Friday, October 24, 2008

ரமா இல்லாத வீட்டின் லட்சணம்.!

நீண்ட நாட்களுக்கு பின்னர் கடந்த ஞாயிறன்று காலை 10.30 மணிவரை நிம்மதியாக தூங்கிஎழுந்தேன். எழுந்த பிறகுதான் வீட்டை கவனித்தேன். ரமா ஊருக்குப்போய் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் ஒருவழியாகியிருந்தது. இன்றும் சில வேலைகளை செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டு இருந்துவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று உணர்ந்தேன். வெளியே போய் சாப்பிட்டுவிட்டு வந்து வேலைகளை திட்டமிடத்துவங்கினேன்.

ஆபரேஷன் எறும்புகள் :

ரமா ஊருக்கு செல்வது இந்த எறும்புகளுக்கு எப்படித்தான் தெரியுமோ தெரியவில்லை. சாரை சாரையாய் வந்துவிடுகின்றன. பார்சல் வாங்கிவந்து வைத்துவிட்டு கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு சாப்பிடலாம் என்றால் அதற்குள் பார்சலை பிரித்து மேய ஆரம்பித்துவிடுகின்றன. எந்த ஒரு உணவுப்பண்டத்தையும் வெளியே வைக்க நீதியில்லை. விட்டால் கையில் வைத்திருக்கும்போதுகூட வந்து பிடுங்கிக்கொள்ளும் போல ஆகிவிட்டது. துணிமணி, பெட் எங்கெங்கு காணினும் எறும்புக‌ள். நல்ல வேளையாக பழங்கள் எறும்புக்கு பிடிக்காமல் போனது நம் அதிர்ஷ்டம். அத்த‌னை பேரையும் அடித்துத்துர‌த்திவிட்டு வீட்டை பெருக்கி சுத்த‌ம் செய்தேன். மீண்டும் வ‌ராத‌ வ‌ண்ண‌ம் எறும்புப்பொடிக‌ள், சாக்பீஸ்க‌ள் கொண்டு வீட்டிற்கு அர‌ண் அமைத்தேன்.

ஆப‌ரேஷ‌ன் கிச்ச‌ன் :

ர‌மா ஊர் சென்ற‌ ம‌றுநாளே கிளாஸ் இருக்கிற‌து என்று எவ்வ‌ள‌வோ சொல்லியும் கேட்காம‌ல் க‌ண்ண‌ன், பாபுவையும் கூட்டி வ‌ந்துவிட்டான். கிச்ச‌னை யூஸ் ப‌ண்ண‌க்கூடாது, ர‌மாவுக்கு தெரிந்துவிடும் என்று சொல்லியும் கேட்காம‌ல், அதெப்படி தெரியும் நீ சொல்லாமல்? என்று சொல்லி சைட் டிஷ் ப‌ண்ணுகிறேன் பேர்வ‌ழி என்று ஒரு வாண‌லி, மூன்று த‌ட்டுக‌ள், மேலும் சில‌ பாத்திர‌ங்க‌ள் என‌ ஸிங்கில் கொட்டிவிட்டு போய்விட்டான். வாங்கி வ‌ந்த‌ சிக்க‌னை பேக்கிங்கிலேயே வைத்து சாப்பிட‌லாம் என்றால் ஊஹூம் த‌ட்டுதான் சிற‌ந்த‌து என்று விள‌க்க‌ம் வேறு. நாலைந்து நாட்க‌ள் ஆகிவிட்டதாலும் த‌ண்ணீர் நின்ற‌தாலும் சில‌ கிண்ண‌ங்க‌ளில் சில‌ துரு புள்ளிக‌ள் ஆர‌ம்பித்திருந்த‌ன‌. ஸ்காட்ச் பிரைட் மூல‌ம் ந‌ன்கு அழுத்தித்தேய்த்தேன். இன்னும் சில‌ நாட்க‌ள் போட்டிருந்தால் தூர‌ போட‌ வேண்டிய‌தாயிருக்கும். அத்த‌னையையும் முடிந்தவரை க‌ழுவி க‌வுத்தினேன். அப்ப‌டியும் வ‌ந்து க‌ண்டு பிடித்துவிடுவாளோ என்று ப‌ய‌மாக‌யிருந்த‌து.

.:பிரிட்ஜுக்குள் என்ன‌ இருக்கிற‌தென‌ சோதித்தேன். அன்று மிச்ச‌மான‌ ஒரு சோடா பாட்டில், ஒரு வாட்ட‌ர் பாட்டில் அவ்வ‌ள‌வுதான். வேறெதுவுமில்லை. ஒரு பாட்டில் த‌ண்ணிருக்காக‌ .:பிரிட்ஜை நான் ஓட்டிக்கொண்டிருப்பது கலைஞருக்கோ ஆற்காட்டாருக்கோ தெரிந்தால் நேர‌டியாக‌ வ‌ந்து கைது ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்வார்க‌ள் என்று ப‌ய‌ந்து போய் பாட்டிலை வெளியே எடுத்துவிட்டு ஆ.:ப் செய்தேன்.

ஆப‌ரேஷ‌ன் எலி :

இது ஒரு புதுமையான‌ ஆப‌ரேஷ‌ன். எலிக‌ள் அல்ல‌ எலிதான். ர‌மா ஊருக்கு செல்லும் முன் இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன்ன‌ர் எப்ப‌டியோ ஒரு குட்டி எலி வீட்டுக்குள் வ‌ந்துவிட்ட‌து. அதை விர‌ட்டும் த‌லையாய‌ க‌ட‌மையை ர‌மா த‌ந்து விட்டு போயிருந்தாள். ஆச்சா, ஆச்சா என்று போனில் குடைச்ச‌ல் வேறு. ந‌ம‌க்கு பொய் வேறு பொருந்துகிற‌ மாதிரி சொல்ல‌வ‌ராதா, அத‌னால் இன்று அதை விர‌ட்டி விடுவ‌து என்று முடிவுசெய்தேன். ஒரு வேளை பொய் சொல்லி அவ‌ள் வ‌ரும் வ‌ரை விர‌ட்ட‌ முடியாம‌ல், அவ‌ள் வ‌ந்த‌தும் எலி ந‌ல்ல‌ வ‌ள‌ர்ந்து குஜாலாக‌ கிச்ச‌னில் வைத்து அவ‌ளுக்கு ஹாய் சொல்லிய‌து என்று வைத்துக்கொள்ளுங்க‌ள். என் நிலைமையை நினைத்துப்பாருங்க‌ள். ஆனால் அந்தோ ப‌ரிதாபம், இந்த‌ ஆப‌ரேஷ‌ன் ப‌ல‌ பிர‌ய‌த்த‌ன‌ங்க‌ளுக்குப் பின்னும் தோல்வியில் முடிந்த‌து. க‌ட்டிலுக்கு கீழே, பீரோவுக்கு பின்னால், கிச்ச‌ன் ஷெல்புக‌ளுக்குள் என்று மின்னலாக இடம்மாறி அது என்னை டிரில் வாங்கிய‌து. வேர்த்துக்கொட்டிய‌துதான் மிச்ச‌ம். அடுத்த‌வார‌ம் க‌ண்ண‌னை வ‌ர‌ச்செய்து கூட்டு ஆப‌ரேஷ‌னில் இற‌ங்க‌ வேண்டும் என‌ முடிவு செய்தேன்.

பின்ன‌ரும் துணி துவைத்த‌ல், அல‌மாரியை சுத்த‌ம் செய்து புத்த‌க‌ங்க‌ளை அடுக்குத‌ல் போன்ற‌ ப‌ல‌ ஆப‌ரேஷ‌ன்க‌ளை நான் முடித்து (பெண்டு) நிமிர்ந்த‌போது மானாட‌ ம‌யிலாட‌வே துவ‌ங்கிவிட்ட‌து.

***** விளம்பரம்*****

நாளை தீபாவ‌ளி சிற‌ப்பு ப‌திவும‌ல‌ர்.!

ப‌டிக்க‌த்த‌வ‌றாதீர்க‌ள்.! இர‌ண்டு ப‌திவுக‌ள்... அதே விலை..!

சிற‌ப்பு சிறுக‌தை எழுதுப‌வ‌ர் : தாமிரா

எக்ஸ்குளூசிவ் பேட்டி : வெண்பூ

55 comments:

rapp said...

me the first:):):)

கும்க்கி said...

கிளாஸ் இருக்கிறது என்பதை தப்பாக புரிந்துகொண்டாரோ?..

கும்க்கி said...

ஆஹா அக்கா கிட்ட இருந்து தப்ப முடியல்லியே....!

கும்க்கி said...

ஒரே செகண்டில் மீ த பர்ஸ்ட்டா?

கும்க்கி said...

என்னே ஒரு கடமையுணர்ச்சி..
உங்கள மிஞ்ச உங்களால்தான் முடியும் போல..

கும்க்கி said...

ரொம்ம்ம்ப நாளாச்சி..ஒரு கும்மு கும்மிரவேண்டியதுதான்..

rapp said...

உவ்வே, அய்யய்ய, பாவங்க உங்க தங்கமணி. தயவுசெஞ்சு இனி அவங்க ஊருக்குப் போகும்போது, ஒரு பூட்டை வாங்கி, கிச்சனைப் பூட்டிட்டு போகச்சொல்லுங்க, இல்லை நீங்களே பூட்ட வேண்டியிருந்துதுன்னா, பூட்டிட்டு, சாவியத் தொலைச்சிடுங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................................

தமிழ் பிரியன் said...

அண்ணிகிட்ட வரட்டும்.. இருக்கு அண்ணனுக்கு மண்டகப்படி..;)

தமிழ் பிரியன் said...

என்னது நாளைக்கு சிறுகதையா? நான் வரலைப்பா.. இந்த ,மாதிரி ரிஸ்க் எடுக்க எல்லாம்...:))

கும்க்கி said...

ஆபரேஷனப்ப கிடைக்காத பொருளெல்லாம் கிடைச்சிருக்குமே...
அனுபவம்...ச்சும்மால்ல.

தமிழ் பிரியன் said...

ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்மா.. நாளைக்கு எழுதுங்க.. வந்து விடுகிறோம்.

கும்க்கி said...

இதயே நீங்க டெய்லி காலையில செஞ்சுட்டா நல்ல எக்ஸஸைஸா இருக்குமே..

கும்க்கி said...

வீட்டிலயும் நல்ல பேர் எடுத்தாமாரியும் ஆச்சு..90க்கு ஸ்பெசல் பெர்மிசன் வாங்கினாமாரியும் ஆச்சு..

கும்க்கி said...

தீவாளிக்கு ஊருக்கு போவல்லீங்களா..
முன்னமே சொல்லியிருந்தா....அடுத்த நாள் காலையில கிச்சன்லாம் க்ளீன் பண்ணிட்டுத்தான் நாங்கள்ளாம் கிளம்புவோம்.

கும்க்கி said...

ஒரு பத்து ஆளுகளை வச்சு கிளீன் பண்ணினாலும் அவங்க கரெக்டா கண்டுபிடுச்சிடுவாங்க ....அது எப்பிடித்தாம் கண்டுபிடிப்பாய்ங்களோ...ஆண்டவா.

தாமிரா said...

இன்னிக்காவது மற்றவங்க பதிவுகளை படிச்சு பின்னூட்டம் போடலாம்னு பாத்தா நம்ப கடையில ஒத்தையில ஒருத்தர் புலம்பிக்கினுருக்கிறத பாக்கச்சொல்லோ அழுகாச்சியா வருது. அவருக்கு நானே கம்பெனி குடுக்கலன்னா எப்பிடி.?

கும்க்கி said...

இப்போதைக்கி அப்பீட்டுக்கறேன்....நேரத்த பாத்தீங்கள்ள.....மல பாம்பு..தன்னி பாம்பல்லாம் காத்துக்கிட்டிருக்குதுக..வரட்டுங்களா..

தாமிரா said...

ராப்: பாவங்க உங்க தங்கமணி// அல்லோ நேரில பாத்தா தெரியும் சேதி.!

தாமிரா said...

அதுக்குள்ள அப்பீட்டா? அப்ப சரி நான் நன்றி சொல்லிக்கிறேன்.

நன்றி ராப்.!
நன்றி கும்கி.!
நன்றி தமிழ்.!

பொடியன்-|-SanJai said...

//ஒரு பாட்டில் த‌ண்ணிருக்காக‌ .:பிரிட்ஜை நான் ஓட்டிக்கொண்டிருப்பது கலைஞருக்கோ ஆற்காட்டாருக்கோ தெரிந்தால் நேர‌டியாக‌ வ‌ந்து கைது ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்வார்க‌ள் என்று ப‌ய‌ந்து போய் பாட்டிலை வெளியே எடுத்துவிட்டு ஆ.:ப் செய்தேன்.//

சூப்பரு..


ஹய்யோ ஹய்யோ.. இதுக்கு தான் என்னைய மாதிரி கல்யாணத்துக்கு முன்னடியும் தனியா ஒரு வீட்டில் குடி இருந்து எல்லாத்தையும் கத்துக்கனும்னு சொல்றது.. :))

பொடியன்-|-SanJai said...

என்னாது வெண்பூவோட எச்சக்கிளாஸ் பேட்டியா? அவருக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லைன்னு கேள்வி பட்டேனே.. பய புள்ளைங்க பொய் சொல்லிட்டாங்க போல.. :)))

தமிழ்ப்பறவை said...

//அவ‌ள் வ‌ந்த‌தும் எலி ந‌ல்ல‌ வ‌ள‌ர்ந்து குஜாலாக‌ கிச்ச‌னில் வைத்து அவ‌ளுக்கு ஹாய் சொல்லிய‌து என்று வைத்துக்கொள்ளுங்க‌ள். என் நிலைமையை நினைத்துப்பாருங்க‌ள்.//
// ஒரு பாட்டில் த‌ண்ணிருக்காக‌ .:பிரிட்ஜை நான் ஓட்டிக்கொண்டிருப்பது கலைஞருக்கோ ஆற்காட்டாருக்கோ தெரிந்தால் நேர‌டியாக‌ வ‌ந்து கைது ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்வார்க‌ள் என்று ப‌ய‌ந்து போய் பாட்டிலை வெளியே எடுத்துவிட்டு ஆ.:ப் செய்தேன்.//

உங்களை நினைச்சு சிரிக்கிறதா, இல்ல அழுகிறதான்னே தெரியல.
//பின்ன‌ரும் துணி துவைத்த‌ல், அல‌மாரியை சுத்த‌ம் செய்து புத்த‌க‌ங்க‌ளை அடுக்குத‌ல் போன்ற‌ ப‌ல‌ ஆப‌ரேஷ‌ன்க‌ளை //
இதெல்லாம் பண்ணீங்களா,இல்ல பதிவை சுபமா முடிக்கணும்ன்னு நீங்க இட்டுக்கட்டுனதா...?!
//அடுத்த‌வார‌ம் க‌ண்ண‌னை வ‌ர‌ச்செய்து கூட்டு ஆப‌ரேஷ‌னில் இற‌ங்க‌ வேண்டும் என‌ முடிவு //
உங்க கூட்டு ஆபரேஷந்தான் என்ன்ன்னு ஊருக்கே தெரியுமே...?!

தாமிரா said...

ச‌ஞ்சய் :பய புள்ளைங்க பொய் சொல்லிட்டாங்க போல.. // சிரித்து மகிழ்ந்தேன். நன்றி சஞ்சய்.!

ரசனையான பின்னூட்டத்துக்கு நன்றி தமிழ்பறவை.!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

கல்யானம் பண்ணி குடும்பம் நடத்துறதுக்கு
எவ்வளோ பயப்பட வேண்டியிருக்கு?

மங்களூர் சிவா said...

25

மங்களூர் சிவா said...

கிளாஸ் இருக்கிறது என்பதை தப்பாக புரிந்துகொண்டாரோ?..

மங்களூர் சிவா said...

ஆஹா அக்கா கிட்ட இருந்து தப்ப முடியல்லியே....!

மங்களூர் சிவா said...

என்னே ஒரு கடமையுணர்ச்சி..
உங்கள மிஞ்ச உங்களால்தான் முடியும் போல..

மங்களூர் சிவா said...

ரொம்ம்ம்ப நாளாச்சி..ஒரு கும்மு கும்மிரவேண்டியதுதான்..

மங்களூர் சிவா said...

ஆபரேஷனப்ப கிடைக்காத பொருளெல்லாம் கிடைச்சிருக்குமே...

மங்களூர் சிவா said...

இதயே நீங்க டெய்லி காலையில செஞ்சுட்டா நல்ல எக்ஸஸைஸா இருக்குமே..

மங்களூர் சிவா said...

//ஒரு பாட்டில் த‌ண்ணிருக்காக‌ .:பிரிட்ஜை நான் ஓட்டிக்கொண்டிருப்பது கலைஞருக்கோ ஆற்காட்டாருக்கோ தெரிந்தால் நேர‌டியாக‌ வ‌ந்து கைது ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்வார்க‌ள் என்று ப‌ய‌ந்து போய் பாட்டிலை வெளியே எடுத்துவிட்டு ஆ.:ப் செய்தேன்.//

சூப்பரு..

மங்களூர் சிவா said...

என்னாது வெண்பூவோட எச்சக்கிளாஸ் பேட்டியா? அவருக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லைன்னு கேள்வி பட்டேனே.. பய புள்ளைங்க பொய் சொல்லிட்டாங்க போல.. :)))

மங்களூர் சிவா said...

உங்களை நினைச்சு சிரிக்கிறதா, இல்ல அழுகிறதான்னே தெரியல.

மங்களூர் சிவா said...

கல்யானம் பண்ணி குடும்பம் நடத்துறதுக்கு
எவ்வளோ பயப்பட வேண்டியிருக்கு?
:((((((((((((((((

கும்க்கி said...

இப்படி ஒரு சோம்பேரிய உலகமே.... மன்னிக்கவும்...நான் பாத்ததேயில்ல....

கும்க்கி said...

க மு க்கு பின்னாடி இப்படியா.............
அய்ய்யோ மங்களூராரே..
பரிதாமா கீதுங்கோ..

விஜய் ஆனந்த் said...

:-)))...

வீணாபோனவன் said...

//ஆப‌ரேஷ‌ன் எலி ://

சூப்பர்

//நாளை தீபாவ‌ளி சிற‌ப்பு ப‌திவும‌ல‌ர்.!//

சூப்பரோ+சூப்பர்

//ப‌டிக்க‌த்த‌வ‌றாதீர்க‌ள்.! இர‌ண்டு ப‌திவுக‌ள்... அதே விலை..!
சிற‌ப்பு சிறுக‌தை எழுதுப‌வ‌ர் : தாமிரா
எக்ஸ்குளூசிவ் பேட்டி : வெண்பூ//

சூப்பரோ * சூப்பர்

-வீணாபோனவன்.

கயல்விழி said...

பாருங்க ஒரு நாள் கொஞ்ச நாளுக்கே உங்க வீட்டில் எத்தனை பிரச்சினை? இப்போதாவது தங்கமணிகளின் மகத்துவத்தை புரிந்துக்கொள்ளவும் :) JK

Anonymous said...

//நாளை தீபாவ‌ளி சிற‌ப்பு ப‌திவும‌ல‌ர்.!ப‌டிக்க‌த்த‌வ‌றாதீர்க‌ள்.! இர‌ண்டு ப‌திவுக‌ள்... அதே விலை..!சிற‌ப்பு சிறுக‌தை எழுதுப‌வ‌ர் : தாமிராஎக்ஸ்குளூசிவ் பேட்டி : வெண்பூ//

நான் இப்பவே முன்பதிவு செஞ்சுக்கிறேன்.

Anonymous said...

கொஞ்ச நாளுக்கு முன்னால தங்கமணி ஊருக்கு போறாங்க ஜாலின்னு பதிவு போட்டதா ஞாபகம். அதுக்குள்ள ’புதுக்கவிதை’ டெல்லி கணேஷ் மாதிரி ஆயிட்டிங்க?

தாமிரா said...

நன்றி சுடர்மணி.!
நன்றி மங்களூர்.! (பாருங்க மங்களூர், உங்களை கும்கி எப்பிடி திட்டுறாருன்னு.? அவுரு கூட கா வுட்டுறலாமா?)

நன்றி விஜய்.!
நன்றி வீணா.! (ஹை.. இது நல்லாருக்குல்ல..)

தாமிரா said...

நன்றி கயல்விழி.!
("அது புரியப்போயிதானே இப்பிடி வஞ்சப்புகழ்ச்சி பதிவுகள் எழுதிக்கினுருக்கிறோம்". நான் இப்பிடிலாம் ஒத்துப்பேன்னு நினைச்சீங்களா? என் இமேஜ் டேமேஜ் ஆயிரப்போவுது..)

நன்றி வேலன்.! (இப்பிடி ப‌ழங்கால உதாரணம் குடுத்து அப்பப்ப '' நிரூபிக்கிறீங்கண்ணே..)

கார்க்கி said...

நடக்கட்டும் நடக்கட்டும்.. இத பிரிண்ட் அவ்ட் எடுத்து வீட்டுக்கு கூரியர் பண்ணீட்டுத்தான் அடுத்த வேலை..

அத்திரி said...

//கொஞ்ச நாளுக்கு முன்னால தங்கமணி ஊருக்கு போறாங்க ஜாலின்னு பதிவு போட்டதா ஞாபகம். அதுக்குள்ள ’புதுக்கவிதை’ டெல்லி கணேஷ் மாதிரி ஆயிட்டிங்க?//

அண்ணாச்சி ரிப்பீட்டு

Mahesh said...

அப்பறம் எலியப் புடிச்சாச்சா இல்லயா? எப்பிடி புடிச்சிங்கன்னு வெளக்கமா சொன்னீங்கன்னா பல பேருக்கு உதவியா இருக்கும்....

கிழஞ்செழியன் said...

:-)))))))))))

ரோஜா காதலன் said...

//

தாமிரா said...
நன்றி கயல்விழி.!
("அது புரியப்போயிதானே இப்பிடி வஞ்சப்புகழ்ச்சி பதிவுகள் எழுதிக்கினுருக்கிறோம்". நான் இப்பிடிலாம் ஒத்துப்பேன்னு நினைச்சீங்களா? என் இமேஜ் டேமேஜ் ஆயிரப்போவுது..)

//


இந்த வஞ்சப்புகழ்ச்சிய கயல்விழியே கண்டு பிடிக்கலை.. உங்க தங்கமணியா கண்டுபிடிக்கப்போறாங்க?

வாழ்க கல்யாணம் செஞ்சுக்காம ஜாலியா இருக்கும் பேச்சிலர் புகழ்...
(நாங்க தான், ஹி ஹி)

வளர்க கல்யாணம் பண்ணி உண்மை தெளிந்தோர் புகழ் !
(உங்கள தான், ஹா ஹா ஹா)

விஜய் said...

என் மனைவி ஊருக்குப் போய் விட்டால் "என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா"ன்னு ஜனகராஜ் கணக்கா கத்துவேன். அது மட்டுமில்லை. நான் சுதந்திரமா அந்த நாட்கள் மட்டும் இருக்க முடியும். விடிய விடிய டி.வி.யோ அல்லது இன்டர்நெட் ரௌடரோ ஆன் செய்திருக்கும். பெரும்பாலும் சாப்பாடு வெளியே தான். வீட்டுக்குள்ளே அங்கங்கே சாக்ஸ், பேன்ட், சட்டை, பெல்ட் எல்லாம் இறைந்து கிடக்கும். ரிமோட் சோஃபாவுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும். நீங்க பரவாயில்லையே, வீட்டுல இவ்வளவு வேலை பார்க்கறீங்க. சமத்து.

தாமிரா said...

நன்றி கார்க்கி.!
நன்றி அத்திரி.!
நன்றி மகேஷ்.!
நன்றி கிழஞ்செழியன்.!
நன்றி ரோஜா.!
நன்றி விஜய்.! (ந‌ம்ப பழைய விஜய்யா? இந்த பேர்ல நெரய பேரு இருக்குறதுனால கன்பூஷனா இருக்குது..)

வால்பையன் said...

//நீண்ட நாட்களுக்கு பின்னர் கடந்த ஞாயிறன்று காலை 10.30 மணிவரை நிம்மதியாக தூங்கிஎழுந்தேன்.//

வீட்ல ஆளில்லைனா நிம்மதியா

வால்பையன் said...

//ரமா ஊருக்கு செல்வது இந்த எறும்புகளுக்கு எப்படித்தான் தெரியுமோ தெரியவில்லை. //

ஆளில்லாத போது நீங்கள் சிந்தும்,
மிட்சர் துகள்களும், முறுக்கு துண்டுகளும்
வேறு எதையும் கொண்டுவரவில்லையே என்று சந்தோசப்படுங்கள்

வால்பையன் said...

//எவ்வ‌ள‌வோ சொல்லியும் கேட்காம‌ல் க‌ண்ண‌ன், பாபுவையும் கூட்டி வ‌ந்துவிட்டான். //

முதல் நாள் வரசொல்லிவிட்டு மறுநாள் எப்படி இப்படி ஒரு பல்டி

வால்பையன் said...

//ஒரு பாட்டில் த‌ண்ணிருக்காக‌ .:பிரிட்ஜை நான் ஓட்டிக்கொண்டிருப்பது கலைஞருக்கோ ஆற்காட்டாருக்கோ தெரிந்தால் நேர‌டியாக‌ வ‌ந்து கைது ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்வார்க‌ள்//

பகலில் எரியும் தெருவிளக்குகளுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை