Tuesday, November 11, 2008

நான் ரசித்த பாடல்கள்.. டாப் 5.

எனது இசையார்வத்தின் அதிகபட்ச உயரம் தமிழ் திரைப்பாடல்கள் மட்டுமே. டாப் 5 க்குள் அடக்கிவிடக்கூடிய விஷயமா இது.? அதுவும் எனக்கு பிடிக்கவேண்டுமானால் அந்தப்பாடல் இசை தவிர மேலும் சில ரசனையான விஷயங்களையும் கொண்டிருக்கவேண்டும். ஏராளமான பாடல்களுக்கிடையே சில விதி முறைகளை வைத்துக்கொண்டு நான் ரசித்த, ரசிக்கும் டாப் 5 பாடல்களைத் தருகிறேன். மிக முக்கியமான விஷயம் 2006க்கு பின்னர் வந்த பாடல்கள் மட்டுமே ஆட்டத்துக்கு எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரசனையான ஒளிப்பதிவு, ரகளையான ஹீரோ, ஹீரோயின், அற்புதமான இசை, கவிதைத்தனமான பாடல் வரிகள், உணர்வைத்தொடும் குரல், கொஞ்சம் காதல் என பல விஷயங்களையும் கணக்கில் கொண்டு வரிசைப்படுத்தியிருக்கிறேன். பிடித்தால் (பிடிக்காவிட்டாலும்) பின்னூட்டமிட்டு தெரியப்படுத்தவும்.

காற்றின் மொழி..


ப‌ட‌ம் : மொழி இய‌க்க‌ம் : ராதாமோக‌ன் ஜோடி : பிரித்விராஜ், ஜோதிகா ஒளிப்ப‌திவு : குக‌ன் இசை : வித்யாசாக‌ர் பாட‌ல் : வைர‌முத்து குர‌ல் : சுஜாதா

அக்க‌ம் ப‌க்க‌ம்..


ப‌ட‌ம் : கிரீடம் இய‌க்க‌ம் : விஜய் ஜோடி : அஜித், திரிஷா ஒளிப்ப‌திவு : திரு இசை : ஜிவி பிரசாத் பாட‌ல் : நா முத்துக்குமார் குர‌ல் : சாத‌னா ச‌ர்க‌ம்

காத‌ல் வைத்து..ப‌ட‌ம் : தீபாவளி இய‌க்க‌ம் : எழில் ஜோடி : ஜெய‌ம் ர‌வி, பாவ‌னா ஒளிப்ப‌திவு : ஜீவா இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : பா விஜய் குர‌ல் : விஜ‌ய் யேசுதாஸ்

முன்பே வா..


ப‌ட‌ம் : ஜில்லுனு ஒரு காதல் இய‌க்க‌ம் : கிருஷ்ணா ஜோடி : சூர்யா, பூமிகா ஒளிப்ப‌திவு : ஆர்டி ராஜசேகர் இசை : ஏஆர் ரகுமான் பாட‌ல் : வாலி குர‌ல் : ஷ்ரேயா கோஷல்

எங்கேயோ பார்த்த மயக்கம்..


ப‌ட‌ம் : யாரடி நீ மோகினி இய‌க்க‌ம் : மித்ரன் ஜவஹர் ஜோடி : தனுஷ், நயன்தாரா ஒளிப்ப‌திவு : சித்தார்த் இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : நா முத்துக்குமார் குர‌ல் : உதித் நாராய‌ண‌ன்

40 comments:

வெண்பூ said...

அடப்பாவி.. சினிமா தொடர்ல நான் 5 வரியில எழுதுனத இவ்ளோ பெரிய பதிவா போட்டுட்டீங்களே!! நல்ல திறமை :)))

நல்ல கலெக்ஷன்.. எல்லாமே ரொம்ப ரீசன்டா வந்தது மாதிரி தெரியுது, கொஞ்சம் பழைய பாடல்கள் பிடிக்காதா?

Anonymous said...

நல்ல பாடல்கள் தாமிரா.

என் வரிசை.

1. முன்பேவா. இந்தப் பாட்டை நல்ல தரமான ஹெட்ஃபோன்ல கேளுங்க. பாட்டை மறந்து பின்புலத்தில் வயலின்ல ஒரு சிம்பனி மாதிரி பண்ணியிருப்பார்; அனுபவிச்சுப் பாருங்க.

2. அக்கம் பக்கம்.

பாடல் வரிகளும் இசையும் அற்புதமான கலவை. “நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி”

3. எங்கேயோ பார்த்த மயக்கம்.

சரணத்தை விட பல்லவி சிறப்பாக இருக்கும். “தேவதை வாழ்வது வீடில்லை கோவில், காதலின் கால்தடம் பார்க்கிறேன்’ பாடலின் இந்தப் பகுதி மிக அற்புதமாக இருக்கும்.

4. காதல் வைத்து காதல் வைத்து.

விஜய் யேசுதாஸ் குரலுக்காகவே இந்தப் பாடல். லோ பிட்சிலிம் ஹை பிட்சிலுமாக விளையாடியிருப்பார்.

5. காற்றின் மொழி.

முதல் மழை பாட்டு பட்டியலில் இடம் பெரும் என்று நினைத்தேன்.

விலெகா said...

எங்கேயோ பார்த்த மயக்கம்.
அருமையான பாடல்.

பரிசல்காரன் said...

முன்பேவா பாடல் என் ஃபேவரைட் ஆக முக்கியக் காரணம் வாலி.

கொஞ்சம் கண்மூடி யோசித்துப் பாருங்கள். அந்த மெட்டுக்கு அன்பேவா என்று போடாமல் முன்பே வா என்று போட்டதும், முன்பே வா ‘ என்ற வார்த்தையை யோசித்ததும்...

வாலியால் மட்டுமே முடியும்.

கார்க்கி said...

இது உங்கள் வரிசை. எனக்கு தீபாவளியில் போகாதே போகாதே பாடல்தான் டாப். கேட்கும்போதெல்லாம் மனசு வலிக்கும். அந்த வலி வேண்டும் வேண்டுமென மனசு துடிக்கும்.

"அழகான் நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்

நடைபாத விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகள அழிப்பதற்கு"


போங்க சகா.. தனியா இருக்கிற பிள்ளைய இப்படியா கஷ்டபடுத்தனும்?

dharshini said...

தாமிர சார், நீங்க கரெக்டா வரிசை படிதிருகீங்க, கார்கி அண்ணா சொன்ன மாதிரி என்னோட சாயிசும் போகாதே சாங்தான், யாருக்கும் எந்த வலி இல்லனாலும் வலி எடுகர மாதிரி ஒரு பாடல் அது......
மற்றபடி காற்றின் மொழியே சாங்...அக்கம் பக்கம் ....முன்பே வா ....எங்கேயோ பார்த்த எல்லாம் ஒகே சார்....

Anonymous said...

அருமையான பாடல் தேர்வு தாமிரா, முன்பே வா எனக்கு ரொம்ப பிடித்த பாடல். எங்கேயோ பார்த்த மயக்கம் நன்றாகத்தான் இருக்கும் என்றாலும் உதித் நாராயணின் ஒட்டாத குரல் மனதை விலக்கிவிடுகிறது.

முரளிகண்ணன் said...

அக்கம் பக்கம் பாடல் தவிர மற்ற எல்லாம் என் பேவரைட். இந்த வரிசையில என்னோட சாய்ஸ் பருத்திவீரன்ல வர்ற "ஐயையோ என் உசுருக்குள்ள" பாடல்.

cable sankar said...

தாமிரா.. நீஙக சொன்ன அத்துனை பாடல்களும் காட்சியமைப்புகளில் “மாண்டேஜ்” என்று சொல்லப்படும் உத்தியில் படமாக்கபட்டது. அதாவது காட்சியில் யாரும் பாடாமல் பிண்ணனியில் பாடல் ஓலிக்க், கோர்வையாய் கதை நகறும் காட்சிகள் வரும். இம்மாதிரியான பாடல்களகளின் வெற்றி இயக்குனரின் பங்கும், திறமையும் முக்கியம்

உங்களை ஓரு தொடர் பதிவெழுத அழைத்திருக்கிறேன்..

SurveySan said...

மொழி, அக்கம் பக்கம், முன்பே வா, எனக்கும் பிடிக்கும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் - ? உதித் பாடினது எரிச்சலை தரல? :)

எம்.ரிஷான் ஷெரீப் said...

அருமையான பாடல்கள்.நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல்கள். பகிர்வுக்கு நன்றி தாமிரா.

முன்பே வா - ஸ்ரேயா கோஷல், நரேஷ் ஐயர்

வால்பையன் said...

வெறும் காதல் பாடல்களாகவே இருகின்றன. வேறு பாடல்கள் பிடிக்காதா?

கும்க்கி said...

சின்ன பசங்களுக்கு காதல்தான் பிடிக்கும் வால்.

தாமிரா said...

நன்றி வெண்பூ.! (பிஸி நேரத்துல எப்பிடி ஒப்பேத்துனேன் பாத்தீங்களா? பழைய பாடலகளும் புடிக்கும்தான். இது 2006க்கு அப்புறம் உள்ள பாடல்களின் வரிசைன்னு சொல்லியிருக்கேனே..)

நன்றி வேலன்.! (நீங்கள் எழுதியதை நானே பதிவுல எழுதணும்னு நினைச்சேன், நேரமில்லாம...)

நன்றி விலெகா.!

நன்றி பரிசல்.! (நான் நினைத்து நினைத்து ரசித்த விஷயத்தை சொல்லியுள்ளீர்கள்)

நன்றி கார்க்கி.! ('போகாதே' யும் மிக அருமையான சாய்ஸ்தான், ஒரே படத்துல ரெண்டு வாணாம்னுதான்..)

தாமிரா said...

நன்றி தர்ஷினி.!

நன்றி அம்மிணி.! (ம‌ற்ற‌ சிற‌ப்புக‌ளுக்காக‌ உதித்தை ம‌ன்னித்துவிட‌லாமே.!)

ந‌ன்றி முர‌ளி.!

ந‌ன்றி கேபிள்.! (க‌ண்டிப்பாக‌ தொட‌ரில் க‌ல‌க்கிறேன். என்னன்னு கூட இன்னும் பாக்கலை.. கொஞ்ச‌ம் லேட் ஆகும். பொறுத்துக்கொள்ள‌வும்)


ந‌ன்றி ச‌ர்வேச‌ன்.!

நன்றி ரிஷான்.!

ந‌ன்றி வால்பைய‌ன்.!

ந‌ன்றி கும்க்கி.! (வாலுக்கு ச‌ரியான‌ ப‌தில‌டி..)

சந்தனமுல்லை said...

ஹை...இது எல்லாமே பப்புக்கு ரொம்ப பிடித்தப் பாடல்கள்!! நீங்க எனன் ஸ்கார்ர்ப்பியனா?? நல்ல தேர்வு!!

பாபு said...

காற்றின் மொழி ,பல்ராம் குரலில் கேட்க பிடிக்கும்

முரளிகண்ணன் said...

வடகரை வேலன் சார்,

\\சரணத்தை விட பல்லவி சிறப்பாக இருக்கும். “தேவதை வாழ்வது வீடில்லை கோவில், காதலின் கால்தடம் பார்க்கிறேன்’ பாடலின் இந்தப் பகுதி மிக அற்புதமாக இருக்கும்\\

இந்த வரிகள் வருவது வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என தொடங்கும் பாடலில்.

கும்க்கி said...

பட்டியலை பார்த்ததும் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது...அப்புறம் ஐ பாடை (சே என்ன இப்படி வருகிறது) எடுத்து பார்த்ததில்தான் தினசரி இரவு உறங்க போகுமுன் கேட்கும் பாடல்களின் பட்டியல் நினைவு வந்தது.
இப்போதைக்கு
சுப்ரமணியபுரம் டாப் 1
அதுவும் டைட்டில் ம்யூசிக் அபாரம்
(ஒய்யாரமாக அமர்ந்து சினி விமர்சனம் செய்து சினிமாக்காரர்களிடம் வசவு வாங்கிய ஜேம்ஸ்-க்கு இவ்வளவு திறமையுள்ளதா..மியாவ்.

மொழியின்....காற்று...மனதை பிசைய வைக்கும் என்பதில் எவருக்கும் ஆட்சேபனையிருக்காது.

அப்புறம் கார்க்கியை தூங்கவிடாமல் பன்ணும்...போகாதே..போகாதே...
ஒரு அர்த்தமுள்ள பாட்டு..கார்க் கீ மாதியான அன்பர்களுக்கு எப்போதும் காதில் ரீங்காரமாக இருக்கும் என நம்பலாம்.

இதே போல என் அன்பே..என் அன்பே
கண்ணுக்குள் கவிதாஞ்சலி....
(இதுவும் கார் கீ க்கு சமர்ப்பண்)

அப்புறம் குருவி யில்
தானானே தந்தா நானே தந்தானானே தந்தானா...தானானே தந்தா நானே தன்னானாநே தானானா...
(எப்பிடிதாம் இப்படி யோசிச்சி எலுதறாய்ங்களோ..உஸ் அப்பப்பா)

மெலோடி இல்லை யென்றாலும் கேட்க துவம்சமாக இருக்கிறது.

அதே போல அஞ்சாதே வில்
அச்சம் தவிர்.....
பிடித்தமான தாக இருக்கிறது..

லேட்டஸ்ட் என்பதால் இவ்வளவுதான்
(இப்போதெல்லாம் பாட்டு புத்தகம் அச்சில் வருகிறதா....?)

கும்க்கி said...
This comment has been removed by the author.
கிரி said...

// கார்க்கி said...
இது உங்கள் வரிசை. எனக்கு தீபாவளியில் போகாதே போகாதே பாடல்தான் டாப். //

எனக்கும் :-)

விஜய் ஆனந்த் said...

:-)))...

கும்க்கி said...

vijai said...:))
v r all said....:((
v expect more.

ஸ்ரீ said...

Idhellam othukka mudiyaadhu. 2006 appuram viralvittu enra alavu dhaan nalla paate vandhiruku. Black and white paatellam sethukanum aatathula :)

தாமிரா said...

அவசரத்துக்கு ஒப்பேத்தலாம் என்று பார்த்தால் அனைவரும் ரசித்திருக்கிறீர்கள்.. நன்றி, நன்றி.! கொஞ்சம் சீரியஸா திங்க் பண்ணி எழுதினாதான் காலவாரி உட்டுருவீங்களே, தெரிஞ்சதுதானே..

நன்றி முல்லை.! (நான் கும்பம், இதெல்லாம் பாப்பீங்களா, எனக்கு பிறந்தநாள் கூட ஞாபகமிருக்காது. ஆனால் இந்த நட்சத்திரம் மட்டும் எப்படியோ எப்பக்கேட்டாலும் ஞாபகமிருக்கிறது, ஸ்கூல்ல என் பிரண்ட் ஒருத்தன் சின்ன வயசுல எல்லோர் நட்சத்திரத்தையும் கேட்டு கிண்டல் பண்ணினான். அதான் ஞாபகமிருக்குதுனு நினைக்கிறேன்)

தாமிரா said...

நன்றி பாபு.!
நன்றி முரளி.!
நன்றி கும்க்கி.! (பதிவெழுத தயாராகியாச்சு போலயிருக்குது.. பின்னூட்டம் சைஸ் பெரிசாகிட்டே போகுதே.!

நன்றி கிரி.! (என்னையும் சேத்துக்குங்க..)

நன்றி விஜய்.! (சரியா சொன்னீங்க கும்க்கி)

நன்றி ஸ்ரீ.!

கார்க்கி said...

//இதே போல என் அன்பே..என் அன்பே
கண்ணுக்குள் கவிதாஞ்சலி....
(இதுவும் கார் கீ க்கு சமர்ப்பண்//

கும்க்கி பெரிய்ய்ய்ய்ய்ய்ய நன்றி. தெரிந்து சொன்னிங்களானு தெரியல. அந்தப் பாட்டு ஆரம்பிக்கும் காட்சியில் ஒரு கடற்கரையில் பாறை மீது சூரியா நின்று காதலுடன் சிரிப்பார். அந்த பாறை மீது அமர்ந்துதான் என் காதலை சொன்னேன். அது பாண்டிச்சேரியில் உள்ளது. அங்குதான் மெள்னம் பேசியது படத்திற்காக அந்த‌ ஹோட்டல் செட் போடப்பட்டது. இன்னக்கு தூக்கமும் போச்சா!!! நாளைக்கு காதல் பதிவுதான்..

கும்க்கி said...

உருப்படாத பாறையா இருக்கும் போல..
சூர்யாவுக்கும் ஒத்துவர்ல.......
கார் கீ க்கும் அதோ கதி....
ஹூம்.................
சூர்யா படத்தில யாருக்கும் அட்வைஸ் செய்து வீட்டில் விட்ட மாதிரி தெரியலயே..?

கும்க்கி said...

தாமிரா said...
நன்றி பாபு.!
நன்றி முரளி.!
நன்றி கும்க்கி.! (பதிவெழுத தயாராகியாச்சு போலயிருக்குது.. பின்னூட்டம் சைஸ் பெரிசாகிட்டே போகுதே.!

ஆமா தல ...நா ஒருத்தன் எலுதாம தமிழ்நாடே ரொம்ப(எழுத்து) வறட்சின்னு சில பட்சிங்க சொல்லுது.....

என்ன பண்றது..சில பேருக்கு என்னை எலுத சொல்லி எல்லோரையும் கொடுமைபண்றதுன்னா அவ்ளோ குஷி.

கார்க்கி said...

// கும்க்கி said...
உருப்படாத பாறையா இருக்கும் போல..
சூர்யாவுக்கும் ஒத்துவர்ல.......
கார் கீ க்கும் அதோ கதி....
ஹூம்.................
சூர்யா படத்தில யாருக்கும் அட்வைஸ் செய்து வீட்டில் விட்ட மாதிரி தெரியலயே..?//

:((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

மங்களூர் சிவா said...

நயந்தாரா பாடலை ஐந்தாவது இடத்திற்கு தள்ளியதை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்யப்படுகிறது.

மங்களூர் சிவா said...

ஆனாலும் அந்த ஸ்டில் என்ன ஒரு எக்ஸ்ப்ரெஷன்!

தாமிரா said...

யோவ் மங்கு ம‌ங்க‌ளூர்.. டாப் 5 ன்னு சொன்னா ரிவ‌ர்ஸில‌ பாக்குணும். அதுதான் முத‌லிட‌த்துல‌ இருக்குது.

தமிழ்ப்பறவை said...

பாடல் தேர்வு நன்றாக இருந்தது. எனது சாய்ஸூம் 'போகாதே' தான்.
//எங்கேயோ பார்த்த மயக்கம் நன்றாகத்தான் இருக்கும் என்றாலும் உதித் நாராயணின் ஒட்டாத குரல் மனதை விலக்கிவிடுகிறது.//
அவரோட கந்தர்வக்குரலுக்காகவே அந்தப் பாட்டை நான் கேட்கலை.
//நீஙக சொன்ன அத்துனை பாடல்களும் காட்சியமைப்புகளில் “மாண்டேஜ்” என்று சொல்லப்படும் உத்தியில் படமாக்கபட்டது. //
நல்ல கவனிப்பு சங்கர் சார்.
//யோவ் மங்கு ம‌ங்க‌ளூர்.. டாப் 5 ன்னு சொன்னா ரிவ‌ர்ஸில‌ பாக்குணும். அதுதான் முத‌லிட‌த்துல‌ இருக்குது//
இந்த விஷயத்தை நான் இப்போதுதான் கவனித்தேன்.. ஹி.. ஹி...

அத்திரி said...

இதுல என்னோட முதல் சய்ஸ் & பெஸ்ட் சய்ஸ் போகாதே போகாதே தான். பாடல் தொடங்கி முடியும் வரை மெல்லிய சோகம் கூடவே வருவது போல் ஒரு எண்ணம். இன்னும் சில வருடங்கள் கழித்து கேட்டாலும் புதுசா கேக்குற மாதிரி இருக்கும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

உங்களுடைய தர வரிசையில் காற்றின் மொழி மட்டுமே என்னைக் கவர்ந்தது.. மற்றவை நஹி.. நஹி..

rapp said...

எனக்கு தீபாவளி படப் பாட்டும், யாரடி நீ மோகினி பாட்டும் பிடிக்காது, மத்ததெல்லாம் பிடிக்கும்:):):)

rapp said...

//எல்லாமே ரொம்ப ரீசன்டா வந்தது மாதிரி தெரியுது, கொஞ்சம் பழைய பாடல்கள் பிடிக்காதா//

சம்மந்தி, இவரு யூத்தாமாம்:):):)

vivek said...

yen raap , ungalaku male singers sogama padina pidikatha.. ?? :(

vivek.j

அமிர்தவர்ஷினி அம்மா said...

சரணத்தை விட பல்லவி சிறப்பாக இருக்கும். “தேவதை வாழ்வது வீடில்லை கோவில், காதலின் கால்தடம் பார்க்கிறேன்’ பாடலின் இந்தப் பகுதி மிக அற்புதமாக இருக்கும்

ம். நானும் ரசித்திருக்கிறேன்