Saturday, October 25, 2008

எக்ஸ்க்ளூஸிவ் : வெண்பூ பேட்டி

கி.பி. 2012

ஒரு பிரபல தமிழ் வார இதழின் தீபாவளி சிறப்பு மலருக்காக அந்த பத்திரிகையின் நிருபர் பிரபல சிறுகதை எழுத்தாளர் வெண்பூவுக்கு போன் செய்கிறார்.

"சார், பேட்டி கேட்டிருந்தோமே, எங்க வெச்சுக்கலாம்? உங்க வீட்டுக்கே வந்துடவா?"

"நோ, நோ.. வெளியே ஏதாச்சும் ஹோட்டலிலே சாப்பிட்டுக்கிட்டே பேசலாமே?"

நிருபர் யோசித்தவாறே, "எங்கன்னு நீங்களே.." என்று இழுத்தார்.

"அடையாரில் 'அப்துல் பிரியாணி மஹல்', அல்லது கிண்டி 'ஆம்பூர் அன்லிமிடட் சிக்கன் பிரியாணி' போகலாம். பில்லு நீங்களே செட்டில் பண்ணிடுங்க.. என்ன சொல்றீங்க?"

பேஸ்த்தடித்த நிருபர் போனிலேயே மண்டையை ஆட்டுகிறார். அது தெரியாததால் வெண்பூ மீண்டும், "என்னாச்சு சத்தத்தையே காணோம்?"
இப்போது திணறலோடு நிருபர், "சரி சார்.." என்கிறார். அவருக்கு பட்ஜெட் குறித்த கவலையிருக்கலாம்.

ம்பூர் பிரியாணி பேல‌ஸின் ஒரு டேபிள், சிக்க‌ன், ம‌ட்ட‌ன், காடை என‌ வித‌ வித‌மான‌ பிரியாணிக‌ளால் அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன. எழுத்தாளரும் நிருபரும் எதிரெதிரே அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.

வெண்பூ ச‌ர்வ‌ரிட‌ம், "இன்னும் ஒரு வான்கோழி பிரியாணி ம‌ட்டும் கொண்டுவாங்க‌ போதும். நான் ட‌ய‌ட்ல‌ இருக்கேன்" என்று கூறிவிட்டு நிருப‌ரை நோக்கி திரும்பி..

"ஆர‌ம்பிக்க‌லாமா?" என்றார்.

"ஆர‌ம்பிங்க‌ சார்.."

"ஹ‌லோ, நான் பேட்டியை சொன்னேன்"

அதற்குள்ளாகவே த‌லைசுற்றிக்கொண்டு வ‌ந்த‌து நிருப‌ருக்கு. டேப்பை ஆன் செய்துவிட்டு பேட்டியை ஆர‌ம்பிக்கிறார்.

நிருப‌ர் : முதலில் பர்சனல் கேள்விகள் சார். உங்க‌ளுக்கு பிடித்த‌ உண‌வு?

வெண்பூ : சாப்பாட்டில் அவ்வ‌ள‌வாக‌ என‌க்கு ஆர்வ‌மில்லை. எப்போவாவ‌து கொஞ்ச‌மா இது மாதிரி பிரியாணி சாப்பிடுவ‌து பிடிக்கும்.

நிரு : உங்க‌ள் ம‌னைவி, குழ‌ந்தைக‌ள்.?

வெண் : அவ‌ங்க‌ளுக்கும் பிரியாணிதான் பிடிக்கும்.

நிரு : இல்ல‌ சார் அவ‌ங்க‌ என்ன‌ ப‌ண்றாங்க‌ன்னு கேட்டேன்.

வெண் : பைய‌ன் ஹைதராபாத்தில் 'பிரியா வித்யால‌யா'வில் 4 ங்கிளாஸ் ப‌டிக்கிறார். ம‌னைவி ஹ‌வுஸ் வை.:ப்தான். பிரியாணி ந‌ல்லா ப‌ண்ணுவாங்க‌.

நிரு : உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் குறித்து?

வெண் : ந‌ர்சிம், ப‌ரிச‌ல்கார‌ன் போன்ற‌ பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ளும் என் இனிய‌ ந‌ண்ப‌ர்க‌ள்தாம். நாங்க‌ள் ஒரே க‌ல்லூரியில் ப‌யின்றோம். தாமிரா என்ப‌வ‌ர் தாம்ப‌ர‌த்தில் பிரியாணி க‌டை வைத்திருக்கிறார். இவ‌ரும் எங்க‌ளின் க‌ல்லூரித்தோழ‌ர்தான். ஆனால் பாருங்க‌ள், க‌டை வைத்திருக்கிறாரே த‌விர‌ அவ‌ருக்கு பிரியாணி என்றால் பிடிக்க‌வே பிடிக்காது.

நிரு : நீங்க‌ள் எழுத‌வ‌ராவிட்டால் என்ன‌ பண்ணிக் கொண்டிருந்திருப்பீர்க‌ள்?

வெண் : ஹி..ஹி..

நிரு : 'சிக்க‌ன் பிரியாணியும் சில‌ முட்டைக‌ளும்' என்ற‌ உங்க‌ள் சிறுக‌தை, பிர‌ப‌ல‌ சிறுக‌தைப்போட்டியில் வென்ற‌தைக்குறித்த‌ உங்க‌ளின் க‌ருத்து.?

வெண் : ஆக்ஷுவ‌லா அது ஒரு பெக்கூலிய‌ர் சூழ்நிலையில் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌தை. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் ஒரு மூன்று மாத‌ங்க‌ள் இத்தாலியில் வேலை நிமித்தமாக சிக்கிக்கொண்ட‌ போது பிரியாணியையே பார்க்க‌முடியாம‌ல் இருந்த‌து. அப்போதுதான் வேலையையே விட்டு விட்டு முழுநேர‌ எழுத்தாள‌ராக‌ வேண்டும் என்று சிக்க‌ன் மீது ஆணையிட்டு இந்தியா வ‌ந்து சேர்ந்தேன். அந்த‌ க‌தைக்கு கிடைத்த‌ வ‌ர‌வேற்பை நீங்க‌ளே அறிவீர்க‌ள்.

நிரு : (த‌லை சுற்றிக்கொண்டு வ‌ந்த‌தால்) இத்தோடு நிறுத்திக்க‌லாமா?

வெண் : இல்ல‌ இப்ப‌தான‌ ஆர‌ம்பிச்சிருக்கோம், இங்க‌ முய‌ல் பிரியாணி ந‌ல்லாருக்கும். ட்ரை ப‌ண்றீங்க‌ளா?

நிரு : சார் நான் பேட்டியை சொன்னேன்..

..என்ற‌வாறே ம‌ய‌ங்கி விழுகிறார்.

டிஸ்கி : நேற்றைய‌ அறிவிப்பின் ப‌டி பேட்டி வெளியிட‌ப்ப‌ட்டுவிட்ட‌து. ஆனால் பெரும் தொழில்நுட்ப‌க்கோளாறு கார‌ண‌மாய் (அலுவலகத்தில் இன்று முழுதும் நெட்வொர்க் இல்லை) 'தாமிராவின் சிறுக‌தை' வெளியிட‌முடிய‌வில்லை. மேலும் தீபாவ‌ளி கார‌ண‌மாய் நாளையும், திங்க‌ள்கிழ‌மையும் க‌டை (ஆ.:பீஸ்) லீவு என்ப‌தால் செவ்வாய் அன்று சிறுக‌தை வெளியாகும். பொறுத்துக்கொள்ள‌வும். வாச‌க‌ர்க‌ள், விள‌ம்ப‌ர‌தார‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இனிய‌ தீபாவ‌ளி வாழ்த்துக‌ள்.!

24 comments:

தமிழ்ப்பறவை said...

தெரியாம வெண்பூ உங்க பதிவுல பிரியாணி பத்தி ஒரு கொள்கை விள்க்கப் பின்னூட்டம் போட்டார்.அதுக்காக இந்த் வாங்கு வாங்கிட்டீங்க்ளே...
இன்னைக்கு உங்க பதிவு(பிரியாணி)க்கு , வெண்பூ பட்டை,கிராம்பாயிட்டாரே...
//மேலும் தீபாவ‌ளி கார‌ண‌மாய் நாளையும், திங்க‌ள்கிழ‌மையும் க‌டை (ஆ.:பீஸ்) லீவு என்ப‌தால் செவ்வாய் அன்று சிறுக‌தை வெளியாகும். //
இதெல்லாம் ஆஃபிஸ்லயாயா பண்றீங்க....ம்ம்ம்ம்ம்.அட்ரஸ் கொடுங்க ஒரு ரெஸ்யூம் போஸ்ட் பண்ணிடுறேன்...

பொடியன்-|-SanJai said...

ஒரு அப்பிரியாணியை இந்த வாறு வாறிட்டிங்களே தாமிரா :))

வெண்பூ, கொசுக் கடிச்ச மாதிரி கொஞ்சூண்டு தொப்பை வச்சிருக்கிறது என்னவோ நெசம் தான். அதுக்காக இப்படி எல்லாமா?

ஹோட்டல்னு கூட பாக்காம ஊட்டு ஞாபகத்துல ஊட்டம்மாவுக்கு காபி எல்லாம் ஆத்தி குடுப்பாரே .. அந்த நல்ல மனுஷனையா இப்படி நக்கல் அடிக்கிறிங்க? :)

... உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய( வெண்பூ பத்தி) எதிர்பார்க்கிறோம் திருவாளர் தாமிரா அவர்களே.. :)

Ramesh said...

எப்ப என் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி?

வெண்பூ the first, me next? based on the Biriyani list!

//இதெல்லாம் ஆஃபிஸ்லயாயா பண்றீங்க....ம்ம்ம்ம்ம்.அட்ரஸ் கொடுங்க ஒரு ரெஸ்யூம் போஸ்ட் பண்ணிடுறேன்...//

;-)

கும்க்கி said...

அட ஆண்டவா..........?

கும்க்கி said...

பாவம்க அவரு..
2012 லயும் பிரியாணியா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கும்க்கி said...

ஹோட்டல்னு கூட பாக்காம ஊட்டு ஞாபகத்துல ஊட்டம்மாவுக்கு காபி எல்லாம் ஆத்தி குடுப்பாரே .. அந்த நல்ல மனுஷனையா இப்படி நக்கல் அடிக்கிறிங்க? :)

மங்களூர்க்கிறேன்..

தமிழ் பிரியன் said...

2008 ல் பிரபலமாக இருக்கும் தமிழ் பிரியன் என்ற பிரபல பதிவரை பெட்டி எடுக்க விரும்பும் பத்திரிக்கை நிருபர்கள் டிசமபர் முதல் பிப்ரவரியிலான கால நேரத்தில் சென்னை புகாரியில் பில் செட்டில் செய்யும் நோக்கத்தோடு இருந்தால் பேட்டி தர தயாராக இருக்கிறார். இப்போதே புக் செய்து கொள்ளுங்கள். பின்னர் நாள் கிடைப்பது அரிது.

மின்னுது மின்னல் said...

சென்னை புகாரியில் பில் செட்டில் செய்யும் நோக்கத்தோடு இருந்தால் பேட்டி தர தயாராக இருக்கிறார். இப்போதே புக் செய்து கொள்ளுங்கள்.
//

ஆமாம் இப்போதே பிரியாணி வாங்கி வைத்து விடவும்...!!!!

வெண்பூ said...

ஆஹா.. நீங்க சொன்னப்ப நான் ஏதோ பண்ணப்போறீங்கன்னு நெனச்சேன். ஆனா சூப்பர். படிச்சி முடிச்சப்புறமும் ரொம்ப நேரம் சிரிச்சிகிட்டே இருக்கிறேன்..

வெண்பூ said...

//
வெண்பூ, கொசுக் கடிச்ச மாதிரி கொஞ்சூண்டு தொப்பை வச்சிருக்கிறது என்னவோ நெசம் தான்.
//

ஹி..ஹி..

வெண்பூ said...

//
ஹோட்டல்னு கூட பாக்காம ஊட்டு ஞாபகத்துல ஊட்டம்மாவுக்கு காபி எல்லாம் ஆத்தி குடுப்பாரே .. அந்த நல்ல மனுஷனையா இப்படி நக்கல் அடிக்கிறிங்க? :)
//

இப்ப உமக்கு சந்தோசமாய்யா..

வெண்பூ said...

//
கும்க்கி said...
ஹோட்டல்னு கூட பாக்காம ஊட்டு ஞாபகத்துல ஊட்டம்மாவுக்கு காபி எல்லாம் ஆத்தி குடுப்பாரே .. அந்த நல்ல மனுஷனையா இப்படி நக்கல் அடிக்கிறிங்க? :)

மங்களூர்க்கிறேன்..
//

இனிமே பி கேர்ஃபுல்.. (நான் என்னை சொன்னேன்.. என்னை சொன்னேன்)..

வெண்பூ said...

//
தமிழ்ப்பறவை said...
தெரியாம வெண்பூ உங்க பதிவுல பிரியாணி பத்தி ஒரு கொள்கை விள்க்கப் பின்னூட்டம் போட்டார்.அதுக்காக இந்த் வாங்கு வாங்கிட்டீங்க்ளே...
//

வாங்க தமிழ்ப்பறவை.. எனக்கு ஆதரவா பேசுற ஒரே ஜீவன் இங்க நீங்கதான்.. நீங்க சென்னை வர்றப்ப சொல்லுங்க.. ரெண்டு பேரும் காரைக்குடி ரெஸ்டாரண்டுக்கு போய் பிரியாணி சாப்பிடலாம்.. :)))

ச்சின்னப் பையன் said...

பிரியாணி பேட்டி சூப்பர்... இனிமே மனுசன் தூக்கத்துலேகூட பிரியாணின்னு சொல்ல மாட்டார்...

இதே மாதிரி பலரது பேட்டியும் போடுங்க...

புதுகை.அப்துல்லா said...

."அடையாரில் 'அப்துல் பிரியாணி மஹல்',

//

யோவ் அந்த ஆளை ஓட்டனும்னு முடிவு பண்ணிட்ட. அப்புறம் என்னைய எதுக்குயா வம்புழுக்குற? நான் அடையார்கிட்ட குடி இருக்குறது ஒரு தப்பா???

ஆனாலும் படித்துவிட்டு இன்னும் சிரித்துக் கொண்டு இருக்கிறேன்
:))))))))))))))))))))))))))))))))))))))))))))

விஜய் ஆனந்த் said...

:-)))...

அத்திரி said...

//ஆக்ஷுவ‌லா அது ஒரு பெக்கூலிய‌ர் சூழ்நிலையில் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌தை. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் ஒரு மூன்று மாத‌ங்க‌ள் இத்தாலியில் வேலை நிமித்தமாக சிக்கிக்கொண்ட‌ போது பிரியாணியையே பார்க்க‌முடியாம‌ல் இருந்த‌து. அப்போதுதான் வேலையையே விட்டு விட்டு முழுநேர‌ எழுத்தாள‌ராக‌ வேண்டும் என்று சிக்க‌ன் மீது ஆணையிட்டு இந்தியா வ‌ந்து சேர்ந்தேன். அந்த‌ க‌தைக்கு கிடைத்த‌ வ‌ர‌வேற்பை நீங்க‌ளே அறிவீர்க‌ள்.//


போட்டுத் தாக்குறதுன்னா இதுதானா??

))))))))))))))))

கார்க்கி said...

:)))

(விஜய் ஆனந்த் மாதிரி இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணலாம். இந்த ஏரியால வாய தொரக்கிறது ரிஸ்க்

Anonymous said...

//ரெண்டு பேரும் காரைக்குடி ரெஸ்டாரண்டுக்கு போய் பிரியாணி சாப்பிடலாம்//

ஒரு முடிவோடதானிருக்கீங்க போல. தாமிரா வாருன்னதுல ஒன்னும் தப்பே இல்ல.

தாமிரா said...

நன்றி தமிழ்பறவை.!
நன்றி சஞ்சய்.!
நன்றி ரமேஷ்.!
நன்றி கும்க்கி.!
நன்றி தமிழ்.!
நன்றி மின்னல்.!
நன்றி வெண்பூ.!
நன்றி ச்சின்னப்பையன்.!
நன்றி புதுகை.!
நன்றி விஜய்.!
நன்றி அத்திரி.!
நன்றி கார்க்கி.!
நன்றி வேலன்.!

தாமிரா said...

ரசித்த அனைவருக்கும், பொறுத்த வெண்பூவுக்கும் நன்றிகள். பதிவு எழுதுகையில் அப்போது தோன்றுவதை அப்படியே ஏற்றிவிடுகிறோம். பின்னர் வாசிக்கும்போது மேலும் மெருகேற்றியிருக்கலாம் என தோன்றுகிறது. இப்போது மேலும் சில கேள்விகள் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அனைவருக்குமே இந்த பிரச்சினை இருக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துகள்.!

வால்பையன் said...

பிரியாணி யாருக்கு ரொம்ப பிடிக்கும் என்று எனக்கும் தெரியும்
உண்மையில் அந்த கடை பிரியாணி அருமையாக இருந்தது.
வெண்பூவை ஒருமுறை கூட்டி செல்லுங்கள்

சந்தனமுல்லை said...

உண்மையில் இதுதாங்க நான் கடைசியா உங்க ப்ளாக்கில் படிச்சது. படிச்சிட்டு, ஆஹா....எங்க ஊர் பிரியாணிக்கு இவ்ளோ பெரிய விசிறிகள் இருக்காங்களா..அப்படின்னா உங்களுக்கு உபயோகமான செய்தி ஒன்னு பத்தி பதிவு போடனும்னு நினைச்சிட்டு.....விட்டுட்டேன்!! lol!

குசும்பன் said...

கலக்கல்!:)

சஞ்சய் கமெண்டை வெகுவாக ரசித்தேன்:)