Tuesday, October 28, 2008

ஒரு ஜூலை மாத‌ ஞாயிற்றுக்கிழ‌மை.

யாரோ கழுத்தைப்பிடித்து இறுக்குவதைப்போல போல உணர்ந்தேன். மூச்சு விட முடியவில்லை.. கத்த முனைந்தேன். குரல் எழும்பவேயில்லை.. கைகளை கட்டிலில் அடித்துக்கொண்டு விழித்தேன். சே.. கனவு.

இப்போது மெதுவாக எழ முயன்றேன், ம்.. இப்போதும் முடியவில்லை. சத்தமெழுப்ப முயன்றேன். நிஜமாகவே ஒரு முனகலைக்கூட எழுப்பமுடியவில்லை. அதிர்ந்து போனேன். இது கனவில்லையா.? கைகால்களை அசைக்கமுடிந்தது. ஆனால் எழமுடியவில்லை. முயன்றால் முடியுமோ? கழுத்துப்பகுதிதான் இருப்பது போலவே தெரியவில்லை. சுத்தமாக உணர்ச்சியின்றியிருந்தது. தலையை தூக்கமுடியவில்லை. மிக லேசாக இடது வலதாக அசைக்கமுடிந்தது. மீண்டும் வாயைத்திறந்து குரலெழுப்ப முயன்றேன். இல்லை. ஒரு முனகல் சத்தம் கூட எழவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிற‌து எனக்கு? எங்கே இருக்கிறேன்? தாக்கப்பட்டிருக்கிறேனா? கழுத்துப்பகுதி முழுதும் மரத்துப்போகும்படி ஏதாவது ஊசி போடப்பட்டிருக்கிறதா? பயம் உடலெங்கும் ஊர்ந்தது. அழுகை வந்தது. நான் கட்டிப்போடப்படவில்லை. கைகளால் முகத்தைத்தொட்டுப்பார்க்கமுடிந்தது. வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்.

இது எந்த இடம்? ஏதாவது செய்யமுடியுமா? பயத்தில் சிந்திக்கவே முடியவில்லை. ஏதோ ஒரு லாட்ஜ் அறை போல இருக்கிறது. இருள். மெல்லிய இரவுவிளக்கின் ஒளி எங்கிருந்தோ வந்துகொண்டிருந்தது. சூழலே மிகத்தவறாக, சமூக விரோத செயல்கள் நடக்கும் இடம் போல உணரமுடிந்தது. நம்மைக்கடத்தி வைத்திருக்கிறார்கள். கட்டி வைப்பதற்கு பதிலாக கழுத்துப்பகுதியை என்னவோ செய்து எழுந்து போகமுடியாதபடியும், கத்தமுடியாதபடியும் ஆக்கிவைத்திருக்கிறார்கள். யார்? என்ன பண்ணப்போகிறார்கள்? கைகளால் கழுத்தை தொட்டுப்பார்த்தேன். கைகளால் உணரமுடிந்தது, கழுத்தால் உணரமுடியவில்லை. காயங்கள் இருப்பது போல தெரியவில்லை. தலைப்பகுதி, நெற்றி, முகத்தை ஓரளவு உணரமுடிந்தது. கேள்விகள் பயங்கரமாக என்னிலிருந்து கிளம்பிக்கொண்டேயிருந்தது. பயத்தில் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

கடைசியாக என்ன நினைவிலிருக்கிறது? இப்போ என்ன நேரம்? செல்போன் எங்கே? இரண்டு கைகளாலும் இரண்டுபுறமும் முடிந்தவரை தேடினேன். எதுவுமே அகப்படவில்லை. தலையை சாய்த்து படுக்கையில் என்ன இருக்கிற‌து என பார்க்கமுடியவில்லை. சீலிங்கை நோக்கியவாறு மிகச்சரியாக மல்லாக்க படுக்கவைக்கப்பட்டிருந்தேன். கட்டிலுக்கு நேரேயில்லாமல் .:பேன் சிறிது வலப்புறமாக ஒதுங்கியிருந்தது, மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. இங்கு எப்படி வந்தோம்? எளிய ஒரு பேக்குடன் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து கிளம்பினோம். சனிக்கிழமை மதியம்.. இன்று என்ன கிழமை?.. நாக்பூரில் இறங்கி ஒரு பிரைவேட் பஸ்ஸில் ராய்ப்பூரை நோக்கி கிளம்பினேன். இறங்கவேண்டிய பிலாயில் ஞாயிறு அதிகாலையே இற‌ங்கிய‌தும் நினைவிருக்கிற‌து. இத‌ற்கு முன்பே சில‌ த‌ட‌வைக‌ள் ப‌ணி நிமித்த‌மாக‌ ராய்ப்பூருக்கு வ‌ந்திருந்தாலும், ராய்ப்பூருக்கு முன்பே பிலாயில் இற‌ங்குவ‌து இதுவே முத‌ல் முறை. நாத‌ன் ஒரு ஹோட்ட‌ல் பெய‌ரை த‌ங்குவ‌தற்கு சொல்லியிருந்தார். அங்கே அந்த‌ அதிகாலை நேர‌த்தில் அந்த ஹோட்டலில் அறைக‌ள் இல்லை என்று சொல்லிவிட்ட‌தால் வேறு ஏதோ அந்த‌ நேர‌த்துக்கு அறை இருந்த‌ கொஞ்ச‌ம் ஒதுக்குப்புற‌மான‌ ஒரு ஹோட்ட‌லில் அறை எடுத்து த‌ங்கினேன். முந்தின‌ நாளில் ஹை‌வேஸ் உண‌வ‌க‌த்தில் உண்ட‌ உண‌வு வ‌யிற்றை ஏதோ செய்த‌ப‌டியிருந்த‌தாலும், நிர‌ம்ப‌வும் சோர்வாக‌ உண‌ர்ந்த‌தாலும் அப்ப‌டியே அறையில் நுழைந்த‌வுட‌ன் ப‌டுக்கையில் நுழைந்த‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.

அந்த‌ அறைதானா இது.? நிச்ச‌ய‌மாக‌ இல்லை.க‌ண்க‌ள் செருகிக்கொண்டு வ‌ந்த‌து. என்ன‌ ந‌ட‌க்கிற‌து? ப‌சியும் ம‌ய‌க்க‌மும் என்ன‌வோ செய்த‌து. அது நாம் வ‌ந்த‌ அதே ஞாயிறு இர‌வுதானா? அல்ல‌து மேலும் நாட்க‌ள் க‌ட‌ந்துவிட்ட‌ன‌வா? ஏதாவது செய்யவேண்டும். கால்க‌ளை ந‌க‌ர்த்தி ப‌டுக்கை விளிம்பை அழுந்தப்பிடித்தவாறே எழ‌ முய‌ன்றேன். ம்.. வீண் முய‌ற்சி. க‌ண்டிப்பாக‌ த‌ரையில் பொத்தென‌ விழுந்துவிடுவோம். வேறென்ன‌ செய்ய‌லாம்? மணி என்ன‌ இப்போது என்று தெரிந்துகொள்ளும் ஆவ‌லை அட‌க்க‌முடிய‌வில்லை. இய‌லாமையும், ப‌ய‌மும் என்னை வீழ்த்திய‌து. சென்னையிலிருந்து கிள‌ம்பியதிலிருந்தில் யாருக்கும் போன் செய்ய‌வில்லை என்ப‌தை உண‌ர்ந்தேன். என்ன‌ முட்டாள்த‌ன‌ம்? நாம் எங்கிருக்கிறோம் என‌ யாருக்கும் தெரியாது. வீட்டிற்கு நாக்பூர் சென்றிருக்கிறோம் என்று ம‌ட்டும்தான் தெரியும். அம்மாவை நினைத்துக்கொண்டேன். தாம்ப‌ர‌த்தில் பார்த்த‌ பெண்ணின் ஜாத‌க‌ம் ஒத்துப்போன‌தில் அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ ஒரு ம‌கிழ்ச்சி. அடுத்த‌ வார‌ம் பெண் பார்க்க‌ போவ‌தாக‌ பிளான் செய்திருந்தோமே.? நல்லபடியாக ஊருக்குப்போய் சேர்ந்துவிடுவோமா? நாம் இப்போது பிலாயில் இருப்ப‌து யாருக்குத்தெரியும்.? ஆ.:பீஸுக்கு. அவ‌ர்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்? குறைந்த‌ ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ள் க‌ழித்துதான் அவ‌ர்க‌ளுக்கு உறைக்கும். வீட்டிற்கு கேட்பார்க‌ள். பிலாய் க‌ம்பெனிக்கு கேட்பார்க‌ள். பின்ன‌ரே போலீஸுக்கு போக‌க்கூடும். அவ‌ர்க‌ள் நான் சென்னையிலிருந்து கிள‌ம்பினேனா என்ப‌தையே ச‌ந்தேக‌க்க‌ண்ணோடு பார்க்க‌த்துவ‌‌ங்கிவிட்டால் அவ‌ர்க‌ள் பிலாய் வ‌ரை வ‌ந்து சேர்வ‌து எப்போது? அப்ப‌டியே புல்ல‌ரித்த‌து. ப‌ய‌த்தில் உத‌டுக‌ள் உல‌ர்ந்த‌ன‌.

ச‌த்த‌மில்லாம‌ல் என் க‌ண்க‌ள் ம‌ட்டும் அழுதுகொண்டிருந்த‌ன.எழுந்திருக்க‌வே முடியாத, பேசவே முடியாத‌ நிலைமையில் இந்த‌ இர‌வில் எப்ப‌டி யார‌து உத‌வியை கோருவ‌து? உயிர் பிழைப்பேனா? அறைக்குள் யாரோ வ‌ரும் அர‌வ‌ம் கேட்ட‌து.

தொட‌ரும்..

(இது தொட‌ர்க‌தைய‌ல்ல‌.. அடுத்த‌ ப‌குதியிலேயே முடித்துவிடுவேன். நேர‌மின்மையால் தொட‌ரும் போடுகிறேன். முதல் சிறுகதை என்பதால் ஆர்வமாயிருக்கிறேன், ம‌ற‌க்காம‌ல் பின்னூட்ட‌த்தில் க‌ருத்து தெரிவியுங்க‌ள். காத‌ல், நகைச்சுவைக்க‌தைக‌ளே நான் முடிவு செய்திருந்தாலும், முத‌ல் க‌தை நானே எதிர்பாராமல் கிரைம் க‌தையாக‌ போய்விட்ட‌து.)

18 comments:

கும்க்கி said...

தொடரட்டும்....
தொடரட்டும்......

கும்க்கி said...

உஸ் அப்பாடா....
ராப்பம்மாவை முந்தியாச்சு.

கும்க்கி said...

ரங்கமனி கதைகளைப்போலவே..ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது.
ஹூம்...நானெல்லாம் என்னத்த எலுதி..என்னத்தே கிழிக்கிறது..
உங்களையெல்லாம் பாத்தா ரொம்ப பயமாயிருக்கிறது.

கும்க்கி said...

A M ..P M..Difference in yr blog..pls note.

விஜய் ஆனந்த் said...

:-)))...

interesting-ஆ இருக்கு...

// முதல் சிறுகதை என்பதால் ஆர்வமாயிருக்கிறேன், ம‌ற‌க்காம‌ல் பின்னூட்ட‌த்தில் க‌ருத்து தெரிவியுங்க‌ள் //

பின்னூட்டங்கள பொறுத்துதான் அடுத்த பாகம் ரிலீஸா....


:-))))...

கும்க்கி said...

என்ன ஒருத்தறயும் கானோம்.. எல்லாரும் பயந்து போயிருப்பாங்களோ?

கும்க்கி said...

நன்றி..ஸ்மைலி ஆனந்த் அவர்களே.

கும்க்கி said...

டெக்னிக்கள் சமாச்சாரம்லாம் எழுதறதா சொன்னீங்களே....

narsim said...

தாமிரா.. சுவாரஸ்யமாய் இருக்கிறது.. தொடருங்கள்.. தொடர்ந்து..

நர்சிம்

velprints said...
This comment has been removed by the author.
Anonymous said...

எழுதியவரை விறுவிறுப்பக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

வெண்பூ said...

அருமை தாமிரா.. ரொம்ப இன்டரெஸ்டிங்கா இருக்கு.. முக்கியமான இடத்துல வேற தொடரும் போட்டுட்டீங்க.. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்..

தாமிரா said...

(ரொம்ப திரில்லிங்கா ஒரு கதை எழுதினா எல்லோரும் ரொம்ப ஜாலியா இருக்குது, இன்டரெஸ்டிங்கா இருக்குதுன்னு பதில் போடுறீங்களா? ஒருத்தராவது பயமா இருந்ததுன்னு சொன்னீங்களா..? சோகக்கதை எழுதினா சிரிக்கிறது, நகைச்சுவை எழுதினா சென்டிமன்டா இருந்ததுன்னு சொல்லவேண்டியது, இருங்கடா வெச்சுக்கிறேன்..)

தாமிரா said...

கும்கி : நன்றி..ஸ்மைலி ஆனந்த் அவர்களே.// ஹல்லோ.. என் வேலைய நீங்க பாத்தாக்க நா என்ன பண்றது?

டெக்னிக்கள் சமாச்சாரம்லாம் எழுதறதா சொன்னீங்களே....// இது என்னைத்தானே கேக்கிறீங்க? அடுத்த பதிவு துறை சார்ந்த பதிவுதான். ஆதரவு மட்டும் வரலை.. தெரியும் சேதி.!

தாமிரா said...

நன்றி விஜய்.!
நன்றி நர்சிம்.! (வாங்க தல.. ஒங்க பதிவ பாத்தா மட்டும், இப்ப படிக்கக்கூடாது. சீரியஸா உக்காந்து மொத்தமா படிக்கணும்னு நினைச்சிக்கிட்டு வந்துடறேன். என்னைக்கு நேர்ல வந்து ஒதைக்கப்போறீங்களோ தெர்ல..)

நன்றி வேலன்.!
நன்றி வெண்பூ.!

தமிழ்ப்பறவை said...

நன்றாக இருக்கிறது. எண்ணங்களின் அலைபாய்தல் அருமை(பல முறை நான் பயந்த போது எண்ணியது போல் பொருந்துகிறது). தொடரவும்.

Anonymous said...

இதுவரைக்கும் பய உணர்வை நல்லாவே சொல்லிருக்கீங்க. கடைசீல கனான்னு மட்டும் முடிச்சீங்க அப்பறம் இருக்கு பாருங்க!!:)

தாமிரா said...

நன்றி தமிழ்பறவை.!
நன்றி சின்ன அம்மிணி.! (முடிவு போட்டுட்டேன் பாத்தீங்களா?)