Thursday, October 23, 2008

ஹைதராபாத் பிரியாணி

எனக்கும் சுவையான உணவுக்கும் இடையில் உள்ள இடைவெளி நான் கடக்கமுடியாத ஒரு தூரமாகவே இத்தனை நாட்களும் இருந்துவந்திருக்கிறது, அது கல்யாணத்துக்கு முன்பானாலும் சரி, பின்பானாலும் சரி. நான் பிளஸ் டூ முடிந்ததுமே வீட்டைப்பிரிந்தவன். அதற்கு முன்பும் கூட அவ்வளவு விசேஷமாக ஒன்றும் கிடையாது. என் அம்மா வைக்கும் மீன்குழம்புக்கு இணையாக இன்றுவரை பிறிதொன்றை பார்க்கவில்லை எனினும் அவ்வளவு சிறப்பாக சொல்லிக்கொள்ளும்படி சமையலில் என் அம்மாவுக்கு ஆர்வமிருந்ததில்லை. பல நாட்கள் இரவு உணவு கடைகளிலேயே நிகழும். எனக்கும் 25 வயது வரை உணவின் மீது அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் அதன்பின்னர் சிறிது சிறிதாக ஏற்பட்ட ஆர்வம் தீயென பற்றிக்கொண்டது. சுவையான உணவுக்காக அலைய ஆரம்பித்தேன். என்ன இருக்குதோ இல்லையோ நன்கு சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்று பெண்பார்க்கும் போது கண்டிஷனெல்லாம் போட்டேன். அதை யார் காதில் வாங்கிக்கொண்டார்கள்.? ஹும்.!

வீட்டில் வெறுத்து, ஆபீஸ் கேண்டீனில் வெறுத்து, சில ஹோட்டல்களில் வெறுத்து 'கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்.?' என்று சில‌ நாட்க‌ளில் வாய்விட்டு புல‌ம்பியிருக்கிறேன். இப்ப‌டியான‌ சூழ்நிலைக‌ளில் என்றாவ‌து ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ ர‌மா 'கூட்டாஞ்சோறு' செய்திருப்பாள். புல‌ம்பிக்கொண்டே ஏதோ ஒரு லோக்கல் ஹோட்ட‌லில் போய் அம‌ர்ந்தால் ஆப்ப‌மும் தேங்காய்ப்பாலும் ம‌ன‌தை நிறைக்கும். கேண்டீனில் கீரைக்க‌றியும், ர‌ச‌மும் என‌ புல்ல‌ரிக்க‌ வைப்பார்க‌ள். அன்றெல்லாம் எழுந்திருக்க முடியாத அளவு சாப்பிட்டுவைப்பேன். ஆனால் எல்லாமே அத்தி பூத்தாற்போல‌த்தான். சரி விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

ஹைத‌ராபாத் பிரியாணி, ஹைத‌ராபாத் பிரியாணி என்று வ‌ஸ்து ரொம்ப‌ .:பேம‌ஸாக‌ இருக்கிற‌தே.. நாமும்தான் அடிக்க‌டி ஹைத‌ராபாத் போகிறோமே.. இந்த‌முறை ச‌ரியாக‌ க‌டையை விசாரித்து வாங்கிவிட‌ வேண்டிய‌துதான் என்று முடிவு செய்திருந்தேன். முந்தைய‌ அனுப‌வ‌ங்க‌ள் அவ்வ‌ள‌வு சு‌க‌மில்லை. ஒருமுறை த‌ங்கியிருந்த‌ ஹோட்ட‌லில் இரவு உணவுக்காக ஆர்ட‌ர் செய்த‌போது (ஹைத‌ராபாத் ஸ்பெஷ‌ல் பிரியாணி என்று மெனுவில் இருந்த‌து) மிள‌காய் ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ க‌டும் ம‌சாலா நிறைந்த‌ குறைந்த‌து நான்கு பேர் சாப்பிடும் அளவில் ஒரு ப‌டைய‌லை நிக‌ழ்த்திவிட்டு போனார் உப‌ச‌ரிப்பாள‌ர். அதைப்பார்த்தே வ‌யிறு நிறைந்துபோனேன்.

எப்ப‌டி திருநெல்வேலி அல்வா எனில் இருட்டுக்க‌டையோ அதைப்போல‌ இங்கு ஏதாவ‌து ஸ்பெஷ‌ல் க‌டை இருக்க‌க்கூடும் என‌ எண்ணிக்கொண்டேன். சில‌ரை விசாரித்த‌போது ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு வித‌மாய் ப‌தில் சொன்னார்க‌ள். ஒருவ‌ர் பார‌டைஸ் ச‌ர்க்கிளில் உள்ள‌து என்றார். இன்னொருவ‌ர் பாலாந‌க‌ர் என்றார். இன்னொருவ‌ர் சாக‌ர் லேக் அருகில் என்றார். சிலருக்கு பிரியாணியா அப்பிடின்னா என்ன என்றார்கள். விள‌ங்கிரும் என்று விட்டுவிட்டேன்.

ஆகவே குறைந்தபட்சம் ஒவ்வொருமுறையும் வெவ்வேறு கடைகளில் ட்ரை பண்ணுவேன். அவ்வாறே இந்தமுறை ர‌யில்வேஸ்டேஷ‌னில் ஒரு க‌டையில் 'ஸ்பெஷ‌ல் சிக்க‌ன் பிரியாணி' வாங்கிக்கொண்டேன். சாப்பிடும் போது பார்ச‌லைத்திற‌ந்தேன். நான்கு பேர் சாப்பிடும் அள‌வு. நம்புங்கள், உப்பு உறைப்பில்லாத‌ வெள்ளை சாத‌ம். அடியாள‌த்தில் ஒரு முட்டையும், இர‌ண்டு பெரிய‌ சைஸ் சிக்க‌ன் 65 துண்டுக‌ளும் ஒளித்துவைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. இதுதான் பிரியாணி என்று இன்னும் என்னால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. யாராவ‌து புண்ணிய‌வான் அடுத்தமுறையாவ‌து நான் அங்கே வ‌ரும்போது பிரியாணி வாங்கித்த‌ர‌ட்டும் என‌ வாழ்த்துங்க‌ள்.

டிஸ்கி : சென்ற‌ ர‌ம்ஜானுக்கு அப்துலுக்கு போன் ப‌ண்ணி பிரியாணி என்று இழுத்தேன். 'நான் சைவ‌ம்' என்று ஒரே வ‌ரியில் முடித்துக்கொண்டார். கிடைத்த‌ ஒரே இஸ்லாமிய‌த்தோழ‌ரும் (த‌மிழ் பிரிய‌ன்தான் துபாயில் இருக்கிறாரே..) சைவ‌ம் என்றால் நான் என்ன‌தான் செய்ய‌முடியும் சொல்லுங்க‌ள்.

37 comments:

தமிழ் பிரியன் said...

அச்சச்சோ பாவமா இருக்கே! கவலைப்படாதீங்க ... ஊருக்கு வரும் போது உங்களுக்கு பிரியாணி விருந்து போட்டுடலாம்... :)

தமிழ் பிரியன் said...

அண்ணி இல்லாத நேரத்தில் அண்ணியின் சமையலைக் குறை சொல்றீங்க... இதுதான் உங்களுக்கு கடைசி.... இனி இதுமாதிரி ஒரு பதிவு வந்தது,... அம்புட்டுத்தான்... பின்விளைவுகள் மோசமா இருக்கும்.. ;)))

rapp said...

me the 3rd

வெண்பூ said...

தாமிரா,

என்னிடம் கேட்டிருக்கலாமே?

ஹைதராபாத் பிரியாணிக்கு மிக பிரபலமான கடை பாரடைஸ் சர்க்கிளில் இருக்கும் பாரடைஸ் ஹோட்டல். (எனக்கு சிக்கன் பிரியாணி இங்கு பிடிக்கும்). பார்சல் வாங்க, லோயர் கிளாஸ் மக்களுக்காக, மிடில் கிளாஸுக்காக, ஹை கிளாஸுக்காக என்று தனித்தனியாக ரெஸ்டாரண்ட்கள் ஒரே பில்டிங்கில் இருக்கும். சுவை பிரமாதமானது..

அதை தவிர, மட்டன் பிரியாணிக்கு ஹைதராபாத் ஹவுஸ் ஹோட்டல்கள். ஹைதராபாத் முழுக்க எல்லா பகுதியிலும் இருக்கும் செயின் இது. இங்கே மட்டன் பிரியாணி சுவையாக இருக்கும்.

மேலும், ஆர்.டி.சி. க்ராஸ் ரோட்ஸில் இருக்கும் பாவார்ச்சி ஹோட்டலும் பிரபலம். இங்கே பிரியாணியில் கொஞ்சம் எண்ணைய் அதிகமாக இருப்பதால் திகட்டும்.

ஹைதராபாத் பிரியாணி நம்ம ஊர் பிரியாணியிலிருந்து வேறுபட்டது. நம்ம ஊர் போல எண்ணையில் மிதந்து கொண்டு மசாலா அதிகமாக இருக்காது. ஷஃப்ரன் ரைஸில் மாமிச துண்டுகள் இருக்கும். அடுத்த முறை மிஸ் செய்யாதீர்கள்..

எனக்குதான் உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. ஹைதராபாத்தில் இருந்து திரும்பியதற்காக நான் வருத்தப்படும் ஒரே விசயம் பிரியாணிதான்.. :(

Anonymous said...

We have tasted biriyani in paradise and many places but in my knowledge fishland is best and it locating near bigbazar,Ameerpet.In hyderabad people used to take this quantity of rice.

rapp said...

//எனக்கும் சுவையான உணவுக்கும் இடையில் உள்ள இடைவெளி நான் கடக்கமுடியாத ஒரு தூரமாகவே இத்தனை நாட்களும் இருந்துவந்திருக்கிறது, அது கல்யாணத்துக்கு முன்பானாலும் சரி, பின்பானாலும் சரி. //

உணவு சுவையா இருக்கணும்னா சமைக்கக் கத்துக்கணும் முதல்ல, இல்லைன்னா கல்யாணத்துக்கு முன்னாலையும் சரி பின்னாலையும் சரி, அப்டித்தான் இருக்கும்:):):) சமைக்கிற நீங்க இப்டி அலுத்துக்கிட்டே சும்மா இருந்தா, எப்போதான் நல்ல வீட்டு சாப்பாடு சாப்ட போறீங்க:):):)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................சகலகலா சம்மந்தி அவர்களே, இது கொஞ்சம் கூட நல்லால்லே. அபி அப்பா பதிவுல சொன்னாப்போல, பிரியாமணின்னு எழுதிருந்தாலே, பிரியாணின்னுதான் படிப்பேன். என் வயித்தெரிச்சலை கெளப்பிட்டீங்களே:(:(:( கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தாமிரா said...

வாங்க தமிழண்ணே..!
வாங்க ராப்பம்மா..! (நீங்க ஆக்சுவலா மீ த 2வது)
வாங்க வெண்பூ..!
(ஹைய்யோ.. ஹைய்யோ.. என்ன ஆராய்ச்சி.. என்ன ஆராய்ச்சி.. உங்க தொப்பையை பாக்கும் போதே எனக்கு தெரியும் இந்த மாதிரி ஏதாவது இருக்கும்னு.. ஊஹி..ஹூ..ம்..ஹா..ஹி..ஹி..)

வெண்பூ said...

//வாங்க வெண்பூ..!
(ஹைய்யோ.. ஹைய்யோ.. என்ன ஆராய்ச்சி.. என்ன ஆராய்ச்சி.. உங்க தொப்பையை பாக்கும் போதே எனக்கு தெரியும் இந்த மாதிரி ஏதாவது இருக்கும்னு.. ஊஹி..ஹூ..ம்..ஹா..ஹி..ஹி..)
//
ஹி..ஹி.. நிஜமாவே இந்த தொப்பை வர்றதுக்கு ஹைதராபாத் பிரியாணியும் ஒரு காரணம்..

பேச்சிலராக இருந்தபோது நானும் என் நண்பரும் ஹைதராபாத் ஹவுஸ் சென்று லார்ஜ் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்வோம் (அப்போது 20 ரூபாய்) அதிகம் கொடுத்து எக்ஸ்ட்ரா மீட் ஆப்சனும் செலக்ட் செய்வோம் (இப்போது இது இருப்பதாக தெரியவில்லை). ஏறத்தாழ 3 பேர் சாப்பிடுகிற அளவில் இருக்கும், நாங்கள் இருவரே காலி செய்வோம். நண்பர் கம்மியாத்தான் சாப்பிடுவாருன்றது வேற விசயம்.

ஒருதடவை அவர் சக நண்பர்களிடம் சொன்னது "பிரியாணியை தட்டுல போட்டு சாப்பிடுறததான் பாத்திருக்கேன். இவரு என்னாடான்னா பிரியாணிக்கு உள்ளாறயே உக்காந்து சாப்பிடுறாரு"...

rapp said...

/:ஒருதடவை அவர் சக நண்பர்களிடம் சொன்னது "பிரியாணியை தட்டுல போட்டு சாப்பிடுறததான் பாத்திருக்கேன். இவரு என்னாடான்னா பிரியாணிக்கு உள்ளாறயே உக்காந்து சாப்பிடுறாரு//

சம்மந்தி, எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருது

வெண்பூ said...

//
rapp said...
/:ஒருதடவை அவர் சக நண்பர்களிடம் சொன்னது "பிரியாணியை தட்டுல போட்டு சாப்பிடுறததான் பாத்திருக்கேன். இவரு என்னாடான்னா பிரியாணிக்கு உள்ளாறயே உக்காந்து சாப்பிடுறாரு//

சம்மந்தி, எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருது
//

கண்ணை தொடச்சிகோங்க சம்மந்தி.. ரொம்ப அழக்கூடாது.. இதுக்கே கண்ணுல தண்ணி விட்டா நான் சாப்புட்ட அளகையெல்லாம் கேட்டா தேம்பி தேம்பி அழுவீங்க போல..

விஜய் ஆனந்த் said...

சாப்பாட்டு பிரச்னை பெரும்பிரச்னையா இருக்கும் போல...

அண்ணாச்சி, உயிர் வாழறதுக்காக சாப்பிடணும்...சாப்பிடறதுக்காக உயிர் வாழக்கூடாது...(இந்த டயலாக்குக்கு நீங்க மட்டுந்தான் கோவப்படணும்...சம்பந்திங்க ரிலாக்ஸ் ப்ளீஸ்..)

மங்களூர் சிவா said...

/
சாப்பாட்டு பிரச்னை பெரும்பிரச்னையா இருக்கும் போல...
/

ரிப்பீட்டு

Ramesh said...

Best Biriyani in Hyderabad Twin Cities in order! (taste differs)

My ex colleague Nimje's reco's.

(1) Alpha near Sec'bad station. Poeple travelling from Mumabi to Calcutta, run in to collect packets, while there is a 20 mintues stop.
(2) Parwaaz, Near Nampally Rly stn
(3) Paradise in the circle + Falooda
(4) Abriruchi on SD Road, Andhra Biriyani
(5) Sailors Inn, Paradise circle, the raitha what goes along is super!
(6) Rajdoot, Koti
(7) Bhagwan Dhaba, Nagpur Highway
(8) X? in RTC X Road, in front of Devi theatre

rapp said...

நியூ பாதர் விஜய் ஆனந்த், நீங்க சொல்லவர்றது எனக்கு புரியுது. அதாவது பதிவு எழுதறதுக்கு பிளாக் ஆரம்பிக்கலாம். ஆனா பின்னூட்டம் போடறத்துக்கு மட்டுமே பிளாக் ஆரம்பிக்கக் கூடாதுங்கறீங்க, அப்படித்தானே:):):)

rapp said...

///
சாப்பாட்டு பிரச்னை பெரும்பிரச்னையா இருக்கும் போல...
/

ரிப்பீட்டு//

சிவாண்ணே, நல்ல தோச சட்னிய நக்கலடிச்சா இப்படித்தான், பிரியாணிக் கட தெரியாம தெனற வேண்டியிருக்கும்:):):)

ச்சின்னப் பையன் said...

என்ன இங்கே ஒரே அசைவமும், அழுவாச்சியுமா இருக்கே?...
நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன்...

கயல்விழி said...

நல்ல ஹைத்ராபாத் பிரியாணி சாப்பிடறது தான் உங்க வாழ்நாள் லட்சியம்னு சொல்லுங்க :) :)

வடகரை வேலன் said...
This comment has been removed by the author.
வடகரை வேலன் said...

//அண்ணாச்சி, உயிர் வாழறதுக்காக சாப்பிடணும்...சாப்பிடறதுக்காக உயிர் வாழக்கூடாது//

ஏம்ப்பா விஜய் இதுல என்னை எதுக்கு இழுக்குற.

நானெல்லாம் சாபிடறதுக்காக உயிர் வாழுறவன். எந்த ஊருக்குப் போனாலும் முதல்ல சாபிடற ஓட்டலத்தான் விசாரிப்பேன். நம்ம சாய்ஸ் சந்துக்குள்ள இருக்க மெஸ்தான். உடம்புக்கும் பர்சுக்கும் நல்லது.

ஹைதராபாத்துல சார்மினார் பக்கத்துல ஒரு மாடியில இருக்க ஓட்டல்ல பிரியாணி சாப்பிட்டிருக்கேன். ஒட்டல் பேரு மறந்துருச்சு.

நல்லா இருந்துச்சு.

வீணாபோனவன் said...

பார்க்க பாவமா தான் இருக்கு... சரி உங்களுக்கான எனது பிரியாணி ரெசிப்பிய உங்களோட aathi25@yahoo.co.in-க்கு அனுப்பியிருக்கிறேன்... சமைத்துப்பார்த்து எப்படி என்று ஈமெய்ல் பண்ணுங்க...

-வீணாபோனவன்.

ரோஜா காதலன் said...

தாமிரா, வெண்பூ இப்படி ரெண்டு பேரும் உசுப்பேத்திக்கிட்டே இருந்திங்க, நான் அடுத்த பிளைட் புடுச்சி நேரா ஹைதராபாத் போய்டுவேன் போலிருக்கு...

திருவான்மியூர்ல இருந்து அடையார் போற வழியில, ”அபிருச்சி”னு ஒரு ஆந்திரா ஓட்டல் இருக்கு. அங்க போய் சாப்பிட்டு பாருங்க..

நான் ஜனவரில சென்னை வந்துடுவேன்... அப்போ, எல்லாரும் சேர்ந்து, அங்க சாப்பிடப்போலாம்...

”கறிதோசை”னு ஒரு ஐட்டம் இருக்கு. யாரச்சும் சாப்பிட்டுருக்கீங்கலா?

Saravana Kumar MSK said...

//எனக்கும் சுவையான உணவுக்கும் இடையில் உள்ள இடைவெளி நான் கடக்கமுடியாத ஒரு தூரமாகவே இத்தனை நாட்களும் இருந்துவந்திருக்கிறது, அது கல்யாணத்துக்கு முன்பானாலும் சரி, பின்பானாலும் சரி. //

கேட்கரதுக்கே கஷ்டமா இருக்கு. :((

Saravana Kumar MSK said...

தீபாவளி வருதில்ல.. பிரியாணி செய்வாங்களே.. :)))))))))))))))

நானும் ஒருவன் said...
This comment has been removed by the author.
நானும் ஒருவன் said...

சரி, நட்ட நடு ராத்திரி பதிவு போடுறீங்க.. அதுக்கும் கும்மி ராத்திரல வருது.. அதுவும் சாப்பாட்ட பத்தி.. ம்ஹூம்.. உங்கள எல்லாம் எததணை கார்க்கி வந்தாலும் திருத்த முடியாது..

கார்க்கி said...

// உங்கள எல்லாம் எததணை கார்க்கி வந்தாலும் திருத்த முடியாது..

October 23, 2008 11:06 PM//\


ஏண்டா இந்த கொல்வெறி உனக்கு? நான் என்ன பெரியாரா?

அத்திரி said...

//உணவு சுவையா இருக்கணும்னா சமைக்கக் கத்துக்கணும் முதல்ல, இல்லைன்னா கல்யாணத்துக்கு முன்னாலையும் சரி பின்னாலையும் சரி, அப்டித்தான் இருக்கும்:):):) சமைக்கிற நீங்க இப்டி அலுத்துக்கிட்டே சும்மா இருந்தா, எப்போதான் நல்ல வீட்டு சாப்பாடு சாப்ட போறீங்க:):):)//


ரிப்பீபீபீபீட்ட்ட்ட்ட்டூடூ>>>>

தாமிரா said...

லவ்வ பண்ணி தொலைச்சாச்சு.. படிச்சு முடிச்சாச்சு.. வேலைல செட்டில் ஆயாச்சு.. கல்யாணம் பண்ணிகிட்டாச்சு.. பொண்டாட்டி, புள்ளகுட்டி பாத்தாச்சு.. இப்பல்லாம் நல்ல சாப்பாடுதான் வாழ்க்கையில முக்கியம்னு தோணுது தோழர்களே.. அதையே பலரும் பிரதிபலித்ததில் மகிழ்ச்சி எனக்குதான்.

தாமிரா said...

வெண்பூ, ரமேஷ்க்கு லிஸ்ட் கொடுத்ததால் ஸ்பெஷல் நன்றி. இதையும் விட ஒருபடி மேல போய் நாலு பக்கத்துக்கு பிரியாணி ரெசிப்பிய (ஒரு ஐட்டத்துக்குதான்) மெயிலில் தந்த (ரெசிப்பியே நாலு பக்கம்னா செஞ்சு பாக்க எத்தனை நாள் ஆகுமோ?) வீணாபோனவனின் அன்புக்கும் ஸ்பெஷல் நன்றி.

தாமிரா said...

வாங்க வெண்பூ.! (இவரு என்னாடான்னா பிரியாணிக்கு உள்ளாறயே உக்காந்து சாப்பிடுறாரு"...// என்ன ரசனை நண்பா உனக்கு.!)

ராப், வெண்பூவின் சம்பந்தி சண்டைகள், கொஞ்சல்கள் ரசிக்கும்படியிருந்தது. அதற்கும் நன்றி.!

வாங்க விஜய்.!
வாங்க மங்களூர்.!
வாங்க ச்சின்னப்பையன்.!
வாங்க கயல்விழி.! (கரெக்டா சொன்னீங்க கயல்.!)

தாமிரா said...

வாங்க வேலன்.! (நானெல்லாம் சாபிடறதுக்காக உயிர் வாழுறவன்..// நானும் உங்க கட்சிதாம்ணே!)
வாங்க ரோஜா.! (போட்டோவிலயே தெரியுதே.. பிரியாணி காதலன்ன்னு பேர மாத்திக்கலாமா?)
வாங்க எம்எஸ்கே.! (கஷ்டம் புரியுதா தல.. ஹும்..!)
வாங்க நானும் ஒருவன்.! (யோவ், ன்னா விளாடுறியா.. சாந்த்ரம் 4 மணிக்கு பதிவு போட்ருக்கேன். நடு ராத்ரிங்கிறே. எங்கடைக்கு கூட்டம் வர்றதே பெருசு. கண்ணு வெக்கிறியா.?)
வாங்க கார்க்கி.!
வாங்க அத்திரி.!

விஜய் ஆனந்த் said...

// லவ்வ பண்ணி தொலைச்சாச்சு.. படிச்சு முடிச்சாச்சு.. வேலைல செட்டில் ஆயாச்சு.. கல்யாணம் பண்ணிகிட்டாச்சு.. பொண்டாட்டி, புள்ளகுட்டி பாத்தாச்சு.. //

இதுல 'லவ்வ பண்ணி தொலைச்சாச்சு..'-க்கும் 'கல்யாணம் பண்ணிகிட்டாச்சு..'-க்கும் உள்ள தொடர்பை விளக்கவும்.

வால்பையன் said...

என்ன தான் பெரிய கடை பிரியாணி என்றாலும். அருகாமையில் குடியிருக்கும் முஸ்லீம் நண்பர்களின் வீட்டு பிரியாணி தான் ருசி

புதுகை.அப்துல்லா said...

சென்ற‌ ர‌ம்ஜானுக்கு அப்துலுக்கு போன் ப‌ண்ணி பிரியாணி என்று இழுத்தேன். 'நான் சைவ‌ம்' என்று ஒரே வ‌ரியில் முடித்துக்கொண்டார். கிடைத்த‌ ஒரே இஸ்லாமிய‌த்தோழ‌ரும் (த‌மிழ் பிரிய‌ன்தான் துபாயில் இருக்கிறாரே..) சைவ‌ம் என்றால் நான் என்ன‌தான் செய்ய‌முடியும் சொல்லுங்க‌ள்.
//

யோவ் லூசு... நாந்தானய்யா சைவம்..உன் தங்கச்சியுமா சைவம்? வந்து தொலஞ்சுருக்க வேண்டியதுதான வீட்டுக்கு.

மணிகண்டன் said...

***********யோவ் லூசு... நாந்தானய்யா சைவம்..உன் தங்கச்சியுமா சைவம்? வந்து தொலஞ்சுருக்க வேண்டியதுதான வீட்டுக்கு.**********

பாசத்தோட கூப்பிடரா மாதிரி திட்டறீங்களா ?

ரோஜா காதலன் said...

//
வாங்க ரோஜா.! (போட்டோவிலயே தெரியுதே.. பிரியாணி காதலன்ன்னு பேர மாத்திக்கலாமா?)
//

வேணும்னா புரோட்டா காதலன்னு மாத்திக்கறேன்...

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே, ஒடம்ப ரணகளமாக்கிட்டாங்கய்யா !!!