Tuesday, October 28, 2008

ஒரு ஜூலை மாத‌த்து ஞாயிற்றுக்கிழ‌மை (முடிவு)

முத‌ல் ப‌குதி

அறைக்குள் ஆட்கள் வரப்போவது போன்ற அரவம் கேட்க கண்களை மூடிக்கொண்டேன். மெதுவாக ஆட்கள் உள்ளே வந்ததை உணரமுடிந்தது. இரண்டு பேரிருக்கலாம். ஹிந்தியில் பேசிக்கொண்டார்கள். ஒரு பெண் குரல். ஒரு ஆண் குரல். மிக மெதுவாகவும், மிகக்குறைவாகவும் அவர்கள் பேசிக்கொண்டதால் சரியாக அர்த்தம் விளங்கவில்லை. பயத்தில் என் நெஞ்சு வேகமாக துடித்தது எனக்கே கேட்டது. கண்களை மூடிக்கொண்டு நடிப்பதால் எந்த பயனுமில்லை எனவும் அதைவிடவும் ஆட்கள் யாரென பார்த்துக்கொண்டாலாவது ஏதாவது ஐடியா கிடைக்கும் என தோன்றியது. மெதுவாக விழித்தேன்.

அந்த ஆண் எனக்கு முதுகைக்காட்டியும் அந்தப்பெண் என்னை நோக்கியும் நின்றுகொண்டிருந்தனர். அந்தப்பெண்ணின் முகம் கொடூரம் நிறைந்ததாய் மிகப்பயங்கரமானதாக இருந்தது. அடுத்த நிமிடமே அந்த பெண் என்னைப்பார்த்துவிட்டாள். அதை அந்த ஆணிடம் சுட்டிக்காட்டி என்ன அதற்குள் விழித்துவிட்டானே என்பது போல கேட்டாள். இருவரும் என்னை நோக்கினார்கள். நான் உச்ச கட்ட பயத்தில் அவர்களை நோக்கி கைகளாலேயே கெஞ்சி என்னை விட்டு விடும்படி சைகை செய்தேன். அவர்கள் அதை அலட்சியம் செய்துவிட்டு மீண்டும் மிக மெல்லிதாக பேசிக்கொண்டார்கள்.

அந்த ஆண் என் பார்வைக்கு எட்டாத‌ என் த‌லைக்கு பின்புற‌மிருந்த‌ மேஜையிலிருந்து ஒரு ஊசியை எடுத்து அதில் ஏதோ ஒரு ம‌ருந்தை எடுத்து என் தோள்பட்டையில் போட ஆரம்பித்தான் ஒரு டாக்ட‌ரின் லாவ‌க‌த்தோடு. இவ‌ன் ஒரு டாக்ட‌ரா? ந‌ம்ப முடிய‌வில்லை. இருக்க‌லாம். அப்போது ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ ஒருவ‌ன் க‌த்திக்கொண்டே அந்த‌ அறைக்குள் ஓடி வ‌ந்தான்.

ம‌றுநாள் சென்னையின் பிர‌ப‌ல‌ நாளித‌ழ்க‌ளில் கீழ்க்க‌ண்ட‌ செய்தி வெளியாகியிருந்த‌து.

சென்னை எஞ்சினீய‌ர் ராய்ப்பூரில் உயிருக்கு ஆப‌த்தான‌ நிலையில் மீட்பு

ஜூலை 17 : தொட‌ர்ந்து த‌மிழ‌க‌ம் ம‌ற்றும் கேர‌ளாவிலிருந்து காணாம‌ல் போய்க்கொண்டிருக்கும் இள‌ம்பெண்க‌ளை க‌ண்டுபிடிப்ப‌த‌ற்காக‌ அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ சிற‌ப்புக்காவ‌ல் ப‌டையின‌ர் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளாக‌ பீகார், ச‌ட்டீஸ்க‌ர் உள்ளிட்ட‌ மாநில‌ங்க‌ளில் தீவிர‌ தேடுத‌ல் வேட்டையில் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர். இந்த தேடுதலின் போது எதிர்பாராத‌வித‌மாக‌ பிலாய் ந‌க‌ரின் ஒரு ஹோட்டலில் உட‌லுறுப்புக‌ளுக்காக‌ ஆட்க‌ட‌த்த‌லில் ஈடுப‌ட்டிருந்த‌ ஒரு கும்ப‌லையும், அவ‌ர்க‌ளிட‌ம் சிக்கிக்கொண்டிருந்த‌ நான்கு இளைஞ‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌தின்மூன்று சிறுவ‌ர்க‌ளையும் மீட்ட‌ன‌ர்.

இவ‌ர்க‌ளில் சென்னை அண்ணாந‌க‌ரைச் சேர்ந்த‌ ர‌ம‌ண‌ன் (27) என்ற‌ எஞ்சினீய‌ரும் ஒருவ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இவ‌ர் ப‌ணி நிமித்த‌மாக‌ பிலாய் சென்றிருந்த‌போது இந்த‌ கும்ப‌லிட‌ம் சிக்கிக்கொண்ட‌தாக‌ தெரிகிற‌து. இவர் ஆப‌த்தான‌ நிலையில் சென்னை கொண்டுவரப்பட்டு அரசு பொது ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சைய‌ளிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிறார்...

25 comments:

வெண்பூ said...

நல்ல முடிவு.. அருமையான நடை.. முதல் கதைன்னு நம்ப முடியல தாமிரா.. நீங்கள் இன்னும் சிறுகதைகள் எழுதலாம். முடிவை ஒரு செய்தியாக போட்டு அவன் காப்பாற்றப்பட்டான் அப்படின்னு குறிப்பால் உணர்த்தியது நல்லா இருந்தது..

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...
நல்ல முடிவு.. அருமையான நடை.. முதல் கதைன்னு நம்ப முடியல தாமிரா.. நீங்கள் இன்னும் சிறுகதைகள் எழுதலாம். முடிவை ஒரு செய்தியாக போட்டு அவன் காப்பாற்றப்பட்டான் அப்படின்னு குறிப்பால் உணர்த்தியது நல்லா இருந்தது...//

ரிப்பீட்டேய்!!!!

முடிவு எப்படி இருக்கப்போகுதுன்னு (ஒருவித காண்டோட!!!) eager-ஆ வெயிட் பண்ணி்கிட்டிருந்தேன்...அருமையா முடிச்சிட்டீங்க!!!

தமிழ் பிரியன் said...

முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் இப்போதுதான் படித்தேன்... கதையைக் கொண்டு சென்ற நடை நல்லா இருந்தது.. கதைக்கான கருவில் இன்னும் கவனம் செலுத்துங்க.. வாழ்த்துக்கள்!

தமிழ்ப்பறவை said...

முடிவு நன்றாக இருந்தது.கதையின் நடை நன்றாக இருந்தது.தமிழ்ப்பிரியன் சொன்னதுபோல் கதைக்கரு தேர்வில் கவனம் தேவை.
முதல் கதை என்றளவில் நன்றாக இருக்கிறது. இன்னும் முயற்சியுங்கள் சிறப்பாக எழுதலாம்.

கார்க்கி said...

ஹலோ தாமிராவா? உங்க பாஸ்வார்ட் யார்கிட்ட சொன்னிங்க? உங்க ப்ளாகல யாரோ சிறுகதையெல்லாம் எழுதறாங்க..

கார்க்கி said...

என்னது நீங்கத்தான் எழுதறீங்களா?

அதுவும் க்ரைம் கதையா?

ரொம்ப சஸ்பென்ஸ் பா.. கடைசி வரைக்கும் கதையே கண்டுபிடிக்கவா முடியல..

என்ன சொன்னிங்க? கதை முடிஞ்சதுக்கு அப்புறமா? அட அதான் கடைசில சொல்லிட்டிங்களே..

சூப்பர் சகா.. வயது 27 போட்டிங்க. அப்போ அது நீங்க இல்லையா? நான் கூட தங்கமணிகள் சங்க‌ம்தான் உங்கள ஆள் வச்சு கடத்தறாங்கணு நினைச்சேன்.

jokes apart, joke is super

சாரி, சிறுகதை சூப்பர் :)))))

தாமிரா said...

(அடப்பாவமே, கதை யாருக்கும் புடிக்காதா? அல்லது நான் எழுதியது புடிக்கலியா? கூட்டத்தையே காணோம்.. ஹிட்ஸும் இல்லை. பின்னூட்டமும் தக்கணூண்டுதான் இருக்குது. கொஞ்சம் எதிர்பார்த்தா போதுமே சிக்குனான் ஒருத்தன்னு ஆப்பு வெச்சிடுவீங்களே.. அட போங்கப்பா.!)

தாமிரா said...

வெண்பூ :முதல் கதைன்னு நம்ப முடியல தாமிரா..// என்ன ஆறுதலா? சரி கேட்டுக்குறேன். இருந்தாலும் நிஜமாகவே ஆறுதலா இருந்தது தல.!

விஜய் :eager-ஆ வெயிட் பண்ணி்கிட்டிருந்தேன்// ஜில்..!

தமிழ் :கதைக்கான கருவில் இன்னும் கவனம் செலுத்துங்க..// அடுத்து கதை எழுதினாத்தானே.? ஏனென்று வெண்பூவை கேட்கவும். ஆமாம் தீபாவ‌ளி அன்று ஒரு ISD call வ‌ந்த‌தே? கவனிக்காமல் மிஸ்ஸாகிவிட்டது. அது நீங்க‌ளா? (என‌க்கு வ‌ந்த‌ முத‌ல் ISD ங்க‌)

தாமிரா said...

ந‌ன்றி ப‌ற‌வை.!
ந‌ன்றி கார்க்கி.!

விஜய் ஆனந்த் said...

// ஆமாம் தீபாவ‌ளி அன்று ஒரு ISD call வ‌ந்த‌தே? கவனிக்காமல் மிஸ்ஸாகிவிட்டது. அது நீங்க‌ளா? (என‌க்கு வ‌ந்த‌ முத‌ல் ISD ங்க‌) //

நல்லாப்பாருங்க அங்கிள்...ஒண்ணு இல்ல....ரெண்டு calls....

callertone-ல பாட்டு மட்டும் பலமா வச்சிக்கிட்டா பத்தாது....call-ல attend-உம் பண்ணனும்...நல்ல நாளும் பெரிய நாளும் அதுவுமா இப்படியா மட்டையாகி கெடக்குறது??? இதுல வெளம்பரம் வேற...எனக்கு வந்த முதல், ரெண்டாவதுன்னுக்கிட்டு...

தாமிரா said...

விஜய், நீங்கதானா அது? நான் ஒரு லோக்கல் கால கூட மிஸ் பண்ண மாட்டேன். உங்க கால் மிஸ்ஸானது ஆச்சரியம்தான். திருப்பிக்கூப்பிட்டு பாத்தேன். அப்பத்தான் தெரிஞ்சுது நம்ப போன்ல ISD இல்லன்னு.. உடனே ஆ.:பீஸ கூப்பிட்டு பலமா திட்டிவிட்டேன். ஏன் எனக்கு இன்னும் பண்ணி தரலைன்னு.. தர்றேன்னுருக்காங்க.. தரலைன்னா தொலைச்சுப்புடமாட்டேன்.. ஹி..ஹி.!

குசும்பன் said...

//முதல் கதைன்னு நம்ப முடியல தாமிரா.. நீங்கள் இன்னும் சிறுகதைகள் எழுதலாம்//

வெண்பூ எதை வைத்து இதை கதைன்னு சொல்றீங்க, லேபிள் கூட கதைன்னு போடல, டிஸ்கியும் போடல
அப்படி இருக்கும் பொழுது எப்படி இது கதையாகும்?

காவியம் அல்லவா:))
காவியம் படைத்த ”காவியா” தலைவர் தாமிரா வாழ்க!

(காவியா யார் என்று வெண்பூ இங்கே விளக்குவார்)

குசும்பன் said...

//ரொம்ப சஸ்பென்ஸ் பா.. கடைசி வரைக்கும் கதையே கண்டுபிடிக்கவா முடியல.. //

கடைசி வரைக்கும் கதையே கண்டு பிடிக்கமுடியவில்லையா? அவ்வ்வ்வ் அப்ப அவரு என்ன கவிதையா எழுதி இருக்கார்!!!

என்ன ஒரு வில்லதனம் கார்க்கி:(((

குசும்பன் said...

//ISD இல்லன்னு.. உடனே ஆ.:பீஸ கூப்பிட்டு பலமா திட்டிவிட்டேன். ஏன் எனக்கு இன்னும் பண்ணி தரலைன்னு.. தர்றேன்னுருக்காங்க.. தரலைன்னா தொலைச்சுப்புடமாட்டேன்.. ஹி..ஹி.!//

தல அப்படியே கான்பிரண்ஸ் வசதியும் கேட்டு வாங்கிக்குங்க, அங்க இருக்கும் ஜிகிடிங்க நம்பர் தருகிறேன் கனெக்ட் செஞ்சுட்டு (போனை மட்டும்) நீங்க தம் அடிக்க போய்ட்டு வாங்க ரைட்டா!!!

Anonymous said...

good suspense story

-selvakumar

ஜி said...

Muthal kathai... nalla irunthathu.. aana romba expect panni ennavaa irukkumnu yosichitte vanthaa sappunu mudinjidichu :(((

Anonymous said...

நல்லா த்ரில்லிங்கா இருக்கு. நல்லவேளை நான் சொன்ன மாதிரி கனான்னு முடிக்கலை. இன்னும் இந்த மாரி கதை எழுதுங்க

narsim said...

தாமிரா.. முடிவை கையாண்ட விதம் மிக சூப்பர்..

தயவுசெய்து நிறைய கதைகள் எழுதவும்..இதே நடையில்..

சூழலை மிக நன்றாக உள்வாங்கி,முடிவையும் அருமையான பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்..

தொடருங்கள் இது போன்ற படைப்புக்களை..

நர்சிம்

narsim said...

தாமிரா.. முடிவை கையாண்ட விதம் மிக சூப்பர்..

தயவுசெய்து நிறைய கதைகள் எழுதவும்..இதே நடையில்..

சூழலை மிக நன்றாக உள்வாங்கி,முடிவையும் அருமையான பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்..

தொடருங்கள் இது போன்ற படைப்புக்களை..

நர்சிம்

புதுகை.அப்துல்லா said...

அண்ணே நீங்க கததான் உடுவீங்கன்னு பார்த்தா கதையும் எழுதுறீங்க???

joke apart மிகவும் நல்லா இருக்கு அண்ணே

சந்தனமுல்லை said...

ஹை..செம பரபரப்பா இருந்தது கதை..இந்த தீபாவளி/லீவ் -ல் இதையெல்லாம் படிக்காம் மிஸ் பண்ணிட்டேன் போல!ம்ம்..உண்மையை சொல்லுங்க..ஆனந்த விகடனில் எழுதிய தாமிரா நீங்கள்தானே!!

சந்தனமுல்லை said...

ஹப்பா..திக்திக்னு இருந்தது, நல்லா முடியனுமேன்னு..நல்ல வேளை டிராஜிக் எண்டிங் இல்லை..:-))

தாமிரா said...

நன்றி குசும்பன்.! ('காவியா தலைவர்' இது நல்லாருக்கே? அப்பிடி என்னப்பா பெயர்க்காரணம்?) (கடைசி வரைக்கும் கதையே கண்டு பிடிக்கமுடியவில்லையா? அவ்வ்வ்வ் அப்ப அவரு என்ன கவிதையா எழுதி இருக்கார்!!!// அதானே? அவ்வ்வ்..)

ந‌ன்றி செல்வா.! (யோவ்.. ஆபீஸ்ல‌ நான் ப‌திவுக‌ளே எழுதி வுட்னுகிறேன். உம‌க்கு ஒரு பின்னூட்ட‌ம் கூட‌வா போட‌ துப்பில்லை)

ந‌ன்றி ஜி.! (ச‌ப்புனு போயிடுச்சா? யோவ் க‌தையை முடிக்க‌ ப‌ட்ட‌பாடு என‌க்குதான் தெரியும்)

ந‌ன்றி அம்மிணி.! (எப்பிடி ஒப்பேத்திட்ட‌னா?)

ந‌ன்றி ந‌ர்சிம்.! (இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மா ஆக்கிருங்க‌ த‌ல‌.!)

தாமிரா said...

ந‌ன்றி அப்துல்.!

ந‌ன்றி முல்லை.! (உங்க‌ளுக்கு இந்த‌ டுபாக்கூர்லாம் பிடிக்காம‌த்தான் ப‌தில் போடாம‌ போயிட்டீங்க‌ளோனு நினைச்சேன். இந்த‌ அள‌வு ர‌சிச்ச‌தில் மிகுந்த மகிழ்ச்சி முல்லை. ஆன‌ந்த‌விக‌ட‌ன் க‌தையை நீங்க‌ள் ப‌டிக்க‌வில்லை என‌ நினைக்கிறேன். ப‌டிச்சிருந்தால் இப்பிடி கேட்க‌மாட்டீர்க‌ள், மேல் விள‌க்க‌த்துக்கு வெண்பூவைக்கேட்க‌வும்)

Mahesh said...

அட... ஒரு வாரம் உங்க கடைப் பக்கம் வரல...அதுக்குள்ள பட்டய கெளப்பிருக்கீங்க... முதல் கதையா? நம்பவே முடியல. வாழ்த்துக்கள். கலக்குங்க.... அடுத்த ஸ்டாப் எங்க? பாக்கெட் நாவலா? க்ரைம் நாவலா? :))