Sunday, October 19, 2008

சினிமா அனுபவம் குறித்த தொடர்பதிவின் எனது பகுதி.

சினிமா குறித்த இந்த தொடர்பதிவிற்கு என்னையும் அழைத்த கார்க்கி மற்றும் சந்தனமுல்லைக்கு என் நன்றி.! நேரே கேள்விகளுக்கு போகலாம். மற்றவை டிஸ்கியில்..

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

என் அம்மாவின் மடியிலமர்ந்து தியேட்டரில் பார்த்த சினிமாக்கள் என் நினைவிலில்லை. எங்கள் ஊருக்கு முதன்முதலாக டிவி வந்தது 1985க்கு கொஞ்சம் முன்னர் என நினைவு. வாங்கியது என் தந்தையாரின் நண்பர் என்பதால் அவர் வீட்டில் நல்ல உரிமை இருந்தது. அப்போது டிவியில் கண்ட சிவாஜி கணேசன் நடித்த 'வணங்காமுடி' நான் கண்ட நினைவிலிருக்கும் முதல் படமாக இருக்கலாம். மகிழ்ச்சியாக உணர்ந்து பள்ளித்தோழர்களிடம் கதை சொன்னது நினைவிலுள்ளது. பின்னர் எங்கள் வீட்டில் டிவி வாங்க 5 வருடங்களுக்கும் மேலானது. அது எங்கள் ஊரின் முதல் கலர் டிவி என்பது கூடுதல் பெருமை.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம்.. சத்யமில்.!

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பார்க்காத படம் எதுவும் டிவியில் வந்தால் பார்க்கவேண்டும் என நினைப்பேன். ஆனால் முடியாமல் சிறிது நேரத்திலேயே சானல் மாறிவிடுகிறேன். சமீபமாக உட்கார்ந்து ஓரளவு பார்த்த படமெனில் 'பட்ஜெட் பத்மநாபன்'. ஆரம்பத்தில் நகைச்சுவைக்காக பார்க்க ஆரம்பித்து முழுதும் பார்த்து முடித்தேன். பிரபு பணத்தை தொலைத்துவிட்டு கலங்கிநிற்கும் காட்சியில் நானும் கலங்கிவிட்டேன். இப்போதெல்லாம் லேசான சென்டிமென்ட்டிற்கே (ஆனால் உருப்படியான) புல்லரித்துவிடுகிறது. பிரபுவின் சில பழைய படங்களை நினைத்துக்கொண்டேன். அக்னி நட்சத்திரத்தில் அவரது ஸ்டைல் மனதை விட்டகலாத ஒன்று. 'பொன்மனம்' என்றொரு படம். அதன் கிளைமாக்ஸில் கைக்குழந்தையுடன் அவர் தனித்துவிடப்படும் காட்சியில் அவரது நடிப்பு நெகிழவைத்த ஒன்று.‌

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஹேராம்.! இப்படத்தின் கலை, மற்றும் கதை சொல்லப்பட்டவிதம் அத்தனையும் பிரமிக்கவைத்தது. எனது பேவரைட் சினிமாக்கள் இன்னும் பல உண்டு. பிறிதொரு சமயம் சொல்கிறேன்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

வெறுப்பேற்றிய சம்பவங்கள் மிக உண்டெனினும் மிகவும் தாக்கிய என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இல்லை.

தமிழ் சினிமா இசை?

இசை குறித்த அறிவும் ஆர்வமும் மிகக்குறைவே. நாக்க முக்க போன்ற டப்பாங்குத்து பாடல்களை அறவே வெறுக்கிறேன். நல்ல கவிதை நயமுள்ள காதல் பாடல்களை மிக ரசிக்கிறேன். தற்போதைய பாடல் : யாரடி நீ மோகினி 'எப்போதோ பார்த்த மயக்கம்..'

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழி கிட்டத்தட்ட இல்லை. ஹிந்தியில் 'ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்' போன்ற மிகச்சில படங்கள் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் பிரமாண்ட, ஆக்ஷன், பிக்ஷன் படங்கள் நான் மிக ரசிக்கும் ஒன்று. பிறர் கூறியது தவிர்த்து 'ட்ரூ லைஸ்' நான் மிக ரசித்தபடம். நண்பர்களின் டிவிடி புண்ணியத்தில் கிடைக்கும் பழைய புதிய கலைப்படங்களையும் ரசித்துப்பார்ப்பேன். கலைப்படங்கள் மிக மெதுவானவை என யாராவது நினைப்பீர்களானால் மாற்றிக்கொள்ளுங்கள், சமீபத்தில் பார்த்து வியந்த விறுவிறுப்பான படம் 'Father'. (சினிமா அறிவு குறைவு. ஆகவே டெக்னிகல் தவறு இருந்தால் பொறுத்துக்கொள்ளவும். இந்தப்படம் ஆங்கிலம் அல்ல, ரஷ்யன், பிரஞ்சு என்று சண்டைக்கு வரவேண்டாம்)

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சந்தனமுல்லை :அப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்!// ரிப்பீட்டு.!

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிறப்பாக ஒன்றுமில்லை. இப்போது போலவே பத்து பேரரசுவும், ஒற்றை அமீரும் எப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வருஷம்தானே. தனிப்பட்டமுறையில் நிம்மதியாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். நிம்மதியாக வீடியோ கேம் விளையாடுவேன்.

டிஸ்கி : இந்த‌ தொட‌ருக்கு அனைவ‌ரும் ஐந்து பேரை அழைத்திருக்கிறார்க‌ள். என‌க்கு மொத்த‌மே ஒரு ப‌த்துபேரைத்தான் ந‌ன்கு தெரியும். இதில் அனைவ‌ரும் ஒருவ‌ருக்கொருவ‌ர் அழைத்துக்கொண்டாயிற்று. மேலும் சில‌ர் ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ த‌ட‌வைக‌ள் அழைக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கிறார்க‌ள். ஆக‌வே நான் வித்தியாச‌மாக‌ ஒன்று செய்கிறேன். வலையுலகிற்கு வந்து ஓரிரு மாதங்களே ஆகும் மிகப் புதிய‌ 5 பேரை அழைக்கிறேன். புதியவர்களுக்கு வாய்ப்ப‌ளிப்போம் ச‌ரிதானா?.

சிம்பா

எஸ்கே

ரோஜா காதலன்

மணிகண்டன்

அத்திரி

31 comments:

தாமிரா said...

பக்கி லுக் ... said...
ஏம்பா ..எங்களையெல்லாம் கூப்பிட மாட்டீங்களா ?

October 18, 2008 3:52 PMபரிசல்காரன் said...
//யாரடி நீ மோகினி 'எப்போதோ பார்த்த மயக்கம்./

அது ‘எங்கேயோ பார்த்த மயக்கம்.. எப்போதோ வாழ்ந்த நெருக்கம்..”

இருக்கறதுலயே இந்தத் தொடரை சின்ன அளவில எழுதினது நீங்கதான்னு நெனைக்கறேன்.

அதுக்கு ஒரு சபாஷ்!

தாமிரா said...

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இரண்டாம் முறையாக பதிவு பதிப்பிக்கப்பட்டதால் மேல் பின்னூட்டங்கள் காப்பியெடுக்கப்பட்டு மீண்டும் போடப்பட்டது.

நன்றி பக்கி லுக்.!

நன்றி பரிசல்.!

கார்க்கி said...

எங்க எழுதாம் போயிடிவீங்களோ பயந்தேன். நான் அழைத்ததில் நீங்கள்தான் முதலில் எழுதி இருக்கிறீர்கள். ச்சோ ஸ்வீட்.. நானும் புதியவன் தானே. இன்னும் 4 மாதங்கள் கூட முடியவில்லை.

கார்க்கி said...

//
இருக்கறதுலயே இந்தத் தொடரை சின்ன அளவில எழுதினது நீங்கதான்னு நெனைக்கறேன்.

அதுக்கு ஒரு சபாஷ்!
//

எப்படி எழுதினாலும் குறை சொல்பவர்களுக்கு மத்தியில் ஏதாவ்து ஒன்றை தேடி பாராட்டும் பரிச்லை என்ன்வென்று சொல்ல? ஆனால் என் பதிவில மட்டும் அடங்கு, இது ஓவரு, :( இப்படித்தான் போடறாரு. ஏன் சகா?

தமிழ் பிரியன் said...

என்ன பாதி தான் வந்திருக்கு.. மீதி எங்க????

தமிழ் பிரியன் said...

:அப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்!// ரிப்பீட்டு.!
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

குசும்பன் said...

//எனது பேவரைட் சினிமாக்கள் இன்னும் பல உண்டு. பிறிதொரு சமயம் சொல்கிறேன்.//

படிக்கும் எங்களை பிறிக்காமல் இருந்தால் சரி!

வெண்பூ said...

அழகா சொல்லியிருக்கீங்க.. சின்னதாவும்.. நானும் எழுதணும். பாக்கலாம். நாளைக்காவது முடியுதான்னு..

Anonymous said...

ஏன் சின்னதாக முடித்து விட்டீர்கள் தாமிரா?

தமிழ்ப்பறவை said...

நான் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்...
ரொம்பச் சுருக்கமா முடிச்சிடீங்க....

தமிழ்ப்பறவை said...

nice

தமிழன்...(கறுப்பி...) said...

ரொம்ப சின்னதா சொல்லி இருக்ககிறாப்புல இருக்கு...?

தமிழன்...(கறுப்பி...) said...

தமிழ் பிரியன் said...
\\
என்ன பாதி தான் வந்திருக்கு.. மீதி எங்க????

\\

ரிப்பீட்டு...

சந்தனமுல்லை said...

ஹை!! சூப்பரா இருக்கு பதிவு!!
கொஞ்சம் ROTFL போஸ்டிங்கா இருக்கும்ன்னு நினைச்சேன்..:-)

தமிழன்...(கறுப்பி...) said...

வோட்டுப்போடுற பொட்டி எல்லாம் பாத்தா சினிமா பத்தி நிறைய எழுதுவிங்கன்னு நினைச்சேன்....:)

தமிழன்...(கறுப்பி...) said...

ஆனாலும் சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லிட்டிங்க...

நல்லாருக்கு...!

சிம்பா said...

தாமிரா இந்த தொடர் ஓட்டத்துக்கு என்னையும் அழைத்ததற்கு நன்றி. முன்னர் ஜீவன் அழைப்பு விடுத்தார். ஆனால் எல்லோரும் ரொம்ப விரிவா எழுதிருந்தாங்க. ஆனா உங்க பதிவு சுருக்கமா, ஆனா நறுக்குன்னு இருந்தது. ஆகவே நாமும் எழுதிடலாம்னு பதிவ போட்டுட்டேன்.

ரோஜா காதலன் said...

எதை முதல் பதிவாக(உரைநடை) எழுதறதுனு இருந்தேன்.. நீங்க இப்போ ரூட்ட காட்டி விட்டுடிங்க... சீக்கரமே எழுதிடுரேன்...

பாபு said...

naanum prabhu fan
aruvadai naal,manasellaam matthappu
romba pidikkum

அத்திரி said...

சினிமா தொடர் பதிவிற்கு என்னை நம்பி அழைத்த தங்கமணி ரசிகர் மன்ற தலைவரே நன்றி.

மங்களூர் சிவா said...

நல்லா எழுதியிருக்கீங்க.

தாமிரா said...

நன்றி கார்க்கி.! (யாராவது நம்மை பாராட்டுறதே பெரிய விஷயம். இதுல போட்டிக்கு வேற வந்துடுங்கப்பா..)

நன்றி தமிழ்.!
நன்றி குசும்பன்.!
நன்றி வெண்பூ.!
நன்றி வேலன்.!
(ஒருத்தர் சின்னதுக்கு பாராட்டுறார். ஒருத்தர் வருந்துறார். மனுஷன பைத்தியம் புடிக்காம உடமாட்டீங்களே..)

தாமிரா said...

நன்றி தமிழ்ப‌றவை.!
நன்றி க‌றுப்பி.! (பேர‌ மாத்தீட்டிங்க‌ போல‌.. நீங்க‌ மெயிலுக்கு வ‌ர‌லாமே..)
நன்றி முல்லை.! (அடுத்து ஒண்ணு வ‌ருது. எப்பிடிருக்குதுனு சொல்லுங்க‌)
நன்றி சிம்பா.! (இந்த‌ பேர் என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்குது. பேர்க்கார‌ண‌ம் என்ன‌?)
நன்றி ரோஜா.!
நன்றி பாபு.! (உங்களையும் கூப்பிடலாம்னு பாத்தேன். சீனியராயிட்டீங்கன்னு விட்டுட்டேன். உங்களோடதையும் எதிர்பார்க்குறேன்)
நன்றி அத்திரி.!
நன்றி மங்களூர்.! (என்ன ஊட்ல வேல ஜாஸ்தியா? பின்னூட்டத்தியும் காணோம்? பதிவையும் காணோம்?)

AMIRDHAVARSHINI AMMA said...

நீங்கள் ப்ரபுவின் ரசிகர் என்று சொல்லாமலேயே தெரிகிறது.

வால்பையன் said...

//அவரது ஸ்டைல் மனதை விட்டகலாத ஒன்று.//

நீங்கள் பிரபுவுக்கு அல்லக்கையா
அதாவது ரசிகரா

வால்பையன் said...

//எப்போதோ பார்த்த மயக்கம்..'//

எங்கெயோ பார்த்த மய்க்கம்

தாமிரா said...

வாங்க அமிர்தா அம்மா.! (நீங்க ஒரு இளம்தாயாக இருக்கவேண்டும். ஆனால் அமிர்தவர்ஷினி அம்மா என்றால் ஏதோ 50 வயது பெண்மணியை அழைப்பதைப்போல இருக்கிறது. சரியா?)

வாங்க வால்பையன்.! (ஒரு வரி எழுதினா உடனே பிரபு ரசிகரா, அட போங்கப்பா..)

ரோஜா காதலன் said...

தல... சினிமா தொடர்பதிவை எழுதிட்டேன்..

Anonymous said...

connect with UTV English and enjoy.It telecast selected movies from all language with english subtitles.

அருண்மொழிவர்மன் said...

THAAMIRAA, பிரபு, சுவலக்‌ஷ்மி, கரண் நடித்த பொன்மனம் ஒரு மென்மையான நல்ல் படம். எஸ். பி. ராஜ்குமார் என்பவர் இயக்கினார். நல்ல சோகப்பாடல் ஒன்றும் உள்ளது. இப்படியான படங்களில் பிரபு நடிப்பதுதான் எல்லாருக்குமே நல்லது.

http://solvathellamunmai.blogspot.com/

Anonymous said...

அருமை.