Saturday, November 1, 2008

எனது பட்ஜெட்.!

நேற்றிரவே சம்பளம் வந்துவிட்டதாக‌ எஸ்எம்எஸ் வந்தது. பலவாறாக சிந்தனைகள் பறந்தது. ரமா வேறு ஊரில் இல்லை. என்ன பண்ணலாம்?

கிரெடிட் கார்ட் நம்பர் 1 ஐ இந்த மாதத்தோடு ஒழித்துக்கட்டிவிட்டு கட் பண்ணிப்போட்டுவிடவேண்டும். கிரெடிட் கார்ட் நம்பர் 2 வில் மினிமம் மட்டுமே கட்டமுடியும். ராஜனிடம் வாங்கிய கைமாத்தை ரெண்டு மாசமாக கொடுக்கவில்லை, அதை முதலில் கொடுக்கவேண்டும். எல்ஐசி 1 மற்றும் 2. வண்டி டுபுடுபுவென வித்தியாசமாக சத்தம் போடுகிறது, என்னவென்று பார்க்கவேண்டும். இந்த மாசமாவாது அம்மா அக்கவுண்டில் கொஞ்சம் போடணும். சின்ன ரஸ்கல் நம்பளவிட கம்மியா சம்பளம் வாங்கினாலும் ஒழுங்கா வீட்டுக்கு குடுத்துடுறானே? ஷூ இப்பிடி வழுக்குதே, புதுசு வாங்குணுமே.. இந்த மாசம் ஊருக்கு வேற போகணும். அப்புறம் வழக்கம்போல வீட்டு வாடகை, கரண்ட் பில், தண்ணீர், பேப்பர், கேபிள் (பால், மளிகை கிடையாது).. வேறென்ன.? ம்.. மிச்சத்துல‌ இந்த மாசம் ஒரு ரெண்டு செஷனுக்காவது தேத்தமுடியமா? ம்....

"ஒரு வார்த்த‌ கேட்க‌ ஒரு வ‌ருச‌ம், காத்திருந்தேன்.." ரிங் டோன். வேற‌ யாரு? ர‌மாதான்.

'என்ன‌ங்க‌, வ‌ந்துடுச்சா?' 'ம்'

'வாட‌கை இன்னிக்கே குடுத்துடுங்க‌' 'ச‌ரி'

'க்ரெடிட் கார்டுக்கும், எல்ஐசிக்கும் முத‌ல்ல‌ போட்டுடுங்க‌' 'ச‌ரி'

'பேப்ப‌ர், அயர்ன், கேபிளுக்கு கேஷ் எடுத்து ரெடியா வெச்சுக்குங்க‌' 'ச‌ரி'

'மிச்ச‌த்த‌ என் அக்க‌வுண்ட்ல‌ போட்டுருங்க‌' '.....'

'என்ன‌ ச‌த்த‌த்தையே காணோம்?' 'இல்ல‌ம்மா, ஷூ..?'

'ச்சு.. அதெல்லாம் நா வ‌ந்த‌ப்புற‌ம் பாத்துக்க‌லாம்' '.....'

'என்ன‌?' 'இல்ல‌ம்மா.. ராஜ‌ன்ட்ட‌ கொஞ்ச‌ம் கைமாத்து வாங்கியிருந்தேன்..'

'என‌க்கு தெரியாம எப்ப‌ வாங்கினீங்க‌?' 'போன‌ மாச‌ம்'

'என்ன‌ விளாடுறீங்க‌ளா, எதுக்காக‌ வாங்கினீங்க?' '.....'

'கேக்கிறேன்ல..' 'அதெல்லாம் உன‌க்கெதுக்கு.. போடி.. எல்லா‌த்தியும் உங்கிட்ட எழுதி ஒட்டிக்கிட்டிருக்க‌முடியாது'

'#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'..........

(இவ்வாறாக எதிர்க‌ட்சிக்கும், ஆளும் க‌ட்சிக்கும் இடையேயான‌ ப‌ட்ஜெட் மீதான‌ விவாத‌ம் தோல்வியில் முடிந்த‌து)

56 comments:

சந்தனமுல்லை said...

ஆஹா..உண்மையை சொல்லுங்க...எஸ்எம்எஸ் சாலரி அப்டேட் அவங்க மொபைலுக்குத்தானே போகும்!! :-))...

சந்தனமுல்லை said...

இந்த பதிவை உங்க டேமேஜருக்கு அனுப்புங்க..அப்ரைசல் அப்போ யூஸ்புல்லா இருக்கும்..:-))

Anonymous said...

(இவ்வாறாக எதிர்க‌ட்சிக்கும், ஆளும் க‌ட்சிக்கும் இடையேயான‌ ப‌ட்ஜெட் மீதான‌ விவாத‌ம் வழக்கம் போல் தோல்வியில் முடிந்த‌து)

புதுகை.அப்துல்லா said...
This comment has been removed by the author.
புதுகை.அப்துல்லா said...

பதிவைப் பார்த்தவுடனே மீ த ஃபர்ஸ்டு போடலாமுனு பார்த்தா அதுக்குள்ள மூனு கமெண்டு :(

தமிழ் பிரியன் said...

அந்த '#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'. க்குப் அப்புறம் நடந்த சரண்டர் மேட்டரை எழுதாத உங்களுடைய நுண்ணரசியலை ரசித்தேன்.. :))

கார்க்கி said...

அம்மா... வேணாம்.. நிறுத்துங்க..

விலெகா said...

"ஒரு வார்த்த‌ கேட்க‌ ஒரு வ‌ருச‌ம், காத்திருந்தேன்...
ஒரு வார்த்தை இல்ல,ஏகப்பட்ட வார்த்தை போங்க:-)))))

விலெகா said...

"ஒரு வார்த்த‌ கேட்க‌ ஒரு வ‌ருச‌ம், காத்திருந்தேன்....ஒரு வார்த்தை இல்ல,ஏகப்பட்ட வார்த்தை போங்க!!)))))

வெண்பூ said...

ஹி..ஹி.. இதுக்குதான் பட்ஜெட்லாம் நாம போடக்கூடாது.. அவங்க போடுற பட்ஜெட்க்கு அப்ரூவல் குடுக்குற அத்தாரிட்டி மட்டும் நம்மளுதா இருக்கணும்.. (அதுல ஒரு சேஞ்சும் சொல்லாம அப்படியே அப்ரூவ் பண்ணுறது ரொம்ப முக்கியம்) :))))

Raghavan said...

என்னதான் டோட்டல் சரண்டர் என்றாலும் இது மாதிரி எல்லாம் எழுதி வருங்கால சந்ததிகளுக்கு வழிகாட்ட கூடாது. இப்படி எழுதினால் கஷ்ட படபோவது நமது ஆண் வர்க்கம் தான் என்பதை மறக்க வேண்டாம்.

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))

Anonymous said...

//'அதெல்லாம் உன‌க்கெதுக்கு.. போடி.. எல்லா‌த்தியும் உங்கிட்ட எழுதி ஒட்டிக்கிட்டிருக்க‌முடியாது'\\
நீங்க வாடி போடீன்னதுக்கு ரமா வாடா போடான்னுருப்பாங்க, அவ்வளவுதானே,, இதுக்கே பயந்து பதிவெல்லாம் போட்டா எப்படி

அத்திரி said...

//அந்த '#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'. க்குப் அப்புறம் நடந்த சரண்டர் மேட்டரை எழுதாத உங்களுடைய நுண்ணரசியலை ரசித்தேன்.. :))//

ரிப்பீட்டு
சரண்டர் ஆகுறதுக்கு எவ்ளோ!!!!!! பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு.

அத்திரி said...

//ஹி..ஹி.. இதுக்குதான் பட்ஜெட்லாம் நாம போடக்கூடாது.. அவங்க போடுற பட்ஜெட்க்கு அப்ரூவல் குடுக்குற அத்தாரிட்டி மட்டும் நம்மளுதா இருக்கணும்.. (அதுல ஒரு சேஞ்சும் சொல்லாம அப்படியே அப்ரூவ் பண்ணுறது ரொம்ப முக்கியம்) :))))//என் வழி வெண்பூ வழி!!!!!!!!!!!!!!!!

ஒன்னும் முடியல ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேற வழி

தாமிரா said...

நன்றி முல்லை.! (சம்பள அலர்ட் SMS வரும் என்பதே இது நாள் வரை மறைக்கப்பட்டுள்ளது. டெக்னிகல் சமாசாரம் தெரியாமல் வைத்திருப்பதே நலம். வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே..)

நன்றி வேலன்.! (ரொம்ப அனுபவமோ சீனியர்.! பழைய ஆளுங்களாவது கொஞ்சம் வீரமா இருப்பாங்கன்னு நினைச்சேன்)

நன்றி அப்துல்.! (கண்ணு வெச்சிட்டீங்களா..)

நன்றி தமிழ்.! (இது மட்டும் ரொம்ப கிளீரா புரிஞ்சுடுமே.. பாடம் நடத்துனா மட்டும் நக்கல் பண்றது..)

நன்றி கார்க்கி.! (இப்பவேயா.?)

நன்றி விலெகா.! (அதான் தெரியமே..)

நன்றி வெண்பூ.! (இங்கியும் அதே கதைதான், என்ன ஊரிலில்லாததால் நானே பட்ஜெட் போட நேர்ந்தது. உங்க ரமாகிட்ட இந்த பதிவ காமிச்சீங்களா?)

நன்றி ராகவன்.! (ரொம்ப வருத்தப்படாதீங்க, இறுதியில் எப்படி எதிர்த்து பேசினேன் என்பதையும் நீங்கள் கவனிக்கவேண்டும்)

நன்றி ச்சின்னவர்.! (:

நன்றி அம்மிணி.! (நான் கொஞ்சிக்கொள்ளும் போது சொல்லும் போடி என்பதற்கும், கோபத்தில் சொல்லும் போடி என்பதற்கும் அதிகம் வித்தியாசம் இல்லை என்கிறது ஒரு பேக்கு.!)

நன்றி அத்திரி.! (சும்மா முதல்லியே சரண்டரான அதில் என்ன வீரம் இருக்கு?)

தமிழ்ப்பறவை said...

////அந்த '#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'. க்குப் அப்புறம் நடந்த சரண்டர் மேட்டரை எழுதாத உங்களுடைய நுண்ணரசியலை ரசித்தேன்.. :))//
இதில கூடவா நுண்ணரசியல் இருக்கு...?

குசும்பன் said...

//'என்ன‌ ச‌த்த‌த்தையே காணோம்?' 'இல்ல‌ம்மா, ஷூ..?'///

ஸ்ஷூ...

விஜய் said...

ஆளுங்கட்சி யாருன்னு நீங்க சொல்லவே வேண்டாம்.

Anonymous said...

அண்ணியை "டி" என தைரியமா சொல்லியிருக்கிங்களே...

தாமிரா said...

நன்றி தமிழ்பறவை.!
நன்றி குசும்பன்.!
நன்றி விஜய்.!
நன்றி தூயா.! (நாங்கெல்லாம் யாரு..?)

ஆட்காட்டி said...

நான் சனியன் என்பன். பதிலுக்கு வேற வரும்.
இருந்தாலும் பட்ஜெட் நிறைவேறுறது எதிர்க்கட்சியிடம் தான் தங்கி இருக்கு.
லஞ்சம் குடுத்தா சிலவேளைகளில் நமக்கு சார்பாக நிறைவேறும்.

பாபு said...

இந்த சமுதாயத்துல ஒரு ஆண் வீரனா வாழறதுக்கு வழியே இல்லையா?

rapp said...

இந்த நாட்ல என்ன ஜனநாயகம் இருக்கு? உடனே கலைஞர் ராஜினாமா பண்ணனும். அப்போத்தான் உங்க வீட்ல உங்களையும் பட்ஜெட் போட கன்சிடர் பண்ணுவாங்க:):):)

rapp said...

me the 25th

வால்பையன் said...

//நேற்றிரவே சம்பளம் வந்துவிட்டதாக‌ எஸ்எம்எஸ் வந்தது. //

ஐ.டி துறைக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் வருதாம், ஆனால் சம்பளம் வருவதில்லயாம்.

வால்பையன் said...

//ரமா வேறு ஊரில் இல்லை. என்ன பண்ணலாம்?//

டாஸ்மாக் துறந்து தானே இருக்கு

வால்பையன் said...

//கிரெடிட் கார்ட் நம்பர் 1
கிரெடிட் கார்ட் நம்பர் 2//

கூடவே 2 சூனியத்தை வைத்திருக்கிறீர்களா

வால்பையன் said...

//ராஜனிடம் வாங்கிய கைமாத்தை ரெண்டு மாசமாக கொடுக்கவில்லை,//

வெறும் மாத்தை மட்டும் கொடுக்கலாம்,
கை நமக்கு வேணுமே

வால்பையன் said...

//வண்டி டுபுடுபுவென வித்தியாசமாக சத்தம் போடுகிறது, //

அதை விட உங்கள் சத்தம் வித்தியாசமாக இருக்கிறது

வால்பையன் said...

//சின்ன ரஸ்கல் நம்பளவிட கம்மியா சம்பளம் வாங்கினாலும் ஒழுங்கா வீட்டுக்கு குடுத்துடுறானே?//

அது புள்ள

வால்பையன் said...

முதல்ல கேட்ட கேள்விக்கு பதில்
கடன் எதுக்காக வாங்கினிங்க
அத சொல்லாம மத்தவங்கள குறை சொல்றது தப்பு

வால்பையன் said...

உங்கள் சண்டையில் என்னிடம் வாங்கிய 1000 தை மறந்து விட வேண்டாம்

தமிழ்ப்பறவை said...

//1000 (உ)தை //
எனி ஸ்பெல்லிங் மிஸ்டேக்...?

கும்க்கி said...

நாட்ல முடிவெடுக்க உங்களுக்கு விஷயமா இல்ல? என்னய கேட்டிருக்கலாமே.
வீட்டு பட்ஜெட்லாம் ரொம்ப சின்ன விடயம்.அதயெல்லாம் அந்தப்பக்கம் தள்ளிவிட்ருங்க.
பொருளாதார பிரச்னயில மன்மோகன் சிங்ஜி என்ன செய்யணும்..இலங்கை பிரச்னைய பிரச்னை இல்லாம எப்படி தீர்க்கலாம்..
நாட்ல டிராபிக்கும் ஆக்ஸிடென்ட்டும் அதிகமாயிட்டே போகுதே...என்ன பண்ணலாம்..
ஐ டி கம்பெனிகளின் எதிர்காலம்..
ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது நண்பரே...இதயெல்லாம் விட்டுட்டு.....
(இவ்ளோ அறிவு இருக்குதுன்னு நூல் விட்டு..ஹி ஹி வண்டிக்கும் நமக்கும் பெட்ரோலுக்கு கொஞ்சம் கறந்துடுவேன்.

Raj said...

'#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'..........

ஆமாம்..இது என்ன லாங்வேஜ்..எனக்கு புரியவே இல்லை..தயவு செஞ்சு யாராச்சும் அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ்.

ஜோசப் பால்ராஜ் said...

//'கேக்கிறேன்ல..' ' //

இதுவரைக்கும் உள்ள உரையாடல் தான் உண்மையிலயே அண்ணணுக்கும், அண்ணிக்குமிடையே நடந்தது.

அப்போ கீழ இருக்கது???

//
அதெல்லாம் உன‌க்கெதுக்கு.. போடி.. எல்லா‌த்தியும் உங்கிட்ட எழுதி ஒட்டிக்கிட்டிருக்க‌முடியாது'

'#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'..........

(இவ்வாறாக எதிர்க‌ட்சிக்கும், ஆளும் க‌ட்சிக்கும் இடையேயான‌ ப‌ட்ஜெட் மீதான‌ விவாத‌ம் தோல்வியில் முடிந்த‌து)//

இதெல்லாம் அண்ணி கோவத்துல தொலை பேசிய வைச்சதுக்கு அப்புறம், கனவுல அண்ணண் திட்டுனது, அண்ணி லைன்ல இருக்கப்பவே திட்டுற அளவுக்கு அண்ணணுக்கு அம்புட்டு தைரியம் இருக்குன்னு அவரு சொல்லுவாராம் நாங்க நம்பணுமாம், நல்லா இருக்குண்ணே உங்க கற்பனை.

Saravana Kumar MSK said...

//சந்தனமுல்லை said...
ஆஹா..உண்மையை சொல்லுங்க...எஸ்எம்எஸ் சாலரி அப்டேட் அவங்க மொபைலுக்குத்தானே போகும்!! :-))...//

ரிப்பீட்டு..

Saravana Kumar MSK said...

//தமிழ் பிரியன் said...
அந்த '#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'. க்குப் அப்புறம் நடந்த சரண்டர் மேட்டரை எழுதாத உங்களுடைய நுண்ணரசியலை ரசித்தேன்.. :))//

ரிப்பீட்டு..

Saravana Kumar MSK said...

//வெண்பூ said...
ஹி..ஹி.. இதுக்குதான் பட்ஜெட்லாம் நாம போடக்கூடாது.. அவங்க போடுற பட்ஜெட்க்கு அப்ரூவல் குடுக்குற அத்தாரிட்டி மட்டும் நம்மளுதா இருக்கணும்.. (அதுல ஒரு சேஞ்சும் சொல்லாம அப்படியே அப்ரூவ் பண்ணுறது ரொம்ப முக்கியம்) :))))//

ஹி..ஹி.. ஹி..

Saravana Kumar MSK said...

//குசும்பன் said...
//'என்ன‌ ச‌த்த‌த்தையே காணோம்?' 'இல்ல‌ம்மா, ஷூ..?'///

ஸ்ஷூ...//
ரிப்பீட்டு..

Saravana Kumar MSK said...

பதிவும் கலக்கல்.. பின்னூட்டங்களும் கலக்கலுங்க்னா..

:)))))))

Mahesh said...

அய்ய்யோ.. "ஒரு வார்த்தை"யே இவ்வளவு பெருசுன்னா, வாக்கியம், பாரக்ராஃப் எல்லாம் எவ்வளவு பெருசா இருக்கும்? :)))))))))))))))

தாமிரா said...

நன்றி ஆட்காட்டி.! (ல‌ஞ்ச‌ம் கொடுப்ப‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் என‌க்கும் வொர்க்அவுட் ஆகியிருக்கிற‌து பாஸ்)

நன்றி பாபு.! (என் வீர‌த்தை பார்த்துமா இந்த‌ கேள்வியை கேட்கிறீர்க‌ள்.. அவ்வ்வ்...)

நன்றி ராப்.! (அய்ய்.. இது ந‌ல்லாருக்கே.!)

ந‌ன்றி வால்பைய‌ன்.!

ந‌ன்றி தமிழ்பறவை.!

தாமிரா said...

ந‌ன்றி கும்க்கி.! (இது இன்னொரு ப‌தில் வெண்பூவோ, அப்துலோ கொடுத்த‌ அதே ஐடியா)

ந‌ன்றி ராஜ்.!

ந‌ன்றி ஜோஸ‌ப்.! (என்ன‌ த‌ல, கொஞ்ச‌ நாளா ஆளையே காணோம்? அப்புற‌ம் இப்பிடி ப‌ப்ளிக்ல‌ உண்மையை போட்டு உடைப்ப‌தை குறைத்துக்கொள்ள‌வும், உங்க‌ள் உட‌ம்புக்கு ந‌ல்ல‌து)

ந‌ன்றி MSK.! (ரொம்ப‌ ர‌சிச்சீங்க‌ போல‌..)

ந‌ன்றி மகேஷ்.! (ய‌ப்ப‌ப்பா.. இங்கப்பாருங்க‌ ஏதோ க‌ல்யாண‌ம் ஆவாத‌ ப‌ச்ச‌ப்புள்ள‌ மாதிரி கேள்வி கேக்குற‌த‌..)

மங்களூர் சிவா said...

/
(இவ்வாறாக எதிர்க‌ட்சிக்கும், ஆளும் க‌ட்சிக்கும் இடையேயான‌ ப‌ட்ஜெட் மீதான‌ விவாத‌ம் தோல்வியில் முடிந்த‌து)
/

:)))))))))))))))))))
ROTFL

மங்களூர் சிவா said...

//
வடகரை வேலன் said...

(இவ்வாறாக எதிர்க‌ட்சிக்கும், ஆளும் க‌ட்சிக்கும் இடையேயான‌ ப‌ட்ஜெட் மீதான‌ விவாத‌ம் வழக்கம் போல் தோல்வியில் முடிந்த‌து)
//

ripeeeetu

மங்களூர் சிவா said...

//
தமிழ் பிரியன் said...

அந்த '#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'. க்குப் அப்புறம் நடந்த சரண்டர் மேட்டரை எழுதாத உங்களுடைய நுண்ணரசியலை ரசித்தேன்.. :))
//

ripeeeetu

மங்களூர் சிவா said...

//
விலெகா said...

"ஒரு வார்த்த‌ கேட்க‌ ஒரு வ‌ருச‌ம், காத்திருந்தேன்...
ஒரு வார்த்தை இல்ல,ஏகப்பட்ட வார்த்தை போங்க:-)))))
//

அதானே!!

மங்களூர் சிவா said...

50

மங்களூர் சிவா said...

//
சம்பள அலர்ட் SMS வரும் என்பதே இது நாள் வரை மறைக்கப்பட்டுள்ளது. டெக்னிகல் சமாசாரம் தெரியாமல் வைத்திருப்பதே நலம்.
//

மைண்ட்ல வெச்சிக்கிறேன் யூஸ்ஃபுல்லா இருக்கும்!!

:))))

மங்களூர் சிவா said...

//
பாபு said...

இந்த சமுதாயத்துல ஒரு ஆண் வீரனா வாழறதுக்கு வழியே இல்லையா?
//

வெரி இன்டெரஸ்டிங் கொஸ்டியன்??

மங்களூர் சிவா said...

உங்கள் சண்டையில் என்னிடம் வாங்கிய 10000 தை மறந்து விட வேண்டாம்

dharshini said...

இவ்ளோ நல்லவங்களா நீங்க....
(மொத்த சம்பளமும் சொல்லிடிவீங்களா..)
:(

'#$%*(&&&^%' '#$%#%###%$#^&*^%$^%'..........
இது அண்ணி திட்டினதுங்க...

புதுகைத் தென்றல் said...

டெக்னிகல் சமாசாரம் தெரியாமல் வைத்திருப்பதே நலம்//

என்ன ஒரு வில்லத்தனம்.

ஹஸ்பண்டாலஜி பேராசிரியையாக இதை வன்மையா கண்டிக்கிறேன்.

வாழவந்தான் said...

இந்த பட்ஜெட்ல தங்கமனிக்குனு ஒரு செலவும் இல்லையே? அதான் அவசிய செலவு போக எல்லாத்தையும் எடுத்துகிட்டாங்க. உள்ளதும் போச்சு நொள்ள கண்ணான்னு ஆகிடிச்சு