Thursday, October 16, 2008

பிராஸஸ், மீன், சிக்மா...

முதலில், பயிற்சி வகுப்புதானே.. எத்தனை பார்த்திருக்கிறோம் என்ற தெனாவெட்டில்தான் சென்றேன். கடைசி பெஞ்சை புடிச்சிக்கலாம். அங்க நமக்கு கம்பெனி குடுக்க ரெண்டு பேரு உட்கார்ந்திருப்பார்கள். ஆபீஸ் டென்ஷன் இல்லாததால் ரொம்ப கூலாக முதல் நாள் போட்ட 180யின் (ராத்திரி 1.30 வரைக்கும் செஷன் சென்றதால் 90 என்பது 180 ஆகிறது) விளைவாக கண்கள் சொக்கினாலும் ரொம்ப கவலைப்பட வேண்டியதில்லை. அடுத்த எழுதவிருக்கும் பதிவுகள் குறித்து சிந்தித்து குறிப்பெடுத்து வைக்கலாம். கிடைக்கும் மூன்று இடைவேளைகள் தவிர மேலும் இரண்டு தடவைகள் இடையே எழுந்து 'தம்'முக்காக போய்விடலாம். ஆபீஸுக்கு போகாமல் 4 மணிக்கே வீட்டுக்கு போயிடலாம். மதிய உணவு சும்மா ஜிலுஜிலுனு வெரைட்டியாக வெட்டலாம் என்றெல்லாம் கனவு கண்டுகொண்டே சென்றேன்.

பரங்கிமலை அருகே ஒரு நட்சத்திர விடுதியில் பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மதிய உணவு தவிர வேறெதுவுமே நான் நினைத்ததைப்போல நடக்கவில்லை. இன்றோடு நான்கு நாட்கள் முடிந்துள்ளது. இன்னும் ரெண்டு நாட்கள். பின்னர் இதைப்போலவே நவம்பரிலும் ஒரு வாரம். பத்தாதென்று நீங்கள் இல்லாமல் இங்கே ஒண்ணுமே நடக்கமாட்டேங்குது தல, எப்ப வருவீங்க.. எப்ப வருவீங்க.. அப்பிடினு ஆபீஸிலிருந்து (இன்னொரு ஆள் கல்யாணம்னு லாங் லீவுல போயிட்டான்) கால் மேல கால். ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்துக்கு டிக்கெட் போட்டு வைத்துக்கொண்டு தயாராயிருக்கிறார்கள்.

அது கிடக்கட்டும், பயிற்சிக்கு வாருங்கள். அப்படியே சண்டக்கோழி படத்தில் ட்யூஷன் போய்திரும்பும் மீரா ஜாஸ்மினின் அங்கலாய்ப்பை நினைவு கூறுங்கள். "ஒரே நாளில் இந்த வாத்தியாருங்க எல்லாத்தையும் மண்டையில திணிக்கப்பார்க்குறாங்கப்பா, எவன் கண்டுபிடிச்சான் இந்த கிளாஸு, எக்ஸாம், ரிஸல்ட்டுனு.. அய்யய்யய்ய.." என் நிலைமையும் கிட்டத்தட்ட அதேதான்.

பத்தே பயனாளிகள், இரண்டு ஆசிரியர்கள். பத்து நிமிட பயிற்சிக்கு பின்னர் 15 கேள்விகள். ஒரு நிமிடம் கவனிக்காவிட்டாலும் மானம் போய்விடும் சூழல். வ‌குப்பு போலில்லாமல் கலந்துரையாடல் போல வேறெதையும் சிந்திக்கவிடாத மிக நெருக்கமான பயிற்சி. பத்தாதுன்னு ரெண்டு மணி நேரம் தாங்குற மாதிரி வீட்டுப்பாடம் வேற (இது கொஞ்சம் ஓவருங்க..). காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை என் காதில் விழுவதெல்லாம்...

ம்யு, சிக்மா, ப்ராஸஸ், மீன், டீவியேஷன், டெல்டா, மெஷர்ஸ், ரிஜக்ஷன், n=(2*s/v)....

எனது தங்கமணியில்லாத நாட்கள் எப்படி வேஸ்ட்டாக போய்க்கொண்டிருக்கிறது பாருங்கள், யாராவது பரிதாபப்படுங்கப்பா..

37 comments:

கார்க்கி said...

மீ த ஃபர்ஸ்ட்

கார்க்கி said...

அய்யோ பாவம் (இதை குஷி மும்தாஜ் ஸ்டைலில் படிக்கவும்)

பரிதாபபட்டேங்க..

Saravana Kumar MSK said...

//எனது தங்கமணியில்லாத நாட்கள் எப்படி வேஸ்ட்டாக போய்க்கொண்டிருக்கிறது பாருங்கள், யாராவது பரிதாபப்படுங்கப்பா..//

விதி வலியதுங்க்னா.. :)

விஜய் ஆனந்த் said...

// கார்க்கி said...

அய்யோ பாவம் (இதை குஷி மும்தாஜ் ஸ்டைலில் படிக்கவும்) //

இன்னொரு முறை குஷி மும்தாஜ் ஸ்டைலில் படிக்கவும்.

அட...நானும் பரிதாபப்பட்டேங்க....

விஜய் ஆனந்த் said...

// எனது தங்கமணியில்லாத நாட்கள் எப்படி வேஸ்ட்டாக போய்க்கொண்டிருக்கிறது பாருங்கள் //

ஹா ஹா ஹா...

நீதி : என்னதான் திட்டமெல்லாம் போட்டு தங்கமணிய பேக் பண்ணாலும்...கிடைக்க வேண்டியது மட்டும்தான் கிடைக்கும்....நடக்க வேண்டியது மட்டும்தான் நடக்கும்...

முரளிகண்ணன் said...

use these sigma etc for your new posts
ha ha ha ha ha ha
:-))))))))))))))

தமிழ் பிரியன் said...

பாவம்ப்பா.. எல்லாரும் வாங்க.. தாமிரா செமினாரில் இருக்கும் இந்த நேரத்தை செமயா ஜாலியா கொண்டாடலாம்.

தமிழ் பிரியன் said...

///ம்யு, சிக்மா, ப்ராஸஸ், மீன், டீவியேஷன், டெல்டா, மெஷர்ஸ், ரிஜக்ஷன், n=(2*s/v)..../////
இதுல மீன் மட்டும் பிரகாசமா புரியுது... மத்ததெல்லாம் ஹிஹ்ஹிஹி

Anonymous said...

தாமிரா,

உங்க தங்கமணி அங்காளம்மனுக்கு வேண்டியிருப்பாங்க போல.

அதான் அப்படியே பலிச்சுருச்சு.

rapp said...

//கால் மேல கால்//

யார் கால் மேல யார் கால்?

rapp said...

//ம்யு, சிக்மா, ப்ராஸஸ், மீன், டீவியேஷன், டெல்டா, மெஷர்ஸ், ரிஜக்ஷன், n=(2*s/v)....//

என்ன சார் இப்படி கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் பேசறீங்க?:):):)

வெண்பூ said...

//
எனது தங்கமணியில்லாத நாட்கள் எப்படி வேஸ்ட்டாக போய்க்கொண்டிருக்கிறது பாருங்கள், யாராவது பரிதாபப்படுங்கப்பா..
//

கண்டிப்பாக கிடையாது... :))

உருப்படியா ட்ரெய்னிங்க கவனிங்க..

அது சரி said...

//பிராஸஸ், மீன், சிக்மா//

மீனு சிக்கினதும் ஒழுங்கா பிராஸஸ் பண்ணா, கருவாடு கெடச்சிறப் போவுது..இதுக்கு எதுக்கு நட்சத்திர விடுதில ரூம் போட்டு யோசிக்கணும்?

ஒண்ணியும் பிரியல நைனா...

சந்தனமுல்லை said...

ம்ம்..நல்லா வேணும்..:-))..தங்கமணியை ஊருக்கு பேக் பண்ணீங்கல்ல!!

SK said...

:-) :-)

நான் கூட ஏதோ மீன் ப்ரசெச்சிங் பத்தி சொல்ல போறீங்கன்னு நெனச்சேன். :-)

வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

//முதலில், பயிற்சி வகுப்புதானே.. எத்தனை பார்த்திருக்கிறோம்//

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்,
வகுப்புக்கு என்னைக்கி போயிருக்கிறோம்

வால்பையன் said...

//கடைசி பெஞ்சை புடிச்சிக்கலாம்.//

எனக்கும் ஒரு சீட்டு

வால்பையன் said...

//அங்க நமக்கு கம்பெனி குடுக்க ரெண்டு பேரு உட்கார்ந்திருப்பார்கள்.//

பரிசலும், கார்க்கியுமா

வால்பையன் said...

//ஆபீஸ் டென்ஷன் இல்லாததால் ரொம்ப கூலாக முதல் நாள் போட்ட 180யின்//

அப்போ டென்ஷனானா எவ்வளவு போகும்

வால்பையன் said...

//அடுத்த எழுதவிருக்கும் பதிவுகள் குறித்து சிந்தித்து குறிப்பெடுத்து வைக்கலாம்.//

பொறி இப்படி தான் ஆரம்பிக்குதா

வால்பையன் said...

//கிடைக்கும் மூன்று இடைவேளைகள் //

அப்போ மொத்தம் மூணு சினிமாவா

வால்பையன் said...

//இரண்டு தடவைகள் இடையே எழுந்து 'தம்'முக்காக போய்விடலாம்.//

பொது இடம் இல்லையா

வால்பையன் said...

//ஆபீஸுக்கு போகாமல் 4 மணிக்கே வீட்டுக்கு போயிடலாம்.//

கட்டடிச்சு வகுப்பு போற ஆசாமியை முதல் முதல் இப்போ தான் பார்க்கிறேன்

வால்பையன் said...

//மதிய உணவு சும்மா ஜிலுஜிலுனு வெரைட்டியாக வெட்டலாம்//

அதென்ன ஜிலுஜிலு

வால்பையன் said...

//பரங்கிமலை அருகே ஒரு நட்சத்திர விடுதியில்//

மில்டரி புள் அங்கே கிடைக்குமாம்

வால்பையன் said...

//நான் நினைத்ததைப்போல நடக்கவில்லை. //

ஒரு படம் கூடவா ஓட்டவில்லை. பக்கத்திலேயே ஜோதி தியேட்டர் இருக்குமே

வால்பையன் said...

//கால் மேல கால்.//

படையப்பா நீலாம்பரி ஞாபகத்துக்கு வருது

வால்பையன் said...

//ம்யு, சிக்மா, ப்ராஸஸ், மீன், டீவியேஷன், டெல்டா, மெஷர்ஸ், ரிஜக்ஷன், n=(2*s/v)....//

இதெல்லாம் என்ன
"அந்த" படத்துல நடிச்ச பொண்ணுங்க பேரா

வால்பையன் said...

//யாராவது பரிதாபப்படுங்கப்பா..//

சந்தோசத்தை எப்படி கொண்டாடுரதுன்னே தெரியல

வால்பையன் said...

30

தாமிரா said...

ஒரு வாரம் கேப்பு விட்டாலே பதிவு காத்தாடிடும்கிறது நெஜம்தான். இன்னும் ரெண்டு நாள்தான் வந்துடுவேன். இப்போதைக்கு வால்பையன் இல்லைன்னா பின்னூட்ட மானம் கப்பலேறியிருக்கும்னு நினைக்கிறேன். அவருக்கு சிறப்பு நன்றிகள்.!

தாமிரா said...

நன்றி கார்க்கி (மும்தாஜின் பாவம்? ரசித்தேன்)

நன்றி MSK.!
நன்றி விஜய்.! (இதுல நீதி வேறயா?)
நன்றி முரளி.! (துறை சார்ந்த பதிவுதானே? வரும் பத்துக்கு ஒன்று என்ற கணக்கில்..)

நன்றி தமிழ்.! (எனது சிறை, உங்களுக்கு கொண்டாட்டமா? இருங்க வெளிவந்து கொள்கிறேன்..)

தாமிரா said...

நன்றி வேலன்.! (இன்னா மேறி திங்க் பண்றீங்க தல..)

நன்றி ராப்.!
நன்றி வெண்பூ.! (இன்னிக்கு வெளிய‌ விடும் போது ம‌ணி 6.50. ம‌ன‌சைத்தொட்டு சொல்ல‌ணும், பாவமா தெரிய‌ல‌..)
நன்றி அதுசரி.!

நன்றி முல்லை.! (உங்க அழைப்பைக்கூட பாக்காமல் நேத்து பின்னூட்டம் போட்டுட்டு வந்துட்டேன், முடிந்தால் இன்றே அல்லது நாளை கண்டிப்பாக பதிவு வரும்..)

ந‌ன்றி SK.!

gopinath said...

On a lighter note, there is a recognition in the US, that it is such rigorous workforce training is what is going to make India successful.
Japanese learnt quality from the US companies, and they perfected it and most importantly followed it to the core, which made them successful.
Same is true on workforce training, Indian companies have learnt this from US, and they are doing an excellent job of following it seriously.
Both these qualities are missing in the US industry leading to their downfall in the Manufacturing and services area.
Practice atleast 20% of what you learn in those sessions, you can be very successful.
Sorry, did not want to spoil the party, just wanted to share my thoughts.
Change the way we work, play, learn and live.

தாமிரா said...

அன்பு நிறைந்த கோபிநாத், உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி.! நீங்கள் சொல்வதை நான் ஒப்புகிறேன். இதைப்போன்ற உறுதி செய்யப்பட்ட வழிமுறைகளை மேற்கொண்டு பணிபுரிவதை வெற்றிக்கான வழியாக நாங்களும் நம்புகிறோம். பதிவில் நகைப்புக்காக‌ எழுதப்படும் வரிகள் நகைப்புக்காக மட்டுமே என்பதை நீங்களும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

கும்க்கி said...

ஹூம்..மன்ன்சு ஆறமாட்டேங்கிது..
எப்டி குஜாலா குந்திகினு இர்ந்த மனுசன்...பொர்த்துக்கபா..அல்லாம் சர்யாபூடும்.

Rangs said...

ஆதி.. நீங்க ப்ளாக் பெல்ட்டா? பின்றீங்களே ஆதி.. எனக்கே இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்குதுங்க..