Thursday, October 30, 2008

சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்

துறை சார்ந்து ஏற்கனவே எழுதிய 'நூறு வித்தியாசங்கள்' என்ற பதிவு நான் எதிர்பார்த்ததையும் விட நல்ல வரவேற்பைப்பெற்றது. அந்த மகிழ்ச்சியில் முடிந்தவரையில் அவ்வப்போது சுவாரசியமான சிற்சில துறை சார் விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்திருக்கிறேன். அவ்வாறாக இது இரண்டாவது பதிவு. முதலில் அடிப்படையிலிருந்து படிப்படியாக முன்னேறிக்கொண்டு வரலாம் என நினைத்தேன். முதல் பதிவு Quality Engineering ன் பாலபாடம். ஆனால் சிக்ஸ் சிக்மா ரொம்ப லேட்டஸ்ட். ஏனிப்படி? பின்னர்தான் யோசித்தேன் நாம்தான் என்ன வாத்தியாரா? அல்லது நீங்கள்தான் எல்லாவற்றையும் வரிசைக்கிரமமாக‌ படித்துவிட்டு ஏதும் பரீட்சை கிரீட்சை எழுதப்போகிறீர்களா? துறை சார் விஷயங்களை எதற்காக எழுதுகிறோம்? அதே துறையிலிருப்போரிடம் ஒரு அறிவுப்பகிர்தலாகவும், பிறருக்கு சுவாரசியமான புதிய செய்தியாகவும் இருக்கக்கூடும் என்பதால்தான் அல்லவா? ஆகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சுவாரசியமான விஷயங்களை மட்டும் பார்க்கலாம். சரிதானா?

இந்த 'சிக்ஸ் சிக்மா' என்றால் என்ன? எஞ்சினியரிங் துறைகள் மட்டுமல்லாமல் சகல துறைகளிலும் இன்று இந்த வார்த்தையை பலரும் புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறார்களே.? ஆனால் எவனைக்கேட்டாலும் நேரடியாக பதில் சொல்லாமல் சுத்தி சுத்தி முறுக்கு பிழியறான்களே.? அப்படி என்ன வித்தை இது?

'என்றால் என்ன?' என்ற கேள்வியை விட்டு விட்டு முதலில் 'இதனால் என்ன லாபம்?' என்ற கேள்வியைப் பார்க்கலாம். நாம் தூங்கி விழித்ததில் இருந்து இரவு மீண்டும் தூங்கப்போகும் வரை வீட்டுக்காரியங்கள், அலுவலகக்காரியங்கள் என பல செயல்களை (Process) செய்கிறோம். சரியாகச் சொல்லப்போனால் தூங்குவதும் கூட ஒரு செயலே.! ஒரு தொழிலாளி ஒரு மெஷினை ஓட்டி பொருளைத்தயாரிப்பதும் ஒரு செயல். ஒரு முதலாளி மீட்டிங் ஏற்பாடு செய்து உங்களை திட்டி தீர்ப்பதும் ஒரு செயல். அவரது அழகான செகரட்டரி போன்கால்களை அட்டன்ட் செய்வதும் ஒரு செயல். நாம் பிளாக் எழுதி கிழித்துக்கொண்டிருப்பதும் ஒரு செயல். சரிதானா?

ஒவ்வொரு செயலுக்கும்(Process) ஒரு நோக்கம்(Aim), இடுபொருட்கள்(Input), விளைபொருட்கள்(Output) ஆகியன உண்டு. ஒவ்வொரு செயலும் ஒரு பயனை (Result) எதிர்பார்த்து செய்யப்படுகிறது. அந்த பயன் முழுமையாக கிட்டியதா என்பதுதான் பிரச்சினையே.. அந்த பயனை நாம் 100% என்று வரையறுத்தால் அந்த செயல் எத்தனை சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதே கேள்வி. நீங்கள் ஒரு செயலைச்செய்கிறீர்கள். எத்தனை சதவீதம் வெற்றி பெற்றால் மகிழ்வீர்கள்? ஒரு 80%? 90%? பெரும்பாலோனோர் 95% வெற்றியடைந்தாலே திருப்தியடைகிறார்கள் என்பது கணிப்பு. நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள் என வைத்துக்கொள்வோம். (நானெல்லாம் 60% நடந்தாலே போதும்டா சாமின்னு சந்தோஷமாயிருவேன்).

இப்போது ஒரு சின்ன கேள்வி. ஒரு விமானம் எழுவதும் (Take-off), இறங்குவதும் (Landing) இரண்டு செயல்கள். நமது சென்னை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 200 விமான எழுதல்கள் (Take-offs) நிகழ்கிறது. 95% சதவீத செயல் வெற்றி போதும் எனில்........... ஒரு நாளைக்கு 10 விமான விபத்துகள்.!

கற்பனை செய்தும் பார்க்கமுடியமா நம்மால.?

அதிக‌ பட்சமாக 99% வெற்றி என்று கொண்டாலே ஒரு நாளில் 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகும். சென்னையில் மட்டும் 2 விபத்துகள் எனில் நாடெங்கும்.? உலகமெங்கும்.? (ஒரு நாளில் உல‌க‌ம் முழுதும் சுமார் 80987 விமான‌ங்க‌ள் Take off ஆகின்ற‌ன‌) அப்படியானால் என்ன செய்வது? 100% வெற்றி வேண்டும் நமக்கு.! ஆனால் நூறு சதவீத வெற்றி சாத்தியமா? சாத்தியமில்லை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படியானால் நூறை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிட்டத்தில் நெருங்கிவிடவேண்டும்.

'சிக்ஸ் சிக்மா' நமக்கு தருவது 99.9997% வெற்றி.

டிஸ்கி : ஆரம்பிக்கறதுக்குள்ளாகவே பதிவு முடிஞ்சு போச்சே.. இதே போதும் போலவும் தோன்றுகிறது. பின்னூட்டக்கருத்துகளைப் பொறுத்தே இரண்டாம் பாகம் போகலாமா? வேண்டாமா என்று முடிவு செய்வேன்.

63 comments:

வால்பையன் said...

me the first

வால்பையன் said...

//சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்//

நக்மா தங்கச்சியா?

வால்பையன் said...

//எதிர்பார்த்ததையும் விட நல்ல வரவேற்பைப்பெற்றது.//

மற்ற மொக்கைகளுக்கு அது பரவாயில்லை என்பதால்

வால்பையன் said...

//சிற்சில துறை சார் விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம் என நினைத்திருக்கிறேன்.//

சரக்கு துறை இதில் வருமா?

வால்பையன் said...

//துறை சார் விஷயங்களை எதற்காக எழுதுகிறோம்?//

வேறு மொக்கைகள் இல்லாததால்

வால்பையன் said...

//பிறருக்கு சுவாரசியமான புதிய செய்தியாகவும் இருக்கக்கூடும்//

மன்னிக்கவும் செய்தி மட்டும் தான்
சுவாரிசியம் நாங்க சொல்லனும்

வால்பையன் said...

//இந்த 'சிக்ஸ் சிக்மா' என்றால் என்ன?//

ஆம்பளைக்கு சிக்ஸ் பேக் மாதிரி இது எதாவது கவர்ச்சி மேட்டரா

வால்பையன் said...

//இந்த வார்த்தையை பலரும் புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறார்களே.? //

அப்போ அதுவே தான்

வால்பையன் said...

//அவரது அழகான செகரட்டரி போன்கால்களை அட்டன்ட் செய்வதும் ஒரு செயல்.//

அப்போது ஓரக்கண்ணால் ரசிப்பதும் ஒரு செயல்

வால்பையன் said...

//நாம் பிளாக் எழுதி கிழித்துக்கொண்டிருப்பதும் ஒரு செயல்.//

ப்ளாக் எழுதுவது மட்டுமே உங்கள் செயல்,
கிழிப்பது பின்னூட்டவாதிகளின் செயல்

வால்பையன் said...

//நீங்கள் ஒரு செயலைச்செய்கிறீர்கள். எத்தனை சதவீதம் வெற்றி பெற்றால் மகிழ்வீர்கள்? //

ஒரு பின்னூட்டம் வந்தாளே மகிழ்ச்சி தான்

வால்பையன் said...

//பின்னூட்டக்கருத்துகளைப் பொறுத்தே இரண்டாம் பாகம் போகலாமா? //

நான் அதுக்கு ஆப்பு வச்சிட்டேனா

வால்பையன் said...

//வேண்டாமா என்று முடிவு செய்வேன்.//

முடிக்கும் போது எப்பயுமே உண்மையை தான் எழுதனும்

வால்பையன் said...

நன்றி
வணக்கம்
மீண்டும்
சந்திப்போம்

வீணாபோனவன் said...

ஐய்யா சாமி, நீங்களும் முறுக்கு பிழியுறிங்களே... :-) ஏனக்கு சிக்ஸ் சிக்மாவும் தெரியும் சிக்மா 6ம் தெரியும்... ஆனா, நீங்க சொல்லவந்தத சொல்லுங்க... மண்டையில் இருக்க கொஞ்சத்த வளர்க்க உதவலாம் :-)

வீணாபோனவன்.

வால்பையன்: செம காமடிங்க... சிரிச்சிக்கிட்டே இருக்கேன் (நான் பைத்தியம்னு நெனச்சிடாதிங்க :-)

தமிழ் பிரியன் said...

எனக்கு சில்க் ஸ்மிதா தான் தெரியும்.. அதென்ன சிக்ஸ் சிக்மா???

தமிழ் பிரியன் said...

ஓ.. பதிவைப் படித்தால் தான் புரியுமோ.. இருங்கபதிவை படித்தால் புரியுமான்னு பார்க்கிறென்.. ;)

வால்பையன் said...

//வால்பையன்: செம காமடிங்க... சிரிச்சிக்கிட்டே இருக்கேன் (நான் பைத்தியம்னு நெனச்சிடாதிங்க :-)//

என்னை பார்த்தால் உங்களுக்கு காமெடியனா தெரியிறேனா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ் பிரியன் said...

ஓ.. இது தானா சிக்ஸ் சிக்மா? தினமணியில் வந்த இது தொடர்பான ஒரு கட்டுரையை ஆயில் கூட போட்டு இருந்தார். ISO போன்ற தரக்கட்டுப்பாடு போன்றதா இதுவும்?

Anonymous said...

அடப்பாவிகளா,

அவரக் கலாய்ச்சு எழுத விடாமச் செய்துராதீங்க.

எழுதுனவரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருக்கு? அப்புறமென்ன?

நல்லாக் கேய்க்குராய்ங்கய்யா டீடேய்லு.

தமிழ் பிரியன் said...

இரண்டாவது பகுதிக்கு வெயிட்டிங்! ஆயில்யனுக்கும் தகவல் சொல்றேன். அவர் இது போன்றவற்றை விரும்பி படிப்பார்.

Raghavan said...

சிக்ஸ்‍ சிக்மா ஒரு உன்னதமான விஷயம். This can be applied to any type of industry even though it is difficult to understand. The final destination is to achieve the maximum productivity. மிக நன்றாக எழுதுகின்றீர்கள். தொடரட்டும் இந்த பணி.

ஆயில்யன் said...

அருமையாய் ஆரம்பித்திருக்கிறீர்கள்! தொடர்ந்து தாருங்கள் !

நிறைய மேனேஜ்மெண்ட் & குவாலிட்டி கான்செப்ட்ஸ் நம்ம ஆளுங்க ரொம்ப சிம்பிளா நடைமுறையில செஞ்சுக்கிட்டிருக்காங்க! பட் இது போன்ற விசயங்கள் அவ்வளவாக பெரிய அளவில் தெரிவதில்லை பலருக்கும்!

தொடருங்கள்!
வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நானும் ஒரு பக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறேன் :)))

Anonymous said...

ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு. நான் வால் பையன் பின்னூட்டங்கள சொல்லலை. உங்க பதிவச்சொன்னேன்.

Indian said...

nice. pls proceed.

பாபு said...

மும்பை டப்பா வாலாக்கள் வெற்றி சதவீதம் மிக அதிகம் ,அதை பற்றிய
செய்திகள் படித்திருக்கிறீர்களா? இங்கிலாந்து இளவரசர்(?) சார்லஸ் கூட வந்து பார்த்து விட்டு போனார்

Raj said...

சுவாரசியமாக உள்ளது...நான் இந்த தேர்வை எழுத ஆவலாக உள்ளேன்...மேலும் விபரங்கள் தர முடியுமா.

அத்திரி said...

தங்கமணி ஜால்ரா???!!! விலிருந்து எப்படி வெளியே வந்தீங்க?. ஆரம்பம் நன்றாக உள்ளது.

Ŝ₤Ω..™ said...

Boss.. சீக்கிறம் அடுத்த chapterக்கு போகலாம்..

தாமிரா said...

நன்றி வால் பையன்.!
நன்றி வீணா.!
நன்றி தமிழ்.!
நன்றி வேலன்.!
நன்றி ராகவன்.!
நன்றி ஆயில்யன்.! (உங்களை பதிவுக்கு வரவழைக்க இவ்வளவு சிரமப்படணுமா?)
நன்றி சின்ன அம்மிணி.!

தாமிரா said...

நன்றி இந்தியன்.!
நன்றி பாபு.!
நன்றி ராஜ்.!
நன்றி அத்திரி.!
நன்றி சென்.!

தாமிரா said...

சில பதிவுகளில் மட்டும் தமிழ்மணம் டூல் பார் தெரியமாட்டேங்குது. இந்த பதிவை இன்னும் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. யாராவது உதவவும்.

தாமிரா said...

ஏற்கனவே தெளிவாக பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். துறை சார்ந்த பதிவுகளில் எனக்கு எது சுவாரசியமானதாக தோன்றுகிறதோ அதையே மிக எளிமையாக எழுத முயல்கிறேன். டெக்னிகல் பிடிக்காதவர்களுக்கோ, அல்லது ஏற்கனவே கரைகண்டவர்களுக்கோ இது போன்ற பதிவுகள் போரடிக்கக்கூடும். அப்படியும் பலர் இருக்கலாம் என்பதையும் நான் உணர்கிறேன். அவர்கள் சற்று சகித்துக்கொள்ளவும்.

கார்க்கி said...

நல்ல முயற்சி சகா.. கலக்குங்க‌

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான செகரட்டரி போன்கால்களை அட்டன்ட் செய்வதும் ஒரு செயல்

ஏதோ உருப்படியா ஒரு பதிவு போட்டீங்கன்னு பாத்தா, அதிலயுமா.

உங்களை சொல்லி குத்தமில்லை. எல்லாம் அந்த நக்மா சாரி சிக்மா பண்ற் வேலை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சில பதிவுகளில் மட்டும் தமிழ்மணம் டூல் பார் தெரியமாட்டேங்குது. இந்த பதிவை இன்னும் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. யாராவது உதவவும்

Me too have the same problem, if any body knows how to rectify, share it here pls.

Joe said...

95% சதவீத செயல் வெற்றி போதும் எனில்........... ஒரு நாளைக்கு 20 விமான விபத்துகள்.!

That should've been 10!

;-)

சிக்கிமுக்கி said...

வெற்றி தோல்வியின் அளவீட்டுக் குறிப்பா?

வெற்றி 99.9997 என்றும்
தோல்வி 100000க்கு 3 என்றும் குறிப்பிடுவதுதான் 'சிக்சு சிக்மா'வா?

இப்படித்தான் புரிந்து கொண்டேன்.

'டிஸ்கி' என்றால் என்ன?

தாமிரா said...

நன்றி கார்க்கி.!
ந‌ன்றி அமிர்த‌வ‌ர்ஷினி அம்மா.!

ந‌ன்றி ஜோ.! (இருந்தாலும் நீங்க‌ ரொம்ப‌ ஷார்ப். ந‌ன்றி ஜோ, இய‌ன்றால் திருத்திவிடுகிறேன்)

ந‌ன்றி சிக்கிமுக்கி.! (இது சிக்ஸ் சிக்மா நுட்பத்தை புரிந்து கொள்வ‌த‌ற்கான‌ அடிப்ப‌டையே.! 3.4 DPMO என்ப‌து 'சிக்ஸ்சிக்மா' லெவ‌லில் இய‌ங்கிக்கொண்டிருக்கும் ஒரு செய‌லின் ப‌லன், அவ்வ‌ள‌வுதான்.)

தாமிரா said...

டிஸ்கி என்றால் டிஸ்கிளைம‌ர். ப‌திவுல‌க‌த்துக்கு நீங்க‌ள் புதுசா?

saclat said...

Nice explanation, thank you,

saclat said...

i Need 2nd part please write it down, thankyou

gopinath said...

Quality is the key in anything we do. These days anything and everything can be commoditizes very soon, and so innovation and quality are two factors which will keep the Org up front.
When I use websites from India (the banks, insurance companies mostly) I get a feel that requirements are mostly written by the techies who code those pages rather than by the Business Analysts. And those who have experienced such design, will know the navigation difficulties. Now I can see things are improving a lot. And I am sure, it is these kind of training that would help the quality improvement.
Japan learnt process and Technology from the US after WWII, and they added the fine quality to those which made them successful. But soon everyone caught on, and now we know, where Japan is.
I have had so much of difficulties with the deliverables from my offshore vendors, and every meeting I will always start off with a quality as the mantra, and people never used to care. I am glad that this awareness is spreading.
Thank you again for this writeup, and I would encourage everyone to read this.

கும்க்கி said...

:))

ஆட்காட்டி said...

கொசுறு>>இதனை அறிமுகப் படுத்தியவர்கள் யப்பானியர்கள்.

சந்தனமுல்லை said...

நல்ல ஐ ஓப்பனர்..அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்..இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்துமா? சாப்ட்வேர்?

வெண்பூ said...

அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் தாமிரா.. இதை நீங்கள் கண்டிப்பாக தொடரலாம். நான் சிக்ஸ் சிக்மா என்றால் 1 ஃபெய்லியர் இன் ஒன் மில்லியன் என்று நினைத்தேன். நீங்கள் சொல்வது 3 இன் ஒன் மில்லியன் என்று வருகிறது எது சரி?

supersubra said...

ஃபெய்லியர் இன் ஒன் மிலலியன் ZERO PPM பத்து லட்சம் நட்டு தயாரித்தால் அதில் ஒன்று கூட தரச்சோதனையில் பழுதாககூடாது. தொடரட்டும் உங்கள் தமிழ்சேவை.

என்னுடைய SAP வருகை தாருங்கள்

http://sap-supersubra.blogspot.com/2007/04/sap.html

தாமிரா said...

நன்றி சாக்லெட்.!
நன்றி கோபிநாத்.! (விளக்கமும், பாராட்டும்.. அதைவிட பிறருக்கும் சிபாரிசு செய்வீர்கள் என்ற வரியும் மகிழச்செய்தது. அவ்வப்போது இதுபோன்ற பதிவுகள் வரும். உங்கள் தொடர்ந்த ஆதரவை எதிர்நோக்குகிறேன்)

நன்றி கும்கி.!
நன்றி ஆட்காட்டி.! (இன்னும் தெளிவாக மோட்டரோலா என்றே சொல்லியிருக்கலாமே)

தாமிரா said...

ஹைய்யா.. 50.!

தாமிரா said...

நன்றி முல்லை.! (நிச்ச‌ய‌மாக‌ அனைத்து துறைக‌ளுக்குமே பொருந்தும். மேலும் இதைப்ப‌ற்றி தெரிந்துகொள்ளும்போது புரிந்துகொள்வீர்க‌ள்)

நன்றி வெண்பூ.! (இன்னும் ச‌ரியாக‌ சொன்னால் 3.4 DPMO - Defects per million opportunities என்ப‌தே ச‌ரியான‌து)

ந‌ன்றி சூப்ப‌ர்சுப்ரா.!

தமிழ்ப்பறவை said...

ஆரம்பம் நன்று...எனக்கும் கொஞ்சம் பேஸிக்ஸ்தான் தெரியும்..மேலதிகத் தகவல்களுக்கு ஆவலாய் இருக்கிறேன். தொடரவும் தாமிரா...

Mahesh said...

அட அட அட ... இவ்வளவு சிம்பிளக்க் கூட சொல்ல முடியுமா? எங்க சிறு தவறு கூட சகிச்சுக்க முடியாதோ அங்க லிங்க் போட்டு அழகா விளக்கிட்டீங்க.

சிம்பிளாவும் எழுதுங்க... கொஞ்சமா டெக்னிகல் விஷயங்களும் கலந்து எழுதலாமே? வழக்கமான "காஸியன் பெல் கர்வ்" பார்தோம்னா இத ஏன் 6 ஸிக்மான்னு சொல்றங்கங்கறது புரியும்.

மங்களூர் சிவா said...

//
வால்பையன் said...

//சிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்//

நக்மா தங்கச்சியா?
//

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

//
வால்பையன் said...

//துறை சார் விஷயங்களை எதற்காக எழுதுகிறோம்?//

வேறு மொக்கைகள் இல்லாததால்
//

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

//
//எதிர்பார்த்ததையும் விட நல்ல வரவேற்பைப்பெற்றது.//

மற்ற மொக்கைகளுக்கு அது பரவாயில்லை என்பதால்
//

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

//
வால்பையன் said...

//இந்த 'சிக்ஸ் சிக்மா' என்றால் என்ன?//

ஆம்பளைக்கு சிக்ஸ் பேக் மாதிரி இது எதாவது கவர்ச்சி மேட்டரா
//

ரிப்பீட்டு

நாடோடி இலக்கியன் said...

அப்பாடா சந்தேகம் தீர்ந்தது.
நல்ல முயற்சி.ஆக்சுவலா சிக்ஸ் சிக்மா என்ற பெயரில் ஒரு consultancy-யிலிருந்து call பண்ணுவாங்க,அப்போது அந்த பெயருக்காண அர்த்தம் என்னவாக இருக்கும்னு யோசித்ததுண்டு,இப்போ புரியுது.
நல்ல முயற்சி தாமிரா.

Suresh said...

Nanum testing than super good to read and good that u shared

2009kr said...

நல்ல முயற்சி ... மிக எளிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது தொடரட்டும் உங்கள் சேவை

2009kr said...

நல்ல முயற்சி ... மிக எளிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது தொடரட்டும் உங்கள் சேவை

blogpaandi said...

சிக்ஸ் சிக்மாவிற்கும் சிக்ஸ் பேக்குக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா ?

சிக்ஸ் சிக்மா கோட்பாடுகள் எல்லா துறைகளுக்கும் பொதுவானதா? வேறுபடுமா?

Prasanna said...

PLz Proceed...and try 2 tel abt 5S too...