Tuesday, November 4, 2008

ரஜினிகாந்த் என்ற சக்தி

இன்றைய காலகட்டங்களில் ரஜினி பணத்துக்காவும், புகழுக்காகவும் சினிமாவில் நடிப்பதில்லை என்பதை அவரது பல்வேறு பேச்சுகளின் மூலம் நன்கு விளங்கிக்கொள்ளமுடிகிறது. பின் ஏன் நடிக்கிறார்? சூழலின் நிர்ப்பந்தம். இன்னும் முதல் குதிரையாக ஓடிவரும் ரஜினியை விட்டுவைப்பார்களா அவரை சூழ்ந்திருப்போரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும். முடிந்த வரை நட்பு, உறவு, நன்றிக்கடன் அல்லது ரசிகர்கள் ஆகியவற்றைக் காரணம்காட்டி அவரை நடிக்க நெருக்கடி தந்து சம்மதிக்கவைக்கிறார்கள். அப்புறம் ஏன் கோடி கோடியாய் சம்பளம் பெறுகிறார்? அவர் ஒன்றும் முட்டாளல்லர். அவர் காரணமாகவே கோடி கோடியாய் ஒரு சினிமா சம்பாதிக்கும் போது அதை அப்படியே மூன்றாம் மனிதனுக்கு தாரை வார்ப்பது எப்படி சரியாகும்.? ஆகவே பணத்தையும் பெற்றுக்கொள்கிறார். அவர் செய்வது மிகச்சரியானதே.

அவரது பேச்சுகள் மூலம் ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அவர் மனத்தில் தோன்றியதை அப்படியே அந்தந்த பொழுதில் பேசிவிடுகிறார். எளிதில் உணர்ச்சிவசப்படுகிறார். சிறிது கோபமும் இருக்கிறது. இந்த குணங்கள் எல்லா சாதாரண மனிதருக்கும் இருக்கக்கூடியதுதான், அதில் நிச்சயமாக தவறு இருக்கமுடியாது. ஆனால் ரஜினி போன்ற ஒரு பெரிய இடத்திலிருக்கக்கூடிய, மூச்சு விட்டாலே செய்தியாகிவிடக்கூடிய இடத்திலிருக்கும் ஒரு செலிபிரிட்டி பப்ளிக் பேச்சுகளில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். இதைப்பற்றிய புரிதலும் அவரது சமீபத்திய பேச்சுகளில் தெரிகிறது.

ஏன் அவரைப்பற்றி இவ்வளவு சர்ச்சைகள்?
பத்திரிகை மற்றும் பிற மீடியாக்கள் தங்கள் பசிக்கு விஐபிக்களை எந்நேரமும் தின்றுவிட காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது அனைவருக்கும் ஓரளவு புரிகிற விஷயமே. அதற்கு வாய்ப்பாக 'லட்டு' மாதிரி கிடைத்தவர்தான் ரஜினி. ஆனானப்பட்ட தில்லாலங்கடிகளின் பேச்சையே திரித்து வெளியிடும் வல்லமை பெற்ற மீடியாக்கள் ரஜினியின் பேச்சுகளை திரித்து வெளியிடுவது என்பது அவர்களுக்கு ஆகச்சுலபமான ஒன்று. ஏனெனில் அவர் பேசும்போது கேட்டால் அவர் உணர்ச்சிவசத்திலோ, கோர்வையாக பேச வராமலோ சில வார்த்தகளை தடுமாற்றத்தோடு பேசுவதை கவனித்திருக்கலாம். ஏனெனில் பப்ளிக்கில் பேசுவது என்பது ஒரு கலை, அதில் ரஜினி சிறிது வீக் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதை பேசும் போது அவரது உணர்வுகளோடு இணைத்து புரிந்துகொள்ளவேண்டும். அதை விடுத்து எழுத்தில் பார்த்தோமேயானால் தவறாக புரிந்துகொள்ள ஏதுவாகும்.

அவர் அரசியலுக்கு வர எண்ணுகிறாரா? இதுவரை அப்படி ஒரு எண்ண‌ம் அவருக்கு இல்லை என்பது தெளிவு. அதற்கான தகுதியோ, அனுபவமோ இல்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அவருக்கோ மிகத்தீவிரமான கடவுள் நம்பிக்கை உள்ளது. நேற்று உணவுக்கே கஷ்டப்பட்ட சிவாஜிராவ் இன்று மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ள ரஜினி. இந்த நிலையை கடவுள் தந்ததாக அவர் நம்புகிறார். ஆகவே அவரால் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லமுடியவில்லை. அதைச்சொல்ல நான் யார்? கடவுள்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்.

இவ்வளவு நாட்களாக இல்லாமல் இப்போது ஏன் அவருக்கு இந்த அரசியல் பிரவேச நெருக்கடி? இது உள்ளங்கை நெல்லிக்கனி. நம் தலைவரை விடவும் குறைவான ரசிகர் பலம் கொண்ட விஜயகாந்த், சரத்குமார் கட்சி ஆரம்பித்து இப்படி இயக்கமாக மாறிவிட்டார்கள் என்ற அவரது ரசிகர்களின் ஆதங்கம்தான். இன்னும் சொல்லப்போனால் அதில் தலைவரின் மீதான பாசம் என்பதைவிடவும் கொஞ்சம் சுயநலமே தூக்கலாக இருக்கும் என எண்ணுகிறேன். நேற்று ரசிகர்மன்றத்தலைவர் என்ற ஒரு நபர் இன்று கட்சியின் மாவட்ட நிர்வாகி, நேற்றைய மன்ற செயலாளர் இன்று வட்டச்செயலாளர். இதை ரஜினி ரசிகர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 30 வருடங்களுக்கு முன்னர் மன்றத்தலைவரானவர் இன்னும் அதே நிலைமையில் இருக்கிறார். 50 வயது தாண்டிய ஒரு நபர் இன்னும் நான் ரசிகர்மன்றதலைவர் என்று சொல்லிக்கொள்ளத்தயங்குகிறார். ஒரு சுய‌ ஆர்வத்தில்தான் ரஜினி மன்றத்தில் இணைந்தேன். ஆனால் இத்தனை வருட வாழ்க்கையில் இப்போது த‌னக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்படுகிறது என்பதை உணர்கிறார். இதில் இணையாமல் இருந்திருந்தால் நான் முன்னேறியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறார். ரஜினி இவ்வளவு புகழ் பெற்றிருக்கவில்லையெனில் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால்.? இந்த எண்ணத்தை ரஜினி விரும்பவில்லை எனில் அவர் அதை 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும். அதைச்செய்யவில்லை அவர், மாறாக அந்த எண்ணத்துக்கு தூபம் போடுவதைத்தான் செய்தார். உற்றுக்கவனித்தால் அது அவர் தவறல்ல என்பதையும், அந்தந்த படங்களின் இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ படத்தின் விளம்பரத்துக்காகவும், சுவாரசியத்துக்காகவும் அவரை பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். ஆகவே அவருக்கு பின்னர் வந்த விஜயகாந்தும், அவரது அவரது ரசிகர்களும் இன்று அடைந்துள்ள சமூக அந்தஸ்தையும் காணப்பொறுக்காமலே அவரது ரசிகர்கள் இந்த அளவில் நெருக்கடிக்கு அவரைத்தள்ளியிருக்கிறார்கள். இது ஒரு வகையில் தவறுதான், பேராசைதான். இன்றுவரை என்னை ஒரு சினிமா நடிகனாக மட்டுமே பாருங்கள் என்றுதான் அவ்ர் கூறிவந்திருக்கிறார்.

சமீபத்திய பேட்டியில்கூட "எங்களுக்காக‌ என்ன செய்தாய் தலைவா?" என்ற கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தடுமாறி சிந்தித்து கடைசியில், "உங்களுக்காக என் விருப்பத்தையும் மீறி, நீங்கள் விரும்பியபடி டான்ஸ் ஆடினேன், பறந்து பறந்து சண்டைபோட்டேன், காமெடி பண்ணினேனே.." என்று பரிதாபமாக கேட்கிறார். பாவமாக இருந்தது. நான் உனக்காக டிக்கெட் வாங்கி படம்பார்த்தேனே? நீ எனக்காக என்ன செய்தாய் என்று ஒரு நடிகரைப்பார்த்துக்கேட்டால் அவர் என்ன செய்வார்? அந்த படத்தில் நடித்ததுதான் அவர் உனக்காக செய்தது. அதற்கு மேல் ஒரு நடிகர் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறார்கள். தானே ஒரு உணர்ச்சிவயப்படுகின்ற ஆள், தன் ரசிகர்கள் நம்மைவிட உணர்ச்சிவசப் படுகிறவர்களாகவும், பிறரைப்பார்த்து ஆசைப்படுபவர்களாகவும், அதற்கான அறிவும் திறனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்களே என்று இப்போது ரஜினி சிந்திப்பவராகவே எனக்கு படுகிறார். இவர்களுக்காக அரசியலில் இறங்கி தோற்றால் அவமானத்தை ஏற்பதிலும், ஜெயித்தால் ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்காலத்தை ரிஸ்க்கில் தள்ளுவதிலும் உள்ள ஆப‌த்தை ரஜினியும் அவரது ரசிகர்களும் இன்னும் சிந்திக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நான் ரஜினி ரசிகனுமல்லன், அவரை மீடியாக்களில் உற்றுக்கவனித்துக் கொண்டிருப்பவனுமல்லன். நான் இன்னொரு பிரபல நடிகரின் ரசிகனாகவே இருப்பினும் ரஜினியிடம் இருக்கும் தீராத கவர்ச்சியை ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் அமிதாப்புடன் ஒப்பிடும்போது ரஜினியின் கவர்ச்சி இறுதிவரை அவரிடமிருந்து நீங்காத ஒரு வரமாகவே இருக்கும் எனவும் நம்புகிறேன். இது என் அரைகுறை கேள்வி ஞானத்தில், சுயமாக‌ எழுதப்பட்ட ஒரு கட்டுரை, அவ்வளவே.! ஏதும் மாற்றுக்கருத்து இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்.

45 comments:

கும்க்கி said...

நே நே முந்துகு ஒச்சிண்டானு..அ ஆ.

கும்க்கி said...

அன்னி சதுவேசி ஆத்தலங்க்கா ஒஸ்த்தானு.....
மன்ஸ்கோவேண்டி. சரிக்கா.

கும்க்கி said...

டயம் லேடு...லேபோத்தே...நடிஸ்திந்தே வேரே ஹவுனு.

கும்க்கி said...

ஒகு தினானிக்கி நேனு ஒக்கடினே ஒக்க வந்துலு கொட்டதானு..அந்துரு ஸுஸ்கொனி உண்டண்ட.

Mahesh said...

எனக்கென்னமோ அவர் தெளிவாத்தான் இருக்கராங்கறதே தெளிவில்லாம இருக்கு. :(

விஜய் said...

மக்களும் ஊடகங்களும் ஏன் ரஜினியை மட்டும் இவ்வளவு டார்கெட் செய்கிறார்கள்? அவர்க்ள் ஏன் கமல்ஹாசனையோ அல்லது ஒரு சத்யரஜையோ அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லையே ஏன்? தமிழ் நாட்டு மக்கள் ரொம்பவே உணற்சிவசப்பட்டவர்கள். நமக்கு ரியல் லைஃபுக்கும் ரீல் லைஃபுக்குமுண்டான வித்தியாசம் தெரியாது. இந்த விஷயத்தைப் பயன்படுத்தித்தான் எம்.ஜி.ஆர் முதல்வராக முடிந்தது. படங்களில் அவர் பேசும் வசனத்தை மக்கள் இவர் நிஜமாகவே பேசுகிறார்கள் என்று நினைத்து அவரை தெய்வமாகவே வழிபட்டனர். ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாவோடு நின்றுவிடாமல் அரசியலிலும் இறங்கி, மக்களை நேரடியாகச் சந்தித்தார். இதே எம்.ஜி.ஆர் ஃபார்முலாவைத் தான் ரஜினி விஜய்காந்த், சரத் குமார் கடைபிடித்தனர். மற்ற இருவரும் அரசியலில் நேரடியக என்ட்ரி கொடுக்க ரஜினிக்கும் அரசியல் பிரவேசம் செய்யம் நெருக்கடி. இந்த நெருக்கடி நேராமலிருக்க அவர் தனது படங்களில் ஓவராக பேசியிருக்கக்கூடாது. அப்போதெல்லம் பேசி விட்டு, இப்போது ஜகா வாங்கினால் என்ன அர்த்தம்?
தோற்றுவிடுவோமா என்ற அச்சமா?

வால்பையன் said...

//இன்றைய காலகட்டங்களில் ரஜினி பணத்துக்காவும், புகழுக்காகவும் சினிமாவில் நடிப்பதில்லை //

பொழுதுபோகலைன்னு நடிப்பார் போல

வால்பையன் said...

//ஆகவே பணத்தையும் பெற்றுக்கொள்கிறார். அவர் செய்வது மிகச்சரியானதே.//

போகும் வழியில் கூவத்தில் கொட்டி விடுவாரோ

முரளிகண்ணன் said...

சோ சுவீட்

வால்பையன் said...

//அவர் மனத்தில் தோன்றியதை அப்படியே அந்தந்த பொழுதில் பேசிவிடுகிறார்.//

நானும் நீங்களும் எப்பவுமே எழுதி வைத்து கொண்டு தானே பேசுவோம்

வால்பையன் said...

மூச்சு விட்டாலே //செய்தியாகிவிடக்கூடிய//

அப்படியா

வால்பையன் said...

//ஏனெனில் பப்ளிக்கில் பேசுவது என்பது ஒரு கலை,//

கேமரா முன் பேசுவதை விட இது கடினமா தலைவா

வால்பையன் said...

//அதைச்சொல்ல நான் யார்? கடவுள்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்.//

இந்த படத்தில் நடி,
இந்த படத்தில் நடிக்காதே என்று கூட கடவுள் தான் சொல்கிறாரோ
:)

வால்பையன் said...

//நம் தலைவரை விடவும் குறைவான ரசிகர் பலம் கொண்ட//

இப்போ தானே தெரியுது,
ஏன் இந்த பதிவுன்னு

வால்பையன் said...

//இதில் இணையாமல் இருந்திருந்தால் நான் முன்னேறியிருக்கக்கூடும்//

உண்மை
இது எல்லா நடிகர்களின் ரசிகர்களுக்கும் பொருந்தும்

வால்பையன் said...

//நான் ரஜினி ரசிகனுமல்லன்,//

அப்போ பொதுவாதியா

வால்பையன் said...

//நான் இன்னொரு பிரபல நடிகரின் ரசிகனாகவே இருப்பினும் //

யார் அந்த அதிர்ஷ்டகார நடிகர்

வால்பையன் said...

//இது என் அரைகுறை கேள்வி ஞானத்தில்,//

இல்லை தீர்க்கமாக ஆராய்ந்து தான் எழுதியுள்ளீர்கள்

வால்பையன் said...

//ஏதும் மாற்றுக்கருத்து இருப்பின் பொறுத்துக்கொள்ளவும்.//

அதெப்படி,
அப்புறம் இந்த பெட்டிய எப்படி நிப்புறதாம்

வால்பையன் said...

20

கார்க்கி said...

ஆங்ங்ங்ங்ங்ங்... கலக்கல் சகா.. ரஜினியை குறை சொல்ல முயல்பவர்கள் தங்களையே ஒரு முறை நினைக்கவும்ம்.. நம் சுற்றத்திற்காக நீங்கள் எந்த தவறுமே செய்ததில்லையா? தவறு என நான் சொல்வது உங்களுக்கு புரியும்.. அவர் ஒரு நல்ல நடிகன்.. நல்ல மனிதன்.. அவர் சுற்றம்தான் அவரை இப்படி செய்ய வைக்கிறது... விசிலடித்து தன் தலைவனை திரையில் வரவேற்கும் ஒரு விசிலடிச்சான் குஞ்சின் குரல் "நீ நல்லாயிரு தலைவா. அதான் எனக்கு வேண்டும்".. உண்மையான ரசிகனின் எண்ணம் இதுவாய்த்தான் இருக்கும்.. என் எண்ணமும்..

கார்க்கி said...

//வால்பையன் said...

//நான் இன்னொரு பிரபல நடிகரின் ரசிகனாகவே இருப்பினும் //

யார் அந்த அதிர்ஷ்டகார நடிகர்

November 4, 2008 7:53 ஆம்//

கலைஞானி கமல்தான்.. வேற யாரிருக்கா நமக்கு

Anonymous said...

//கலைஞானி கமல்தான்.. வேற யாரிருக்கா நமக்கு//

thambi kaarki ilaya thalapathi vijay irukkare...

haaaaaaaaaa haaaaaaaaaaa haaaaaaaaaaa

வெண்பூ said...

முற்றிலும் நடுநிலைமையான கருத்துக்கள்... அருமை தாமிரா... ஆனால் இதற்கும் எதிர்வினையாக எதாவது பின்னூட்டம் வரும் பாருங்க..

கும்க்கி said...

வெண்பூ said...
முற்றிலும் நடுநிலைமையான கருத்துக்கள்... அருமை தாமிரா... ஆனால் இதற்கும் எதிர்வினையாக எதாவது பின்னூட்டம் வரும் பாருங்க..
பாருங்க... பாருங்க...பாத்துக்கிட்டேயிருங்க.

தமிழ் பிரியன் said...

ஓய் தாமிரா! நான் எழுதின பதிவை சுட்டு போட்டு இருக்கீங்க.. இருங்க எங்க அண்ணி வீட்டுக்கு வரட்டும்... உங்களை காட்டிக் கொடுக்குறென்..:))

வீணாபோனவன் said...

தலைவர் ரித்தீஷ் மன்றத்தின் சார்பாக இந்தப் பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

-வீணாபோனவன்.

கும்க்கி said...

இன்றைய காலகட்டங்களில் ரஜினி பணத்துக்காவும், புகழுக்காகவும் சினிமாவில் நடிப்பதில்லை என்பதை அவரது பல்வேறு பேச்சுகளின் மூலம் நன்கு விளங்கிக்கொள்ளமுடிகிறது.

அப்படியா?
அப்புறம் எதற்க்கு கமர்ஷியல் படங்களில் நடிக்க வேண்டும்?
ஆர்ட் பிலிம்களில் தைரியமிருந்தால் நடித்துப்பார்க்கட்டுமே.

முடிந்த வரை நட்பு, உறவு, நன்றிக்கடன் அல்லது ரசிகர்கள் ஆகியவற்றைக் காரணம்காட்டி அவரை நடிக்க நெருக்கடி தந்து சம்மதிக்கவைக்கிறார்கள்.

இதில் உண்மையில்லை தாமிரா.
இதற்கெல்லாம் மசிகிற ஆள் என்று இன்னமுமா நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

அப்புறம் ஏன் கோடி கோடியாய் சம்பளம் பெறுகிறார்? அவர் ஒன்றும் முட்டாளல்லர். அவர் காரணமாகவே கோடி கோடியாய் ஒரு சினிமா சம்பாதிக்கும் போது அதை அப்படியே மூன்றாம் மனிதனுக்கு தாரை வார்ப்பது எப்படி சரியாகும்.?

இதுவரை யார் யாருக்கு தாரை வார்த்துள்ளார்? எதேனும் உதாரணம் உண்டா?ஒரு சினிமாவின் சம்பாத்தியத்தில் கடைநிலை ஊழியர் வரை ஊதியத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.அத்தனை பேரின் மொத்த ஊதியத்தை விடவும் இவர் வாங்குவது அதிகம் ...ஒத்துக்கொள்கிறீர்களா?

அவர் அரசியலுக்கு வர எண்ணுகிறாரா? இதுவரை அப்படி ஒரு எண்ண‌ம் அவருக்கு இல்லை என்பது தெளிவு.

இதையே இப்போது வரை தெளிவுபடுத்தவில்லையே?

நேற்று உணவுக்கே கஷ்டப்பட்ட சிவாஜிராவ் இன்று மாபெரும் சக்தியாக வளர்ந்துள்ள ரஜினி. இந்த நிலையை கடவுள் தந்ததாக அவர் நம்புகிறார்.

கடவுளா காசு கொடுத்து படம் பார்த்தது? கடவுளா கூலிக்கு போய் சம்பாதித்த காசையெல்லாம் இவர் சினிமாவுக்காக அழித்தது?
கடவுளா கட்டவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணியது?
கடவுளா இவர் படம் வெளிவருவதற்க்கு முன்னும் பின்னும் தியேட்டருக்கு காவல் காத்தது?

30 வருடங்களுக்கு முன்னர் மன்றத்தலைவரானவர் இன்னும் அதே நிலைமையில் இருக்கிறார். 50 வயது தாண்டிய ஒரு நபர் இன்னும் நான் ரசிகர்மன்றதலைவர் என்று சொல்லிக்கொள்ளத்தயங்குகிறார்.

ஏன்? ஏன்?
அவரின் அவர் போன்றவர்களின் நம்பிக்கையை ஊட்டி வளர்த்து அதன் மூலம் பலனடைந்தவர் யார்?

இந்த எண்ணத்தை ரஜினி விரும்பவில்லை எனில் அவர் அதை 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்கவேண்டும். அதைச்செய்யவில்லை அவர், மாறாக அந்த எண்ணத்துக்கு தூபம் போடுவதைத்தான் செய்தார். உற்றுக்கவனித்தால் அது அவர் தவறல்ல என்பதையும், அந்தந்த படங்களின் இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ படத்தின் விளம்பரத்துக்காகவும், சுவாரசியத்துக்காகவும் அவரை பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

ரஜினிக்கு அன்றும் இன்றும் இருக்கின்ற ஸ்டார் வேல்யூவில் அவருடைய விருப்பமின்றி எந்த டைரக்டரும்.,தயாரிப்பாளரும் எதுவுமே செய்யமுடியாது...இது எல்லோர்க்கும் தெரிந்த விஷயமே.
ரஜினியின் விருப்பத்திற்க்கும் ரசிகர்களை ஒரு தூண்டுதலோடு வைத்திருக்கவுமே இம்மாதிரி வசனங்கள் புகுத்தப்பட்டன.

கும்க்கி said...

நீ எனக்காக என்ன செய்தாய் என்று ஒரு நடிகரைப்பார்த்துக்கேட்டால் அவர் என்ன செய்வார்? அந்த படத்தில் நடித்ததுதான் அவர் உனக்காக செய்தது.

மற்ற நடிகர்களை போல நடிப்புடன் விட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி.
இதோ வந்துவிட்டேன்..அதோ வருகிரேன் என்று சும்மா இருந்த ரசிகனை ஏன் கிண்டி கிளரிகொண்டேயிருக்கவேண்டும்?

தானே ஒரு உணர்ச்சிவயப்படுகின்ற ஆள், தன் ரசிகர்கள் நம்மைவிட உணர்ச்சிவசப் படுகிறவர்களாகவும், பிறரைப்பார்த்து ஆசைப்படுபவர்களாகவும், அதற்கான அறிவும் திறனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்களே என்று இப்போது ரஜினி சிந்திப்பவராகவே எனக்கு படுகிறார்.

நல்ல வேளை உணர்ச்சி வசப்பட்டு இங்கேயே அமைதியாகிவிட்டார்கள்.
என்னடா நம்ம உணர்ச்சிய பயண்படுத்தி கோடி கோடியாய் சம்பாதித்து அந்த பணத்தையெல்லாம் கர்நாடகாவில் கொட்டி பல தொழில்கள் நடத்திக்கொண்டு....தமிழர் பிரச்னைகளில் வாய் தவறி உளரிவிட்டு.....பின்னர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிறாரே என்று தமிழன் உணர்ச்சி வசப்பட்டால் என்ன ஆகும்?

இருதியாக அவர் ஒரு நல்ல வியாபாரி....தனதளவிலும் ...சினிமாவை ஓட வைப்பதிலும்.

தனது கைக்கெட்டாத வாழ்வை சினிமா எனும் மாயை மூலம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அப்பாவி தமிழரை., தனது பிழைப்புக்காகவும் மேலும் கோடிகளை குவிக்கவும் ஏமாற்றிவரும் ஒரு துல்லியமான வியாபாரியைப் பற்றி இவ்வளவு மெனக்கெட்டு எழுதவேண்டுமா...என்பதே என் மன வருத்தம்.

கருத்துக்களில் உடன்பாடில்லாத நண்பர்கள் தங்களது கருத்துக்களை மட்டும் நாகரீகமாக தெரிவிக்கவும்.

எவர் மனமேனும் புன்படும்படி இருப்பின் தயவு கூர்ந்து தாமிரா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்...

Anonymous said...

இலக்கியவாதி ஆகிட்டு வர்ரீங்க தாமிரா, ஜாக்கிரதை :}

தாமிரா said...

நன்றி கும்க்கி.!
நன்றி மகேஷ்.!
நன்றி விஜய்.!
நன்றி வால்பையன்.!
நன்றி முர‌ளி.!
நன்றி கார்க்கி.!
நன்றி வெண்பூ.!
நன்றி தமிழ்.!

(இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா என்று இப்போதான் புரிகிறது. உங்கள் பதிவுக்கு சுட்டி கொடுக்கவும்..)

நன்றி வீணா.!
நன்றி அம்மிணி.!

தாமிரா said...

கும்க்கி :எவர் மனமேனும் புன்படும்படி இருப்பின் தயவு கூர்ந்து தாமிரா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்...// சரிதான்.. தேவைதான் எனக்கு.!

சந்தனமுல்லை said...

இதே போன்ற கருத்துக்கள் எனக்கும் உண்டு! நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்!
//ரஜினி போன்ற ஒரு பெரிய இடத்திலிருக்கக்கூடிய, மூச்சு விட்டாலே செய்தியாகிவிடக்கூடிய இடத்திலிருக்கும் ஒரு செலிபிரிட்டி பப்ளிக் பேச்சுகளில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும்//

மிகவும் உண்மை!

பாபு said...

தாமிரா,தொடர் பதிவு போட்டுவிட்டேன்
தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை

அத்திரி said...

அருமையான அலசல். ஆனா இன்னும் ரஜினியை இன்னுமா நம்புறாய்ங்க???????????

விலெகா said...

அருமையான அலசல். ஆனா இன்னும் ரஜினியை இன்னுமா நம்புறாய்ங்க???????????
நம்புறோம்ங்க:)
ஏங்க நம்ப கூடாது, அவர் ஒன்றும் கெட்டவரில்லை.

Anonymous said...

//
//ஏனெனில் பப்ளிக்கில் பேசுவது என்பது ஒரு கலை,//

கேமரா முன் பேசுவதை விட இது கடினமா தலைவா//

இதப் பாருங்க, சினிமால பேசறத்தையெல்லாம் ஏன் சீரியஸா எடுத்துக்கறீங்க?
அது யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்.

பரிசல்காரன் said...

கடைசி பாராவைப் படித்து மிகவும் வியந்தேன் தாமிரா.

நல்ல முதிர்ச்சி உங்கள் எழுத்தில்!

rapp said...

அடப்போங்க தாமிரா, இதைப் படிக்கக் கூட சோம்பேரித்தனமா இருக்கு. அவ்ளோ போரடிச்சிட்டார் ரஜினி. பத்திரிககளில் இப்போல்லாம் அவர் மூஞ்சப் பாத்தாலோ, செய்தி இருந்தாலோ உடனே அடுத்தப் பக்கம் தாவச் சொல்லுது. வர வர படங்களும் முத்து, பாபா, சந்திரமுகி, குசேலன், சிவாஜின்னு ஒரு தடவைக்கு மேல, சில சமயம் ஒரு தடவைக் கூட பாக்கப் பிடிக்க மாட்டேங்குது. ஒரு கமர்ஷியல் ஹீரோ இப்டியா பண்றது?

narsim said...

// rapp said...
அடப்போங்க தாமிரா, இதைப் படிக்கக் கூட சோம்பேரித்தனமா இருக்கு. அவ்ளோ போரடிச்சிட்டார் ரஜினி
//

அதேதான்!!

நர்சிம்

Basaki said...

உங்கள் விமர்சனத்தை விட, நீங்கள் விமர்சித்தவிதம் நேர்மையாக இருந்த்து. வாழ்த்துக்கள்!!!

தமிழ்ப்பறவை said...

//// rapp said...
அடப்போங்க தாமிரா, இதைப் படிக்கக் கூட சோம்பேரித்தனமா இருக்கு. அவ்ளோ போரடிச்சிட்டார் ரஜினி
//

அதேதான்!!//
அதே அதே....தல பேச்சிலர்ஸ்க்கு அட்வைஸ் பண்ற மாதிரி பதிவு போடுங்க தலை...

தாமிரா said...

நன்றி முல்லை.!
நன்றி பாபு.!
நன்றி அத்திரி.!
நன்றி விலெகா.!
நன்றி பரிசல்.!
(அய்யய்யோ ஏன் இப்பிடி திடீர்னு.? ஏற்கனவே முடி நரைக்க ஆரம்பித்திருக்கிறதே.. முதிர்ச்சியடைந்துவிட்டோமோ என்ற கவலையில் இருக்கிறேன் நான்)

தாமிரா said...

நன்றி ராப்.!
நன்றி நர்சிம்.!
நன்றி பசாகி.!
நன்றி தமிழ்பறவை.! (அடுத்து போட்ருலாம் தல..)

livingston baba said...

rajni nadigaragavea iruka veandum