Friday, October 31, 2008

அப்டியே ஷாக்காயிட்டேன்.!

சமீபத்தில் ஒரு நாள் நண்பரின் காரில் வெளியே சுற்றிவிட்டு திரும்ப வீட்டுக்கு வருகையில் வீடு வரை வரமுடியாமல் டைடல் பார்க்கிலேயே இறக்கிவிட்டு போய்விட்டார். அவருக்கு என்ன அவசரமோ? இருப்பினும் எனக்கு லேசாக உள்ளுக்குள் கோபம் வந்தது. யாரையுமே நம்பக்கூடாது. நமது பைக்கை எடுத்துக்கொண்டு வந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்குமா? என்று வெளியாகிய குமுறலை அடக்கிக்கொண்டேன். எத்தனை நாள் வீட்டுக்கு கொண்டுவந்து விட்டிருப்பார். ஒருநாள் பாதிவழியில் இறக்கிவிடுவதற்கு காரணம் ஏதாவது இருக்கும் என நினைத்து என்னை தேற்றிக்கொண்டேன்.

ஆட்டோ பிடித்து விடலாமா? ரமா நினைவுக்கு வந்தாள். இத்தனை பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் இருக்கும் போது ஒரு ஆளுக்காக ஆட்டோ பிடிப்பது என்பது ஊதாரித்தனம். இரண்டல்லது மூன்று பேரென்றாலோ, உடல் நலமில்லாதபோதோ, ஏதோ மிக‌ அவ‌ச‌ர‌மென்றாலோ அதில் ஒரு நியாய‌மிருக்கிற‌து. ப‌ல்லை ந‌ற‌ந‌ற‌வென்று க‌டித்தாள்.

ஷேர் ஆட்டோவை நினைத்தாலே வ‌யிற்றைக்க‌ல‌க்கிய‌து. ஒரு ஆள் ம‌டியில் இன்னொரு ஆளை உட்கார‌வைத்து புளிமூட்டையைப்போல‌ அடைத்து கிட்ட‌த்த‌ட்ட பாதி ஆட்டோ காசை வேறு பிடுங்கிவிடுகிறார்க‌ள். ப‌ஸ்? அப்ப‌டியே லேசா .:பிளாஷ்பேக் மலர்ந்தது. சென்னை வ‌ந்த‌ புதிதில் ஒரு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் கிண்டியிலிருந்து 47D, 147 ஆகிய‌ பேருந்துக‌ளில் ப‌ய‌ணித்து அம்ப‌த்தூர் சென்ற‌தும், அப்ப‌டியே என‌து ச‌கிப்புத்த‌ன்மைக்கு அக்னிப‌ரீட்சை ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தும் நினைவுக்கு வ‌ந்த‌து.

இப்ப‌டி யோச‌னையிலேயே ரோடை கிராஸ் பண்ண சிக்னலுக்காக நின்‌ற‌போது ஒரு புத்த‌ம்புதிய‌ MTC ப‌ஸ் வ‌ந்து சிக்ன‌லில் நின்ற‌து. யோசிக்காம‌ல் ப‌ட்டென‌ ஏற முய‌ற்சித்த‌போதுதான் க‌வ‌னித்தேன், க‌த‌வுக‌ள் லாக் செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌ன. ஏமாற்றத்தோடு அந்த‌ ட்ரைவரை பார்த்ததில் ஏதோ மனமிறங்கி கதவுகளைத்திறந்தார். உள்ளே ஏறிய‌துமே அப்ப‌டியே ஷாக்காயிட்டேன். என் அலுவ‌ல‌க‌த்தில் கூட‌ என்றுமே நான் உண‌ர்ந்திராத அளவில் ஏசி குளிர். த‌க‌த‌க‌வென‌ இன்டீரிய‌ர். அருகிலிருக்கும் LCD யில் பின்புற‌ டிராபிக்கை டிரைவ‌ர் க‌வ‌னிக்கிறார். ஹைடெக்கான‌ டாஷ்போர்டு. சொகுசு இருக்கைக‌ள். (வெளியூர் பேருந்துகள் பிச்சை வாங்கவேண்டும்) கூட்ட‌மில்லாத‌ த‌ன்மை. இன்னொரு ஷாக். சாதார‌ண‌ ப‌ஸ்க‌ளில் இங்கிருந்து பெருங்குடிக்கு 3 ரூபாய் இருக்குமா? இதில் 6 ரூபாய் இருக்க‌லாம் என‌ நினைத்தேன். கையிலிருந்த‌ அட‌க்க‌மான‌ பிரின்ட‌ரில் ச‌ர‌க்கென‌ 18 ரூபாய்க்கு டிக்கெட்டை பிரின்ட் செய்து கொடுத்தார்.

நாம் சென்னையில்தான் இருக்கிறோமா என்ற‌ அதிர்ச்சியில் திற‌ந்த‌ வாய் மூட‌வில்லை. அத‌ற்குள் பெருங்குடி வ‌ந்துவிட்ட‌து.

******

ச‌மீப‌த்தில் அந்த‌ பிர‌ப‌ல‌ வார‌ இத‌ழின் தீபாவ‌ளி சிற‌ப்பித‌ழை வாங்கினேன். க‌வ‌னிக்க‌வும். தீபாவ‌ளி ம‌ல‌ர் அல்ல‌, சிற‌ப்பித‌ழ்.

மொத்த‌ம் : 148 ப‌க்க‌ங்க‌ள்

விள‌ம்ப‌ர‌ங்க‌ள் : 38.5 ப‌க்க‌ங்க‌ள்

சினிமா ம‌ற்றும் அதைச்சார்ந்தவை : 37 ப‌க்க‌ங்க‌ள்

(இதைத்த‌விர‌ குறைந்த‌ ப‌ட்ச‌ம் 10 ப‌க்க‌ங்க‌ளிலாவ‌து சினிமா, ம‌ற்றும் ந‌டிக‌ர்க‌ள் குறித்த‌ ப‌ட‌ங்க‌ள், துணுக்குக‌ள் என‌ இட‌ம்பெற்றிருந்த‌ன‌. அவ‌ற்றை முழு ப‌க்க‌மாக‌ க‌ன்சிட‌ர் செய்ய‌வில்லை)

த‌விர‌ மீத‌மிருந்த‌ ப‌க்க‌ங்க‌ளில் க‌ணிச‌மான‌ மொக்கைப்ப‌க்க‌ங்க‌ள் த‌விர்த்தும், சில‌ உருப்ப‌டியான‌ க‌ட்டுரைகள் (நில‌வைத்தொட்டு வா, காற்றில் க‌ரையும் உயிர்க‌ள்), நாஞ்சில்நாட‌ன், அஜ‌ய‌ன்பாலாவின் உருப்ப‌டியான‌ ப‌கிர்த‌ல்க‌ள் ஆகியவற்றைக்க‌ண்டு என‌க்கு ம‌கிழ்ச்சியே.!

******

ச‌மீப‌த்தில்தான் JKR'ன் நாய‌க‌ன் ப‌ட‌ம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த‌து. எதிர்பார்த்த‌ சில‌ பில்ட் அப் காட்சிக‌ள், பில்ட் அப் வ‌ச‌ன‌ங்க‌ள், பாடல்கள், சண்டை‌க்காட்சிக‌ளைத் த‌விர்த்துப்பார்த்தால் இத்த‌னை சுவார‌சிய‌மான‌ திரைக்க‌தையும், எதிர்பாராத‌ திருப்ப‌ங்க‌ளையும், இய‌ல்பான‌ காரெக்ட‌ர்க‌ளையும் கொண்ட‌ ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தைப்பார்த்து ரொம்ப‌ நாட்க‌ளாகிற‌து என்றுதான் தோன்றிய‌து. இந்த‌ விஜ‌ய், அஜித் எல்லாம் இதைப்போன்ற‌ இய‌ல்பான‌ (அதே ச‌ம‌ய‌ம் அவ‌ர்க‌ளுக்கு(?) வேண்டிய‌ ஆக்ஷ‌ன் காட்சிக‌ளும் இருக்கிற‌து) திரை‌க்க‌தைக‌ளில் ந‌டிப்பார்க‌ளேயானால் ப‌ட‌மும் பிச்சுக்கும், ந‌ம‌க்கும் ந‌ல்ல‌ திருப்தி. செய்வார்க‌ளா?

31 comments:

cable sankar said...

நாயகன் திரைப்படம் நல்ல படம்தான் ஜே.கே.ஆர்ரின் காமெடியை தவிர..

சென்ஷி said...

:))

சந்தனமுல்லை said...

ஹை..நல்ல போஸ்ட்!!
டிக்கெட் விலை..பயங்கரமாதான் இருக்கு! ம்ம்..ஒரு பத்து ரூபா இருக்கும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்!!

வால்பையன் said...

ஷேர் ஆட்டோ பற்றி தப்பா பேசுரதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஷேர் ஆட்டோ என்பது என்ன?
பங்கு ஆட்டோ!
ஒன்பது பேர் ஏறி பத்தாவதா ஏறுகிறவர்களுக்கு சரி பாதியாக பங்கை பிரித்து கொடுப்பது

நாங்கல்லாம் செமத்தியா வாங்கிருக்கோம்ல

வால்பையன் said...

தலைவர் ரித்தீஷின் பெருங்குடி கிளை தலைவர் ரெடி

Anonymous said...

தாமிரா,

’டைம்ஸ் இன்று’ - தீபாவளிச் சிறப்பிதழ் படித்தீர்களா?

பிளாக் எழுதுவது பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது; படியுங்கள்.

தாமிரா said...

நன்றி கேபிள்.!
ந‌ன்றி சென்ஷி.!

ந‌ன்றி முல்லை.! (ஹை..நல்ல போஸ்ட்!!// முந்தைய‌ ப‌திவுக‌ளில் பின்னூட்ட‌ம் இல்லையே, அப்ப‌ புடிக்க‌லியா?, கதையை விடுங்க, 'சிக்ஸ்' கூடவா?)

ந‌ன்றி வால்பைய‌ன்.!

ந‌ன்றி வேல‌ன்.! (அந்த மொக்கைக்க‌ட்டுரையை நானும் ப‌டித்தேன்)

Raghav said...

ஐயா,தாங்கள் பயணம் செய்த பேருந்தில் தொலைக்காட்சி பெட்டி (இலவச தொலைகாட்சி பெட்டி அல்ல) அல்லது பண்பலை ஒலிபரப்பு இருந்துச்சுங்களா??

aganaazhigai said...

தாமிரா, நல்ல பதிவு. எனக்கு என்ன தோனுதுன்னா, சுகமா பயணம் செய்ய நாம கொடுக்கற விலை இது. மலர் பத்தி சொன்னீங்க, எழுதறவங்களுக்கும், வெளியிடரவங்களுக்கும் அது வியாபாரம் மட்டுமே. அதில் வேறு எதையும் நாம எதிர்பார்ப்பது வீண். உங்களோட எழுத்து நடை சுப்பர். எனககு எழுத நிறைய விஷயம் இருந்தாலும் கணினியில கொண்டுவர சிரமமா இருக்கு. எப்பவாவது பதிவர் சந்திப்பு நடக்க வாய்ப்பு இருந்தா முடிஞ்சா கூப்பிடுங்க, கூப்பிடு தொலைவுலதான் நான் இருக்கேன். அப்பத்தான் எனககு வலை பற்றி சில சந்தேகங்கள தெரிஞ்சுக்க முடியும். மரக்காணம் பாலா, லதானந்த் ரெண்டு பெரும் தொலைபேசியில பேசுனாங்க, கொஞ்சம் தெளிவாச்சு. முடிஞ்சா நீங்க உதவுங்க.

Raghav said...

18ரூபாய்க்கே இப்புடி சொல்றீங்களே.. இங்க பெங்களூர்ல அப்புடியே ரெண்டு மடங்கு.. ரெண்டோ அல்லது மூணு பேர் இருந்தா பஸ்ஸுல (சாதாரண பஸ்ஸூ) போறத விட ஆட்டோ சீப்பா முடிஞ்சுரும்..

கார்க்கி said...

47D, 147 கிண்டி போகுமா? தல என்ன 90ஆ?

rapp said...

அப்படியா, ரொம்ப ஜாஸ்திதான். இதுக்கு ஆட்டோ பிடிச்சே போயிருக்கலாம்:):):) இதெல்லாம் ஓகே, அந்த பஸ்ல வேலை செய்ற கொடுத்து வெச்ச டிரைவர் மற்றும் கண்டக்டர எப்டி செலெக்ட் பண்ணுவாங்க.

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அஜீத் சூரியா, விஜய் இவங்களுக்கெல்லாமா ஒரு நல்ல கதையை கொடுப்பாங்க? அதிருக்கட்டும், இவ்ளோ லேட்டாவா எங்க தல படத்தை பாத்தீங்க. இவ்ளோ நாளாவா ஹவுஸ்புல்லா இருந்துச்சு:):):)

முரளிகண்ணன் said...

\\இவ்ளோ நாளாவா ஹவுஸ்புல்லா இருந்துச்சு:):):)
\\

:-))))))))))))))))))

ஸ்ரீ said...

அண்ணேன் அந்த பேருந்து வரவேற்கத்தக்கது தான்ணே. நான் தினமும் அதை பிடித்துவிட வேண்டும் என கிளம்புவேன் ஆனால் ஒரே ஒரு முறை தான் சரியாக பயணித்தேன் அதுவும் நல்ல மழை நாளில் நின்ற படியே :(

இங்கு தான் ஈ அடிக்கிறது பெங்களூரில் இது மிக பிரபலம் நிறைய பயணிகள் பார்க்கலாம்.

கிருஷ்ணா said...

கட்டணத்தை மற்ற பேருந்துக் கட்டணத்தொடு ஒப்பிடாதீர்கள்

ஆட்டோ கால் டாக்சியோடு ஒப்பிடுக

ரொம்ப சீப்

மொக்கைச்சாமி said...

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அஜீத் சூரியா, விஜய் இவங்களுக்கெல்லாமா ஒரு நல்ல கதையை கொடுப்பாங்க? அதிருக்கட்டும், இவ்ளோ லேட்டாவா எங்க தல படத்தை பாத்தீங்க. இவ்ளோ நாளாவா ஹவுஸ்புல்லா இருந்துச்சு:):):) //

ரிப்பீட்டேய்...

தமிழ் பிரியன் said...

சொகுசுகா போகனும் நினைக்கும் போது 18 ரூபாய் தானே.. பிரச்சினையில்லை.

தலயோட படத்த்தைப் பார்த்ததுக்கு நன்றி!.. ;)

தமிழ் பிரியன் said...

/// rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அஜீத் சூரியா, விஜய் இவங்களுக்கெல்லாமா ஒரு நல்ல கதையை கொடுப்பாங்க? அதிருக்கட்டும், இவ்ளோ லேட்டாவா எங்க தல படத்தை பாத்தீங்க. இவ்ளோ நாளாவா ஹவுஸ்புல்லா இருந்துச்சு:):):)///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்!

சந்தனமுல்லை said...

//முந்தைய‌ ப‌திவுக‌ளில் பின்னூட்ட‌ம் இல்லையே, அப்ப‌ புடிக்க‌லியா?, கதையை விடுங்க, 'சிக்ஸ்' கூடவா?)//

சிக்ஸை மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு..:(

சுட்டியமைக்கு நன்றி தாமிரா..:-)

Anonymous said...

Hai thamira,

One information for u. "NAYAKAN" Orginal film is "CELLULAR". In tamil also previously one film released by S.V. sekar ("VEKAM").

Nayakan VEKAM
JKR PRABU
RAMANA ASWIN SEKAR
SANGEETHA KUSHBOO

If u have any chance to see the film "Vekam" please see. Neenga enna JKR rasigara.

By
Jegan

அத்திரி said...

//47D, 147 கிண்டி போகுமா? தல என்ன 90ஆ?//

REPEEAAAT

நாங்கெல்லாம் டீலக்ஸ் பஸ் கட்டணத்துக்கே ஷாக்காயிட்டோம். சின்ன புள்ளத்தனமா ஏசி
பஸ் கட்டணத்துக்கு போய் ஷாக் ஆகலாமா? கொடுமையிலும் கொடுமை பீக் ஹவரில் 15 நிமிடம் எந்த பேருந்தும் வரலைனா கண்டிப்பா அடுத்து வர்ற பேருந்து ஏசி பேருந்தாகத்தான் இருக்கும். இந்த கொடுமையை எங்க போய் சொல்ல?//

குசும்பன் said...

//நாயகன் திரைப்படம் நல்ல படம்தான் ஜே.கே.ஆர்ரின் காமெடியை தவிர..//

அதை தவிர மீதி படம் டைட்டிலும், வணக்கம் மட்டும் தான்.

ஓ ஒருவேளை டைட்டில்,வணக்கம் போட்டதுதான் புடிச்சு இருக்கோ!!!:)))

குசும்பன் said...

//அருகிலிருக்கும் LCD யில் பின்புற‌ டிராபிக்கை டிரைவ‌ர் க‌வ‌னிக்கிறார். ஹைடெக்கான‌ டாஷ்போர்டு. சொகுசு இருக்கைக‌ள். //

யூ நோ ஒன் திங், இன் துபாய் தட் இஸ் கால்ட்.......குப்.....:))

(மீதிய வடிவேலுவிடம் கேட்டுக்குங்க):))))))

வெண்பூ said...

தாமிரா, ஏசி பஸ் டிக்கெட் சார்ஜ் அதிகமென்றாலும் இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விசயம்தான். குறைந்த தொலைவுகளுக்கு இவை நல்ல தேர்வு இல்லையென்றாலும் 10 கி.மீ அல்லது அதிக தூரங்களுக்கு சென்னையின் டிராபிக் கொடுமையில் இருந்து தப்பிக்க இவை நல்ல ஆப்சனாக இருக்கும் என்பது என் கருத்து..

நாயகன், வேகம் இரண்டுமே செல்லுலார் படத்தின் மறுபதிப்பே. ஆனால் வேகம் படத்தை விட நாயகன் பேசப்பட்டது உண்மை. செல்லுலார் படத்தின் பலமே அடுத்து என்ன நடக்குமோ என்று படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு தள்ளுவதுதான். அந்த சஸ்பென்ஸிற்கு நடுவில் நான்கு பாட்டு, ஐந்து ஃபைட் சேர்த்தால் படம் ஓடுமா என்ற சந்தேகம் காரணமாக முண்ணனி ஹீரோக்கள் தவிர்த்திருக்கலாம்..

Senthil said...

Kalakkunga Thalaivaa
Senthil, bahrain

நிக‌ர‌ன் said...

தாமிரா ரொம்ப நல்ல சொன்னீஙக‌..
எனக்கும் இந்த‌ மாதிரி அனுப‌வ‌ம் ச‌மீப‌த்தில‌ கிட‌ச்சுது.
ம‌னித‌சங்கிலி ம‌ழை நாளில் நான் அதே 18 ரூபாய்க்கு 4 ம‌ணி நேர‌ம் அதே ஏசி ப‌ஸ்ல‌ என்ஜாய் ப‌ண்ணுனேன்.

தாமிரா said...

ந‌ன்றி ராக‌வ்.! (டிவி இல்லை, ரேடியோ இருந்த‌து)

ந‌ன்றி அகநாழிகை.! (உத‌வ‌ காத்திருக்கிறேன், மெயிலுக்கு வாங்க‌)

ந‌ன்றி கார்க்கி.! (ஏழெட்டு வ‌ருஷ‌மாச்சா? ஹி..ஹி.. ம‌ற‌ந்துபோச்சுது.. D70 யைத்தான் த‌ப்பா எழுதிட்டேன்.)

ந‌ன்றி ராப்.! (அந்த ப‌ஸ்ஸின் டிரைவ‌ர் க‌ட்ட‌ம்போட்ட‌ ச‌ட்டை, தொப்பி என‌ வித்தியாச‌ யூனிபார்மில் இருந்தார்)

ந‌ன்றி முர‌ளி.! (சிக்ஸ் சிக்மா ப‌திவில் உங்க‌ க‌மென்ட் எதிர்பார்த்தேன்)

வாங்க‌ ஸ்ரீ அண்ணே.. என்ன‌ ரொம்ப‌ நாளாகுது?

தாமிரா said...

ந‌ன்றி கிருஷ்ணா.!
ந‌ன்றி மொக்கை.!
ந‌ன்றி தமிழ்.!
ந‌ன்றி முல்லை.!
ந‌ன்றி ஜெகன்.!
ந‌ன்றி அத்திரி.!
ந‌ன்றி குசும்பன்.!

(யோவ் ப‌ட‌ம் நெஜ‌மாவே ந‌ல்லாருந்துன்றேன்..)

ந‌ன்றி வெண்பூ.!
ந‌ன்றி செந்தில்.!
ந‌ன்றி நிக‌ர‌ன்.!

கும்க்கி said...

நன்றி தாமிரா..
ஹி ஹி.

மங்களூர் சிவா said...

//
கிராஸ் பண்ண சிக்னலுக்காக நின்‌ற‌போது ஒரு புத்த‌ம்புதிய‌ MTC ப‌ஸ் வ‌ந்து சிக்ன‌லில் நின்ற‌து. யோசிக்காம‌ல் ப‌ட்டென‌ ஏற முய‌ற்சித்த‌போதுதான் க‌வ‌னித்தேன், க‌த‌வுக‌ள் லாக் செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌ன. ஏமாற்றத்தோடு அந்த‌ ட்ரைவரை பார்த்ததில் ஏதோ மனமிறங்கி கதவுகளைத்திறந்தார். உள்ளே ஏறிய‌துமே அப்ப‌டியே ஷாக்காயிட்டேன். என் அலுவ‌ல‌க‌த்தில் கூட‌ என்றுமே நான் உண‌ர்ந்திராத அளவில் ஏசி குளிர். த‌க‌த‌க‌வென‌ இன்டீரிய‌ர். அருகிலிருக்கும் LCD யில் பின்புற‌ டிராபிக்கை டிரைவ‌ர் க‌வ‌னிக்கிறார். ஹைடெக்கான‌ டாஷ்போர்டு. சொகுசு இருக்கைக‌ள்.
//

நெசமாலுமே MTC தானா இல்ல வேற எதாவது ப்ரைவேட் கம்பெனி பஸ்ல ஏறிட்டீங்களா??