Monday, December 1, 2008

தங்கமணியின் இம்சைகள் : டாப் 5

நேற்று ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்த கண்ணனுடன் ஒரு அருமையான செஷன் போச்சுது. வழக்கமா தங்கமணி குறித்த பதிவுகளெல்லாம் போடும்போது என்ன.. ரமாவ கிண்டல் பண்றியா, இந்த கிண்டல் வேலையெல்லாம் உட்டுட்டு ஏதாவது உருப்புடியா எழுதுற வழியப்பாரு என்பான். ஆனா அவன் ஆளோட என்ன பிரச்சினையோ என்னவோ தெரியல நேற்று "என்னடா பெரிய எழுத்தாளன் மாதிரி ஒரே சீரியஸ் பதிவா போட்டுகிட்டிருக்கியே, பழசெல்லாம் மறக்கக்கூடாது ராசா.. எது ஒனக்கு இம்மாம்(?) பேரு வாங்கிக்கொடுத்துதுனு நெனச்சுப்பாரு.. ரசிகர்களெல்லாம் எதிர்பார்த்துக்கிடப்பானுங்க.." என்று என்னை தூண்டிவிட்டுட்டு யாரையோ நினைச்சு "அவள.." என்று பல்லை நறநறவென கடித்தான்.

"அடப்பாவி எல்லாம் ஒழுங்காத்தேனே போய்க்கிட்டிருந்தது, அதுக்குள்ள மீராவோட என்ன பிரச்சினை?". அப்புறம் வழக்கம்போல இருவரும் புலம்பிக்கொண்டோம். கல்யாணம் பண்ணிக்கொண்டவர்களுக்கு எந்த குறைச்சலுமில்லாமல் இந்த லவ் பண்ணித் தொலைந்துகொண்டிருக்கும் பசங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்புடைய விஷயம்தான். நானும் ரமாவும் பிரிவிலிருப்பதால் கோபம் நீர்த்து காதல் துளிர்த்துக்கொண்டிருப்பதால் என்னால் அந்த சப்ஜெக்டை சரிவர இப்போதைக்கு எழுதமுடியாது, ஆனால் அவள் ஜனவரியில் திரும்பி வந்ததும் புத்துணர்ச்சியோடு ஆரம்பிப்பேன் என்று பலமுறை சொல்லியும் நண்பர்கள் சிலரின் சோகத்தையாவது நீங்கள் எழுதியாக வேண்டும் என்று ஒரே அன்புத்தொல்லை. ஆகவே இந்த டாப் 5. த‌ங்க‌ம‌ணியின் இம்சைக‌ளை ப‌ட்டிய‌லிட‌ ஆர‌ம்பித்தால் இந்த‌ ப‌திவு ம‌ட்டும‌ல்ல‌ இந்த‌ வ‌லைப்பூவே ப‌த்தாது என‌ நீங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள். இது ஏதோ என்ன‌ள‌வில் உண‌ரும் விஷ‌ய‌ங்க‌ளே. 'யுனிக்'கான‌ அவ‌ஸ்தைக‌ள் என‌ ஒவ்வொரு ஆண்க‌ளுக்கும் த‌னித்த‌னியே அனுப‌வ‌ங்க‌ள் இருக்கும். அதை நீங்க‌ள் ஒப்பிட்டுக்கொள்ள‌லாம்.

5. சாப்பாடு

துறை சார்ந்த விஷயங்களில் எழுத என்னிடம் ஒரு விஷயம் உண்டு. அதாவது ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்கிறார்? அதே காரியத்தை இன்னொருவர் எப்படிச்செய்கிறார்? அதே நபர் அதே காரியத்தை இன்னொருமுறை செய்யும்போது எப்படிச்செய்கிறார்? (Gauge R&R) என்பதுகுறித்த தொழில்நுட்பம். அதை விரிவாக பின்னர் பார்க்கலாம். ரமா நேற்று சாம்பார் என்று அவள் கூறிக்கொள்ளும் ஒன்றை வைத்தாள். ஏதோ நல்லாத்தான் இருந்த‌து. அதே ரமாதான். அதே அடுக்களைதான், அதே இடுபொருட்கள்தான்.. இன்றும் சாம்பார் வைக்கிறாள். வாயில் வைக்கவே முடியவில்லை. நூறு நாட்கள் வைத்தாலும் அது நூறு விதமான சாம்பாராகத்தான் இருக்கும். தோசை என்ன பண்ணியது? அதைக்கூட ஒரு நாள் புளிப்பு, மறுநாள் சப்பு, ஒருநாள் உப்பு.. இந்த லட்சணத்தில் நீங்கள் சப்பாத்தியைப்பற்றியெல்லாம் கேட்கக்கூடாது.

4. தொண தொணப்பு

என்னங்க, ராஜி வீட்டு பங்ஷனுக்கு போனப்போ நாம எடுத்த போட்டோவில ஊதா கலர் ஸாரியில எடுத்த படம் நல்லாயிருந்துதுன்னு சொன்னீங்கல்ல, அத பெரிசாக்கி பிரிண்ட் போட்டு லேமினேட் பண்ணனும். சரிம்மா, நீ வந்தவுடன் பண்ணிரலாம். இல்லிங்க ஒடனே வேணும், பண்ணி கொரியர் பண்ணுங்க.. ரெண்டு நாளா வேலை ஜாஸ்தியா இருக்குது. சண்டே பண்ணி மண்டே அனுப்பி வைக்கிறேம்மா.. நான் ஏதாவது சொன்னா உங்களுக்கு உடனே வேலை வந்துடுமே.. இப்ப என்னங்கற? நாளைக்கே பண்ணித்தொலையிறேன். (3 மணி நேரம்கழித்து..) பிரிண்டுக்கு கொடுத்தாச்சா? இன்னும் ஆபீஸ்லதான்மா இருக்கேன். (5 மணி நேரம் கழித்து..) என்ன பண்ணினீங்க.. மணி எட்டாகுதும்மா நாளைக்கு பண்ணிடலாம் (மறுநாள் காலை 7 மணிக்கு..) ம‌ற‌ந்துடாதீங்க (11 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..(1 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..

அரை நாள் லீவு போட்டேன்.

3. ப‌ர்சேஸ்

இது யுனிவெர்சல் பிராப்ளம். செருப்பில் என்ன‌ய்யா இருக்கிற‌து? இர‌ண்ட‌ரை ம‌ணிநேர‌ம் ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள். ஆர‌ம்பிக்கும் போது ஆவ‌லோடு க‌ல‌ந்துகொண்டு விட்டு அப்புற‌ம் மெதுமெதுவாக‌ சேரோடு செட்டிலானேன். என்னங்க‌ இதுல‌ ஹீல்ஸ் இல்ல‌, இது இதைவிட‌ 50 ரூபா அதிக‌ம், இது டிசைன் ந‌ல்லாயில்ல‌.. என்ன‌ ப‌ண்ண‌லாம். எதையாவ‌து நீயே செல‌க்ட் ப‌ண்ணிக்கோம்மா என்ன‌ விட்டுடேன். சொல்லுங்க‌ங்க‌.. இது அழ‌காயிருக்கும்மா, எடுத்துக்கோ.. அதை ம‌றுத்துவிட்டு வேற‌ எடுத்துக்கொண்டாள். மூணாவ‌து நாள் ஊரிலிருந்து போன் வ‌ருகிற‌து. என்ன‌ங்க‌ செருப்பு வாங்கிக்கொடுத்தீங்க‌.. இதுல‌ ஹீல்ஸே இல்ல‌.. என‌க்கு இது வேணாம், இப்ப‌ போனா மாத்திக்கொடுப்பானா?

2. ல‌க்கேஜ்

வீடு நிறைய‌ பொருட்க‌ள், உப‌யோக‌ப்ப‌டுவ‌து, உப‌யோக‌ம‌ற்ற‌து, வீணான‌வை என‌ வீடு நிறைந்திருக்கிற‌து. வீட்டை மாற்றுவ‌தெல்லாம் பிர‌ம்ம‌ பிர‌ய‌த்த‌ன‌மாகிவிட்ட‌து இந்த‌ இர‌ண்டே வ‌ருட‌ங்க‌ளில். நான் வேலை விஷ‌ய‌மாக‌ வெளியூர் செல்கிறேன். இர‌ண்டு நாட்க‌ளுக்கு தேவையான‌ உடை, செபோன் சார்ஜர், பேஸ்ட்,பிரஷ், ஆபீஸ் பைல்க‌ள், தேவைப்ப‌ட்டால் லாப்டாப் அவ்வளவுதான். அத்‌த‌னையும் ஒரே ஒரு பேக்கில், முடிந்த‌து.
நானும் ர‌மாவும் ஊருக்குக்கிள‌ம்புகிறோம். இர‌ண்டே பேர்தான். இர‌ண்டு பிக் ஷாப்ப‌ர்ஸ், ஒரு பெரிய‌ பேக், ஒரு அகலமான பிளாஸ்டிக் பை, முடிந்தால் ஒரு கால் மூட்டை அரிசி அள‌வில் ஒரு கோணிப்பையில் பொருட்க‌ள் மூட்டைக‌ட்டிய‌ நிலையில். ர‌யிலில் இருந்து வெளியே ஆட்டோவுக்குள் வ‌ருவ‌த‌ற்குள் ட‌வுச‌ர் கிழிஞ்சுடும்.. என்ன‌தான் இருக்கின்ற‌ன‌ அந்த‌ப்பைக‌ளில்.?

1. ர‌ச‌னை

ஒங்க‌ளுக்கு ம‌ண்டையில‌ ஒண்ணுமே கிடையாதுங்க‌, ஒங்க‌ளை யாரு வாங்க‌ச்சொன்னா, நா வ‌ந்த‌ப்புற‌ம் வாங்கிக்க‌லாம்னு சொன்னேன்ல‌.. பெட் ஸ்ப்ரெட் வாங்கியிருக்கிற‌ ல‌ட்ச‌ண‌த்த‌ப்பாரு..

பால் வெள்ளையில், குட்டிகுட்டியாய் ம‌ல‌ர்ந்திருந்த‌ க‌றுப்புப்பூக்க‌ள் என்னை ப‌ரிதாப‌மாக‌ பார்த்த‌ன‌.

டிஸ்கி : இந்த‌ப்பாயிண்டுக‌ளுக்கு ஓர‌ள‌வு தொட‌ர்புள்ள‌ முந்தைய‌ ப‌திவுக‌ளின் இணைப்புக‌ள் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ப‌டித்திராத‌வ‌ர்க‌ள் சென்று ப‌டித்து பின்னூட்ட‌மிட்டுச்செல்ல‌வும். இப்போது த‌மிழ்ம‌ண‌ ஓட்டு முக்கிய‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுவ‌தால் ர‌சித்த‌வ‌ர்க‌ள் ஓட்டுப்போட்டுவிட்டு செல்லவும். அப்படிச்செய்பவர்களுக்கு இன்றுமட்டும் ம‌னைவிமாரிட‌ம் எந்த‌ப்பிர‌ச்சினையும் வ‌ராம‌ல் இருக்க‌க்க‌ட‌வ‌தாக‌..

63 comments:

வெண்பூ said...

மீ த பஷ்டூ... :)))

வெண்பூ said...

சரி.. சரி.. விடுங்க.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. ஆனா என்னா எல்லாருக்கும் இந்த அஞ்சும் பொருந்திவரும் போல தெரியுது.. இது எல்லாம் இல்லாமதான் நீங்க சொன்ன மத்த "யுனிக்" தொந்தரவுகள் எல்லாம்.. :)))

புதுகைத் தென்றல் said...

நானும் ரமாவும் பிரிவிலிருப்பதால் கோபம் நீர்த்து காதல் துளிர்த்துக்கொண்டிருப்பதால் என்னால் அந்த சப்ஜெக்டை சரிவர இப்போதைக்கு எழுதமுடியாது, ஆனால் அவள் ஜனவரியில் திரும்பி வந்ததும் புத்துணர்ச்சியோடு ஆரம்பிப்பேன் என்று பலமுறை சொல்லியும் நண்பர்கள் சிலரின் சோகத்தையாவது நீங்கள் எழுதியாக வேண்டும் என்று ஒரே அன்புத்தொல்லை./

இப்படிச் சொல்லிட்டு நீங்க பழக்கதோஷத்துல ரமாவைப் பத்தி மட்டுமே எழுதியிருக்கீங்க.

புதுகைத் தென்றல் said...

இதுக்கெல்லாம் ஹஸ்பண்டாலஜியில் வருதுங்க வேட்டு.

:))))))))))))

பாபு said...

இதை இதை இதைத்தான் எதிபார்த்தேன்
ஓட்டு போட்டாச்சு

Raj said...

ரசிச்சேன்.........உங்க அவஸ்தையை!

அருண் said...

ஜூப்பர்!

தமிழ் பிரியன் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்குது.. அம்புட்டுத்தேன்.... இதெல்லாம்
முகமுடி அணிந்து இருக்கும் பேச்சலர் அப்பாவிகளுக்கு சொன்னா புரியாது.. அனுபவிச்சாத்தான் புரியும்.. குசும்பனுக்கு கூட சொன்னோம்.. கேக்கலியே?...;))))

இராம்/Raam said...

கலக்கல்... :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம்ஹும் திருந்த மாட்டீங்களே.

உங்க ரமாகிட்ட சொல்லி உங்கள செருப்பு வாங்க கூட்டிகிட்டு போக சொல்லனும்.

தமிழன்-கறுப்பி... said...

அது சரி...;)

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப தைரியம்யா உங்களுக்கு...:)

சந்தனமுல்லை said...

:-)))

பரிசல்காரன் said...

//செருப்பில் என்ன‌ய்யா இருக்கிற‌து//

Same Blood!!


(ஆனால் அதை என் வலைப்பூவில் சொல்ல தைரியமில்லை. அப்பறம் நான் சொன்னதன் இரண்டாவது வார்த்தையை நானே பார்க்கவேண்டி இருக்கும்...)

பரிசல்காரன் said...

தாமிரா..

உங்க வீட்ல ப்ளாக் படிக்கறதில்லையா..

ம்ம்.. எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்...

குசும்பன் said...

பதிவு அருமை!

பரிசலின் வீட்டுகாரம்மா கிட்ட பரிசலின் பின்னூட்டம் பற்றி போட்டு கொடுக்கனுமே!!!

இந்த பின்னூட்டத்தை படிப்பவர்கள் அதை செய்தால் அன்றிரவு அரை குறை ஆடையுடன் நமீதா கனவில் வருவார், இல்லை என்றால் அரை குறை ஆடையுடன் சஞ்சய் கனவில் வருவார்!!!

குசும்பன் said...

தமிழ் பிரியன் said...
இருக்கும் பேச்சலர் அப்பாவிகளுக்கு சொன்னா புரியாது.. அனுபவிச்சாத்தான் புரியும்.. குசும்பனுக்கு கூட சொன்னோம்.. கேக்கலியே?...;))))//

எந்த வாலிபன் பெருசுங்க அறிவுரைய கேட்டு நடந்து இருக்கான் சொல்லுங்க!!!

அத்திரி said...

//ரசிச்சேன்.........உங்க அவஸ்தையை!//


என்ன கொடுமை தாமிரா ரசிக்கிறாராம்.

)))))))))))))))))))

கும்க்கி said...

இனம் இனத்தோடதானே சேரும்.......
(மீ த பஸ் டூ வைச்சொன்னேன்)

கும்க்கி said...

பரிசல்காரன் said...

தாமிரா..

உங்க வீட்ல ப்ளாக் படிக்கறதில்லையா..

ம்ம்.. எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்...

எல்லாம் ஆர்வ கோளாரில் ஆரம்பத்தில் சொந்தமா சூனியம் வெச்சுக்கறதுதான்.......

நாளாக நாளாக குத்துது...கொடயுது கணக்கு..என்ன செய்ய..?

Mahesh said...

வீட்டுக்கு வீடு க்ரில் கேட்டு !!! :))

அன்புடன் அருணா said...

ஹாஹஹஹா.....என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
அன்புடன் அருணா

ரோஜா காதலன் said...

//கல்யாணம் பண்ணிக்கொண்டவர்களுக்கு எந்த குறைச்சலுமில்லாமல் இந்த லவ் பண்ணித் தொலைந்துகொண்டிருக்கும் பசங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்புடைய விஷயம்தான்.//

உண்மையை உலகுக்கு சொல்லும் தாமிரா புகழ் ஓங்குக !

// (3 மணி நேரம்கழித்து..) பிரிண்டுக்கு கொடுத்தாச்சா? இன்னும் ஆபீஸ்லதான்மா இருக்கேன். (5 மணி நேரம் கழித்து..) என்ன பண்ணினீங்க.. மணி எட்டாகுதும்மா நாளைக்கு பண்ணிடலாம் (மறுநாள் காலை 7 மணிக்கு..) ம‌ற‌ந்துடாதீங்க (11 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..(1 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..

அரை நாள் லீவு போட்டேன்.//

கவிதை மாதிரி இருக்கு உங்க அவஸ்தை !

கண்ணெல்லாம் இருளுது பேச்சிலர் பட்டம் பறிபோனா என்ன ஆகும்னு நினைக்கும் போது... :(

கடவுளே என்ன மாதிரி பேச்சிலர் பசங்கள நீ தான் காப்பாத்தி கரை சேர்க்கணும்.....

ரோஜா காதலன் said...

பதிவை திரும்ப திரும்ப படித்து, அடக்க முடியாத சிரிப்பு வரும்போதெல்லாம், இந்த சிரிப்பெல்லாம் காத்துல கரைஞ்சிடுமோனு பயமா இருக்கு... இவ்வளவு அனுபவப்பட்டவங்க எல்லாம் எங்களுக்கு ஒரு கொடுமைனா(கல்யாணத்த தான்) காப்பாத்திடுவீங்கனு நம்பி தான், நான், சகா கார்க்கி, மற்றும் நம் பேச்சிலர் இளவரசர்கள் எல்லாரும் கொஞ்சம் தைரியமா இருக்கோம்...

”தேவதை”கள் எல்லாம் திருமணத்திற்கு பின் வெறும் “வதை” தான் நல்லாவே புரியுது.

விஜய் ஆனந்த் said...

:-)))...

என்னதான் இம்சைகளை லிஸ்ட் போட்டாலும், ஒரு ஓரமா பிரிவுத்துயர் எட்டிப்பாக்குற மாதிரி தெரியுதே!!!

புதுகை.அப்துல்லா said...

பால் வெள்ளையில், குட்டிகுட்டியாய் ம‌ல‌ர்ந்திருந்த‌ க‌றுப்புப்பூக்க‌ள் என்னை ப‌ரிதாப‌மாக‌ பார்த்த‌ன‌.

//

அண்ணே இதில் உள்ள உள் குத்து உங்களுகும் எனக்கும் மட்டும்தான் தெரியும் :)))))))

புதுகை.அப்துல்லா said...

பரிசல்காரன் said...
தாமிரா..

உங்க வீட்ல ப்ளாக் படிக்கறதில்லையா..

ம்ம்.. எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்...

//

அது :))

புதுகை.அப்துல்லா said...

குசும்பனுக்கு கூட சொன்னோம்.. கேக்கலியே?...;))))

//

குசும்பன் எக்சப்சன் கேசு.... இன்னும் நக்கல் மிச்சம் இருக்கே தலைவன்கிட்ட :))))

புதுகை.அப்துல்லா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
ம்ஹும் திருந்த மாட்டீங்களே.

//

திருந்துரதா???? தாமிராவுக்கு தமிழ் பிடிக்காத ஒரே வார்த்தை அதுதான் :)))

Anonymous said...

:-)))))))

பெருசு said...

ஆஹா, ஜனவரிலே உனக்கு இருக்குடி.

கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும்.

rapp said...

பாவம் ரமா:(:(:(

rapp said...

//ஆனால் அதை என் வலைப்பூவில் சொல்ல தைரியமில்லை. அப்பறம் நான் சொன்னதன் இரண்டாவது வார்த்தையை நானே பார்க்கவேண்டி இருக்கும்//

அதான் நீங்க உமா மேடமுக்கு உங்கக் கல்யாண நாளப்போ போட்ட கவிதயிலயே படிச்சோமே:):):) ரமா அண்ணியும் உமா அண்ணியும் எழுத ஆரம்பிசாஆஆஆஆஆஆஅ:):):):)

விஜய் said...

அண்ணி அம்பையில தானே இருக்காங்க. அடுத்த வாரம் அங்கிட்டுதான் போறேன். சப்பாத்தி கட்டையால் அடி வாங்க ஜனவரி வரை காத்திருக்கத் தேவையில்லை.

டிஸ்கி: இந்த கொடுமையெல்லாம் நான் மட்டும் தான் அனுபவிக்கிறேன்னு நினைச்சிட்டிருந்ந்தெஏன்.

SurveySan said...

ரொம்ப தைரியமானவர் போலருக்கே நீங்க. ரமா பதிவெல்லாம் படிக்கரதில்லையா? :)

சென்ஷி said...

//கவிதை மாதிரி இருக்கு உங்க அவஸ்தை !

கண்ணெல்லாம் இருளுது பேச்சிலர் பட்டம் பறிபோனா என்ன ஆகும்னு நினைக்கும் போது... :(

கடவுளே என்ன மாதிரி பேச்சிலர் பசங்கள நீ தான் காப்பாத்தி கரை சேர்க்கணும்.....//

சேம் ப்ளட் :((((

ஈர வெங்காயம் said...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

வேற என்னத்த சொல்ல...

கார்க்கி said...

ஸப்பா.. சரியான நேரத்தில் போட்டிங்க சகா இந்த பதிவ.. இல்லைன்னா எங்கம்மாகிட்ட பொண்ணு பார்க்க சொல்லியிருப்பேன்.. எஸ்கேப்..

//இந்த பின்னூட்டத்தை படிப்பவர்கள் அதை செய்தால் அன்றிரவு அரை குறை ஆடையுடன் நமீதா கனவில் வருவார், இல்லை என்றால் அரை குறை ஆடையுடன் சஞ்சய் கனவில் வருவார்!!//

சஞ்சயே வரட்டும்.. தொழிலதைபர் டூர் போறப்ப வரட்டும். :))))

கோவி.கண்ணன் said...

//ப‌ர்சேஸ்இது யுனிவெர்சல் பிராப்ளம். செருப்பில் என்ன‌ய்யா இருக்கிற‌து? இர‌ண்ட‌ரை ம‌ணிநேர‌ம் ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள். //

சத்யமான உண்மை.

:) எல்லா இடத்திலேயும் இத்தானா ?

தாமிரா said...

நன்றி வெண்பூ.! (அடுத்து இந்த சப்ஜெக்ட்ல விஷயத்துக்கு கொஞ்சம் லீட் கொடுக்கலாமே அங்கிள்.. **அய்யய்யோ பப்ளிக்ல வெச்சு கேட்டுட்டேனே**)

நன்றி தென்றல்.! (பழக்கதோஷத்துல ரமாவைப் பத்தி மட்டுமே எழுதியிருக்கீங்க.// அட‌ ஆமாங்க‌.!)

நன்றி பாபு.!
நன்றி ராஜ்.!
நன்றி அருண்.!

நன்றி தமிழ்.! (பேச்சலர் அப்பாவிகளுக்கு சொன்னா புரியாது.. // கேக்க‌ மாட்றானுங்க‌ளே..)

நன்றி இராம்.!
நன்றி அமிஷு அம்மா.!

நன்றி தமிழன்கறுப்பி.! (ப‌ழ‌செல்லாம் ப‌டிச்ச‌தில்லையா? warning to bacholers labelக்கு போகவும்)

நன்றி முல்லை.! (சும்மா சிரிச்சா எப்பிடி?)

நன்றி பரிசல்.! (உங்க வீட்ல ப்ளாக் படிக்கறதில்லையா..// எப்பிடி இப்பிடி தெரியாத‌ மாதிரியே கேக்குறீங்க‌..)

நன்றி குசும்பன்.! (இந்த பின்னூட்டத்தை படிப்பவர்கள் அதை செய்தால் அன்றிரவு அரை குறை ஆடையுடன் நமீதா கனவில் வருவார், இல்லை என்றால் அரை குறை ஆடையுடன் சஞ்சய் கனவில் வருவார்!!!// ஏன் இப்பிடி கொடூர‌ சிந்த‌னை..?)

நன்றி அத்திரி.!
நன்றி கும்க்கி.!
நன்றி மகேஷ்.!
நன்றி அருணா.!

நன்றி ரோஜா.! (பெரிதா பின்னூட்ட‌ம் போட‌ற‌தெல்லாம் இருக்க‌ட்டும். ஒழுங்கா வ‌ர்ற‌தில்லை போலிருக்கே..)

தாமிரா said...

நன்றி ஆனந்த்.! (ஒரு ஓரமா பிரிவுத்துயர் எட்டிப்பாக்குற மாதிரி தெரியுதே!!!// எப்பிடிங்க‌ புடிச்சீங்க‌.? அதான் ப‌திவு Tough ஆ இல்லைன்னு நானும் .:பீல் ப‌ண்ணினேன்)

நன்றி அப்துல்.! (அண்ணே இதில் உள்ள உள் குத்து உங்களுகும் எனக்கும் மட்டும்தான் தெரியும் :)// யோவ் எதுவுமே மனசுக்குள்ள வெசிக்க மாட்டீங்களா?)

நன்றி வேலன்.!
நன்றி பெரிசு.!
நன்றி ராப்.!
நன்றி விஜய்.! (போட்டோவ‌ பாத்துட்டு சிறிசுன்னுல்ல‌ நினைச்சுட்டேன். அவரா நீங்க‌.!)

நன்றி சர்வேசன்.! (ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. காபி சாப்பிடுறீங்களா..)

நன்றி சென்ஷி.! (ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. காபி சாப்பிடுறீங்களா..)

நன்றி கார்க்கி.!
நன்றி வெங்காயம்.!

நன்றி கோவிஜி.! (ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. காபி சாப்பிடுறீங்களா..)

தாமிரா said...

இந்தப்பதிவு 14/16 ஓட்டுகள் வாங்கி வாசகர் பரிந்துரையிலும் இருக்கிறது. (முதல் முறையாக வாசகர் பரிந்துரையில் இடம்). சூடான இடுகையிலும் இருக்கிறது (ரொம்ப நாள் கழிச்சு சூடான இடுகையில் இடம்). இந்த ஹார்ம்லெஸ் பதிவுக்கும் 2 மைனஸ் ஓட்டுகள் போட்ட புண்ணியவான்கள் யாரென தெரியவில்லை. அனேகமாக புண்ணியவாணிகளாக இருக்கலாம். அனைவருக்கும் நன்றி.

மகா ஜனங்களே,

உக்காந்து உக்காந்து யோசிச்சு எழுதினாலும் பிளாப் ஆக்கி விடுகிறீர்கள். சில எதிர்பாராத பதிவுகளை ஹிட்டாக்கி படைப்பாளிகளை திக்குமுக்காட வைத்துவிடுகிறீர்கள். சினிமாக்காரர்கள் ஏன் பைத்தியம் பிடிச்சு அலைகிறார்கள் என்பது புரிகிறது. நடத்துங்கள்.. நடத்துங்கள்.. நன்றி.

ஸ்ரீமதி said...

அண்ணா காலைல வந்ததும் படிக்க ஆரம்பிச்சேன்.. ஒரு வழியா நீங்க கொடுத்த லிங்க்கால உங்க ப்ளாக் உள்ளேயே சுத்தி சுத்தி படிச்சு சிரிச்சிட்டு இதுக்கு மட்டும் பின்னுட்டம் போட வந்துட்டேன்.. :)))ரொம்ப நல்லா இருக்கு... எல்லாமே ரொம்ப காமெடியா எழுதிருக்கீங்க... ஆனா அண்ணி இதெல்லாம் படிக்க மாட்டாங்களா?? அவங்க படிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன் ரொம்ப தைரியமாவே எழுதிருக்கரதுனால... :))) Anyways i enjoyed a lot.. :))

ஸ்ரீமதி said...

//மைனஸ் ஓட்டுகள் போட்ட புண்ணியவான்கள் யாரென தெரியவில்லை. அனேகமாக புண்ணியவாணிகளாக இருக்கலாம்.//

இது அபாண்டம்.. நானெல்லாம் பிளஸ் ஓட்டு தான் போட்டேன்.. :))))

ஸ்ரீமதி said...

ரங்கமணியின் இம்சைகள்-ன்னு நான் ஒரு புது பதிவு போடலாம்ன்னு இருக்கேன்.. நீங்க என்ன சொல்றீங்க அண்ணா?? பட் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலியே.. சோ ஆனதுக்கு அப்பறம் போடறேன்.. ;))))))

வெண்பூ said...

//
சோ ஆனதுக்கு அப்பறம் போடறேன்
//

நீங்க சோ ஆகிட்டா, அப்ப சோ என்ன ஆவாரு?

இப்படிக்கு
'சோ'வின் தலையில் முடி முளைக்க யாகம் செய்வோர் சங்கம்..

ஸ்ரீமதி said...

//தாமிரா said...
இந்தப்பதிவு 14/16 ஓட்டுகள் வாங்கி வாசகர் பரிந்துரையிலும் இருக்கிறது. (முதல் முறையாக வாசகர் பரிந்துரையில் இடம்). சூடான இடுகையிலும் இருக்கிறது (ரொம்ப நாள் கழிச்சு சூடான இடுகையில் இடம்). இந்த ஹார்ம்லெஸ் பதிவுக்கும் 2 மைனஸ் ஓட்டுகள் போட்ட புண்ணியவான்கள் யாரென தெரியவில்லை. அனேகமாக புண்ணியவாணிகளாக இருக்கலாம். அனைவருக்கும் நன்றி.//

ரொம்ப பேரு பாதிக்கப் பட்டுருப்பாங்கன்னு இதன் மூலம் நிரூபணம் ஆகுது.. இருந்தாலும் நம்ம கேஸ் பரவாலன்னு சொல்றதுக்கும், நம்ம கவலைய இங்கயாவது சொல்லலாம்ன்னும் தான் நிறைய பேர் இருக்காங்க.. :)))

ஸ்ரீமதி said...

//வெண்பூ said...
//
சோ ஆனதுக்கு அப்பறம் போடறேன்
//

நீங்க சோ ஆகிட்டா, அப்ப சோ என்ன ஆவாரு?

இப்படிக்கு
'சோ'வின் தலையில் முடி முளைக்க யாகம் செய்வோர் சங்கம்..//

'சோ'-வுக்கு தலைல முடி முளைக்கறது இருக்கட்டும்.. அண்ணி அடிச்சு உங்க தலைக் காயத்துக்கு தையல் போட கட் பண்ண முடி வளர்ந்ததா அண்ணா??
;))
இப்படிக்கு
அண்ணிகளிடம் கரண்டியால் அடி வாங்கும் அண்ணன்களுக்காக வருத்தப்படும் தங்கைகள் சங்கம்.. :))

மங்களூர் சிவா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

50

மங்களூர் சிவா said...

உண்மையை உலகுக்கு சொல்லும் தாமிரா புகழ் ஓங்குக !

மங்களூர் சிவா said...

/
ரோஜா காதலன் said...

”தேவதை”கள் எல்லாம் திருமணத்திற்கு பின் வெறும் “வதை” தான் நல்லாவே புரியுது.
/

புரிஞ்சி உசாரா இருந்துக்கங்கப்பு எங்களை மாதிரி இல்லாம :(((((((

மங்களூர் சிவா said...

//ப‌ர்சேஸ்இது யுனிவெர்சல் பிராப்ளம். செருப்பில் என்ன‌ய்யா இருக்கிற‌து? இர‌ண்ட‌ரை ம‌ணிநேர‌ம் ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள். //

ஏன் நம்பாம கல்யாணம் ஆகி மூனு மாசம்கூட ஆகலை நாங்களும் போனோமே செருப்பு வாங்க ஆனா எங்க வீட்டு தங்கமணி பரவாயில்லப்பா ரெண்டே மணி நேரத்துல முடிச்சிட்டாங்க :))

மங்களூர் சிவா said...

//
வெண்பூ said...

//
சோ ஆனதுக்கு அப்பறம் போடறேன்
//

நீங்க சோ ஆகிட்டா, அப்ப சோ என்ன ஆவாரு?

இப்படிக்கு
'சோ'வின் தலையில் முடி முளைக்க யாகம் செய்வோர் சங்கம்..
//

ரிப்பீட்டு
மங்களூர் கிளை

வெண்பூ said...

//
இப்படிக்கு
அண்ணிகளிடம் கரண்டியால் அடி வாங்கும் அண்ணன்களுக்காக வருத்தப்படும் தங்கைகள் சங்கம்.. :))
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!! :))))

மங்களூர் சிவா said...

//
வெண்பூ said...

//
இப்படிக்கு
அண்ணிகளிடம் கரண்டியால் அடி வாங்கும் அண்ணன்களுக்காக வருத்தப்படும் தங்கைகள் சங்கம்.. :))
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!! :))))
//

ரிப்பீட்டு
மங்களூர் கிளை

மின்னுது மின்னல் said...

நிறைய Blogger பதிவுகளில் பின்னூட்டப் பகுதியைப் பார்த்தா தலைப்பில் காட்டப்பட்ட மாதிரிதான் பின்னூட்டாளரின் பெயர் தெரியுது. இது ஏன் இப்படின்னு கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன். Firebug நீட்சியைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்த போது பின்னூட்டியவருக்கான code கீழ்க்கண்டவாறு இருந்தது:
மேலும்..படிக்க


http://valaipadhivan.blogspot.com/2008/07/said.html

ரோஜா காதலன் said...

மனசாட்சியே இல்லாம இப்படி பேசலாமா? தினந்தோறும் உங்க பதிவை பார்த்துட்டுதான் இருக்கேன். இன்னும் ஒரு வாரத்தில் நாடு திரும்பிடுவேன்(dec 13th, around 9pm, chennai airport arrival), அதுக்கு அப்பறம் நேர்லயே வந்து கேட்பேன் “எப்படி நீங்க இந்த கேள்விய கேட்கலாம்னு?”

//
மங்களூர் சிவா said...
உண்மையை உலகுக்கு சொல்லும் தாமிரா புகழ் ஓங்குக !//

wisemen think alike

//மங்களூர் சிவா said...
/
ரோஜா காதலன் said...

”தேவதை”கள் எல்லாம் திருமணத்திற்கு பின் வெறும் “வதை” தான் நல்லாவே புரியுது.
/

புரிஞ்சி உசாரா இருந்துக்கங்கப்பு எங்களை மாதிரி இல்லாம :(((((((
//

அண்ணே உங்க கல்யாணத்தை பத்தி லைவ் ரிப்போர்ட் படிச்சிருக்கேன்.. ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு சிக்கிரமா கொடுமைகள் ஆரம்பிக்கும்னு கொஞ்சம் கூட நினைக்கல...

வெண்பூவின் ”பேய் பிடித்தவன்” சிறுகதையை வெளிவராமல் தடுக்கும் அன்னிய சக்தியை(அண்ணியின் சக்தி?!) அவர் வென்று, கூடிய சீக்கிரம் பதிவிடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் !

புதுகைத் தென்றல் said...

ஸ்ரீமதி,

ஏற்கனவே ரங்கமணிகள் செய்யும் கொடுமைகளையும், அவற்றிற்கான ட்ரீட்மெண்டுகளூடன் ஹஸ்பண்டாலஜி வகுப்பு நடைப்பெறுகிறது.

ஒவ்வொரு திங்களும் நம்ம பிளாக் பக்கம் வாங்க.

(இந்த பின்னூட்டத்தை தாமிரா வெளியிடுவாருன்னு நம்பிக்கை இல்லை :) )

தாமிரா said...

ரொம்ப நல்லா இருக்கு... எல்லாமே ரொம்ப காமெடியா எழுதிருக்கீங்க...//

காமெடிக்காக எழுதவில்லை தோழி, சிந்தனைக்காக இந்த தொடர் எழுதப்பட்டுவருகிறது. சிந்திக்கவும்.. (ரொம்ப சிந்திச்சு மனப்பிறழ்வு நிகழ்ந்தால் நான் பொறுப்பல்ல..)

நன்றி ஸ்ரீமதி.!

வெண்பூ :நீங்க சோ ஆகிட்டா, அப்ப சோ என்ன ஆவாரு? // வேலைவெட்டி ஏதுமில்லை என நன்கு புரிகிறது. ஏதாவது புது பதிவு போடற வழியை பார்க்கவும்.

நன்றி மங்களூர்.! (மங்களூர் சிவா said...
உண்மையை உலகுக்கு சொல்லும் தாமிரா புகழ் ஓங்குக !/// ஏதாவ‌து புதிய‌ வார்த்தைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்த‌வும்)

நன்றி மின்னல்.!

நன்றி தென்றல்.! (விரைவில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுட‌ன் கூட்டு சேர்ந்து வெண்பூ அங்கிள் தலைமையில் புதிய‌ க‌ல்லூரி திற‌க்க‌ப்ப‌டும் என்று இத‌ன் மூல‌ம் அறிவிக்கிறேன்)

வால்பையன் said...

நானெல்லாம் கொடுத்து வச்சவன் வெறும் அடியோடு சரி.
ஷாப்பிங் எல்லாம் தனியா தான் போவாங்க!
நான் துணி துவைக்கிறது, சமையல் பண்றது மாதிரி சின்ன சின்ன வீட்டு வேலைகள் மட்டும் செய்வேன்.

வெண்பூ said...

//
வெண்பூவின் ”பேய் பிடித்தவன்” சிறுகதையை வெளிவராமல் தடுக்கும் அன்னிய சக்தியை(அண்ணியின் சக்தி?!) அவர் வென்று,
//
என்னாது... அண்ணிய சக்தியை வெல்வதா... ஹி..ஹி.. ஆகவேண்டியத பாருங்க சார்.. ஆமா.. நீங்க பேச்சுலரா? (ஹி..ஹி.. இதுகூட புரியாம இருக்குறீங்களே! அதனால கேட்டேன்..) :)))

தீரன் said...

அம்மாடியோவ் இதுல இத்தன சிக்கல் இருக்கா.....மனுசம் ரொம்ப அடி பட்ட மாதிரி தெரியுது.....பாத்து ...மேலும் வாங்கிக்கட்டிக்கொள்ளதீர்கள் ....