Friday, October 10, 2008

எவர்கிரீன் : கமல்ஹாசன்

ஒரு முக்கியமான விஷயம் இருந்தாலும் முதலில் தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம்.! பொது மக்களுக்கும் பதிவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இவர்களின் ரசனை வேறு என்றார்கள் சில நண்பர்கள். ஆகவே முதல் பிரிவில் ரஜினி முதலில் வருவதற்கும், இரண்டாவது பிரிவில் விஜய் முதலில் வருவதற்கும் வாய்ப்பு குறைவே என்றார்கள். ஆனால் அந்த கூற்றை பொய்யாக்கும் படி இரண்டாவது பிரிவில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் பட்டத்தை வெல்கிறார். முதல் பிரிவிலும் கமல்ஹாசன் முதலிட‌த்தைப்பிடிக்க வெறும் மூன்று ஓட்டுகளே அதிகம் வாங்க முடிந்தது. ஒட்டு மொத்தமாக முதலிடத்தை ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்திலேயே விஜயிடமிருந்து பறிக்க முடிந்தது. ஆகவே ஏகோபித்த மக்களின் உணர்வுகளையே பதிவுலகமும் பிரதிபலிக்கிறது என நாம் உணரலாம்.

இறுதியாக 78 வாக்குகள் பெற்று ஒற்றை ஓட்டு வித்தியாசத்தில் கமல்ஹாசன் 'ஆல் டைம் பேவரிட்' பட்டத்தை சூட்டிக்கொள்கிறார். முதல் பிரிவில் மூன்றே வாக்குகள் வித்தியாசத்தில் ரஜினி இரண்டாமிடத்திலும் (மொத்தத்தில் மூன்றாவது இடம்), அதிக வாக்குகள் வித்தியாசம் என்றாலும், எதிர்பார்த்தது போலவே 20 வாக்குகள் பெற்று கார்த்திக் மூன்றாமிடத்திலும் இருக்கிறார்கள். அர்ஜுன், பிரபு, சரத் ஆகியோர் பரிதாபமாக டெபாஸிட் இழக்கிறார்கள்.


இரண்டாவது பிரிவில் 77 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்திலும், ரஜினியை இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து மொத்தத்தில் இரண்டாமிடத்தையும் பிடிக்கிறார் விஜய். அஜித், சூர்யா தவிர யாரும் இந்த பிரிவில் தலைகாட்ட முடியாதபடிக்கு ஓட்டு வாங்கி தோற்கிறார்கள். சூர்யா இரண்டாமிடம் (49), அஜித் மூன்றாமிடம் (29). பிரஷாந்த், ஜெயம்ரவி, ஜீவா, பிரசன்னா, விஷால் ஆகியோர் சொதப்பல் ஓட்டுகள் வாங்கினாலும், சூப்பர்ஸ்டார் மருமகன் என்ற பிளஸ் கூட வேலை செய்யாமல் தனுஷ் ஒரு ஓட்டு கூட வாங்காமல் பரிதாபமாக வெளியேறுகிறார். இவரே நம் அனைத்து தேர்தல்களிலும் 'டக்' அடித்த ஒரே நபர் பெருமையை பெறுகிறார். (பொல்லாதவன் நல்லாருந்திச்சுங்க..)


*****

இப்போ அந்த முக்கிய விஷயத்துக்கு வாருங்கள்.

அலுவலகத்தில் நம் ஆணிபுடுங்கும் திறனை மெச்சி ஒரு சிறப்பு பயிற்சிக்கும் (சிஸ்டமேடிக்காக ஆணி புடுங்குவது எப்படி?)அதையொட்டிய பிராஜக்டுக்கும் தேர்வுசெய்யப்பட்டுள்ளேன். அடுத்த வாரம் முழுதும் கிளாஸ். பின்னர் நவம்பர் இறுதியில் மீண்டும் ஒரு வாரம். இடைப்பட்ட காலத்தில் பிராஜக்ட். ஆகவே குறிப்பிட்ட இரண்டு வாரங்கள் வலையுலகம் வருவது மிக சிரமம். தவிர இடப்பட்ட காலத்தில் வந்தாலும் எந்தளவு படிக்க, பதிவிட முடியும் என தெரியவில்லை. (பரிசல், வெண்பூ, அப்துல், தமிழ்.. கண்ண தொடச்சுக்குங்க, அழுவாதீங்க.. என்ன பண்றது நம்ப கையில என்ன இருக்குது? கார்க்கி மற்றும் சிலர் சந்தோஷத்தில் குதிப்பது தெரிகிறது..).

இருப்பினும் முடிந்த அளவு எட்டிப்பார்ப்பேன். இங்கே சென்னையில்தான் பயிற்சி என்பது சிறு ஆறுதல். தங்கம் வீட்டிலில்லாத சமயத்தில் வீட்டிலும், வலையிலும் குஜாலாக இருக்கலாம் என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு பேரிடி. இருப்பினும் நைட் நைன்டிக்கு பிரச்சினை இருக்காது என்றே நம்புகிறேன் (அப்துல், கும்கி கவனிக்கவும்). முழு வீச்சோடு மீண்டும் வருவேன். அதற்குள் யாராவது மறந்தது மாதிரி தெரிந்ததோ.. தொலைத்துவிடுவேன்.. ஜாக்கிரதை.!

இப்போதைக்கு ஆரம்பத்தில் நான் எழுதி எனக்கு மிகப்பிடித்த கூட்டம் வராத சில பதிவுகளை இங்கே தருகிறேன். மீண்டும் வரும்வரை இவற்றையும், இன்னும் பிறவற்றையும் படித்துக்கொண்டிருக்கவும். படித்து பின்னூட்டமிடவும். பின்னூட்டம் நினைப்பது போல வராவிட்டால் மீள்பதிவாகும் ஆபத்து இருப்பதை உணர்க.

ரயில் நிலையத்தில்..

தேங்காயெண்ணையும்.., அதன் தொடர்ச்சியும்..

எழுத்தாளர்களுடன்..

(மீண்டும் சொல்கிறேன். நான் வரமாட்டேன் என்று சொல்லவில்லை, எப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்றுதான் சொல்கிறேன், நிறைய குட்டிப்பதிவுகளுக்கு வாய்ப்பு இருக்கலாம். ஏதும் முக்கியமான‌ விஷயங்கள் இருந்தால் மெயிலில் தெரிவியுங்கள்)

22 comments:

வெண்பூ said...

ட்ரெயினிங்கா... ம்ம்ம்ம். கலக்குங்க.. முடிஞ்சா அப்பப்ப எட்டிப்பாருங்க..

நெஜமாவே டிரெயினிங்கா இல்ல தங்கமணி ஊர்ல இல்லன்னு வேற எதாவது மேட்டரா?? :)))))

தமிழ்ப்பறவை said...

all the best thala...training+ninety piramaatham....

Anonymous said...

சந்தோஷமாக போய் விட்டு வாருங்கள் நண்பரே.

ச்சின்னப் பையன் said...

//நெஜமாவே டிரெயினிங்கா இல்ல தங்கமணி ஊர்ல இல்லன்னு வேற எதாவது மேட்டரா?? :)))))//

ரிப்பீட்டே....... :-)))

Mahesh said...

ஆஹா... போய் நல்ல புள்ளயா ட்ரெய்னிங்க் முடிச்சுட்டு வாங்க.... வந்து ட்ரெய்னிங்க் பத்தி ஒரு படிவு போட்ருங்க...

விஜய் ஆனந்த் said...

:-))))...

All the best!!!!

(நா என்னைச் சொன்னேன்!!!)

narsim said...

வந்த உடனே ட்ரெயினிங்க பத்தி, பத்தி பத்தியா எழுதிவீங்கனு நம்ம்பி அனுப்புறோம்..

நர்சிம்

தமிழ் பிரியன் said...

///நிறைய ’குட்டி’ப்பதிவுகளுக்கு வாய்ப்பு இருக்கலாம். ///

அண்ணே!டிரெயினிங்கில் கவனமா இருங்க.. அண்ணி இல்லாத நேரத்தில் ஏதாவது குட்டி, புட்டின்னு இருந்தீங்கன்னா, மடியில் அப்துல்லா என்னும் ஸ்பையை கட்டி வச்சு இருக்கீங்க கவனமா இருங்க

தமிழ் பிரியன் said...

பத்மினிக்கு சரமாரியா கள்ள ஓட்டு போட்டது போல் விஜய்க்கு கள்ள ஓட்டு போட்டமே? அதை சொல்லலியா?
(ஹிஹிஹி ஓட்டே போடலைப்பா.. நாம ஒன்லி ஆண்ட்டி பண்டாரம் தான்)

Saravana Kumar MSK said...

//வெண்பூ said...
ட்ரெயினிங்கா... ம்ம்ம்ம். கலக்குங்க.. முடிஞ்சா அப்பப்ப எட்டிப்பாருங்க..

நெஜமாவே டிரெயினிங்கா இல்ல தங்கமணி ஊர்ல இல்லன்னு வேற எதாவது மேட்டரா?? :))))).//

ரிப்பீட்டேய்..

Saravana Kumar MSK said...

//நான் வரமாட்டேன் என்று சொல்லவில்லை, எப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்றுதான் சொல்கிறேன், //

"சூப்பர் ஸ்டார்" ரஜினி ரசிகர்களை இங்கு வருமாறு கேட்டு கொள்கிறேன்..

Saravana Kumar MSK said...

//தங்கம் வீட்டிலில்லாத சமயத்தில் வீட்டிலும், வலையிலும் குஜாலாக இருக்கலாம் என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு பேரிடி. //

விதி வலியது.. :((

கார்க்கி said...

பார்த்து பத்திரமா புடுங்குங்க... வலையுலகத்த காப்பாத்த‌த்தான் நானிருக்கேனில்ல...

முரளிகண்ணன் said...

super

பரிசல்காரன் said...

ஆல் த பெஸ்ட்டூ!!

தாமிரா said...

அனைவருக்கும் என்னை அனுப்பி வைப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம்.!(சும்மா லுலுலாயிக்கு..) நன்றி தோழர்களே. வாரம் இரண்டு (குட்டிப்)பதிவாவது போட முயல்வேன். உங்கள் கடைக்கு வரவில்லை யெனில் கோவிக்கவேண்டாம் (இருந்தாலும் வந்து கிளிச்சுட்டுதான் இருந்தீரு..!).. உங்களையெல்லாம் நம்பிதான் வலையுலகை ஒப்படைச்சுட்டு போறேன். கூடிய சீக்கிரம் 'ட்ரெயினிங் : ஒரு லைவ் ரிபோர்ட்' டோடு திரும்பி வருகிறேன். பை.

கார்க்கி said...

வலையிலே விஜய்க்கு இவ்வளவு மவுசு என்றால்????? லயோலா சொன்னதிலும் உண்மை இருக்குப் போல..

புதுகை.அப்துல்லா said...

//(பரிசல், வெண்பூ, அப்துல், தமிழ்.. கண்ண தொடச்சுக்குங்க, அழுவாதீங்க..
//

என்னாது அழுவுறதா? என்னையும் கார்க்கி லிஸ்டில் சேர்த்துக்கங்கப்பு
:)))))

தமிழன்... said...

கார்த்திக் உள்ளே வருவார் என்பது நான் எதிர்பார்த்த ஒன்று...

தமிழன்... said...

ஆனா நான் ஓட்டுப் போடலை...:)

தமிழன்... said...

வாழ்த்துக்கள் பயிற்சிக்கு போறதுக்கு...:)

தமிழன்... said...

அப்ப நீங்க அலுவலகத்தில வேலை செய்யுறிங்க அப்படித்தானே...;)