிருவேன். உன் வேலையை மட்டும் பார். நேரம் வரும்போது பின்ந‌வீனத்துவம் தன்னால முன்னால வரும். அப்பாலயும் வந்து புதுசா 'பின்னாடிநவீனத்துவத்துல' ஒரு கவுஜ எழுதிவெச்சுகினு இதை குறை சொல்லிக்கினுருப்பே..))

* எழுத்தாளர்களைப்பற்றி எழுதும் போது பொறாமை வேண்டாம். கிண்டல் வேண்டாம். எழுத்தில் தகுந்த மரியாதை தருவோம். உனக்கு பிடிக்காதா அவரை, அவரைப்பற்றி படிக்கவேண்டாம். மாற்றுக்கருத்தை மரியாதையான முறையில் தெரிவிக்கலாம். (இதையே அரசியல்வாதிகளைப் பற்றியும், பிற துறையினரையும் பற்றி எழுதும்போது கடைபிடிக்கலாம்). தகுந்த நேரம் வரும்போது நாமும் எழுத்தாளராகக்கூடும். மாறாக மாறுபட்ட சாத்தியங்களால் அவர்களைவிடவும் நாம் மேலேறிச்செல்ல அவர்கள் நம்மைப்பற்றி இதைப்போலவே எழுதவேண்டிய சூழல் ஏற்படும். இதையே சக பதிவர்களுக்கிடையேயான கருத்துமோதலிலும் கைக்கொள்ளலாம். தகாத வார்த்தைகளைக்கூறி சகதி வாரியிறைப்பதில் யாருக்கும் நன்மையில்லை. இனிய சொற்களிலும் மாற்றுக்கருத்தை தெரிவிக்கமுடியும். ஆகவே கனியிருப்ப காய்களைக்கொள்ள வேண்டாம்.

ஒரே மொக்கைப்பதிவுகளாக இருக்கிறது என்று சொன்னேனில்லையா?..

சினிமாவை எடுத்துக்கொள்ளுங்கள், ரெண்டு படம் நல்லாயிருந்தா பத்து படம் நமக்கு பிடிக்க மாட்டேங்குது. பிடிச்ச படத்திலேயும் ஏதோ பாட்டோ, சீனோ மொக்கையாக‌ போயிடுது. ஒரு இயக்குனரையே எடுத்துக்குங்க ஒரு படத்துல அள்ளிக்கொண்டு போய்விடுகிறார், இன்னொன்றில் காத்துவாங்கிவிடுகிறார். விகடன் எடுத்துக்கங்க.. ரெண்டு பகுதி நல்லாருக்குது. ரெண்டு பகுதி மொக்கையாக இருக்குது. அதுவும் யாருக்கோ பிடிக்கும். ஒரு எழுத்தாளர எடுத்துக்கங்க, ஒரு கதை இப்பிடி இன்னொன்று உண்டுமா? என்ற அளவில் இருக்கிறது. அடுத்த கதையில் பேஸ்த் அடிக்கவைக்கிறார். அதை மாதிரிதான் பதிவுலகமும் என எனக்கு பிடிக்காத பதிவுகளைப் பார்த்துக்கொள்ளும்போது நினைத்துக்கொள்கிறேன். எல்லா வலைப்பூக்களுமே சிறப்பாக இருக்கவேண்டியது என்ற அவசியமுமில்லை, ஒரே பதிவரின் எல்லா பதிவுகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற‌ அவசியமுமில்லை.

என்னாபா இது எங்கியோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்திட்டேனே.?பொழச்சுப்போங்க.. இத்தோட விடுறேன்.

இணைப்பு :
அவர்
: நிறைய குரங்குகளை வைத்து கவுதம் மேனன் படமெடுத்தா என்ன பேர் வைப்பார்? இவர் : 'வானரம் ஆயிரம்'

குமுதம், விகடனில் இது போல மொக்கை ஜோக்குகளைப்பார்க்கும் போது எனக்கு நானே இது போல ஜோக் சொல்லி மகிழ்ந்துகொள்வேன். இப்போதான் நீங்கயிருக்கீங்களே.

59 comments:

கார்க்கி said...

மீ த ஃபர்ஸ்ட்டா?

கார்க்கி said...

பகல்ல 90 அடிக்காதீங்கன்னா கேட்டாத்தானே..

கார்க்கி said...

எல்லாக் கடைக்கும் போனிங்க.. நம்ம கடைப் பக்கம் வரவே இல்லையே.. இல்ல வந்து டவுசர் கிழிஞ்சு சொல்லாமக் கொள்ளாம ஓடி வந்துட்டிங்களா?

கார்க்கி said...

//நேரம் வரும்போது பின்ந‌வீனத்துவம் தன்னால முன்னால வரும். //

அப்போ முன்நவீனத்துவம் ஆயிடுமா?

கார்க்கி said...

மீதிய வால் வந்து கன்டினியூ பண்ணுவாரு..

வால்பையன் said...

இதுவும் பதிவுலக அரசியல் தானா

வால்பையன் said...

//அடுத்து எழுத வேண்டிய பதிவு பற்றிய சிறு நினைவுக்குறிப்புகளை நுணுக்கி நுணுக்கி எழுதி வைத்திருப்பேன்//

நல்ல டாக்டரை பார்ப்பது நலம்

cable sankar said...

இதுக்கு நீஙக் சீரியஸான பதிவே எழுதியிருக்கலாம்.. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு

வால்பையன் said...

//இன்று அலுவலகம் விடுமுறை என்பதால் நெட் கிடையாது. //

ஆனாலும் பார் திறந்திருக்கே

வால்பையன் said...

//தங்கத்தை ஒருவழியாக நேற்று ஊருக்குப் பேக் செய்தாயிற்று.//

அப்படி ஒன்னும் பதிவுல சந்தோஷத்தை காணோமே

வால்பையன் said...

//டிவி அல்லது கேம் அல்லது கண்ணனுடன் அவுட்டிங்.. //

என்ன கேம்

வால்பையன் said...

//கண்ணன் பகலில் முடியாது சாய்ந்திரம்தான் என்று கூறி சொதப்பிவிட்டான். //

அவரு நல்லவரு போல

வால்பையன் said...

//பிற கடைகளை முடிந்த அளவு மேய்வது மற்றும் பின்னூட்டமிடுவது என முடிவு செய்து ஆரம்பித்தேன். //

நாங்கல்லாம் கடையா துறந்து வச்சிருக்கோம்

வால்பையன் said...

//தமிழ் மணத்தை திறந்து கண்ணில் பட்ட இணைப்புகள் அனைத்தையும் கிளிக்கி படிக்கத்துவங்கினேன். //

உடலுக்கும் , மனதுக்கும் கேடு

வால்பையன் said...

//ரெண்டு மணிநேரம். ..முடியல.. 5% தவிர டிவியே எவ்வளவோ தேவலாம் போல மொக்கைப்போட்டு தாளித்துவிட்டார்கள். //

நமக்கே போட்டியா

வால்பையன் said...

//இன்னும் கண்ணன் வருவதற்கு நேரமிருக்கிறது. //

இருந்தாலும் தாகம் அதிகமாயிருக்குமே

வால்பையன் said...

//அதற்குள் ஒரு பதிவு போட்டாலென்ன? என்ன எழுதலாம். //

கூடவே எத்தனை பேரை கொல்லலாம் என்றும் சேர்த்திருக்கலாம்

வால்பையன் said...

//மைல்டான பதிவுகள் தவிர சீரியஸான ஒன்றிரண்டு விஷயங்களும் //

ஒ சீரியசான மொக்கைகளா

வால்பையன் said...

//எழுதினால் எங்கே நீங்களும் சீரியஸாகி விடுவீர்களோ //

இப்பவே சீரியஸா தான் இருக்கோம்

பரிசல்காரன் said...

நெஜமாவே சூப்பரா எழுதியிருக்கீங்க ரைட்டர் தாமிரா.

வால்பையன் said...

//நீளமா எழுதினா தெறிச்சு ஓடிடுவாங்க.. தெரியும்தானே//

இதற்கு பெயர் தான் ஒப்புதல் வாக்குமூலம்

வால்பையன் said...

//சினிமா தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அதி தீவிர மீடியா. //

சில மாநிலங்களை தவிர்த்து மொத்த இந்தியாவுக்கும் அது அப்படி தான்

வால்பையன் said...

//எனக்கு ஒரு குட்டி மீன் கிடைச்சாக்கூட போதும்//

சுறா மீனே காத்துகிட்டு இருக்கு

வால்பையன் said...

//நேர்மையான ரசனையை ஒட்டியதாகவே இலக்கியம் இருக்கமுடியும். //

ரொம்ப காமெடி பண்றிங்க

வால்பையன் said...

//எனக்கு நானே இது போல ஜோக் சொல்லி மகிழ்ந்துகொள்வேன். //

கஷ்டம் தான்

வால்பையன் said...

//கார்க்கி said...
மீதிய வால் வந்து கன்டினியூ பண்ணுவாரு..//

இந்த அனுமார் வால் போதுமா

சந்தனமுல்லை said...

:-).நல்லாவே ஆராய்ச்சி செய்றீங்க..
இனிமே எதுக்கும் ரெண்டு தடவை யோசிங்க..தங்கத்தை ஊருக்கு கண்டிப்பா அனுப்பனுமான்னு..;-)..ஏன்னா தங்கம்ஸ் இருக்கும்போது எழுதற பதிவுகள்ல நகைச்சுவை தூக்கலா இருக்கும்..:-))

தாமிரா said...

நன்றி கார்க்கி.!
நன்றி வால்.!
நன்றி கேபிள்.!
நன்றி பரிசல்.! (ரைட்டர் தாமிரா// இன்னா தல நக்கலா? எப்பிடி கண்டுபுடிச்சேன் பாத்தியா?)

சரவணகுமரன் said...

//ஒரே மொக்கைப்பதிவுகளாக இருக்கிறது என்று சொன்னேனில்லையா?//

எப்படி இப்படியா?

சும்மா சொன்னேன். :-)

அரசியல்'ங்கற கலை & தொழில விட்டுடீங்க.

தாமிரா said...

நன்றி முல்லை.! (ஒரு நாள் கூட இன்னும் ஆவலியே.. ஏன் இந்த கொல வெறி? ஒரு வாரம் போனா தன்னால போன்ல கொஞ்ச ஆரம்பிச்சு, எப்ப வருவா? எப்ப வருவானு ஆகிப்போயிடும்கிறது வேற விஷயம்)

தாமிரா said...

வாங்க குமரன், தாக்கிட்டீங்களே, லேபிளை பார்க்கவும்.! நான் அனாவசியமாக மொக்கை என்ற லேபிள் போடுவதில்லை.

narsim said...

//எனக்கு நானே இது போல ஜோக் சொல்லி மகிழ்ந்துகொள்வேன். இப்போதான் நீங்கயிருக்கீங்களே//

அதுவும் கரெக்ட்தான் தல..

கலக்கல் பதிவு..

நர்சிம்

ரோஜா காதலன் said...

//குமுதம், விகடனில் இது போல மொக்கை ஜோக்குகளைப்பார்க்கும் போது எனக்கு நானே இது போல ஜோக் சொல்லி மகிழ்ந்துகொள்வேன். இப்போதான் நீங்கயிருக்கீங்களே.//

அட்ராசக்கை !

ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு கொலைவெறி கூடாது !

மணிகண்டன் said...

********** பிற கலைகளை விடவும் எழுத்துத்துறை பற்றி மட்டும்தான் நாம் விவாதிக்க முடியும் (நாம் செய்வதைப்பற்றிதானே பேச முடியும்). *******

அப்புறம் எல்கேஜில நோட்டுபுக்குல ABCD எழுதற பசங்க எல்லாம் எதை பத்தி விவாதிப்பாங்க ?

வால்பையன் :- உங்கள லக்கி சொன்னாலும் சொன்னாரு. அதுலேந்து ஒவ்வொரு வரிக்கும் தனி பின்னூட்டம் போட ஆரம்பிச்சுடீங்க !!!

கும்க்கி said...

அடப்பாவி கண்ணா..கண்ணா.. இந்தாளை காலையிலேயே வந்து எங்கியாச்சும் தள்ளிகினு போகப்படாதா?
நாங்கதான் மாட்டுனமா?
அந்தக்கா திரும்பி வாரதுக்குள்ள இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதோ.........

வெண்பூ said...

//தங்கத்தை ஒருவழியாக நேற்று ஊருக்குப் பேக் செய்தாயிற்று.//

அப்படி போடு.. ம்ம்ம்ம்ம்... ஒரே சந்தோசம்தான்.... என்னா எழுதுறது எதை விடுறதுன்னு தெரியாம தவிக்கறது புரியுது... :)))

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதை படிக்கும்போது சந்தமுல்லை சொல்லிருக்கறதுதான் சரின்னு தோனுது

Anonymous said...

//எல்லா வலைப்பூக்களுமே சிறப்பாக இருக்கவேண்டியது என்ற அவசியமுமில்லை, ஒரே பதிவரின் எல்லா பதிவுகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற‌ அவசியமுமில்லை.//

என் கருத்தும் இதுதான் நல்லா இருந்தாப் படிக்கனும். இல்லன்னா அடுத்த பதிவுக்குக் காத்திருக்கனும்.

Saravana Kumar MSK said...

//பின்னர் வழக்கம் போல ரெகுலர் கடைகளுக்கே போய் படித்தும் பின்னூட்டமிட்டும் திரும்பினேன். //

அண்ணா. என்னங்கணா, என் வலைப்பக்கம் நீங்க வரவே இல்லை.. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

Saravana Kumar MSK said...

தாமிரா அண்ணா, பி.ந மேல ஏன் இந்த கொலைவெறி ??

Saravana Kumar MSK said...

நீங்க சொல்ற சில கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.. :))

தமிழ் பிரியன் said...

மனிதர்களின் உணர்வுகளுக்கு எல்லை இல்லையே.. அதனால் தான் பதிவில் இருந்து அச்சு ஊடகங்களுக்கும், அச்சு ஊடகங்களில் இருந்து சினிமாவுக்கு தாவ முயற்சிக்கிறோம். இதில் தவறு ஏதுமில்லை.

தமிழ் பிரியன் said...

//எல்லா வலைப்பூக்களுமே சிறப்பாக இருக்கவேண்டியது என்ற அவசியமுமில்லை, ஒரே பதிவரின் எல்லா பதிவுகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற‌ அவசியமுமில்லை.//
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

கயல்விழி said...

என்னாச்சு தாமிரா, தங்கமணி பதிவுகளை எல்லாம் விட்டு சீரியஸ் பதிவு எழுத ஆரம்பிச்சாசா?

நல்ல கருத்துக்கள், பெரும்பாலான கருத்துக்களை ஒப்புக்கொள்கிறேன்.

அனைவரும் ப்ரிண்ட் மீடியாவுக்காக எழுதமாட்டார்கள் என்று நினைக்கிறேன், சிலர் சும்மா ரிலாக்சேஷனுக்காகவும்(எழுதுவது நல்ல தெரப்பி), பொழுதுபோகவும் கூட எழுதுவார்கள்.

Anonymous said...

தாமிரா,
வேலன் அண்ணாச்சி சொன்ன மாதிரி புடிச்சா படிக்கலாம்.
செப்டம்பர் 17m தேதி ஆனந்த விகடன் இதழில் 'அமிர்தவர்ஷணி' ன்ற கதை, எழுதியவர் 'தாமிரா' ன்னு பார்த்தேன். அந்த கதை நீங்க எழுதியதா?

மனோ

Anonymous said...

//செப்டம்பர் 17m தேதி ஆனந்த விகடன் இதழில் 'அமிர்தவர்ஷணி' ன்ற கதை, எழுதியவர் 'தாமிரா' ன்னு பார்த்தேன். அந்த கதை நீங்க எழுதியதா?//

நானும் இதையே கேட்க நினைத்தேன். நீங்கள் எழுதிய கதையா அது?

//பத்திரிகைகளுக்கு தாவ நேரம் பார்த்துக்கொண்டு உறுமீனுக்காக‌ போல காத்துக்கொண்டிருக்கிறது. (எனக்கு ஒரு குட்டி மீன் கிடைச்சாக்கூட போதும்). எழுத்தாளர்களுக்கு எப்படி சினிமாவோ அதைப்போலவே பதிவர்களுக்கு பிரின்ட் மீடியா. அல்லது முதலில் வில்லன், அப்புறம் ஹீரோ, அப்புறம் சிஎம் என்பது போலாகவும் இருக்கலாம்.//

புதுகை.அப்துல்லா said...

சந்தனமுல்லை said...
:-).நல்லாவே ஆராய்ச்சி செய்றீங்க..
இனிமே எதுக்கும் ரெண்டு தடவை யோசிங்க..தங்கத்தை ஊருக்கு கண்டிப்பா அனுப்பனுமான்னு..;-)..ஏன்னா தங்கம்ஸ் இருக்கும்போது எழுதற பதிவுகள்ல நகைச்சுவை தூக்கலா இருக்கும்..:-))

//

மொத மொத மொதல்ல இதுக்கு ஓரு ரிப்பீட்டப் போட்டுக்குறேன்.

அண்ணி ஊருக்கு போனதில் இருந்து போட்டுக் குடுக்கும் பொழப்பு இல்லாம எனக்கும் போர் அடிக்குது
:))))

புதுகை.அப்துல்லா said...

ரைட்டர் தாமிரா குவாட்டரோடு டைட்டர் ஆயிருக்கலாமோ?

புதுகை.அப்துல்லா said...

நமக்கு பத்திரிக்கை ஆசையெல்லாம் இல்லண்ணே. ஓருவாட்டி கல்யாணம் பண்ணதே போதும் :)

கார்க்கி said...

ஹை... மீ த 50..

பாபு said...

தங்கமணி வீட்டுல இல்லேன்றிங்க,கிடச்ச சந்தர்ப்பத்தை சரியா use பண்ணாம,இப்படி பதிவுலக அரசியல்,அது,இது என்று ,போங்க சார் ஜாலியா இருங்க

தாமிரா said...

நன்றி நர்சிம்.! (முந்தைய பதிவில் உங்களது பதிலை எதிர்பார்த்தேன், படிச்சீங்களா?)
நன்றி ரோஜா.!
நன்றி மணிகண்டன்.!
நன்றி கும்கி.! (யோவ் மெயிலுக்கு வரப்போறீங்களா.. இல்லையா?)
நன்றி வெண்பூ.! (நானும் அப்பிடிதான் நினைத்தேன். ஆனா ஒரு பிராப்ளம். அடுத்த பதிவில் பார்த்துக்கொள்ளவும்)
நன்றி ராப்.!
நன்றி வேலன்.! (ஓ.. காத்துவேற கிடக்குணுமா? நடக்குற காரியமா அது?)

தாமிரா said...

நன்றி MSK.! (பின்னூட்டம் போடுவது பற்றி நான் சொன்னதில் சில விட்டுப்போயின.. பின்னூட்டம் போட வாய்ப்பாக ஏதும் தோன்றும் போதுதான் போடுகிறோம். ரிப்பீட்டு போடுவதன் ரகசியமும் இதுதான். சில பதிவுகளை படித்தவுடன் உதாரணமாக உங்களோட‌து.. அப்படியே மயங்கிவிடுவதால் பின்னூட்டமிடாமலே வந்துவிட நேர்கிறது)

நன்றி தமிழ்.!

நன்றி கயல்.! (சும்மா ரிலாக்சேஷனுக்காகவும்// அப்ப நான் எதுக்காக எழுதுறேன்னு நினைச்சீங்க?)

நன்றி அனானி.!

நன்றி சதா.! (101வது முறையாக பதில் தருகிறேன். அவர் நானில்லை)

நன்றி அப்துல்.! (யோவ் இன்னா.. கூட்டு சேந்து கலாய்க்கிறீங்களா? நீங்க மட்டும்தான் சீரியஸ் எழுதுவீங்களா? நாங்க எழுதக்கூடாதா? பரிசலே நன்னாருக்குனு சொல்லீட்டாரு..)

நன்றி பாபு.! (ஜாலி பதிவுகள் தொடர்கின்றன பாபு, தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும்)

கயல்விழி said...

//நன்றி கயல்.! (சும்மா ரிலாக்சேஷனுக்காகவும்// அப்ப நான் எதுக்காக எழுதுறேன்னு நினைச்சீங்க?)//

நீங்க இலக்கியா சேவை செய்ய எழுதறீங்கனு நினைச்சேன், இல்லையா? JK :)

Mahesh said...

நல்ல பதிவு தாமிரா... வெரைட்டியா தாக்கறீங்களே...

PS:இந்த ஆனந்த விகடன் கதை உங்களுதான்னு திருப்பூர் பதிவர் சந்திப்புல கேட்டேன். பரிசல் அது நீங்க இல்லன்னு சொன்னாரு.

Saravana Kumar MSK said...

//தாமிரா said...
நன்றி MSK.! (பின்னூட்டம் போடுவது பற்றி நான் சொன்னதில் சில விட்டுப்போயின.. பின்னூட்டம் போட வாய்ப்பாக ஏதும் தோன்றும் போதுதான் போடுகிறோம். ரிப்பீட்டு போடுவதன் ரகசியமும் இதுதான். சில பதிவுகளை படித்தவுடன் உதாரணமாக உங்களோட‌து.. அப்படியே மயங்கிவிடுவதால் பின்னூட்டமிடாமலே வந்துவிட நேர்கிறது)//

அண்ணா.. இது சமாளிபிகேஷன்னுங்க்னா.. :))

மங்களூர் சிவா said...

//
என்னாபா இது எங்கியோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்திட்டேனே.? பொழச்சுப்போங்க.. இத்தோட விடுறேன்.
//

பதிவின் மிகச்சிறந்த வரிகள். ரசித்து படித்தேன்!

:)))))))))))))

AMIRDHAVARSHINI AMMA said...

இனிய சொற்களிலும் மாற்றுக்கருத்தை தெரிவிக்கமுடியும்.

NICE

தாமிரா said...

நன்றி மகேஷ்.!
நன்றி மங்களூர்.!
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.!