Friday, October 3, 2008

நாங்கள் உடற்பயிற்சி செய்த லட்சணம்.!

நேரில் எனைக்காணும் குறிப்பாக என் தொப்பையை காணும் புதிய நண்பர்கள் நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறீர்களோ என்று கேட்பது வழக்கம். என்ன அர்த்தத்தில் கேட்பார்களோ எனக்குத்தெரியாது. பொறாமையில் கேட்கிறார்கள் என்று நான் நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வளவு சுறுசுறுப்பாக உடற்பயிற்சியிலும், விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டினேன் என நினைவுகூறப்போகிறேன் உங்களுக்காக..

எனது 25வது வயது வரை 40 கிலோவைக்கூட தாண்ட முடியாமல் பரிசல்காரனின் தம்பி போல இருந்த நான், பின்னர் உடனடியாக இரண்டல்லது மூன்று வருடங்களில் வெண்பூவின் அண்ணன் போல ஆகியது ஒரு பெரிய கதை. சுருக்கமாகவே சொல்கிறேன், வாருங்கள்.

முன்பே சொன்னபடி 20 வயது வரை ஒல்லிப்பிச்சானாக இருந்ததாலும், உடற்பயிற்சி செய்தால் மேலும் ஒல்லியாகிவிடுவோம் என்ற‌ ப‌ய‌த்தினால் உடற்பயிற்சி பக்கமே தலைவைத்தும் படுக்கவில்லை. தென்காசி அருகே வ‌னாந்திர‌த்தில் அமைந்திருந்தது எங்க‌ள் க‌ல்லூரி. நல்ல‌ காற்ற‌டி கால‌த்தில் தெம்பான‌ மாண‌வ‌ர்க‌ளே மேல்காற்றில் சாலையிலிருந்து க‌ல்லூரிக்கு 500 மீட்ட‌ர்தான், செல்ல‌ சிர‌ம‌ப்ப‌டுவார்க‌ள். என்னைப்போலுள்ள‌வ‌ர்க‌ள் நான்கைந்து பேராய் கையைப்பிடித்துக்கொண்டுதான் செல்வோம். ஒரு நாள் புளிய‌ம‌ர‌த்தைக் க‌ட்டிப்பிடித்துக்கொண்டு அரைம‌ணி நேர‌ம் கிட‌ந்த‌தெலாம் த‌னிக்க‌தை. ச‌ரி, இந்த‌ க‌ல்லூரிக்க‌தையை பிரிதொரு ச‌ம‌ய‌ம் சுவார‌சிய‌மாக (கள்ளு குடித்த அனுபவத்துடன்) பார்க்க‌லாம். இப்போது விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

மேலும் ப‌டிப்பு ப‌டிப்பு என்று இருந்துவிட்ட‌தாலும் (ஏழு பேப்ப‌ர்ஸ் அரிய‌ர்ஸ்) உட‌ற்ப‌யிற்சி ப‌ற்றிய‌ கவ‌ன‌மே இல்லாது போய்விட்ட‌து. விளையாட்டில் எனது ஆர்வமோ அதைவிட பிரமாதமாக இருந்தது. எறி பந்தோ, கில்லி தாண்டோ, பின்னர் கிரிக்கெட்டோ எனக்கு மிக ஆபத்தான விளையாட்டாக பட்டது. பின்னர் தைரியம் வந்து ஸ்கூல் பைனலிலும், கல்லூரியிலும் பிறர் விளையாடும் கால்பந்தையோ, கிரிக்கெட்டையோ தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தேன். இன்டோர் கேம்களிலும் கேரம் போர்டையும், செஸ்ஸையும் தவிர வேறெதுவையும் கேள்வி கூட பட்டதில்லை (இப்போ மட்டும் என்ன வாழுது?). கேரம் போர்டெல்லாம் வாங்கும் அளவு நாலெட்ஜ் வீட்டில் யாருக்கும் இருக்கவில்லை. செஸ் போர்ட் மட்டும் என் மாமா ஒருவர் வாங்கித்தர அதை வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டு சிறு பிள்ளைகளை ஏமாற்றி விளையாடுவேன் அவ்வளவுதான். கல்லூரி முடிந்து, பின்ன‌ர் வேலை வேலை என்று இருந்துவிட்ட‌தாலும் உட‌ற்ப‌யிற்சியைக் க‌வ‌னிக்க‌முடிய‌வில்லை.

ஒருவ‌ழியாக சென்னை வந்து அம்ப‌த்தூரில் கொஞ்ச‌கால‌ம் செட்டிலான‌ போது உட‌லின் மீது க‌வ‌ன‌ம் வ‌ந்த‌து. என்ன‌டா இன்னும் நாப்ப‌து கிலோவை தாண்ட‌வில்லையே.. ஒரு பிக‌ரும் திரும்பிக்கூட‌ பார்க்க‌மாட்டேங்குதே என்ற‌ க‌வ‌லை. ஹார்டை வுடு ம‌ச்சான், பீர்தான் உட‌ம்புக்கு ந‌ல்ல‌து என்ற‌ ந‌ண்ப‌னின் அறிவுரைப்ப‌டி பிய‌ர‌டிக்க‌த்தொட‌ங்கியும் ஒரு முன்னேற்ற‌த்தையும் காண‌வில்லை. ஜிம்முக்கு போலாண்டா என்ற‌வ‌னைப்பார்த்து கொலைவெறிப் பார்வை பார்த்தேன்.

யோகா

பின்ன‌ர் யோகா ப‌ண்ணினா ந‌ல்ல‌தாம்டா, உடம்பு தேறுமாம் பதஞ்சலி முனிவரே சொல்லிருக்காராம்டா என்று க‌ண்ண‌ன் சொல்ல‌ ந‌ம்பி இருவ‌ருமே பாடியிலுள்ள‌ ஒரு பெரிய‌வ‌ரிட‌ம் யோகா கிளாஸ் சேர்ந்தோம். அவ‌ருடைய‌ பெரிய‌ தொப்பையைப் பார்த்த‌வுட‌னே ச‌ந்தேக‌ப்ப‌ட்டேன், அது போல‌வே ஒரு ஆச‌ன‌த்தையும் அவ‌ர் செய்து காண்பிக்க‌வில்லை. மாறாக‌ புக்கைப்பார்த்து எங்க‌ளை செய்ய‌ச்சொல்லி பார்த்துக்கொண்டார். இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் காலையில் ஆறு ம‌ணிக்கே வ‌ர‌ச்சொல்லி ப‌டுத்திவிட்டார். 15 நாட்க‌ளில் எங்க‌ளின் யோகா முடிவுக்குவ‌ந்த‌து.

ஜிம்

தொட‌ர்ந்து ஜிம் செல்வ‌து என்றும் அங்குள்ள பயிற்சியாளரிடம் நம் தேவையை சொல்லி அதற்கு தகுந்த உடற்பயிற்சியை செய்வது என்றும் தீர்மான‌மாயிற்று. உட‌னே ம‌ண்ணூர்பேட்டையிலுள்ள‌ ஒரு ஜிம்மில் இணைந்தோம். புதிதாக‌ ஷார்ட்ஸ், ஷூக்க‌ள் எல்லாம் வாங்கியாயிற்று. இங்கும் எங்களுக்கு காலை ஆறு மணி ஸ்லாட்டே தந்தார்கள். அல்லது மாலை ஏழு மணிதான் என்றார்கள். மாலையில் உடற்பயிற்சி செய்யலாமா என்ற சந்தேகத்தினை கேட்டுத்தீர்த்துக்கொண்டவுடன் மாலை நேரத்தையே தேர்ந்தெடுத்தோம். ரொம்ப‌ ஆர்வ‌த்துட‌ன் முத‌ல் நாள் சில‌ ப‌யிற்சிக‌ளை செய்தோம். ம‌றுநாள் காலைதான் எழுந்திருக்க‌ முடியாம‌ல் தொடையும் தோள்ப‌ட்டையும் விண் விண்ணென்று தெரித்த‌து. ப‌டிக‌ளில் இற‌ங்க‌முடிய‌வில்லை. முத‌ல் நாள் இப்ப‌டித்தான் இருக்குமாம், இருப்பினும் தொட‌ர‌வேண்டும் என்ற‌ வைராக்கிய‌த்தில் மேலும் மூன்று நாட்க‌ள் சென்றோம். அவ்வ‌ள‌வுதான், நாலே நாள், ஜிம் இனிதே நிறைவ‌டைந்த‌து.

அதிகாலை ஓட்ட‌ம்

ஜிம்முக்காக‌ வாங்கிய‌ ஷூக்க‌கை அவ்வ‌ப்போது பார்த்துக்கொள்வேன். எந்த‌ உட‌ற்ப‌யிற்சியைவிட‌வும் நீச்ச‌லும், ஓட்ட‌மும் மிக‌ச்சிற‌ந்த‌து என‌ ஒருநாள் ம‌ப்பில் க‌ண்ண‌ன் சொற்பொழிவாற்ற‌‌ புல்ல‌ரித்து ம‌றுநாளே காலையில் ஓடுவ‌து என்று தீர்மான‌மாயிற்று. எங்கே ஓடுவ‌து? அம்ப‌த்தூர் எஸ்டேட் குறுக்குச்சாலைக‌ள் சிற‌ப்பான‌வை. ஆனால் நாய்க‌ளுட‌ன் ந‌ம‌க்கு ஏற்க‌ன‌வே அனுப‌வ‌ம் இருக்கிற‌தே. என‌வே MTH சாலையிலேயே லூகாஸ்டிவிஎஸ் வரை ஓடுவ‌தென்று முடிவாயிற்று. ஆனால் ஆறு ம‌ணிக்கு மேல் ஓடினால், ம‌க்க‌ள் ச‌ந்தேக‌த்தில் விர‌ட்டிப்பிடிக்க‌க்கூடும் என்ப‌தாலும், டிராபிக் தொல்லை இருக்குமென்ப‌தாலும், உட‌ல்ந‌ல‌த்துக்காக‌ எந்த‌ தியாக‌த்தையும் செய்ய‌லாம் என்று முடிவு செய்து அதிகாலை 4.30க்கு ஆர‌ம்பித்து 5.30க்குள் வ‌ந்துவிடுவ‌தென்றும் தீர்மானித்தோம். அத‌ன் ப‌டி முத‌ல் இர‌ண்டு நாட்க‌ள் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிப்போய் வ‌ந்தோம். மூன்றாம் நாள் 4.15 க்கு அலாரம் என்னவோ அடிக்கத்தான் செய்தது. ஆனால் நாங்கள் எழுந்த போது மணி 5.00. இருப்பினும் மனம் தளராமல் தேவர் ஒயின்ஸ் வரை ஓடிவிட்டு வந்தோம். நான்காம் நாள் கண்ணன், லேசா முடியல இன்னிக்கு ஒருநாள் லீவு உட்டுரலாம் என்றான். நானும் அந்த வார்த்தைக்குதான் காத்திருந்தவன் போல சந்தோஷமாக தலையாட்டிவிட்டு மகிழ்ச்சியாக எட்டு மணி வரை தூங்கி மகிழ்ந்தேன். அன்றோடு முடிந்தது அதிகாலை ஓட்டம்.

ஸ்கிப்பிங்

ஓடுவதிலுள்ள அத்தனை லாபங்களும் ஸ்கிப்பிங்கிலும் உள்ளது என்ற அரிய உண்மையை அடுத்து நாங்கள் கண்டுபிடித்தோம். மேலும் இதில் பல பிளஸ் பாயிண்டுகளும் உண்டு. ஜிம்மைப்போல பணம் கட்ட வேண்டாம், ஓட்டத்தைப்போல அதிகாலை எழுந்திருக்கவேண்டாம். பாதியில் வேன்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம் (ஓட்டத்தில் முடியாது, லூகாஸுக்கு போய் விட்டால் திரும்பிவர வேண்டுமே) நேரமும் நம் வசதியைப்பொறுத்தது, முதலில் வெளியே போக‌ வேண்டிய‌தில்லை. மாடியிலேயே வேண்டுமானால் ரூமுக்குள்ளேயே செய்து கொள்ள‌லாம். முத‌லில் இருப‌து, முப்ப‌து என்று ஆர‌ம்பித்து இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்குள் ஆயிர‌ம் வ‌ரை போய்விட‌வேண்டும் என்று தீர்மான‌மான‌து. தேடிப்பிடித்து இர‌ண்டு ஸ்கிப்பிங் க‌யிறுக‌ளையும் வாங்கிவ‌ந்தோம். இந்த‌ உட‌ற்ப‌யிற்சி இடையிடையே லீவு விட்டுக்கொண்டு சு‌மார் ஒரு மாத‌ம் வ‌ரை செய‌ல்ப‌ட்டு பின்ன‌ர் நிறைவு பெற்ற‌து.

ஷ‌ட்டில் காக்

பின்ன‌ர் தீவிர‌மாக‌ சிந்தித்த‌ போது, வெறும் உட‌ற்ப‌யிற்சியாக‌ நாம் சிந்திப்ப‌தனால்தான் விரைவில் போர‌டித்துவிடுகிற‌து ப‌திலாக‌ சுவார‌சிய‌மான‌ விளையாட்டாக‌வும் அது இருந்தால் ந‌ன்றாக‌ இருக்கும் என்று சித்த‌ம் தெளிந்தோம். ப‌க்க‌த்து அறை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் விவாதித்தோம். உட‌ற்ப‌யிற்சியின் அவ‌சிய‌த்தை அவ‌ர்க‌ளுக்கு எடுத்துரைத்து அவ‌ர்க‌ளும் ஈடு ப‌ட்டால் ம‌ட்டுமே இது சாத்திய‌மாகும் என‌வும் கேட்டுக்கொண்டோம். (ஏனெனில் பேட்ஸ், வலை, பந்துகள் என பணம் சம்பதப்பட்டிருக்கிறதே.!) ச‌ம்ம‌திக்க‌வில்லை எனில் தண்ணிய‌டிப்ப‌து ச‌ம்ப‌ந்த‌மான‌ எந்த‌ வித‌மான‌ கொடுக்க‌ல் வாங்க‌லும், ஒத்துழைப்பும் நிறுத்த‌ப்ப‌டும் என்றும் எச்ச‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து. இறுதியில் ஒப்ப‌ந்த‌த்தில் கையெழுத்திட்டார்க‌ள். என்ன‌ விளையாட‌லாம் என‌ விவாதித்த‌போது கிரிக்கெட் என்று ஆர‌ம்பித்த‌ ஒருவ‌ன‌து மூக்கிலேயே குத்தி ஷ‌ட்டில் காக் என்று முடிவுசெய்தோம் (ஆப‌த்து குறைவாச்சே, ப‌ந்து மேலே ப‌ட்டாலும் வ‌லிக்காது). பின்ன‌ர் அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ளில் ப‌ல‌த்த‌ வேலைப்ப‌ளு. ப‌க்க‌த்து காலிமனையை அனும‌தி வாங்கி (குப்பையும், முள்ளு மரமுமாய் இருப்பதைவிட இடம் சுத்தமாக இருக்கும் என்பதால் அவர்களுடைய குட்டிப்பையனையும் விளையாட சேர்த்துக்கொள்ளவேன்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதித்தார்கள்) முள்ளுவெட்டுதல், சுத்த‌ப்ப‌டுத்துத‌ல், பணம் வசூலிப்பு, உப‌க‌ர‌ணங்கள் ப‌ர்சேஸ் என‌ ப‌ய‌ங்க‌ர‌ பிஸி. மூன்றாம் நாள் விளையாடத்துவங்கினோம், எப்ப‌டி விளையாடுவ‌து என்ற‌ விதிமுறைக‌ள் தெரியாத‌தால் நாங்க‌ளே வ‌குத்துக்கொண்டோம். இந்த‌ ஓர‌ள‌வு வெற்றி பெற்று சுவார‌சிய‌ம் தொற்றிக்கொள்ள‌ ம‌கிழ்ச்சியாய் விளையாட‌த்துவ‌ங்கினோம். ஆனால் சோதனையாக பொங்க‌ல் விடுப்பு வர‌ ஒரு 10 நாள் ஊருக்கு சென்றேன். ப‌ல‌ரும் சென்றார்க‌ள். திரும்பிவ‌ந்த‌போது எங்க‌ள் ஷ‌ட்டில் கோர்ட்டில் பில்டிங் க‌ட்டுவ‌த‌ற்கான‌ வான‌ம் தோடும் ப‌ணி துவ‌ங்கியிருந்த‌து.

அந்த சமயத்தில்தான் அதுவரை கிடைக்காத ஒரு விஷயமான சுவையான உணவை இரண்டு தெரு தள்ளி புளியங்குடிகாரர் ஒருவர் நடத்திக்கொண்டிருந்த ஒரு மெஸ்ஸில் கண்டுபிடித்தோம். அதன் பின்னர் மூணு நேரமும் மூக்குப்பிடிக்க தின்பதே என் ஒரே உடற்பயிற்சியாயிற்று. அதுதான் நான் குண்டானதுக்கு (இப்போ இருப்பதுபோல) காரணம் என நினைக்கிறேன்.

கொஞ்ச‌ நாள் க‌ழித்து கேர‌ம் போர்ட் வாங்க‌லாம்டா, டைம் பாஸாகும், கேர‌ம் விளை‌யாண்டா விர‌லுக்கு ந‌ல்ல‌தாம் என்ற‌ க‌ண்ண‌னை நான் கொலைவெறிப்பார்வை பார்த்தேன். ‌

29 comments:

பரிசல்காரன் said...

மீ த ஃபர்ஸ்ட்!

பரிசல்காரன் said...

அப்பாலிக்கா வரேன் நண்பா!

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணாத்தே... இப்போதான்
மார்டர்ன் ஜிம் எல்லாம் வந்துடுச்சே..
நெறையா ஃபிகர் வர்ற ஜிம்மா பார்த்து
trய் பண்ணலாமே..?? !!!
எக்சர்சைஸ் பண்ணறதுக்கு தான் ஒகேவா??...
;))))

Ramesh said...

நெறையா ஃபிகர் வர்ற ஜிம்மா பார்த்து உடற்பயிற்சி பண்ணலாமே!!!

Ha Ha!!!

விஜய் ஆனந்த் said...

:-))))...

அப்போ பல தடைகளைத்தாண்டி, இந்த நிலையை அடைஞ்சுருக்கீங்க!!!

ஜெகதீசன் said...

:)))))))))))

தாமிரா said...

வாங்க பரிசல்.! (நீளமா எழுதும்போதே நெனச்சேன், இந்த மாதிரி ஆகும்னு. திரும்பி வந்து பின்னூட்டம் போடலைன்னா தெரியும் சேதி.!)

வாங்க ஜொள்ளு.! (ஆகா, இது நல்ல ஐடியாவா இருக்கே.!)

வாங்க ரமேஷ்.!

தாமிரா said...

வாங்க விஜய்.! வாங்க ஜெ‌க‌தீச‌ன்.!

Anonymous said...

ரொம்ப கஸ்டபட்டிங்க போல இருக்கே!!

ரோஜா காதலன் said...
This comment has been removed by the author.
ரோஜா காதலன் said...

அண்ணா,

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தொப்பை குறையுமாம்... இதையேன் முயற்சி பண்ணல ?

குசும்பன் said...

வாலிப வயோதிக அன்பரே!!!

20 வது வயது வரை ஏன் ஒல்லிப்பிச்சானாக இருந்தீங்க, இப்ப எப்படி குண்டானீங்க என்று எங்களுக்கு தெரியும்:))))))

ச்ச்சே தப்பா நினைக்காதீங்க

20 வது வரை சாப்பாடு ஒழுங்கா கிடைக்காது, படிப்பு அது இதுன்னு ரெஸ்ட் இருக்காது, இப்ப மனைவி கையால் சாப்பாடு அதான் குண்டாகி இருக்கிங்க:)))அப்படின்னுதான் சொல்லவந்தேன்.

மாத்ரூபூதம் ஆவி said...

//ஒரு நாள் புளிய‌ம‌ர‌த்தைக் க‌ட்டிப்பிடித்துக்கொண்டு அரைம‌ணி நேர‌ம் கிட‌ந்த‌தெலாம் த‌னிக்க‌தை.//

அதானால் தான் உங்களுக்கு உடம்பு ஏறவில்லை.

பாபு said...

அதெப்படி நாங்க பண்ண எல்லாத்தையும் நீங்க நேரில பார்த்த மாதிரி எழுதி இருக்கீங்க

மங்களூர் சிவா said...

15

மங்களூர் சிவா said...

அப்பாலிக்கா வரேன் நண்பா!

மங்களூர் சிவா said...

//
ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணாத்தே... இப்போதான்
மார்டர்ன் ஜிம் எல்லாம் வந்துடுச்சே..
நெறையா ஃபிகர் வர்ற ஜிம்மா பார்த்து
trய் பண்ணலாமே..?? !!!
எக்சர்சைஸ் பண்ணறதுக்கு தான் ஒகேவா??...
;))))
//

ரிப்பீட்டு


(நல்ல ஐடியாவா இருக்கு மைண்ட்ல வெச்சிக்கடா சிவா)

மங்களூர் சிவா said...

//
குசும்பன் said...

வாலிப வயோதிக அன்பரே!!!
//

:)))))))))))))))))))))

பரிசல்காரன் said...

ஒரு பேச்சுக்கு அப்பாலிக்கா வரேன்னுட்டேன். இப்படி வளைஞ்சு வளைஞ்சு அடிக்கறீங்களே.


பதிவு சூப்பர்!

படித்ததும் என் வீட்டு ஏதோ ஒரு மூலையில் கிடக்கு இரண்டு தம்பிள்ஸ்தான் ஞாபகம் வந்தது! இன்றூவரை அதைத் தூக்க முடியவில்லை!

தமிழ்ப்பறவை said...

உங்களோட உடற்பயிற்சி அனுபவங்கள் படிச்சது எனக்கு நல்ல உடற்பயிற்சியா இருந்தது.(சிரிக்கிறதுகூட நல்ல உடற்பயிற்சிதான அண்ணாச்சி...)
//என்னைப்போலுள்ள‌வ‌ர்க‌ள் நான்கைந்து பேராய் கையைப்பிடித்துக்கொண்டுதான் செல்வோம். //
ஒய் ஃபீலிங்.. சேம் ஃபீலிங்....
//ஸ்கூல் பைனலிலும், கல்லூரியிலும் பிறர் விளையாடும் கால்பந்தையோ, கிரிக்கெட்டையோ தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்தேன். //
நம்மள மாதிரியே...
//முத‌லில் இருப‌து, முப்ப‌து என்று ஆர‌ம்பித்து இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்குள் ஆயிர‌ம் வ‌ரை போய்விட‌வேண்டும் என்று தீர்மான‌மானது//
உங்களோட கான்ஃபிடென்ஸ் லெவலை நான் பாராட்டுறேன்...
//தேடிப்பிடித்து இர‌ண்டு ஸ்கிப்பிங் க‌யிறுக‌ளையும் வாங்கிவ‌ந்தோம்//
எங்க ..? பக்கத்து ஃபிகரு வீட்டுலயா...?
//கேர‌ம் விளை‌யாண்டா விர‌லுக்கு ந‌ல்ல‌தாம் என்ற‌ க‌ண்ண‌னை நான் கொலைவெறிப்பார்வை பார்த்தேன். //
கோச்சை எல்லாம் இப்படி கொலைவெறியோட பார்க்கக்கூடாது.
அனுபவம் சூப்பரா இருந்தது தாமிரா...

தாமிரா said...

இந்தப்பதிவை நான் மிக ரசித்து எழுதினேன் பரிசல். ஆகவே நான் சிலரிடம் கண்டிப்பாக பின்னூட்டங்களை எதிர்பார்த்தேன். ஆகவேதான் விரட்டிப்பிடித்து பின்னூட்டம் வாங்கும்படி ஆகிவிட்டது. இன்னும் சிலரிடமிருந்தும் நான் ஆவலோடு எதிர்பார்த்தேன், சொதப்பிவிட்டார்கள்.

மிக்க நன்றி தமிழ்பறவை.!

தாமிரா said...

நன்றி தூயா.!
நன்றி ரோஜா.! (ஆகா, இது நல்லாருக்கே.. ஆனா டேஸ்டா இருக்கும் போல இருக்கே. ரொம்ப குடிச்சு அதுக்கே தனியா தொப்பை வளர்ந்திருச்சுன்னா?)
நன்றி குசும்பன்.!
நன்றி மாத்ருபூதம்.!
நன்றி பாபு.!
நன்றி மங்களூர்.!

rapp said...

இதுல இருந்து என்ன தெரியுது, நீங்க அப்படியே உங்க உடம்பை மெயின்டெயின் பண்றதுக்கு ரமா மேடம் கைப்பக்குவம் ஒரு காரணம்னு தெரியுது. ஆனாலும் உங்க அம்மா சமையலை நீங்க இப்படி நக்கலடிச்சிருக்க வேண்டாம்:):):)(இருபது வயசு வரைக்கும் அவங்க சமையல்தானே)

rapp said...

ஆமாம், சகலகலா சம்பந்தி வெண்பூவக் காணோம். இதுல என்ன சண்முகசுந்தரம் சார் கணக்கா கமென்ட் போட்டிருப்பார்னு பாத்தா, இன்னும் வரலயே:(:(:(

rapp said...

me the 25th

சந்தனமுல்லை said...

:-))
உங்க நரேஷன் நல்லாருக்கு!

//ஒரு நாள் புளிய‌ம‌ர‌த்தைக் க‌ட்டிப்பிடித்துக்கொண்டு அரைம‌ணி நேர‌ம் கிட‌ந்த‌தெலாம் த‌னிக்க‌தை.//

அந்தக் கதையை சொல்வீர்களா?

தாமிரா said...

நன்றி ராப்.!
நன்றி முல்லை.!

Truth said...

அண்ணே, உங்களத் தானே, நானும் தேடிக்கிட்டு இருக்கேன். எனக்கும் கொஞ்சம் உதவி பண்ணுங்க.
http://memynotepad.blogspot.com/2009/01/blog-post.html

புதுகைத் தென்றல் said...

ஒருவழியா தேடி கண்டுபிடிச்சு படிச்சு ரசிச்சேன்.


:)))